உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26679 topics in this forum
-
புதுடெல்லி: டெல்லியில் 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து போராட்டம் நடத்திய பெண் ஒருவர் மீது, டெல்லி போலீஸ் அதிகாரி கன்னத்தில் அறைந்து தாக்கியதற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லியில் பாலியல் பலாத்கார நிகழ்வுகள் தொடர் கதையாகி வரும் நிலையில், கடந்தவாரம் அண்டை வீட்டு நபரால் 4 நாட்கள் அடைத்து வைத்து 5 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பாதிக்கப்பட்ட சிறுமி அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைக்கு வெளியே போராட்டம் நடைபெற்றது. அப்போது கணடன முழக்கம் எழுப்பிய இளம்பெண் ஒருவரை அங்கு பணியில் இருந்த போலீஸ் உதவி கமிஷனர் அகலாவாத் சரமாரியா…
-
- 3 replies
- 416 views
-
-
கொல்கத்தா: 'நிருபேந்திர நாராயண சென் மகனாகிய நான்...' என்று துவங்கும் ஒரு கடிதம் - கொல்கத்தா நிஜாம் பேலஸில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கு எழுதப்பட்டுள்ளது. 'சுதிப்தோ சென்' என்ற சர்ச்சைக்குரிய மனிதர் எழுதியதாகக் கூறப்படும் இந்தக் கடிதம், 'அரசியல்வாதிகளாலும், அவர்களைச் சார்ந்த சில பிரபலங்களாலும் நான் பயங்கரமாக மிரட்டப்பட்டேன். அதனால் அடுக்கடுக்காக பல மோசடிகளில் இறங்கினேன். மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட், ஒரிஸ்ஸா போன்ற மாநிலங்களில் டுபாகூர் பிசினஸ்களை ஆரம்பித்தேன். மக்களின் பணத்தை இந்த டுபாகூர் கம்பெனிகளின் பெயரால் திரட்டினோம். தற்போது என்னை மட்டுமே சட்டம் குறி வைக்கும் நிலையில்... எந்த நேரமும் நான் தற்கொலை செய்துகொள்ளும் நிலையில் உள்ளதால், இந்தக் கடிதத்தையே எனது மனப்பூர்வமான வ…
-
- 0 replies
- 559 views
-
-
மலேசியாவில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் தனது குடும்பத்தோடு ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது மர்ம நபர்களால் கொடூரமாக சுட்டுக்கொல்லபட்டார். தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஏ.சிவா (வயது 36), டாக்சி டிரைவர். இவர் தனது மனைவி, 8 வயது மகளுடன் மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் வசித்து வந்தார். இவர் ஒரு உணவு விடுதியில் தனது மனைவி, மகளுடன் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த 2 முகமூடி ஆசாமிகள் சிவாவை சரமாரியாக சுட்டு கொன்று விட்டு தப்பினர். மற்றொரு நபரை சுட்டுக்கொல்லும் முயற்சியில் சிவா தவறுதலாக பலியாகி இருக்கக்கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். விசாரணையில், சிவா மர…
-
- 1 reply
- 557 views
-
-
