உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
பாக்தாத்/புதுடெல்லி: ஈராக்கில் கடத்தப்பட்ட இந்திய நர்ஸ்கள் 46 பேரையும் கிளர்ச்சியாளர்கள் விடுவித்துள்ள நிலையில், சனிக்கிழமையன்று அவர்கள் இந்தியா அழைத்து வரப்பட உள்ளனர். விடுவித்த நர்ஸ்களை ஈராக் ராணுவத்திடம் கிளர்ச்சியாளர்கள் ஒப்படைத்ததை தொடர்ந்து, துள்ளதாகவும், அவர்கள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவதற்காக எர்பில் விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி இன்று காலை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்துப் பேசினார். அப்போது இதுகுறித்த தகவல் அவருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனை அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நாளை கொச்சி வருகை இந்நிலையில் விடுவிக்கப்பட்ட 46 இந்திய செவிலியர்களும்…
-
- 0 replies
- 387 views
-
-
ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் மேற்கு வங்க ஆளுநராக இருக்கும் எம்.கே. நாராயணன், கோவா ஆளுநர் வான்சூ ஆகியோரை சிபிஐ தமது தரப்பு சாட்சியங்களாக சேர்க்க இருப்பதாக சட்ட அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளது. நாட்டின் வி.வி.ஐ.பிகளுக்கான ஹெலிகாப்டர்களை இத்தாலியில் இருந்து வாங்கியதில் பெருமளவு முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இத்தாலியின் அகஸ்டாவெஸ்ட்லாண்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்தும் செய்தது. இந்த வழக்கில் நாட்டின் விமானப்படை தளபதியாக இருந்த தியாகி உள்ளிட்ட 13 பேர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. மேலும் 2005ஆம் ஆண்டு இந்த ஹெலிகாப்டர்களின் தொழில்நுட்ப விவரங்களை மாற்றுவதற்கான ஆலோசனைக் கூட்டத்தில் அப்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த எம்.கே. நார…
-
- 30 replies
- 2.3k views
-
-
கோபால் சுப்பிரமணியம் விவகாரத்தில் பாஜக பழிவாங்கலுடன் செயல்படுகிறது: காங்கிரஸ் சாடல் உச்சநீதிமன்ற நீதிபதியாக மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியத்தை நியமிக்கும் விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சி பழிவாங்கல் அரசியலை கடைபிடிக்கிறது என்று காங்கிரஸ் கட்சி சாடியுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதியாக கோபால் சுப்பிரமணியத்தை நியமிக்க நீதிபதிகள் நியமனக் குழு பரிந்துரைத்தது. ஆனால் இதை மத்தியா அரசு ஏற்க மறுத்தது. கோபால் சுப்பிரமணியம் விவகாரத்தில் பாஜக பழிவாங்கலுடன் செயல்படுகிறது: காங்கிரஸ் சாடல் இந்த விவகாரத்தில் மத்திய அரசை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி லோதா மிகக் கடுமையாக சாடியிருந்தார்…
-
- 1 reply
- 806 views
-
-
தாய்லாந்தின் சமுத் சகொன் மாகாணத்திலுள்ள இறால் பண்ணை ஒன்றில் 1000 வருடங்கள் பழைமையான அரேபிய கப்பல் ஒன்று அண்மையில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 6 முதல் 11ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இக்கப்பல் சரக்கு பொருட்களை கொண்டுசெல்வதற்காக ஆசியக் கண்டத்தின் கரையோரப் பகுதிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தாய்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழைமையான கப்பல் இதுவாகும். 25 மீற்றர் நீளமான இக்கப்பலை புனர் நிர்மாணம் செய்யும் நிலையில் உள்ளதாக நீரின் கீழான தொல்பொருள் ஆராய்ச்சியாளரான எர்ப்ரெம் வட்சரங்குல் குறிப்பிட்டுள்ளார். இக்கப்பலை மீட்கும் பணிகளில் தற்போது 10 சதவீதமானவையே முடிவடைந்துள்ளது. இதன் மீட்புப் பணிகள் கடந்த வரும்…
