Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. Published By: SETHU 28 MAR, 2024 | 04:11 PM லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று ஏற்பட்டுள்ளதால், அயல்நாடான தாய்லாந்தில் இது தொடர்பாக உயர் விழிப்பு நிலையில் இருக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கால்நடைகளில் வேகமாக பரவக்கூடிய அந்த்ராக்ஸ் நோயானது மனிதர்களுக்கும் தொற்றக்கூடியதாகும். இதனால் சிலவேளை மரணங்களும் ஏற்படலாம். இந்நிலையில், லாவோஸில் இம்மாதம் அந்த்ராக்ஸினால் பல மாடுகள் உயிரிழந்ததுடன், குறைந்தபட்சம் 54 மனிதர்களுக்கும் அந்த்ராக்ஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நோய் லாவோஸின் அயல்நாடான தாய்லாந்திலும் பரவுவதை தடுப்பதற்கான முயற்சிகளில் அந்நாட்டு அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. நிலைமையை உன்னிப்பாக கண்காண…

  2. 29 MAR, 2024 | 10:23 AM காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித…

  3. புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441

  4. Published By: SETHU 28 MAR, 2024 | 02:08 PM சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர். கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார். இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன. கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீட…

  5. 28 MAR, 2024 | 12:32 PM அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம…

  6. 23 MAR, 2024 | 06:35 AM ரஷ்யாவில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றின் அரங்கிற்குள் புகுந்த மர்ம நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 40 பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 100 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் குரோகஸ் சிட்டி ஹோல் என்ற இடத்தில் இசை நிகழ்ச்சி இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில், அங்கு பலர் கூடியிருந்தனர். அப்போது ரஷ்ய இராணுவ உடை அணிந்திருந்த மர்ம நபர்கள் 5 பேர், இசை நிகழ்ச்சி அரங்கிற்குள் நுழைந்து அங்கிருந்த பார்வையாளர்கள் கூட்டத்தின் மீது சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். இதில் 40 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் 100 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். …

  7. 19 JAN, 2024 | 09:59 PM நிலவை ஆய்வு செய்யும் நோக்கில் ஜப்பானால் அனுப்பப்பட்ட “மூன் ஸ்னைப்பர்” விண்கலம் சந்திரனில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது. இதையடுத்து விண்கலத்தை வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கிய 5 ஆவது நாடாக ஜப்பான் இடம்பிடித்தது. இதற்குமுன்னர் நிலவில் வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கிய நாடுகளாக ஐக்கிய அமெரிக்கா, முன்னாள் சோவியத் யூனியன், சீனா, இந்தியா ஆகிய நாடுகள் காணப்படுகின்றன. ஜப்பானின் விண்வெளி ஆய்வு நிலையம், Smart Lander for Investigating Moon என்ற திட்டத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்டது. மோசமான வானிலை காரணமாக மூன்று முறை ஒத்திவைக்கப்பட்ட பின்னர், H-IIA ரொக்கெட் செப்டம்பர் மாதம் ஜப்பானின் தெற்கு தீவா…

  8. பட மூலாதாரம்,GETTY IMAGES 11 நிமிடங்களுக்கு முன்னர் காசாவில் "உடனடியாக போர் நிறுத்தத்தை" அமல்படுத்துவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில். இதில் அமெரிக்கா தனது முந்தைய நிலைப்பாட்டில் இருந்து மாறி இந்தமுறை நடவடிக்கையை வீட்டோ செய்யாமல் தவிர்த்துவிட்டது. இந்த தீர்மானத்தின் படி அனைத்து பணயக்கைதிகளையும் உடனடியாக மற்றும் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது. இஸ்ரேல் - பாலத்தீனம் இடையே அக்டோபரில் போர் தொடங்கியதில் இருந்து போர் நிறுத்த தீர்மானத்தை கொண்டு வர முடியாமல் ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு சில முட்டுக்கட்டைகள் இருந்தன. இந்நிலையில் தற்போது அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, காசா மீதான இஸ்ர…

  9. Published By: RAJEEBAN 03 MAR, 2024 | 12:07 PM காசாவின் மீது அமெரிக்கா வான்வழியாக மனிதாபிமான உதவிகளை வீசியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மூன்று விமானங்கள் பராசூட்களை பயன்படுத்தி இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளன. ஜோர்தான் விமானப்படையுடன் இணைந்து அமெரிக்கா இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. உணவுவாகன தொடரணியை சூழ்ந்த பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 110க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து காசாவிற்கான மனிதாபிமான உதவிகளை அதிகரிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்திருந்த நிலையிலேயே அமெரிக்கா இந்த நடவடிக்கையைமேற்கொண்டுள்ளது. சி130 …

