உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26687 topics in this forum
-
உக்ரைனுக்கு ராணுவத்தை அனுப்புவது குறித்து ஒபாமா அவசர ஆலோசனை! [Monday, 2014-03-03 20:25:17] ரஷியாவுக்கு பதிலடி கொடுக்க உக்ரைனுக்கு அமெரிக்க ராணுவம் அனுப்புவது குறித்து ஓபாமா அவசர ஆலோசனை நடத்தினார்.ரஷியா அருகேயுள்ள உக்ரைனில் அதிபர் விக்டர் யனுகோவிச்சுக்கு எதிராக 3 மாதமாக கடும் போராட்டம் நடந்தது. அதன் பின்னர் அவர் பதவி விலகி ரஷியாவுக்கு தப்பி ஓடிவிட்டார்.தற்போது அங்கு இடைக்கால அரசு பதவி வகிக்கிறது. இந்த நிலையில் முன்னாள் அதிபர் யனுகோவிச்சுக்கு ஆதரவாக ரஷியா களம் இறங்கியுள்ளது.உக்ரைனின் கிரீமியா சுயாட்சி பிரதேசத்தில் 2 விமான நிலையங்கள் மற்றும் அரசு கட்டிடங்களை ரஷியா ராணுவம் முற்றுகையிட்டுள்ளது. அங்கு ரஷிய கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. மேலும், உக்ரை…
-
- 0 replies
- 540 views
-
-
இலங்கைத் தமிழர் பிரச்சினை, மீனவர் பிரச்சினை, நதிநீர்ப் பங்கீடு என காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசால் தமிழர்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டதாக தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா பட்டியலிட்டார். காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து, தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் ஜெயலலிதா பேசியது: "2011-ஆம் ஆண்டு நடந்து முடிந்த தேர்தலில், தமிழகத்தில் குடும்ப ஆட்சியை அகற்றி மக்களாட்சியை மலர வைக்க வேண்டும் என்று நான் உங்களிடம் கோரிக்கை விடுத்தேன். அதனை நீங்கள் நிறைவேற்றினீர்கள். என்னை தமிழ் நாட்டின் முதலமைச்சர் ஆக்கினீர்கள். அதே போல், தற்போது மத்தியில் உள்ள காங்கிரஸ் மக்கள் விரோத ஆட்சியை அகற்றி மக்களாட்சியை மலர…
-
- 0 replies
- 454 views
-
-
ஏ.கே.கான் கிழக்கு ஐரோப்பாவில் ரஷ்யாவை ஒட்டிய மிக முக்கிய தேசம் உக்ரைன். அங்கே ஒரு உக்கிரமான மோதலுக்கு ரஷ்யாவும், அமெரிக்காவும் தயாராகி வருவது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 603,628 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட இந்த தேசம் ஐரோப்பிய யூனியனில் இணைந்தால் ஐரோப்பாவிலேயே மிகப் பெரிய தேசமாக இருக்கும். 15ம் நூற்றாண்டு முதலே இந்த நாட்டின் பல்வேறு பகுதிகள் பல்வேறு குழுவினரால், நிர்வாகங்களால் ஆளப்பட்டு வந்தன. இந்த நாட்டின் முக்கிய அம்சமே அதன் மண் வளம் தான். இந்த நாட்டின் பெரும்பாலான பகுதி விளை நிலமாக உள்ளதால் உலகிலேயே விவசாயப் பொருட்கள் ஏற்றுமதியில் 3வது இடத்தில் உள்ளது இந்த நாடு. மேலும் சோவியத் யூனியனின் கட்டுப்பாட்டில் இருந்தபோது தொழில்துறையிலும் பெரும் வளர்ச்சி …
-
- 0 replies
- 4.5k views
-
-