பீகார் மாநிலத்தில் ஒரு குடும்பத்தை பழிவாங்கும் எண்ணத்தில், ஒரு தாய் மற்றும் அவரது மகளை ஆறு பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய கொடூரம் நடந்துள்ளது. பீகார் மாநிலம் சம்பரன் மாவட்டத்தை சேர்ந்த ஒரு காதல் ஜோடி ஊரைவிட்டு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வெளியேறியது. இச்சம்பவத்தால் பெரும் அவமானத்திற்குள்ளான பெண்ணின் குடும்பத்தார், அவர் இருக்கும் இடத்தை கூறும்படி அந்த ஆணின் தாயாரிடம் தொடர்ந்து விசாரித்து வந்தனர். தன் மகன் எங்கு இருக்கிறான் என தெரியாது என அந்த தாய் பல முறை கூறியதை நம்பாத பெண் வீட்டார், அவர்களது பெண்ணை ஏமாற்றி அழைத்து சென்ற ஆணின் குடும்பத்தை பழிவாங்கும் எண்ணத்தில், அந்த ஆணின் தாய் மற்றும் தங்கையை கடத்தி சென்று பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர்…
-
- 1 reply
- 503 views
-
-
சீனாவின் தென்பகுதியில் இரு திபெத்திய பிக்குமார் தமக்கு தாமே தீமூட்டி தற்கொலை செய்ததாக திபெத்திய செயற்பாட்டு அமைப்பு ஒன்று கூறியுள்ளது. திபெத்திய பீடபூமிக்கு அருகே சிச்சுவான் மாகாணத்தில் தமது மடாலயத்தில் உள்ள மண்டபத்தில் அவர்கள் இதனைச் செய்ததாக லண்டனைத் தளமாகக் கொண்டு செயற்படும், திபெத்திய விடுதலைக்கான அமைப்பு கூறியுள்ளது. அண்மைய வருடங்களில் சீன எதிர்ப்பு நடவடிக்கைகளின் குவியமாக இந்த மடாலயம் திகழ்ந்துவருகிறது. அந்தப் பிராந்தியத்தில் சீனா ஒரு பெரும் பாதுகாப்பு நடவடிக்கையையும் மேற்கொண்டது. சீனாவின் அடக்கு முறை ஆட்சிக்கு எதிரான தமது போராட்டமாக 2011 ஆம் ஆண்டு முதல் நூற்றுக்கும் அதிகமான திபெத்திய பிக்குகள் தீக்குளித்துள்ளார்கள். http://www.bbc.co.uk/tamil/global/201…
-
- 3 replies
- 324 views
-
-
தாஜ்மஹால் அருகே குண்டுவெடிப்பு: 2 பேர் பலி, ஒருவர் படுகாயம். ஆக்ரா: தாஜ்மஹால் அருகே குண்டுவெடித்ததில் 2 பேர் பலியாகினர், ஒருவர் படுகாயம் அடைந்தார். உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவின் தாஜ்கஞ்ச் பகுதியில் பழைய பொருட்கள் வைக்கும் கிடங்கு ஒன்று உள்ளது. இந்த கிடங்கில் இன்று திடீர் என்று குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் 2 பேர் பலியாகினர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார். காயம் அடைந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த குண்டுவெடிப்பு நடந்த இடம் காதல் சின்னமான தாஜ்மஹால் இருக்கும் இடத்தில் இருந்து 1.5 கிமீ தொலைவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நன்றி தற்ஸ்தமிழ்.
-
- 4 replies
- 542 views
-
-
கடந்த வாரம் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 50 பேர் வரை பலியாகியிருந்தனர். இதனை அடுத்து உடனடியாக சிறு சிறு அதிர்வுகள் ஏற்பட்டன. இதில் ஒரு கட்டமாக நேற்று புதன்கிழமை சற்று சக்தி வாய்ந்த மிதமான நிலநடுக்கம் ஒன்று ஆப்கானிஸ்தானின் மையமாகக் கொண்டு ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் தலைநகர் காபூலிலும் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்திலும் ஏன் இந்தியாவின் நியூடெல்லி வரை கூட உணரப்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் கழகமான USGS இன் கணிப்புப் படி 5.7 ரிக்டர் ஸ்கேலுடைய இந்தப் பூகம்பம் நிலத்துக்கடியில் 65Km ஆழத்தில் கிழக்கு ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் எல்லைக்கு அருகேயுள்ள முக்கிய நகரான ஜலாலாபாத்திற்கு வடமேற்கே 25Km தொலைவில் மையம் கொண்டு ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது. எனின…
