உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26682 topics in this forum
-
முகம்மது நபியின் தாயின் பெயர் தெரியாததால் இந்தியரை கென்யாவில் உள்ள வெஸ்ட்கேட் மாலில் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள வெஸ்ட்கேட் ஷாப்பிங் மாலுக்குள் கடந்த சனிக்கிழமை புகுந்த அல் ஷபாப் தீவிரவாதிகள் கண்மூடித் தனமாக சுட்டதில் 2 இந்தியர்கள் உள்பட 68 பேர் பலியாகினர்.இந்நிலையில் இந்த தாக்குதலில் உயிர் பிழைத்த கிறிஸ்தவரான ஜோஷ்வா ஹகீம் கூறுகையில்,ஒரு இந்தியரை தீவிரவாதிகள் அழைத்தனர். அவரிடம் முகம்மது நபியின் தாயாரின் பெயர் என்ன என்று கேட்டனர். அவருக்கு பதில் தெரியாததால் அவரை சுட்டுக் கொன்றனர். தீவிரவாதிகள் ஸ்வஹீலி மொழியில் பேசினர். அவர்கள் முஸ்லிம்களை அடையாளம் கண்டு வெளியேறுமாறு கூறினர். என்னை அழைத்த போது என் ஐ.டி. கார்டில் இருந்த ஜ…
-
- 28 replies
- 2.4k views
-
-
உலகின் மிகப்பெரும் சதுப்புநிலக் காடுகளான சுந்தரவனக்காடுகளுக்கு அருகில் நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் ஒரு ஆலை அமைக்கப்படுவதற்கு எதிராக ஐந்து நாள் போராட்டம் ஒன்றினை நூற்றுக்கணக்கான சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வங்கதேசத்தில் தொடங்கியுள்ளனர். சுந்தரவனக்காடுகளில் அனல் மின் நிலையத்திட்டத்துக்கு எதிராக நெடும்பயணம் இது தொடர்பில் தலைநகர் டாக்காவில் ஒரு பேரணியை நடத்திய அவர்கள் அதன் பின்னர், நாட்டின் தென்மேற்குப் பகுதியிலுள்ள சுந்தரவனக்காடுகளை நோக்கிய தமது நெடிய பயணத்தை தொடங்கினர். சுந்தரவனப் பகுதி யுனெஸ்கோ அமைப்பால், உலக மரபுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட ஒரு இடமாகும். அங்கு அமைக்கப்படவுள்ள அந்த அனல் மின் நிலையம், அந்தப் பகுதியில் சுற்றுச் சூழலை பாதிக்கும் என்று அவ…
-
- 1 reply
- 279 views
-
-
ஆப்கானிஸ்தானில் தாலிபான் அமைப்பினரைத் தனிமைப்படுத்தும் முயற்சியொன்றில் , சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் குழு ஒன்று, தற்கொலை குண்டுத்தாக்குதல்களுக்கெதிராக கருத்துத் தெரிவித்துள்ளது. 'தற்கொலைத் தாக்குதல்கள் இஸ்லாத்தால் அனுமதிக்கப்பட்டவை அல்ல' ஆப்கான் தலைநகர் காபூலில் நடந்த மாநாடொன்றில் பேசிய இந்த அமைப்பினர், தற்கொலைத் தாக்குதல்கள் இஸ்லாத்தால் தடை செய்யப்பட்டுள்ளன என்று கூறினர். ஆப்கானிய அரசு தாலிபான் கிளர்ச்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை மூலமான உடன்பாடொன்றை எட்ட முயன்று கொண்டிருக்கிறது. ஆப்கானிஸ்தான் அரசு இது போன்ற தற்கொலைத் தாக்குதல்களுக்கெதிராக மத ஆணை ( பாத்வா) ஒன்றைப் பிரகடனம் செய்ய எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன. http://www.bbc.co.uk/tamil/global/2013/09/1…
-
- 0 replies
- 320 views
-
-
இந்தியா 1947 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்ட போது, இடம்பெற்ற வகுப்பு கலவரங்களில் சுமார் ஐந்து லட்சம் பேர் கொல்லப்பட்டனர். இது பெரும்பாலும் பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் நடந்தது. ஹைதரபாத் கலவரங்கள் -- வெளிவராத அறிக்கை ஆனால் அதற்கு ஒராண்டுக்கு பிறகு தென் இந்தியாவின் ஹைதராபாத் பகுதியில் இதே போன்று ஏற்பட்ட கலவரங்களும் படுகொலைகளும் வெளி உலகுக்கு தெரியாமல் இன்று வரை ரகசியமாகவே உள்ளது. இது நடந்தது 1948 ஆம் ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில். படுகொலைகள் அந்தக் காலத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் தென் இந்தியப் பகுதியில் படுகொலை செய்யப்பட்டனர். சிலர் இந்திய இராணுவத்தினரால் வரிசையாக நிற்க வைக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர். எனினும் அப்போது அரசால் அமைக்கப்பட்ட ஒரு விசாரணை…
-
- 0 replies
- 255 views
-
-
