உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26859 topics in this forum
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை தொடர்ந்தும் நீடிப்பு பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதற்கான அதன் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், ஐரோப்பிய ஒன்றியம் (EU) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடித்துள்ளது. இதற்கு கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சு, பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய முயற்சிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவு மற்றும் அதன் தாக்கங்களை ஒப்புக் கொண்டு இன்று (27) அறிக்கை ஒன்றை வெளியிட்டது. நிதி மற்றும் பிற நிதி சொத்துக்கள் இந்நிலையில், பட்டியலிடப்பட்ட பிற நபர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களுடன் விடுதலைப் புலிகளும் தொடர்ந்து நிதித் தடைகளை எதிர்கொள்வதையே இந்த புதுப்பித்தல் அர்த…
-
-
- 51 replies
- 3.3k views
- 2 followers
-
-
உக்ரெய்னுக்கு 160கோடி டொலரை அனுப்பிய ஐரோப்பிய ஒன்றியம் முடக்கப்பட்ட ரஷ்யாவின் சொத்துக்களிலிருந்து கிடைக்கும் இலாபத்தைக் கொண்டு உக்ரெய்னுக்கு முதல் முறையாக 160கோடி டொலரை ஐரோப்பிய ஒன்றியம் அனுப்பியுள்ளது. இதுகுறித்து ஐரோப்பிய ஆணையத் தலைவர் ursula von der leyen நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,’ஐரோப்பிய யூனியன் எப்பொழுதும் உக்ரெய்னுக்கு ஆதரவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ரஷ்யாவின் முடக்கப்பட்ட சொத்துக்களிலிருந்து கிடைக்கப்பெற்ற பணத்தை அந்நாட்டுக்கு அனுப்பியுள்ளதாகவும், ரஷ்யாவிடமிருந்து பாதுகாப்பைப் பெறவும் சேதங்களை மறுசீரமைக்கவும் இந்தத் தொகை அனுப்பப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உக்ரெய்னையும் ஐரோப்பாவையும் ரஷ்யாவ…
-
-
- 18 replies
- 1.4k views
-
-
அதிவிரைவு புகையிரம் செல்லும் பாதைகள் சேதம்-ஒலிம்பிக் விழாவிற்கு பாதிப்பா? பிரான்சின் பல்வேறு பகுதிகளில் அதிவிரைவு புகையிரம் செல்லும் பாதைகளில் மர்ம நபர்கள் இன்று சேதப்படுத்தியுள்ளனர் தண்டவாளத்தை சேதப்படுத்துதல், தீவைத்தல் போன்ற சம்பவங்களால் புகையிர போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன் பல புகையிரதங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவங்களுக்கு அதிகாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் இது ஒலிம்பிக் விழாவிற்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். https://athavannews.com/2024/1393721 ############ ################# …
-
- 0 replies
- 240 views
-
-
25 JUL, 2024 | 05:04 PM மேற்குக் கரையில் பாலஸ்தீனர்கள் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்ட ஏழு இஸ்ரேலியர்கள் மீது ஆஸ்திரேலியா பொருளாதாரம் மற்றும் பயணத் தடைகளை விதித்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசங்களில் அத்துமீறிய குடியேற்றங்கள் சர்வதேச சட்டத்துக்கு முரணானது எனவும், மத்திய கிழக்கில் நீடித்த அமைதிக்கு அது தடையாக இருக்கும் எனவும் ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே தான் பாலஸ்தீனர்களுக்கு எதிராக குடியேற்ற வன்முறை, தாக்குதல் மற்றும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட மேற்படி நபர்களுக்கு எதிராக பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இவ்வாறான வன்முறைச் செயல்களில் ஈடுபடும் தரப்புகளுக்கு …
-
- 0 replies
- 269 views
- 1 follower
-
-
