Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. காணொளி:மெளனம் கலைத்த மன்மோகன் சிங் http://www.youtube.com/watch?feature=player_embedded&v=vb7c8alVQ4M http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=10937:2014-01-03-11-27-37&catid=1:latest-news&Itemid=18

  2. ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தலைவராக நடிகர் விஷால் தெரிவு செய்யப்படலாம் என்ற தகவலால் நடிகர் விஷாலே அதிர்ச்சி அடைந்துள்ளார். டெல்லியில் திடீரென ஆட்சி அமைத்து ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்த ஆம் .ஆத்மி கட்சி, பிற மாநிலங்களுக்கு கட்சி நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து கட்சியை விரிவுபடுத்தும் வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தமிழகத் தலைவராக நடிகர் விஷால் தெரிவு செய்யப்படலாம் என்ற செய்தி விஷாலின் காதுக்கு சென்ற போது, அது என்ன ஆம் அத்மி? எனக்கு ஒன்றுமே புரியலையே என கேட்டுள்ளார். பிறகு அவரிடம் அக்கட்சி குறித்து விளக்கிய பிறகு, இது குறித்து தெரிந்துள்ளார். மேலும், அரசியலுக்கு வருவீர்களா? என்றும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர…

  3. டெல்லி: டெல்லி சட்டமன்ற சபாநாயகராக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த எம்.எஸ்.திர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லி சட்டமன்ற கூட்டத் தொடர் ஜனவரி 1ம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தின் மூன்றாவது நாளான இன்று வெள்ளிக்கிழமை சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த எம்.எஸ்.திர் 37 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று சபாநாயகராக வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதா தள உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளனர். எம்.எஸ்.திர்ரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க.வைச் சேர்ந்த ஜக்திஷ் முக்தி 32 பேரின் ஆதரவை பெற்றிருக்கிறார். http://tamil.oneindia.in/news/india/aap-candidate-ms-dhir-elected-delhi-assembly-speaker-190727.html

  4. அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் அங்கு கடும் பனிப்புயல் தாக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 14 அங்குலத்துக்கு இந்த பனிப்பொழிவு இருக்கும் என்பதால் யாரும் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என கேட்டுகொள்ளப்பட்டுள்ளனர். பள்ளிகளில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக விடப்பட்ட விடுமுறை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=100558&category=WorldNews&language=tamil

  5. எழுத்துத் தமிழும் காட்சி ஒளியும் கலந்து புரண்டு வரும் கற்பனை வளம் காண வாரீர்.. வந்திருக்கும் ஆண்டுக்கு வாணவேடிக்கை ஆண்டென்று பெயரிடலாம்.. வருடந்தோறும் புத்தாண்டு பிறந்தால் நடக்கும் வாண வேடிக்கையில் உலகில் எந்த நாடு முன்னணி வகிக்கிறது என்பதே ஊடகங்களின் புத்தாண்டு காலைச் செய்தியாக புலரும். அந்தவகையில் டுபாயில் உள்ள போரி கலிபா கோபுரத்தில் இதுவரை இல்லாத மாபெரும் வாண வேடிக்கை இடம் பெற்றுள்ளது, சுமார் 400 இலக்குகளில் நான்கு இலட்சம் வாணங்கள் நாலாபுறமும் பறக்கவிடப்பட்டன. டுபாயில் மட்டும் இந்தக் கண்கொள்ளாக் காட்சியை சுமார் ஒரு மில்லியன் மக்கள் கண்டு களித்தனர், அனைவரும் பார்ப்பதற்கு ஏற்றவாறு சுமார் 210 மீட்டர் நீளமான திரையில் காட்சி அமர்க்களமாக ஒளிபரப்பப்பட்டது. புத்தாண்டு நேர…

