உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26682 topics in this forum
-
லெகாற்றம் (Legatum) வளச் சுட்டெண்ணின் அடிப்படையில், ஐந்தாவது தடவையாகவும் உலகில் வளமிக்க நாடாக முதலிடத்தைத் தட்டிக்கொண்டது நோர்வே! சுட்டெண்ணின் தொழில்முனைவுத் திறன் (Entrepreneurship )மற்றும் வேலைவாய்ப்பு (Opportunity category) வகையில் அடங்கும், ஐந்து இடங்களில் நாடு பெரும் அதிகரிப்பைக் காட்டியுள்ளது. இணைய அகலப்பட்டை (internet bandwidth ) மற்றும் தலா கைபேசி உரிமம்(capita mobile phone ownership) என்பவற்றில் நோர்வே விரைவான அபிவிருத்தியைக் காட்டியுள்ளது. எனினும், பாதுகாப்பு மற்றும் காவல் வகைப்படுத்தலில் மோசமான செயற்றிறனைக் காட்டி, நான்கு முதல் ஐந்து இடங்களை இழந்துள்ளது. "லெகாற்றம் வளச் சுட்டெண் ஆரம்பமானதிலிருந்து செல்வத்திலும் நல்வாழ்விலும் சிறந்துவிளங்கும் குடிமக்களைக் …
-
- 0 replies
- 556 views
-
-
அனைத்து நாடுகளிலுமே பெண்களுக்கு போதிய பாதுகாப்பற்ற நிலை உள்ளது. பிரான்ஸிலும் இந்த நிலை உள்ளது. ஆனால் பிரான்ஸை விட இந்தியாவில் உள்ள பெண்கள் போதிய பாதுகாப்புடன் உள்ளனர் என பிரான்ஸ் அமைச்சர் நஜாத் வல்லாட் பெக்காம் தெரிவித்துள்ளார். பிரான்ஸில் பெண்கள் நலத் துறை அமைச்சர் நஜாத் வல்லாட் பெக்காம், நான்கு நாள் பயணமாக இந்தியா சென்றுள்ளார். அவர் பயணத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: இந்தியாவுக்கும் பிரான்ஸுக்கும் இடையே பல விடயங்களில் தொடர்பு உள்ளது. பெண்கள் நலனுக்காக பாடுபடும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இரு நாடுகளிலும் அதிகமாக உள்ளன. இவை ஒன்றுடன் ஒன்று, தொடர்புடையதாக உள்ளன. டில்லியில் கடந்தாண்டு மருத்துவ மாணவி ஓடும் பஸ்ஸில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது கு…
-
- 3 replies
- 675 views
-
-
புளோரிடா: அமெரிக்காவில் லாட்டரி டிக்கெட்டில் கடந்த ஆண்டு பரிசு வென்ற நபருக்கு இந்த ஆண்டும் பரிசு விழுந்துள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் போஸ்மேன்(67). அவர் புளோரிடாவில் உள்ள கடை ஒன்றில் கடந்த ஆண்டு லாட்டரி டிக்கெட் வாங்கினார். அந்த டிக்கெட்டுக்கு அவருக்கு ரூ.61.36 கோடி பரிசு விழுந்தது. இதையடுத்து அவர் மீண்டும் பரிசை எதிர்பார்த்து லாட்டரி டிக்கெட் வாங்கினார். இந்நிலையில் இந்த ஆண்டு அவர் வாங்கிய டிக்கெட்டுக்கு ரூ. 18.42 கோடி பரிசு விழுந்துள்ளது. ஒரு முறையாவது பரிசு விழுந்திருந்தா என்று நினைத்த பலர் ஆண்டுக் கணக்கில் லாட்டரி டிக்கெட் வாங்கிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்த தாத்தாவுக்கு ஆண்டுதோறும் பரிசு விழுகிறது. தற்போது விழுந்துள்ள பரிசை ஆண்டுக்கு ஒரு…
-
- 3 replies
- 730 views
-
-
பாகிஸ்தானில் அமெரிக்கா நடத்திய ஆளில்லா உளவு விமானத் தாக்குதல்களில் தீவிரவாதிகள் 2,160 பேரும், பொதுமக்கள் 67 பேரும் கொல்லப்பட்டு உள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்து இஸ்லாமாபாதில் மேலவையில் உள்துறை அமைச்சர் சௌத்ரி நிசார் அலி கான் புதன்கிழமை கூறியது:பாகிஸ்தானில் தீவிரவாத சம்பவங்கள் மூலம் 12,404 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் ஆளில்லா உளவு விமானத் தாக்குதல் நடைபெற்று வருகிறது. சி.ஐ.ஏ. நடத்திய அத்தாக்குதல்களில் இதுவரை 2,160 தீவிரவாதிகளும், 67 பொதுமக்களும் கொல்லப்பட்டனர். இதுவரை 6,149 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2002ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 13,223 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதில் 501 பேரின் தூக…
