Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஈரானில் சுமார் 2000கி.மீ தூரம் சென்றுத் தாக்கும் 30 ஏவுகணைகளைன் அணிவகுப்பு நடத்தப்பட்டது. இது ஈரானை தாக்க நினைக்கும் பிற நாடுகளுக்கு கொடுக்கப்பட்ட எச்சரிக்கை மணி போல் இருந்தது.ஈரான் நாட்டில் அணுஆயுதங்கள் அதிகளவில் சேமிக்கப்படுவதாக மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து அந்நாட்டின் மீது குற்றம் சாட்டி வருகின்றன. அதனைத் தொடர்ந்து அமெரிக்காவும் ஈரான் மீது சில பொருளாதாரத் தடைகளை அமல் படுத்தியது. இஸ்ரேலும் தன் பங்கிற்கு ஈரான் மீது தாக்குதல் நடத்தப்போவதாக எச்சரித்து வருகிறது.ஆனால், தன் மீது குறை கூறும் அண்டை நாடுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆக்க வழிகளில் பயன்படுத்தவே அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதாக கூறிவருகிறது ஈரான். இந்நிலையில் 1980-1988 ஆண்டு வரை ஈரான்-ஈராக்கிடையே …

  2. செவ்வாய் கிரகத்துக்கு இந்தியா விடும் முதல் ஆய்வுக் கோள் வரும் அக்டோபர் 28 ஆம் தேதியன்று விண்ணில் ஏவப்படும் என்று இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. செவ்வாய் கிரகம் செவ்வாய் கிரகத்துக்கு செல்லுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள மங்கள்யான் செயற்கைக்கோள், தற்போது இறுதிகட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் குறித்து ஆய்வு செய்த நிபுணர் குழு, வரும் அக்டோபர் மாதம் 28 ஆம் தேதிக்கும் நவம்பர் மாதம் 19 ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தலாம் என்று முடிவெடுத்துள்ளதாக விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தேவிப் பிரசாத் கார்னிக் தமிழோசையிடம் தெரிவித்தார். வானிலை சீராக இருந்தால் அக்டோபர் 28 ஆம் தேதி இந்தக் கோ…

  3. டுனிஸ்: வட ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு துனிஷியா. துனிஷிய இளைஞர்கள் சிரிய ராணுவத்தை எதிர்த்து போராடும் புரட்சிபடைக்கு ஆதரவு தெரிவித்து அதில் இணைந்து வருகிறார்கள். சிரியாவில் அரசுக்கு எதிராக போராடி வரும் போராளிகளை சந்தோஷப்படுத்தவும், உடல் ரீதியாக உற்சாகம் ஏற்படுத்தவும் துனிஷியாவிலிருந்து பெருமளவில் பெண்கள் சிரியாவுக்கு போவதால் துனிஷிய அரசு தர்மசங்கடத்தில் ஆழ்ந்துள்ளது. இதைத் தடுக்க புதிய திட்டம் ஒன்றை அந்த நாட்டின் மகளிர் நலத்துறை வகுத்துள்ளதாம். செக்ஸ் ஜிஹாத் என்று இது வர்ணிக்கப்படுகிறது. போராளிகளுக்கு இன்பம் இது குறித்து அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இதுபோல துனிஷிய பெண்களை சிரியாவுக்குள் அனுப்பி அங்குள்ள போராளிகளுடன் உடல் ரீதியான உறவுகளை ஏற்படுத்த முயல்வோர் கட…

  4. பிரான்சில் தனது 3 வயது மகனுக்கு அணிவித்த டி சர்ட்டால் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அணிபவித்து வருகிறார் தாய் ஒருவர். பெட்ரோமாஸ் லைட்டே தான் வேனுமா..?, நான் பேஸ்புக்கில் இல்லை' என வித்தியாசமான வாசகங்கள் அமையப் பெற்ற டி சர்ட்களை அணிவது ஆண், பெண் என இரு பாலருக்குமே விருப்பமான ஒன்று தான். அந்தவகையில், பிரான்சு நாட்டில் தனது 3 வயது மகனுக்கு ‘நான் ஒரு வெடிகுண்டு' என எழுதப்பட்ட டி சர்ட்டை அணிவித்து பள்ளிக்கு அனுப்பிய காரணத்திற்காக அவனது தாயார் கைது செய்யப்பட்டுள்ளார் என்றால் விநோதமாகத் தானே இருக்கிறது. நான் ஒரு வெடிகுண்டு.... பிரான்ஸ் நாட்டில் வசித்து வரும் பவுச்ரா என்ற பெண்மணி தனது 3 வயது மகனான ஜிகாத்ஸ்க்கு ‘நான் ஒரு வெடிகுண்டு' என்ற வார்த்தையும், செப்டம்பர் 11 என்ற தேத…