  6. மெக்ஸிக்கோவை சுமார் இரு வாரங்களுக்கு முன் தாக்கிய 1.3 ரிச்டர் முதல் 4.3 ரிச்டர் வரையான தொடர் பூமியதிர்ச்சிகளின் விளைவாக கடந்த சனிக்கிழமை மலைப்பகுதியிலிருந்து 300 அடி பள்ளத்தில் இறங்கிய நெடுஞ்சாலையில் பயணித்த டிரக் வண்டியொன்றின் சாரதி அதிசயிக்கத்தக்க வகையில் உயிர் தப்பியுள்ளார். இது தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் செவ்வாய்க் கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன. பஜா கலிபோர்னியா தீபகற்பத்தின் துறைமுக நகரான என்சென்னடா நகரில் குறிப்பிட்ட சீமெந்து டிரக் வண்டி பயணம் செய்து கொண்டிருந்த போதே அந்த நெடுஞ்சாலைப் பகுதி கீழிறங்க ஆரம்பித்துள்ளது. இந் நிலையில் மேற்படி டிரக் வண்டியின் சாரதி கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி காப்பாற்றப்பட்டார். தொடர்ந்து அந்த நெடுஞ்சாலை பகுதி டிரக் வண்டி சகிதம் …

  7. அமெரிக்காவின் LSSU எனப்படும் பல்கலைக் கழகத்தால் கடந்த 39 வருடங்களாக ஒவ்வொரு வருடமும் ஆங்கில அகராதியில் தடை செய்ய வேண்டும் என்று கருதப் படும் சொற்களின் பட்டியல் வெளியிடப் படும். அந்த வகையில் கடந்த 2013 ஆம் ஆண்டு மிக மோசமாகப் பாவிக்கப் பட்டு இவ்வருடம் தடை செய்யப் பட வேண்டும் என்று கருதப்படும் சொற்களின் பட்டியலில் சமீபத்தில் ஆக்ஸ்ஃபோர்ட் அகராதியில் புதிதாகச் சேர்க்கப் பட்ட செல்ஃபியே (Selfie) என்ற வார்த்தை அடங்கியுள்ளது. Selfie தவிர்த்து மற்றைய வார்த்தைகளாக 'Twerking' மற்றும் 'hashtag' ஆகியவை உள்ளடக்கப் பட்டுள்ளன. இந்த வார்த்தைகளை நீக்குவதற்குக் குறித்த பல்கலைக் கழகம் கூறும் காரணம் ஒன்று இவை தவறாகப் பாவிக்கப் படுதல் அல்லது அளவுக்கு அதிகமாகப் பாவிக்கப் படுதல் அல்லது பிரயோசனம…

  8. பிரிட்டனுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், வந்த இடத்தில் பிரசவித்தால், அதற்கான செலவை, அரசே ஏற்றுக் கொள்கிறது. இதற்காக, பிரிட்டன், 20 கோடி ரூபாய் செலவு செய்கிறது. இதை அறிந்த, அண்டை நாடுகளின் கர்ப்பிணி பெண்கள், நிறைமாத கர்ப்பிணியாக, சுற்றுலா, "விசா'வில் பிரிட்டன் வந்து விடுகின்றனர். ஏனெனில், பிற ஐரோப்பிய நாடுகளில், மருத்துவமனைகளில், பிரசவத்திற்கு, நாள் ஒன்றுக்கு, 10 ஆயிரம் ரூபாய், கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணத்தை கொடுக்க முடியாதவர்கள், குழந்தை பெற்றுக் கொள்ள, பிரிட்டனுக்கு வந்து விடுகின்றனர். இலவசமாக பிரசவம் பார்த்து, குழந்தையுடன் நாடு திரும்பி விடுகின்றனர். இதை, பிரிட்டன் தாமதமாகவே அறிந்தது. சமீபத்தில், ருமேனியா, பல்கேரியா மற்றும் மேற்கு ஆப்ரிக்காவின் சில நாடுகளைச்…

  9. 2028 இல் ஜப்பானை பின்தள்ளும் இந்தியா லண்டனை சேர்ந்த நிறுவனம் ஒன்று மேற்கொண்ட கணக்கெடுப்பில் 2028 ஆம் ஆண்டு ஜப்பானை பின்னுக்கு தள்ளி, சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்து உலகிலேயே மூன்றாவது பொருளாதார வல்லரசாக இந்தியா உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய பொருளதாரமிக்க நாடுகளின் பட்டியல் குறித்து சிபர் அமைப்பு அட்டவணைப்படுத்தியுள்ளது. அதில் 2028 ஆம் ஆண்டில் சீனா, அமெரிக்காவிற்கு அடுத்தப்படியாக உலகின் 3வது பெரிய பொருளாதார வல்லரசு நாடாக இந்தியா இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இப்பட்டியலில் இந்தியா 11 வது இடத்தில் உள்ளது. வரும் 2018 ஆம் ஆண்டு இந்தியா 9 ஆவது இடத்தை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதேசமயம் 2018 ஆம் ஆண்டு ரஷ்யா 6 வத…

