உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
இலங்கையில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பாகிஸ்தான் தூதுவரிடம் முறைப்பாடு செய்ததாக தமிழ் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் செயலாளரான அசாத் சாலி தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் நடக்கும் ஐநா மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கை முஸ்லிம்கள் விவகாரம் பற்றிய பேச்சுக்களின்போது, பாகிஸ்தானும், இந்தோனீசியாவும் ''இலங்கையில் முஸ்லிம்களுக்கு எந்த விதமான பிரச்சினையும் கிடையாது'' என்ற வகையில் பேசியதாக கூறிய அசாத் சாலி அவர்கள், அது தவறு என்றும் ஆகவே அவர்களுக்கு அது குறித்து விளக்கும் வகையில் இலங்கைக்கான பாகிஸ்தானின் புதிய தூதுவரைக் கண்டு தாம் பேசியதாகக் கூறியுள்ளார். இலங்கையில் முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் இடிக்கப்படும் போது, அவர்கள் ஹலால் போன்ற பல பிரச்சினைகள் எதிர்கொள்ளு…
-
- 6 replies
- 495 views
-
-
அமெரிக்க கம்ப்யூட்டர்களில் உள்ள ரகசிய தொழில் தகவல்கள், அமெரிக்காவுக்கு சொந்தமான தொழில்நுட்ப தகவல்கள், சீனாவிலிருந்து திருடப்படுவதாக அமெரிக்கா கூறியுள்ளது. இதனால் அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையேயான வர்த்தக உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நாட்டின் இணைய பாதுகாப்பை அதிகரிப்பது குறித்து அந்நாட்டின் தனியார் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுடன் ஒபாமா ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை இன்று வெள்ளை மாளிகையில் நடைபெற உள்ளது. இணையதள திருட்டு பிரச்சினைகளை அரசும் தனியாரும் இணைந்து எவ்வாறு எதிர் கொள்வது என்பது குறித்து அதிகாரிகள் தங்கள் யோசனைகளை தெரிவிக்க உள்ளனர். இதுகுறித்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டாம் டோனிலன் கூறுகையில், இணையத்தின் மூலம் த…
-
- 0 replies
- 351 views
-
-
பிராம்டன் நகரில் உள்ள இரவு விடுதியில் இன்று புதன்கிழமை அதிகாலையில் மூன்று பெண்கள் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் அப்பகுதியை மிகுந்த பரபரப்பாக்கியுள்ளது. இந்த துப்பாக்கி சூடு அந்த பெண்களை குறிவைத்து சுடப்பட்டதா? அல்லது வேறு யாரேனும் வைத்து குறிக்கு இவர்கள் தாக்கப்பட்டார்களா? என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகின்றது. பிராம்டன் நகரில் மிகவும் புகழ்பெற்ற இரவு கிளப் The Office Gentleman Club ஆகும். இங்கு வழக்கமாக ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை இரவு நேரத்தில் நடைபெறும் Twerk it Tuesdays என்ற நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. இந்த நிகழ்ச்சியில் பலர் பங்கேற்று விழா நடந்துகொண்டிருந்தபோது அதிகாலை 1.30 மணியளவில் திடீரென துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதால் விடுதி பரபரப்புக்கு…
-
- 0 replies
- 493 views
-
-
சிறு பிராயத்தில் கொள்ளை: சவுதியில் 7 பேருக்கு மரண தண்டனை! சிறு வயதில் நகைக் கடை ஒன்றைக் கொள்ளை அடித்ததற்காக 7 பேருக்கு சவுதி அரேபியா மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது மனித உரிமைகள் அமைப்பு மற்றும் சர்வதேந நாடுகளிடையே கடும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. சர்ஹான் அல் மஷைக், சயீத் அல் ஜஹரானி, அலி அல்-ஷாரி, நாசர் அல் கடானி, சயீத் அல் ஷரானி, அப்துல் அஜீஜ் அல் ஆம்ரி, மற்றும் அலி அல் கடானி ஆகிய 7 பேர் தலையும் வெட்டப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 2006ஆம் ஆண்டு இவர்கள் நகைக்கடை கொள்ளை தொடர்பாக கைது செய்யப்பட்டு அபா பொதுச் சிறையில் அடைக்கப்பட்டனர். சவுதி அரேபியா இஸ்லாமிய அடிப்படைவாத நாடாகையால் ஷரியா சட்டத்தைக் கடைபிடித்து வருகிறது. இந்த சட்டத்தின் படி, கொலை, பாலியல் வல்ல…