  5. நடைபெற்ற தேர்தலின் மூலம், தமிழர்களுக்கு அரசியலில் முழு அதிகாரம் கிடைக்கும் என இந்திய மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார். மேலும், இந்தத் தேர்தல் அகதிகளாக உள்ள தமிழர்கள் மீண்டும் தாயகம் திரும்ப வாய்ப்பாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார். சிவகங்கையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கை அரசியல் சாசனப்படி, ராஜீவ்-­ ஜெயவர்தன ஒப்பந்தப்படி 25 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கையின் வடக்கு பகுதியில், தேர்தல் நடைபெற்றுள்ளது. இதன்மூலம், இலங்கையில் தமிழர்கள் 37 பேருக்கு அரசியல் அதிகாரம் கிடைக்கும். இதன்மூலம் தமிழர்கள் தங்களது உரிமைகளை நிலைநாட்ட மு…

  6. சென்னை: தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க இலங்கை-தமிழக மீனவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யக் கோரி முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது, தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் தாக்குவதையும், கைது செய்வதையும் தடுக்கும் வகையில் தமிழக மற்றும் இலங்கை மீனவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதற்காக நான் தங்களுக்கு கடிதம் எழுகிறேன். கடந்த சில வருடங்களாக தமிழக மீனவர்களை தாக்குவது மற்றும் கைது செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. பாக்ஜலசந்தி தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன் பிடிக்கும் பகுதியாகும். ஆனால் அதை தடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடந்து வருக…

  7. பெஷாவர்: பாகிஸ்தானில் இரு இடங்களில் தேவாலயங்களை தற்கொலைப்படையினர் தாக்கியத்தில் 45க்கும் அதிகமானோர் பரிதாபமாகப் பலியானார்கள். இன்று ஞாயிற்றுக்கிழமையாகையால், கிறிஸ்தவர்கள் தேவாலயங்களுக்கு பிரார்த்தனை செய்ய செல்வது வழக்கம். அந்த வகையில், பாகிஸ்தான் பெஷாவர் நகர் கீசா கவானி பஜாரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் இன்று 600 பேர் பிரார்த்தனையில் ஈடுபட்டு வந்தனர். பின்னர், பிரார்த்தனை முடிந்து மக்கள் தேவாலயத்தை விட்டு வெளியே வந்தபோது அவர்களை குறிவைத்து இரு இடங்களில் தற்கொலைப்படையினர் தாக்குதல் நடத்தினர். இக்கொடூரத் தாக்குதலில் சிக்கி சுமார் 45 பேர் பலியானார்கள். படுகாயமடைந்த 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப் பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, அங்கு உடனடிய…

  8. இந்திய இலங்கை மீனவர்கள் தாங்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து டிசம்பரின் சென்னையில் பேச்சுவார்த்தைகளை நடத்தலாம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். தமிழக முதலவர் ஜெ ஜெயலலிதா இருநாட்டு மீனவர்களும் கடல் எல்லையில் சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு முடிவு காணும் வகையில் அவர்களிடையே எதிர்வரும் டிசம்பரில் சென்னையில்பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு உதவவேண்டும் என அவர் கோரியிருக்கிறார். பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அவர் எழுதியுள்ள கடிதமொன்றில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் 36 தடவை இலங்கை ராணுவம் தமிழக மீனவர்களை தாக்கியுள்ளது என்றும், 254 மீனவர்களை கைது செய்யப்பட்டு இருக்கின்றனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போதும் 97 தமிழக மீனவர்கள் இலங்கை ஜெயிலில் பல மாதங்…