சிங்கப்பூர்: திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் சிங்கப்பூர் கிளையின் ஏற்பாட்டில் 22-09-2013 அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை "சட்டமும் நீங்களும்" இலவச கருத்தரங்கு சிங்கப்பூர் வில்கி சாலையில் அமைந்துள்ள கப்லன் உயர்கல்வி நிலையத்தில் நடைபெற்றது. சிங்கப்பூர் கலைப்பித்தர்கள் கழகத்தின் தலைவரும் வழக்கறிஞருமான நாவரசர் திரு ஆர். கலாமோகன் இக்கருத்தரங்கை நடத்தினார். முதலாளி தொழிலாளி உறவு, வர்த்தக முறைகள், சாலை விபத்து, வேலையிட விபத்து, கடன் விதிமுறைகள், உத்தரவாதக் கையெழுத்து உள்ளிட்ட பல்வேறு சட்டங்களை விளக்கினார். கேள்வி பதில் அங்கமும் இடம் பெற்றது. சங்கத்தின் செயலாளர் அப்துல் சுபஹான், வழக்கறிஞர் திரு கலாமோகனுக்கு பொன்னாடைப் போர்த்தி கௌரவித்தார்.…
-
- 0 replies
- 344 views
-
-
மும்பை: மகாத்மா காந்திஜி வழியையே பாரதீய ஜனதா கட்சியும் பின்பற்றுவதாகத் தெரிவித்துள்ளார் அக்கட்சியின் தலைவரான சுப்ரமணிய சுவாமி. சமீபத்தில், நரேந்திர மோடி பங்கேற்கும் கூட்டங்களில் கலந்து கொள்பவர்களுக்கு கட்டணம் விதிக்கும் முறையை பா.ஜனதா நடைமுறைப்படுத்தியது. அது குறித்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அக்கட்சியின் தலைவரான சுப்ரமணிய சுவாமி, அதனை காந்தீய வழி என நியாயப்படுத்தி கருத்துத் தெரிவித்துள்ளார். மேலும், அது குறித்து கூறுகையில், ‘இதில் என்ன தவறு இருக்கிறது? மக்கள் கட்டணம் செலுத்தி பங்கேற்க தயாராக இருக்கிறார்கள். யாரையும் நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை. மகாத்மா காந்தியே இந்த முறையை தான் பின்பற்றினார். அவர் கையெழுத்திடுவதிற்கு ரூ.5 கட்டணம் விதித்தார். காங்கிரஸ் கட…
-
- 1 reply
- 595 views
-
-
அவுஸ்திரேலிய கடற்பரப்புக்கு வரும் சட்டவிரோத அகதிப்படகுகள் தொடர்பிலான தகவல்கள் இனிமேல் வழங்கப்போவதில்லை என்று அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் வரும் சட்டவிரோத அகதிகளை திருப்பியனுப்புவது உட்பட்ட நடவடிக்கைகளை அவுஸ்திரேலியாவின் விசேட படையினர் மேற்கொண்டு வருகின்றனர் இந்தநிலையில் அகதிகளை திருப்பியனுப்புவது உட்பட்ட விடயங்களை மனித உரிமை காப்பு அமைப்புக்கள் விமர்சனம் செய்து வருவதால் படகு அகதிகள் தொடர்பான தகவல்களை உடனடியாக வழங்குவதை தவிர்க்கவுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார். சட்டவிரோத படகுகளை தடுப்பது அவுஸ்திரேலிய மக்களின் நலன்களை கருத்திற்கொண்டாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்எனவே தேவையேற்படும் போது மாத்திர…
-
- 0 replies
- 297 views
-
-
கேப்டவுண்: தென்பிராந்திய நாடுகளின் வளர்ச்சிக்கு உதவியதற்காக தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்கு மனிதநேய சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக நுரையீரல் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் 95 வயதான தென்ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா. மருத்துவமனையில் இருந்து சமீபத்தில் வீடு திரும்பிய நெல்சன் மண்டேலா தற்போதுஜோகன்னஸ்பர்க்கில் உள்ள அவரது வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் உலகின் தென் பிராந்திய நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கு உதவியதற்காக நெல்சன் மண்டேலாவுக்கு மனிதநேய சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. நேற்று அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த விருது வழங்கும் விழாவில் …
-
- 0 replies
- 378 views
-
-
