Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பிரதமரின் கோரிக்கையை அடுத்து ஒருங்கிணைந்த ஆயுக்குழுக்கள் அரச படையுடன் இணைந்துள்ளன இராக்கில் மேற்கு மற்றும் வடக்கு பிராந்தியங்களின் பெரும்பகுதியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கின்ற இஸ்லாமிய கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக அரசாங்க விசுவாச படைகள் சமார்ரா நகரைச் சூழவுள்ள பகுதிகளில் நிலைகொண்டுள்ளன. பிரதமர் நூரி அல் மாலிக்கியும் முக்கிய ஷியா மதபோதகரும் விடுத்துள்ள கோரிக்கைகளை அடுத்து ஒருங்கிணைந்துள்ள ஆயுதக்குழுக்கள் அரச படைகளுடன் இணைந்துகொண்டுள்ளன. ஆனால், இராக்கின் அரச தலைமை நாட்டை ஐக்கியப்படுத்த முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இராக்குக்கு உதவுவதற்காக உதவிகளை அனுப்ப விரும்புவதாக அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார். அப்படியான ஐக்கியப்படுத்தும்…

    • 0 replies
    • 420 views
  2. எவ்விதமான பாம்புக்கடிக்கும் சட்டென்றும் சுலபமாகவும் பயன்படுத்தப்படவல்ல பாம்புக்கடி மருந்து ஒன்றைக் கண்டுபிடிப்பதில் ஒருபடி முன்னேற்றம் கண்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பாம்புக்கடித்த நபருக்கு மூக்கிலே பீய்ச்சித் தெளிக்கின்ற ஸ்பிரேயாகவே கொடுக்கவல்ல மருந்தை ஆய்வாளர்கள் பரிசோதித்து வருகின்றனர். உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் 50 லட்சம் பேர் பாம்புக் கடிக்கு ஆளாகிறார்கள் என மதிப்பிடப்படுகிறது. வருடத்துக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாம்புக் கடியால் பலியாகிறார்கள். நிலக்கண்ணியில் சிக்கி ஆட்கள் உயிரிழக்கும் எண்ணிக்கையை விட இது முப்பது மடங்கு அதிகமான ஒரு எண்ணிக்கை. உலகிலேயே அதிகம் பேர் பாம்புக் கடியால் உயிரிழப்பது இந்தியாவில்தான். அந்நாட்டில் ஹெச்.ஐ.வி.யால் உயிரிழப்பவர்…

  3. ஐசிஸ் ஆயுததாரிகள் இராக்கில் ஐசிஸ் என்ற இஸ்லாமியவாத கடும்போக்காளர்களால் வழிநடத்தப்படும் சுனி எழுச்சி, நாட்டின் கிழக்கில் சுனி மக்கள் அதிகமாக வாழும் டியாலா மாகாணத்தில் எதிர்ப்பைச் சந்திக்காமலேயே புதிய நிலப்பரப்புகளை கைப்பற்றி வருகிறது. அடுத்ததாக பாக்தாத்திற்கும் ஷியாக்கள் பெரும்பான்மையாக வாழும் மையப் பகுதிகளுக்கும் வருவோம் என கிளர்ச்சிக்காரர்கள் கூறுகின்றனர். ஆனாலும் மோசுலிலிருந்து வட இராக்கில் பகுதியளவில் சுயாட்சி அதிகாரம் கொண்ட குர்த் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு மக்கள் வெளியேருவதென்பது தொடர்ந்து நடந்துவரவே செய்கிறது.ஐசிஸ் கிளர்ச்சிக்கார்கள் முற்றுகையிட்டதையடுத்து வடக்கிலுள்ள மோசுல் நகரிலிருந்து வெளியேறிருந்த நுற்றுக்கணக்கானவர்கள், பாதுகாப்புக்கு பங்கம் வராது என நம்…