  10. மிஸ் யுனிவர்ஸ்’ அழகிப் போட்டியில் சவூதி அரேபியா அதிகாரப்பூர்வமாக பங்கேற்கிறது. அந்தவகையில் சவூதி சார்பில் போட்டியில் பங்கேற்கும் முதல் போட்டியாளராக ரூமி அல்கஹ்தானி (Rumy Alqahtani) தெரிவாகியுள்ளார். இதன்மூலம் அந்நாட்டின் பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் அல் சவூதின் ஆட்சியின் கீழ் இடம்பெறும் மற்றுமொரு சர்ச்சைக்குறிய விடயத்தில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. 27 வயதான ரூமி அல்கஹ்தானி, மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் தான் பங்கேற்பது குறித்த தகவலை திங்கட்கிழமை (25) தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். “மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் சவூதி அரேபியாவின் முதல் பங்கேற்பு இது” என அவர் தெரிவித்துள்ளார். இதனை அந்த நாட்டின் செய்தி ஊடக நிறுவனமும்…

  11. Published By: SETHU 27 MAR, 2024 | 06:06 PM ஜேர்மனியில் இன்று இடம்பெற்ற பஸ் விபத்தில் குறைந்தபட்சம் ஐவர் பலியானதுடன் டசின் கணக்கானோர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளரன். லீப்ஸிக் நகரில் இந்த பஸ் கவிழ்ந்தது. ஜேர்மனியின் பேர்லின் நகரிலிருந்து சுவிட்ஸர்லாந்தின் சூரிச் நகரை நோக்கி இந்த பஸ் சென்றுகொண்டிருந்ததாக பிளிக்ஸ்பஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேற்படி பஸ்ஸில் 53 பயணிகளும் இரு சாரதிகளும் இருந்தனர் எனவும் விபத்துக்கான காரணம் தெரியவில்லை எனவும் அந்நிறுவனம் அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/179843

  12. பட மூலாதாரம்,TOMAS TERMOTE படக்குறிப்பு, முதல் உலகப்போரில் UC கப்பல் மற்றும் அதன் குழு உறுப்பினர்கள் 27 மார்ச் 2024, 10:51 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் நூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த போரின் போது காணாமல் போன ஜெர்மன் யு-படகு (நீர்மூழ்கிக் கப்பல்) இருக்கும் இடத்தை டைவர்ஸ் (ஆழ்கடல் நீச்சல் வீரர்கள்) கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் நீண்ட நாட்களாக நீடித்து வந்த அதன் மர்மம் விலகியுள்ளது. 1917 ஆம் ஆண்டில், ஆங்கிலக் கால்வாயில் ராயல் கடற்படையின் 'லேடி ஆலிவ்' கப்பலுக்கும், ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பல் UC-18 க்கும் இடையில் நடைபெற்ற போரின் போது இந்த UC-18 நீர்மூழ்கி கப்பல் காணாமல் போனது. அதோடு சேர்த்து …

  13. சுற்றுலா செல்வதில் சிக்கலை எதிர்கொண்டுள்ள பிரித்தானியர்கள்! புதிய Brexit கடவுச்சீட்டு விதி காரணமாக, இவ்வாண்டு சுமார் 1 இலட்சம் பிரித்தானியார்கள், ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய பிறகு, 10 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட பிரித்தானிய கடவுச்சீட்டுகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனவும் கூறப்படுகிறது. உள்விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், 32 மில்லியன் கடவுச்சிட்டுகள் தற்போது 10 ஆண்டுகளுக்கு முன்னர் வழங்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. ஆகையால் பிரித்தானியர்கள் வழக்கமாக செல்லும் ஐரோப்பிய நாடுகளான Iceland, Norway, Lichtenstein மற்றும் …

  14. 26 MAR, 2024 | 05:06 PM அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிராக விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசஞ்சே முன்னெடுத்துள்ள போராட்டத்தில் அவருக்கு சிறிய வெற்றி கிடைத்துள்ளது. அமெரிக்காவும் பிரிட்டனும் உரிய உத்தரவாதங்களை வழங்காவிட்டால் அசஞ்சே தான் நாடு கடத்தப்படுவதற்கு எதிராக மேல்முறையீடு செய்யலாம் என பிரிட்டனின் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேல்முறையீடு செய்வதற்கு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தால் அடுத்த சில நாட்களில் அவர் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டிருப்பார். வேவுபார்த்த குற்றச்சாட்டுகளிற்காக அவரை நாடு கடத்தவேண்டும் என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது. இரண்டுநாட்கள் விசாரணையின் பின்னர் நீதிபதிகள் ஜூ…

