உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26700 topics in this forum
-
பிரித்தானிய தலைநகர் லண்டனில் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ்களில் கட்டணங்களுக்கு இனிமேல் காசு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. முற்பணம் செலுத்தப்பட்ட அட்டைகள், சலுகைக் கட்டண அட்டைகள் முதலானவற்றின் மூலமே லண்டன் பஸ்களில் பயணிகள் தமது கட்டணங்களை செலுத்த முடியும். நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் இத்திட்டம் அமுலுக்கு வருவதாக லண்டன் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் வருடாந்தம் 24 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்களை சேமிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லண்டன் மா நகரில் சுமார் 24,500 பஸ்கள் சேவையில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது. இவற்றில் 0.7 சதவீதமான பஸ்கள் மாத்திரமே கட்டணங்களுக்கு காசை ஏற்றுக்கொள்ளும் நடைமுறையை தொடர்ந்தன எனவும் ஏனைய பஸ்கள் ஏற்க…
-
- 0 replies
- 418 views
-
-
Planes in 'near miss' at Barcelona airport 1 hour ago A plane spotter captured footage appearing to show the moment two aeroplanes almost collided at a Barcelona airport. An Airbus 340 is shown crossing the runway at El Prat Airport as a flight from Moscow is coming in to land. The pilot of the Boeing 767 from Russia then aborts the landing. The plane then lands safely on the runway shortly afterwards. Officials have denied passengers were in danger at any point. Footage courtesy of Miguel Ángel Ramírez Ruiz. Thanks http://www.bbc.co.uk/news/world-europe-28195337 ஸ்பெயின் நாட்டில் உள்ள பர்சிலோணா விமான நிலையத்தில் நடக்கவிருந்த பாரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.…
-
- 0 replies
- 441 views
-
-
ரோமன் கத்தோலிக்கப் பாதிரியார்களால் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டவர்களை போப் பிரான்ஸிஸ் இன்று திங்கட்கிழமையன்று சந்திக்கிறார். பிரிட்டன், ஜெர்மனி மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளில் இது போன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்ட ஆறு பேரும் அவர் தினசரி நடத்தும், தனியான காலை நேர வழிபாடு ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு பின்னர் அவருடன் பேசுவார்கள். போப் பிரான்ஸிஸ் 16 மாதங்களுக்கு முன்னர் போப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து இத்தகைய சந்திப்பு நடப்பது இதுவே முதன் முறையாகும். இது போல ரோமன் கத்தோலிக்கப் பாதிரியர்களின் பாலியல் துஷ்பிரயோகத்தைத் தான் சகித்துக்கொள்ளப் போவதில்லை என்று கூறியிருக்கும் போப் பிரான்ஸிஸ், இதைக் கையாள்வது திருச்சபையின் நம்பகத்தன்மைக்கு மிகவும் முக்கிய…
-
- 0 replies
- 459 views
-
-
ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பிராந்தியத்தில் பள்ளிவாசல்கள் தகர்ப்பு 2014-07-07 12:47:53 ஐ.எஸ்.ஐ.எஸ் ஜிஹாத் இயக்கத்தினர் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த கலீஃபா ஆட்சிக்குட்பட்ட தனிநாடாக பிரகடனம் செய்த பிராந்தியத்திலுள்ள முஸ்லிம்களின் பள்ளிவாசல்களை அழித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வரலாற்று சிறப்புமிக்க வடக்கு ஈராக் மற்றும் சிரிய எல்லைப் பகுதிகளை இணைத்து இஸ்;லாமிய நாடாக (இஸ்லாமிக் ஸ்டேட்) ஐ.எஸ்.ஐ.எஸ் எனும் சுன்னி முஸ்லிம் ஜிஹாதிகளால் கடந்த மாதம் பிரகடனம் செய்யப்பட்டது, இந்நிலையில் தமது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் மொசூல் நகரிலுள்ள இஸ்லாமியர்களின் அடையாளங்களாகவுள்ள சுன்னி முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் உட்பட 6 சியா முஸ்லிம்களின் பள்ளிவாசல…
-
- 0 replies
- 1.7k views
-
-
கொல்கத்தாவில் ஒட்டிப்பிறந்த இரட்டை பெண்களுக்கு 45வது வயதில் ஜசிமுதீன் அகமது என்ற ஆசிரியர் காதலராக கிடைத்துள்ளார். ஒட்டிப் பிறந்த இரட்டை பிறவிகளான கங்கா மற்றும் ஜமனா மோன்டால் ஆகியோர் சர்க்கஸ் கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றனர். 7 மாதங்களுக்கு முன் சர்க்கஸ் கம்பெனியில் சவுண்ட் என்ஜினியராக பணிபுரிய வந்த பள்ளி ஆசிரியரான ஜசிமுதீன் அகமது அவர்களை கண்டவுடன் காதல் கொண்டார். அவர்கள் இருவரும் இவர் தான் தங்களை உண்மையாக காதலிப்பதாக உணர்ந்தனர். ஆகையால் எல்லையற்ற மகிழ்ச்சியில் திளைத்தனர். இது பற்றி இரட்டையர்களில் ஒருவரான ஜமுனா கூறுகையில், கடந்த காலங்களில் நாங்கள் மிகவும் அவதிப்பட்டோம். இனிமேலும் நாங்கள் அவதிப்பட விரும்பவில்லை. வரும் காலம் முழுவதையும் நாங்கள் அவருடன் கழிப்போம் என …
-
- 0 replies
- 462 views
-
-
புதுடெல்லி: " ஷீரடி சாய்பாபா இறைச்சியை சாப்பிட்டவர், அவர் எப்படி இந்து கடவுள் ஆக முடியும்?" என்று துவாரகா பீடாதிபதி சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்த் சரஸ்வதி கூறியுள்ளார். இந்துக்கள் ஷீரடி சாய்பாபாவை வழிபடுவதற்கு, துவாரகா பீடாதிபதி சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்த சரஸ்வதி எதிர்ப்பு தெரிவித்துவருகிறார். யார் இறைச்சியை சாப்பிட்டாரோ அவர் இந்து கடவுளாக ஆகவே முடியாது என்று ஸ்வரூபானந்த சரஸ்வதி கூறியுள்ளார். சாய்பாபாவை வழிபடுபவர்கள் மற்ற கடவுள்களின் படங்களையும் பயன்படுத்துகின்றனர். பணம் பெறுகின்றனர் என்று கூறியுள்ள அவர், நமது கடவுள்களின் படங்களை பயன்படுத்தவில்லை என்றால், அவர்களுக்கு யார் அனைத்தையும் கொடுப்பார்கள் என்று எழுப்பியுள்ளார். இந்து கடவுள் புகைப்படங்களுடன் சாய்பாபாவின் பட…
-
- 3 replies
- 1.7k views
-
-
உலகப் புகழ் பெற்ற டப்பாவாலாக்கள் மூலம் இன்னொரு புதிய யோசனை, சத்தமில்லாமல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம் அவர்கள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கின்றனர். டப்பாவாலா என்போர் மும்பையில் அலுவலங்களில் பணி புரிவோரின் வீடுகளில் சமைக்கப்பட்ட உணவைப் பெற்று, அவரவர்க்கு உரிய வகையில் உரிய நேரத்தில் வழங்கி, காலி உணவு டப்பாக்களை மீண்டும் அவரவர் இல்லங்களில் வந்து சேர்க்கும் பணியைச் செய்யும் தொழிலாளர்கள். டப்பாவாலா தொழிலில் ஈடுபடுவோர் பெரும்பாலும் ஆண்களே. இருசக்கர வாகனம், நடை, இரயில் என்று பல்வேறு வழிகளை அவர்கள் பின்பற்றுகின்றனர். தற்போது எஸ்.எம்.எஸ் என்று அறியப்படும் குறுஞ்செய்தி நுட்பத்தையும் தங்கள் தொழிலில் இவர்கள் பின்பற்றுகின்றனர். வேல்ஸ் இளவரசர் சார்லஸ் இந்தியா வ…
