Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பெண்களின், முத்த மழையில் நனைந்த.... ராகுல் காந்தி. அஸ்ஸாம் மாநிலத்துக்குப் போயிருந்த ராகுல் காந்திக்கு, பெண்கள் திடீரென முத்தமிட்டதால்... அவர் நெளிந்து விட்டார். இதனை அவர் எதிர்பார்க்காததால்... அவரால் தடுக்க முடியவில்லை. ஒரு பெண் கன்னத்தில் கொடுக்க, இன்னொருவர் தலையில் முத்தமிட்டார். எல்லாம் சில நிமிடங்களில் திடீரென நடந்து விட்டது. ஜோர்ஹாட் நகருக்கு வந்திருந்த ராகுல் காந்தி அங்கு கிட்டத்தட்ட 600 பெண்கள் அடங்கிய சுய உதவிக் குழுவினரிடையே உரையாற்றினார். அப்போது பெண்கள் பலர் ராகுலுக்கு கை கொடுத்தனர். வணக்கம் வைத்தனர். சிலர் உற்சாகம் மேலிட முத்தத்திற்குள் புகுந்து விட்டனர். முன்னதாக அவர்களிடையே ராகுல் பேசுகையில், பெண்களால் இந்த நாட்டின் பிரமதராக முடியும், …

  2. பதவி விலகியிருக்கும் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜோஷி இந்தியக் கடற்படை சமீப காலத்தில் சந்தித்த விபத்துக்களுக்கு தார்மீகப் பொறுப்பேற்று இந்தியக் கடற்படைத் தளபதி டி.கே.ஜோஷி பதவி விலகியிருக்கிறார். இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலில் இன்று ஏற்பட்ட விபத்தை அடுத்து இந்த பதவி விலகல் வருகிறது. அவரது இந்த ராஜிநாமாவை இந்திய அரசு ஏற்றுக்கொண்டுவிட்டதாக, கடற்படையின் பத்திரிக்கைக் குறிப்பொன்று தெரிவிக்கிறது. கடற்படையின் துணைத் தளபதி ஆர்.கே.தோவான் தற்காலிகமாக கடற்படைத் தளபதியின் பொறுப்புக்களை கவனிப்பார் என்று அந்த செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. http://www.bbc.co.uk/tamil/india/2014/02/140226_indianavychief.shtml

  3. நளினி உட்பட 4 பேரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!! 27 பெப்ரவரி 2014 நளினி உட்பட 4 பேரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!! ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி உட்பட 4 பேரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் இன்று இடைக்கால தடை விதித்தது. ராஜிவ் வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகனின் தூக்கை ரத்துச்செய்து ஆயுள் தண்டனையாக்கியது உச்சநீதிமன்றம். இதனைத் தொடர்ந்து இந்த மூவர் உட்பட ராஜிவ் வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இந்த முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத்தாக்கல் செய்தது. பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரது விடுதலைக்கு எதிராகவே அம்மனுத்தாக்கல் செய்யப்பட்டது…

  4. புதுடெல்லி: முஸ்லீம்களிடம் மன்னிப்பு கேட்போம் என்ற ராஜ்நாத் சிங்கின் பேச்சுக்கு விளக்கம் அளிக்குமாறு சிவசேனா வலியுறுத்தி உள்ளது. டெல்லியில் பா.ஜ.க. சார்பில் முஸ்லீம் மக்களின் பங்கு தொடர்பான ஒரு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத்சிங் அவர் கூறும்போது, ''பா.ஜ.க., முஸ்லீம்களுக்கு விரோதமான கட்சி அல்ல. நரேந்திர மோடியின் நற்பெயரையும், பா.ஜ.க.வின் நற்பெயரையும் கெடுப்பதற்காக காங்கிரஸ் ஓட்டு வங்கி அரசியல் நடத்துகிறது. முஸ்லீம்கள், பா.ஜ.க.வை விட்டு சென்று விட வேண்டும் என்பதுதான் அவர்களின் விருப்பம். எப்போதாவது, எங்காவது, தவறு நடந்திருந்தால், அதில் எங்கள் தரப்பில் குறை இருந்தால் சொல்லுங்கள். நாங்கள் அதற்காகக் கைகளைக் கட்டி கொண்டு மன…