  4. புதுடெல்லி: கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்துக்காக உதயகுமாரின் வங்கி கணக்கில் அமெரிக்க பல்கலைக்கழகம் 40 ஆயிரம் டாலர் (ரூ.24 லட்சம்) போட்டுள்ளதாக பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பிய அறிக்கையில் உளவுத்துறை கூறியுள்ளது. ஆனால் இதனை அவர் மறுத்துள்ளார். கடந்த 3ஆம் தேதி பிரதமர் அலுவலகத்துக்கு உளவுத்துறை பரபரப்பு அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. அதன் நகல், 'ரா' அமைப்பின் தலைவர், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம், நிலக்கரி செயலாளர், மின்துறை செயலாளர், மத்திய உள்துறை அமைச்சர், நிதியமைச்சர், அமைச்சரவை செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெறும் தொண்டு நிறுவனங்கள், மேலை நாடுகளின் நலன்களுக்காக பாடுபடும் அமைப்பாக இயங்கி …

  5. புதுடெல்லி: இந்த ஆண்டில் பருவமழை வழக்கமான அளவைவிட குறைவாகவே பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளதால், நாடு முழுவதும் பரவலாக வறட்சி தாக்கும் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வறட்சியை சமாளிக்க அரசு தயராக இருப்பதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு தென் மாவட்டங்களை 'எல்நினோ' எனப்படும் வெப்பக்காற்று தாக்கக்கூடும் என்றும், இதனால் ஈரப்பதத்தை இது உறிஞ்சி பருவமழையை சீர்குலைத்துவிடும் என்றும் ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் வழக்கமாக பெய்யும் பருவமழையும் இந்தியாவில் இந்த ஆண்டு சராசரிக்கும் குறைவாகவே இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.இதனால் விவசாயிகள் மிகுந்த கவலையடைந்துள்ளனர். 'எல்நினோ' என்றால் என்ன? .எல்நினோ என்ப…

  6. உலகப் புகழ் பெற்ற புகைப்படம் – பீரங்கி டாங்கிகளுக்கு எதிரில் சாய் ராம் வலிமையான மிருகம் போல் நின்று கொண்டு இருக்கிறது அந்தப் பீரங்கி டாங்கி. அதன் துப்பாக்கி குழல் தவிர அதன் பிரம்மாண்ட அளவே பயமூட்டுவதாக இருக்கிறது. அது தவிர ரோட்டைத் தடதடக்க செய்கிற சத்தம் வேறு. ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக டாங்கிகள் சாலையை அதிர வைத்தபடி வருகின்றன. வெள்ளை சட்டை கறுப்பு பேண்ட் அணிந்த இளைஞன் அவன். கையில் ஒரு பை. கல்லூரி முடிந்தவுடன் ஷாப்பிங் முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்புகிறவன் போல ஒரு தோற்றம். முதலாவதாக வரும் பீரங்கி டாங்கிக்கு முன்னால் அதன் வழியை மறித்தபடி நிற்கிறான். தூரத்தில் இருந்து பார்க்கும் போது அவன் அந்த டாங்கியைப் பார்த்து எதோ சொல்கிறான் என புரிந்து கொள்ள முடிகிறது. அ…

  7. மோசுல் நகரைவிட்டு வெளியேறும் மக்கள் இராக்கின் இரண்டாவது பெரிய நகரான மோசுலை இசிஸ் அமைப்பைச் சேர்ந்த ஜிகாதிகள் கைப்பற்றியுள்ளது, உள்நாட்டில் மட்டுமல்ல, வெளியேயும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இசிஸ் என்றால் என்ன, அவர்கள் யார் ? இராக்கிய இஸ்லாமிய தேசம் அல்லது இராக்கிலுள்ள இஸ்லாமிய தேசம் மற்றும் லெவெண்ட் எனும் அமைப்பின் சுருக்கமே இசிஸ். கடைசியிலுள்ள எஸ் எனும் எழுத்து அரபு வார்த்தையான அல் ஷாம் என்பதைக் குறிக்கும்.அதாவது ஆங்கிலத்தில் ISIS என்று குறிக்கப்படும் இதில் முதல் மூன்று எழுத்துக்களான ஐ எஸ் மற்றும் ஐ என்பது ஆங்கிலத்தில் இஸ்லாமிக் ஸ்டேட் இன் இராக் என்பதின் சுருக்கம். இசிஸ் அமைப்பு முதலில் அல் கயீதா அமைப்பிலிருந்துதான் உருவானது. ஆனால் அது உருவானதிலிருந்து …