புதுச்சேரி: புதுச்சேரியில் கட்சிகளின் பேனர்கள் கிழிக்கப்பட்டதால் பா.ம.க.வினருக்கும், விடுதலை சிறுத்தைகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதால் பெரும் பதற்றம் உருவாகியுள்ளது. புதுச்சேரி அடுத்து பண்டசோழநல்லூரில் பா.ம.க. சார்பில் பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதனை சமூக விரோதிகள் இன்று காலை கிழித்து விட்டனர். இதனால் கொதிப்படைந்த பா.ம.க.வினர் திரண்டு கரியமாணிக்கம்- பண்டசோழநல்லூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த போலீசார் போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தி மறியலை கைவிட வைத்தனர். போராட்டக்காரர்கள் கலைந்து செல்லும் போது அந்த பகுதியில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் வை…
-
- 0 replies
- 266 views
-
-
30 மாடிக்கட்டிடம் கட்ட எத்தனை நாள் ஆகும் என உங்களிடம் கேட்டால் குறைந்தது ஒரு வருடமாவது ஆகும் என்று தானே சொல்வீர்கள். இல்லையில்லை, பதினைந்தே நாளில் கட்டி முடித்து விடலாம் எனச் சொன்னால் நம்புவீர்களா..? அதெப்படிச் சாத்தியம் என்று தானே கூறுவீர்கள். ஆனால், அதையும் சாதித்துக் காட்டியிருக்கிறார்கள் சீனக் கட்டிடத் தொழிலாளர்கள். வழக்கமாக இவ்வளவு பெரிய கட்டிடம் கட்டுவதென்றால் அஸ்திவாரம் தோண்டவே பல மாதங்கள் ஆகும். ஆனால், பதினைந்தே நாளில் முழுக் கட்டிடத்தையும் கட்டி நம்மை வியப்பின் உச்சிக்கே அழைத்துப் போயிருக்கிறார்கள் சீனர்கள். ஹூனான் புரோவின்ஸ் என்ற கட்டுமான நிறுவனம் தான் இந்த 30 மாடிக் கட்டிடத்தை 15 நாளில் கட்டிக் கொடுத்துள்ளாது. மொத்தம் 200 தொழிலாளர்கள் இந்தக் கட்டிடப் பணியில…
-
- 0 replies
- 329 views
-
-
ஜம்மு காஷ்மீர் மாநில அரசைக் கவிழ்க்க சதி செய்ததாக சர்ச்சையில் சிக்கியுள்ள முன்னாள் ராணுவத் தளபதி வி.கே.சிங், பணம் கொடுக்கப்பட்டது உண்மைதான் என்று ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் அது ஆட்சியைக் கவிழ்க்க கொடுக்கப்படவில்லை. மாறாக சமூக நலத்திற்காக கொடுக்கப்பட்ட பணம் என்றும் அவர் விளக்கியுள்ளார். ராணுவத்தின் ரகசிய நிதியிலிருந்து இது கொடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். தவறான நோக்கத்திற்கு இது பயன்படுத்தப்படவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். சமூக நலத் திட்டங்களுக்காக மட்டுமே இந்த நிதியிலிருந்து பணம் செலவிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நரேந்திர மோடியின் டெல்லி கூட்டம் ஒன்றில் நான் கலந்து கொண்டதால் என் மீது பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தப் பிரச்சினை கிளப்ப்பட்டுள்ள…
-
- 0 replies
- 547 views
-
-
டெல்லி: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் இன்று மாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து டெல்லியில் அதிர்வுகள் உணரப்பட்டது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் இன்று மாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகி உள்ளது. பலுசிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து மாலை 5.05 மணிக்கு டெல்லியில் அதிர்வுகள் ஏற்பட்டது. இதனால் டெல்லியில் உள்ள கட்டிடங்கள் லேசாக குலுங்கின. இந்த அதிர்வால் மக்கள் பீதி அடைந்தனர். மேலும் பலுசிஸ்தானில் பொருட் சேதமோ, உயிர் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை. மிகப் பெரிய நிலநடுக்கமாக இருப்பதால் பெருமளவில் சேதம் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. நிலத்துக்கடியில் 22 கி.மீ. ஆழத்தில் இந்தநிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது…
-
- 0 replies
- 228 views
-
-