  5. அதிமுக பிரசாரகராக மாறிய அற்புதம் அம்மாள்! – வைகோ, நெடுமாறனுக்கு நன்றி தெரிவிக்காததால், மதிமுகவினர் அதிர்ச்சி. [Tuesday, 2014-02-25 18:37:09] மரண தண்டனை ஒழிப்பு கருத்தரங்கில் பங்கேற்க வந்த பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள், வைகோ, நெடுமாறன் உள்ளிட்டவர்களுக்கு தனது பேச்சில் நன்றி கூட தெரிவிக்காமல், ஆளுங்கட்சியின் பிரச்சாரகர் போல் பேசியதால் கூட்டத்தில் பங்கேற்ற ம.தி.மு.க.வினர் அதிர்ச்சியடைந்தனர். ஈரோட்டில் மரண தண்டனை ஒழிப்புக் கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாள் பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் நிரபராதிகள் என்று ஆரம்பம் மு…

    • 2 replies
    • 1.1k views
  6. புதுடெல்லி: டெல்லியில் 1993 ஆம் ஆண்டு நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு வழக்கு குற்றவாளியான தேவிந்தர் பால் சிங் புல்லரை தூக்கிலிட மாட்டோம் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதியளித்துள்ளது. காலிஸ்தான் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த புல்லரின் தூக்குத்தண்டனையை எதிர்த்து அவரது மனைவி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரியும், அவரது மருத்துவ அறிக்கையை வழங்கக் கோரியும் கேட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், புல்லருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்ற தடைவிதித்து கடந்த ஜனவரி 31 ஆம் தேதியன்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இம்மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, புல்லரின் மனைவி அளித்துள்ள கருணை மனு பரிசீலனையில் உள்ளதாகவும், டெ…

  7. கலவரத்தை தடுக்காத மோடி ஆண்மையற்றவர் - போட்டுத்தாக்கினார் சல்மான் குர்ஷித் ! [Wednesday, 2014-02-26 13:23:54] உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரு பேரணியில் பேசிய காங்கிரஸ் அமைச்சர் சல்மான் குர்ஷித் குஜராத் கலவரத்தின்போது மக்களை பாதுகாக்க முடியாத மோடி ஆண்மையற்றவர் எனக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். நிகழ்ச்சியில் பேசிய சல்மான் குர்ஷித், நீங்கள் உங்களை ஒரு சக்தி மிகுந்த நபராக காண்பித்து கொள்கிறீர்கள், உங்களுக்கு நாட்டின் பிரதமராக வேண்டுமெனவும் விருப்பம் உள்ளது. ஆனால், உங்களால் கோத்ராவில் மக்களை பாதுகாக்க முடியவில்லை. சிலர் வந்தார்கள், மக்களை தாக்கிவிட்டு சென்றார்கள். ஆனால், உங்களால் மக்களின் பாதுகாபிற்காக ஏதும் செய்யமுடியவில்லை, நீங்கள் வலிமையான மன…

  8. தலிபான்களின் மூத்த கமாண்டர் சுட்டுக் கொலை [Tuesday, 2014-02-25 23:48:06] பாகிஸ்தானில் தெஹ்ரிக்- இ- தலிபான் இயக்கத்தை சேர்ந்த மூத்த கமாண்டர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதுகுறித்து இராணுவ அதிகாரிகள் கூறுகையில், தெஹ்ரிக்- இ- தலிபான் பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய நிர்வாகியான அஸ்மதுல்லா ஷாஹீன் பிட்டானி மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேர் ஒரு வாகனத்தில் வஜிரிஸ்தானின் தர்கா மாண்டி பகுதியில் திங்கள்கிழமை(நேற்று) சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் மறைந்திருந்த மர்ம நபர்கள் சிலர் அவர்களின் வாகனம் மீது துப்பாக்கியால் சுட்டு விட்டு, தப்பி ஓடி விட்டனர். இந்தத் தாக்குதலில் அஸ்மதுல்லா ஷாஹீன் பிட்டானி உள்பட 4 பேரும் ச…

