உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26725 topics in this forum
-
ஒண்டோரியோ மாகாணத்தின் பிரிமியர் Kathleen Wynne அவர்கள் $100 தொகையை அடுத்து வரும் ஐந்தாண்டுகளுக்கு ஒண்டோரியோ பிரைய்ன் நிறுவனத்திற்கு ஒதுக்குவதாக இன்று அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் இந்த பணத்தின் மூலம் நியுரோசயின்ஸ் ஆராய்ச்சி முழுவீச்சில் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். இந்த ஆராய்ச்சி மையத்தில் மன ஆய்வு, பெருமூளை வாதம், மன இறுக்கம் மற்றும் வலிப்பு நோய்களுக்கான புதிய வகை மருந்துகளை கண்டுபிடிக்க இந்த தொகை செலவழிக்கப்படும் என ஆராய்ச்சி மைய செய்திக்குறிப்பு ஒன்று கூறியுள்ளது. ஒண்டோரியோ மாகாணத்தின் நிதிநிலைமை $12 பில்லியன் அளவிற்கு பற்றாக்குறை இருந்தாலும், இதுபோன்ற மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு செலவு செய்வது இன்றியமையாததாகும் என பிரிமியர் Kathleen Wynne இன்று …
-
- 0 replies
- 434 views
-
-
சென்னை: தமிழகத்தில் டெசோ அமைப்பின் சார்பில், இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்க வலியுறுத்தி, வரும் 12ம் தேதி பொது வேலை நிறுத்தம் நடத்தப்படும் என தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். Dinamalar
-
- 0 replies
- 419 views
-
-
ஜெனிவா: இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் மனித உரிமை மீறல் தொடர்பாக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானம் நடைமுறை சார்ந்ததாக இருக்குமேயன்றி, வலுக்கட்டாயமாக நிவாரணம் தேடும் தீர்மானமாக இருக்காது என கூறப்படுகிறது. மேலும், சர்வதேச சமுதாயத்திற்கு இலங்கை அளித்த உறுதிமொழிகளை அந்த நாடு நிறைவேற்றாததாலும், இலங்கையின் நடவடிக்கைகளில் சர்வதேச நாடுகள் தலையிட முடியாத அளவில் இந்த தீர்மானம் இருப்பதாலும், தீர்மானத்திற்கு ஆதரவாக ஓட்டளிக்க இந்தியா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. Dinamalar
-
- 3 replies
- 660 views
-
-
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே கடற்படை ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானதில், விமானிகள் இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் இருந்த மேலும் இருவர் மாயமாகியுள்ளனர். காணாமல் போன இருவரை தேடும் பணியில் கடற்படை விமானங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13137:helihoper-attack&catid=37:india&Itemid=103
-
- 0 replies
- 491 views
-
-
பிரியங்கா காந்தி திடீர் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப் பட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா(41). இவருக்கு வயிற்றில் வலி ஏற்படவே, வலியால் துடித்துள்ளார். இதையடுத்து அவரை கங்காராம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு இவரை பரிசோதித்த மருத்துவர்கள் பித்தபையில் கல் ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்ய முடிவு எடுக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று திங்கட்கிழமை அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது பிரியங்கா நலமுடன் இருப்பதாக பிரியங்காவை நேரில் சென்று நலம் விசாரித்த சோனியா காந்தி, மற்றும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் த…
-
- 1 reply
- 592 views
-
-
