Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இலங்கையர்கள் தொடர்பில் கனடா புதிய சட்டங்களை அமுல் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை உள்ளிட்ட சில நாடுகளின் பிரஜைகள் தொடாபில் பயோமெற்றிக் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன்படி, கனடா வீசா கோரும் குறித்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் கைவிரல் அடையாளங்களையும் புகைப்படத்துடன் சமர்ப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் வீசா அல்லது ஏனைய வீசாக்களுக்கும் இது பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 11ம் திகதி முதல் இலங்கையர்கள் உள்ளிட்ட சில நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் வீசா விண்ணப்பிக்கும் போது கைவிரல் அடையாளங்களையும் விண்ணப்பித்தில் உள்ளடக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/article…

  2. கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில், 200 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்ததாக, முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஸ்டாலின், அன்பழகன், கனிமொழி மீதான புகாரில், லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி., விசாரணையை துவக்கி உள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில், இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விசாரணையை துரிதப்படுத்தவும், புகாரில் முகாந்திரம் இருந்தால், வழக்கு பதிவு செய்யவும், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர், பி.ரமேஷ் பாபு, தாக்கல் செய்த மனு: கோவையில் 2010 ஜூன், 23ம் தேதி செம்மொழி மாநாடு நடந்தது.இந்த மாநாட்டை, உலக தமிழ் அமைப்பு அங்கீகரிக்கவில்லை. மாநாட்டுக்காக, முன்னாள் முதல்வர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது; 386 கோடி ரூபாய், ஒதுக்கப்பட்…

  3. பிரான்சில் உலகில் இருந்து 100 நாடுகளின் மக்கள் போராட்டம் பிரான்சில் செப்டெம்பேர் 13,14,15 ஆகிய நாட்களில் உலகில் இருந்து 100 நாடுகளின் மக்கள் போராட்டம் அமைப்புகள், மக்கள் போராட்டத்தை பிரதிபடுத்தி, 600,000 மக்கள் கலந்து கொண்ட "Fete de la Humanité" நிகழ்வில் தமிழ் ஈழத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை கலந்து கொண்டு தமிழீழ மக்களின் விடுதலை போராட்டத்தை வலியுறுத்தி தமது செயல்பாடுகளை ஏனைய போராட்ட அமைப்புகளுடன் கலந்து கொண்டு ஈடுபட்டனர். இந்த நிகழ்வில் சுயநிர்ணய உரிமைகளை வலியுறுத்தி போராடும் போர்ராட்ட அமைப்புகளின் இன்றைய போராட்ட சூழல் பற்றி நடந்த கலந்துரையாடல், மக்களிடையே ஆனா விவாதத்த்தில் சஹாரவி ஓரியென்டல், தமிழீழம், குர்திஸ்தான்,பாலஸ்தீன மக்கள் பி…

  4. டெல்லி: பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் நரேந்திர மோடியும், அத்வானியும் ராம் ஜெத்மலானி வீட்டில் நேற்று சந்தித்துக் கொண்டனர். ஆனால் மோடியிடம் அதிகம் பேசாமல் இறுகிய முகத்துடன் காணப்பட்டார் அத்வானி. ராம்ஜேத்மலானியின் 90வது பிறந்த நாளையொட்டி அவரது வீட்டுக்கு அத்வானி வாழ்த்துச் சொல்ல வந்திருந்தார். அதேபோல மோடியும் வந்திருந்தார். அத்வானியைப் பார்த்த மோடி, அவரது காலைத் தொட்டு வணங்க குணிந்தார். ஆனால் அத்வானி அமைதியாக நின்றிருந்தார். பின்னர் இருவரும் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. மோடி சிரித்த முகத்துடன் காணப்பட்டார். ஆனால் அத்வானி இறுகிய முகத்துடன் கம்மென்றிருந்தார். மோடியிடம் அவர் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. மேலும் மோடிக்கு அருகிலும் அமரவில்லை. பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில்…