மனைவி, இரு குழந்தைகளுடன் இறந்து கிடந்த றோ அதிகாரி! – டெல்லியில் பெரும் பரபரப்பு. [sunday, 2014-03-02 17:45:12] டெல்லியில் றோ உளவுத்துறை அதிகாரி மற்றும் அவரது குடும்பத்தினர் மர்மமாக இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. றோ உளவுத்துறை அதிகாரியான அனன்யா சக்ரவர்த்தி, அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் வீட்டில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். அனன்யா சக்ரவர்த்தி என்ற அந்த அதிகாரி, றோ அமைப்பில் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வந்தார். டெல்லி சதீக் நகரில் உள்ள அவரது வீட்டில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் உடல் மீட்கப்பட்டது. அதேபோல் அவரது குடும்பத்தினரும் மர்மமாக இறந்து கிடந்தனர். அவரது மனைவி மற்றும் குழந்தைகளின் உடலில் காயங்கள் இருப்…
-
- 7 replies
- 690 views
-
-
யுக்ரெய்னில் ரஷ்யா மேற்கொண்டுள்ள இராணுவ நடவடிக்கையை "நம்பமுடியாத ஒரு ஆக்கிரமிப்பு" என்று கூறி அமெரிக்க ராஜாங்க அமைச்சர் ஜான் கெர்ரி கண்டித்துள்ளார். "ஒரு நாட்டின் மீது படையெடுப்பது என்பது 19ஆம் நூற்றாண்டில் வேண்டுமானால் சாதாரண விஷயமாக இருந்திருக்கலாம், ஆனால் 21 நூற்றாண்டில் அப்படியொன்றை ஏற்றுக்கொள்ளவே முடியாது" என்று அவர் கூறினார். அமெரிக்க ராஜாங்க அமைச்சர் ஜான் கெர்ரி சர்வதேச அரங்கில் ரஷ்யாவை ஓரங்கட்ட அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் தயாராகவே இருப்பதாக அவர் குறிபிட்டார். ரஷ்யர்கள் தமது நாடுகளுக்கு வர தடை விதிப்பது, ரஷ்யர்களது சொத்துக்களை முடக்குவது, வர்த்தக உறவுகளை துண்டித்துக்கொள்வது போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம் என்று அவர் தெரிவித்தார். உ…
-
- 5 replies
- 865 views
-
-
முதலில் ஒரு சுவாரஸ்யமான கேள்வி. மழை பெய்திருப்பதை பல முறை பார்த்து ரசித்திருப்பீர்கள். மழைத்துளியின் அளவை உங்களால் சொல்ல முடியுமா? பதில் துல்லியமாக இருக்க வேண்டும் என்றில்லை. சும்மா முயன்று பாருங்கள். சரி இப்போது உங்கள் பதிலை சரியான இந்த பதிலோடு பொருத்துப்பார்த்துக்கொள்ளுங்கள்; ஒரு மழைத்துளியின் அளவு உண்மையில் ஒரு செண்டிமீட்டருக்கும் குறைவானது. மழைத்துளியின் சுற்றளவு ஒரு இன்ச்சில் நூறில் ஒரு பங்கில் இருந்து அதாவது .0254 செண்டி மீட்டரில் இருந்து ஒரு இன்ச்சில் நான்கில் ஒரு பகுதியாக ( .635 செண்டி மீட்டர்) இருக்கலாம். சரி இன்னொரு கேள்வி , மழைத்துளி எவ்வளவு வேகத்தில் வந்து விழுகிறது தெரியுமா? மணிக்கு 7 முதல் 18 மைல் வேகத்தில் மழைத்துளி பூமிக்கு வந்து சேர்கிறது. அதாவது விநாடிக்…
-
- 0 replies
- 524 views
-
-
குறும்பதிவு சேவையான டிவிட்டரை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. அமெரிக்காவை சேர்ந்த கேத்லீன் கோமியன்ஸ் என்பவர் 34 ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்ட தனது சகோதரரின் மரணத்திற்கு டிவிட்டர் மூலம் நியாயம் கேட்டு வருகிறார். இறந்து போன தம்பி இப்போது டிவிட்டர் செய்வது போலவே அமைதுள்ள அந்த குறும்பதிவுகள் 1980 ல் கொல்லப்பட்ட பில் கோமியன்ஸ் மீது பரிவை உண்டாக்குகிறது. யார் இந்த பில் கோமியன்ஸ்? அமெரிக்காவின் ஓஹியோவை சேர்ந்தவர் பில். அவருக்கு 14 வயது இருந்த போது ஓஹியோவின் மேற்கு கொலம்பஸ் பகுதியில் கொல்லப்பட்டார். பில் அணிந்திருந்த ஸ்கார்ப்பாலேயே அவர் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டார். கொலை செய்தவர்கள் யார் ? என்பதும் தெரியவில்லை. கொலைக்கான காரணமும் தெர…
