உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26725 topics in this forum
-
இஸ்ரேலின் ஆதிக்கத்தில் உள்ள பகுதி என பொருள் கூறும்படியாகவே கூறப்பட்டுவரும் பாலஸ்தீனத்தை தனி நாடாக குறிப்பிட்டுள்ளது கூகுள். இஸ்ரேல் ஆதிக்கத்திலுள்ள பலஸ்தீனை எப்படி குறிப்பிடுவது என்பதில் சர்வதேச ஊடகங்கள் மத்தியில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. கூகுள் உள்ளிட்ட பெரும்பாலான ஊடகங்கள் இஸ்ரேல் ஆதிக்கத்தில் உள்ள பகுதியாகவே இது வரை பலஸ்தீனத்தை சித்தரித்த நிலையில் முதல் முறையாக பலஸ்தீனை தனி நாடாக கூகுள் அங்கீகரித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் எதிர்ப்பை மீறி கடந்த ஆண்டு பலஸ்தீனத்திற்கு ஐ.நாவில் பார்வையாளர் அந்தஸ்துள்ள நாடு எனும் ஸ்தானம் கொடுக்கப்பட்டதே கூகுளின் இம்முடிவுக்கு காரணமென அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். ஒரு தொழில்நுட்ப நிறுவனம் என்பதை தாண்டி கூகுள் பல விஷயங்கள…
-
- 0 replies
- 366 views
-
-
பாகிஸ்தானில் வரும் 11ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலை சீர்குலைக்க அல்கொய்தா இயக்கத்துடன் தொடர்புடைய தலிபான் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால், தீவிரவாதிகளின் முகாம்கள் மற்றும் பதுங்குமிடங்களை கண்டுபிடித்து அழிப்பதற்கு பாகிஸ்தான் ராணுவம் ஏவி விடப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் ஏராளமாக உள்ளன. இப்பகுதிகளில் தீவிரவாதிகளின் ஆதிக்கம் மேலோங்கி உள்ளது. இந்நிலையில், இப்பகுதியில் உள்ள ஓரக்சாய் மாகாணத்தின் அஸ்மத் கங்கா, ஷென் குவாமர் பகுதியில் பாகிஸ்தான் போர் விமானங்கள் இன்று அதிகாலை அதிரடி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் தீவிரவாதிகளின் 4 பதுங்குமிடங்கள் முற்றிலுமாக அழிக்…
-
- 0 replies
- 313 views
-
-
சென்னை: திருச்சி மாவட்டத்தில் நிலத்தடி நீரை உறிஞ்சும் குளிர்பான நிறுவனத்தை மூட வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: திருச்சி மாவட்டம் - திருவெறும்பூர் வட்டம் - சூரியூர், கிராமத்து அருகில் எல்.ஏ. பாட்லர் பிரைவேட் லிமிடெட் நிறுவனமும், டி.பி.எப். மினரல் குடிநீர் தயாரிக்கும் நிறுவனமும் அமைந்துள்ளன. இந்த இரண்டு நிறுவனங்களும் ஆறு ராட்சச ஆழ்குழாய்களை அமைத்து நாள் ஒன்றுக்கு ஒரு கோடி லிட்டர் வரை தண்ணீரை உறிஞ்சி எடுக்கின்றன. இத்தண்ணீர் சர்வதேச அளவிலான பிரபல நிறுவனத்தின் குளிர்பானத் தயாரிப்பிற்காகப் பயன்படுத்தப்பட்டு ஐம்பது லட்சம் லிட்டர் குளிர்பான உற்பத்தி நடைபெற்று வருகின்றது. சுத்திகரிக…
-
- 0 replies
- 334 views
-
-
http://www.bbc.co.uk/news/magazine-22356306 ஏன் புத்த மதம் பிற மதங்களை வெறுக்கிறது என்று ஆராய்கிறார் அலன் ச்ற்றதேர்ன், ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகம். முக்கியமாக இலங்கையும், பர்மாவும் இந்த ஆய்வில் இடம் பிடிக்கின்றது. நான் நினைகின்றேன் புத்த மதவாதிகளின் தீவிரவாத போக்கினால் தான் அவர்கள் இந்தியாவில் இருந்து விரட்டப்பட்டார்கள் என்று. தற்போதைய நிலையில் புத்த சமயம் அன்பை போதிப்பதை நிறுத்தி விட்டது. இது போன்ற கட்டுரையாளர்களை நாம் ஊக்கப்படுத்த வேண்டும். மதவாதிகளின் முகத்திரை கிழி தெரியப்பட்டு நமது தாயக மீட்புக்கு மேலும் உரம் சேர்ப்போம்.