    • 44 replies
    • 2.5k views
  10. கொரிய தீபகற்பத்தில் போர் உருவானால் அமெரிக்கா பாதுகாப்பாக இருக்கமுடியாது: வடகொரிய அதிபர் மிரட்டல் கொரிய தீபகற்பத்தில் போர் ஏற்படும் சூழ்நிலை உருவானால் அங்கு அணு ஆயுதங்களால் பேரழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இதனால் அமெரிக்கா எவ்விதத்திலும் பாதுகாப்பாக இருக்கமுடியாது என்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். புத்தாண்டையொட்டி அந்நாட்டு தொலைக்காட்சியில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தாங்கள் ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொண்டு வருவதாகவும், அதன் மூலம் வீரர்களுக்கிடையேயான சிறு மோதல்கூட போருக்கு வழிவகுக்கும் என கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அமைதிக்காக தாம் யாரிடமும் கெஞ்சப் போவதில்லை, எதிரிகளிடமிருந்த…

  11. வளைகுடா வளம் பெறும் வாய்ப்பு எண்ணெய் கிணறுகளால் என்றால் மிகையல்ல. சில நாடுகள் தங்கள் நாட்டின் வளத்தைக் கொண்டும் சில நாடுகள் அறிவியல் வளர்ச்சியைக் கொண்டும் முன்னேறி வருகின்றன. வளைகுடாவைப் பொறுத்தவரை எண்ணெய்க் கிணறுகள் தான் இதன் வளம். இதனைக் கொண்டே வளைகுடாவில் உள்ள அத்தனை நாடுகளும் முன்னேறி வருகின்றன. ஐக்கிய அரபு அமீ்ரகம் வளைகுடாவில் ஒரு பகுதி ஐக்கிய அரபு அமீரகம் ( U.A.E) . இந்த அமீரகத்தில் மொத்தம் 7 மாநிலங்கள் உள்ளன. இதன் தலைநகரம் அபுதாபி. துபாய், சார்ஜா, அஜ்மான், உம்முல் குவைன், புஜைரா, மற்றும் ராசல்கைமா என்பது இதன் மற்ற மாநிலங்கள். அபுதாபியை அடுத்து துணைத் தலைநகரம் போல் இருப்பது துபாய். ஐக்கிய அரபு அமிரகம் ஏறக்குறைய எண்ணெய் வளமே பிரதான வளம் என்ற போதிலும் துபாய் மாநில…

  12. வாஷிங்டன்:இந்திய தூதரக பெண் அதிகாரி தேவயானி மீதான வழக்கை வாபஸ் பெற முடியாது. இந்த விஷயத்தில் மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என்று அமெரிக்கா மீண்டும் தெரிவித்துள்ளது.விசா முறைகேடு மற்றும் பணிப்பெண்ணுக்கான சம்பள விவகாரத்தில் இந்திய பெண் தூதரக அதிகாரி தேவயானி கோப்ரகடேவை நியூயார்க் போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன்பு பொது இடத்தில் கை விலங்கிட்டு கைது செய்தனர். மேலும் அவரை அவமானப்படுத்தியதாக செய்திகள் வெளியாயின. தேவயானி கைது சம்பவத்துக்கு இந்திய தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், தேவயானியை கைது செய்ய முடியாத வகையில், ஐநாவுக்கான சிறப்பு தூதராக நியமித்து உத்தரவிட்டது. இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கான பாதுகாப்புகளை மத்திய அரசு குறைத்தது. அத்துட…

