Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. வணக்கம் AUSTRALIA உறவுகளே....... நாம் ஆவலுடன் எதிர்பாத்திருந்த பொது தேர்தல் வருகின்ற சனிக்கிழமை நடைபெற இருக்கின்றது......... ஆறு வருடங்கள் ஆட்சியில் இருந்த தொழில் கட்சியும் 2007 இல் ஆட்சியை பறி கொடுத்த லிபரல் கட்சியும் பிரதான கட்சிகளாக மோது கின்றன..... 2007 இல் பதவியில் அமர்ந்த தொழில் கட்சியானது பல குளறுபடிகள் இருந்த ஆட்சியாக அமைந்து மக்களின் தீர்ப்பிற்காக காத்து இருகின்றது...... இரண்டு கட்சிகளுமே ஒருவரை ஒரு குற்றம் சாட்டியும் வாக்குறுதிகளை அள்ளி வழங்கியும் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட வண்ணம் இருகின்றார்கள் ஏகப்பட்ட கடன் சுமை கட்டுகடங்காத அகதிகளின் வருகை என்று அடுத்து ஆட்சி அமைக்க போகின்றவர்கள் முன்னாள் பாரிய பணி இருகின்றது......... அகதிகளின் …

    • 50 replies
    • 4.3k views
  2. ஜப்பானில் கடைசி அணுமின் உலையும், மூடப்பட்டது. டோக்கியோ: ஜப்பான் நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கடைசி அணுமின் உலை, பராமரிப்பு ஆய்விற்காக இன்றுடன் மூடப்பட உள்ளது. அணுசக்திக்கு எதிரான பொதுமக்களின் எதிர்ப்பினால் இது மீண்டும் திறக்கப்படுவது குறித்து அறிவிக்கப்படவில்லை. ஜப்பான் நாட்டில் கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட சுனாமியால் பியூகுஷிமா அணுமின் உற்பத்தி நிலையத்தில் கடல் நீர் உள்ளே புகுந்து அணுகதிர் வீச்சு ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக ஜப்பான் நாட்டு மக்கள் அணுஉலையை மூட வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் குதித்தனர். மக்கள் போராட்டம் காரணமாக அணு உலைகளை மூட தேவையான நடவடிக்கைகளை ஜப்பான் தொடங்கியது. அங்கு 50க்கும் மேற்பட்ட அணுமின் ந…

  3. டெல்லி: டெல்லியில் பாஜகவின் தலைமையகத்தில் நடைபெற்ற அக்கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் வரும் 2014ம் ஆண்டுக்கான பாஜகவின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மூத்த தலைவரான எல்.கே. அத்வானி இக் கூட்டத்தை புறக்கணித்தபோதும், அவரை புறக்கணித்துவிட்டு இந்த அறிவிப்பை பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். இந்த அறிவிப்பையடுத்து நரேந்திர மோடிக்கு ராஜ்நாத் சிங், பாஜக முன்னாள் தலைவர் நிதின் கட்காரி, மூத்த தலைவர்கள் அருண் ஜேட்லி, வெங்கைய்யா நாயுடு, அனந்த் குமார், முதலில் மோடிக்கு எதிர்ப்புத் தெரிவித்த சுஷ்மா ஸ்வராஜ், முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் மலர்ச்செண்டு கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தனர். அப்போது ஜோஷியின் காலி…

  4. டெல்லி: பாஜகவிலிருந்து தூக்கப்பட்டு விட்டமூத்த தலைவரும், பிரபல வழக்கறிஞருமான ராம் ஜேத்மலானி நரேந்திர மோடிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். மேலும் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் போட்டியில் மோடியே வெல்வார் என்றும் அத்வானியால் தனக்குத் தேவையான ஆதரவைத் திரட்ட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து ஜெத்மலானி கூறுகையில், பிரதமர் வேட்பாளருக்கு மோடிதான் பொருத்தமானவர், சரியானவர். அவர் ஒரு அவதாரம் போன்றவர். நிதர்சனம் புரிந்து நடக்க அத்வானி முன்வர வேண்டும்.அவரால் தேவையான ஆதரவைப் பெற முடியாது. பிரதமர் வேட்பாளர் போட்டியில் மோடியே வெல்வார். அத்வானியால் வெல்ல முடியாது. http://tamil.oneindia.in/news/india/modi-is-the-best-option-bjp-s-pm-cadidate-advani-183336.html