  9. கல்லம் மக்ரே நேர்காணல் - கேள்வி பதில்கள் 22 பிப்ரவரி அன்று தமிழ் மாணவர்கள், இளைஞர்கள் கூட்டமைப்பும், மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மய்யமும் இணைந்து நடத்திய "சேனல் 4 ஆகச்சமீப காணொளி" திரையிடல் நிகழ்வை தொடர்ந்து அதன் இயக்குனர் கல்லம் மக்ரே உடனான இணையவழி காணொளி கலந்துரையாடலின் கேள்வி பதில்கள் இங்கே: ========================================= கேள்வி: காணொளி ஆதாரங்கள் அனைத்தும் இனப்படுகொலையை நிரூபிக்கின்றன ஆனால் இன்னும் ஏன் நாம் போர் குற்றம் என்றே சொல்ல வேண்டும்? நடந்தது இனப்படுகொலை என்று நீங்கள் ஏற்கிறீர்களா? கல்லம் மக்ரே: இருக்கும் ஆதாரங்களை கொண்டு பார்க்கையில் இவை இனப்படுகொலைக்கான சாத்தியங்களை காட்டுகின்றன. Ethnic Re-engineering நடந்ததை/நடப்பதை நாம் உணர முடிகிறது. எனத…

  10. இந்தியா இரு தேசத்து மக்களையும் ஏமாற்றுகின்றது – கல்லம் மக்ரே XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX callum-macrae 22 பிப்ரவரி அன்று தமிழ் மாணவர்கள், இளைஞர்கள் கூட்டமைப்பும், மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மய்யமும் இணைந்து நடத்திய “சேனல் 4 ஆகச்சமீப காணொளி” திரையிடல் நிகழ்வை தொடர்ந்து அதன் இயக்குனர் கல்லம் மக்ரே உடனான இணையவழி காணொளி கலந்துரையாடலின் கேள்வி பதில்கள் இங்கே: கேள்வி: காணொளி ஆதாரங்கள் அனைத்தும் இனப்படுகொலையை நிரூபிக்கின்றன ஆனால் இன்னும் ஏன் நாம் போர் குற்றம் என்றே சொல்ல வேண்டும்? நடந்தது இனப்படுகொலை என்று நீங்கள் ஏற்கிறீர்களா? கல்லம் மக்ரே: இருக்கும் ஆதாரங்களை கொண்டு பார்க்கையில் இவை இனப்படுகொலைக்கான சாத்தியங்களை காட்டுகின்றன. Ethnic Re-enginee…

  11. மிஸ்டர் ராகுல்காந்தி.. ஆந்திராவுக்கு ஒரு நீதி..? தமிழ்நாட்டுக்கு ஒரு நீதியா..? 23-02-2014 அன்பிற்கும், பண்பிற்கும் உரிய திரு.ராகுல்காந்தி அவர்களுக்கு.. இந்திய துணைக் கண்டத்தில் ஒடுக்கப்பட்ட இனமான தமிழினத்தில் பிறந்திருக்கும் ஒரு சாதாரணமான குடியானவன் எழுதிக் கொள்வது.. முதலில் உங்களது தந்தையின் இறப்புக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.. அவர் மரணமடையும்போது இது போன்ற அரசியல் கட்டுரைகள் எழுதும் வாய்ப்பு எனக்கு இல்லாததால், அப்போது சொல்ல முடியாத இரங்கலை இப்போது உங்களது குடும்பத்தினருக்குச் சமர்ப்பிக்கிறேன்..! உங்களது தந்தை கொல்லப்பட்ட சம்பவத்தில் உடந்தையாக இருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு தூக்குக் கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்த முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கு…

  12. இத்தாலி கடற்படையினர் மீதான வழக்கு: கடற்கொள்ளை பிரிவு வாபஸ்- தூக்கிலிருந்து தப்பினர்! டெல்லி: இந்திய மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இத்தாலி கடற்படை வீரர்கள் மீதான வழக்கில் கடற்கொள்ளை தடுப்பு சட்டப்பிரிவை மத்திய அரசு திரும்ப பெற்றது. இதன் மூலம் கடற்படை வீரர்கள் இருவரும் தூக்கு தண்டனையில் இருந்து தப்பியுள்ளனர். கேரளா அருகே கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் 2 பேரை 2012-ம் ஆண்டு இத்தாலிய கடற்படை வீரர்கள் சுட்டுக்கொன்றனர். இதைத்தொடர்ந்து இத்தாலிய வீரர்கள் இருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இத்தாலி சென்ற அவர்கள், தூக்கு தண்டனை விதிக்கக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பி…