    • 3 replies
    • 655 views
  13. எண்ணெய் ஏற்றிச் சென்ற புகையிரதம் தடம்புரண்டு தீ அனர்த்தம் அமெ­ரிக்க வட டகோதா மாநி­லத்தில் எண்­ணெய் ஏற்றிச் சென்ற புகை­யி­ர­த­மொன்று தடம் புரண்டு விபத்­துக்­குள்­ளா­னதில் பாரிய தீ விபத்து ஏற்­பட்­டுள்­ளது. இதனால் ஏற்­பட்ட புகை­மூட்டம் பல மைல் தொலை­விற்கு அவ­தா­னிக்­கப்­பட்­டு ள்­ளதோடு கஸெட்டன் நக­ருக்கு அண்­மையில் இடம்­பெற்ற இந்த தீ விபத்தில் சுமார் 2,300 பேர் அப்­ பி­ராந்­தி­யத்­தி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­டுள்­ளனர். இந்­நி­லையில் இந்த அனர்த்­தத்­துக்­கான கார­ணத்தை கண்­ட­றிய விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. அனர்த்­தத்தின் போது ஒரு மைல் நீள­மான புகை­யி­ர­தத்தின் சுமார் 50 பெட்­டிகள் தடம் புரண்­டுள்­ளதுடன் தீயை அணைக்கும் நடவடிக்கையில் பெருமளவு…

    • 0 replies
    • 484 views
  14. புதுடெல்லி: பிரதமர் பதவியில் இருந்து விலகப்போவதாக மன்மோகன் சிங் அறிவிக்க உள்ளதாக டெல்லி வட்டாரங்களில் வெளியான செய்தியால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அதனை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் நடந்து வருகிறது. பிரதமராக மன்மோகன் சிங் இருந்து வருகிறார். இந்நிலையில் வருகிற ஜனவரி 3 ஆம் தேதியன்று காலை 11 மணி அளவில் பிரதமர் மன்மோகன் சிங் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2009 ல் மீண்டும் இரண்டாவது முறையாக ஆட்சியில் அமர்ந்த பின்னர், மன்மோகன் சிங்கே, முன்வந்து பத்திரிகையாளர்கள் கூட்டத்தைக் கூட்டி அவர்களை சந்திப்பது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னர் ஆங்கில …

  15. பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் தனது குடும்பத்துடன் லண்டன் ஹைட் பார்க்கில் தமிழர் வேலை செய்யும் நடமாடும் சாப்பாட்டு வாகனத்துக்கு முன் வரிசையில் நின்று சாப்பாடு வாங்கி போது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது குறிப்பிடத் தக்கது. இவர் அண்மையில் பொதுநலவாய மாநாட்டிற்காக இலங்கை சென்றிருந்தார் அவ்வேளையிலும் ஆடம் பர உணவகங்களை விட்டு விட்டு வீதிக் கடையில் சாப்பிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருந்தமை குறிப்பிடத் தக்கது உண்மையான பிரதமர். இதுவே ஆசியாவாக இருந்தால் பின்னாடி 50 வாகனத்தொடரணி இருந்திருக்கும்.நன்மை செய்திருந்தால் பாதுகாப்பு தேவையில்லை இவர் போன்று… http://tamizl.com/?p=57559

  16. புதுடெல்லி: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக இலவச குடிநீர் திட்டத்தை தொடர்ந்து, டெல்லியில் மின் கட்டணத்தையும் பாதியாக குறைத்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். காய்ச்சல் மற்றும் வயிற்று போக்கால் அவதிப்பட்டு வந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை, அவரது இல்லத்தில் இன்று சந்தித்த டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், அவரது உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். அதன்பின்னர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயின்," அரவிந்த் கெஜ்ரிவால் வேகமாக உடல் நலம் தேறிவருகிறார். நாளை அலுவலகம் வருவார் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்றார். ஆனால் இன்று மாலையே தலைமைச் செயலகத்திற்கு வந்து அமைச்சரவைக் கூட்டத்தை நடத்த உள்ளதாக கெஜ்ரிவால் …

  17. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மர்ம மரணம் தொடர்பான ஆவணங்களை வெளியிடுமாறு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்பட்டதற்கு பதிலளிக்குமாறு அவரது குடும்பத்தினர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை வலியுறுத்தியுள்ளனர். சிங்கப்பூரில் இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி வெள்ளையரை எதிர்த்துப் போரிடத் திட்டமிட்ட நேதாஜி இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மாயமானார். அவரது மரணம் குறித்த மர்மம் இன்றளவும் நீடிக்கிறது. நேதாஜியின் மரணம் குறித்த ஆவணங்களை அளிக்குமாறு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தில்லியைச் சேர்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர் அனுஜ் தார் கோரியிருந்தார். அதற்கு மேற்கு வங்க முதல்வர் அலுவலகம் பதில் அளிக்கவில்லை. இந்நிலையில், மேற்கண்ட ஆவணங்களை மேற்கு வங்க அரசு வெ…