  9. அகமதாபாத்: நாட்டின் பிரதமராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு 55% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு 18% மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளதாக டைம்ஸ் நெளவ் தொலைக்காட்சி மற்றும் சி வோட்டர்ஸ் சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து டைம்ஸ் நெளவ் தொலைக்காட்சி, சி வோட்டருடன் இணைந்து கருத்துக் கணிப்பு ஒன்றை மேற்கொண்டது. இந்தக் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: யார் சிறந்த பிரதமர் வேட்பாளர்? நரேந்திர மோடி- 55% மன்மோகன்சிங் - 3% ராகுல் காந்தி- 18% சுஷ்மா ஸ்வராஜ் - 2% மோடி என்றாலே நினைவுக்கு வருவது? வளர்ச்சி - 69% 2002 வன்முறை - 15% மோடியால் மட்டும் 2…

  10. வெங்காய விலை மீண்டும் உச்சத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு கிலோ 15 ரூபாய்க்கு விற்ற பெரிய வெங்காயம் சமீபத்தில் 60 ரூபாய் ஆனது. தற்போது தரமான வெங்காயம் கிலோ ரூ.75 முதல் ரூ.80 வரை விற்கப்படுகிறது. வெங்காய விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. என்றாலும் அதற்கு பெரிய அளவில் பலன் கிடைக்கவில்லை. தொடர்ந்து விலை ஏறுமுகமாகவே உள்ளது. தீபாவளி நெருங்கும் நிலையில் பெரும் வியாபாரிகள் அதிக லாபம் சம்பாதிப்பதற்காக வெங்காயத்தை பதுக்கி வைத்திருக்கிறார்கள். எனவே விலை உயருகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது.வெங்காய உற்பத்தி குறைந்து விட்டது. மழை காரணமாக வெங்காய அறுவடை தாமதமாகிறது. எனவே விலை உயருகிறது என்றும் கூ…

  11. இஸ்லாமாபாத்: தலிபான் தீவிரவாத இயக்கத்தின் மூத்த தலைவரான முல்லா அப்துல் ஹானி பராதரை பாகிஸ்தான் விடுதலை செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் பராதரை விடுவிக்கவில்லை என்று பாகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சகம் மறுத்துள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு கராச்சியில் பாகிஸ்தான் போலீசாரால் கைது செய்யப்பட்டார் பராதர். இதைத் தொடர்ந்து அவர் கடந்த 3 ஆண்டுகாலமாக சிறையில் இருந்து வருகிறார். தற்போது தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆப்கானிஸ்தான் அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்காக பராதரை விடுதலை செய்யுமாறு ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய், பாகிஸ்தானை கேட்டுக் கொண்டார். இந்நிலையில் பாகிஸ்தான் அரசு பராதரை இன்று விடுதலை செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் பாகிஸ்தான் வெளியுறவு அம…

  12. நியூயார்க்: அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளிடையேயான 34 ஆண்டுகால விரிசலுக்கு முற்றுப் புள்ளி வைக்கக் கூடிய வகையில் இருநாட்டு அதிபர்களும் நியூயார்க் நகரில் சந்தித்துப் பேச உள்ளனர். ஈரான் ரகசிய அணு உலை மூலம் ஆயுதம் தயாரிப்பதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால் மின்சார உற்பத்தி திட்டத்திற்கு மட்டுமே அணு உலைகளை பயன்படுத்துகிறோம் என்பது ஈரானின் பதில். இதை ஏற்க அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் மறுக்கின்றன. இதனால் ஈரான் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறது. அங்கிருந்து கச்சா எண்ணெய் வாங்கவும் சீனா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஈரான் நாட்டின் புதிய அதிபராக ஹசன் ரப்பானி பதவி ஏற்ற பிற…