  5. லண்டன்: இங்கிலாந்து இளவரசி டயானாவை அரச குடும்பத்தில் உள்ள முக்கியப்புள்ளிகள் தான் திட்டமிட்டு கொன்றதாக இங்கிலாந்து ராணுவ வீரர் தனது மனைவியிடம் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து ராஜ குடும்பத்தில் உள்ள சில முக்கியப்புள்ளிகள் தான் இளவரசி டயானாவை திட்டம் போட்டு கொன்றுவிட்டதாக இங்கிலாந்து விமானப்படை வீரர் ஒருவர் தனது மனைவியிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் இருவரும் தற்போது விவாகரத்து பெற்றுவிட்டனர். இது குறித்து அந்த பெண் கூறுகையில், என் முன்னாள் கணவர் கடந்த 2008ம் ஆண்டில் இளவரசர் வில்லியமுக்கு விமானப் படையில் சில பயிற்சி அளித்தார். அப்போது வில்லியம் கார்களில் சில பயிற்சி பெற்றார். என் முன்னாள் கணவரும் சில கார் ஸ்டண்ட்டுகள் செய்தார். ஜன்னல் வழியாக சுடுவது உள்ளிட்டவற்றை வில்லியமு…

  6. லண்டனில் நீதிமன்ற வழக்கு ஒன்றை எதிர்கொள்ளும் ஒரு முஸ்லிம் பெண்மணி, வழக்கு விசாரணைகளின் போது தனது முகத்திரையை நீக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நீதிமன்றத்தில் முழுமையாக முகம் தெரிய வேண்டும் என்று உத்தரவு அச்சுறுத்தல் தொடர்பான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள இருபத்து இரண்டு வயதான அந்தப் பெண்மணி தன் மீது தவறில்லை என்று வாதிடுவதற்காக நீதிமன்றம் வந்தபோது, முகத்தை மறைக்கும் நிக்காபை அணிந்து வந்திருந்தார். ஆனால் வழக்கு விசாரணை நடைபெறும் சமயத்தில், சாட்சியமளிக்கும் போது அவர் முகத்திரையை நீக்கினால்தான் அவரது பிரதிபலிப்புகளை கவனிக்க முடியும் என்று நீதிபதி முடிவு செய்து உத்தரவிட்டார்.முகத்திரையை நீக்கச் சொல்வது அவரது மனித உரிமைகளை மீறும் செயலாகும் என்று அவரது…

  7. அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டனில் கடற்படையின் தலைமையகம் அமைந்துள்ளது. இன்று அங்கு மர்ம நபர்கள் 3 பேர் தீடீரென நுழைந்தனர். துப்பாக்கியுடன் உட்புகுந்த அவர்கள் அங்கு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட ஆரம்பித்தனர். இந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியாகினர். மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கியுடன் நுழைந்துள்ள 3 பேரையும் பிடிக்க அந்நாட்டு போலீசார் தீவிரமாக முயன்று வருகின்றனர். அவர்கள் யார் என்பதையும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த துப்பாக்கி சூட்டை அடுத்து வாஷிங்டனில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மேலும், ரீகன் சர்வதேச விமான நிலையமும் மூடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தலைநகரில் இந்த துப்பாக்கி சூடு நிகழ்த்தப்பட்டுள்ளதால் இதுகுறித…

  8. முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் மூத்த பத்திரிகையாளர் சோ நேற்று சந்தித்துப் பேசினார். காலை 11.30 மணியளவில் தொடங்கிய இந்தச் சந்திப்பு சுமார் அரை மணி நேரம் வரை நீடித்தது. பாஜகவில் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் ஜெயலலிதாவை மூத்த பத்திரிகையாளர் சோ சந்தித்துப் பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. முதல்வர் ஜெயலலிதா தமிழக முதல்வராக மூன்றாவது முறையாக பதவியேற்ற விழாவில் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.இதேபோன்று, குஜராத் முதல்வராக மோடி மீண்டும் பதவியேற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்றார். பாஜக பிரசார குழுத் தலைவராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டபோது, அவருக்கு வாழ்த்துத் தெரிவித்த முதல்வர் ஜெயலல…

  9. ஜப்பானில் கடைசி அணுமின் உலையும், மூடப்பட்டது. டோக்கியோ: ஜப்பான் நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கடைசி அணுமின் உலை, பராமரிப்பு ஆய்விற்காக இன்றுடன் மூடப்பட உள்ளது. அணுசக்திக்கு எதிரான பொதுமக்களின் எதிர்ப்பினால் இது மீண்டும் திறக்கப்படுவது குறித்து அறிவிக்கப்படவில்லை. ஜப்பான் நாட்டில் கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட சுனாமியால் பியூகுஷிமா அணுமின் உற்பத்தி நிலையத்தில் கடல் நீர் உள்ளே புகுந்து அணுகதிர் வீச்சு ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக ஜப்பான் நாட்டு மக்கள் அணுஉலையை மூட வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் குதித்தனர். மக்கள் போராட்டம் காரணமாக அணு உலைகளை மூட தேவையான நடவடிக்கைகளை ஜப்பான் தொடங்கியது. அங்கு 50க்கும் மேற்பட்ட அணுமின் ந…