-
- 0 replies
- 568 views
-
-
புதுடெல்லி: பெரும்பாலான பெண்கள் வரதட்சணைக்கு எதிரான சட்டத்தை தவறாக பயன்படுத்துவதாக உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து அனைத்து மாநிலங்களும் உச்சநீதிமன்றம் அனுப்பியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில், ''தங்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக கணவரையும், கணவரது உறவினர்களையும் தண்டிப்பதற்காக வரதட்சணைக்கு எதிரான இந்திய தண்டனை சட்டம் 498ஏ.வை பயன்படுத்தி வரும் பெண்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகி விட்டது. இவ்வாறு பதிவு செய்யப்பட்ட பல்வேறு வழக்குகளில் விசாரணைக்கு பிறகு ஏராளமானோர் விடுதலை செய்யப்பட்டிருப்பது பெண்களின் புகார் பொய்யனாது என்பதை நிரூபித்துள்ளதாக உள்ளது. எனவே, இந்திய சட்டப்பிரிவு 498ஏ.வின் படி யாரையும் நீதிபதிகள் உத்தரவின்றி காவல்துறை கைது செய்யக்கூடாது'' என…
-
- 0 replies
- 435 views
-
-
புதுடெல்லி: மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்தியாவின் அதிவேகமான ரயிலின் சோதனை ஓட்டம் இன்று வெற்றிகரமாக நடந்தது. டெல்லியில் இருந்து ஆக்ராவுக்கு 90 நிமிடங்களுக்குள், அதாவது மணிக்கு 160 கி.மீ என்ற வேத்தில் இந்த ரயில் சென்றடைந்தது., . வழக்கமாக டெல்லியில் இருந்து ஆக்ராவுக்கு செல்ல 120 நிமிடங்கள் முதல் 190 நிமிடங்கள் வரை ஆகும். ஆனால், விரைவில் அறிமுகமாகவுள்ள இந்த அதிவேக ரெயி்ல் மூலம் வெறும் 90 நிமிடங்களிலேயே ஆக்ராவுக்கு சென்று விடலாம். இந்த அதிவேக ரயில் 5400 குதிரை சக்தி கொண்ட எலக்ட்ரிக் என்ஜினால் இணைக்கப்படுகிறது. இந்த ரயில் செல்வதற்காக போடப்படும் ரயில் பாதைக்கு மட்டும் ரூ.15 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது http://news.vikatan.com/article.php?module…
-
- 0 replies
- 674 views
-
-
விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி23 ராக்கெட். பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், பி.எஸ்.எல்.வி.-சி23 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் திங்கள்கிழமை (ஜூன் 30) காலை 9.52 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. பிரான்ஸ் நாட்டின் ஸ்பாட்-7 செயற்கைக்கோள் உள்பட மொத்தம் 5 வெளிநாட்டு செயற்கைக் கோள்களை பி.எஸ்.எல்.வி.-சி23 ராக்கெட் விண்ணில் செலுத்தியது. இதற்கான 49 மணி நேர கவுன்ட் டவுன் சனிக்கிழமை (ஜூன் 28) காலை 8.52 மணிக்கு தொடங்கியது. ராக்கெட் ஏவப்பட்ட 20 நிமிஷங்களில் 5 செயற்கைக்கோள்களையும் அவற்றுக்குரிய பாதைகளில் நிலை நிறுத்தும். இந்த ராக்கெட் 44 மீட்டர் உயரமும், 230 டன் எடையும் கொண்டது. இந்த நிகழ்ச்சியில் ஆந்திர முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடுவும் கலந்துகொண்டார். விஞ்ஞானிகளுக…