மத்திய அரசு 2008ல் செயல்படுத்திய வேளாண் கடன் ரத்து திட்டத்தில் முறைகேடு . மத்திய அரசு 2008ல் செயல்படுத்திய வேளாண் கடன் ரத்து திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக தலைமை கணக்காயர் அறிக்கை வெளியிட்டுள்ளார். வேளாண் கடன் ரத்து குறித்து சிஐஜி நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13130:loan-delhi&catid=37:india&Itemid=103
-
- 0 replies
- 402 views
-
-
மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி நஷீட் மீண்டும் கைது மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி முஹம்மட் நஷீட் மீண்டும் இன்று (05) கைது செய்யப்பட்டுள்ளார். மாiலைதீவில் நீண்டகாலம் ஆட்சியில் இருந்த அப்துல் கயிப்பை கடந்த 2008ஆம் ஆண்டு முஹம்மட் நஷீட் தோற்கடித்து ஜனாதிபதியாக பதவியேற்றார். பின்னர் உள்நாட்டு கிளர்ச்சியின்போது பதவியிழந்த அவர் கடந்த அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்தார். இந்நிலையில், நஷீட் தனது அதிகாரத்தை பயன்படுத்தி நீதிபதியை கைது செய்ய உத்தரவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில், அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. கைது நடவடிக்கையை தவிர்ப்பதற்காக இந்திய தூதரகத்தில் கடந்த 13ஆம் திகதி தஞ்சம் அடைந்தார். இதனால் அவரை கைது செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. …
-
- 2 replies
- 540 views
-
-
டாக்கா: வங்கதேசம் சென்றுள்ள ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தங்கியிருக்கும் ஹோட்டல் அருகே வெடிகுண்டுகள் வெடித்ததாக வெளியான தகவல்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் டாக்காவில் உள்ள பிரணாப் முகர்ஜியின் செயலர் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழவில்லை என மறுத்துள்ளார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 3 நாள் பயணமாக டாக்கா சென்றுள்ளார். தற்போது அங்கு பெரும் வன்முறை வெடித்து பலர் பலியாகி வருகின்றனர். டாக்கா சுதந்திரப் போராட்டத்தின் போது போர்க் குற்றத்தில் ஈடுபட்டதாக ஜமாத்- இ இஸ்லாமி கட்சியின் டெல்வார் உட்பட மூவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு அண்மையில் தீர்ப்பளிக்கப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து ஜமாத் கட்சியின் போராட்டம் வெடித்தனர். இந்த போராட்டம் வன்முறையாக வெடித்து 50க்கும் மேற்பட்டோ…
-
- 0 replies
- 513 views
-
-
விளக்குகளை அணைக்க வழியில்லாத புதிய விமான நிலையம் - கேலிக்குள்ளாகும் ஜேர்மனியின் தொழில்நுட்பம்! [Monday, 2013-03-04 09:41:28] பலகோடி ரூபாய் செலவில், ஜெர்மனியில் அமைக்கப்பட்டு வரும் விமான நிலையத்தின், மின் விளக்குகளை அணைக்க முடியவில்லை என, கட்டுமான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஜெர்மனி நாட்டின் தலைநகர் பெர்லினில், டெகெல் மற்றும் ஸ்கோனெபெல்டு என்ற, இரண்டு விமான நிலையங்கள் செயல்படுகின்றன.பெருகி வரும் பயணிகளின் எண்ணிக்கையை சமாளிக்க, அதி நவீன வசதிகளுடன், "பெர்' என்ற புதிய விமான நிலையம் அமைக்கும் பணி, நடக்கிறது. இந்த ஆண்டில், இவ்விமான நிலையம் திறக்க திட்டமிடப்பட்டது. ஆனால், கட்டுமான பணிகளில் தாமதம் ஏற்பட்டதால், 2017ல் தான் புது விமான நிலையம் தயாராகும்.இவ்விமான நிலையத்தை உருவாக…
-
- 5 replies
- 569 views
-
-