-
- 3 replies
- 648 views
-
-
சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம், சாம்சங் நிறுவனத்தின் மேல் அமெரிக்க நீதிமன்றத்தில் தனது வடிவமைப்பை (Design) அனுமதியின்றி பயன்படுத்துவதாக வழக்கு தொடுத்திருந்தது. ஓரங்களில் வளைவுகளோடு கூடிய செவ்வக வடிவம் மற்றும் தொடு திரையில் விரல் தீற்றல் மூலம் கைபேசியை அன்லாக் செய்வது உள்ளிட்டவை தனது சொந்தக் கண்டுபிடிப்பு என்று உரிமை கோரியிருந்தது ஆப்பிள் நிறுவனம். செவ்வக வடிவத்திற்குக் கூட உரிமை கோரிய இந்த கேலிக்கூத்தான வழக்கில் அமெரிக்க நீதிமன்றம் ஆப்பிள் நிறுவனத்திற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. மைக்ரோசாப்ட், வால்மார்ட், கோக் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்களோடு ஆப்பிள் நிறுவனமும் அமெரிக்கப் பெருமிதங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. மேற்படி நிறுவனங்களின் தொழில் வளர்ச்சி மற்றும் சந்தை அணுகுமுறை என…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள் தம் வாழும் நகரில் எவ்வளவு திருப்தியுடன் வாழ்கிறார்கள் என்று கண்டறிய, ஐரோப்பிய ஒன்றியம் நடத்திய கணக்கெடுப்பொன்றில், ஒஸ்லோ மூன்றாமிடத்தைத் தட்டிக்கொண்டது. ஐரோப்பிய நகர வாழ்க்கத்தரம் பற்றிய இக்கருத்துக் கணிப்பில்,ஒஸ்லோவின் 97% குடிமக்கள் நிறைவுடன் வாழ்வதாகத் தெரிவித்திருக்கிறார்கள். கடந்த வருடம் கணக்கெடுப்பில் உள்ளீர்க்கப்படாத ஒஸ்லோ, இவ்வருடம், கொபன்ஹேகன்(Copenhagen), குரோயின்கன்(Groeningen), சூரிச் (Zurich) ஆகிய நகரங்களுடன் தன் மூன்றாமிடத்தைப் பகிர்ந்துள்ளது. தமது கருத்துக்கணிப்பு, நகர்ச் சூழல்களில் நல்வாழ்க்கைத் தரத்துக்கு அடிப்படையான வளங்களை அரசாங்கங்களுக்கு ஞாபகமூட்ட உதவும் என்று தெரிவித்தார், பிராந்தியக் கொள்கைகளுக்கான ஐரோப்பிய ஆணையர் ஜொ…
-
- 0 replies
- 416 views
-
-
இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்றால் அதன் விளைவை காங்கிரஸ் கட்சி சந்திக்க நேரிடும் என்று தி.மு.க தலைவர் மு.கருணாநிதி எச்சரித்துள்ளார். சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய கருணாநிதி, கூறியதாவது:- கேள்வி: நேற்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் உயர் நிலைக் குழுவில்; இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ள முடிவெடுத்திருப்பதைப் போல செய்திகள் வந்திருக்கிறதே; அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? கருணாநிதி : தமிழ்நாட்டில் உள்ள தமிழ் உணர்வு படைத்த எல்லா கட்சிகளும் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டிற்கு பிரதமர் செல்லக் கூடாது என்று வலியுறுத்திக் கூறியும் கூட, பத…
-
- 0 replies
- 343 views
-
-