-
- 6 replies
- 726 views
-
-
பர்மாவில் மதக்கலவரத்தில் பாதிக்கப்பட்டவர் (ஆவணப்படம்) மியன்மாரின் (பர்மா) இரண்டாவது பெரிய நகரான மண்டலேயில் முஸ்லீம்களுக்குச் சொந்தமான கடைகளும், ஒரு மசூதியும் பௌத்தர்களால் தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 500க்கும் மேற்பட்ட பௌத்தர்கள், மூங்கில் கட்டைகள் மற்றும் இரும்புக் கம்பிகளுடன் தாக்க முயன்றதை போலிசார் தடுத்தனர். முஸ்லீம் ஒருவர் சுடப்பட்டார் என்றும், மூன்று பௌத்தர்கள் காயமடைந்தனர் என்றும் உள்ளூர் செய்திகள் கூறுகின்றன. பர்மாவின் மேற்குப் புற மாகாணமான ரக்கைன் மாகாணத்தில், கடந்த மூன்றாண்டுகளாகவே, பெரும்பான்மை பௌத்தர்களுக்கும், சிறுபான்மை முஸ்லீம் சமுதாயத்துக்கும் இடையே மதரீதியான வன்செயல்கள் நடந்து வந்திருக்கின்றன. இந்த மோதல்களில் 2012ம் ஆண்டில் மட்டும், ரக்கைன…
-
- 5 replies
- 478 views
-
-
சிறந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 81வது இடம் கிடைத்துள்ளது. உலகின் சிறந்த நாடுகள் பட்டியலை ஒரு நிறுவனம் ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது. அதில், ஐ.நா., உலக வங்கி, சர்வதேச நிதியம் மற்றும் உலக அமைப்புகள் வெளியிட்டுள்ள சிறந்த நாட்டுக்கான அளவுகோல்கள் அடிப்படையில், நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டு உள்ளன. அதன்படி, இந்தியா 81வது இடத்தில் உள்ளது. ஆனால், சீனாவுடன் ஒப்பிடுகையில் இது பெருமைக்குரியதுதான். ஏனென்றால், சீனா 107வது இடத்தில் உள்ளது. இப்பட்டியலில், அயர்லாந்துக்கு முதல் இடம் கிடைத்துள்ளது. மனித இனத்துக்கும், பூமிக்கும் ஆற்றிய பணிக்காக இக்கவுரவம் கிடைத்துள்ளது. பின்லாந்து, சுவிட்சர்லாந்து ஆகியவை அடுத்தடுத்து இடங்களைப் பிடித்துள்ளன. http://news.vikatan.com/article.php…
-
- 1 reply
- 415 views
-
-
மும்பை: எல்லோருடைய முன்னிலையிலும் உனது ஆடைகளை கலைவேன் என பெண் ஒருவரை மிரட்டியதாக சிவசேனா எம்.எல்.ஏ. மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மும்பை, கிழக்கு பந்தரா, காந்திநகர் சங்கம் பகுதியை சேர்ந்த 50 வயது பெண் ஒருவர் கேர்வாடி காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், கிழக்கு பந்தரா தொகுதி சிவசேனா எம்.எல்.ஏ பிரகாஷ் பால சவந்த், 'எல்லோருடைய முன்னிலையிலும் உனது ஆடைகளை அகற்றி உன்னை அடிப்பேன்' என என்னை மிரட்டினார் எனக் கூறியுள்ளார். இதையடுத்து, சிவசேனா எம்.எல்.ஏ. பிரகாஷ் பால சவந்த் மீது 3 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்ததும் நுற்றுக்கணக்கான சிவசேனா தொண்டர்கள் காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர…
-
- 0 replies
- 680 views
-
-