  13. டெல்லி: இருபிரிவினரிடையே மோதல் ஏற்பட்ட முசாபர்நகருக்கு செல்ல இருந்த பாஜக தலைவர் ராஜ்நாத்சிங்கின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருப்பதால் அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று ராஜ்நாத்சிங் வலியுறுத்தியுள்ளார். உத்தரப்பிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் கடந்த 7-ந்தேதி இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் 50 பேர் கொல்லப்பட்டனர். 40 ஆயிரம் பேர் அகதிகளாயினர். இதனால் உத்தரப்பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முசாபர் நகர் பகுதியை பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் இன்று பார்வையிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மாநில அ…

  14. டெல்லி: பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் இடம்பெற இருப்பதாக கூறப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கு தேசம் கட்சி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்தது. பின்னர் அதில் இருந்து வெளியேறியது. இந்த நிலையில் இன்று தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு டெல்லியில் ராஜ்நாத்தை சந்தித்துப் பேச இருக்கிறார். இந்த சந்திப்பின் போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெறுவது குறித்து ஆலோசிக்கப்படலாம் என்கிறது பாஜக வட்டாரங்கள். ஆனால் தெலுங்கு தேசம் கட்சியினரோ, தெலுங்கானா விவகாரம் தொடர்பாக மட்டுமே பாஜக தலைவர் ராஜ்நாத்தை சந்திரபாபு சந்திக்க இருக்கிறார் என்று கூறுகின்றனர். குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பாஜக பிரதமர் வேட்பாளரா…

  15. ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் பிரமுகர்கள் மீது அடுத்தடுத்து பலாத்கார புகார்கள் எழுந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ. உதய்வால் அஞ்சானா பாலியல் பலாத்கார புகாரில் சிக்கியுள்ளார். ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசில் அமைச்சராக இருந்த பாபுலால் நாகர் மீது பலாத்கார புகார் எழுந்தது. அவர் மீதான புகாரை போலீஸ் பதிவு செய்ய மறுத்தது. இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றப் படிகளேறினார். இதனால் நீதிமன்ற உத்தரவுப்படி பாபுலால் நாகர் மீது போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதைத் தொடர்ந்து பாபுலால் நாகர் தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் ராஜஸ்தான் காங்கிரஸ் எம்.எல்ஏ. உதய்வால் அஞ்ச…

  16. ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக அல்கொய்தா அமைப்பு தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள சில பகுதிகளையும் அவர்கள் கைப்பற்றியுள்ளனர். அதேசமயம் ஏமனுக்கு உதவி செய்து வரும் அமெரிக்கா ஆளில்லா விமான தாக்குதல் மூலம் அல்கொய்தா அமைப்பினை அழித்து வருகிறது. இந்நிலையில் தெற்கு ஏமனில் உள்ள ராணுவ முகாம்களை குறிவைத்து அல்கொய்தா தாக்குதல் நடத்தினர். அல்-நஷாமாவில் உள்ள முகாமில் இரண்டு கார் குண்டுகள் வெடித்ததில் 48 வீரர்கள் உடல் சிதறி இறந்தனர். மேபாவில் உள்ள முகாமில் இன்று அதிகாலையில் துப்பாக்கியுடன் புகுந்தவர்கள் சரமாரியாக சுட்டதில் 8 வீரர்கள் கொல்லப்பட்டனர். அரேபிய தீபகற்பத்தை சேர்ந்த அல்கொய்தா அமைப்பினர் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித…

  17. அரபிக்கடலில் மீன் பிடிப்பதற்காக இந்திய மீனவர்கள் படகுகளில் சென்றனர். அப்போது பாகிஸ்தான் கடற்படையினர் இந்திய மீனவர்களின் 9 படகுகளை சுற்றி வளைத்தனர். தங்கள் நாட்டு எல்லைக்குள் நுழைந்ததாக கூறி 58 மீனவர்களை கைது செய்தனர். 9 படகுகளையும் கைப்பற்றி கொண்டு சென்றனர். இந்த தகவலை பாகிஸ்தான் பாதுகாப்புப்படை கமாண்டர் முகமது பரூக் தெரிவித்தார். ஏற்கனவே பாகிஸ்தான் ஜெயில்களில் இந்தியாவை சேர்ந்த 450�க்கும் மேற்பட்ட மீனவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 337 பேர் சமீபத்தில் விடுதலை ஆகி இந்தியா திரும்பினார்கள். கராச்சி ஜெயிலில் இன்னும் ஒரு சிறுவன் உள்பட 97 பேர் கைதிகளாக இருக்கிறார்கள். http://www.seithy.com/breifNews.php?newsID=93362&category=WorldNew…