-
- 0 replies
- 662 views
-
-
இந்தியாவில் காணப்படும் 270 வகை பாம்பு இனங்களில் 60 வகை பாம்புகள் கொடிய விஷம் கொண்டவை. இவற்றில் பாம்புகளின் அரசனாக கருதப்படும் ராஜநாகம் மிகவும் அழகான மற்றும் மிகவும் கொடிய விஷத்தன்மை கொண்ட பாம்பாகும். இதைத் தவிர சுருட்டைப் பாம்பு, நல்ல பாம்பு, கண்ணாடி விரியன், கட்டு விரியன் ஆகிய 4 வகை பாம்புகளும் கொடிய விஷத்தன்மை உடைய பாம்புகளாக அறியப்படுகின்றன. இவற்றோடு இந்தியன் பைத்தான் என்ற மலைப்பாம்பு உலகில் காணக்கூடிய மிகப்பெரிய பாம்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. பரிஷினக்கடவு ஸ்நேக் பார்க்: கேரளாவின் மிகப்பெரிய பாம்புப் பூங்காவாக கருதப்படும் பரிஷினக்கடவு ஸ்நேக் பார்க் கண்ணூர் நகரத்திலிருந்து 16 கி.மீ தூரத்தில் உள்ள பரிஷினக்கடவு எனும் சிறிய கிராமத்தõல் அமைந்துள்ளது. இங்கு ராஜநாகம…
-
- 0 replies
- 3.1k views
-
-
ஏழை மக்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை கிடைப்பதற்காக, வீட்டுக்கு பத்து ரூபாய் நன்கொடை யாக வசூலிக்கும் புதிய திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளார் ஒரு மாவட்ட ஆட்சியர். இது தேசிய செஞ்சிலுவை சங்கத்தின் உள்ளூர் அமைப்பின் மூலம் அமல்படுத்தப்பட உள்ளது. இது குறித்து ‘தி இந்து’விடம் பிஹார் மாநிலம் கைமூர் மாவட்ட ஆட்சியர் அர்விந்த்குமார் சிங் கூறியதாவது: மாவட்டம் முழுவதும் உள்ள சுமார் நான்கு லட்சம் குடும்பத்தின ரிடம் தலா ரூ.10ஐ நன்கொடை யாக தரும்படி கேட்டுக் கொண் டிருக்கிறோம். இதன்மூலம், குறைந்தபட்சம் ரூ.20 லட்சம் கிடைக்கும். இந்த திட்டத்திற்கு மாவட்டம் முழுவதும் நல்ல வர வேற்பு உள்ளது. காரணம், உடனடி சிகிச்சை மற்றும் உதவிகள் கிடைக் காமல் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த …
-
- 1 reply
- 446 views
-
-
இந்தோனேசியாவில் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 4 பேரைக் காணவில்லை. இதுகுறித்து தேடுதல் மற்றும் மீட்புக் குழு தலைவர் மர்சுதி வெள்ளிக்கிழமை கூறியதாவது: இந்தோனேசிய தங்கச் சுரங்கத்தில் நிலச்சரிவு: 9 பேர் பலி நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள பப்புவா மாகாணத்தில் உள்ள டகூவோ கிராமத்துக்கு அருகே உள்ள தங்கச் சுரங்கத்தில் புதன்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற மீட்புக் குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதில் 2 பேர் உயிருடனும் 9 பேர் சடலமாகவும் மீட்கப்பட்டனர். மேலும் 4 பேரைக் காணவில்லை. என அவர் தெரிவித்தார். சமீப காலமாக தங்கத்தின் விலை உயர்ந்து வருவதால், இந்தோ னேசியாவில் தங்கச் சுரங்கங்களில்…
-
- 0 replies
- 392 views
-
-
சோனியா, ராகுலுக்கு அடுத்த நெருக்கடி- வருமான வரித்துறை நோட்டீஸ்! டெல்லி: சர்ச்சைக்குரிய நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் வருமான வரி விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளது. ஜஹவர்லால் நேரு காலத்தில் தொடங்கப்பட்ட நேஷனல் ஹெரால்டு பத்திரிகை சில ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. அப்போது அந்த பத்திரிகைக்கு இருந்த கடனை அடைக்க காங்கிரஸ் கட்சியில் இருந்து சட்டவிரோதமாக சோனியா, ராகுல் ஆகியோர் பணம் கொடுத்தனர்; அதற்கு ஈடாக நேஷனல் ஹெரால்டுக்கு சொந்தமான ரூ2 ஆயிரம் கோடி சொத்து அபகரிக்கப்பட்டது என்பது புகார். இது தொடர்பாக பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி வ…