  8. உத்தரப் பிரதேசத்தில் காவல் துறையினரால் இளம்பெண் பாலியல் பலாத்காரம்! லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் காவல் துறையினரால் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேசத்தின் ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள சுமேர்பூர் காவல் நிலைய வளாகத்தில் இளம் பெண் ஒருவரை காவல் துறையினரே பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதே மாநிலத்தில், பதான் கிராமத்தில் 2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்ட சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்கும் முன்னரே மற்றொரு சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த 9 ஆம் தேதி இரவு சுமேர்பூர் காவல் நிலையத்தில் இருந்த தனது கணவரைப் பார்ப்பதற்காக சென்ற இளம் பெண்ணிடம், பாண்டே என்ற காவல் துறை ஆய்வாளர், 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கே…

  9. இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்று ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 24 மாணவர்கள் கதறும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள வி.என்.ஆர். விக்யான் ஜோதி பொரியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் 48 பேர் இமாச்சல பிரதேசத்தில் உள்ள மணாலிக்கு சுற்றுலா சென்றனர். அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மாண்டி மாவட்டம் குல்லு என்ற இடத்தில் பியாஸ் ஆற்றில் நின்று புகைப்படம் எடுத்தனர். அப்போது லார்ஜி நீர் மின்நிலையத்தில் மின்சார உற்பத்திக்காக அங்குள்ள அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் பியாஸ் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் 6 மாணவிகள் மற்றும் 24 மாணவர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். கரையில…

  10. லண்டனில் குற்றச் செயல்கள் அதிகரித்திருப்பதற்கு வெளிநாட்டினரின் வருகைதான் முக்கியக் காரணம்... லண்டன் இப்போது குற்றவாளிகளின் நகரமாக மாறிக்கொண்டுவருகிறது. கள்வர்கள், போதைப்பொருள் கடத்துபவர்கள், சிறுவர்களைப் பாலியல்ரீதியாக துஷ்பிரயோகம் செய்கிறவர்கள், கொலைசெய்கிறவர்கள், பிள்ளைகளைக் கடத்துகிறவர்கள், பெண்கள் மீதான வன்முறையைப் பிரயோகிப்பவர்கள் என்று குற்றங்கள் நிறைந்த இடமாகக் காணப்படுகிறது. உள்ளூர் ஆங்கிலத் தொலைக்காட்சிகளிலெல்லாம் ‘கள்வர்கள் கவனம்’ என்று விளம்பரம் போட்டுச் சொல்லுமளவுக்குக் குற்றச்செயல்கள் அதிகரித்திருக்கின்றன. இறக்குமதியாகும் குற்றங்கள் லண்டனில் வெளிநாட்டவர்களின் வருகைக்குப் பின்னர்தான் களவும், கொள்ளையும் குற்றச் செயல்களும் அதிகரித்துவிட்டதாக வெள்ளைக்கார நண்பர…

  11. பாகிஸ்தானில் பிள்ளைக்கறி தின்ற சகோதரர்களுக்கு 12 ஆண்டு சிறை இஸ்லாமாபாத், ஜூன் 11- பாகிஸ்தானின் லாகூர் நகரில் இருந்து சுமார் 400 கி.மீ. தூரத்தில் உள்ள பக்தார் மாவட்டம் டர்யா கான் பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் முகமது ஆரிப் மற்றும் பர்மான் அலி ஆகியோர் தங்கள் வீட்டுக்கு அருகாமையில் உள்ள இடுகாட்டில் உள்ள சவக்குழிகளை தோண்டுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து, அவர்களைக் கைது செய்து விசாரித்தபோது, குழியில் இருந்து தோண்டிய பிணங்களை சகோதரர்கள் இருவரும் பச்சையாகத் தின்றதாக தெரியவந்தது. கடந்த 2011ம் ஆண்டு அவர்களை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி 2 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றுத் தந்தனர். தண்டனை காலம் முடிந்து 2013ல் விடுதலையான இவர்கள், கடந்த ஏப்ரல் மாதத்த…