புதைகுழியில் இருந்து மீண்ட சிறுமி - பாகிஸ்தான் பாலியல் பயங்கரவாதிகள். தனக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை, எதிரிக்கு சகுனப் பிழை ஆக வேண்டும் என்பது போல் இந்தியாவில் அக்கிரமங்கள் செய்ய, தீவிரவாதிகள் வளர்வதை தனது மண்ணில் ஊக்குவித்த பாகிஸ்தானை, அதே தீவிரவாதம், தீட்டிய மரத்தில் கூர் பார்ப்பது போல், பதம் பார்கின்றது. பாலியல் வன்முறைகளை செய்வதும், கேட்டால், குறித்த பெண்ணின் தவறான ஒழுக்கம் காரணமாக, தாம் அந்த தண்டனை கொடுத்தோம் என சொல்வதும் வழக்கமாகி விட்டது. ஆட்டை, கடித்து மாட்டைக் கடித்து கடைசியாக சிறுமிகளை பாலியல் பாலத்காரம் செய்வது நான்கு மடங்காக கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகரித்து உள்ளது. கடந்த வாரம், கிராமப் புறம் ஒன்றில் தனியே நடந்து சென்ற 13 வயது சிறுமியை கடத்த…
-
- 1 reply
- 586 views
-
-
ஜெர்மனியின் முன்னாள் ஆட்சியாளர் அடோல்ஃப் ஹிட்லருக்கு அந்நாட்டின் நகரசபையொன்று, 78 ஆண்டுகளுக்கு முன்னர் அளித்திருந்த கௌரவ குடிமகன் அந்தஸ்த்தை தற்போது மீளப் பறித்துக் கொண்டுள்ளது. ஹிட்லர் உயிரிழந்ததன் பின்னர், அவருக்கான கௌரவ அந்தஸ்தும் காலாவதியாகி விட்டது என்பதால் இப்போது அதனை மீளப்பெற வேண்டிய அவசியமில்லை என்று அதிகாரிகள் சிலர் முன்னர் வாதிட்டிருந்தனர். எனினும், கோஸ்லார் நகரசபையில் ஹிட்லரின் விருதைப் பறிக்கும் இந்தப் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நகரசபை தனது கடந்தகால கறைபடிந்த வரலாற்றை மறைக்கப் பார்ப்பதாக அதன் எதிர்க்கட்சித் தலைவர் வாதிட்டிருந்தார்.ஆனால் கோஸ்லார் நகரசபைக்கு அந்த கௌரவ பதவியை பறிப்பதற்கு சட்டரீதியான, விழுமிய ரீதியான கடமை இருப்பதா…
-
- 1 reply
- 480 views
-
-
ஜெர்மனியில், 250,000 யூரோக்களை உரிமையாளரிடம் ஒப்படைத்த நேர்மையான சாரதி ஒருவர் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெர்மனியின் Bavaria பகுதியைச் சேர்ந்த டாக்ஸி சாரதி ஒருவரே இவ்வாறு பணத்தை ஒப்படைத்துள்ளார். டாக்ஸின் பின் ஆசனத்தில் பயணித்த நபர் ஒருவர் 250000 யூரோ பணத்தை விட்டு விட்டுச் சென்றுள்ளார். Thomas Güntner என்ற டாக்ஸி சாரதியே இவ்வாறு பணத்தை ஒப்படைத்துள்ளார். இதற்காக சன்மானம் எதனையும் பெற்றுக்கொள்ளப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். வயது முதிர்ந்த தம்பதியினர் இந்தப் பணத்தை விட்டுச் சென்றிருந்த்தாக அவர் தெரிவித்துள்ளார். பணத்தை மீள ஒப்படைத்தமைக்காக சன்மானம் எதனையும் வாங்கவில்லை எனவும், டாக்ஸி கட்டணத்தை மட்டும் அறவீடு செய்த்தாகவும் குறிப்பிட்டுள்ளார். http://t…
-
- 1 reply
- 787 views
-
-
அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனம் செய்யும் உளவு வேலைகள் பற்றி அதிபர் மாளிகையில் உள்ள முக்கிய அதிகாரிகளுக்குத் தெரியும் என்று அமெரிக்க பத்திரிகையான லாஸ் ஏஞ்சல்ஸ் தெரிவித்துள்ளது.அமெரிக்க உளவுத்துறையினரிடம் உலகின் 35 நாட்டுத்தலைவர்களின் தொலைபேசி ஈமெயில்கள் கண்காணிப்பு பற்றி எடுத்த பேட்டி ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளது. இதில் பெயர் சொல்லவிரும்பாத உளவுத்துறை அதிகாரி கூறிதாவது: எந்த தலைவரை கண்காணிக்கவேண்டும்.எத்தனை நாட்களுக்கு கண்காணிக்கவேண்டும் என்ற உத்தரவு வெள்ளை மாளிகையில் இருந்து வரும். கண்காணிக்கப்படும் தலைவரைப் பற்றிய செய்திகள், தினமும் வெள்ளை மாளிகையில் அதற்கென குறிப்பிட்ட அதிகாரியிடம் தரப்படும். கண்காணிக்கப்படும் நாட்டுக்கான அமெரிக்க தூதரும் 2 மூத்த வெள்ள…