  10. இந்தியா, அகர்தலா அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று தாக்கக் கூடிய வல்லமை படைத்த அக்னி 5 ஏவுகணையை இன்று 2வது முறையாக வெற்றிகரமாக ஏவி பரிசோதித்துள்ளது. முற்றிலும் இந்தியத் தொலைநுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஏவுகணை இது. இந்த ஏவுகணையானது கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையும் கூட. கிட்டத்தட்ட 5000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாகக் கூடிய வல்லமை படைத்தது. அதாவது சீனாவின் பெரும் பகுதியை இந்த ஏவுகணைத் தாக்கக் கூடிய திறன் கொண்டது. இந்த ஏவுகணை ஏற்கனவே ஒரு முறை ஏவிப் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று 2வது முறையாக ஏவப்பட்டது. ஒடிஷாவின் வீலர் தீவில் இந்த சோதனை நடத்தப்பட்டது. 3 நிலைகளைக் கொண்ட இந்த ஏவுகணையானது, இன்று காலை 8.50 மணிக்கு ஏவிப் பரிசோதிக்கப்பட்டத…

  11. வாஷிங்டன்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மீதான விசா கொள்கையில் மாற்றம் இல்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி முறைப்படி நேற்று அறிவிக்கப்பட்டார். எனினும் மோடிக்கு விசா கொள்கையில் மாற்றம் இல்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க மாநில துறை செய்தி தொடர்பாளர் மேரி ஹார்ப், அமெரிக்காவின் நீண்ட கால விசா கொள்கையில் எவ்வித மாற்றமும் இருக்காது. மோடி மற்ற விண்ணப்பதாரர் போன்று விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். அதனை நாங்கள் வரவேற்கிறோம். அவரது விண்ணப்பம் ஆய்வு செய்யப்படும் என மேலும், ஆய்வு முடிவுகள் என்னவாக இருக்கும் என்பது குறித்து தற்போது நான் எதுவும் பேச…

  12. தாய்லாந்தின் மன்னரை, ஒரு தனிப்பட்ட உரையாடலில் அவதூறாகப் பேசினார் என்ற குற்றச்சாட்டில் சுமார் ஒரு வருட காலம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவரை நீதிமன்றம் ஒருவழியாக விடுதலை செய்திருக்கிறது. அரச குடும்பத்துக்கெதிரான அவதூறு-- தாய்லாந்து தேவையற்ற தீவிரம் ? இந்த குறிப்பிட்ட நபர் இவ்வாறு தனிப்பட்ட உரையாடல் ஒன்றில் அரசரைத் தவறாகப் பேசினார் என்று அவரது சகோதரர் புகார் செய்தாராம். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த இரு சகோதரர்களுக்கிடையேயும் நீண்ட காலமாக பெரிய சச்சரவுகள் இருந்திருக்கின்றன, எனவே இந்த சாட்சியம் நம்பத்தகுந்ததாக இருக்காது என்று கூறினார். இதற்கு முன்பு, அவரை ஜாமீனில் விடுதலை செய்ய சமர்ப்பிக்கப்பட்ட பல மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அரச குடும்பத்தினரை அவதூறு …

  13. இந்தோனேஷியத் தலைநகர் ஜாகர்த்தாவில் இருக்கும் தேசிய அருங்காட்சியகத்தில் இருந்து காணாமல் போயிருக்கும் நான்கு புராதன, தங்கக் கலைப்பொருட்களைக் கண்டுபிடிக்க சர்வதேச ஏல நிறுவனங்களிடம் இந்தோனேசிய போலிசார் உதவி கோரியிருக்கின்றனர். அருங்காட்சியகத்தின் பிரதான காட்சி அறைகளில் ஒன்றில் இருந்த கண்ணாடிப் பேழையில் இருந்த இந்தப் பொருட்களை அருங்காட்சியக ஊழியர்கள் திருடியிருக்கலாம் என்று அவர்கள் சந்தேகிக்கின்றனர். புராதன கலைப்பொருட்கள் திருட்டு மூன்று தங்கப் பலகைகளும், ஒரு தங்கப் பானையும் ஆன இந்தப் பொருட்கள் , இந்துக் கடவுள்களின் சக்தியைக் குறிப்பவையாகக் கருதப்படுகின்றன. இந்தப் பொருட்கள் ஜாவாவில் 11ம் நூற்றாண்டின் முதல் பகுதியில் நிலவிய இஸ்லாத்துக்கு முந்தைய நாகரிகத்தைச் சேர்ந்தவையாகும…