புதிய நாடு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிரியாவின் ராக்கா நகரில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கொடியை ஏந்தி ஆர்பரிக்கும் கிளர்ச்சிப் படை வீரர் | படம்: ராயட்டர்ஸ் இராக்கில் கிளாபத் தனி நாடு அறிவிக்கப்பட்டுவிட்டதாக தங்கள் கொடியுடன் கோஷமிட்டு வந்த ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்கள்.|படம்: ராய்ட்டர்ஸ். இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் இராக் அண்ட் லெவன்ட் கிளர்ச்சிப்படை, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் மீது ஜிகாத் நடத்த வேண்டும் என்று தனது ரமலான் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளது. இராக், சிரியா நாடுகளின் நகரங்களை இணைத்து இஸ்லாமிய சட்டத்தின் அடிபபடையிலான தனி நாடை அமைக்க ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சி அமைப்பு கடந்த சில வாரங்களாக இராக்கில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ்.அமைப்பின் தளபதி …
-
- 6 replies
- 688 views
-
-
இஸ்லாமிய கிலாஃபத்தில் வந்து குடியேற உலக முஸ்லீம்களை அழைக்கிறார் அல் பக்தாதி உலக முஸ்லீம்கள் இராக் மற்றும் சிரியாவுக்கு வந்து புதிதாக உருவானதாக அறிவிக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய அரசை பலப்படுத்த ஐஸிஸ் அமைப்பின் தலைவர் அபு பக்ர் அல் பக்தாதி கோரியிருக்கிறார். இந்தப் புதிய இஸ்லாமிய நாட்டுக்கு வந்து குடியேறுவது என்பது முஸ்லீம்களுக்குரிய "கடமை" என்று அவர் ஒலிப்பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்ட செய்தி ஒன்றில் கூறியிருக்கிறார். குறிப்பாக, நீதிபதிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள், ராணுவ மற்றும் நிர்வாகத் திறமை கொண்டவர்கள் இந்தப் புதிய இஸ்லாமிய கிலாஃபத்துக்கு வரவேண்டும் என்று அவர் கோரியிருக்கிறார். "சிரியா , சிரியர்களுக்கு மட்டுமானதல்ல, இராக், இராக்கியர்களுக்கு மட்டுமானதல்ல , ம…
-
- 0 replies
- 406 views
-
-
நரேந்திர மோடி பிரதமராகலாம் என்கிற சூழலில் அமெரிக்கா பாஜகவை வேவுபார்த்ததாக புகார் இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் அப்போதைய பிரதான எதிர்கட்சியான பாஜகவை அமெரிக்க அரசின் தேசிய பாதுகாப்பு அமைப்பு வேவு பார்த்ததாக வெளியான செய்திகள் தொடர்பில் இந்தியாவில் இருக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகளை நேரில் அழைத்து புகார் செய்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கைகள் இந்தியாவால் ஏற்கமுடியாதவை என்று வர்ணித்திருக்கும் இந்திய அதிகாரிகள் இனிமேல் எதிர்காலத்தில் இப்படி நடக்காது என்று அமெரிக்கா உறுதியளிக்கவேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்கள். அமெரிக்க அரசின் புலனாய்வுத்துறையால் வேவு பார்க்கப்பட்ட வெளிநாட்டு அரசியல் கட்சிகள் பட்டியலில் பாஜகவும் இருந்த…
-
- 0 replies
- 516 views
-
-
ஹுமாயூன் சமாதி இந்தியாவின் தலைநகர் டெல்லியை உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கக் கோரி மத்திய கலாச்சார அமைச்சகம் யுனெஸ்கோ அமைப்பிடம் விண்ணப்பித்துள்ளது. வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் யுனெஸ்கோவின் தேர்வுக் குழுவினர் டெல்லியை பார்வையிட உள்ளனர். பாரம்பரியம் மிக்க நகரம் டெல்லி என்பதற்கான ஆதாரங்கள் அடங்கிய விரிவான அறிக்கையை மத்திய கலாச்சார அமைச்சகம், டெல்லி சுற்றுலாக் கழகம், டெல்லி போக்குவரத்து மேம்பாட்டுக் கழகம், கலை மற்றும் கலாச்சார பாரம்பரியங்களுக்கான இந்திய அறக்கட்டளை அமைப்பு ஆகி யவை இணைந்து தயாரித்துள்ளன. இந்த அறிக்கை யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னங்களுக்கான தேர்வுக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த அறிக்கையில் பழைய டெல்லியில் உள்ள ஷாஜஹானா பாத் மற…