-
- 0 replies
- 968 views
-
-
புதுடெல்லி: டெல்லி முதல்வராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஷீலா தீட்சித் பதவி வகித்தபோது, அவர் தங்கியிருந்த பங்களாவில் 31 ஏ.சி.க்கள், 25 ஹீட்டர்கள், 15 கூலர்கள் பொருத்தப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளன. டெல்லியில் கடந்த ஆட்சியின்போது, அங்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ஷீலா தீட்சித் முதல்வராக பதவி வகித்தார். அப்போது அவர் மோதிலால் நேரு மார்க் பகுதியில் உள்ள 3.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட அரசு பங்களாவில் தங்கியிருந்தார். கடந்த டிசம்பர் மாதம் நடந்த தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததையடுத்து, ஷீலா தீட்சித் அந்த வீட்டை காலி செய்தார். இதையடுத்து அந்த வீடு ரூ.35 லட்சம் செலவில் புணரமைக்கப்பட்டு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஷீலா தீட்சித் …
-
- 0 replies
- 556 views
-
-
பாக்தாத்/புதுடெல்லி: ஈராக்கில் கடத்தப்பட்ட இந்திய நர்ஸ்கள் 46 பேரையும் கிளர்ச்சியாளர்கள் விடுவித்துள்ள நிலையில், சனிக்கிழமையன்று அவர்கள் இந்தியா அழைத்து வரப்பட உள்ளனர். விடுவித்த நர்ஸ்களை ஈராக் ராணுவத்திடம் கிளர்ச்சியாளர்கள் ஒப்படைத்ததை தொடர்ந்து, துள்ளதாகவும், அவர்கள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவதற்காக எர்பில் விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி இன்று காலை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்துப் பேசினார். அப்போது இதுகுறித்த தகவல் அவருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனை அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நாளை கொச்சி வருகை இந்நிலையில் விடுவிக்கப்பட்ட 46 இந்திய செவிலியர்களும்…
-
- 0 replies
- 388 views
-
-
ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் மேற்கு வங்க ஆளுநராக இருக்கும் எம்.கே. நாராயணன், கோவா ஆளுநர் வான்சூ ஆகியோரை சிபிஐ தமது தரப்பு சாட்சியங்களாக சேர்க்க இருப்பதாக சட்ட அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளது. நாட்டின் வி.வி.ஐ.பிகளுக்கான ஹெலிகாப்டர்களை இத்தாலியில் இருந்து வாங்கியதில் பெருமளவு முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இத்தாலியின் அகஸ்டாவெஸ்ட்லாண்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்தும் செய்தது. இந்த வழக்கில் நாட்டின் விமானப்படை தளபதியாக இருந்த தியாகி உள்ளிட்ட 13 பேர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. மேலும் 2005ஆம் ஆண்டு இந்த ஹெலிகாப்டர்களின் தொழில்நுட்ப விவரங்களை மாற்றுவதற்கான ஆலோசனைக் கூட்டத்தில் அப்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த எம்.கே. நார…
-
- 30 replies
- 2.3k views
-
-