-
- 0 replies
- 608 views
-
-
உக்ரைனுக்கு ரஷ்யப் படைகளை அனுப்ப அதிபர் புடினுக்கு அனுமதி வழங்கியது நாடாளுமன்றம்! [sunday, 2014-03-02 17:55:59] உக்ரைனுக்கு ரஷ்ய படை களை அனுப்புவதற்கு அதிபர் புடினுக்கு நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சோவியத் யூனியனில் இருந்த பிரிந்து தனி நாடான உக்ரைனில் உள்நாட்டு கலவரம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கு ஆதரவாகவும், ஐரோப்பிய யூனியனுக்கு ஆதரவாகவும் இருதரப்பினர் பயங்கர வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், உக்ரைனில் கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவத்தை அனுப்ப ரஷ்ய அதிபர் புடின் திட்டமிட்டுள்ளார். இதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் உக்ரைனுக்கு ரஷ்ய ராணுவ படைகளை அனுப்புவதற்கு ரஷ்ய நாடாளுமன்ற …
-
- 1 reply
- 282 views
-
-
கனடாவில். போலீஸ் நாயை கொன்றவருக்கு 26 மாத சிறை. டொராண்டோ, மார்ச் 2- கனடா நாட்டின் அல்பெர்டா மாகாணத்தில் உள்ள எட்மொண்டன் பகுதியை சேர்ந்தவர், பால் ஜோசப் உக்மனிச்(27). மிதமிஞ்சிய போதையில் கடந்த அக்டோபர் மாதம் ஒரு திருட்டுக் காரை ஓட்டிச்சென்ற இவரை போலீசார் வழி மறித்து தடுத்து நிறுத்தினர். போலீசாரை கண்டதும் போதையில் இருந்த அவர் காரை நிறுத்திவிட்டு தப்பியோட முயன்றார். அவரை பிடிப்பதற்காக தாங்கள் வைத்திருந்த நாயை போலீசார் ஏவி விட்ட்னர். ஜெர்மென் ஷெப்பர்ட் இனத்தை சேர்ந்த அந்த நாய் ஆக்ரோஷத்துடன் பால் ஜோசப்பை விரட்டியபடி ஓடியது. திடீரென்று தனது பேண்ட் பாக்கெட்டிலிருந்து கத்தியை உருவிய அவர் நாயை வெறித்தனமாக குத்திக் கொன்றார். இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், அளவுக்கு …
-
- 1 reply
- 419 views
-
-
யுக்ரெய்ன் விமான தளத்தை ரஷ்யப் படையினர் கைப்பற்றினர்! [Friday, 2014-02-28 19:35:09] யுக்ரெய்னின் தென்பிராந்தியமான கிரைமீயாவில் செவாஸ்டபோல் என்ற ஊரின் இராணுவ விமான தளத்தை ரஷ்ய கடற்படையினர் சுற்றிவளைத்துள்ளதாக யுக்ரெய்னின் உள்துறை அமைச்சர் கூறுகிறார். இது ஒரு ஆயுதப் படையெடுப்பு என்றும் ஆக்கிரமிப்பு என்றும் சர்வதேச ஒப்பந்தங்கள் அனைத்தையும் மீறும் செயல் என்றும் கூறி உள்துறை அமைச்சர் ஆர்சென் அவகொவ் கண்டித்துள்ளார். கிரைமீயாவில் நடந்துவருபவற்றை ஐநா பாதுகாப்பு சபை கண்காணிக்க வேண்டும் என யுக்ரெய்ன் நாடாளுமன்றம் வலியுறுத்தியுள்ளது. இந்த விமான தளத்துக்குள் யுக்ரெய்னிய படையினரும் எல்லைக் காவல் படையினரும் இருக்கிறார்கள் என்றும், மோதல் எதுவும் நடக்கவில்லை என்றும் அவகொவ் தெரிவித்த…
-
- 17 replies
- 1.5k views
-
-