சீனாவில் நிலநடுக்கம் - 3200 வீடுகள் தரைமட்டம்! [Monday, 2013-03-04 09:29:58] சீனாவின் யுனான் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.5 அலகுகளாகப் பதிவானது. இந்நிலநடுக்கத்தால் 3,200-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஜிஸான் நகர் பகுதியில் 9 ஆடி ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. குறிப்பாக மியான்மரின் எல்லையில் உள்ள சீனப் பகுதியான எரியுவான் மாவட்டத்தில் கடும் சேதம் ஏற்பட்டது. இங்குள்ள 3,200 வீடுகள் சேதமடைந்தன. இதில் 700 வீடுகள் முற்றிலுமாக இடிந்து விழுந்தன. இப்பகுதியை சேர்ந்த 55 ஆயிரம் பேர் உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காமல் தவிக்கின்றனர். இந்த நிலநடுக்கத்துக்கு…
-
- 0 replies
- 630 views
-
-
பிரணாப் முகர்ஜிக்கு மூக்கறுப்பு ? வங்கதேசம் சென்றுள்ள இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியுடன் நாளை நடைபெற இருந்த சந்திப்பை அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவரான கலிதா ஜியா திடீரென ரத்து செய்திருக்கிறார். வங்கதேசத்துக்கு பிரணாப் முகர்ஜி சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். அங்கு அவரை எதிர்க்கட்சித் தலைவரான கலிதா ஜியா சந்திப்பார் என்று முன்னர் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் ஊடகங்களுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் பிரணாப் முகர்ஜியின் நிகழ்ச்சி நிரல் பட்டியலில் கலிதா ஜியாவுடனான சந்திப்பு இடம்பெறவில்லை. இந்த சந்திப்பு ரத்துக்கான காரணமும் தெரிவிக்கப்படவில்லை. இடையில் பிரணாப்பை சந்திக்க விருப்பம் இல்லை என்று கலிதா தெரிவித்ததனாலேயே பிரணாப் இந்த முடிவை எடுக்க நேரிட்டது …
-
- 0 replies
- 464 views
-
-
கோவை அவினாசிசாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் நடராஜன்(64). ஓய்வுபெற்ற தனியார் மில் மேலாளர். இவர் மனைவி சரோஜினி(54). இவர்களது எதிர்வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தவர் யாசர்அராபத்(24). நெல்லை மாவட்டம் மேலபாளையத்தை சேர்ந்தவர். கடந்த பிப்ரவரி 13ம் தேதி சரோஜினி மாயமானார். 21ம் தேதி யாசர்அராபத் வீட்டில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்டு சடலமாக சரோஜினியின் உடல்பாகங்களை போலீசார் கண்டெடுத்தனர். இதையடுத்து யாசர்அராபத் தலைமறைவானார். இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் உள்ள லாட்ஜில் தலைமறைவாக இருந்த யாசர் அராபத்தை தனிப்படை போலீசார் கடந்த சனிக்கிழமை கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் யாசர்அராபத் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: நான் மலேசியாவில் இருந்து …
-
- 2 replies
- 523 views
-
-
வயிற்று வலி காரணமாக பிரிட்டன் ராணி மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார். பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்(87), இவருக்கு கடந்த வெள்ளியன்று திடீர் வயிற்று வலி ஏற்பட்டது.இதையடுத்து உடல்சோர்வடைந்தார். பின்னர் லண்டனில் உள்ள மன்னர் ஏழாம் எட்வர்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் பரிசோதித்து வந்தனர்.இதில் வாயு கோளாறால் அவதியுற்றுவருவதாக தெரியவந்தது. தொடர்ந்துஅவருக்குசிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. எலிசபெத் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதாக பக்கிங்ஹாம் அரண்மணை வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. http://tamil.yahoo.com/%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0-%E0%AE%A3-%E0%AE%AE%E0%AE%B0-%E0%AF%8D-%E0%A…
-
- 3 replies
- 602 views
-
-