  12. பிரேசில்: 32 நாடுகள் பங்கேற்கும் உலக கோப்பை கால்பந்து போட்டி நாளை (12ஆம் தேதி) பிரேசில் நாட்டில் கோலாகலமாக தொடங்குகிறது. உலகின் இரண்டாவது மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான உலக கோப்பை கால்பந்து போட்டி நாளை (12ஆம் தேதி) பிரேசில் நாட்டில் தொடங்குகிறது. 32 நாடுகள் பங்கேற்கும் இந்த போட்டியை நடத்த பிரேசில் அரசு ரூ.84 கோடி செலவழித்துள்ளது. இவ்வளவு தொகை எந்த உலக போட்டியிலும் செலவழிக்கப்பட்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உலக கோப்பை கால்பந்து போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.3,450 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை தொடங்கவுள்ள இந்த போட்டியை முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டு செயற்கை கால் பொருத்தியுள்ள பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒருவர் தொடங்கி வைப்பார் எனவும் அறிவிக்கப்…

  13. ஜெயலலிதா கொண்டுவந்த மழை நீர் சேகரிப்பு திட்டம் நாடு முழுவதும்... புதுடெல்லி: குடியரசு தலைவர் உரையில் தெரிவிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என உறுதியளித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, வருகிற 2022 ஆம் ஆண்டுக்குள் இந்தியர்கள் அனைவருக்கும் சொந்த வீடு என்பது கட்டாயம் நிறைவேற்றப்படும் என கூறியுள்ளார். மேலும் 'ஊழல் இந்தியா' என்பதை 'திறமை மிகு இந்தியா' வாக மாற்ற வேண்டும் என அறைகூவல் விடுத்துள்ளார். மக்களவையில் இன்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமர் பதில் உரையாற்றினார். பிரதமராக பதவியேற்றபின் முதல்முறையாக அவர் மக்களவையில் உரையாற்றினார். மோடி பேசுகையில், "குடியரசுத் தலைவர் உரை பற்றிய அனைவரின் பேச்சையும் கூர்ந்து கேட…

  14. லண்டன் மற்றும் ஐரோப்பிய நகரங்களில் டாக்சி ஒட்டுநர்கள் ஆர்ப்பாட்டம் ஸ்மார்ட் போன் "செயலிகள்" ( அப்ளிக்கேஷன்) மூலம் வாடகைக் கார் ( டாக்ஸி) சேவைகளைப் பயன்படுத்துவது அதிகரித்து வருவதற்கு எதிராக பல ஐரோப்பிய நகரங்களில் வாடகைக் கார் ஓட்டுநர்கள் இன்று புதன் கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைச் செய்து வருகிறார்கள். லண்டனின் பிரசித்தி பெற்ற கறுப்பு வாடகைக் கார் ஓட்டுநர்கள் நகர மையத்தினூடாக வண்டிகளை மெதுவாக ஓட்டி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவிருக்கிறார்கள். பாரிஸ், பெர்லின் , ரோம் மற்றும் பிற முக்கிய ஐரோப்பிய நகரங்களில் இது போன்ற ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியாவிலிருந்து இயங்கும் உபெர் என்ற "திறன்பேசி செயலி" சேவை வாடகைக்கார் த…