-
- 0 replies
- 449 views
-
-
கோழைத்தனமும் ஊழலும் நிறைந்த இந்தியா உன் தூதரகத்தை மூடு மலேசியாவில் தமிழர்கள் கர்ச்சனை. [படங்கள்] மலேசியா தலை நகரம்கோலாலம் பூரில் அமைந்துள்ள இந்தியா தூதரகம் முன்பு தமிழர்கள் நேற்று முற்றுகைப் போராட்டம் ஒன்றை நடத்தி உள்ளனர். இதில் ஈழ தமிழருக்கு தமிழீழம் தான் ஒரே தீர்வு என போராட்டத்தின் போது மக்கள் தெரிவித்தனர். http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13325:malesiya-news-13-03-2013&catid=37:india&Itemid=103 Share this post
-
- 3 replies
- 586 views
-
-
பேஸ்புக் எனப்படும் முகநூலில் ஒருவர் விரும்பும் விஷயங்களை வைத்து, அவரது பாலினம், அரசியல் சார்பு நிலை, புத்திசாலித்தனம் வரை அவரது அனைத்து குணாம்சங்களையும், முழுமையான ஆளுமையையும் கணிக்கமுடியும் என ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு. இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் பேஸ்புக் என்பது மனிதர்களின் இன்றியமையாத அடிப்படை அடையாளமாக மாறிவருகிறது. இந்த முகநூலில் ஒருவர் விரும்பும் விஷயங்களை வைத்து, அவரது பாலினம் என்ன என்பதில் துவங்கி, அவரது அரசியல் சார்பு நிலை, அவரது புத்திசாலித்தனம் வரை ஒருவரின் குணாம்சங்களையும், முழுமையான ஆளுமையையும் தெரிவித்துவிட முடியும் என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். பேஸ் புக்கில் இருக்கும் ஒருவர் தனக்கு பிடித்தமான செய்தி, கருத்து…
-
- 3 replies
- 692 views
-
-
சனிக்கிழமை, 9, மார்ச் 2013 (10:32 IST) புதிய போப் ஆண்டவர்! மார்ச் 12ம் தேதி தேர்வு! புதிய போப் ஆண்டவரை தேர்ந்து எடுபபதற்கான நடைமுறைகள் வரும் 12ஆம் தேதி தொடங்குகின்றன. வாடிகன் நகரில் கடந்த ஆறு நாட்களாக ஆலோசனை செய்து வந்த கத்தோலிக்க மத கார்டினல்கள், தற்போது தேர்வு தேதியை அறிவித்துள்ளனர். புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்யும் 115 கார்டினல்களும் வாடிகன் நகருக்கு வந்து சேர்ந்துள்ளனர். தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், புதிய போப் ஆண்டவர் யார் என்ற எதிர்பார்ப்பு, கத்தோலிக்க கிறிஸ்தவர்களிடையே ஏற்பட்டுள்ளது. http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=93749
-
- 2 replies
- 535 views
-
-
நடுவானிலேயே வெடித்துச் சிதறடிக்கப்பட்ட இந்தியாவின் நிர்பயா இந்திய வடிவமைத்துத் தயாரித்துள்ள ´நிர்பயா´ என்ற ஏவுகணையின் சோதனை தோல்வியில் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒலியின் வேகத்தைவிட குறைந்த வேகத்தில் செல்லும் இந்த ஏவுகணையின் சோதனை இன்று ஒரிஸ்ஸாவின் பாலாசூர் பகுதியில் சண்டிபூர் ஏவுகணை மையத்தில் நடந்தது. டிஆர்டிஓ தயாரித்துள்ள இந்த ஏவுகணை காலை 11.50 மணிக்கு ஏவப்பட்டது. ஆனால், அது இலக்கை விட்டுத் தவறி பாதை மாறிச் சென்றது. இதையடுத்து அந்த சோதனை நடுவானிலேயே வெடித்துச் சிதறடிக்கப்பட்டதாக இந்திய ஊடகத் தகவல்கள் கூறுகின்றன. பாதை மாறிய இந்த ஏவுகணை கடலோரப் பகுதியில் வந்து விழுந்து வெடிக்கலாம் என்று தெரியவந்ததால் அதை வழியிலேயே விஞ்ஞானிகள் வெடிக்கச் செய்தனர்.…
-
- 12 replies
- 818 views
-
-