-
- 2 replies
- 527 views
-
-
பிரதமர் எர்னா சொல்பேர்க், அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகவாண்மை (NSA snooping) இரகசியமாக உலகெங்கும் பல்லாயிரம் தொலைபேசி அழைப்புக்களை கண்காணிப்பதாக குற்றஞ் சாட்டியுள்ளார். நேச நாடுகள் ஒன்றையொன்று கண்காணிப்பது நல்லதல்ல என்றும் சுட்டிக் காட்டினார். அவரது எல்லா அமைச்சர்களும் இந்தவாரம் மாற்றியமைக்கப்பட்ட தொலைபேசிகளைப்(encrypted telephones) பெறுவார்கள் என நோர்வே அரச ஊடகமான NRK அறிவித்துள்ளது. முன்னாள் நோர்வே வெளிநாட்டமைச்சர் ஜொனாஸ் கர் ஸ்டோர், நோர்வே அரசியலாளர்கள், அமெரிக்காவாலோ அல்லது ஏனைய நாடுகளாலோ உளவு பார்க்கப்படவில்லை என்று நம்புவது அப்பாவித்தனமானது என்று குறிப்பிட்டதுடன், எனினும் நட்பு நாடுகளிடையேயான உளவு பார்த்தலை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார். h…
-
- 0 replies
- 378 views
-
-
பெங்களூரில் இருந்து ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத்துக்கு நேற்றிரவு 10.30 மணிக்கு ஒரு ஆம்னி பஸ் புறப்பட்டது.வால்வோ வகையைச் சேர்ந்த அந்த ஏ.சி. பஸ்சில் 47 பயணிகள், டிரைவர், கிளீனர் என மொத்தம் 49 பேர் இருந்தனர். இன்று அதிகாலை 5.10 மணிக்கு அந்த பஸ் ஆந்திராவில் மெகபூப்நகர் மாவட்டம் கொத்தகோட்டா பகுதியில் பாலம் என்ற ஊரில் வந்து கொண்டிருந்தது. அப்போது பயணிகள் அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். பஸ் 120 கிலோ மீட்டர் வேகத்துக்கும் மேல் சென்று கொண்டிருந்தது. அப்போது ஆம்னி பஸ் டிரைவர் பெரோஸ்கான் முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு காரை முந்த முயன்றார். கார் மெல்ல சென்று கொண்டிருந்ததால் ஆம்னி பஸ் டிரைவர், அதன் மீது மோதாமல் இருப்பதற்காக பஸ்சை சற்று விலக்கினார். அப்போது …
-
- 0 replies
- 528 views
-
-
சோமாலியாவில் செயற்படும் அல் ஷபாப் எ தீவிரவாத இயக்கம், சமீபத்தில் நைரோபியில் வணிக வளாகத்தில் தாக்குதல் நடத்தி 67 பேரை கொன்றனது. இதனால் இவர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் சோமாலியா ராணுவமும், அமெரிக்கா ராணுவமும் ஈடுபட்டு வருகின்றன.இந்நிலையில் சோமாலியாவின் தெற்குபகுதியில் சென்று கொண்டிருந்த காரை,அமெரிக்க உளவு விமானம் குண்டு வீசி தகர்த்தது. அதில் காரில் பயணம் செய்த 2 பேர் இறந்தனர். இவர்களில் ஒருவர் இப்ராகிம் அலி என்ற பெயருடையவர், தீவிரவாத இயக்கத்தின் குண்டு தயாரிக்கும் நிபுணர் ஆவார். http://www.seithy.com/breifNews.php?newsID=96061&category=WorldNews&language=tamil
-
- 0 replies
- 482 views
-
-