  18. 30 டிசம்பர், 2013 குண்டுத்தாக்குதலில் அழிந்த ட்ராலிபஸ் ரஷ்ய நகரான வொல்கோக்ராடில் மின்சார பஸ் ஒன்றின் மீது நடந்த குண்டுத் தாக்குதல் சம்பவம் ஒன்றில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ட்ராலிபஸ் என்றழைக்கப்படும் இந்த மின்சார பஸ் ஒரு ஜனசந்தடிமிக்க பேருந்து நிறுத்தத்தில் வந்து நின்ற போது இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த வெடிப்பில், இந்த பஸ் ஏறக்குறைய முழுதுமாக அழிந்தது. நேற்றுதான் இந்த நகரின் மத்திய ரயில் நிலையத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் ஒன்றில் 17 பேர் கொல்லப்பட்டனர். குண்டுத்தாக்குதல் நடந்த இடம் இந்த ட்ராலிபஸ் வெடிகுண்டுத் தாக்குதலை, ஒரு பயங்கரவாத நடவடிக்கை என்று ரஷ்ய அதிகாரிகள் வர்ணித்துள்ளன…

  19. இந்தியாவைச் சேர்ந்த மாணவர் மீது ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதில் அந்த மாணவர் கோமாவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த மாணவரின் பெயர் மன்ரியாஜ்விந்தர் சிங். 20 வயதாகும் இவர் தனது இரண்டு நண்பர்களுடன் போய்க் கொண்டிருந்தபோது, எட்டு ஆண்கள், இரண்டு பெண்கள் அடங்கிய 10 பேர் கொண்ட கும்பலால் வெறித்தனமாக தாக்கப்பட்டார். இந்தத் தாக்குதல் தொடர்பான சிசிடிவி படத்தை போலீஸார் வெளியிட்டுள்ளனர். அந்த மாணவரை குத்தியும், மிதித்தும், தரையில் தள்ளி சரமாரியாகத் தாக்கியும் காயப்படுத்தியுள்ளது அந்த இனவெறிக் கும்பல். மேலும் அவரை கட்டையாலும் தாக்கியுள்ளனர். இதில் அவர் நினைவிழந்து கோமாவில் விழுந்து விட்டார். மெல்போ…

  20. கொலை வழக்கில் சவூதி இளவரசருக்கு மரண தண்டனை? துபாய்: கொலை வழக்கில் சவூதி இளவரசருக்கு மரண தண்டனை விதிக்கப்பட இருக்கிறது. சவூதி இளவரசர் ஒருவர் தன்னுடன் தங்கியிருந்த சக சவூதி அரேபியர் ஒருவரை கொலை செய்துவிட்டார். அந்நாட்டில் கொலையாளி சார்பில், கொலை செய்யப்பட்டவர் குடும்பத்துக்கு ஒரு பெருந்தொகையை கொடுத்து விட்டால் அவர்கள் மன்னித்து விடுவதுடன் கொலையாளி தண்டனையில் இருந்து தப்பி விட முடியும். ஆனால் இந்த வழக்கில் இளவரசர் தரப்பில் தரக்கூடிய தொகையை பெற்றுக்கொண்டு, மன்னிப்பு வழங்க கொலை செய்யப்பட்டவர் குடும்பம் முன்வரவில்லை. இதனால் சவூதி இளவரசருக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் நிலை உருவாகி உள்ளது. இதற்கான அனுமதியை சவூதி இளவரசர் சல்மான் வழங்கி விட்டதாக கூறப்படுகிறது. இதனால…

  21. 7 தடவைகள் போர்மியுலா 1 காரோட்டப் பந்தயத்தில் சம்பியன் பட்டம் வென்ற முன்னாள் காரோட்டப் பந்தய வீரர் மைக்கேல் ஷுமாக்கர் பனிச்சறுக்கல் விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது விபத்துக்குள்ளாகியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பிரான்ஸின் அல்ப்ஸ் மலைத்தொடரில் சற்று முன்னர் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலதிக தகவல்களுக்கு எம்முடன் இணைந்திருங்கள் - See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=3583#sthash.nmraM1Pc.dpuf F1 champion Michael Schumacher 'critical' after ski fall Michael Schumacher, seven-time Formula 1 world champion, is in "critical condition" after a ski ac…