ராம் சிங்கின் மரணம் தற்கொலையே : பரிசோதனையில் உறுதி இந்தியாவின் புதுடெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் ஈவிரக்கமற்ற முறையில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு, பின் சிகிச்சைகள் பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் பஸ் சாரதி ராம்சிங் உள்பட 6 பேரை பொலிசார் கைது செய்தனர். இதையடுத்து குற்றவாளிகளில் 5 பேர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஒரு குற்றவாளி 18 வயதுக்கு உட்பட்டவன் என்பதால் அவன் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் வைக்கப்பட்டுள்ளான். இந்நிலையில், இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான பஸ் சாரதி ராம்சிங், நேற்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக திகார் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். ராம்சிங்கின் பிரேத பரி…
-
- 0 replies
- 428 views
-
-
ஆப்கானிஸ்தானில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 நேட்டோ வீரர்கள் பலி தெற்கு ஆப்கானிஸ்தானில் நேட்டோ படையினர் பயணம் செய்த . அதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 5 ராணுவ வீரர்கள் பலியாகினர். விபத்துக்காரன காரணம் குறித்து உடனடி தகவல்கள் ஏதுமில்லை. எனினும், அப்பகுதியில் எதிரிப்படைகளின் நடமாட்டம் ஏதும் காணப்படவில்லை என அங்கிருந்து வரும் முதற்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ராணுவ வீரர்கள் நேட்டோ படையில் இடம்பெற்றுள்ளனர். இந்த ஹெலிகாப்டர் விபத்தில் பலியானவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. ஆப்கானிஸ்தானில் ஒரு லட்சம் வீரர்களை கொண்ட நேட்டோ படை முகாமிட்டுள்ளது. பெரும்பாலும் வான்வழி போக்குவரத்தையே …
-
- 0 replies
- 353 views
-
-
வாடிகன்: உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் ஆண்டவரை தேர்வு செய்வதற்கான நடைமுறைகளில் ஒன்றான புகை குழாய் பொருத்தப்பட்டிருக்கிறது. இன்று கர்டினால்கள் வாக்களிக்க இருக்கின்றனர். போப் ஆண்டவராக பொறுப்பு வகித்த ஜெர்மனியைச் சேர்ந்த 16-ம் பெனடிக்ட் பதவி விலகியதையடுத்து புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் வாடிகன் நகரில் நடந்தது. இதில் புதிய போப்பைத் தேர்வு செய்வதற்கு தகுதியான 115 கார்டினல்கள் கலந்துகொண்டனர். இவர்கள் வாடிகன் சென்று ஆலோசனை நடத்தி வந்தனர். இக்கூட்டத்தின் முடிவில் இன்று புதிய போப் ஆண்டவர் தேர்வுக்கான நிகழ்ச்சி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. கார்டினல்கள் 115 கார்டினல்களும் வாக்களித்து போப் ஆண்டவரை தேர்வு செய்ய உள்ளனர். இந்த 115 கார்டினல்…
-
- 1 reply
- 448 views
-
-
டெல்லி: தமிழக மீனவர்களை படுகொலை செய்த கொலைகார மாலுமிகளை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப முடியாது என்று இத்தாலி அறிவித்திருப்பதற்கு பிரதமர் மன்மோகன்சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். அரபிக் கடற்பரப்பில் தமிழக வீரர்களை படுகொலை செய்த இத்தாலிய மாலுமிகள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்காக நாட்டு சென்று வர அனுமதிக்கப்பட்டனர். இதனடிப்படையில் அந்நாட்டு தேர்தலில் வாக்களிக்க இருவரையும் உச்சநீதிமன்றம் அனுப்பி வைத்தது. ஆனால் தற்போது இரு இத்தாலிய மாலுமிகளை மீண்டும் இந்தியாவுக்கு அனுப்ப முடியாது என்று இத்தாலி கூறியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மன்மோகன்சிங், இத்தாலியின் நிலைப்பாடு ஏற்றுக் கொள்ள முடியாதது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சருடன் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக…
-
- 3 replies
- 613 views
-
-