-
- 2 replies
- 572 views
-
-
ராஷ்டீரிய ஜனதாதளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். வெள்ளிக்கிழமை மாலை வைசாலி மாவட்டம் ரஹோபூருக்கு சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாலுவுக்கு தலை மற்றும் முகம் ஆகிய இடங்களில் லேசான காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக ராஜேஸ்வர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. ரு தையல் போடப்பட்டது.பின்னர் அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர் தெரிவித்தார். http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14431:lalu-prasad-yadav-survived-with-minor-injuries&catid=37:india&Itemid=103
-
- 0 replies
- 454 views
-
-
தேடப்படும் பெண் தீவிரவாதி தலைக்கு 20 லட்சம் டாலர் சன்மானம்: அமெரிக்கா அறிவிப்பு அமெரிக்காவின் போலீஸ் அதிகாரிகளை கொன்ற பெண்ணை தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இணைத்துள்ள அமெரிக்க அரசு அவளது தலைக்கு 20 லட்சம் டாலர் சன்மானம் அறிவித்துள்ளது.கருப்பர்கள் விடுதலை ராணுவம் என்ற தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த ஜோவன் செசிமர்ட் என்ற இந்த பெண், முதன்முதலாக 1973ம் ஆண்டு போக்குவரத்து காவலர் ஒருவரை சுட்டுக் கொன்றார்.பின்னர், பல்வேறு போலீஸ் அதிகாரிகளை சுட்டுக் கொன்ற இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 1977ம் ஆண்டு நடைபெற்ற விசாரணையில் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 1979 ஆண்டு சிறையில் இருந்து தப்பிய இவர், 5 ஆண்டு காலம் அமெரிக்காவில் தலைமறைவாக வாழ்ந்தார். அங்கிருந்து கியூபா நாட்டிற்க…
-
- 0 replies
- 459 views
-
-
சோமாலியாவில் வறுமை மற்றும் பசிக்கொடுமை காரணமாக ஏறத்தாழ இரண்டு லட்சத்து ஐம்பத்தெட்டாயிரம் மக்கள் பலியாகி உள்ளதாக ஐ.நா.அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 2010 - 2012 ஆண்டுகளில் சோமாலியாவில் நிலவிய கடும் வறுமைக் காரணமாகவும் பசியின் காரணமாகவும் இறந்துள்ள 258,000 மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறி்க்கையினை ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்பும், பஞ்ச முன் எச்சரிக்கை அமைப்பும் இணைந்து வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பாக 1992 ஆம் ஆண்டு ஏற்பட்ட பஞ்சம் காரணமாக ஏறத்தாழ 220,000 மக்கள் பலியாகினர். பஞ்சத்தினால் மக்கள் பாதிக்கப்பட்ட போது, தேவையான நடவடிக்கைகளை ஐ.நா. எடுக்கவில்லை என ஐ.நா.வின் மனிதச்சேவை ஒருங்கிணைப்பாளர் பிலிப் லசாரினி தெரிவித்துள்ள…
-
- 0 replies
- 646 views
-
-
மே தினத்தன்று உலகெங்கிலும் பொதுவுடைமைக் கட்சியினர், ஏனைய இடதுசாரிகள், தொழிலாளர்கள் இன்னபிற உழைக்கும் மக்கள் நடத்திய ஊர்வலங்களின் வீடியோக்களின் தொகுப்பு! 1. ஜகார்தா, இந்தோனேஷியாவில் தொழிலாளர் உரிமைகளுக்காக 1.3 லட்சத்துக்கு அதிகமான ஆடைத் துறை தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள் ஊர்வலம் 2. டப்ளின், அயர்லாந்தில் தொழிலாளர்கள் உரிமைகளை பறிக்கும் ஐரோப்பிய அரசுகளை எதிர்த்து பேரணி. 3. டாக்கா – பங்களேதேஷில் ஆடைத் தொழில் விபத்தை கண்டித்து ஊர்வலம். நோம்பென் – கம்போடியாவில் சம்பள உயர்வு கேட்டு ஆடைத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் 4. மாட்ரிட் – ஸ்பெயினில் அரசின் சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்து ஆயிரக்கணக்கான மக்கள் ஊர்வலம் 5. சியாட்டில் – அமெரிக்கா…
-
- 0 replies
- 383 views
-