மதம் சார்ந்து சமூகம் சார்ந்து.. தம்மை புனிதர்களாக அடையாளப்படுத்திக் கொள்ளும் மனிதர்கள்.. உண்மையில் இறை நம்பிக்கைக்காகவாவது பாத்திரமாக இருந்து.. தம்மை தம்மளவில் புனிதர்களாக வைத்திருப்பது அவர்களின் மனச்சாட்சிக்கு அழகு..! முடியாதவர்கள் அதில் இருந்தும் விலகி குடும்ப வாழ்வில் இணைந்து கொள்வதும் அழகு. இவ்வளவு காலமும் மக்கள் முன்னால் தன்னை மதப் புனிதராகக் காட்டிக் கொண்ட.. பிரிட்டனின் (ஸ்காட்லாந்துக்குரிய) மதிப்புக்குரிய கிறிஸ்தவ மதத் தலைவரான Cardinal Keith O'Brien தனது சக பாதிரிமாரோடு தவறான பாலினத்தொடர்பு.. வைத்திருந்த குற்றச்சாட்டினை பகிரங்கமாக ஏற்றுக் கொண்டு தன்னை அதில் இருந்தும் மன்னிக்கக் கேட்டுள்ளார். இவர் வெளிப்படையாக தன்னை ஒரு மதப் புனிதராகக் காட்டிக்கொண்டாலும் உள்…
-
- 9 replies
- 732 views
-
-
பிரதமர் வேட்பாளர் என்ற முக்கிய அந்தஸ்து நோக்கி சென்று கொண்டிருக்கும் குஜராத் முதல்வர் மோடி மீது அனைத்து அரசியல் கட்சியினரும் மீடியாக்களும் பின் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் நேற்று நடந்த பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டத்தில் அனைத்து தலைவர்களும் மோடியின் பெருமையை புகழ்ந்தனர். இன்றயை 3 ம் நாள் கூட்டத்தில் மோடி பேசினார். இவர் பேசுகையில் ; என்னை மிக பெருமைபடுத்திய ராஜ்நாத்சிங்கிற்கு நன்றி கூற வார்த்தைகள் இல்லை. குஜராத்தில் பா.ஜ., பெற்ற வெற்றி மக்கள் வெற்றி. இந்த வெற்றியை நான் பா.ஜ., மூத்த தலைவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன். இந்த தேசம் மத்தியில் ஒரு நிலையான அரசை எதிர்பார்க்கிறது. மத்தியில் ஆளும் காங்., அரசு சோனியா குடும்ப நலத்தை மையமாக வைத்து செயல்பட்டு வருகிறது. ஒரு குடும்பத்த…
-
- 0 replies
- 424 views
-
-
சீனாவின் முக்கிய இரண்டு இணையத்தளங்கள் கடந்த வருடத்தில் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 144,000 தடவைகள் ஹெக்கிங் தாக்குதல்களுக்கு உள்ளாகியதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது. இவை இரண்டும் சீன இராணுவத்துடன் தொடர்புடைய இணையத்தளங்கள் எனவும் அவற்றில் ஒன்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சினையுடதென தெரிவிக்கப்படுகின்றது. தனது இணையத்தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் மூன்றில் இரண்டு அமெரிக்காவிலிருந்தே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சீனா குற்றஞ்சாட்டியுள்ளது. அமெரிக்க அரச ஸ்தாபனங்கள் மற்றும் நிறுவனங்களின் இணையக்கட்டமைப்பில் அடிக்கடி ஐ.பி. முகவரிகளின் கடந்த வருடத்தில் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 144,000 ஹெக்கிங் தாக்குதல்கள் தனது இணையத்தளங்களின் மீது மேற்கொள்ளப்பட்டதாகவும் இதில்…
-
- 1 reply
- 597 views
-
-
மலேசியாவின் போர்னியோ தீவில் ஒரு நகரை ஆக்கிரமித்திருக்கும் ஆயுதந்தரித்த பிலிப்பைன்ஸ் நாட்டவரை உடனடியாகச் சரணடையுமாறு மலேசிய அரசாங்கம் கூறியுள்ளது. வெள்ளிக்கிழமையன்று ஆரம்பித்த துப்பாக்கிச் சண்டையை அடுத்த சமரச நடவடிக்கைகளுக்கான கால அவகாசம் முடிந்துவிட்டது என்று மலேசியப் பிரதமர் நஜீப் ரசாக் கூறியுள்ளார். அந்த மோதல்களில் மூன்று மலேசிய கொமாண்டோக்களும், ஊடுருவியவர்கள் 12 பேரும் கொல்லப்பட்டனர். மலேசிய மாநிலமான சபாவில் 100 -300 வரையிலான பிலிப்பைன்ஸ்காரர்கள் இரு வாரங்களுக்கு முன்னர் படகுகளில் வந்து தரையிறங்கினார்கள். இந்த போர்னியோவின் சில பகுதிகளை ஆட்சி செய்துவந்த முஸ்லிம் அரச வம்சமான சுலு சுல்தானேட்டின் ஆதரவாளர்கள் இவர்கள். இந்தக் குழு சரணடைய வேண்டும் என்று பிலிப்ப…
-
- 0 replies
- 373 views
-
-