-
- 0 replies
- 639 views
-
-
மெக்சிகோவின் மேற்கு பகுதியில் ஆத்திரமடைந்த ஆசிரியர்களின் குழு ஒன்று குவெரெரோ மாநிலத்தின் தலைநகர் சில்பசிங்கோவில் பல அரசியல் கட்சிகளின் தலைமை அலுவலகங்களை எரித்திருக்கிறது. கோடாரிகள் மற்றும் தடிகள் சகிதம் வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் செனட்டரின் அலுவலகங்களை தாக்கி கணினிகளை வெளியே வீசியிருக்கிறார்கள். மாநில நாடாளுமன்ற கட்டிடத்தை பல நூற்றுக்கணக்கான பொலிஸார் பாதுகாத்து வருகிறார்கள். அண்மைய கல்வி சீர்திருத்தம் மீளப்பெறப்பட வேண்டும் என்று ஆசிரியர்கள் கோருகிறார்கள். இந்தச் சீர்திருத்தத்தின்படி ஆசிரியர்கள் சில தொழில்சார் பரீட்சைகளை எழுதியாக வேண்டும். இது பணம் கொடுத்து ஆசிரியர் பணியைப் பெறும் ஊழலை ஒழிக்கும் நோக்கிலானது. http://www.bbc.co.uk/tamil/global/2013/04/130425_mex…
-
- 0 replies
- 333 views
-
-
ஸ்பெயினின் வேலையில்லா திண்டாட்ட வீதம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அங்குள்ள வேலை செய்யக்கூடியவர்களில் 27 வீதத்தினர் அதாவது 60 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். இந்த விபரங்கள் இந்த ஆண்டின் முதல் காலாண்டுக்கு உரியவையாகும். 5 வருடங்களுக்கு முன்னதாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ஸ்பெயினின் பொருளாதாரம் தடுமாறுகிறது என்பதனையே இது காட்டுவதாக செய்தியாளர்கள் கூறுகிறார்கள். அங்கு அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகள் குறித்து கடுமையான கோபம் காணப்படுகிறது. அந்த சிக்கன நடவடிக்கைகள்தான் நிலைமையை மேலும் மோசமாக்கியதாக அதன் விமர்சகர்கள் கூறுகிறார்கள். வியாழனன்று பிற்பகல் ஸ்பெயின் நாட்டு நாடாளுமன்றத்துக்கு முன்பாக நடக்கவிருக்கும் பெரும் ஆ…
-
- 0 replies
- 449 views
-
-
யூரோ நெருக்கடி ஏற்பட்டு 3 வருடங்களில், ஐரோப்பிய ஒன்றியத்தின் 6 பெரிய நாடுகளில், ஐரோப்பிய ஒன்றியத்துக்கான ஆதரவு பொதுமக்கள் மத்தியில் சரித்திரத்தில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. பாரம்பரியமாகவே ஐரோப்பிய ஒன்றிய ஆதரவு தேசங்களான ஜேர்மனி போன்றவற்றில் கூட ஒன்றியத்தின் மீதான நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக யூரோபரோமீட்டர் என்னும் அமைப்பினால் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு கண்டறிந்துள்ளது. பெருமளவிலான நம்பிக்கை வீழ்ச்சி ஸ்பெயினில்தான் ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரும் பொருளாதார மீட்பு நிதியை அடுத்து கொண்டுவரப்பட்ட சிக்கன நடவடிக்கைகளால் ஸ்பெயிலின் பெருமளவிலான மக்கள் வேலைகளை இழந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.bbc.co.uk/tamil/global/2013/04/…