ராகுல்காந்தியை முத்தமிட்ட பெண்ணை எரித்துக் கொன்றார் கணவன்! – அசாமில் பரபரப்பு சம்பவம். [saturday, 2014-03-01 20:03:17] காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். கடந்த 26–ந்தேதி ராகுல் காந்தி அசாம் மாநிலம் சென்றார். ஜோர்கட் என்ற இடத்தில் அவர் மகளிர் அமைப்பைச் சேர்ந்தவர்களிடம் ஆலோசனை செய்தார். இதில் 600 பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களிடம் ராகுல்காந்தி கருத்துக்களை கேட்டார். அப்போது காங்கிரஸ் பெண் கவுன்சிலர் போன்டி ராகுல்காந்தியை அனைவரது முன்னிலையிலும் கன்னத்தில் முத்தமிட்டார். முத்த மிட்ட இந்த படம் மறுநாள் அனைத்து பத்திரிகையிலும் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் ராகுல் காந்தியை முத்தமிட்ட பெண் கவுன்சிலர் போன்டி தீக…
-
- 8 replies
- 778 views
-
-
புலிகள் ஆதரவு இயக்கங்களை தடை செய்ய வேண்டும்! - ஞானதேசிகன் கோரிக்கை. [Thursday, 2014-02-27 19:40:52] தமிழகத்தில் விடுதலை புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு கரம் நீட்டும் இயக்கங்களை தடை செய்ய வேண்டும் என, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராஜீவ்காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இது குறித்து தமிழக கவர்னரை நாளை நேரில் சந்தித்து மனு கொடுக்க இருக்கிறோம்.ராஜீவ் கொலையாளிகள் 4 பேர் விடுதலை புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள். அவர்களை விடுவிக்க சொல்வது எந்த விதத்தில் நியாயம்? ஒரு தடைப்பட்ட இயக்கத்திற்கு ஏன் இங்குள்ளவர்கள் வக்காலத்து வாங்குகிறார்கள் என்று தெரியவில்லை. தமிழகத்தில் விடு…
-
- 4 replies
- 589 views
-
-
அவுஸ்ரேலியாவில் பற்றியெரியும் நிலக்கரிச் சுரங்கம்! – நகர மக்களை வெளியேற உத்தரவு. [saturday, 2014-03-01 20:45:59] அவுஸ்ரேலியாவின் மோர்வெல் நகர மக்களை ஊரை விட்டு வெளியேறி விடுமாறு அந்நாட்டு அரசு ஆலோசனை வழங்கியுள்ளது. அந்நகரம் அருகே உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்டுள்ள தீயால், அப்பகுதி முழுவதுமே புகை சூழ்ந்துள்ளது. இதனால் பெரும்பாலான மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நகரில் உள்ள சுமார் 14 ஆயிரம் பேரும் அங்கிருந்து வெளியேற அரசு ஆலோசனை வழங்கியுள்ளது. மெல்போர்ன் நகரின் கிழக்கே லாட்ரோபி வேலி பகுதியில் இந்த இடம் அமைந்துள்ளது. இது தொடர்பாக அவுஸ்ரேலிய அரசு மேலும் கூறியிருப்பதாவது: சுரங்கத்தில் பற்றியுள்ள தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடு…
-
- 0 replies
- 345 views
-
-
உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா தலையிட்டால் தேவையற்ற விபரீதங்கள் ஏற்படும்: ஒபாமா எச்சரிக்கை [saturday, 2014-03-01 14:21:01] உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா தலையிட்டால் தேவையற்ற விபரீதங்கள் ஏறபடும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் நாட்டின் அதிபராக இருந்த விக்டர் யானுகோவிச் ரஷியாவிற்கு ஆதரவாக செயல்பட்டதால் தலைநகர் கீவ்வில் பல மாதங்களாக போராட்டம் நடந்து இறுதியில் கடந்த சனிக்கிழமை புரட்சி வெடித்தது. அதிபர் விக்டரின் பதவி பறிக்கப்பட்டது. அதேநேரத்தில் பதவி இழந்த விக்டர் தப்பி தலைமறைவாகி விட்டார். இவர் ரஷியாவின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டார். ஆகவே ரஷியா ராணுவ நடவடிக்கை எடுக்கலாம் என கூறப்பட்டது. இதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து நாடுக…