  5. வாஷிங்டன்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மீதான விசா கொள்கையில் மாற்றம் இல்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி முறைப்படி நேற்று அறிவிக்கப்பட்டார். எனினும் மோடிக்கு விசா கொள்கையில் மாற்றம் இல்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க மாநில துறை செய்தி தொடர்பாளர் மேரி ஹார்ப், அமெரிக்காவின் நீண்ட கால விசா கொள்கையில் எவ்வித மாற்றமும் இருக்காது. மோடி மற்ற விண்ணப்பதாரர் போன்று விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். அதனை நாங்கள் வரவேற்கிறோம். அவரது விண்ணப்பம் ஆய்வு செய்யப்படும் என மேலும், ஆய்வு முடிவுகள் என்னவாக இருக்கும் என்பது குறித்து தற்போது நான் எதுவும் பேச…

  6. வளைகுடா நாடுகளுக்கு அடுத்தபடியாக உலகிலேயே மிகப் பெரிய எண்ணெய் படுகையில் கச்சா எண்ணெய் உற்பத்தி கடந்த திங்கள்கிழமை தொடங்கியுள்ளது. இந்த எண்ணெய் படுகை சோவியத் யூனியனில் இருந்து தனி நாடான கஜாகிஸ்தானின் அருகே கேஸ்பியன் கடலில் உள்ளது. கஸாகான் ஆயில் பீல்ட் என பெயரிடப்பட்டுள்ள இந்தப் பகுதியில் 13 பில்லியன் பேரல்கள் அளவுக்கு கச்சா எண்ணெய் இருப்பதாகத் தெரிகிறது. உலகிலேயே தரைப்பகுதிக்குள் அமைந்துள்ள மாபெரும் தண்ணீர் மண்டலம் (371,000 சதுர கி.மீ. பரப்பளவு) தான் கேஸ்பியன் கடல். இதை கடல் என்றும் அழைக்கிறார்கள். உலகின் மாபெரும் ஏரி என்றும் சொல்கிறார்கள். இந்த நீரின் உப்புத் தன்மை கடல் நீரின் உப்புத் தன்மையை விட 3ல் ஒரு மடங்கு குறைவாகவே உள்ளது. 30 ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட மாபெர…

  7. டெல்லி பலாத்கார குற்றவாளிகளுக்கு தூக்கு: கொந்தளிக்கும் குற்றவாளிகளின் வக்கீல் Friday, September 13, 2013, 16:23 [iST] டெல்லி: டெல்லி பாலியல் வல்லுறவு வழக்கின் தீர்ப்பு நியாயமானது இல்லை என்றும், அரசியல் தலையீட்டால் வழங்கப்பட்ட பாராபட்சமான தீர்ப்பு என்றும் 4 குற்றவாளிகளின் வழக்கறிஞர் ஏ.பி. சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் 16ம் தேதி ஓடும் பேருந்தில் 23 வயது பிஸியோதெரபி மாணவி பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட வழக்கில் மைனர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் மைனருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது. மீதமுள்ள 4 பேரில் பேருந்து டிரைவர் ராம் சிங் கடந்த மார்ச் மாதம் திகார் சிறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதையடுத்து மீதமுள்ள நான்கு ப…

  8. தாய்லாந்தின் மன்னரை, ஒரு தனிப்பட்ட உரையாடலில் அவதூறாகப் பேசினார் என்ற குற்றச்சாட்டில் சுமார் ஒரு வருட காலம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவரை நீதிமன்றம் ஒருவழியாக விடுதலை செய்திருக்கிறது. அரச குடும்பத்துக்கெதிரான அவதூறு-- தாய்லாந்து தேவையற்ற தீவிரம் ? இந்த குறிப்பிட்ட நபர் இவ்வாறு தனிப்பட்ட உரையாடல் ஒன்றில் அரசரைத் தவறாகப் பேசினார் என்று அவரது சகோதரர் புகார் செய்தாராம். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த இரு சகோதரர்களுக்கிடையேயும் நீண்ட காலமாக பெரிய சச்சரவுகள் இருந்திருக்கின்றன, எனவே இந்த சாட்சியம் நம்பத்தகுந்ததாக இருக்காது என்று கூறினார். இதற்கு முன்பு, அவரை ஜாமீனில் விடுதலை செய்ய சமர்ப்பிக்கப்பட்ட பல மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அரச குடும்பத்தினரை அவதூறு …