  15. தொடரும் அச்சம் காரணமாக தொடர்ச்சியாக வெளியேறும் மக்கள் இராக்கின் மோசுல் நகரை இஸ்லாமியத் தீவிரவாதிகள் கைப்பற்றிய பிறகு அங்கிருந்து ஐந்து லட்சம் மக்கள் வெளியேறியுள்ளனர் என்று அச்சங்கள் வெளியாகியுள்ளன. அந்த நகரை கைப்பற்றியுள்ள, இராக்கிய இஸ்லாமியத் தேசம் மற்றும் இசிஸ் என்று அழைக்கப்படும் லெவெண்ட் அமைப்புகள் மேலும் முன்னேறி வருகின்றன.மோசுல் இராக்கின் இரண்டாவது பெரிய நகரம். இது அந்தப் பிராந்தியத்துக்கே மிகவும் அபாயகரமானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. முன்னேறி வரும் இசிஸ் அமைப்பினர் அல் கயீதாவின் ஒரு கிளை அமைப்பான இசிஸ், இப்போது கிழக்கு சிரியா, மேற்கு மற்றும் மத்திய இராக் ஆகிய பகுதிகளில் கணிசமான அளவுக்கு நிலப்பரப்பை தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதுதவிர இ…

  16. ஸ்காட்லாந்து தனிநாடாக பிரிந்துசெல்வதை ஆதரிப்போரின் பிரச்சாரம் ஸ்காட்லாந்து சுதந்திரம் தொடர்பான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்புக்கு இன்னும் 100 நாட்களே உள்ள நிலையில், சுதந்திரத்தை ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் தமக்கான ஆதரவைத் திரட்டும் தீவிர பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளனர். ஸ்காட்லாந்து தலைநகர் எடின்பரோவில் இன்று கூடிய 100 பேர், சுதந்திரத்தை ஆதரிக்கும் வகையில் யெஸ் -YES (ஆம்) என்ற வார்த்தையை பிரதிபலிக்கும் வகையில் கூடிநின்றனர். பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் உள்ள மூன்று பிரதான அரசியல்கட்சிகளும் ஸ்காட்லாந்து தனியாக பிரிந்துசென்று சுதந்திர நாடாவதை எதிர்க்கின்றன. ஸ்காட்லாந்து தொடர்ந்தும் ஐக்கிய இராச்சியத்துடன் சேர்ந்தே இருக்குமானால் அப்பிராந்தியத்திற்கு மேலதிக அதிகாரங்…

  17. புதுடெல்லி: கங்கை நதியை தூய்மைப்படுத்ததும் திட்டத்தை முனைப்புடன் செயல்படுத்த தொடங்கி உள்ள நரேந்திர மோடி தலைமையிலான அரசு, கங்கை ஆற்றில் எச்சில் துப்பினாலோ அல்லது குப்பை உள்ளிட்ட கழிவு பொருட்களை போட்டாலோ 3 நாட்கள் சிறைத்தண்டனை அல்லது 10,000 ரூபாய் அபராதம் விதிப்பதற்கான சட்டம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இத்தகவலை மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி, "கங்கை நதியை தூய்மைப்படுத்துவது எங்கள் அரசின் முன்னுரிமையாகும். அதற்காக மற்ற நதிகளுக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை என்பது அர்த்தமாகாது. முதலில் கங்கை நதியை தூய்மைப்படுத்துவதை நதி தூய்மைக்கான முன்னுதாரணமாக கொண்டு வர உள்ளோம்" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. h…

  18. லண்டன்: புளுஸ்டார் ஆபரேஷனின் 30ம் ஆண்டு நினைவுநாளையொட்டி லண்டனில் சீக்கியர்கள் நடத்திய போராட்டத்தின் போது வன்முறை வெடித்ததில், மகாத்மா காந்தியின் சிலை உடைக்கப் பட்டதால் பதட்டம் உண்டாகியுள்ளது. கடந்த 1984ம் ஆண்டு சீக்கியர்களின் புனித தலமான அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை அப்புறப்படுத்த இந்திய ராணுவம் நடத்திய ‘ஆபரேஷன் புளூஸ்டாரில் சீக்கியர்கள் பலர் பலியானார்கள். இதனை நினைவு கூறும்வகையில் ஆண்டுதோறும் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த சில நாட்களுக்கு அமிர்தசரஸ் பொற்கோவிலில் ‘ஆபரேஷன் புளூஸ்டாரின் 30-ம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. அப்போது பொற்கோவில் வளாகத்தில் இரு பிரிவினருக்கு இடையே திடீர் மோதல்…