மும்பை: மும்பையில் 40 வயது விதவைப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஒன்பது பேரில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள நான்கு குற்றவாளிகளைப் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மராட்டிய மாநிலம் சதாராவை சேர்ந்த 40 வயது விதவைப் பெண் ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு பிழைப்பு தேடி தனது 2 குழந்தைகளுடன் மும்பை வந்தார். மும்பையில், காகிதம், பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து விற்பனை செய்து வந்தார் அப்பெண். அப்போது, அப்பெண்ணிற்கு முலுண்டு அமர்நகரை சேர்ந்த டெம்போ டிரைவர் ஒருவருடன் ஏற்பட்ட அறிமுகத்தைத் தொடர்ந்து, அப்பெண் தன் இரு குழந்தைகளுடன் தினமும் இரவில் அவரது டெம்போவிலேயே உறங்கி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முந்தினம் வழக்கம்போல டெம்போவில் குழந்தைகளுடன் தூங்கிக்கொ…
-
- 2 replies
- 557 views
-
-
சுவிட்சர்லாந்தில் இத்தாலி மொழி பேசும் திசினோ மாநிலத்தில் பெண்கள் முகத்தை மூடி புர்கா அணிவதற்கு தடை விதிக்கப்பட உள்ளது. இதற்கென அம்மாநிலத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் புர்கா அணிவதற்கு தடைவிதிக்க வேண்டும் என 65 வீத மக்கள் வாக்களித்துள்ளனர். இதற்கு முஸ்லீம் அமைப்புக்களும் சர்வதேச மன்னிப்பு சபையும் கண்டனம் தெரிவித்துள்ளனர். குற்றத்தை புரிவோரும் புர்கா அணிந்து சென்று குற்றங்களை புரியலாம் என்றும் பொது இடங்களில் புர்கா அணிய தடைவிதிக்க வேண்டும் என்றும் அம்மாநில மக்கள் தெரிவித்துள்ளன. ஏற்கனவே பிரான்ஸ் பெல்ஜியம் ஆகிய நாடுகளில் புர்கா அணிவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. தற்போது சுவிட்சர்லாந்தின் 26 மாநிலங்களில் ஒன்றான திசினோ மாநிலம் புர்கா அணிவதற்கான தடை சட்டத்தை கொண்டுவர உள்ளது…
-
- 0 replies
- 357 views
-
-
சுவிட்சர்லாந்தில் கட்டாய இராணுவ சேவையை இரத்து செய்ய வேண்டுமா என நேற்று நாடு தழுவிய ரீதியில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இராணுவ சேவையை இரத்து செய்வதற்கு எதிராக 73 வீத வாக்குகளும் ஆதரவாக 27 வீத வாக்குகளும் கிடைத்துள்ளன. 26 மாநிலங்களிலும் நேற்று இத்தேர்தல் நடத்தப்பட்டது. சுவிட்சர்லாந்து குடிமக்களில் 18வயதிற்கும் 32 வயதிற்கும் இடைப்பட்ட ஒவ்வொருவரும் கட்டாய இராணுவ பயிற்சியை எடுக்க வேண்டும் என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது. இதனை இரத்து செய்ய வேண்டும் என்றும் கட்டாய இராணுவ சேவை நாடு முழுவதும் இராணுவ மயப்படுத்தப்பட்டிருப்பதற்கான தோற்றப்பாட்டை கொண்டிருப்பதாகவும் மனித உரிமை அமைப்புக்கள் சுட்டிக்காட்டி வந்தன. இராணுவ பயிற்சி பெற்றவர்கள் வீடுகளில் ஆயுதங்களை வைத்திருப்பதற்கும் இச்சட்டம…
-
- 0 replies
- 394 views
-
-
துப்பாக்கி வன்முறை நமக்கு வேண்டாம் என அமெரிக்க அதிபர் ஒபாமா நாட்டு மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். கடந்தவாரம் வாசிங்டன் கடற்படைத் தலைமைத் தளத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தார்கள். அவர்களின் குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் தெரிவித்த பின் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய போதே அமெரிக்க அதிபர் ஒபாமா இவ்வாறு தெரிவித்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=93551&category=WorldNews&language=tamil
-
- 2 replies
- 392 views
-
-
பெர்லின்: ஜெர்மனியில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று, ஏஞ்சலா மெர்கலின் மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார். ஜெர்மனியில் நேற்று நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தற்போதைய பிரதமர் ஏஞ்சலா மெர்கலின் கிறிஸ்டியன் ஜனநாயக யூனியன் கட்சிக்கும், எல்.பி.டி. கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. ஓட்டுப்பதிவில் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்துச் சென்றனர். பின்னர் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. அதில், மெர்கலின் கிறிஸ்டியன் ஜனநாயக யூனியன் கட்சி 42 சதவீதம் வாக்குகள் பெற்று முன்னிலை வகித்தது உறுதியானது. மெர்கலினை எதிர்த்து போட்டியிட்ட எல்.பி.டி. கட்சிக்கு 26 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. இதுவரை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளின் படி மெர்க…