"" எதிர்காலத்தில், இந்தியாவுக்கும், சீனாவுக்கும், போர் நடப்பதற்கு, மிக குறைந்த வாய்ப்புகளே உள்ளன,'' என, தேசிய பாதுகாப்பு ஆலோசகர், சிவசங்கர் மேனன் கூறினார். டில்லியில் நேற்று நடந்த ஒரு விழாவில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், சிவசங்கர் மேனன் பங்கேற்றார். அவரிடம்,"அடுத்த, 30 ஆண்டுகளில், இந்தியாவுக்கும், சீனாவுக்கும் போர் நடப்பதற்கான வாய்ப்பு உள்ளதா?' என, செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, அவர் அளித்த பதில்: எதிர்காலத்தில், இந்தியாவுக்கும், சீனாவுக்கும் போர் நடப்பதற்கான வாய்ப்பு, மிகவும் குறைவு. இரு நாடுகளுக்கும் இடையே, பல, 1,000 ஆண்டுகளாக, கலாசார ரீதியிலான உறவும், தொடர்பும் உள்ளது. எனவே, போர் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை. சமீபத்தில் கூட, இரு நாடுகளுக்கும் இடையே, கடற்பாதுகாப்…
-
- 4 replies
- 571 views
-
-
சோனியாவின் மருமகனும் பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா அரசு நிலத்தை அபகரித்து கொண்டதாக எழுந்த குற்றச்சாட்டை எழுப்பி மத்திய அரசை திணற வைக்க பா.ஜ., உள்ளிட்ட எதிர்கட்சியினர் முடிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக முழு அளவில் விவாதிக்க கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க வேண்டும். இதற்கு அரசு உரிய பதில் அளிக்க வேண்டும் என சபாநாயகரிடம் பா.ஜ., தரப்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது . வதோரா என்ன தான் செய்தார்? @@காங். தலைவர் சோனியா மருமகன் ராபர்ட் வதேரா , டி.எல்.எப். என்ற நிறுவனத்திடமிருந்து சொத்து வாங்கியுள்ளார். இந்த நிலம் முன்னதாக அரியானா மற்றும் டில்லி, ராஜஸ்தான் மாநில அரசிடம் இருந்து பெறப்பட்டது. .ரூ. 300 கோடி மதிப்பிலான இந்த சொத்தினை வெறும்ரூ. 50 லட்சம் கொடுத்து பெற்றுள்ளார…
-
- 0 replies
- 455 views
-
-
சீண்டினால் கன்னத்தில் 2 அறை விடுங்கள் - பவார் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பவர்களுக்கு அடி கொடுங்கள் என மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத் பவார் கூறியிருக்கிறார். ஒரு கூட்டத்தில், தேசிய காங்கிரஸ் கட்சியின் பெண்கள் அணியினரிடம் பேசிய அவர், பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்போருக்கு எதிராக போராட்டம் நடத்தினால் மட்டும் போதாது எனவும், அவ்வாறு நடந்து கொள்வோருக்கு அந்த இடத்திலேயே உடனடியாக 2 அறை கொடுத்தால் தான் அவர்கள் அது போன்ற தவறை மீண்டும் செய்ய மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
-
- 3 replies
- 639 views
-
-
டில்லி பாலியல் வல்லுறவு சம்பவம்: பிரதான சந்தேகநபர் சிறையில் தற்கொலை திங்கட்கிழமை, 11 மார்ச் 2013 10:35 டில்லியில் ஓடும் பேருந்தில் 23 வயது மாணவி பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான ராம் சிங் திகார் சிறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த டிசெம்பர் மாதம் 16ம் தேதி டெல்லியில் ஓடும் பேருந்தில் 23 வயது பிஸியோதெரபி மாணவி 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டு தெருவோரம் வீசப்பட்டார். இதில் படுகாயமடைந்த அவர் டெல்லி மற்றும் சிங்கப்பூர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார்.ஆனால் சிகிச்சை பலனின்றி சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் …
-
- 9 replies
- 734 views
-
-
ஆயிரக்கணகான டொரண்டோ நகர மக்கள் கடந்த 19 மணி நேரங்களாக மின்சாரம் தடைபட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். Don Mills Road and Eglinton Avenue East என்ற பகுதியில் உள்ள 10அபார்ட்மெண்ட் குடியிருப்புகளில் தொடர்ச்சியாக கடந்த 19 மணிநேரமாகமின்சாரம் இல்லை. வெள்ளிக்கிழமை மதியம் 3 மணியில் இருந்து மின்சாரம்தடைப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் கஷ்டத்தில் உள்ளனர். அந்தபகுதியில் மீண்டும் மின்சாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர டொரண்டோ மின்சாரஊழியர்கள் இரவுபகலாக வேலை பார்த்து வருகின்றனர். அந்த பகுதியில் வாழும் Ted Bradley என்பவர் அளித்த பேட்டி ஒன்றில் நான் ஒருமாதத்திற்கு தேவையான உணவு மற்றும் காய்கறி பழங்கள் போன்றவற்றை வாங்கி குளிர்சாதனப்பெட்டியில் வைத்து பாத…