  13. சென்னை: முதல்வர் ஜெயலலிதா, தன் பிறந்த நாளான, நேற்று, அதிரடியாக, 40 லோக்சபா தொகுதிகளுக்கான, அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியல் மற்றும் பிரசாரப் பயணத் திட்டத்தை வெளியிட்டார். இதனால், கம்யூ., கட்சிகளுக்கு, 'சீட்' உண்டா என்ற, 'சஸ்பென்ஸ்' உருவாகி உள்ளது. முதல்வர் ஜெயலலிதா வின், 66வது பிறந்த நாள் விழா, அ.தி.மு.க., சார்பில், நேற்று, மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டது. பகல், 12:30 மணிக்கு, முதல்வர், கட்சி அலுவலகம் வருவதாகவும், பத்திரிகையாளர்களை சந்திப்பதாகவும், தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுவரை, பிறந்த நாளுக்கு கட்சி அலுவலகம் வராத முதல்வர், திடீரென வருவதாக, தகவல் வந்ததால், முக்கிய அறிவிப்பு இருக்கும் என, பத்திரிகையாளர்கள் எதிர்பார்த்தனர். கட்சி அலுவலகம் வந்த முதல்வருக்கு, வழிநெடுகிலு…

  14. உண்மைக் குற்றவாளியைப் பாதுகாக்கும் காங்கிரசு பாசக அரசுகளும், ஹிந்திய காவிப் பத்திரிக்கைகளும். ராஜீவ் கொலையாளி சு.சாமியிடம் நடந்த ஜெயின் கமிஷன் விசாரணை : நீதிபதி கேள்விகளை கேட்கக் கேட்க சுப்ரமணிசாமியின் பதில்கள் இப்படி வருகிறது. “எதிரே இருக்ககூடிய நபர் வேலுசாமியை தெரியுமா?” [ஏளனமாக] “இவரை யார் என்றே எனக்குத் தெரியாது.” “தெரியாதா? உங்கள் கட்சியில்தானே அகில இந்திய செயலராக இருந்தார்?” என்கட்சியில் லட்சக்கணக்கான நபர்கள் இருக்கிறார்கள். நிறைய பேருக்கு பொறுப்பு கொடுத்திருந்தேன். அதில் இவர் யார் என்று எப்படி அடையாளம் வைத்துக்கொள்ள முடியும் தெரியலையே.” சாமிக்கு ஏதோ ஒரு 200 எம்.பி.க்கள் இருப்பதைப் போலவும் கட்சிக்குப் பல செயலர்களை வைத்திருப்பதை போலவும் ஒரு நினைப்பு. அலட்ச…

    • 5 replies
    • 1.2k views
  15. இவர்கள் குற்றவாளிகள் இல்லையென்றால், கொலையாளிகள் யாரென்று கூறுவாரா வைகோ? – ஞானதேசிகன் கேள்வி. [Monday, 2014-02-24 19:32:40] முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை கைதிகளை விடுதலை செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி வள்ளுவர் கோட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரையும் குற்றவாளிகள் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறவில்லை. இவர்களுக்காக குரல் கொடுக்கும் சில தலைவர்களை கேட்கிறேன், இவர்கள் கொலையாளிகள் இல்லை என்றால் உண்மையான குற்றவாளிகள் உங்களுக்கு தெரிந்து இருக்கும் அல்லவா? அவர்களைப் பற்றி மக்கள் மத்தியில் பகிரங்கமாக சொல்லுங்கள். பா…

  16. கீவ்: உக்ரைன் நாட்டில் ஏற்பட்ட மக்கள் புரட்சியால், அதிபர் யானுகோவிச் தலைமறைவாகி விட்டார். சோவியத் யூனியன் உடைந்த பிறகு, உக்ரைன், தனி நாடானது. பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்த உக்ரைன், ஐரோப்பிய யூனியனுடன் வர்த்தக உடன்பாடுகளை மேற்கொண்டது. இந்த உடன்பாட்டின் மூலம், பொருளாதார சலுகைகள் கிடைக்கும் என, மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், கடைசி நேரத்தில், உக்ரைன் அதிபர், விக்டர் யானுகோவிச், இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தார். ஐரோப்பிய யூனியனுடனான, வர்த்தக உடன்பாட்டை ரத்து செய்த, அதிபருக்கு எதிராக, கடந்த, இரண்டு மாதங்களாக, உக்ரைன் தலைநகரில் தொடர் போராட்டம் நடந்தது. உக்ரைனை, ஐரோப்பிய யூனியனில் இணைக்கும்படி, போராட்டக்காரர்கள் வற்புறுத்தினர். தலைநகர் கீவீல் உள்ள, சுதந்திர சதுக்கத்தை, போராட…