-
- 0 replies
- 496 views
-
-
திருச்சி: திருச்சியில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த பாஜக பேனர்களில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் போட்டோ மட்டும் கிழிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் பாஜக மாநாட்டில் பங்கேற்க பலர் விண்ணப்பித்து வருகின்றனர். இதுவரை ஆன்லைனில் மட்டும் 30,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். இது தவிர விண்ணப்பங்கள் மூலம் சுமார் 1 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் திருச்சியில் மோடிக்கு எதிராக ஆங்காங்கே போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் போலீசாரைக் கேட்டுக் கொண்டார். இதற்கிடையே திருச்சியில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த பிரமாண்ட பேனர்களில் மோடியின் …
-
- 0 replies
- 562 views
-
-
கென்யாவின் தலைநகர் நைரோபியில் பொதுமக்கள் பலரை இஸ்லாமியவாத ஆயுததாரிகள் பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ள அங்காடி வளாகத்தில், முற்றுகையை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் கென்யாவின் பாதுகாப்பு படைகள் தாக்குதல்களை நடத்திவருகின்றனர். கடுமையான துப்பாகிச் சத்தம் கேட்டுவருவதாக சம்பவ இடத்திற்கு அருகிலுள்ள பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறுகிறார். வர்த்தக வளாகத்தில் இருந்து புகை கிளம்புகிறது கென்யாவின் விமான நிலையம் ஒன்றில் பயணிகள் சிலரை விசாரணைக்காக தடுத்துவைத்துள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.கட்டிடத்திலிருந்து புகை கிளம்புவதை தொலைக்காட்சிப் படங்கள் காட்டுகின்றன. கென்யத் துருப்பினர் டஜன் கணக்கில் இந்த வர்த்தக வளாகத்தில் நுழைந்திருந்தனர். பணயக் கைதிகளைக் கா…
-
- 0 replies
- 383 views
-
-
ஆர்பிஐ-யின் புதிய கவர்னர் ரகுராம் ராஜன் அண்மையில் வெளியிட்ட அறிவிப்புக்களைத் தொடர்ந்து , வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ), கடந்த 8 வர்த்தக தொடர்களில் 1 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை கொள்முதல் செய்துள்ளதாக டச் வங்கி தனது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உலக நிதி நெருக்கடியின் காரணமாக, நாட்டில் எஃப்ஐஐ அவுட்ஃபுளோஸ் தீவிரமாக இருந்து வந்த நிலையில், ஜூன் முதல் ஆகஸ்ட் வரை காணப்பட்ட வெளியேற்றங்களில் 25 சதவிகிதத்தை எஃப்ஐஐகள் ஈடுசெய்துள்ளனர் என முக்கிய உலக நிதி சேவைகள் மூலமாக தெரியவந்துள்ளது. ஜூன் மற்றும் ஆகஸ்ட் இடையே இந்தியாவில் காணப்பட்ட 4 பில்லியன் டாலர் எஃப்ஐஐ அவுட்ஃபுளோ, ஒரு சரணடையும் அச்சநிலைக்கு வழிவகுத்தது என டச் வங்கி தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது. "ஆர்…
-
- 0 replies
- 364 views
-
-
லக்னோ: உத்தரபிரதேசத்தில் ஆட்டோவில் சென்ற அமெரிக்க மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் துலியாகன்ஜ் பகுதியில் சென்று கொண்டிருந்த ஆட்டோ ஒன்றில் அமெரிக்காவை சேர்ந்த மாணவி ஒருவர் தனியாக பயணம் செய்துக்கொண்டிருந்தபோது, ஆட்டோ டிரைவர் தனது இரண்டு நண்பர்களுடன் இணைந்து அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். உதவி கேட்டு கூச்சல் போட்டுள்ளார் அப்பெண். ஆனால், அவரது சத்தம் வெளியே கேட்காத வண்ணம் ரேடியோவின் சத்தத்தை அதிகப்படுத்தியுள்ளனர் குற்றவாளிகள். கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் அப்பெண்ணை அவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். இந்த காமுகர்கலிடம் இருந்து தப்பிக்க எண்ணிய அம்மாணவி, குவைசர்பாக் என்னும் பகுதிக்கு …