  15. Published By: RAJEEBAN 26 MAR, 2024 | 10:54 AM அமெரிக்காவைசேர்ந்த மில்லியன் கணக்கானவர்கள் சீனாவின் இணைய வழி ஹக்கிங் நடவடிக்கைகளில் சிக்குண்டமை குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. மில்லியன் கணக்கான அமெரிக்கர்களின் இணையவழி கணக்குகள் ஹக்கிங்கில் சிக்குண்டுள்ளதாக எவ்பிஐயும் அமெரிக்க நீதி திணைக்களமும் தெரிவித்துள்ளன. ஏழு சீன பிரஜைகளிற்கு எதிராக அதிகாரிகள் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர். குற்றச்சாட்டப்பட்டுள்ள ஏழு சீன பிரஜைகளும் 14 வருடங்களிற்கு மேல் இவ்வாறான குற்றசெயலில் ஈடுபட்டனர் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள ஏழு நபர்கள் குறித்த விபரங்களைதருபவர்…

  16. டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை நீதிமன்றங்களில் இருந்து உயிர்நாடி மற்றும் அமெரிக்க வரலாற்றில் ஒரு முன்னாள் ஜனாதிபதியின் முதல் குற்றவியல் விசாரணைக்கான விசாரணை தேதி ஆகிய இரண்டையும் பெற்றார், ஒரு ஜோடி தீர்ப்புகள் அவரைச் சுற்றியுள்ள சட்ட சாட்டையடியைத் தாக்கின. திங்களன்று இரட்டை தீர்ப்புகள், ஏறக்குறைய ஒரு மணி நேரத்திற்குள் வந்தவை, ட்ரம்பின் பிம்பத்திற்கும் அவரது புகழ்பெற்ற வணிக சாம்ராஜ்யத்திற்கும் சவால்களின் குறுக்குவெட்டு, அவர் வெள்ளை மாளிகையில் இரண்டாவது முறையாக பதவியேற்க முயன்றார். ட்ரம்பின் நியூயார்க் ஹஷ் பண வழக்கில் அவருக்கு எதிரான வரலாற்று குற்றவியல் விசாரணை ஏப்ரல் 15 ஆம் தேதி நடுவர் தேர்வில் தொடங்கும் என்று நீதிபதி ஜுவான் மெர்ச்சன் திங்கள்கிழமை தெரிவித்தார், ஆவண…

  17. ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல்: தெற்கு கரோலினாவில் டிரம்ப் வெற்றி அமெரிக்காவில் ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி ஜோ பைடன் பதவி வகித்து வருகிறார். இந்த ஆண்டு அவரது பதவிக்காலம் முடியவுள்ள நிலையில், எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெறவேண்டும். அதற்கு மாகாணங்கள் தோறும் வாக்குப்பதிவு நடைபெறும். இரு கட்சிகள் சார்பிலும் நடக்கும் மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தேர்ந்தெடுப்பார்கள். இதற்கிடையே, அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களம் களைகட்டத் தொடங்கியுள்ளது. குடியரசுக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் …

  18. Published By: RAJEEBAN 22 MAR, 2024 | 02:14 PM மொங்கோலியா அரைநூற்றாண்டு காலத்தில் சந்தித்துள்ள மிகவும் கடுமையான குளிர்காலம் காரணமாக ஐந்து மில்லியன் விலங்குகள் உயிரிழந்துள்ளன என மனிதாபிமான அமைப்புகள் தெரிவித்துள்ளன. மொங்கோலியா மிகவும் கடுமையான குளிரில் சிக்குப்பட்டு உறைந்துபோயுள்ளது 4.7 மில்லியன் விலங்குகள் உயிரிழந்துள்ளன ஆயிரக்கணக்கான் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் உணவு விநியோகத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என சர்வதேச செஞ்சிலுவை சம்மேளனம் தெரிவித்துள்ளது. வெப்பநிலை வீழ்ச்சியடைந்துள்ளது கடும் பனி காணப்படுகின்றது மேய்ச்சல் நிலங்கள் முற்றாக மூடப்பட்டுள்ளனகால்நடைகள்ள் உணவிற்காக அலைகின்றன என செஞ்சிலுவை சம்மேளனம் த…

  19. 3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை! “அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளும் – ரஷ்யாவும் நேருக்கு நேர் மோதினால் மூன்றாம் உலகப் போர் ஏற்படும். ஆனால், அத்தகைய சூழலை இங்கு யாரும் விரும்பவில்லை” என ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற புட்டின் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யாவில் நடந்த ஜனாதிபதி தேர்தலில், 88 சதவீத வாக்குகளுடன் விளாடிமிர் புட்டின் வெற்றி பெற்றார். தொடர்ந்து ஐந்தாவது முறையாகவும் அவர் ஜனாதிபதி அரியணையில் ஏறியிருக்கிறார். இதன்போது, கருத்து தெரிவித்த விளாடிமிர் புட்டின், வாக்களித்து வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளும் – ரஷ்யாவும் நேருக்கு நேர் மோ…