  17. Started by jdlivi,

    The Deadly Duo Crucial evidence linking Chandraswami to the Rajiv case went missing from Rao's PMO. Outlook investigates. • File No. 8-1-WR/JSS/90/Vol.III—containing notings of bureaucrats regarding security arrangements for Rajiv Gandhi from November '89—was lost from the PMO in '91. Later, it was doctored and reconstructed by the Narasimha Rao government before it was submitted to the Jain Commission. • File No. 1/12014/5/91-IAS/DIII reported missing since 1995. It pertained to the terms of reference of the Verma and Jain commissions of inquiry. • File containing intercepted messages from foreign intelligence agencies, said to be addressed to Chandraswami and Janat…

  18. தேர்தலில் தமிழக அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்களாம்! – மத்திய அமைச்சர் வாசன் சொல்கிறார். [sunday, 2014-02-23 20:14:25] காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சரும், தமிழக காங்கிரஸின் முக்கிய தலைவரான ஜி.கே.வாசன் இன்று பத்திரிகையார்கள் சந்திப்பில் பேட்டியளித்தார். அப்போது ராஜீவ் கொலை குற்றவாளிகளை தமிழக அரசு விடுதலை செய்ய முடிவெடுத்தது தேர்தலை முன்னிட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று கூறினார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எவரும் இந்த குற்றவாளிகளின் விடுதலையை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் தமிழக அரசின் இந்த முடிவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என வாசன் தெரிவித்தார். உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தமிழக அரசு தவறாக புரிந்து கொ…

    • 2 replies
    • 585 views
  19. வடக்கத்திய ஊடகமான 'ஹிந்துஸ்டான் டைம்ஸ்'ஸில் தமிழ் நாடு அரசின் 7 தமிழர்களின் விடுதலை ஆணையை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? அல்லது எதிர்க்கிறீர்களா? என பொது கருத்துக்கணிப்பு நடைபெறுகிறது. அனைவரும் தவறாது வாக்களித்து வடக்கர்களுக்கு நம் ஒட்டுமொத்த ஆதரவு தமிழ்நாடு அரசின் பக்கமே என நிரூபியுங்கள். வாக்களிக்க இணைப்பை சொடுக்கவும்! Do you support Tamil Nadu government's decision to release Rajiv Gandhi's killers? http://www.hindustantimes.com/htpoll/OpinionPoll.aspx?opx=329#pd_a_7811635 நன்றி!

  20. சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மன்னன் கைது! ரூ.30 கோடி பரிசு தொகை யாருக்கு? [sunday, 2014-02-23 18:56:49] மெக்சிகோவை சேர்ந்த போதைப் பொருள் கடத்தல் மன்னன், 13 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளான். மெக்சிகோவின் மிகப்பெரிய போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவன் ஜோகுயின் எல்சாபோ குஷ்மேன். சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தலில் முன்னணியில் இருக்கும் ஜோகுயின், அமெரிக்கா உட்பட பல நாடுகளில் போதைப் பொருள் குற்ற வழக்குகளில் தொடர்புடையவன். எனவே இவன் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.30 கோடி பரிசு தொகை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்திருந்தது. கடந்த 13 ஆண்டுகளாக பொலிசார் தேடிவந்த நிலையில், மெக்சிகோ பசிபிக் கடற்கரை நகரமான மஷட்லானில் வைத்து கைது செய்யப்ப…

  21. சூரத்தில் சிறிய அணுகுண்டை வெடிக்க வைத்து பழிதீர்க்க முயன்ற இந்தியன் முஜாகுதீன்! – குற்றப்பத்திரிகையில் பகீர் தகவல். [sunday, 2014-02-23 19:02:54] இந்தியன் முஜாகிதீன் என்ற தீவிரவாத அமைப்பின் இணை நிறுவனர் யாசின் பத்கலுக்கு எதிராக தேசிய புலனாய்வு எதிராக தேசிய புலனாய்வு பிரிவு 272 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது. பீகார் மாநிலத்தில், இந்திய–நேபாள எல்லையில் கைது செய்யப்பட்ட யாசின் பாத்கல் மற்றும் அவரது கூட்டாளி அசதுல்லா அக்தரிடம் புலனாய்வு பிரிவினர் இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்புகள் குறித்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் பாத்கலுக்கு எதிராக தேசிய புலனாய்வு பிரிவினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். குஜராத் கலவரத்தில் மக்கள் பல…