-
- 0 replies
- 558 views
-
-
சென்னையில் 3 இடங்களில் ராஜீவ்காந்தி சிலைகள் உடைப்பு! – காங்கிரஸ் கட்சியினர் போராட்டம். [Thursday, 2014-02-27 18:40:45] சென்னையில் இன்று காலை 3 இடங்களில் ராஜீவ் காந்தி சிலைகள் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த காங்கிரசார் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவிக்கும் மத்திய அரசை கண்டித்து பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. அதேபோல், அவர்களை விடுதலை செய்வதாக அறிவித்த தமிழக அரசை கண்டித்து காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அறிவுசெல்வன் தலைமையில் நேற்று காலை சத்தியமூர்த்தி பவ…
-
- 2 replies
- 548 views
-
-
FILE ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முக்கியமாக விசாரிக்கப்பட வேண்டியவராக ஜெயின் கமிஷனால் அடையாளம் காட்டப்பட்டவரான சுப்பிரமணியன் சுவாமி நீதிபதி ஜெயின் முன்பு பிதற்றியவைகளை தற்போது உள்ள சூழலில் மக்கள் முன் கொண்டுவருவது காலத்தின் கட்டாயமாகிறது. நீதிபதி கேள்விகளை கேட்கக் கேட்க சுப்ரமணிசாமியின் பதில்கள் இப்படி வருகிறது. “எதிரே இருக்ககூடிய நபர் வேலுசாமியை (திருச்சி வேலுச்சாமி) தெரியுமா?” [ஏளனமாக] “இவரை யார் என்றே எனக்குத் தெரியாது.” “தெரியாதா? உங்கள் கட்சியில்தானே அகில இந்திய செயலராக இருந்தார்?” என்கட்சியில் லட்சக்கணக்கான நபர்கள் இருக்கிறார்கள். நிறைய பேருக்கு பொறுப்பு கொடுத்திருந்தேன். அதில் இவர் யார் என்று எப்படி அடையாளம் வைத்துக்கொள்ள முடியும் தெரியலையே.” ச…
-
- 1 reply
- 730 views
-
-
ராஜீவ் கொலையில் சதி செய்த குற்றத்தின் கீழ் தண்டிக்கப்பட்டு, 23 ஆண்டுகளாக சிறையில் அடைபட்டுக் கிடந்த 7 பேரை உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து தமிழக அரசு விடுதலை செய்ய முன் வந்ததும் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பது நியாயம்தானா? FILE நாட்டின் பிரதமரைக் கொன்றவர்களையே விடுதலை செய்தால், சாதாரண மக்களுக்கு எப்படி பாதுகாப்புக் கிடைக்கும் என்கிறார், ராகுல் காந்தி. தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்கிறார் சுப்ரமணியசாமி. மக்களின் சிந்தனைக்கு சில கேள்விகளை முன் வைக்க வேண்டியது நியாயத்தின் பக்கம் நிற்பவர்களின் கடமையாகிறது. - ராஜீவ் காந்தி கொலையில் சி.பி.ஐ. 41 பேரை குற்றவாளிகள் என்று அடையாளம் கண்டது. இதில் நேரடி தொடர்புடையவர்களான தணு, சிவராசன், சுபா உள்ளிட்…
-
- 0 replies
- 440 views
-
-
நரேந்திர மோடிக்கு 78 வீதமானோர் ஆதரவு! – அமெரிக்க நிறுவன கருத்துக்கணிப்பில் தகவல். [Thursday, 2014-02-27 19:36:08] காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியைவிட பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கே வாக்காளர்கள் அதிக ஆதரவு அளிக்கின்றனர் என்று அமெரிக்காவை மையமாக கொண்ட பியூ ரிசர்ச் சென்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் தவிர நாடு முழுவதும் 2,464 பேரிடம் கடந்த டிசம்பர் 7-ந் தேதி முதல் ஜனவரி 12-ந் தேதி வரை கருத்து கணிப்பு நடத்தியது .இதில் நரேந்திர மோடிக்குத் ஆதரவு பெருகி உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த தேர்தலில் பிரபலமானவர்கள் யார்? உங்கள் ஆதரவு யாருக்கு என்ற கேள்விக்கு 78 சதவீதம் பேர் நரேந்திரம…