சிரியாவின் கிளர்ச்சிக்காரர்களுக்கு உதவி செய்ய அமெரிக்கா முடிவு: சிரியா, ஈரான் எதிர்ப்பு சிரியாவின் அதிபர் பஷீர் அல் அசாத் ஆட்சிக்கு எதிராக கடந்த 2 ஆண்டுகளாக கடும் போராட்டங்களை கிளர்ச்சிக் குழுக்கள் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்தில் இதுவரை சுமார் 65 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டனர்.சிரியாவின் கிளர்ச்சி குழுக்களுக்கு 60 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான உதவிகளை வழங்க இருப்பதாக அமெரிக்கா வியாழக்கிழமை அறிவித்தது. இந்த உதவிகளை உயிரைக்கொல்லும் ஆயுதங்களாக வழங்காமல், கிளர்ச்சிக் குழுக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் வகையில் மருந்துகள், உணவு பொருட்கள் போன்றவை வழங்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்தது.தெஹரானில் நேற்று சிரியாவின் வெளியுறவுத்துறை மந்திரி வாலித் அல் மௌ…
-
- 0 replies
- 356 views
-
-
1000 கி.மீ. பரப்பளவை தாக்கும் சீனாவின் நவீன போர் விமானம் 1000 கி.மீட்டர் பரப்பளவை தாக்கும் அதிநவீன போர் விமானத்தை சீனா தயாரித்துள்ளது. சீனா தனது ராணுவத்தை நவீனமயமாக்கி வருகிறது.அதன் ஒரு பகுதியாக ஜெ.15 ரக அதி நவீன போர் விமானத்தை வடிவமைத்து ராணுவத்தில் சேர்த்துள்ளது. இந்த விமானம் 1000 கி.மீட்டர் சுற்றளவு பரப்பளவை குண்டு வீசி தாக்கும் திறன் கொண்டது. சமீபத்தில் இது விமானம் தாங்கி கப்பலில் நிலை நிறுத்தப்பட்டு வெற்றிகரமாக தாக்குதல் ஒத்திகை நடத்தி பரிசோதிக்கப்பட்டது. ஜெ.15 ரக போர் விமானம் சன்சாங் என்பவர் தலைமையில் வடிவமைக்கப்பட்டது. இது அமெரிக்காவின் எப்-18 ஹார்னெட் போர் விமானத்துக்கு இணையானது என ஜெ.15 ரக விமானத்தை வடிவமைத்த சன் காங் தெரிவித்துள்ளார். மூலம்/ஆக்கம் : இணை…
-
- 0 replies
- 528 views
-
-
2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான வழக்கில், தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர், ராஜா கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக, காங்கிரசைச் சேர்ந்த, பி.சி.சாக்கோ தலைமையிலான, பார்லிமென்ட் கூட்டு குழுவும் விசாரித்து வருகிறது. இந்த குழுவில் காங்கிரஸ் உள்ளிட்ட, முக்கிய கட்சிகளைச் சேர்ந்த, உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவின் அறிக்கை பார்லிமென்டில் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்நிலையில், ராஜா, "இந்த விசாரணையில் என் தரப்பு வாதத்தையும் தெரிவிக்க விரும்புகிறேன். எனவே, என்னையும் சாட்சியாக அழைத்து விசாரிக்க வேண்டும்' என, லோக்சபா சபாநாயகர், மீரா குமாருக்கும், கூட்டு குழு தலைவர் சாக்கோவுக்கும் கட…
-
- 1 reply
- 442 views
-
-
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு இளைஞன் டீன் ஏஜ் இளம்பெண் ஒருவருக்கு ஃபேஸ்புக் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்த காரணத்திற்காக கைது செய்யப்பட்டான். ஐந்து வருடங்களுக்கு தன்னுடைய குடும்பத்தில் உள்ள இளம்பெண், சமூக வலைத்தளங்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிகழ்வுக்கு பழிவாங்கியதாக விசாரணையில் திடுக்கிடும் தகவலை வெளிப்படுத்தியுள்ளான். அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் Charles Andrew Capps, என்ற 21 வயது இளைஞர் 14 வயது இளம்பெண் ஒருவருக்கு தொடர்ச்சியாக ஃபேஸ்புக மூலம் ஆபாச படங்களை அனுப்பியதோடு, தன்னோடு பாலியல் உறவு வைக்க கட்டாயப்படுத்தியதாக தெரிகிறது. இந்த விஷயத்தை அறிந்த இளம்பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் டெக்சாஸ் காவல்துறையினர் ஐ.ப…
-
- 1 reply
- 513 views
-
-