கோபால் சுப்பிரமணியம் விவகாரத்தில் பாஜக பழிவாங்கலுடன் செயல்படுகிறது: காங்கிரஸ் சாடல் உச்சநீதிமன்ற நீதிபதியாக மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியத்தை நியமிக்கும் விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சி பழிவாங்கல் அரசியலை கடைபிடிக்கிறது என்று காங்கிரஸ் கட்சி சாடியுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதியாக கோபால் சுப்பிரமணியத்தை நியமிக்க நீதிபதிகள் நியமனக் குழு பரிந்துரைத்தது. ஆனால் இதை மத்தியா அரசு ஏற்க மறுத்தது. கோபால் சுப்பிரமணியம் விவகாரத்தில் பாஜக பழிவாங்கலுடன் செயல்படுகிறது: காங்கிரஸ் சாடல் இந்த விவகாரத்தில் மத்திய அரசை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி லோதா மிகக் கடுமையாக சாடியிருந்தார்…
-
- 1 reply
- 807 views
-
-
தாய்லாந்தின் சமுத் சகொன் மாகாணத்திலுள்ள இறால் பண்ணை ஒன்றில் 1000 வருடங்கள் பழைமையான அரேபிய கப்பல் ஒன்று அண்மையில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 6 முதல் 11ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இக்கப்பல் சரக்கு பொருட்களை கொண்டுசெல்வதற்காக ஆசியக் கண்டத்தின் கரையோரப் பகுதிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தாய்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழைமையான கப்பல் இதுவாகும். 25 மீற்றர் நீளமான இக்கப்பலை புனர் நிர்மாணம் செய்யும் நிலையில் உள்ளதாக நீரின் கீழான தொல்பொருள் ஆராய்ச்சியாளரான எர்ப்ரெம் வட்சரங்குல் குறிப்பிட்டுள்ளார். இக்கப்பலை மீட்கும் பணிகளில் தற்போது 10 சதவீதமானவையே முடிவடைந்துள்ளது. இதன் மீட்புப் பணிகள் கடந்த வரும்…
-
- 0 replies
- 568 views
-
-
புதுடெல்லி: பெரும்பாலான பெண்கள் வரதட்சணைக்கு எதிரான சட்டத்தை தவறாக பயன்படுத்துவதாக உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து அனைத்து மாநிலங்களும் உச்சநீதிமன்றம் அனுப்பியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில், ''தங்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக கணவரையும், கணவரது உறவினர்களையும் தண்டிப்பதற்காக வரதட்சணைக்கு எதிரான இந்திய தண்டனை சட்டம் 498ஏ.வை பயன்படுத்தி வரும் பெண்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகி விட்டது. இவ்வாறு பதிவு செய்யப்பட்ட பல்வேறு வழக்குகளில் விசாரணைக்கு பிறகு ஏராளமானோர் விடுதலை செய்யப்பட்டிருப்பது பெண்களின் புகார் பொய்யனாது என்பதை நிரூபித்துள்ளதாக உள்ளது. எனவே, இந்திய சட்டப்பிரிவு 498ஏ.வின் படி யாரையும் நீதிபதிகள் உத்தரவின்றி காவல்துறை கைது செய்யக்கூடாது'' என…
-
- 0 replies
- 435 views
-
-
புதுடெல்லி: மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்தியாவின் அதிவேகமான ரயிலின் சோதனை ஓட்டம் இன்று வெற்றிகரமாக நடந்தது. டெல்லியில் இருந்து ஆக்ராவுக்கு 90 நிமிடங்களுக்குள், அதாவது மணிக்கு 160 கி.மீ என்ற வேத்தில் இந்த ரயில் சென்றடைந்தது., . வழக்கமாக டெல்லியில் இருந்து ஆக்ராவுக்கு செல்ல 120 நிமிடங்கள் முதல் 190 நிமிடங்கள் வரை ஆகும். ஆனால், விரைவில் அறிமுகமாகவுள்ள இந்த அதிவேக ரெயி்ல் மூலம் வெறும் 90 நிமிடங்களிலேயே ஆக்ராவுக்கு சென்று விடலாம். இந்த அதிவேக ரயில் 5400 குதிரை சக்தி கொண்ட எலக்ட்ரிக் என்ஜினால் இணைக்கப்படுகிறது. இந்த ரயில் செல்வதற்காக போடப்படும் ரயில் பாதைக்கு மட்டும் ரூ.15 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது http://news.vikatan.com/article.php?module…
-
- 0 replies
- 674 views
-