  9. இந்தோனேஷியத் தலைநகர் ஜாகர்த்தாவில் இருக்கும் தேசிய அருங்காட்சியகத்தில் இருந்து காணாமல் போயிருக்கும் நான்கு புராதன, தங்கக் கலைப்பொருட்களைக் கண்டுபிடிக்க சர்வதேச ஏல நிறுவனங்களிடம் இந்தோனேசிய போலிசார் உதவி கோரியிருக்கின்றனர். அருங்காட்சியகத்தின் பிரதான காட்சி அறைகளில் ஒன்றில் இருந்த கண்ணாடிப் பேழையில் இருந்த இந்தப் பொருட்களை அருங்காட்சியக ஊழியர்கள் திருடியிருக்கலாம் என்று அவர்கள் சந்தேகிக்கின்றனர். புராதன கலைப்பொருட்கள் திருட்டு மூன்று தங்கப் பலகைகளும், ஒரு தங்கப் பானையும் ஆன இந்தப் பொருட்கள் , இந்துக் கடவுள்களின் சக்தியைக் குறிப்பவையாகக் கருதப்படுகின்றன. இந்தப் பொருட்கள் ஜாவாவில் 11ம் நூற்றாண்டின் முதல் பகுதியில் நிலவிய இஸ்லாத்துக்கு முந்தைய நாகரிகத்தைச் சேர்ந்தவையாகும…

  10. பெங்களூர்: செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியா சார்பில் அனுப்பப்படும் விண்கலம் அடுத்த மாதம் விண்ணில் ஏவப்பட இருப்பதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழக உயர் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். நேற்று பெங்களூரில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழக (இஸ்ரோ) செயற்கைகோள் மைய இயக்குனர் சிவகுமார், இந்திய தொலை உணர்வு செயற்கைகோள் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாத்துரை, ‘மார்ஸ்' திட்ட இயக்குனர் அருணன் ஆகியோர் கூட்டாக பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள், இந்தியா சார்பில் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப் படும் விண்கலம், விண்ணில் ஏவப்படும் மாதம் குறித்து அறிவித்தனர். மேலும், இது குறித்து அவர்கள் கூறியதாவது.... ‘முதல்முறையாக இந்தியா வேற்ற…

  11. லண்டன்: ஆண்டுதோரும் மூன்றில் ஒரு பங்கு உணவு வீணாவதால், உலகில் தினமும் 87 கோடி மக்கள் பட்டினியால் அவதிப்படுவதாக ஐ.நா.சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. உணவுப் பொருட்களை வீணாக்காதீர்கள், தேவையான அளவு மட்டுமே சாப்பிடுங்கள் என எவ்வளவோ பிரச்சாரங்கள் மேற்கொள்ளப் படுகின்ற போதும், தயாரிக்கப்படுகின்ற உணவில் மூன்றில் ஒரு பங்கு வீணாவதாக இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. அப்படி வீணாகின்ற உணவின் காரணமாக, தினமும் 87 கோடி உலகமக்கள் பட்டினியால் அவதிப்படுவதாக பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளது இந்த நிறுவனம். http://tamil.oneindia.in/news/international/one-third-food-produced-globally-wasted-annually-183294.html

  12. டெல்லி: டெல்லியில் பாஜகவின் தலைமையகத்தில் நடைபெற்ற அக்கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தை மூத்த தலைவரான எல்.கே. அத்வானி புறக்கணித்துள்ளார். பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அக்கட்சி அறிவிக்க இருக்கிறது. தற்போது நடைபெறும் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இதற்கான இறுதி முடிவு எடுக்கப்படுகிறது. பாஜகவில் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க அத்வானி மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். கடந்த சில நாட்களாக அத்வானியை சமாதானப்படுத்த பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தீவிரம் காட்டியது. இதற்காக பாஜக முன்னாள் தலைவர் நிதின் கத்காரியை தூதராக நியமித்து பேச்சுவார்த்தையும் நடத்தியது. ஆனால் எந்த ஒரு பயனும் இல்லை. மோடியை பிரதமர் வேட்பாளராக்க தொடர்ந்த…

  13. புதுக்கோட்டை: இலங்கையில் தமிழர்கள் மிகவும் துயரப்படவில்லை.. நன்றாகவே வாழ்கின்றனர் என்று மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை அருகே மிரட்டுநிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சுதர்சன நாச்சியப்பன், கச்சத்தீவில் இந்தியா - இலங்கை இணைந்து தொழில் மையம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. கச்சத்தீவை இந்தியா கேட்டு பெறும் பட்சத்தில் இந்தியாவின் அனுபவத்தில் உள்ள இலங்கையின் ஆழ்கடல் பகுதியை நாம் இழக்க நேரிடும். இலங்கையில் தமிழர்கள் நன்றாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை வாழவைக்க பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை சென்று வர விரும்புகிறார். இலங்கையில் தமிழர்கள் துயரப்படவில்லை. நன்றாகவே வாழ்கிறார்கள். அதே போல தமிழக மீனவர்கள் மீது கடந்த 4 ஆண்டுகளாக இலங்…