-
- 0 replies
- 286 views
-
-
சீனாவின் மேற்கே ஷின்ஜியாங் பிராந்தியத்தில் ஏற்பட்ட வன்முறையுடனான மோதலில், பொலிஸ் அதிகாரிகள் உட்பட 21 பேர் கொல்லப்பட்டதாக சீன அரசாங்க ஊடகம் கூறியுள்ளது. உள்ளூரில் ஆயுதங்கள் வைத்திருப்பதாக சந்தேகிக்கப்படுபவர்களின் வீடுகளில் பொலிஸார் தேடுதல் நடத்த முற்பட்டவேளை செவ்வாயன்று பச்சு கவுண்டியில் ஒரு துப்பாக்கி மோதல் வெடித்தது. 8 தாக்குதலாளிகள் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களில் 10 பேர் உய்குர் இனத்தவராவர். இதனை ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என்று அந்த அறிக்கை கூறுகின்றது. கடந்த காலங்களில் இந்தப் பிராந்தியம் வன்செயல்களை நிறையக் கண்டிருக்கிறது. http://www.bbc.co.uk/tamil/global/2013/04/130424_chinaviolence.shtml
-
- 3 replies
- 549 views
-
-
7 வயது சிறுமியை கெடுத்த கொடூரன்: ஊர் மக்களே அடித்துக் கொன்றனர். ஜெய்ப்பூர்: 7 வயது சிறுமியை பாலியல் கொடூரம் புரிந்தவரை ஊர் மக்களே அடித்துக் கொன்றனர். ராஜஸ்தான் மாநிலம், ஹனுமன்கார்க் மாவட்டம், குடியா கிராமத்தைச் சேர்ந்த திரிலாக் சிங் (53). இவர் தனது பக்கத்து வீட்டில் உள்ள 7 வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்தார். அப்போது, சிறுமியின் அலறல் சத்தம் கேட்டவுடன், ஊர் மக்கள் வீட்டிற்குள் புகுந்து சிறுமியை மீட்டனர். ஆத்திரம் அடைந்த மக்கள், அந்த நபரை சரமாரியாக தாக்கினர். காயம் அடைந்த அவரை உடனே மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். கடந்த வாரம் பில்வாரா என்ற இடத்தில், பாலியல் கொட…
-
- 1 reply
- 476 views
-
-
மனிதக் கணினி சகுந்தலா தேவி காலமானார் உலகின் வேகமான மனிதக் கணினி என்று புகழ்பெற்ற கணிதப் புலமையாளர் சகுந்தலா தேவி காலமானார். அவருக்கு வயது 83. ஆரம்பத்தில் சுவாச நோயினால் பீடிக்கப்பட்டிருந்த அவர், பின்னர் இதய மற்றும் சிறுநீரக நோய்களினால் பாதிக்கப்பட்டிருந்தார். தொடர் இலக்கங்களைக் கொண்ட மிகச் சிக்கலான கணக்குகளுக்கு கூட மிகக்குறுகிய நேரத்தில் மனக்கண்ணிலேயே தீர்வுகாண்பதில் வல்லவர் என்று சகுந்தலா தேவி புகழ்பெற்றவர். அவர் சிறுவயதில் முறையான கல்வியைப் பெறவில்லை. ஆனால் தானாக வந்த அறிவைக் கொண்டே அவர் இந்தக் கணக்குகளைத் தீர்க்கப் பழகிக்கொண்டுள்ளார். பழைய நூற்றாண்டொன்றின் திகதியைக் கூறினால் மறுநொடியிலேயே அதன் நாளை (கிழமையை) சொல்லுமளவுக்கு அவர் திறமைகொண்டவர். …
-
- 13 replies
- 880 views
-
-
வெள்ளை மாளிகையில் இரண்டு குண்டுகள் வெடித்ததாகவும் , அமெரிக்க அதிபர் பராக் ஒபமா காயம் அடைந்ததாகவும் Associated Press பெயரால் போலி டுவிட்டர் நேற்று அனுப்பப் பட்டது. இதனால் சில முதலீட்டாளர்கள் 250B USD இழந்தனர். மீண்டும் சில நிமிடங்களில் அந்த இழப்பு மீள பெறப்பட்டது. சில முதலீட்டாளர்கள் 250B USD இனை பெற்றனர்.