  14. வளைகுடா நாடுகளுக்கு அடுத்தபடியாக உலகிலேயே மிகப் பெரிய எண்ணெய் படுகையில் கச்சா எண்ணெய் உற்பத்தி கடந்த திங்கள்கிழமை தொடங்கியுள்ளது. இந்த எண்ணெய் படுகை சோவியத் யூனியனில் இருந்து தனி நாடான கஜாகிஸ்தானின் அருகே கேஸ்பியன் கடலில் உள்ளது. கஸாகான் ஆயில் பீல்ட் என பெயரிடப்பட்டுள்ள இந்தப் பகுதியில் 13 பில்லியன் பேரல்கள் அளவுக்கு கச்சா எண்ணெய் இருப்பதாகத் தெரிகிறது. உலகிலேயே தரைப்பகுதிக்குள் அமைந்துள்ள மாபெரும் தண்ணீர் மண்டலம் (371,000 சதுர கி.மீ. பரப்பளவு) தான் கேஸ்பியன் கடல். இதை கடல் என்றும் அழைக்கிறார்கள். உலகின் மாபெரும் ஏரி என்றும் சொல்கிறார்கள். இந்த நீரின் உப்புத் தன்மை கடல் நீரின் உப்புத் தன்மையை விட 3ல் ஒரு மடங்கு குறைவாகவே உள்ளது. 30 ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட மாபெர…

  15. டெல்லி: டெல்லியில் பாஜகவின் தலைமையகத்தில் நடைபெற்ற அக்கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் வரும் 2014ம் ஆண்டுக்கான பாஜகவின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மூத்த தலைவரான எல்.கே. அத்வானி இக் கூட்டத்தை புறக்கணித்தபோதும், அவரை புறக்கணித்துவிட்டு இந்த அறிவிப்பை பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். இந்த அறிவிப்பையடுத்து நரேந்திர மோடிக்கு ராஜ்நாத் சிங், பாஜக முன்னாள் தலைவர் நிதின் கட்காரி, மூத்த தலைவர்கள் அருண் ஜேட்லி, வெங்கைய்யா நாயுடு, அனந்த் குமார், முதலில் மோடிக்கு எதிர்ப்புத் தெரிவித்த சுஷ்மா ஸ்வராஜ், முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் மலர்ச்செண்டு கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தனர். அப்போது ஜோஷியின் காலி…

  16. லண்டன்: ஆண்டுதோரும் மூன்றில் ஒரு பங்கு உணவு வீணாவதால், உலகில் தினமும் 87 கோடி மக்கள் பட்டினியால் அவதிப்படுவதாக ஐ.நா.சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. உணவுப் பொருட்களை வீணாக்காதீர்கள், தேவையான அளவு மட்டுமே சாப்பிடுங்கள் என எவ்வளவோ பிரச்சாரங்கள் மேற்கொள்ளப் படுகின்ற போதும், தயாரிக்கப்படுகின்ற உணவில் மூன்றில் ஒரு பங்கு வீணாவதாக இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. அப்படி வீணாகின்ற உணவின் காரணமாக, தினமும் 87 கோடி உலகமக்கள் பட்டினியால் அவதிப்படுவதாக பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளது இந்த நிறுவனம். http://tamil.oneindia.in/news/international/one-third-food-produced-globally-wasted-annually-183294.html