-
- 0 replies
- 399 views
-
-
பிரித்தானியாவில் பல இனத்தவர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களில் எந்த இனத்தவர்கள் திருமணம் முடித்து தம்பதிகளாகவும் மற்றும் குடும்பங்களோடு ஒன்றிணைந்து வாழ்ந்து வருகிறார்கள் என்று ஒரு கணக்கெடுப்பை, ஆங்கில ஊடகம் ஒன்று நடத்தியுள்ளது. ஆங்கிலேயர், இந்தியர்கள், ஆக்பானிஸ்தானியர்கள், ரொமேனியர்கள் என்று நூற்றுக்கணக்கான இனத்தவர்கள் பிரித்தானியாவில் வாழ்ந்து வருகிறார்கள். இருப்பினும் இவர்களில் இந்தியர்களே 85 வீதமானவர்கள் மணம் முடித்து மற்றும் குடும்பங்களோடு பின்னிப்பிணைந்து வாழ்கிறார்கள் என்றும், இவர்களுக்கு அடுத்தபடியாக ஈழத் தமிழர்கள் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது. அதாவது 84 சதவீதமான ஈழத் தமிழர்கள் திருமணம் முடித்து தமது குடும்பங்களோடு வாழ்ந்து வருகிறார்கள். …
-
- 15 replies
- 1.4k views
-
-
தமிழ்நாட்டில் அமைந்துள்ள சார்நிலை மற்றும் கீழ் நீதிமன்றங்களில் இனி வரும் காலங்களில் தமிழ் மொழியில் மட்டும் தான் தீர்ப்பு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றங்களில் ஆங்கிலத்திலும் தீர்ப்பு வழங்க வழிவகுக்கும் சுற்றறிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவின் விசாரணையில் இந்த தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது. வழக்கு விபரம் தொடர்புடைய விடயங்கள் நீதித்துறை உயர்நீதிமன்றத்தில் முன்னதாக வழக்கறிஞர் சோலை சுப்ரமணியம் என்பவர் கடந்த 2010ம் ஆண்டு தொடர்ந்த வழக்கு ஒன்றில், 1994ம் வருடம் நீதிமன்றப் பதிவாளர் வெளியிட்ட சுற்றறிக்கை ஒன்றில் சட்டத்துக்கு முரணான வழிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதாக குற்றம் கூறினார்…
-
- 3 replies
- 507 views
-
-
1. புலத்தில் சிலர் போரின்போதும் போரின்பின்னும் கள நிலவரங்களைப்பற்றி எந்த பிரக்ஞையும் இல்லாது விடுதலையை ஒரு கூச்சல்போல போடுகிறார்கள். அவர்கள் நமக்கு வேண்டிய சக்திகள். ஆதலால் அவர்கள் அனுபவமுள்ளவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். எமக்கு ஆதரவான சிங்களத் தோழர்கள் மிகுந்த ஆபத்துக்களின் மத்தியில் போரின்போதும் பின்னும் இனக்கொலை ஆவணங்களை திரட்டி உலகிற்க்குத் தந்துள்ளனர். இத்துடன் கற்றுக்கொள்வதற்க்காக யதீந்திராவின் பதிவையும் தீப செல்னவனின் பதிவையும் இணைக்கிறேன். 2 யதீந்திராவின் பதிவு பிரசன்ன விதேனகேயின் திரைப்படத்தை தமிழ் நாட்டில் திரையிடுவதற்கு எதிர்ப்பு தொிவித்தை முன்வைத்து பலரும் பல விதமான பதிவுகளை இட்டு வருகின்றனர். பிரசன்னவின் குறித்த படத்தை நான் பார்க்கவில்லை. …
-
- 18 replies
- 1.2k views
-
-