-
- 0 replies
- 1.3k views
-
-
ஈரானில் கடந்த 1979-ம் ஆண்டு முதல் குடும்ப கட்டுப்பாட்டு திட்டம் அமல் படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தினால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப் படுவதாக அதிபர் மகமூத் அகமதி னேஜத் தெரிவித்தார். மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் மேலை நாடுகளுடன் அதற்கு இணையாக போட்டியிட முடியாத சூழ்நிலை உருவாகும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். அதைத் தொடர்ந்து ஈரான் தலைவர் அயதுல்லா அலி காமெனி இக்கருத்தை ஏற்றுக் கொண்டார். அதன்படி தற்போது 7 கோடியே 50 லட்சம் ஆக உள்ள ஈரானின் மக்கள் தொகையை 15 கோடியாக உயர்த்த வேண்டும். அதற்காக ஈரானில் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை ரத்து செய்யும் படி உத்தரவிட்டார். ஈரானில் மக்கள் தொகை பெருக்கத்துக்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப் பட்டுள்ளன. அதற்…
-
- 7 replies
- 598 views
-
-
“இந்திய பகுதியில் இருந்து உடனடியாக பின்வாங்கி செல்லுங்கள்” என இந்தியா, சீனாவிடம் வலியுறுத்தியுள்ளது. தற்போது, இந்திய எல்லைக்குள் ஆக்கிரமிப்பு செய்த இடத்தை விட்டு அசையாமல் நிற்கிறது சீனா! ஜம்மு – காஷ்மீர் லடாக் பகுதியின் கிழக்கே, கடல் மட்டத்திலிருந்து, 17,000 அடி உயரத்தில் உள்ள பனிமலைப் பகுதியில், கடந்த 15-ம் தேதி இந்தியாவுக்குள் ஆக்கிரமிப்பு செய்தது சீனா. 50 சீன ராணுவ வீரர்கள் நடைமுறை எல்லைக் கோட்டைத் தாண்டி, 10 கி.மீ. முன்னோக்கி இந்திய எல்லைக்குள் வந்து, கூடாரம் அடித்து முகாமிட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான பொருட்களை, சீனா ராணுவ ஹெலிகாப்டர்கள் இந்திய வான் பகுதிக்குள் பறந்து வந்து இறக்கிச் சென்றுள்ளன. இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைச்சு, சீனாவின் இந்த அத்துமீறல…
-
- 0 replies
- 665 views
-
-
சமூக வலைத்தளமான பேஸ்புக் மூலம் டெல்லியில் ஒரு பச்சிளம் குழந்தையை 8 லட்ச ரூபாய்க்கு விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லூதியானாவைச் சேர்ந்த நூரி என்பவர் கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதியன்று மருத்துவமனையில் பிறந்த தன் குழந்தையைக் காணவில்லை என்று காவல்துறையிடம் புகார் அளித்தார். இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி நூரியின் தந்தை பெரோஸ் கான், செவிலியர் சுனிதா, மருத்துவமனை ஊழியர் குர்ப்ரீத் சிங் ஆகியோரின் உதவியுடன் குழந்தையைக் கடத்தியுள்ளனர். பின்னர், ஃபேஸ்புக் மூலமாக டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் அமித் குமார் என்பவருக்கு குழந்தையின் புகைப்படத்தை காட்டி, அவருக்கு விற்றது தெரிய வந்தது. கணவரைப் பிரிந்த மகள் நுாரிக்கு மறுமணம் செய…
-
- 0 replies
- 636 views
-
-
பெங்களூரு: கர்நாடகாவில் ஒரு ரூபாய் விலையில் ரேஷன் கடையில் 30 கிலோ அரிசி வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. கர்நாடகா சட்டமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி மற்றும் அம்பிகா சோனி ஆகியோர் பங்கேற்றனர். பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணி வெளியிட்டார். அதில், ஒரு ரூபாய் விலையில் ரேஷன் கடையில் 30 கிலோ அரிசி வழங்கப்படும் என்றும் விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் வரை வட்டி இல்லாத வேளாண் கடன் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ரூ.5 லட்சம் வரை 3 சதவீத வட்டியில் விவசாயக் கடன் வழங்கப்பட…