  19. விடுதலைக்காக போராடிய வீரர்களின் புகைப்படங்களுடன் இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் கேரள கல்லூரியின் ஆண்டு மலரில் வெளியானதையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரள அரசு பாலிடெக்னிக் கல்லூரியின் ஆண்டு விழா சிறப்பு மலரில் இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடி உட்பட 7 பேரின் படம் வெளியானது. இச்சம்பவம் தொடர்பில் கல்லூரி முதல்வர் உட்பட 7 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குன்னம் குளத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியின் 2012–2013–ம் ஆண்டு விழாவுக்கான சிறப்பு மலர் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் வெளியான அக்கல்லூரி விழா சிறப்பு மலரின் ஒரு பக்கத்தில் நல்ல முகங்கள் என்ற தலைப்பில் மகாத்மா காந்தி அன்னை தெரசா …

  20. கைதான நிலையில் கியென் (கோப்புப் படம்) கோடிக்கணக்கான டாலர்கள் மோசடியில் ஈடுபட்ட குற்றத்துக்காக, வியட்நாமின் மிகப் பெரிய செல்வந்தர்களில் ஒருவரும், ஆடம்பரம் மிக்க தொழிலதிபர்களில் ஒருவருமான ங்யுயென் டுக் கியெனுக்கு (Nguyen Duc Kien) முப்பது ஆண்டுகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஹனோய் நகரின் தலைசிறந்த கால்பந்தாட்ட அணியின் உரிமையாளராக இருக்கின்ற கியென் வரி ஏய்ப்பு செய்ததாகவும் சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபட்டதாகவும் குற்றங்காணப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு கியென் கைதுசெய்யப்பட்டபோது அவர் ஆரம்பித்திருந்த ஏசியா கமர்ஷியல் பேங்க் என்ற பெரிய வங்கியின் பங்கு விலைகள் சரிவைக் கண்டிருந்தன. முன்பு இவர் வியட்நாம் பிரதமர் ங்யுயென் டன் ஸுங்க்கு (Nguyen Tan Dung) நெருக்கமாக இருந்தவர்…

    • 0 replies
    • 406 views
  21. மோடி பிரதமராக பதவியேற்றதை தொடர்ந்து இந்திய நாடாளுமன்றத்தில் முதலாவது ஒன்றிணைந்த அமர்வு நேற்று ஆரம்பமாகியது. இந்த அமர்வு எதிர்கட்சித் தலைவர் ஒருவர் இல்லாத நிலையில் இடம்பெற்றமை விசேட அம்சமாகும். இந்தியாவின் அரசியலமைப்பின் படி நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியாக இருப்பதற்கு கட்சியொன்று 10 சதவீத ஆசனங்களை பெற்றிருக்க வேண்டும். அதாவது குறைந்த 55 ஆசனங்களை கொண்டிருக்க வேண்டும். எனினும், பிரதான கட்சியாக இந்திய காங்கிரஸ் கட்சி நடந்து முடிந்த தேர்தலில் 44 ஆசனங்களையே பெற்றுள்ளதாள் நேற்று இடம்பெற்ற முதலாவது ஒன்றிணைந்த நாடாளுமன்ற அமர்வு எதிர்கட்சித் தலைவர் ஒருவர் இன்றி இடம் பெற்றிருந்தது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்கட்சி அந்தஸ்து வழங்க முடியாது என, லோக்சபா சபாநாயகர் ச…