  14. நோர்வேயில் 77 பேரைக் கொலை செய்த Anders Behring Breivik என்ற நபர் அந்நாட்டு பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானம் பயின்று வருகிறார். 2011ஆம் ஆண்டு குறித்த நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 77 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒஸ்லோ பல்கலைக்கழகம் அவருக்கு அனுமதி வழங்கியுள்ளது. Anders Behring Breivik ற்கு நோர்வே நீதிமன்றம் இருபத்து ஓராண்டு கால சிறைத்தண்டனை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Anders Behring Breivik தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றார். சிறையில் இருந்து கொண்டே Anders Behring Breivik அரசியல் பயில உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேரடியாக பல்கலைக்கழக விரிவுரையாளர்களை தொடர்பு கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது எனவும், ஒப்படைகளின் மூலமாக அரசியல் விஞ்ஞான பட்டப்பட…

    • 0 replies
    • 606 views
  15. மருத்துவ பரிசோதனைக்காக, அமெரிக்கா சென்றுள்ள, காங்கிரஸ் தலைவர் சோனியா, இந்த வார இறுதியில் நாடு திரும்புவார் என, காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.காங்கிரஸ் தலைவர் சோனியா, 2011ம் ஆண்டில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள, "ஸ்லோன் கேட்டரிங்' மருத்துவமனையில், சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள் ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இருந்தாலும், என்ன மாதிரியான பிரச்னைக்கு, அவருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்பது பற்றி தெரிவிக்கப்படவில்லை. ஸ்லோன் கேட்டரிங் மருத்துவமனை, புற்றுநோய் சிகிச்சைக்கு பெயர் பெற்றது என்பதால், புற்றுநோய் தொடர்பான சிகிச்சை, சோனியாவுக்கு அளிக்கப்பட்டுஇருக்கலாம் என, நம்பப்பட்டது. சமீபத்தில் முடிவட…

  16. பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் , பிரிட்டிஷ் படைகளில் ஏழாண்டுகள் பணியாற்றிய பின்னர், ராணுவப் பணியிலிருந்து ஓய்வு பெறவிருக்கிறார். அவர் பிரிட்டிஷ் விமானப்படையின் தேடுதல் மற்றும் மீட்புப் பணி விமானியாக தனது கடைசி பணி நாளை செவ்வாய்க்கிழமை முடித்தார். பிரிட்டிஷ் அரச பரம்பரையில், முடிசூடத் தயாராக இருப்பவர்கள் வரிசையில் இரண்டாவதாக இருக்கும் இவர், இந்த மாற்றம் நிகழும் ஆண்டு என்று வர்ணிக்கப்படும் ஆண்டில், பொதுச்சேவை செய்ய பல வாய்ப்புகளைப் பரிசீலித்துக்கொண்டிருந்தார் என்று கென்சிங்டன் அரண்மனை அதிகாரிகள் தெரிவித்தனர். இளவரசர் வில்லியம் தனது அதிகாரபூர்வ நிகழ்ச்சிகளை அதிகப்படுத்தமாட்டார், ஆனால் அவரது சேவை தொடர்பான பணிகளை, குறிப்பாக சுற்றுச்சூழல் பாதுகாப்பில், விஸ்தரிப்பார் எ…

  17. பாகிஸ்தானில் ஒருவர் தனது ஒன்றரை வயது பெண் குழந்தையை நீரில் மூழ்கடித்துக் கொன்றிருக்கிறார். அவருக்கு ஆண்குழந்தைதான் வேண்டும் என்பதற்காகத்தான் அவர் இந்தக் கொலையைச் செய்ததாக அவரது குடும்பத்தினர் கூறுகிறார்கள். அந்தக் கொலைக்காக தான் இப்போது வருந்துவதாக அவர் கூறுகிறார். பெண் குழந்தை என்ற காரணத்துக்காக அவர்களை கொல்லுகின்ற, தெற்காசியாவில் பெரிதாக காணப்படுகின்ற இந்தப் பிரச்சினையை, இந்த நிகழ்வு கோடிட்டுக் காட்டுகின்றது. http://www.bbc.co.uk/tamil/multimedia/2013/09/130912_pakisinfant.shtml