-
-
- 0 replies
- 287 views
-
-
நாங்கள் இந்திய சமூக அமைப்பிலும் ஈழத்தின் ஆரம்பகால சமுக அமைப்பிலும் கூட்டுக்குடும்ப அமைப்பு முறை இருந்ததை அறிந்திருக்கிறோம்.ஈழத்தில் அது தற்போது வழக்கிழந்து போய்விட்டாலும் இந்தியாவில் நடுத்தர மேல்தட்டு வர்க்கத்தினரிடம் அது தொடர்வதை பார்த்தி;ருக்கிறோம்.இந்த கூட்டுக் குடும்ப அமைப்பு முறை ஆணாதிக்கத்தின் வடிவமாகவும் குடம்ப வன்முறையினதும் மாமியார் மருமகள் கொடுமையின் இருப்பிடமாகவும் இருப்பதாக சினிமாக்களிலும் சின்னத்திரைகளிலும் நிறையவே சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.இதிலே மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள் இருந்தாலும் மூத்த தலைமுறையின் ஆதிக்கமும் இளைய தலைமுறையினரின் சுதந்திரத்துக்கான கட்டுப்பாடுகளும் இந்த கூட்டுக்குடும்ப முறையில் அதிகம் என்பது மறுக்க முடியாது. ஐரோப்பாவிலேஇதைப் போன்ற கூட்…
-
- 1 reply
- 590 views
-
-
1991-ம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 84 கோடி. இன்றைய தேதியில் இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 127 கோடி. கடந்த இருபத்திரண்டு வருடங்களில் இந்திய மக்கள் தொகை சுமார் 50% சதவீத வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. இதே காலகட்டத்தில் பயிர் தொழிலில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் எண்ணிக்கை பாரிய அளவில் வீழ்ச்சியடைந்திருப்பது மத்திய திட்ட கமிஷனின் அங்கமான ‘பயன்பாட்டு மனித வள ஆராய்ச்சி மையத்தின்’ (Institute of Applied Manpower research) ஆய்வில் தெரிய வந்துள்ளது. 1991-ம் ஆண்டு துவங்கி 2012 வரையிலான கால அளவில் சுமார் ஒன்றரை கோடி விவசாயிகள் ‘இல்லாமல்’ போயுள்ளனர். கடந்த பதினோரு ஆண்டுகளில் மட்டும் சுமார் 77 லட்சம் விவசாயிகள் விவசாயத்தை விட்டுவிட்டு ‘கா…
-
- 0 replies
- 487 views
-
-
சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை தொடர்பில் சஜ்ஜன் குமார் என்பவர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வீட்டுக்கு முன் சீக்கியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். கடந்த 1984ம் ஆண்டு இந்திய பிரதமர் இந்திரா காந்தி, அவரது பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து டெல்லியில் சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட பயங்கர தாக்குதலில் 3000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலை ஏவிவிட்ட குற்றச்சாட்டில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சஜ்ஜன்சிங் கைது செய்யப்பட்டார். கடந்த 30 வருடங்களாக நிலுவையில் இருந்த இவ்வழக்கில் சஜ்ஜன் குமாரை விடுவித்தும் மற்றையவர்களை குற்றவாளிகள் என உறுதி செய்தும் மாவட்ட நீதிபதி ஆர்யன் அறிவிப்பு விடுத்தார். இதையடுத்து சஜ்…
-
- 0 replies
- 314 views
-
-
அதிகாரம் வாய்ந்த 500 நபர்கள் பட்டியலில் மன்மோகன் சிங், சோனியா காந்தி இந்த உலகின் அதிகாரம் வாய்ந்த 500 நபர்கள் பட்டியலில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்பட 16 இந்தியர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.பிரபலமான வெளியுறவு கொள்கை தொடர்பான இதழில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மத்திய அமைச்சர்கள் ப. சிதம்பரம், ஏ.கே. அந்தோனி, சல்மான் குர்ஷித், ஆன்மிகத் தலைவர்கள் பாபா ராம்தேவ், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், பா.ஜ.க. தலைவர் சுஷ்மா சுவராஜ், ரா உளவு அமைப்புத் தலைவர் அலோக் ஜோஷி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, லட்சுமி மிட்டல், தில்லி முதல்வர் ஷீலா தீட்சித், தொழில்துறை நிபுணர் உன்னிகருணாகரா, மும்பை மேயர் சுனில்…