  22. இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு ரத்து செய்யப்பட்ட பேரறிவாளனை மட்டும் விடுவிப்பதில் நியாயம் இருக்கிறது என்று மூத்த காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கை ஆயுள் தண்டனையாக்கியது உச்சநீதிமன்றம். இதைத் தொடர்ந்து ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் இந்த மூவர் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. ஆனால் இதற்கு மத்திய அரசும் காங்கிரஸ் கட்சியும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதே நேரத்தில் பேரறிவாளனை மட்டும் விடுதலை செய்யலாம் என மூத்த காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கர…

  23. புதுடெல்லி: இந்தியாவுக்கு எதிராக புனிதப்போர் நடத்த வருமாறு தீவிரவாதி மசூத் அசார் அழைப்பு விடுத்த பொதுக்கூட்டத்திற்கு அனுமதி அளித்த பாகிஸ்தான் அரசுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த 1999 ஆம் ஆண்டு நேபாள தலைநகர் காத்மாண்டுவிலிருந்து இந்தியா வந்த ஏர் இந்தியா விமானம்,பாகிஸ்தான் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டது. அதிலிருந்த பயணிகளை விடுவிக்க தீவிரவாதிகள் விடுத்த நிபந்தனையை ஏற்று காஷ்மீர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தீவிரவாதி மசூத் அசார் அப்போது விடுவிக்கப்பட்டான். அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் சென்ற மசூத், ஜெய்ஷ் இ மொகமத் என்ற தீவிரவாத இயக்கத்தை தொடங்கி, இந்தியாவுக்கு எதிரான ஜிகாத் ( புனிதப்போர்) நடத்த அவ்வப்போது அழைப்பு விடுத்து, தீவிரவாதிகளை தூண்டுவிடு…

    • 2 replies
    • 533 views
  24. நோ பயர் ஸோன் ஆவணப்படத்திற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் செனல்4 ஊடகத்தினால் வெளியிடப்பட்ட இலங்கை தொடர்பான சர்ச்சைக்குரிய நோ பயர் ஸோன் மற்றும் கில்லிங் பீல்ட்ஸ் ஆவணப்படங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய மத்திய திரைப்படச் சபை நாட்டின் திரையறங்குகளில் செனல்4 ஆவணப்படங்களை திரையிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தக் காணொளியை இந்தியாவில் இலவசமாக இணையத்தில் பிரசூரிப்பதற்கு ஆவணப்படத்தின் இயக்குனர் கலம் மக்ரே தெரிவித்துள்ளார். திரையிடுவதற்கு தடை விதிக்கப்பட்ட இலங்கை, மலேசியா, நேபாளம் போன்ற நாடுகளில் இணையத்தில் இலவசமாக பார்வையிடக் கூடிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இலங்கையுடனான உறவுகளில் வரிசல் ஏற்படக் கூடும் என்ற காரணத்தினால…

    • 5 replies
    • 718 views
  25. வட்ஸ் அப் (Whats App) நிறுவனத்தை 16 பில்லியன் அமெரிக்க டொலருக்கு ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. மொபைல் ஃபோன் பயன்படுத்துவோர் பலருக்குத் தெரிந்திருக்கும் ஒரு வார்த்தை வட்ஸ் ஆப். குறுந்தகவல், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து கொள்ள பெரும்பான்மையான மக்களால் பயன்படுத்தப்படும் செயலி (App) தான் இந்த வட்ஸ் அப். தினமும் கிட்டத்தட்ட 10 இலட்சம் பேர் வட்ஸ் அப் செயலியில் இணைகிறார்கள் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஃபோனில் இணைய சேவை இருந்தால் எந்த நாட்டில் இருக்கும் நண்பரையும் இலவசமாகத் தொடர்பு கொள்ளலாம் என்ற நிலையில், வட்ஸ் அப்பின் புகழ் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. வட்ஸ் அப் வெளியான சில வருடங்களுக்கு பின்னரே ஃபேஸ்புக் நிறுவனம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.