-
- 0 replies
- 421 views
-
-
டெல்லி: நாட்டில் மதவாதத்தைத் தூண்டி விட்டு குளிர் காயும் விஷ சக்திகளை மாநில அரசுகள் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். டெல்லியில் இன்று தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டு பிரதமர் மன்மோகன் சிங் ஆற்றிய உரையிலிருந்து சில பகுதிகள்... மதக் கலவரங்களை ஒடுக்குவதில்தான் மாநில அரசுகள் முன்னுரிமை கொடுத்து செயல்பட வேண்டும். மத வாத சக்திகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். அவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். அவர்கள் எந்த அரசியல் இயக்கத்துடன் தொடர்புடையவர்களாக இருந்தாலும் அதைக் கவனத்தில் கொள்ளாமல் ஒடுக்க வேண்டும். முஸாபர் நகரில் நடந்த கலவரத்தில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 100க்கும் …
-
- 0 replies
- 250 views
-
-
கென்னியாவின் தலைநகர் நெய்ரோபியிலுள்ள பிரபல பல்பொருள் அங்காடியினுள் புகுந்த ஆயுததாரிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 20இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. நெய்ரோபியிலுள்ள பல்பொருள் அங்காடிக்குள் புகுந்த ஆயுததாரிகள் கொள்ளையடிக்க முற்பட்டதாகவும், அதன் பின்னர் தீவிரவாத தாக்குதலாக அதனை மாற்றிக்கொண்டதாகவும் அந்நாட்டின் பாதுகாப்பு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். தற்சமயம் பல்பொருள் அங்காடியைச் சுற்றி பாதுகாப்பு பிரிவினர் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரியவருகிறது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-07-14-09-13-37/83167------20-.html
-
- 1 reply
- 371 views
-
-
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் ஞாயிறன்று கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் நடந்த இரட்டை தற்கொலை குண்டுத் தாக்குதலில் எண்பதுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் பல்வேறு ஊர்களிலும் கிறிஸ்தவ சமூகத்தார் ஆர்ப்பாட்டங்களை நடத்திவருகின்றனர். கிறிஸ்தவர்கள் கூடுதல் பாதுகாப்பு கோருகின்றனர் கிறிஸ்தவர்களுக்கு அரசாங்கம் மேம்பட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அவர்கள் குரலெழுப்புகின்றனர். பாகிஸ்தானின் அரசியல் தலைவர்களும் மத தலைவர்களும் குண்டுத் தாக்குதலைக் கண்டித்திருந்தனர்.தலைநகர் இஸ்லாமாபாத்தில் முக்கிய நெடுஞ்சாலை ஒன்றில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பல மணி நேரம் மறியல் போராட்டம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. கிறிஸ்தவர்கள் கூடுதல் பாதுகாப்பு கோருகின்றனர் அந்நாட்டின் …
-
- 0 replies
- 349 views
-
-
கென்யாவின் தலைநகர் நைரோபியில் பொதுமக்கள் பலரை இஸ்லாமியவாத ஆயுததாரிகள் பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ள அங்காடி வளாகத்தில், மறுபடியும் மறுபடியும் துப்பாக்கிகள் வெடித்தபடி உள்ளன, பல தடவை பெரிய வெடிச் சத்தங்களும் கேட்டுள்ளன. நிறைய பேருடைய கதி பற்றி இன்னும் விவரம் இல்லை. இந்த கடை வளாகத்தில் நடந்த வன்முறையில் குறைந்தது 69 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், வேறு 63 பேர் இன்னும் கணக்கில் வராமல் உள்ளனர் என்றும் செஞ்சிலுவைச் சங்கம் கூறுகிறது. முற்றுகையை முடிவுக்கு கொண்டுவர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும், அம்முயற்சிகளின்போது பணயக் கைதிகளின் உயிகளைப் பாதுகாக்க மிக அதிகமான முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும் கென்யாவின் இராணுவம் முன்னதாகக் கூறியிருந்தது. சொமாலியா…
-
- 0 replies
- 374 views
-