-
- 8 replies
- 786 views
-
-
இன்று திங்கட்கிழமை காலையில் The Windsor-Detroit என்ற இடத்தில் ஏற்பட்ட கேஸ் கசிவின் காரணமாக மூடப்பட்ட குழாய் சரிசெய்யப்பட்டு மீண்டும் உபயோகத்திற்காக திறக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கேஸ் லைன் அருகே நடந்த கட்டிட வேலை பார்க்கும் சிலரின் அஜாக்கிரதையால் கேஸ் லைனின் பைப் உடைந்து கேஸ் கசிவு ஏற்பட்டதால், பாதுகாப்பு காரணங்களுக்காக உடனே குழாயில் இருந்து கேஸ் வருவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்து, பின்னர் உடைந்த பைப் லைன் சரிசெய்யப்பட்டதும், மீண்டும் முறைப்படி ஆய்வு செய்து கேஸ் லைன் திறக்கபப்ட்டது. இன்று காலை 9 மணியளவில் நிறுத்தப்பட்ட கேஸ் லைன் Windsor தீயணைப்புப்படை வீரர்கள் மற்றும் கேஸ் லைன் ஊழியர்களின் அனுமதியின் பேரில் காலை 11.45 மணிக்கு திறக்கப்பட…
-
- 0 replies
- 335 views
-
-
டொரண்டோ அருகில் உள்ள Osler St. near Davenport Road என்ற இடத்தில் நடந்த ஒரு பயங்கர தீ விபத்தில் சுமார் $500,000 மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளதாகவும், ஒருவர் மிகக்கடுமையான தீக்காயத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. தீயணைக்கும் படையின் மூத்த அதிகாரி Div. Commander Bob O’Hallern அவர்கள் இதுகுறித்து கூறுகையில் தீப்பிடித்த கட்டிடத்தின் கூரைப்பகுதி முற்றிலும் சேதமடைந்துவிட்டதாகவும், எனவே அந்த கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் இருப்பதால் தீயணைப்பு வீரர்கள் மிகுந்த ஜாக்கிரதையாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். தீயை அணைப்பதற்காக 18 டிரக்குகளில் சுமார் 70 தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். தீப்பிடி…
-
- 0 replies
- 340 views
-
-
மும்பையில் தரையிறங்கிய விமானம் தாறுமாறாக ஓடி விபத்து - 140 பயணிகள் அருந்தப்பு! [Monday, 2013-03-11 09:48:32] மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கிய தனியார் விமானம், திடீரென சறுக்கிச் சென்று விபத்துக்கு உள்ளானது. அதிர்ஷ்டவசமாக, அதில் பயணம் செய்த, 140 பயணிகள் உயிர் தப்பினர்.சண்டிகர் நகரிலிருந்து, மும்பைக்கு, "இண்டிகோ' என்ற தனியார் பயணிகள் விமானம், நேற்று மதியம் வந்தது. மும்பை விமான நிலையத்தின், முக்கிய ஓடு பாதையில் விமானம் தரையிறங்கிக் கொண்டிருந்தது.அப்போது திடீரென, சறுக்கிய படி, ஓடுபாதையிலிருந்து விலகிய விமானம், அங்கிருந்த விளக்குகள், சிறு கம்பங்களை தகர்த்தது. எனினும், விமானி துரிதமாக செயல்பட்டு, விமானத்தை கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததால், அதில் பயணித்த, 140 பயணிகள் உயிர…
-
- 0 replies
- 463 views
-
-
பொறுப்புக்கூறுவதில் இருந்து சிறிலங்கா விலக முடியாது! - சுப்பிரமணிய சுவாமியின் கோரிக்கை நிராகரிப்பு!! ஜெனிவாவில் இடம்பெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் சிறிலங்கா மீது அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என இந்திய ஜனதாக் கட்சியின் தலைவர் சுப்பிரமணிய சுவாமி விடுத்த வேண்டுகோளை அமெரிக்கா முற்றாக நிராகரித்துள்ளது. அமெரிக்காவின் இந்த நிலைப்பாட்டை சுப்பிரமணிய சுவாமியிடம் அந்நாட்டின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்திய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க அமைச்சர் ரொபேர்ட் ஓ பிளேக் நேரடியாக தெரிவித்துள்ளதாக அறியமுடிகின…