பாகிஸ்தான் இளைஞர்கள் மீது பிரித்தானிய பொலிஸார் தாக்குதல்! பிரித்தானியாவில் மான்செஸ்டர் விமானநிலையத்தில் பொலிஸார் அதிகாரிகள் சிலர், பாகிஸ்தானை சேர்ந்த இளைஞர்களை காலால் தாக்கும் காணொளியொன்று சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் நேற்றிரவு நடத்தப்பட்டுள்ள நிலையில், ரோச்டேல் பொலிஸ் நிலையத்திற்கு வெளியே, நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரி ஒருவர், பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வீடியோவில், இளைஞர் ஒருவர் தரையில் விழுந்து கிடப்பதையும், அவரை நோக்கி இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள், மின்சாரம் பாய்ச்சும் துப்பாக்கியை நீட்டும் க…
-
- 4 replies
- 440 views
-
-
பட மூலாதாரம்,TAIWAN COASTGUARD ADMINISTRATION படக்குறிப்பு,சூறாவளி காரணமாக தாய்வானில் கரை ஒதுங்கிய ஒரு கப்பல் 25 ஜூலை 2024, 06:12 GMT புதுப்பிக்கப்பட்டது 37 நிமிடங்களுக்கு முன்னர் தாய்வானின் தெற்கு கடலில் சரக்கு கப்பல் மூழ்கியதால் காணாமல் போன 9 பேரை, மீட்பு குழுவினர் தேடி வருகின்றனர். கேமி சூறாவளி தாய்வானை தாக்கியபோது, இந்த சரக்கு கப்பல் தெற்கு துறைமுக நகரமான காவ்ஷியுங்கில் இருந்துள்ளது. தங்களது கடற்பகுதியில் மூழ்கிய ஃபு ஷுன் என்ற சரக்குக் கப்பலில் மியான்மர் நாட்டை சேர்ந்த 9 பேர் இருந்ததாக தாய்வானின் கடலோர காவல்படை கூறியுள்ளது. அத்துடன் இந்த சூறாவளியில் மேலும் 3 வெளிநாட்டு கப்பல்கள் அடித்து செல்லப்பட்டதாகவும், ஆ…
-
- 0 replies
- 232 views
- 1 follower
-
-
25 JUL, 2024 | 10:42 AM அமெரிக்க காங்கிரசில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு உரையாற்றியுள்ள அதேவேளை வோசிங்டன் டிசியில் கடும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்க கொடியையும் பெஞ்சமின் நெட்டன்யாகுவின் உருவப்பொம்மையையும் எரித்து தங்கள் சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஹமாஸ் கமிங் என்ற வாசகத்தை எழுதிய ஆர்ப்பாட்டக்காரர்கள் கொலம்பசின் சிலைமீது ஏறியுள்ளனர். வோசிங்டனின் பிரதான புகையிரத நிலையத்தின் முன்னால் பாலஸ்தீன கொடிகள் ஏற்றப்பட்டதாகவும்,நெட்டன்யாகுவின் கொடும்பாவி எரிக்கப்பட்டதாகவும் சிஎன்என் தெரிவித்துள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்…
-
- 2 replies
- 367 views
- 1 follower
-
-
கடவுச்சீட்டு தரவரிசைப் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம்! உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு தரவரிசைப் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது. அந்தவகையில் சிங்கப்பூர் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி 195 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும் என தெரிவிக்கபட்டுள்ளது. இதில் இலங்கை கடவுச்சீட்டு 84ஆவது இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் தரவுகளின் அடிப்படையில் உலகின் சக்திவாய்ந்த 199 நாடுகளின் கடவுச்சீட்டுகளின் தரவரிசையை ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது. அந்த வகையில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு தரவரிசையில் சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது. மேலும், பிரான்ஸ், இத்தாலி, ஜ…
-
- 1 reply
- 255 views
- 1 follower
-
-