  22. தாஜ்மஹால் இந்தியாவின் மிகப் பிரபலமான சின்னங்களில் ஒன்றான தாஜ்மஹாலின் வெண் பளிங்கு கற்கள் சுற்றுச்சூழல் மாசின் காரணமாக மஞ்சள் பூத்திருப்பதால், அதன் சுவர்கள் சேறு பூசி சுத்தம் செய்யப்படவுள்ளன. சுண்ணாம்புச் சத்து நிறைந்த சேற்றை சுவர்களில் மெழுகினால் பளிங்கு கற்கள் அதன் இயற்கையான பொலிவை மீண்டும் பெரும் என்று இந்திய தொல்லியல் துறையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 17ஆம் நூற்றாண்டில் முகலாயப் பேரரசர் ஷாஜஹானால் தனது மனைவி மும்தாஜ்ஜுக்காக கட்டப்பட்ட காதல் சின்னம் தாஜ்மஹால். சேறு மெழுகும் முறையைப் பயன்படுத்தி தாஜ்மஹால் சுத்தம் செய்யப்படுவது இது நான்காவது முறை. தாஜ்மஹால் அமைந்துள்ள ஆக்ரா நகரம், அதிகமான மாசை வெளியேற்றும் பல தொழிற்சாலைகளைக் கொண்டுள்ள ஊராகும். bbc tamil

  23. பிரதமர் மோடி தலைமையில் இந்தியா சிறப்பான வளர்ச்சி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வோங்-ஜீ இந்தியாவுடனான எல்லைப் பிரச்னையை தீர்க்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி மத்தியில் அமைந்தவுடன் சீனாவுடன் பேச்சு வார்த்தையை ஆரம்பிக்க இந்தியாவின் மத்திய அரசு முடிவு செய்த நிலையில் நேற்றைய தினம் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் வோங்-ஜீ டில்லி சென்றிருந்தார். இந்நிலையில் டில்லியில் பிரதமர் மோடி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இச்சந்திப்பில் சீனா தனது வெளியுறவுக்கொள்கையில் இந்தியாவுக்கும் இந்தியா தனது வெளியுறவுக்கொள்கையில் சீனாவுக்கும் முன்னுரிமை கொடுக்கு…

  24. அண்டார்டிக் சமுத்திரத்தில் ஜப்பானின் திமிங்கில வேட்டை விஞ்ஞான நோக்கம் கொண்டது அல்ல: சர்வதேச நீதிமன்றம் அண்டார்டிக் கடலில் தமது வருடாந்த திமிங்கில வேட்டையை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே கூறியுள்ளார். 1986-ம் ஆண்டில் திமிங்கில வேட்டைக்கு உலக அளவில் கொண்டுவரப்பட்ட தடையையும் தாண்டி ஜப்பான் அதன் நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுத்துவந்தது. ஆனால், ஜப்பானின் நடவடிக்கை உண்மையில் விஞ்ஞான ஆய்வுகளுக்கானது அல்லவென்று கூறிய சர்வதேச நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்திருந்த நிலையில், திமிங்கில வேட்டை இந்த ஆண்டில் கைவிடப்பட்டது.விஞ்ஞான ஆய்வுகளுக்காக மட்டும் திமிங்கில வேட்டையை அனுமதிக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியே ஜப்பான் அதனை முன்…

  25. ஹிமாச்சலப்பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற ஹைதராபாத்தைச் சேர்ந்த 24 மாணவர்கள் திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் பொறியியல் கல்லூரி மாணவர்கள் என தெரியவந்துள்ளது. ஆந்திர மாநிலம் வி.என்.ஆர். பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் குலுமனாலிக்குச் சுற்றுலா சென்றிருந்தனர். பீஸ் நதிக்கரையில் மாணவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். அபோது லார்ஜி நீர்மின்நிலையத்திட்டம் செயல்படும் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கிய 6 மாணவிகள், 18 மாணவர்கள் உள்பட மொத்தம் 24 பேரும் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில்: "…

    • 0 replies
    • 490 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.