  17. டெல்லி: பாஜகவிலிருந்து தூக்கப்பட்டு விட்டமூத்த தலைவரும், பிரபல வழக்கறிஞருமான ராம் ஜேத்மலானி நரேந்திர மோடிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். மேலும் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் போட்டியில் மோடியே வெல்வார் என்றும் அத்வானியால் தனக்குத் தேவையான ஆதரவைத் திரட்ட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து ஜெத்மலானி கூறுகையில், பிரதமர் வேட்பாளருக்கு மோடிதான் பொருத்தமானவர், சரியானவர். அவர் ஒரு அவதாரம் போன்றவர். நிதர்சனம் புரிந்து நடக்க அத்வானி முன்வர வேண்டும்.அவரால் தேவையான ஆதரவைப் பெற முடியாது. பிரதமர் வேட்பாளர் போட்டியில் மோடியே வெல்வார். அத்வானியால் வெல்ல முடியாது. http://tamil.oneindia.in/news/india/modi-is-the-best-option-bjp-s-pm-cadidate-advani-183336.html

  18. டெல்லி: டெல்லியில் பாஜகவின் தலைமையகத்தில் நடைபெற்ற அக்கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தை மூத்த தலைவரான எல்.கே. அத்வானி புறக்கணித்துள்ளார். பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அக்கட்சி அறிவிக்க இருக்கிறது. தற்போது நடைபெறும் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இதற்கான இறுதி முடிவு எடுக்கப்படுகிறது. பாஜகவில் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க அத்வானி மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். கடந்த சில நாட்களாக அத்வானியை சமாதானப்படுத்த பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தீவிரம் காட்டியது. இதற்காக பாஜக முன்னாள் தலைவர் நிதின் கத்காரியை தூதராக நியமித்து பேச்சுவார்த்தையும் நடத்தியது. ஆனால் எந்த ஒரு பயனும் இல்லை. மோடியை பிரதமர் வேட்பாளராக்க தொடர்ந்த…

  19. டெல்லி பலாத்கார குற்றவாளிகளுக்கு தூக்கு: கொந்தளிக்கும் குற்றவாளிகளின் வக்கீல் Friday, September 13, 2013, 16:23 [iST] டெல்லி: டெல்லி பாலியல் வல்லுறவு வழக்கின் தீர்ப்பு நியாயமானது இல்லை என்றும், அரசியல் தலையீட்டால் வழங்கப்பட்ட பாராபட்சமான தீர்ப்பு என்றும் 4 குற்றவாளிகளின் வழக்கறிஞர் ஏ.பி. சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் 16ம் தேதி ஓடும் பேருந்தில் 23 வயது பிஸியோதெரபி மாணவி பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட வழக்கில் மைனர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் மைனருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது. மீதமுள்ள 4 பேரில் பேருந்து டிரைவர் ராம் சிங் கடந்த மார்ச் மாதம் திகார் சிறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதையடுத்து மீதமுள்ள நான்கு ப…

  20. நோர்வேயில் 77 பேரைக் கொலை செய்த Anders Behring Breivik என்ற நபர் அந்நாட்டு பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானம் பயின்று வருகிறார். 2011ஆம் ஆண்டு குறித்த நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 77 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒஸ்லோ பல்கலைக்கழகம் அவருக்கு அனுமதி வழங்கியுள்ளது. Anders Behring Breivik ற்கு நோர்வே நீதிமன்றம் இருபத்து ஓராண்டு கால சிறைத்தண்டனை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Anders Behring Breivik தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றார். சிறையில் இருந்து கொண்டே Anders Behring Breivik அரசியல் பயில உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேரடியாக பல்கலைக்கழக விரிவுரையாளர்களை தொடர்பு கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது எனவும், ஒப்படைகளின் மூலமாக அரசியல் விஞ்ஞான பட்டப்பட…

    • 0 replies
    • 606 views
  21. பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் , பிரிட்டிஷ் படைகளில் ஏழாண்டுகள் பணியாற்றிய பின்னர், ராணுவப் பணியிலிருந்து ஓய்வு பெறவிருக்கிறார். அவர் பிரிட்டிஷ் விமானப்படையின் தேடுதல் மற்றும் மீட்புப் பணி விமானியாக தனது கடைசி பணி நாளை செவ்வாய்க்கிழமை முடித்தார். பிரிட்டிஷ் அரச பரம்பரையில், முடிசூடத் தயாராக இருப்பவர்கள் வரிசையில் இரண்டாவதாக இருக்கும் இவர், இந்த மாற்றம் நிகழும் ஆண்டு என்று வர்ணிக்கப்படும் ஆண்டில், பொதுச்சேவை செய்ய பல வாய்ப்புகளைப் பரிசீலித்துக்கொண்டிருந்தார் என்று கென்சிங்டன் அரண்மனை அதிகாரிகள் தெரிவித்தனர். இளவரசர் வில்லியம் தனது அதிகாரபூர்வ நிகழ்ச்சிகளை அதிகப்படுத்தமாட்டார், ஆனால் அவரது சேவை தொடர்பான பணிகளை, குறிப்பாக சுற்றுச்சூழல் பாதுகாப்பில், விஸ்தரிப்பார் எ…