  22. ரஷ்யாவின் தென்பகுதி ரயில் நிலையத்தில் பெண் தற்கொலைத்தாக்குதல் தாக்குதல் பலர் பலி ரஷ்யாவின் தென்னகரமான வோல்கோகிராட்டில் ரயில் நிலையமொன்றில் நடந்துள்ள தற்கொலை குண்டுத் தாக்குதலில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் செய்தி;கள் தெரிவிக்கின்றன. பெண் தற்கொலை குண்டுதாரி ஒருவர் நடத்திய இந்தத் தாக்குதலில் 50 பேர்வரையில் காயமடைந்துள்ளதாகவும் ரஷ்யாவின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு கூறுகின்றது. இந்தத் தாக்குதலுக்கு எந்தத் தரப்பினரும் இன்னும் உரிமை கோரவில்லை. உள்ளூர் நேரப்படி 12.45 மணியளவில் தாக்குதல் நடந்துள்ளது. கடந்த அக்டோபரிலும் பேருந்தொன்றில் பெண் தற்கொலை குண்டுதாரி என்று சந்தேகிக்கப்படுபவரால் நடத்தப்பட்ட தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். …

  23. மலேசியாவில் ஐ நாவால் உலக பாரம்பரியத் தலமாக அறிவிக்கப்பட்டுள்ள ஒரு இடத்தில் மாகாண அரசு முன்னெடுக்கும் வர்த்தக நடவடிக்கைகளை ஹிண்ட்ராஃப் அமைப்பு விமர்சித்துள்ளது. மலாக்கா மாநிலத்திலுள்ள கம்புங் சிட்டிப் பகுதியில் முன்னெடுக்கப்படும் வர்த்தக மேம்பாட்டு நடவடிக்கைகள் காரணமாக ஆயிரக்கணக்கான தமிழ் மக்களும் அவர்களது பாரம்பரியங்களும் பாதிக்கப்படுவதாக ஹிண்ட்ராஃப் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. சுமார் அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்நாட்டிலிருந்து மலேசியாவுக்கு வந்தவர்கள் கம்புங் சிட்டிப் பகுதியில் குடியேறினர் என்றும், தமது ஆலயங்களை அமைத்து இன்றும் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் அங்கு வாழ்கிறார்கள் என்றும் ஹிண்ட்ராஃப் அமைப்பின் தலைவரும் மலேசியப் பிரதமர் அலுவலகத் துணை அமைச்சருமான வேதமூர்…

  24. இங்கிலாந்தில் ஏற்பட்ட கடுமையான புயலின் காரணமாக வெள்ளம், நிலச்சரிவு, மின் வெட்டு மற்றும் 109 மைல் வேகத்தில் வீசும் காற்று ஆகியவற்றால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்நாட்டு சுற்றுச்சூழல் துறை, 52 புயல் எச்சரிக்கை செய்தியை வெளியிட்டும் 157 வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்தும் மக்களை உஷார்படுத்தியது. ஆனாலும் இப்புயலினால் வடக்கு இங்கிலாந்தில் உள்ள பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. அங்கு பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டதுடன் சாலை மார்க்கங்களும் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக மத்திய லண்டன் பகுதியில் அனைத்து ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இப்புயல் காரணமாக அந்நாட்டு ஊழியர்களில் பெரும்பாலானோர் தங்கள் விழா கால விடுமுறையை நீட்டித்து தங்கள் வீடு…

  25. டெல்லி: வரவிருக்கும் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், ராகுலுக்கு வழிகாட்டுவேன், பிரதமர் பதவியில் நான் நீடிக்க மாட்டேன் என பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். நடந்து கொண்டிருக்கும் 15-வது நாடாளுமன்றத்தின் பதவி காலம் வருகிற மே மாதம் 30ந்தேதியுடன் முடிவடைய இருக்கிறது. அதனைத் தொடர்ந்து வருகிற ஜூன் 1-ந்தேதி புதிய அரசு பதவி ஏற்க வேண்டும். விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப் பட இருக்கிறது. தற்போது காங்கிரஸ் கூட்டணி அரசு தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியில் இருந்து வருகிறது. மன்மோகன்சிங் 2 முறை தொடர்ந்து பிரதமர் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் அடுத்த ஆண்டு நடை பெறும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்கும், யார் பிரதமர் ஆவார்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.