மோடி பிரதமராகக்கூடாது! - அ. குமரேசன் “இணக்கம் மிகுந்த வாழ்க்கை, வந்தாரை வரவேற்கும் இன்முகம் – இவற்றுக்கு அடையாளமானவர்கள் குஜராத் மக்கள்.” -முப்பது ஆண்டுகளுக்கு முன் எனது நண்பனோடு குஜராத்திற்கு அவனது தொழில் தொடர்பாக ஒரு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, ஒரு ஆசிரியர் இப்படிச் சொல்லி வழியனுப்பி வைத்தார். அந்த மாநிலத்தில் அதை நாங்கள் நேருக்கு நேர் அனுபவித்தோம். பலித்தானா என்ற ஊரில் நள்ளிரவு சென்று இறங்கியபோது, அந்த நேரத்தில் ஒரு கூலித்தொழிலாளி ஒரு குதிரை வண்டிக்காரரிடம் எங்களுக்காக அவர்களது மொழியில் பேசி, தங்கும் விடுதிக்கு அனுப்பி வைத்தார். மறுநாள் காலையில் வந்து, வண்டிக்காரர் சரியாகக் கொண்டுவந்து சேர்த்தாரா என்றும், விடுதி வசதியாக இருக்கிறதா என்றும் விசாரித்தார். அவருக…
-
- 1 reply
- 933 views
-
-
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் டுவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களை சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆதரவாளர்கள் நேற்று பல மணி நேரத்திற்கு முடக்கி வைத்தனர்.இந்த பக்கங்களை பார்வையிடுவதற்காக இணைப்புகளை கிளிக் செய்த நபர்கள், சிரியாவின் மின்னணு ராணுவம் என்ற இணைய இணைப்புக்கு திசை திருப்பப்பட்டனர். அவர்கள் சிரியாவின் மின்னணு ராணுவம் என்ற இணையதளத்திற்க்கு அழைத்து செல்லப்பட்டனர். அதில், உங்கள் நுழைகைக்கு நன்றி! ஒபாமாவின் அபாயகரமான பிரச்சார இணைப்புகளை நாங்கள் முடக்கியுள்ளோம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சில மணி நேரங்களுக்கு இந்த இணைப்புகள் முடக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை அதிகாரிகளும் ஒப்புக்கொண்டுள்ளனர். விஷமிகள் சிலர் அதிபரின் இணைப்புகளை முடக்கியுள்ளனர். எனின…
-
- 9 replies
- 659 views
-
-
பாட்னாவில் பல்வேறு இடங்களில் நடந்த 6 வெடிகுண்டு வெடிப்பு சம்பவங்களில் இதுவரை 5 பேர் பலியாயி னர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ரயில் நிலையம் அருகிலும், நரேந்திர மோடி பேசிய காந்தி மைதானத்திலும் குண்டு வெடிப்புகள் தொடர்ச்சி யாக நிகழ்ந்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தால் காந்தி மைதானமே பெரும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்நிலையில், இந்த வெடிகுண்டு சம்பவம் குறித்து அதிர்ச்சி அடைந்த பீகார் முதல்வர் நிதீஷ்குமார், அவசர ஆலோசனை நடத்தினார். மேலும் இது குறித்து மத்திய அரசுக்கு அம்மாநில அரசு அறிக்கை அனுப்ப உள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் மன்மோகன்சிங் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார் http:/…
-
- 22 replies
- 1.6k views
-
-
ஸ்ரீ நகர்: ஜம்மு-காஷ்மீர் எல்லையில் உள்ள இந்திய நிலைகள் மீது இன்று காலையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில், ராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். உரி என்ற இடத்தில் பாகிஸ்தான் ராணுவம் சிறிய ரக பீரங்கிகள் கொண்டு இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்த சண்டையின் போது, இந்திய ராணுவத்தினர் பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதலில் இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு ராணுவ வீரர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பாகிஸ்தான் அத்துமீறல் தொடர்வதால், எல்லையில் கடும் பதற்றம் நிலவுவதாக எல்லையில் வசிக்கும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். http://tamil.oneindia.in/news/india/ceasefire-v…