  22. பாகிஸ்தானில் ஒருவர் தனது ஒன்றரை வயது பெண் குழந்தையை நீரில் மூழ்கடித்துக் கொன்றிருக்கிறார். அவருக்கு ஆண்குழந்தைதான் வேண்டும் என்பதற்காகத்தான் அவர் இந்தக் கொலையைச் செய்ததாக அவரது குடும்பத்தினர் கூறுகிறார்கள். அந்தக் கொலைக்காக தான் இப்போது வருந்துவதாக அவர் கூறுகிறார். பெண் குழந்தை என்ற காரணத்துக்காக அவர்களை கொல்லுகின்ற, தெற்காசியாவில் பெரிதாக காணப்படுகின்ற இந்தப் பிரச்சினையை, இந்த நிகழ்வு கோடிட்டுக் காட்டுகின்றது. http://www.bbc.co.uk/tamil/multimedia/2013/09/130912_pakisinfant.shtml

  23. ஆப்கன் தேசியக் கால்பந்துக் குழு தெற்காசிய கால்பந்து சம்மேளன சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றதை அடுத்து, அக்குழுவை வரவேற்க தலைநகர் காபூலில் ஆயிரக்கணக்கான ஆப்கானிய கால்பந்து ரசிகர்கள் குழுமியிருந்தனர். வெற்றி பெற்ற ஆப்கானிய கால்பந்துக்குழுவை காபூலில் வரவேற்கத் திரண்டிருந்த ஆப்கன் ரசிகர்கள் கூட்டம் ஒரு சர்வதேச விளையாட்டுப்போட்டியில் ஆப்கானிஸ்தான் வெல்வது இதுவே முதல் முறை. ஆப்கானியக் கால்பந்துக் குழுவினர் தேசிய கால்பந்து விளையாட்டரங்கில் தாங்கள் வென்ற கோப்பையைக் காட்டியபோது, ஆப்கானிய ரசிகர்கள், கொடிகளை அசைத்தும், உற்சாகக் குரலெழுப்பியும் விசிலடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆப்கானியக் குழு, ஆறு முறை சாம்பியன் பட்டம் பெற்ற இந்தியாவை 2-0 என்ற கோல் கணக…

  24. டெல்லி: பாஜக மூத்த தலைவர் அத்வானியின் சகாப்தம் முடிந்துவிட்டதாக பாஜக தலைவரும் முன்னாள் பீகார் துணை முதல்வருமான சுஷில் குமார் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது குறித்து பாஜக தலைவரும், முன்னாள் பீகார் துணை முதல்வருமான சுஷில் குமார் மோடி ட்விட்டரில் கூறியிருப்பதாவது, மக்களின் மனநிலையை உணர தவறிவிட்டார் அத்வானிஜி. அடல்ஜியை பிரதமர் வேட்பாளராக அத்வானிஜி தான் அறிவித்தார். அதே போன்று தற்போது மோடியின் பெயரையும் அறிவிக்கலாமே. அரசியலில் மட்டும் தான் கடைசி வரை மக்கள் பதவிக்கு முயற்சி செய்கிறார்கள். அமைச்சர் பதவி ஒரு இறந்த அரசியல்வாதியை உயிர்ப்பிக்குமா? என…

  25. இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை புறக்கணிக்க முடியாது பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.அமர்வுகளில் பங்கேற்பதே சரியானது என பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய நாடுகள் அமைச்சர் ஹூகோ சர்வி தெரிவித்துள்ளார்.2011ம் ஆண்டில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வினை இலங்கையில் நடாத்த கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் 2013ம் ஆண்டில் இலங்கையில் அமர்வுகளை நடாத்துவது என தீர்மானிக்கப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரித்தானிய பாராளுமன்றில் இலங்கை குறித்த குறிப்பிடப்படும் தகவல்கள் கொழும்பு அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமை, நல்லிணக்கம் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.