24 JUL, 2024 | 08:48 PM (ஆர். சேதுராமன்) பலஸ்தீனத்தின் தேசிய ஒற்றுமைக்காக இணைந்து செயற்படுவது தொடர்பில் ஃபத்தா உட்பட ஏனைய பலஸ்தீன அமைப்புகளுடன் சீனாவில் தான் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளதாக ஹமாஸ் இயக்கம் நேற்று அறிவித்தது. பெய்ஜிங்கில் கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம், யுத்தம் முடிவடைந்த பின்னர் காஸாவை எவ்வாறு ஆட்சி செய்வது என்பது தொடர்பானது என சீனா தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்துக்காக, ஹமாஸின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான மூசா அபு மர்சூக், பலஸ்தீன ஜனாதிபதி அப்பாஸின் ஃபத்தா கட்சியின் தலைவர்களில் ஒருவரான மஹ்மூத் அல் அலோல் மற்றும் மேலும் 12 பலஸ்தீன குழுக்களின்…
-
- 0 replies
- 320 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 24 JUL, 2024 | 11:33 AM எத்தியோப்பியாவில் ஏற்பட்ட இரண்டு மண்சரிவுகளில் சிக்கி 229 பேர் உயிரிழந்துள்ளதோடு, அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பலத்த மழையினால் எத்தியோப்பியாவில் கோஃபா மண்டலத்தின் தொலைதூர மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை மற்றும் திங்கட்கிழமை காலை மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், மண்சரிவுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகின்றன. 10 பேர் உயிருடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் தேடுதல் பணியில் ஈடுப்பட்டுவருகின்றனர். கோஃபா என்பது தெற்கு எத்தியோப்பியா என்று…
-
- 1 reply
- 226 views
- 1 follower
-
-
23 JUL, 2024 | 04:58 PM (நா.தனுஜா) கறுப்பு ஜுலை கலவரங்களால் ஏற்பட்ட உளவியல் ரீதியான பாதிப்பு அடுத்தடுத்த தலைமுறைகளாகக் கடத்தப்படுவதாகவும், அவற்றை ஒருபோதும் மறக்கடிக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ள பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் உமா குமாரன், இவ்விடயத்தில் நீதிக்கான தமது போராட்டம் தொடரும் என உறுதியளித்துள்ளார். 1983 ஆம் ஆண்டு ஜுலை மாதம் தமிழ் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட 'கறுப்பு ஜுலை' கலவரங்கள் அரங்கேறி இன்றுடன் (23) 41 வருடங்கள் கடந்திருக்கின்றன. தமிழர்கள் மத்தியில் மிகமோசமான தாக்கத்தையும் , தமிழர் வரலாற்றில் முக்கிய திருப்பங்களையும் ஏற்படுத்திய இக்கலவரங்கள் தொடர்பில் இன்னமும் நீதியோ, பொறுப்புக்கூறலோ நிலைநாட…
-
- 2 replies
- 430 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 23 JUL, 2024 | 10:05 PM இலங்கையில் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களிற்கு எதிரான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஸ்பிரயோகங்கள் குறித்து பொறுப்புக் கூறவேண்டும் என கனடா தொடர்ந்தும் வேண்டுகோள் விடுக்கும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கறுப்பு ஜூலையின் 41 வது வருடத்தை குறிக்கும் விதத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது- 41வருடங்களிற்கு முன்னர் இன்றைய தினம் இலங்கையின் கொழும்பில் தமிழ் பொதுமக்கள் வர்த்தக நிலையங்களை இலக்குவைத்து தாக்குதல்கள் ஆரம்பமாகின. ஆயிரக்கணக்கான அப்பாவிகளின் உயிர்கள் இழக்கப்பட்டன, மேலும் பல தமிழர்கள் காயமடைந்தனர், ப…
-
- 2 replies
- 241 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்காவில் சாண்ட்ரா (சாண்டி) ஹெம்மி செய்யாத கொலைக் குற்றத்திற்காக 43 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டார். கட்டுரை தகவல் எழுதியவர், டாம் மெக்ஆர்தர் பதவி, பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் செய்யாத கொலைக்காக 43 வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்த பெண் ஒருவரின் தண்டனை ரத்து செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இணையத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. நவம்பர் 1980இல், அமெரிக்காவின் மிசௌரி மாகாணத்தில் செயின்ட் ஜோசப் பகுதியை சேர்ந்த நூலகப் பணியாளர் பாட்ரிசியா ஜெஷ்கேவைக் கத்தியால் குத்திய வழக்கில் சாண்ட்ரா ஹெம்மி என்ற …