  18. உலகின் தோற்கடிக்க முடியாத மன்னர்களில் ஒருவராக திகழ்ந்தவர் மாவீரன் அலெக்ஸாண்டர். இவர் கி.மு. 323 இல் தனது 32 ஆவது வயதில் காலமானார். இக் காலப்பகுதியில் எகிப்து, பேர்ஷியா, ஆசியாவையும் கைப்பற்றியிருந்தான். கி.மு.323-ல் ஜூன் 10 அல்லது 11 ஆம் திகதி பாபிலோனில். இருப்பினும் இவரது மரண திகதி மற்றும் மரணத்திற்கான காரணம் தொடர்பில் பல விவாதங்கள் இன்றும் இடம்பெற்ற வண்ணமே உள்ளன. இந்நிலையில் பேரரசன் அலெக்ஸாண்டரின் கல்லறையை கண்டுபிடித்துள்ளதாக ஆராய்ச்சிகள் தெரிவித்துள்ளனர். கிறீஸ் நாட்டின் எதேன்ஸ் நகரிலிருந்து வடக்கே 370 மைல் தொலைவில் இக் கல்லறை அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆரம்பத்தில் அலெக்ஸாண்டரின் கல்லறை எகிப்திலேயே உள்ளதாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நி…

  19. அல்கொய்தா தீவிரவாத இயக்கத்துடன் இணைந்து இந்தியா மீது தாக்குதல் நடத்த இந்தியா முஜாகிதீன் இயக்க தலைவர் யாசின் பட்கல் திட்டமிட்டது அம்பலமாகியுள்ளது. புனே ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு குண்டுவெடிப்பு வழக்குகளில் தேடப்பட்டு வந்த யாசின் பட்கல் மற்றும் அவனது கூட்டாளி அசதுல்லா அக்தர் ஆகிய இருவரும் இந்திய நேபாள எல்லையில் தேசிய புலனாய்வு அமைப்பால் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட வந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. தற்போது அல்கொய்தா இயக்கத்தை வழிநடத்த வரும் ஜவாகிரியுடன் யாசின் பட்கல் தொடர்பில் இருந்தது வந்தது தெரியவந்துள்ளது. இந்தியாவில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி அமைதியை குலைக்க அல்கொய்தாவின் உதவியை யாசின் பட்கல் நாடியதை…

  20. வரும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்காக "சோ" அறிவித்த மெகா திட்டத்திற்கு ஜெயலலிதா இன்னும் பாஸிட்டாவ்வான பதில் கொடுக்காத நிலையில் ரஜினிகாந்த் தனது அடுத்தகட்ட நடவடிக்கையை ஆரம்பித்துவிட்டதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து மோடியிடம் டெலிபோனில் பேச்சு நடத்திய ரஜினிகாந்த், அவருடைய பாஸிட்டிவ்வான பதிலை கேட்டு பெரும் திருப்தியில் இருக்கின்றாராம். விஜயகாந்த் போல தனிக்கட்சி ஆரம்பித்தால் பணமும் பெருமளவில் செலவாகும், அதே நேரத்தில் அரசியல்வாதிகள் தனிமனித அறிக்கை தாக்குதல் நடத்தினால் பெரும் சங்கடத்தில் தவிக்க வேண்டும் என எண்ணிதான் இவ்வளவு நாளாக அரசியல் பக்கம் எட்டிப்பார்க்காமல் இருந்தார் ரஜினி. ஆனால் தற்போது ஒரு பாதுகாப்பான தேசிய கட்சியில் இணைவதால், பணப்பிர…