-
விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி23 ராக்கெட். பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், பி.எஸ்.எல்.வி.-சி23 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் திங்கள்கிழமை (ஜூன் 30) காலை 9.52 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. பிரான்ஸ் நாட்டின் ஸ்பாட்-7 செயற்கைக்கோள் உள்பட மொத்தம் 5 வெளிநாட்டு செயற்கைக் கோள்களை பி.எஸ்.எல்.வி.-சி23 ராக்கெட் விண்ணில் செலுத்தியது. இதற்கான 49 மணி நேர கவுன்ட் டவுன் சனிக்கிழமை (ஜூன் 28) காலை 8.52 மணிக்கு தொடங்கியது. ராக்கெட் ஏவப்பட்ட 20 நிமிஷங்களில் 5 செயற்கைக்கோள்களையும் அவற்றுக்குரிய பாதைகளில் நிலை நிறுத்தும். இந்த ராக்கெட் 44 மீட்டர் உயரமும், 230 டன் எடையும் கொண்டது. இந்த நிகழ்ச்சியில் ஆந்திர முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடுவும் கலந்துகொண்டார். விஞ்ஞானிகளுக…
-
- 6 replies
- 727 views
-
-
பர்மாவில் மதக்கலவரத்தில் பாதிக்கப்பட்டவர் (ஆவணப்படம்) மியன்மாரின் (பர்மா) இரண்டாவது பெரிய நகரான மண்டலேயில் முஸ்லீம்களுக்குச் சொந்தமான கடைகளும், ஒரு மசூதியும் பௌத்தர்களால் தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 500க்கும் மேற்பட்ட பௌத்தர்கள், மூங்கில் கட்டைகள் மற்றும் இரும்புக் கம்பிகளுடன் தாக்க முயன்றதை போலிசார் தடுத்தனர். முஸ்லீம் ஒருவர் சுடப்பட்டார் என்றும், மூன்று பௌத்தர்கள் காயமடைந்தனர் என்றும் உள்ளூர் செய்திகள் கூறுகின்றன. பர்மாவின் மேற்குப் புற மாகாணமான ரக்கைன் மாகாணத்தில், கடந்த மூன்றாண்டுகளாகவே, பெரும்பான்மை பௌத்தர்களுக்கும், சிறுபான்மை முஸ்லீம் சமுதாயத்துக்கும் இடையே மதரீதியான வன்செயல்கள் நடந்து வந்திருக்கின்றன. இந்த மோதல்களில் 2012ம் ஆண்டில் மட்டும், ரக்கைன…
-
- 5 replies
- 478 views
-
-
சிறந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 81வது இடம் கிடைத்துள்ளது. உலகின் சிறந்த நாடுகள் பட்டியலை ஒரு நிறுவனம் ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது. அதில், ஐ.நா., உலக வங்கி, சர்வதேச நிதியம் மற்றும் உலக அமைப்புகள் வெளியிட்டுள்ள சிறந்த நாட்டுக்கான அளவுகோல்கள் அடிப்படையில், நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டு உள்ளன. அதன்படி, இந்தியா 81வது இடத்தில் உள்ளது. ஆனால், சீனாவுடன் ஒப்பிடுகையில் இது பெருமைக்குரியதுதான். ஏனென்றால், சீனா 107வது இடத்தில் உள்ளது. இப்பட்டியலில், அயர்லாந்துக்கு முதல் இடம் கிடைத்துள்ளது. மனித இனத்துக்கும், பூமிக்கும் ஆற்றிய பணிக்காக இக்கவுரவம் கிடைத்துள்ளது. பின்லாந்து, சுவிட்சர்லாந்து ஆகியவை அடுத்தடுத்து இடங்களைப் பிடித்துள்ளன. http://news.vikatan.com/article.php…
-
- 1 reply
- 415 views
-
-
மும்பை: எல்லோருடைய முன்னிலையிலும் உனது ஆடைகளை கலைவேன் என பெண் ஒருவரை மிரட்டியதாக சிவசேனா எம்.எல்.ஏ. மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மும்பை, கிழக்கு பந்தரா, காந்திநகர் சங்கம் பகுதியை சேர்ந்த 50 வயது பெண் ஒருவர் கேர்வாடி காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், கிழக்கு பந்தரா தொகுதி சிவசேனா எம்.எல்.ஏ பிரகாஷ் பால சவந்த், 'எல்லோருடைய முன்னிலையிலும் உனது ஆடைகளை அகற்றி உன்னை அடிப்பேன்' என என்னை மிரட்டினார் எனக் கூறியுள்ளார். இதையடுத்து, சிவசேனா எம்.எல்.ஏ. பிரகாஷ் பால சவந்த் மீது 3 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்ததும் நுற்றுக்கணக்கான சிவசேனா தொண்டர்கள் காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர…