-
- 0 replies
- 455 views
- 1 follower
-
-
கனடாவின் எட்மன்டன் நகரில் அமைந்துள்ள இந்து கோயில் ஒன்று சேதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அந்தக் கோயில் மீது கருப்பு மையினால் சில எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தை அடுத்து, அதிகரித்து வரும் பிரிவினைவாத போக்கை தடுக்கும் வகையில். இந்தச் செயலை செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கனடா அரசுக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் அரசு கோரியுள்ளது. இதற்கு கண்டனமும் தெரிவித்துள்ளது. “எட்மன்டன் நகரில் உள்ள BAPS சுவாமிநாராயண் கோயிலில் இந்த செயல் நடந்துள்ளது. இதில் முரணான வாசகங்கள் சிலவும் கோயிலின் சுவற்றில் எழுதப்பட்டுள்ளது. இந்த நாசவேலையை விஎச்பி கனடா கடுமையாகக் கண்டிக்கிறது. நாட்டில் அமைதியை விரும்பும் இந்து சமூகத்துக்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் வகையிலான இந்த…
-
- 8 replies
- 678 views
- 1 follower
-
-
பிரித்தானியாவில், 60,000 சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை நாட்டுக்குள் அனுமதிக்க தீர்மானம்! பிரித்தானியாவில், 60,000 சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை நாட்டுக்குள் அனுமதிக்க, புதிய அரசாங்கமான தொழிலாளர் அரசாங்கம் (Labour Party) தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. பிரித்தானியாவின் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் (Keir Starmer) புதிய குடியேற்றத் திட்டங்களின் கீழ் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ருவாண்டா நாடு கடத்தல் திட்டமானது முன்னதாக கன்சர்வேடிவ் கட்சி (Conservative Party) அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தை கைவிடுவதே தற்போது புதிய பிரதமராக பதவியேற்றுள்ள கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) அரசாங்க…
-
-
- 12 replies
- 736 views
-
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார். 81 வயதான ஜனாதிபதியின் சகிப்புத்தன்மை மற்றும் மன திறன்கள் குறித்து பல வாரங்களாக கவலைப்பட்ட பின்னர் ஜனாதிபதி ஜோ பிடனின் ஜனாதிபதி போட்டியில் இருந்து விலகியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிராக திறம்பட பிரச்சாரம் செய்வதற்கும் மேலும் நான்கு ஆண்டுகளுக்கு நாட்டை ஆளுவதற்கும் அவரது திறன் குறித்தும் பல சந்தேகங்கள் உள்ளன. பிடனின் முடிவு, அவரது எஞ்சிய காலத்திற்கான ஜனாதிபதியின் கடமைகளை நிறைவேற்றுவதற்கான அவரது திறனைப் பற்றிய கேள்விகளை எழுப்பக்கூடும். பல தசாப்தங்களில் ஒரு அமெரிக்க ஜனாதிபதி மறுதேர்தல் ஓட்டத்தில் இருந்து வெளியேறுவது இதுவே முதல் முறை, ஜனாதிபதி லிண்டன் ஜான்சன் 1968 இல் இரண்டாவது முழு பதவிக்காலத்தை …
-
-
- 142 replies
- 11k views
- 3 followers
-
-
மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றம் – ஏமன் துறைமுகத்தில் இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல்! ஏமன் துறைமுகத்தில் இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மத்திய கிழக்குப் பகுதியில் தற்போது பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஹவுதிகள் கட்டுப்பாட்டிலுள்ள ஏமன் துறைமுகமான ஹொடெய்டாவில் இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன. இதில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நீடித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகரில் சமீபத்தில் ஹவுதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனல். இதற்கு பதிலடி கொடுக்க…