-
- 5 replies
- 508 views
-
-
பாகிஸ்தான் சிறையில் இருந்த சரப்ஜித் சிங் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், வெளிநாட்டுச் சிறைகளில் அடைபட்டிருக்கும் இந்தியர்கள் பற்றிய விவரங்கள். பாகிஸ்தான் சிறைகளில் மொத்தம் 662 இந்தியர்கள் அடைபட்டுள்ளதாக 2011-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ப்ரீனித் கவுர் தெரிவித்தார். இவர்களில் 369 பேர் மீனவர்கள் எனவும், 219 பேர் பொதுமக்கள் எனவும் அவர் கூறினார். மீதமுள்ள 74 பேர் பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்தவர்கள். இவர்களில் 54 பேர் 1971-ஆம் ஆண்டு நடந்த போரில் பிடிபட்டவர்கள் எனவும் அமைச்சர் அப்போது தெரிவித்தார். இதேபோல், வெளிநாட்டுச் சிறைகளில் 6569 இந்தியர்கள் அடைபட்டுள்ளதாக கடந்த ஏப்ரல் 25-ம் தேதி இந்திய வெளியுறவு இணையமைச்சர் இ. அகமது மாநிலங்களவையில் …
-
- 1 reply
- 368 views
-
-
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. சுமார் ஒரு அடி உயரத்திற்கு பனிக் கட்டிகள் உருவாகியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. டென்வர், கொலின்ஸ் உள்ளிட்ட சில பகுதிகள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ராக்கி மலைப்பகுதியை ஒட்டியுள்ள கொலராடோவில் பனிப்பொழிவு ஏற்படுவது வாடிக்கைதான் என்றாலும், கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான பனிப்பொழிவு தற்போது ஏற்பட்டுள்ளது. http://puthiyathalaimurai.tv/heavy-snowfall-in-colarado
-
- 0 replies
- 319 views
-
-
ஜூன் மாதம் நடைபெறும் ஐரோப்பிய கவுன்சில் கூட்டத்தில், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பைப் பெருக்குவது தொடர்பான ஆலோசனைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என இத்தலிப் பிரதமர் என்ரிகோ லெட்டா தெரிவித்துள்ளார். பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் செய்தியாளர்களுடன் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார். ஐரோப்பிய கவுன்சில் மாநாடு தொடர்பாக இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், இறுதியாக பெல்ஜியம் சென்றடைந்தார். அங்கு ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஜோஸ் மேனுவல் பரோஸோவைச் சந்தித்து அவர் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லெட்டா, வேலைவாய்ப்பின்மைப் பிரச்சனை ஐரோப்பிய நாடுகளின் மிகப்பெரிய சிக்கலாக உருவெடுத்து வருவதாகக் கூறினார். ஜூன்மாதம் நடைபெற உள்ள மாநாட…
-
- 0 replies
- 335 views
-
-
அமெரிக்காவில், மேதினத்தை முன்னிட்டு நடைபெற்ற பேரணியில், தொழிலாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் ஏற்பட்ட மோதலால் வன்முறை வெடித்தது. வாஷிங்டன் நகரின் Seattle பகுதியில் நடைபெற்ற பேரணியில், தொழிலாளர்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். பேரணியில் வந்து கொண்டிருந்த சிலர் காவல்துறையினரை நோக்கிக் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது. கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் காவல்துறையினர் கூட்டத்தினரைக் கலைத்தனர். பொருட்களை சேதப்படுத்திய இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட 13 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். http://puthiyathalaimurai.tv/violence-held-in-may-day-rally-in-united-states