-
- 1 reply
- 253 views
-
-
சக படையினர் ஐவரைச் சுட்டுக்கொன்ற இந்தியச் சிப்பாய் தானும் தற்கொலை! – காஷ்மீரில் பரபரப்பு! [Thursday, 2014-02-27 18:49:23] இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீர் மாநிலத்தில், இந்திய சிப்பாய் ஒருவர் சக வீரர்கள் மீது துப்பாக்கியால் சுட்டதில் ஐந்து படையினர் பலியானார்கள். தலைநகர் ஸ்ரீநகருக்கு சுமார் 20 கிமீ தொலைவில் உள்ள ஒரு ராணுவ முகாமில் நேற்றிரவு இந்த சம்பவம் நடந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கியால் சுட்ட சிப்பாயும் பின்னர் தற்கொலை செய்து கொண்டதாக ராணுவம் தெரிவிக்கிறது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை ஒன்றுக்கு ராணுவம் உத்தரவிட்டிருக்கிறது. இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுமே சொந்தம் கொண்டாடும் காஷ்மீர் பகுதி, இந்திய மற்றும் பாகிஸ்தான் பகுதிகளாகப் பிளவுண…
-
- 5 replies
- 512 views
-
-
செங்கன் விசாவை மேலும் 16 தீவுக்கு விஸ்தரிக்கிறது ஐரோப்பிய யூனியன்! [Friday, 2014-02-28 14:09:32] ஐரோப்பிய யூனியனின் உறுப்பினர்களான 28 நாடுகளும் செங்கன் விசா திட்டத்தின்கீழ் பிற உறுப்பினர் நாடுகளுக்கு எந்த தனி விசா விதிமுறைகளும் இல்லாமல் சென்றுவர இயலும். கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த இலவச விசா வருகையை 5 கரிபியன் தீவு நாடுகளுக்கும், 10 பசிபிக் தீவு நாடுகளுக்கும் ஐரோப்பிய ஒன்றியம் விஸ்தரித்தது. தற்போது மேலும் கரிபியன் மற்றும் பசிபிக் தீவுகளின் 16 சிறிய நாடுகள் உட்பட ஐக்கிய அரபுக் குடியரசு, பெரு, கொலம்பியா போன்ற நாடுகளும் இந்தத் திட்டத்தின் கீழ் வரக்கூடும் என்று ஐரோப்பியப் பாராளுமன்றத்தின் உள்நாட்டு அலுவல்கள் ஆணையாளர் சிசிலியா மால்ஸ்ட்ரோம் தெரிவித்தார். …
-
- 0 replies
- 587 views
-
-
சீமான் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு! – கண்டித்து சிவகங்கையில் முற்றுகைப் போராட்டம். [Thursday, 2014-02-27 18:59:39] தபால் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 29 பேரை போலீஸார்ர் கைது செய்தனர். நாம் தமிழர் கட்சியின் நிறுவனர் சீமான் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசியவர்களைக் கைது செய்யக் கோரியும், ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களை விடுதலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ் கட்சியைக் கண்டித்து இன்று நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 29 பேர் சிவகங்கை தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி செய்தனர். இது தொடர்பாக கட்சியின் நிர்வாகிகள் மாறன், வேங்கை உள்பட 29 பேரை போலீஸார் கைது செய்தனர். அதேவேளை, …
-
- 3 replies
- 718 views
-
-