-
- 3 replies
- 777 views
-
-
ஈழத் தமிழர் கண்டிப்பாக அறிய வேண்டிய கென்ய தேர்தல் முடிவுகள் March 9, 2013 கடந்த வாரம் கென்யாவில் நடைபெற்ற அதிபர் தேர்தல் முடிவுகள் பலத்த இழுபறிக்குப் பின்னர் இன்று வெளியாகியுள்ளது. நாட்டின் பிரதமர் பதவியில் இருந்த றய்லா ஒடிங்கா, உப பிரதமராக இருந்த உகுறு கென்யாட்டா ஆகிய இருவரும் முக்கிய உறுப்பினராக மோதினார்கள், மொத்தம் 9 பேர் போட்டியிட்ட இந்தத் தேர்தலில் உகுறு கென்யாட்டா 50.03 வீத வாக்குகளை பெற்று வெற்றியீட்டியுள்ளார். போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் 50 வீதத்திற்கு மேல் வாக்குகளை பெற்றால் இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெறமாட்டாது என்பதால் அங்கு பதட்டம் ஏற்பட்டு விவகாரம் நீதிமன்று சென்றுள்ளது. கடந்த 2007ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் இதுபோன்ற நிலமை ஏற்பட…
-
- 2 replies
- 657 views
-
-
டெல்லி மாணவிக்கு அமெரிக்கா அரசின் சர்வதேச வீர மங்கை விருது! March 9, 2013 10:04 am டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவ மாணவிக்கு அமெரிக்கா அரசின் சர்வதேச வீர மங்கை விருது வழங்கப்பட்டது. இந்த விருதை அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி மற்றும் அதிபர் ஒபாமாவின் மனைவியும் வழங்கினார். மாணவியின் சார்பில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நிரூபமா ராவ் விருதினை பெற்றுக் கொண்டார். டெல்லி மாணவியை தைரியமான பெண் என குறிப்பிட்ட ஜான் கெர்ரி, அவருக்காக சிறிது நேரம் மௌன அஞ்சலி செலுத்துமாறு அனைவரையும் கேட்டுக் கொண்டார். மேலும் டெல்லி மாணவி, உயிர்வாழ விரும்பியதையும், தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ப…
-
- 4 replies
- 871 views
-
-
கொலை, கொள்ளை , வழிப்பறி போன்ற பல குற்றங்கள் புரிந்த 10 பேர் கொண்ட கும்பல் ஒன்றை டொரண்டோ போலீஸார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். இன்று காலை அவர்கள் அனைவரும் டொரண்டோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். டொரண்டோ நகரில் உள்ள கடைகள், பீஸா டெலிவரி செய்யும் விற்பனையாளர்கள் மற்றும் கல்லூரி மாணவியர்கள் உள்பட பலரிடம் கொள்ளையடித்த கும்பல் ஒன்று குறித்து டொரண்டோ போலீஸாருக்கு பல புகார்கள் வந்தன. இதுகுறித்து துப்பறியும் நிபுணர்கள் தீவிரமாக விசாரித்து வந்த நிலையில், நேற்று காலை Thistletown Collegiate Institute மாணவர்கள் இருவரிடம் துப்பாக்கி முனையில் அவர்களின் செல்போனை கொள்ளையடித்த சம்பவம் குறித்து தகவல் வந்தவுடன் விரைந்து சென்ற போலீஸார், இரண்டு குற்றவாளிகளை விரட்டி…
-
- 0 replies
- 410 views
-
-
ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் முன்பு மனித வெடிகுண்டு தாக்குதல்: 9 பேர் பலி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பாதுகாப்பு அமைச்சக தலைமை அலுவலகத்தின் வாசலில் இன்று காலை நிகழ்ந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 9 பேர் பலியாகினர். 14 பேர் படுகாயமடைந்தனர்.அமெரிக்காவின் பாதுகாப்பு துறை செயலாளர் சக் ஹகேல் காபூலில் தங்கியுள்ள வேளையில் நிகழ்ந்த இந்த மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சைக்கிளில் வந்த ஒரு மர்ம மனிதன் வயிற்றில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில் பயங்கர சப்தத்துடன் அவன் உடல் சிதறி இறந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர் தெரிவித்தார். குண்டு வெடிப்பில் படுகாயமடைந்த 5 பொதுமக்களை ராணுவ வீரர் ஒருவர் ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பினதையும் ப…
-
- 0 replies
- 263 views
-