-
- 0 replies
- 252 views
-
-
உக்ரைன் ஜனாதிபதி – டிரம்ப் விசேட தொலைபேசி உரையாடல்! ரஷ்ய பயங்கரவாதத்திற்கு எதிரான எங்களுடைய திறனை வலுப்படுத்த உதவியமைக்கு அமெரிக்காவுக்கு உக்ரைன் எப்போதும் நன்றியுடன் இருக்கும் என ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பரில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளதுடன், இதில், குடியரசு கட்சிக்கான வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தேர்தலை முன்னிட்டு, பல்வேறு வெளிநாட்டு தலைவர்களிடம் டிரம்ப் ஆதரவு கோரி பேசி வரும் நிலையில், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி மற்றும் டிரம்ப் ஆகிய இருவரும் தொலைபேசி வழியே பேசி கொண்டுள்ளனர். அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலுக்கான குடியரசு கட்சிக்கான வேட்பாளராக நியமிக்கப்பட்டதற்காக, எ…
-
- 0 replies
- 241 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜெஸ் பார்க்கர் மற்றும் ஜேம்ஸ் வாட்டர்ஹவுஸ் பதவி, பிபிசி செய்தியாளர்கள், பெர்லின், கீவ் நகரங்களில் இருந்து 3 மணி நேரங்களுக்கு முன்னர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபரானால் அது ஐரோப்பாவில் என்ன விளைவை ஏற்படுத்தும்? அமெரிக்காவில் அதிகார மாற்றம் ஏற்பட்டால் இந்த சவாலை எதிர்கொள்ள ஐரோப்பிய தலைவர்கள் மற்றும் வியூக வகுப்பாளர்கள் ஏற்கனவே தயாராகி வருகின்றனர். டொனால்ட் டிரம்ப் ஓஹியோவைச் சேர்ந்த செனட்டர் ஜே.டி.வான்ஸை துணை அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுத்தபோது, அதிபரான பிறகு டிரம்பின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது குறித்த தெளிவான செய்தி ஐரோப்பாவுக…
-
- 0 replies
- 311 views
- 1 follower
-
-
19 JUL, 2024 | 10:13 PM பாலஸ்தீனபகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளமை சட்டவிரோதமான செயல் என நீதிக்கான சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையிலும் ஜெரூசலேத்திலும் குடியேற்றங்களை ஏற்படுத்துவதை இஸ்ரேல் நிறுத்தவேண்டும் என உத்தரவிட்டுள்ள நீதிமன்றம் அந்தபகுதிகளிலும் காசாவிலும் சட்டவிரோதமான ஆக்கிரமிப்பை இஸ்ரேல் விரைவில் முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. பாலஸ்தீனபகுதியில் இஸ்ரேல் தொடர்ந்தும் பிரசன்னமாகியிருப்பதை சட்டவிரோதமானதாக கருதுவதாக நீதிமன்றத்தின் தலைவர் நவாஸ் சலாம் தெரிவித்துள்ளார். மிகவிரைவில் தனது சட்டவிரோத ஆக்கிரமிப்பை முடிவிற்கு கொண்டுவரவேண்டிய கடப்பாடு இஸ்ரேலிற்…
-
- 2 replies
- 438 views
- 1 follower
-
-
காசாவில் (Gaza) போலியோவை ஏற்படுத்தும் வைரஸ் இருப்பது கண்டறிப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. யுனிசெஃப் (UNICEF) நிறுவனத்துடன் இணைந்து கழிவுநீர் மாதிரிகளில் நடத்தப்பட்ட சோதனையில் இது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், கழிவுநீரில் வைரஸ் இருப்பதும், குடிநீரின் பற்றாக்குறையும் சேர்ந்து ஆயிரக்கணக்கானோர் நோய்த்தொற்றுக்கு ஆளாகும் அபாயம் உள்ளதாக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் தாக்குதல் இதன்படி, இஸ்ரேலின் (Israel) தாக்குதலை நிறுத்தவும், கழிவுநீர் அமைப்பை சீர் செய்யவும், இடம்பெயர்ந்த பலஸ்தீனியர்கள் தஞ்சம் அடைந்துள்ள நிரம்பிய முகாம்களுக்கு குடிநீரை வழங்கவும் இஸ்ரேலுக்கு அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. …