சமீபத்தில் ரஷ்யாவில் ஒரு எரிகல் விழுந்து சுமார் 1500 பேர் வரை காயமடைந்த செய்தியே இன்னும் நம் மனதை விட்டு அகலாத நிலையில் அதை விட பலமடங்கு பெரிய ஒரு எரிகல்லை அண்டார்டிகா பகுதியில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கிழக்கு அண்டார்டிகா பகுதிக்கு ஆய்வுக்காக சென்ற ஜப்பான் மற்றும் பெல்ஜிய விஞ்ஞானக் குழுவினர் சுமார் 40 பவுண்டு எடையுள்ள ஒரு எரிகல்லை கண்டுபிடித்துள்ளனர். இந்த எரிகல் எப்பொழுது விழுந்தது என தெரியவில்லை என்றாலும் இவ்வளவு பெரிய எரிகல் இதுவரை பூமியில் கிடைக்கவில்லை என்பதே விஞ்ஞானிகளின் ஆச்சர்யம். Vinciane Debaille, என்ற பெல்ஜிய புவியியல் ஆராய்ச்சி நிபுணர் இந்த எரிகல் பற்றி கூறும்போது "இந்த எரிகல் பூமியில் விழுந்திருந்த காலத்தில் மிகப்பெரிய சேதத்தை ஏ…
-
- 0 replies
- 428 views
-
-
பெரும் நெருக்கடிக்குள்ளும், வரலாறு காணாத வேலையில்லாத் திண்டாட்டத்திற்குள்ளும் சிக்குண்டு கிடக்கும் அமெரிக்காவை மீட்க புதிய மீதம் பிடிக்கும் பொருளாதார திட்டத்தை அதிபர் ஒபாமா இன்று அறிமுகம் செய்தார். அமெரிக்கக் காங்கிரஸ் அடுத்த பத்து ஆண்டுகளுக்கான அமெரிக்க பொருளாதார பிரச்சனைகளை தீர்ப்பதற்கான சரியான இணக்கப்பாட்டுக்கு வராவிட்டால் இந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 85 பில்லின் டாலர்கள் முதல் வெட்டு விழும். இதன் காரணமாக பாடசாலைகள், விமான நிலையக் கண்காணிப்புக்கள், படைத்துறை என்று பல தரப்பும் பாரிய சிக்கல்களுக்குள் மாட்டுப்பட இருக்கின்றன. பலருடைய வேலைகள் பறிபோகும், சம்பளம் குறையும் இன்று ஐரோப்பா சந்திக்கும் சிக்கல்கள் அமெரிக்காவிலும் தலைவிரித்தாடும். இந்த மீதம் பிடித்தல்…
-
- 0 replies
- 378 views
-
-
வெனிசுலா நாட்டு அதிபர் ஹியுகோ சாவேஸ் கவலைக்கிடமாக உள்ளதாக அந்நாட்டு துணை அதிபர் நிக்கோலஸ் மார்கோ கூறியுள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், கியூபா சென்று சிகிச்சை பெற்று, கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாடு திரும்பியது குறிப்பிடத்தக்கது. நாட்டு மக்களுக்காக போராடிய சாவேஸ்,தனது வாழ்வை நாட்டு மக்களுக்காகவே அர்ப்பணித்தார்.இதனால் அவர், தனது உடல் நிலையை கருத்தில் கொள்ளவில்லை எனதுணை அதிபர் கூறினார். http://tamil.yahoo.com/%E0%AE%B5-%E0%AE%A9-%E0%AE%9A-%E0%AE%B2-%E0%AE%85-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A-%E0%AE%B5-114500126.html As Chávez fights cancer, Venezuela prepares for life after the president While a gravely ill president undergoes a new, tougher cours…
-
- 1 reply
- 532 views
-
-
மாலி நாட்டில் அல்-கொய்தா தீவிரவாதிகளுடன் உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட மாலி அரசுக்கு ஆதரவாக பிரஞ்சு படைகள் களமிறங்கின. சுமார் 7 வாரகாலம் நடைபெற்ற தேடுதல் வேட்டையில் அல்-கொய்தா தீவிரவாதிகளின் மாலி படைப்பிரிவு தலைவன் அபு சயீத் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக சாட் அதிபர் இத்ரீஸ் டெபி இட்னோ நேற்று அறிவித்தார். கொல்லப்பட்ட அபு சயீத் (46) என்பவரின் இயற்பெயர் முகம்மது கெடிர். லிபியா நாட்டின் எல்லைப்பகுதியான அல்ஜீரியாவில் பிறந்த இவர், ஆரம்ப காலத்தில் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வந்தார். பின்னர், இஸ்லாமிய போராளி குழுவினருடன் ஏற்பட்ட தொடர்பினால் அல்-கொய்தா இயக்கத்தில் இணைந்து மாலியில் இயங்கி வந்த அவ்வியக்கத்தின் படைத் தளபதியானார். மேற்கத்திய நாடுகளை சேர்ந்த முக்கிய பிரமுக…
-
- 1 reply
- 533 views
-