-
- 0 replies
- 681 views
-
-
புதிய நாடு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிரியாவின் ராக்கா நகரில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கொடியை ஏந்தி ஆர்பரிக்கும் கிளர்ச்சிப் படை வீரர் | படம்: ராயட்டர்ஸ் இராக்கில் கிளாபத் தனி நாடு அறிவிக்கப்பட்டுவிட்டதாக தங்கள் கொடியுடன் கோஷமிட்டு வந்த ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்கள்.|படம்: ராய்ட்டர்ஸ். இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் இராக் அண்ட் லெவன்ட் கிளர்ச்சிப்படை, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் மீது ஜிகாத் நடத்த வேண்டும் என்று தனது ரமலான் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளது. இராக், சிரியா நாடுகளின் நகரங்களை இணைத்து இஸ்லாமிய சட்டத்தின் அடிபபடையிலான தனி நாடை அமைக்க ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சி அமைப்பு கடந்த சில வாரங்களாக இராக்கில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ்.அமைப்பின் தளபதி …
-
- 6 replies
- 688 views
-
-
இஸ்லாமிய கிலாஃபத்தில் வந்து குடியேற உலக முஸ்லீம்களை அழைக்கிறார் அல் பக்தாதி உலக முஸ்லீம்கள் இராக் மற்றும் சிரியாவுக்கு வந்து புதிதாக உருவானதாக அறிவிக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய அரசை பலப்படுத்த ஐஸிஸ் அமைப்பின் தலைவர் அபு பக்ர் அல் பக்தாதி கோரியிருக்கிறார். இந்தப் புதிய இஸ்லாமிய நாட்டுக்கு வந்து குடியேறுவது என்பது முஸ்லீம்களுக்குரிய "கடமை" என்று அவர் ஒலிப்பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்ட செய்தி ஒன்றில் கூறியிருக்கிறார். குறிப்பாக, நீதிபதிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள், ராணுவ மற்றும் நிர்வாகத் திறமை கொண்டவர்கள் இந்தப் புதிய இஸ்லாமிய கிலாஃபத்துக்கு வரவேண்டும் என்று அவர் கோரியிருக்கிறார். "சிரியா , சிரியர்களுக்கு மட்டுமானதல்ல, இராக், இராக்கியர்களுக்கு மட்டுமானதல்ல , ம…
-
- 0 replies
- 407 views
-
-
நரேந்திர மோடி பிரதமராகலாம் என்கிற சூழலில் அமெரிக்கா பாஜகவை வேவுபார்த்ததாக புகார் இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் அப்போதைய பிரதான எதிர்கட்சியான பாஜகவை அமெரிக்க அரசின் தேசிய பாதுகாப்பு அமைப்பு வேவு பார்த்ததாக வெளியான செய்திகள் தொடர்பில் இந்தியாவில் இருக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகளை நேரில் அழைத்து புகார் செய்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கைகள் இந்தியாவால் ஏற்கமுடியாதவை என்று வர்ணித்திருக்கும் இந்திய அதிகாரிகள் இனிமேல் எதிர்காலத்தில் இப்படி நடக்காது என்று அமெரிக்கா உறுதியளிக்கவேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்கள். அமெரிக்க அரசின் புலனாய்வுத்துறையால் வேவு பார்க்கப்பட்ட வெளிநாட்டு அரசியல் கட்சிகள் பட்டியலில் பாஜகவும் இருந்த…
-
- 0 replies
- 518 views
-