-
- 1 reply
- 355 views
-
-
சிறிலங்கா, செசெல்ஸ் போன்ற நாடுகளில் நிலைகளை அமைக்க வேண்டும் என்ற இந்து சமுத்திரம் தொடர்பான இந்தியாவின் கொள்கை குறித்து சீனா கவலை கொண்டுள்ளதாக ஆயுதக் கட்டுப்பாடுகள் தொடர்பான அமெரிக்க நிபுணர் கலாநிதி லோறா சால்மன் தெரிவித்துள்ளார். சீனாவின் ஆயுதக்கட்டுப்பாட்டுக் கொள்கை, இந்திய - சீன மற்றும் சீன- ரஸ்ய மூலோபாய உறவுகள் தொடர்பாக ஆராய்ச்சிகளை மேற்கொண்ட கலாநிதி லோறா சால்மன், அது தொடர்பான விபரங்களை இந்திய ஊடகம் ஒன்றில் வெளியிட்டுள்ளார். நேற்று முன்தினம் இது தொடர்பாக ஹைதராபாத்தில் ஊடகவியலாளர்களுடன் பேசிய கலாநிதி லோறா சால்மன், “சீனாவில் உள்ள சில நிபுணர்கள், கடற்படைப் பலத்தில் சீனாவுக்குச் சமமாக இந்தியா இருக்கிறது அல்லது அதனை முறியடிக்கக் கூடிய நிலையில் உள்ளது என்று உணர்கிறார்கள…
-
- 0 replies
- 530 views
-
-
அமெரிக்கர்கள் பிறவியிலேயே புத்திசாலிகள் : ஒபாமா பெருமிதம். வாஷிங்டன்: கண்டுபிடிப்புகள் அமெரிக்கா மக்களின் டி.என்.ஏ.வில் கலந்துள்ளதாக ஒபாமா பாராட்டியுள்ளார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் ஆண்டு தோறும் அறிவியல் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கண்காட்சியில், அமெரிக்காவின் பல மாகாணங்களில் இருந்து வந்துள்ள மாணவர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை பார்வைக்கு வைத்துள்ளனர். இந்த மாணவர்களிடையே உரையாற்றிய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியதாவது:- பொறியியல், அறிவியல் கண்டுபிடிப்புகள், புதிய கண்டறிதல்கள் ஆகியவற்றை மேற்கொள்வதில் அமெரிக்கா அதிக முனைப்பு காட்டியுள்ளது. அதுதான் நாம். அது நமது டி.என்.ஏ.வில் கலந்துள்ளது. இது போன்ற கண்டுபிடிப்புகளால் தான் நமது நாடு உலகி…
-
- 5 replies
- 920 views
-
-
துருக்கியைச் சேர்ந்த பயணிகள் ஹெலிகாப்டரில் இருந்த 11 பேரை ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் சிறை பிடித்துச் சென்றுள்ளனர். துருக்கியைச் சேர்ந்த ஒரு நிறுவனம் ஆப்கானிஸ்தானில் கோஸ்ட் நகரில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்தப் பணிகளை மேற்பார்வையிட அதன் அதிகாரிகள் குழு கோஸ்ட் நகருக்குச் சென்றுவிட்டு காபூலுக்கு ஹெலிகாப்டரில் திரும்பிக் கொண்டிருந்தது. அப்போது அஸ்ரா மாவட்டத்தில், கடும் சூறைகாற்றும், பலத்த மழையும் பெய்ததால், ஹெலிகாப்டர், ஒரு கிராமத்தில் அவசரமாக தரையிறங்கியது. இதையடுத்து அந்த ஹெலிகாப்டரைச் சூழ்ந்த தலிபான்கள் அதில் இருந்த 11 பேரையும் சிறைபிடித்துச் சென்றுள்ளனர். http://www.seithy.com/breifNews.php?newsID=81063&category=WorldNews&language=tamil
-
- 3 replies
- 464 views
-
-