-
- 1 reply
- 371 views
- 1 follower
-
-
அணு ஆயுதம் வைத்துள்ள இஸ்லாமிய நாடு பிரித்தானியா – ஜேடி வேன்ஸ் அணு ஆயுதம் வைத்துள்ள ஒரு இஸ்லாமிய நாடு பிரித்தானியா என, அமெரிக்க குடியரசு கட்சி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜேடி வேன்ஸ் (JD Vance) தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், குடியரசுக் கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக 39 வயதுடைய ஜே.டி.வேன்ஸ் அண்மையில் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், கூட்டமொன்றில் உரையாற்றிய ஜேடி வேன்ஸ், அணு ஆயுதம் பெறும் முதல் இஸ்லாமிய நாடு எது என்பது குறித்து தனது நண்பர் ஒருவருடன் விவாதித்ததாக குறிப்பிட்டுள்ளார். இதன்போது, முதலில் ஈரான் அல்லது பாகிஸ்தானாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால், உண்மையில், தொழிலாளர் கட்சி ஆட்…
-
- 0 replies
- 314 views
-
-
Published By: RAJEEBAN 19 JUL, 2024 | 01:11 PM பாரிய தகவல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சர்வதேச அளவில் வங்கிகள் விமானசேவைகள் ஊடக நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவுஸ்திரேலியாவே பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. லண்டனின் பங்குசந்தை பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் அவசரசேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அவுஸ்திரேலியா மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது, விமானசேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன, வணிக வளாங்களில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன, கணிணிகள் செயல் இழந்துள்ளதால் ஊடக நிறுவனங்கள் நெருக்கடியை எதிர்கொள்கின்றன. செயல் இழப்பிற்கான காரணம் சரியாக தெரியவராத போதிலும் பாதிக்கப்பட்ட பலர் மைக்ரோசொப்டின…
-
-
- 20 replies
- 2.2k views
- 1 follower
-
-
அவுஸ்திரேலியாவின் விர்ஜின் விமான நிறுவனத்தில் இணைந்துள்ள பெண்ணொருவர் தற்போது சமூக ஊடகங்களில் அதிக பாராட்டையும், நன்மதிப்பையும் பெற்றுவருகிறார். விசேட தேவையுடைய அலே சேயர்ஸ் என்ற குறித்த பெண் தனது திறமையால் விமான நிறுவனத்தில் கடமைகளை பொறுப்பேற்று கொண்டுள்ளார். இந்நிலையில் அவர் சீருடையுடன் உள்ள புகைப்படமானது தற்போது சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. விர்ஜின் விமான நிறுவனம் அலே சேயர்ஸ் பிறப்பிலிருந்தே விசேட தேவை உடைய பெண்ணாக காணப்பட்டுள்ளார். எனினும் தனது தனித்துவ திறமையாலும், அவரது செயற்பாட்டினாலும் சமூகத்திற்கு எடுத்துக்காட்டாக மாறியுள்ளார். அலே சேயர்ஸின் தந்தை ஒரு தொழிலதிபர் ஆவார். தனது மகளின் திறமைகளை வெளிக்கொண்…
-
- 0 replies
- 230 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் 5 மணி நேரங்களுக்கு முன்னர் ஓமன் கடற்கரையில் எண்ணெய் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 13 இந்தியர்கள் உள்பட 16 பணியாளர்களை காணவில்லை. அவர்கள் தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்திய வெளியுறவு அமைச்சகம் ஓமன் கடல் அதிகாரிகளுடன் சேர்ந்து இந்த நடவடிக்கையை ஒருங்கிணைத்து வருவதாக பிபிசியிடம் பேசிய இந்திய அதிகாரி தெரிவித்தார். ஓமனின் ராஸ் மத்ரக்கா தீபகற்பத்தில் இருந்து தென்கிழக்கே 25 கடல் மைல் தொலைவில் பிரஸ்டீஜ் ஃபால்கன் (Prestige Falcon) என்ற எண்ணெய் டேங்கர் கவிழ்ந்ததாக ஓமன் அதிகாரிகள் தெரிவித்தனர். காணாமல் போன 16 பணியாளர்களில் 3 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள். …
-
-
- 2 replies
- 323 views
- 1 follower
-