செல்வாக்கை பயன்படுத்த முற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் விசாரணை செய்வதற்காக பிரான்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோஷி தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக முன்னூதாரணம் இல்லாத வகையில் அமைந்த இந்த நடவடிக்கைக்காக பாரிஸுக்கு அருகிலுள்ள நாந்தேர்ரே பகுதியில் இவர் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதிக்கு எதிரான வழக்கு தொடர்பாக உள் இரகசியங்கள் மற்றும் தகவல்களை பெற முயன்றார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று திங்கட்கிழமை சர்கோஷியின் வழக்குரைஞரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவங்களால் எதிர்வரும் 2017ஆம் ஆண்டில் ஜனாதிப…
-
- 0 replies
- 448 views
-
-
ஐஸிஸ் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் திக்ரித் நகரில் சிக்கிய இந்திய செவிலியர்களுக்கு நெருக்கடி இராக்கில் நடந்து வரும் தொடர் வன்முறையில் புதிய குண்டு வெடிப்பு தாக்குதல்களினால், திக்ரித் நகரில் உள்ள இந்திய செவிலியர்கள் அவர்கள் பணிபுரியும் மருத்துவமனையின் அடித்தளத்திற்கு மாற்றப்பட்டு, அங்கு தனித்து விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுததாரிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் திக்ரித்தின் இந்த மருத்தவமனையில் 46 இந்திய செவிலியர்கள் சிக்கியுள்ளனர். இந்தியாவிற்கு திரும்ப வேண்டுமா அல்லது இராக்கிலேயே நெருக்கடி இல்லாத பகுதிகளில் தங்கிவிட வேண்டுமா என்ற மனக் குழப்பத்தை பல செவிலியர்கள் எதிர்கொள்கின்றனர்.அந்த மருத்துவமனை வளாகத்தில் குண்டுகள் வெடித்ததை அடுத்து, மர…
-
- 0 replies
- 441 views
-
-
முதல் உலகப் போரைத் தூண்டிய படுகொலையின் நூறாண்டு இளவரசர் ப்ரான்ஸ் பெர்டினாண்ட் படுகொலை, ஜூன் 28, 1914 சரயோவாவில் கொலை ஆஸ்திரிய பட்டத்து இளவரசர் ஆர்ச்ட்யூக் ப்ரான்ஸ் பெர்டினாண்ட் மற்றும் அவரது மனைவி சோபி, ஆகிய இருவரும், செர்பிய தேசியவாதி, காவ்ரிலொ ப்ரின்சிப் என்பவரால் கொலை செய்யப்பட்டது, ஆறே வாரங்களில் போர் மூளச் செய்யும் தொடர் நிகழ்ச்சிகளைத் தூண்டியது. இது அடுத்த நான்காண்டுகளுக்கு நீடித்த மேலும் பரவலான மோதலுக்கு வழிவகுத்தது. போருக்கு இட்டுச்சென்ற வாரம், ஆகஸ்டு 1-12, 1914 நெருக்கடியில் ஐரோப்பா ஆகஸ்டின் முதல் இரு வாரங்களில் நெருக்கடி முற்றுகிறது. ஐரோப்பிய நாடுகள் உலகை மோதலில் ஆழ்த்துகின்றன. ஜெர்மனி, ரஷ்யா மீதும் பிரான்ஸ் மீது போர் தொடங்குகிறது. பெல்ஜியத்தை…
-
- 0 replies
- 478 views
-
-
கடந்த இரு வாரமாகப் பாக்கிஸ்தான் ராணுவம், தலிபான்களுக்கு எதிராக வான் வழித்தாக்குதலை நடாத்துகின்றது : ஐரோப்பியசெய்தியாளர் கடந்த இரு வார காலமாகப் பாக்கிஸ்தான் ராணுவம், தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக வான் வழித்தாக்குதலை நடாத்தி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது தலிபானின் அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசமான வட வசிறிஸ்தான் பகுதிகளில், தரை வழித்தாக்குதலையும் பாக்கிஸ்தான் ராணுவம் ஆரம்பித்துள்ளது. நேற்றைய திங்கட்கிழமை நடாத்தப்பட்ட தாக்குதலில் பதினைந்து தீவிர வாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாக்கிஸ்தான் ராணுவம் நடாத்திவரும் தரைவழிப் போரில் கவசவாகனங்களும், நவீன போர்க் கருவிகளும் உபயோகிக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தலிபான் தீவிரவாதிகள…
-
- 0 replies
- 449 views