உலகின் மிக அரியவகை மதுபான பாட்டில் ஒன்று டொரண்டோ மதுநிலையத்தில் திருடப்பட்டுள்ளது. இதன் மதிப்பு $26,000 ஆகும். இந்த பாட்டிலில் 700 மிலி உயர்வகை மதுபானம் இருந்ததாகவும், இந்த அரியவகை மதுபானம் உலகிலேயே மொத்தம் 50 பாட்டில்கள்தான் உள்ளன எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. Glenfiddich Single Malt scotch என்று அழைக்கப்படும் இந்த மதுபாட்டிலை சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர்தான் திருடியிருக்க வேண்டும் என கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் ஊகிக்கப்படுகிறது. அந்த நபரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த Glenfiddich Single Malt scotch மதுபாட்டில் ஒண்டோரியோ மாகாணத்திலேயே மொத்தம் 15 பாட்டில்கள்தான் உள்ளது. உலகிலேயே 50 பாட்டில்கள் தான் உள்ளது. மதுபாட்டில் வாங்க வந்த ஒரு வாடிக்கையா…
-
- 4 replies
- 471 views
-
-
நேற்று முன் தினம் டொரண்டோ வங்கியில் கொள்ளையடித்த கொள்ளையர்களில் ஒருவரை டொரண்டோ காவல்துறையினர் இன்று காலை அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. தலைமறைவாக உள்ள மற்றொரு கொள்ளையனை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது . கடந்த ஞாயிறு அன்று மதிய நேரத்தில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த டொரண்டோ வங்கியொன்றில் துப்பாக்கி முனையில் இரண்டு கொள்ளையர்கள் வங்கியினுள் புகுந்த ஒரு வங்கி அதிகாரிம் மற்றும் ஒரு பெண் வாடிக்கையாளர் மீது துப்பாக்கியால் சுட்டு, கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் டொரண்டோவை பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை செய்து வரும் டொரண்டோ காவல்துறையினர், வங்கியில் கேமராவில் பதிவான காட்சிகளின் அடையாளங்களை வைத்து ஒரு குற்றவாள…
-
- 0 replies
- 397 views
-
-
ரோம் நகரம் உருவாகி 2766 ஆண்டுகள் ஆவதைக் குறிக்கும் முகமாக ஏப்ரல் 21ஆம் தேதியன்று அந்நகர மக்கள் ஊர்வலம் ஒன்றை நடத்தினர். அந்த ஊர்வலத்தில் பண்டைய ரோமாபுரியில் தேடிப்பார்.காம்வாழ்ந்த மக்களின் உடையலங்காரத்தை அணிந்து நடிகர்கள் பங்கேற்றனர்.இந்தப் படத்தில் அக்காலத்து ரோமாபுரியின் பணிப்பெண்கள் போல உடையணிந்து வருகின்றனர் ரோமா என்றப் பெண் தெய்வத்தின் உடையணிந்து இத்தாலி நடிகை ஒருவர் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டது முக்கியத்துவம் பெற்றது. அக்காலத்து ரோமாபுரியின் இளம் பெண்கள் போன்று உடையணிந்து இளம்பெண்கள் வலம் வந்த காட்சியை பொதுமக்கள் ரசித்து பார்த்தனர். மேலும் ரோமாபுரி சிப்பாய்கள் போலவும் இளம் ஆண்கள் உடையணிந்து ஊர்வலத்தில் தேடிப்பார்.காம் கலந்து கொண்டனர். கிளாடியேட்டர் படத்தில் வ…
-
- 0 replies
- 466 views
-
-
துப்பாக்கி ஏந்தும் பிஞ்சுகள்: அதிர்ச்சியளிக்கும் படங்கள்! அல் கொய்தா இயக்கத்தினர் சிறுவர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கும் படங்கள் சில வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப் படங்கள் அல் கொய்தாவுக்குச் சொந்தமான, பலரால் அறியப்படாத இணையத்தளமொன்றில் வெளியாகியுள்ளது. இவற்றை டேர்கிஸ்தான் இஸ்லாமியக் கட்சியே குறித்த இணையத்தளத்துக்கு வழங்கியுள்ளதாகவும், அக்கட்சியே ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடன் இணைந்து போராடும் பொருட்டு போராளிகளுக்கு பயிற்சியளிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. படங்களில் சிறுவர்கள் AK 47 துப்பாக்கிகள், பிஸ்டல்கள் போன்ற ஆயுதங்களுடன் பயிற்சி பெறுவது போல காட்டப்படுகின்றது. இச் சிறுவர்கள் உயிரிழந்த போராளிகளின் பிள்ளைகள் எனத் தெரிவிக்கப்படுகின்றது…
-
- 1 reply
- 454 views
-