மெக்ஸிகோ நாட்டின் மசாட்லான் ஒரு கடலோரச் சிற்றூர். சுகவாசஸ்தலம். கடல் உணவுகளுக்கும் அலைச்சறுக்கு விளையாட்டுக்கும் பேர் போன ஊர். சுற்றுலாப் பயணிகள் தேடி வரும் மசாட்லானில் சில நாட்களுக்கு முன் திடீரென நூற்றுக் கணக்கில் ஆயுதப் படைகள் குவிகின்றன. கண்டோமினம் கோபுரம் அவர்கள் கட்டுப்பாட்டில் வருகிறது. உள்ளூர்க்காரர்களும் சுற்றுலாப் பயணிகளும்கூட இப்படித்தான், நம்மைப் போலவே விழிக்கின்றனர், ‘இங்கே என்னப்பா இவர்களுக்கு வேலை’ என்று. ஆயுதப் படைகளோ அல்வா சாப்பிடப்போகும் உற்சாகத்தில் இருக்கின்றனர். சும்மாவா, ஜோகின் குஸ்மான் லோராவுக்கு வலை விரிப்பது என்பது எவ்வளவு பெரிய வேட்டை? யார் இந்த ஜோகின் குஸ்மான் லோரா? உலகத்துக்கு ஜோகின் குஸ்மான் லோரா என்று சொல்வதை விடவும் இன்னொரு பெயர் சொன்னா…
-
- 0 replies
- 656 views
-
-
புதுடெல்லி: நடிகையும், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எம்.பி. விஜயசாந்தி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பிரபல நடிகையும், தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் நிர்வாகியுமான விஜயகாந்தி, ஆந்திராவின் மெதக் தொகுதி எம்.பி.யாகவும் உள்ளார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலங்கான ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகரராவுடன், விஜயசாந்திக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்நிலையில், டெல்லியில் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியை சந்தித்து, காங்கிரஸ் கட்சியில் விஜயசாந்தி இணைந்தார். http://news.vikatan.com/article.php?module=news&aid=25119
-
- 0 replies
- 351 views
-
-
மும்பை: மும்பையில் மீண்டும் நீர்மூழ்கி கப்பல் விபத்தில் சிக்கிக் கொண்டது. இரண்டு கடற்படை அதிகாரிகளை காணவில்லை என்றும், 5 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ் சிந்துரத்னா என்ற நீர்மூழ்கி கப்பல், கடற்கரையிலிருந்து 40 முதல் 50 கி.மீ. தொலைவில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த நீர்மூழ்கி கப்பல் மும்பை கடற்கரை நோக்கி இன்று வந்துகொண்டிருந்தபோது, அதிலிருந்து திடீரென புகை வெளியானது. இதனையடுத்து அந்த கப்பல் உடனடியாக மேலே கொண்டு வரப்பட்டு, அதிலிருந்த வீரர்களை மீட்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போதுதான் அதில் இருந்த இரண்டு கடற்படை அதிகாரிகளை காணவில்லை என்பதும், 5 பேர் காயமடைந்தனர் என்பதும் தெரியவந்தது. காயம் அடைந்தவர்கள்…
-
- 4 replies
- 613 views
-
-
காங்கிரஸ்சாரின் தாக்குதலில் காயமடைந்த தமிழர் முன்னேற்றப் படை தலைவி கி.வீரலட்சுமி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று நடைபெற்ற சத்தியமூர்த்திபவன் முற்றுகைப்பொரட்டத்தின போது காங்கிரசாரின் தாக்குதலில் காயமடைந்த தமிழர் முன்னேற்ற படை தலைவி கி.வீரலட்சுமி மற்றும் தொண்டர்கள் 7 பேர் பலத்த காயங்கள் அடைந்த நிலையில் தற்போது சென்னை அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். http://www.sankathi24.com/news/38898/64//d,fullart.aspx
-
- 1 reply
- 517 views
-