  18. ஆப்கன் தேசியக் கால்பந்துக் குழு தெற்காசிய கால்பந்து சம்மேளன சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றதை அடுத்து, அக்குழுவை வரவேற்க தலைநகர் காபூலில் ஆயிரக்கணக்கான ஆப்கானிய கால்பந்து ரசிகர்கள் குழுமியிருந்தனர். வெற்றி பெற்ற ஆப்கானிய கால்பந்துக்குழுவை காபூலில் வரவேற்கத் திரண்டிருந்த ஆப்கன் ரசிகர்கள் கூட்டம் ஒரு சர்வதேச விளையாட்டுப்போட்டியில் ஆப்கானிஸ்தான் வெல்வது இதுவே முதல் முறை. ஆப்கானியக் கால்பந்துக் குழுவினர் தேசிய கால்பந்து விளையாட்டரங்கில் தாங்கள் வென்ற கோப்பையைக் காட்டியபோது, ஆப்கானிய ரசிகர்கள், கொடிகளை அசைத்தும், உற்சாகக் குரலெழுப்பியும் விசிலடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆப்கானியக் குழு, ஆறு முறை சாம்பியன் பட்டம் பெற்ற இந்தியாவை 2-0 என்ற கோல் கணக…

  19. டெல்லி: பாஜக மூத்த தலைவர் அத்வானியின் சகாப்தம் முடிந்துவிட்டதாக பாஜக தலைவரும் முன்னாள் பீகார் துணை முதல்வருமான சுஷில் குமார் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது குறித்து பாஜக தலைவரும், முன்னாள் பீகார் துணை முதல்வருமான சுஷில் குமார் மோடி ட்விட்டரில் கூறியிருப்பதாவது, மக்களின் மனநிலையை உணர தவறிவிட்டார் அத்வானிஜி. அடல்ஜியை பிரதமர் வேட்பாளராக அத்வானிஜி தான் அறிவித்தார். அதே போன்று தற்போது மோடியின் பெயரையும் அறிவிக்கலாமே. அரசியலில் மட்டும் தான் கடைசி வரை மக்கள் பதவிக்கு முயற்சி செய்கிறார்கள். அமைச்சர் பதவி ஒரு இறந்த அரசியல்வாதியை உயிர்ப்பிக்குமா? என…

  20. இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை புறக்கணிக்க முடியாது பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.அமர்வுகளில் பங்கேற்பதே சரியானது என பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய நாடுகள் அமைச்சர் ஹூகோ சர்வி தெரிவித்துள்ளார்.2011ம் ஆண்டில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வினை இலங்கையில் நடாத்த கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் 2013ம் ஆண்டில் இலங்கையில் அமர்வுகளை நடாத்துவது என தீர்மானிக்கப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரித்தானிய பாராளுமன்றில் இலங்கை குறித்த குறிப்பிடப்படும் தகவல்கள் கொழும்பு அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமை, நல்லிணக்கம் …

  21. தமிழ் சினிமாவில் தமிழ் பேசும் உள்ளூர் நடிகைகளை விட அண்டை மாநிலமான மலையாள தேசத்து நடிகைகளின் ஆதிக்கம் எப்போதுமே உண்டு. லலிதா, பத்மினி, ராகினி, சுகுமாரி, கே.ஆர்.விஜயா, என 60 களில் தொடங்கிய ஆதிக்கம் எண்பதுகளில் அம்பிகா, ராதா, ஊர்வசி, கல்பனா நீடித்தது மீரா ஜாஸ்மின், அசின், காவ்யா மாதவன், காவேரி, என பல நடிகைகள் மலையாள தேசத்தில் இருந்து வந்து தமிழ்நாட்டில் சூப்பர்ஹிட் நடிகையாக வலம் வந்துள்ளனர். இன்றைக்கும் நயன்தாரா, நஸ்ரியா நசீம், லட்சுமி மேனன் என பல மலையாள நடிகைகள் தமிழ் சினிமாவை கைப்பற்றியுள்ளனர். குடும்பப்பாங்கான கிராமத்து வேடத்தில் அசத்திய லட்சுமி மேனன் கையில் அரைடஜன் படங்கள் உள்ளன. இளம் நடிகர்களின் முதல் சாய்ஸ் லட்சுமிமேனன். நேரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்…