-
- 2 replies
- 454 views
-
-
ஆந்திர பிரதேச மாநிலத்தில் 10 ரூபாய் தர மறுத்த தாயை அவரது மகனே தீயிட்டு எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் உள்ள கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் துர்காபாய் (50), இவருக்கு அம்பேத்கர் (25) என்ற மகன் உள்ளான். எப்போதும் தாயிடம் செலவுக்கு பணம் வாங்கி செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்த அம்பேத்கர், நேற்று செலவுக்காக அவரது தாயிடம் 10 ரூபாய் கேட்டுள்ளார். மகன் கேட்ட 10 ரூபாயை கொடுக்க துர்காபாய் மறுத்ததால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அம்பேத்கர், துர்காபாயின் மீது கேரோசினை ஊற்றி தீயிட்டு எரித்தார். துர்காபாயின் அலறல் சத்தம் கேட்டு அவரது வீட்டிற்கு விரைந்த அக்கம் பக்கத்தினர், அவரை உடனடியாக மருத்துவமனையில் …
-
- 0 replies
- 420 views
-
-
தாய்லாந்து துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலி 2 மே, 2013 தாய்லாந்தின் தென்பகுதியில் பட்டாணி என்னும் கிராமத்தில் ஒரு ஆயுததாரி துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் 3 வயது சிறுவன் ஒருவன் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். கிராமக் கடை ஒன்றின் முன்பாக எழுந்தமானமாக துப்பாக்கிப் பிரயோகம் செய்த அந்த துப்பாக்கிதாரி, பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றில் தப்பி ஓடியதாக உள்ளூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் பௌத்தர்களாவர். தாய்லாந்து அரசாங்கத்துக்கும், முஸ்லிம் பிரிவினைவாதிகளுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை ஒரு முடக்க நிலையை எட்டியதை அடுத்து இரு நாட்களில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட தாய்லாந்தின் தெற்கு மாகா…
-
- 0 replies
- 284 views
-
-
சிங்கப்பூரில் மக்கட் தொகையை உயர்த்தும் திட்டத்துக்கு எதிர்ப்பு 1 மே, 2013 சிங்கப்பூரில் மக்கட் தொகையை உயர்த்த அரசு வகுத்துள்ள திட்டத்துக்கு எதிராக நடைபெற்ற ஒரு அசாதாரணமான எதிர்ப்பு போராட்டத்தில் சுமார் 3000 பேர் பங்குபெற்றுள்ளனர். வெளிநாட்டினரைக் கொண்டு சிங்கப்பூரின் மக்கட் தொகையை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ஒரு நகரத்தை மட்டுமே நாடாகக் கொண்டுள்ள சிங்கப்பூர் ஏற்கெனவே ஜனநெருக்கடி மிகுந்த இடமாக உள்ளது என்று இந்தத் திட்டத்துக்கு எதிரானவர்கள் கூறுகிறார்கள். தற்போது அங்கிருக்கும் வெளிநாட்டவர்களாலேயே அங்கு ஊதியங்கள் உயராமல் நிலையாக உள்ளது என்றும், வீட்டின் விலைகள் இரட்டிப்பாகியுள்ளது என்றும் அவர்கள் கூறுகிறார…
-
- 0 replies
- 478 views
-
-
வங்கதேச தொழிலாளர் நலன்களில் ஐரோப்பிய ஒன்றியம் அக்கறை 1 மே, 2013 வங்கதேசத்தில் தொழிலாளர்களின் வேலைத்தள வசதி வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் கூறுகிறது. தலைநகர் டாக்காவுக்கு அருகே ஒருவாரத்துக்கு முன்னர் தொழிற்சாலைக் கட்டிடமொன்று இடிந்துவிழுந்ததில் 400க்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்தே ஐரோப்பிய ஒன்றியம் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. ஐரோப்பிய சந்தைக்கு பொருட்களை வரிகளின்றியும் கோட்டா முறை இன்றியும் ஏற்றுமதி செய்வதற்கான வணிக முன்னுரிமைத் திட்டத்தின் கீழ் வங்கதேசத்தில் தொழிலாளர்களின் நிலைமையைக் கண்காணிக்கும் வேலைகளை முன்னெடுக்க முடியும் என்று ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையொன்று கூறுகிறது. இதன்மூலம் அ…