  21. மாவோயிஸ்டுகள் திரவ ரசாயன ஆயுதங்கள் மூலம் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக ஜார்க்கண்ட் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிஷா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மேற்குவங்கம், பீகார், அசாம் என பல மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் கை ஓங்கி இருக்கிறது. மத்திய அரசுக்கு எதிராக பழங்குடி இன மக்கள் ஆதரவுடன் தாக்குதல் நடத்தி வருகின்றனர் மாவோயிஸ்டுகள். இம்மாநிலங்களின் மலைகளும் வனப்பகுதியும் பழங்குடி மக்களும்தான் மாவோயிஸ்டுகளுக்கு பக்க பலமாக இருந்து வருகின்றன. மாவோயிஸ்டுகள் நவீன ஆயுதங்களை வெளிநாடுகளில் இருந்து பெற்றிருப்பது பலமுறை வெளிச்சத்துக்கு வந்தது . தற்போது அவர்களிடம் ரசாயன ஆயுதங்கள் இருப்பதாக ஜார்க்கண்ட் மாநில போலீஸ் செய்தித் …

  22. திருச்சி விமான நிலையத்திலிருந்து, கோலாலம்பூருக்கு புறப்பட்ட ஏர் - ஏசியா விமானத்தின், வலது பக்க இன்ஜின் மீது, பறவை மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து, நேற்று மாலை, 4:30 மணிக்கு, ஏர் - ஏசியா விமானம், மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு 124 பயணிகளுடன் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, விமானத்தின் வலது பக்க இன்ஜின் மீது, பறவை ஒன்று மோதியது. அதிர்ச்சியடைந்த விமானி, விமானத்தை தரையிறக்க முடிவு செய்து, விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு, தகவல் தெரிவித்தார். கட்டுப்பாட்டு அறையிலிருந்து தரையிறக்க, "சிக்னல்' கிடைக்க தாமதமானதால், நடு வானிலேயே விமானம் வட்டமிட்டது. ஒரு மணி நேரம் வானில் வட்டமிட்ட விமானம், 5:30 மணிக்கு தரையிறக்கப்பட்டு, வி…

  23. நைஜீரியாவில் ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே உண்டான மோதலில் 150 தீவிரவாதிகளும், 16 ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும் 9 ராணுவ வீரர்களைக் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் அரசுக்கு எதிராக பல்வேறு தீவிரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஒரு பிரிவான போக்கோஹராம் என்ற தீவிரவாத அமைப்பு காபியா காட்டு பகுதியில் முகாம் அமைத்து தங்கி இருந்தனர். கடந்த வாரம் அந்த இடத்தை ராணுவத்தினர் சுற்றி வளைத்தனர். அதனைத் தொடர்ந்து ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 150 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், ராணுவ வீரர்கள் 16 வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் …

  24. பீஜிங்: சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள மாகாணங்களில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.1-ஆக பதிவாகியுள்ளது. அங்குள்ள கன்சூ மற்றும் கிங்காய் மாகாணங்களில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 5:37 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் சுமார் 12 நொடிகள் நீடித்துள்ளது. இதனால் வீடுகள் குலுங்கின. பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். நிலநடுக்கத்தையடுத்து கன்சூ மற்றும் கிங்காய் ஆகிய பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். மீட்புப் படையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் பற்றிய தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. http://tamil.…

  25. டெல்லி: இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பு அல் கொய்தாவுடன் கைகோர்க்க திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு பயங்கர தீவிரவாத அமைப்பான அல் கொய்தாவுடன் கைகோர்த்து செயல்பட திட்டமிட்டுள்ளது. அல் கொய்தா தலைவர் ஜவாஹிரி ஜிகாத் பற்றி சில குறிப்புகளை அளித்த சில நாட்களில் இந்தியன் முஜாஹிதீன் இப்படி திட்டமிட்டுள்ளது. இரு தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையே விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகவிருக்கிறதாம். இந்தியன் முஜாஹிதீன் அல் கொய்தா இந்தியாவில் செயல்பட உதவி செய்யுமா அல்லது அந்த அமைப்போடு தன்னை இணைத்துக் கொள்ளுமா என்பது விரைவில் தெரிய வருமாம். இந்தியன் முஜாஹிதீனின் இந்த திட்டம் பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ-ஐ எரிச்சல் அடைய வைத்துள்ளதாம். இந்தியன் முஜாஹ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.