  22. சிகாகோ: பறக்கும் விமானத்தில் அமெரிக்கப் பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டப்பட்ட இந்திய எஞ்ஜினியருக்கு 9 மாதம் சிறை தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த சாப்ட்வேர் நிறுவன ஊழியர் சீனிவாச எர்ரமில்லி, வயது 46..இவர் கடந்த 2011ம் ஆண்டு ஜூன்மாதம் 14ம் தேதி சிகாகோ செல்லும் செளத்வெஸ்ட் விமானத்தில் பயணித்தார். அவரது பக்கத்து வீட்டில் பாதிக்கப்பட்ட பெண் இருந்துள்ளார். அப்பெண்ணின் கணவரும் உடன் பயணித்துள்ளார். அந்தப் பெண்ணுக்கு அப்போது 63 வயதாகும். தங்களது 34வது திருமண நாளைக் கொண்டாடுவதற்காக கணவருடன் அவர் லாஸ் வேகாஸ் பயணித்துள்ளார். பயணத்தின்போது தனது ஷார்ட்ஸுக்குள் 3 முறை கையை விட்டார் சீனிவாசா என்பது அப்பெண்ணின் புகார…

  23. ஆசிய நாடுகளின் ஐரோப்பிய வணிகத்திற்கு இதுநாள் வரை இணைப்பு வழிகளாக சூயஸ் கால்வாய் மற்றும் மலாகா நீரிணைப்பு வழிகளே பயன்பட்டு வந்தன. இவற்றில் மலாகா வழியானது பாதுகாப்பற்றதாகவும், நெரிசல் மிகுந்ததாகவும் மாறி வருகின்றது. மேலும், இந்த வழிகள் சுற்றுப் பாதையாக இருப்பதால் கால விரயமும் ஏற்படுவதாக ஆசிய நாடுகள் கருதி வந்தன. புவி வெப்பமடைவதின் காரணமாக சமீப காலங்களில் ஆர்க்டிக் பெருங்கடலின் பனி உறைந்திருக்கும் சில பகுதிகள் ஜூலை மாதம் முதல் நவம்பர் வரை இளகிக் காணப்படுகின்றன. அப்போது, ரஷ்யாவின் பனி உடைப்பு தொழில்நுட்ப உதவியுடன் இந்தப் பகுதிகள் கப்பல் போக்குவரத்திற்கு ஏற்றதாக மாற்றப்படுகின்றன. இந்த முயற்சி, ஆசிய நாடுகளின் மேற்கத்திய நாடுகளுடனான போக்குவரத்திற்கு உகந்ததாகக் கரு…

  24. கராச்சி: பாகிஸ்தானின் உள்ள கராச்சி, உலகின், "அதிபயங்கர நகரம்' என்ற பெயரை பெற்றுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளின் முக்கிய நகரங்களில், மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான சூழ்நிலை குறித்து, தனியார் பத்திரிகை நிறுவனம், ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் பாகிஸ்தானின் வர்த்தக நகரமான கராச்சி மக்களின் உயிருக்கு ஆபத்தான, "அதிபயங்கர நகரம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி ஆய்வறிக்கையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானில் நிலவும் வறுமை மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தால், வேலைவாய்ப்பை தேடி நாட்டின் பல பகுதிகளிலிருந்தும், மக்கள் கராச்சிக்கு வருகின்றனர். 2000 முதல், 2010ம் ஆண்டு வரை, கராச்சி நகரின் மக்கள் தொகை, 80 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் வர்த்தகநகரமான கரா…

  25. வாஷிங்டன்: வட கொரியா தனது யாங்பியான் அணு உலையை மீண்டும் செயல்படுத்த ஆரம்பித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுதொடர்பான செயற்கைக் கோள் புகைப்பட ஆதாரத்தையும் அமெரிக்கா வெளியிட்டுள்ளது. இந்த அணு உலையில், அணு ஆயுதங்களில் பயன்படுத்தப்படும் புளுட்டோனியத்தை தயாரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜான்ப்ஸ் ஹாப்கின்ஸ் நவீன சர்வதேச ஆய்வு கழகம் இது குறித்து கூறுகையில், ஆகஸ்ட் 31ம் தேதி எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படத்தில், அந்த அணு உலையிலிருந்து வெண்ணிறப் புகை வருவது தெரிய வந்தது. எனவே இதன்மூலம் அந்த அணு உலை மீண்டும் இயங்குவதாக கருத முடியும். அல்லது செயல்பாட்டுக்குத் தயாராகி விட்டதாக கருதலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த அணு உலையில், 6 கிலோ எடை கொண்ட புளுட்டோனியத்தை ஒரு வருடத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.