-
- 0 replies
- 323 views
-
-
வங்கதேசம் : ஆடைத் தொழிலாளர் வேலைக்கு திரும்பினர் 2 மே, 2013 - 06:58 வங்கதேசத்தில் 8 நாட்களுக்கு முன்னதாக கட்டிடம் இடிந்ததில் 400க்கும் அதிகமானோர் இறந்துபோன சம்பவத்தை அடுத்து, அங்கு மீண்டும் துணி ஆலைகள் முதல் தடவையாக தமது பணிகளை தொடங்கியிருக்கின்றன. இடிந்துபோன கட்டிடத்தின் உரிமையாளருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும், துணி ஆலைகளில் பாதுகாப்பு தரங்கள் உயர்த்தப்பட வேண்டும் என்றும் கோரி ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் வேலைக்கு திரும்ப வேண்டும் என்று வங்கதேச பிரதமர் ஷேக் கசீனா கோரிக்கை விடுத்திருந்தார். பணியாளர் பணிக்கு திரும்பாவிட்டால், வணிக நஸ்டம் காரணமாக ஆலை உரிமையாளர்கள் ஆலைகளை மூட நேர்ந்தால், பணியாளர்கள் தமது …
-
- 0 replies
- 293 views
-
-
காஷ்மீர் மாநிலம் லடாக்கில் சீன ராணுவம் 19 கிலோ மீட்டர் தூரம் இந்திய பகுதிக்குள் நுழைந்து முகாம் அமைத்துள்ளது. தற்போது மேலும் ஒரு முகாமையும் அந்த பகுதியில் அமைத்திருக்கிறது. அந்த பகுதியில் இருந்து வெளியேறும்படி கேட்டுக் கொண்டும், சீனா வெளியேற மறுத்து வருகிறது. இதனால் அங்கு பதட்டமான நிலைமை நிலவி வருகிறது. சீனா ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் தற்போது சீன ராணுவம் லாரிகளை அனுப்பி வீரர்களுக்கு தேவையான பொருட்களை அனுப்பி வருகிறது. மேலும அந்த லாரிகள் வரும் வழித்தடத்தில் இந்திய பகுதிக்குள் சாலைகள் அமைக்கும் முயற்சியும் நடந்து வருகிறது. சீனா ராணுவம் 19 கிலோ மீட்டர் தூரம் இந்திய பகுதிக்குள் நுழைந்திருப்ப தன் மூலம் 750 சதுர கிலோ மீட்டர் பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளது. இது டெ…
-
- 7 replies
- 1.1k views
-
-
புதுடெல்லி: 1984 ஆம் ஆண்டு நிகழ்ந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கிலிருந்து சஜ்ஜன் குமார் விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சோனியா காந்தி வீட்டு முன்பு சீக்கியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பாக சஜ்ஜன் குமார் மீது தொடரப்பட்ட 3 வழக்குகளில், ஒன்றிலிருந்து அவரை விடுவித்து டெல்லி நீதிமன்றம் நேற்றுமுன் தினம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து சஜ்ஜன் குமார் விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீக்கிய அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வீட்டு முன்பு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸ் தடுப்புகளை மீறி செல்ல முயன்றவர்களை போலீ…
-
- 1 reply
- 349 views
-
-
பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்தியரான சரப்ஜித் சிங், சக கைதிகளால் அடித்துக் கொல்லப்பட்டார். அவரது உடல் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்கு செய்யப்பட்டு தகனம் செய்யப்படுகிறது. சிறையில் நடந்த சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் அரசு விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், சரப்ஜித் சிங்கின் சகோதரி, பாகிஸ்தான் மீது சரமாரியாக குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:- பாகிஸ்தான் ஒரு கோழை. அந்நாட்டிற்கு எதிராக ஒரு போர் நடத்த வேண்டிய நேரம் இது. எனது சகோதரர் சரப்ஜித் சிங் இப்போது தியாகியாகிவிட்டார். ஏனென்றால், அவர் இந்தியர் என்பதால் அவர் மீது குற்றச்சாட்டுகள் உருவாக்கப்பட்டன. இன்று அவரை பாகிஸ்தானில் தேர்தலுக்காக சர்தாரி கொலை செய்த…
-
- 3 replies
- 500 views
-