-
-
ஆஸ்திரியாவின் இளவரசர் ஆர்ச்டியூக் பிரான்சிஸ் பெர்டினாண்ட் கொல்லப்பட்ட சம்பவத்தின் நினைவு நாளை யொட்டி, போஸ்னியா தலைநகர் சரயேவோவில் சனிக்கிழமை இசை நிகழ்ச்சி நடந்தது. வியன்னா பில்ஹார்மோனிக் இசைக் குழுவினர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், ஆஸ்திரிய அதிபர் ஹெய்ன்ஸ் பிஷர், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். எனினும், செர்பியப் பிரதமர் அலெக்சாண்டர் வூகிக், போஸ்னியன் செர்ப் அதிபர் மிலோராட் தோடிக் போன்ற தலைவர்கள் இந்த நிகழ்ச்சியைப் புறக்கணித்துள்ளனர். நிகழ்ச்சி நடைபெற்ற கட்டிடம் முதல் உலகப் போர் நினைவாகக் கட்டப்பட்டது. 1992 முதல் 1995 வரை நடந்த போஸ்னிய உள்நாட்டுப் போரின்போது போஸ்னியன் செர்ப் படைகளால் சேதப்படுத்தப்பட்ட இந்தக் கட்டிடம், சமீபத்தில்தான் புதுப்பிக…
-
- 0 replies
- 390 views
-
-
புதிய "கேலிஃபேட்" உருவானதாக ஐஸிஸ் அறிவிப்பு இராக்கிலும், சிரியாவிலும், தனது கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களை இணைத்து, புதிய இஸ்லாமிய மதரீதியான அரசு ( கேலிஃபேட்) ஒன்றை உருவாக்கியிருப்பதாக , இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவான ஐஸிஸ் அறிவித்திருக்கிறது. இந்த புதிய அரசின் கேலிஃப் ஆகவும், உலகின் அனைத்து முஸ்லீம்களின் தலைவராகவும், தனது தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதி இருப்பார் என்று அது அறிவித்திருக்கிறது. இந்த கேலிஃபேட், வட சிரியாவின் அலெப்போவிலிருந்து கிழக்கு இராக்கில் உள்ள தியாலா மாகாணம் வரை பரவியிருக்கும் என்றும் அது அறிவித்திருக்கிறது.அவர் இனி கலிஃப் இப்ராஹிம் என்ற பெயரில் அறியப்படுவார் என்று அது கூறியது. இந்த கேலிஃபேட், வட சிரியாவின் அலெப்போவிலிருந்து கிழக்கு இராக்கில் …
-
- 0 replies
- 464 views
-
-
ரூ. 360 கோடி ஹெலிகாப்டர் ஊழல்: மே.வங்க கவர்னர் எம்.கே.நாராயணனிடம் சிபிஐ விசாரணை Read more at: http://tamil.oneindia.in/news/india/cbi-questions-west-bengal-governor-m-k-narayanan-as-witness-vvip-chopper-deal-204558.html http://tamil.oneindia.in/news/india/cbi-questions-west-bengal-governor-m-k-narayanan-as-witness-vvip-chopper-deal-204558.html
-
- 6 replies
- 672 views
-
-
இராக்கில் அமெரிக்காவுக்கு உதவியவர்களையே நட்டாற்றில் விட்டுவிட்டது அமெரிக்க அரசு அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் எம். நிக்ஸன் ஹென்றி ஏ. கிஸ்ஸிங்கரின் காதில் இப்படிக் கிசுகிசுத்தார்: “நாம் இதைப் பற்றியெல்லாம் உணர்ச்சிவசப்பட்டுக்கொண்டிருக்க வேண்டாம்.” என்ன செய்தாலும் தெற்கு வியட்நாம் தேறவே போவதில்லை என்பதே அவருடைய கிசுகிசுப்புக்குப் பொருள். அது 1972 ஆகஸ்ட் மாதம். அமெரிக்கப் படைகள் வெளியேறிய பிறகு, தெற்கு வியட்நாம் நொறுங்கிவிடும் என்பதே நிக்ஸனின் கவலை. “இன்னும் ஓரிரு ஆண்டுகளுக்கு இந்த நாடு எப்படியாவது தாக்குப்பிடிக்கும் வழியை நாம் கண்டாக வேண்டும்; வரும் அக்டோபருக்குள் நாம் அதைச் செய்துவிட்டால் 1974 ஜனவரிக்குப் பிறகு யாரும் இதை எதுவும் செய்துவிட முடியாது” என்று ஆமோதித்தார் கிஸ்ஸிங்…
-
- 3 replies
- 2.6k views
-