-
- 10 replies
- 747 views
-
-
எதிர்வரும் சனி நள்ளிரவிற்குப் பின்னர் அதாவது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மூன்று மணிக்கு நேரம் மாற்றப்பட்டு இரண்டு மணியாக மாற்றப்படும். அதாவது பிரான்சில் குளிர்கால நேரமாற்றம் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மூன்று மணிக்கு மாற்றப்படுகின்றது. இதனால் ஒரு மணிநேரத் தூக்கம் அதிகமாகக் கிடைக்கின்றது. இந்த நேர மாற்ற முறை 1916ம் ஆண்டில் பிரான்சில் தொடக்கப்பட்டது. ஆனால் இரண்டாம் உலகப் போரின் பின்னர் இது கைவிடப்பட்டிருந்தது. பின்னர் 1975ம் ஆண்டு முதல் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டது. http://www.paristamil.com/tamilnews/view-news-MzAxOTc4NDUy.htm#.UmwRNfnPWnY
-
- 16 replies
- 1.3k views
-
-
பிரிட்டனை தாக்கிய புயல் காற்றில் மூவர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கெண்ட் பகுதியில் ஒரு சிறுவனும், வட்ஃபோர்ட்டில் ஒருவரும் புயலில் மரங்கள் வீழ்ந்ததால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மேற்கு லண்டனிலும் ஒருவர் இறந்துள்ளார். ஐந்து லட்சத்து எண்பதினாயிரம் வீடுகள் மின் இணைப்பை இழந்துள்ளன. பிரிட்டனின் தென்பகுதிக்கான ரயில் பாதைகளில் மரங்கள் வீழ்ந்ததால் பல ரயில் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. எதிர்பார்த்ததைவிட சேதம் அதிகம் என்று ரயில் வலையமைப்பு கூறியுள்ளது. ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து 130 விமானங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. ஐல் ஒஃப்வைட்டில் மணிக்கு 99 மைல் வேகத்தில் காற்று வீசியதாக காலநிலை அவதான நிலையம் கூறியுள்ளது. http://www.bbc.co.uk/tamil/multimedia/2013/10/131028_uk_…
-
- 1 reply
- 612 views
-
-
லண்டன்: நாளை கடும் புயல் ஒன்று சுமார் 160கிமீ வேகத்தில் இங்கிலாந்தைத் தாக்க இருப்பதாக அந்நாட்டு வானிலை மையம் எச்சரித்துள்ளது. கடந்த 1987, 2000, 2007, 2008 ஆகிய ஆண்டுகளில் இங்கிலாந்து கடும்புயல் தாக்கத்துக்கு ஆளாகியது. கிட்டத்தட்ட பல வருடங்களுக்குப் பிறகு நாளை மணிக்கு 100 மைல் அதாவது சுமார் 160 கி.மீட்டர் வேகத்தில் கடும் புயல் ஒன்று இங்கிலாந்தை தாக்க இருப்பதாக அந்நாட்டு வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. எனவே, இப்புயலை எதிர்கொள்ளும் விதமாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதி மக்கள் தயார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். புயலின் விளைவாக சுமார் 30 முதல் 40 செ.மீட்டர் மழையும், அதனைத் தொடர்ந்து பெரும் வெள்ளப் பெருக்கும் ஏற்படும் என அஞ்சப்படுகிறது. புயல் முன்னெ…
-
- 3 replies
- 610 views
-
-
ஈரான் - பாகிஸ்தான் எல்லையில் ஆயுததாரிகளுடன் நடந்த மோதலில் ஈரானின் எல்லைப் பாதுகாவலர்கள் 14 பேர் கொல்லப்பட்டதாக இரானிய அதிகாரபூர்வ செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இந்தத் தாக்குதலுக்கான பதிலடியாக அரசாங்கத்துக்கு விரோதமான இந்தக் குழுவுடன் தொடர்புடைய 16 பேர் தூக்கிலிடப்பட்டதாகவும் அரச ஊடகம் தெரிவித்துள்ளது. சரவான் நகருக்கு வெளியே மலைப்பாங்கான பிராந்தியத்தில் இந்த மோதல் நடந்துள்ளது. ஈரானிய படையினர் பலர் பணயமாக பிடித்துச் செல்லப்பட்டதாகவும், அது கூறியுள்ளது. தாக்குதலாளிகளின் அடையாளம் சரியாகத் தெரியவில்லை. ஆனால், இவர்கள் புரட்சிக்கு எதிரான கெரில்லாக்கள் என்று சரவான் நாடாளுமன்ற உறுப்பினரான ஹிதயத்துல்லாஹ் மிர்மோரட்ஷெஹி கூறியுள்ளார். http://www.seithy.com/brei…
-
- 1 reply
- 461 views
-
-
சிறீலங்காவில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாடு அமர்வுகளில் மலேசியா பங்கேற்கக் கூடாது என அந்நாட்டு எதிர்க்கட்சியான ஜனநாயக செயற்பாட்டுக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. சிறீலங்கா மனித உரிமை நிலைமைகளை கருத்திற் கொண்டே, மலேசிய அரசாங்கம் சிறீலங்காவுக்கு செல்லாது மாநாட்டை புறக்கணிக்க வேண்டுமென வலிறுத்தியுள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பாரியளவில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாகவும் இந்த மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சிறீலங்கா அரசாங்கம் காத்திரமான விசாரணைகளை நடத்தத் தவறியுள்ளதாகக் அந்தக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. உரிய விசாரணை நடத்தப்படாமைக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் மலேசியா அரசாங்கம் அமர்வுகளை பகிஷ்கரிக்க வேண்டும் என எதிர்க்கட்சி வலியுறுத்தியுள்ளது.…
-
- 0 replies
- 371 views
-
-
டெல்லி: முஸ்லிம் இளைஞர்களுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐக்கு தொடர்பு இருக்கிறது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசியதற்கு உடனே மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி, உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் மத மோதல்கள் தூண்டிவிடப்பட்டன. இப்போது பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. அங்கு தீவிரவாத இயக்கத்துக்கு ஆட்களை தேர்வு செய்து கொண்டிருக்கிறது என்று கூறினார். இதற்கு முஸ்லிம் மதகுருக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஷியா பிரிவு மதகுரு மெளலானா சைய்ஃப் அப்பாஸ் நக்வி கூறுகையில், இத்தகைய பேச்சுகள் முஸ்லிம் சமூகத்தினரை புண்படுத்தக் கூடியவை. இது மதவ…
-
- 3 replies
- 438 views
-
-
டெல்லி: இந்தியாவில் வெங்காயத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து 550 டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது வெங்காயத்தின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. டெல்லியில் ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்பனையாகிறது. சென்னையில் பெரிய வெங்காயம் 80 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு இன்னும் மூன்று வாரங்களுக்கு நீடிக்கும் என மத்திய வேளாண் அமைச்சர் சரத்பவார் கூறியுள்ளார். இது தொடர்பாக மத்திய உணவுத்துறை அமைச்சர் கே.வி.தாமஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். டெல்லி, பீகார், காஷ்மீர் ஆகிய மூன்று மாநிலங்களில் வெங்காயத்துக்கு அதிக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்குவதால், வெங்காயம் வில…
-
- 4 replies
- 755 views
-