      • Downvote
      • Sad
      • Thanks
      • Like
      • Haha
    • 71 replies
    • 5.8k views
  20. தன் நாட்டில் நடக்கும் வன்முறைகளுக்கு அமெரிக்க துப்பாக்கி நிறுவனங்களிடம் ரூ.80,000 கோடி இழப்பீடு கோரும் அண்டைநாடு பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் சில பழமையான நிறுவனங்களின் எதிர்காலத்தின் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு வழக்கின் விசாரணைக்கு அமெரிக்க நகரமான பாஸ்டனில் உள்ள ஒரு நீதிமன்றம் 2024 ஜனவரியில் ஒப்புதல் அளித்துள்ளது. ஏழு ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ஒரு விநியோகஸ்தர் மீது போடப்பட்டுள்ள வழக்கு இது. இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் ஆயுத உற்பத்தி நிறுவனங்களுக்கு எதிராக போடப்பட்டுள்ள இந்த வழக்கு, ஆயுதங்களால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவர்களது உறவினர்கள் எவராலும் தாக…

  21. பட மூலாதாரம்,GETTY IMAGES 7 மணி நேரங்களுக்கு முன்னர் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 4ஆம் தேதி உலக புற்றுநோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. புகையிலை, வாழ்க்கை முறை மாற்றம், மோசமான சூழல் எனப் பல விதமான காரணங்களால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் உலக அளவில் பெரும் அபாயமாக வளர்ந்து வரும் காலநிலை மாற்றமும் புற்றுநோய் காரணியாக மாறியுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் ஒன்றால் நடத்தப்பட்டுள்ள ஆய்வில் எவ்வாறு காலநிலை மாற்றம் புற்றுநோய் ஏற்படக் காரணமாக உள்ளது என்ற காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதன் ஆய்வு விவரங்கள் குறித்து மருத்துவர்கள், ஆய்வாளர்கள் என்ன சொல்கின்றனர்? காலநிலை மாற்றம்: அதிகரிக்…

  22. வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா விதிமுறைகளை இந்த வாரம் முதல் கடுமையாக்க அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவுஸ்திரேலியாவிற்கு வந்துள்ள குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாக சமீபத்திய தரவுகளின் பின்னணியில் அவர்கள் அந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர். குடியேற்றவாசிகளின் வருகை அதிகரிப்பால், நாட்டின் வாடகை வீட்டுச் சந்தையின் போட்டித்தன்மை எதிர்பாராத வகையில் வளர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. பட்டதாரி விசாக்கள் மற்றும் மாணவர் விசாக்களுக்கான ஆங்கில மொழித் தேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், சர்வதேச மாணவர்களுக்கு உணவு வழங்கும் நிறுவனங்கள் தொடர்ந்து விதிகளை மீறினால் அவற்றை இடைநிறுத்துவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்…

  23. 6 மணி நேரங்களுக்கு முன்னர் செனகலை சேர்ந்த ஜூனியர் டியாகாடே இதுவரை 100 கிணறுகளை கட்டி கொடுத்துள்ளார். செனகலில் உள்ள பல கிராமங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில் ஒரே இளைஞர் நூறுக்கும் மேற்பட்ட கிணறுகளை கட்டிக் கொடுத்து மக்களின் தாகம் தீர்த்து வருகிறார். இதற்காக பலரிடமும் நிதி வசூல் செய்து, கடந்த ஆண்டில் பல கிணறுகளை உருவாக்கி கொடுத்துள்ள ஜூனியர் இது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருவதாக கூறுகிறார். மேலும், இதனால் தனது குடும்ப வாழ்க்கை பாதிக்கப்பட்ட போதிலும் கூட தொடர்ந்து மக்களுக்காக கிணறு வெட்டிக் கொடுப்பதே தனக்கு மகிழ்ச்சி என்று அவர் தெரிவிக்கிறார். https://www.bbc.com/tamil/articles/clm75rygdrmo

  24. இத்தாலி பெண் பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் முகத்தை, ஆபாச திரைப்படத்தில் உள்ள நடிகையின் உடலுடன் பொருத்தி வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ததாக தெரிகிறது. நவீன உலகம் பெருமையாக பேசிக்கொள்ளும் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் மற்றும் அதன் எதிர்விளைவுகள் டிஜிட்டல் துறையில் அதிகரித்துள்ளது. இந்த தொழில்நுட்பத்தை பொழுதுபோக்கு அம்சங்களில் அதிகம் பயன்படுத்துகிறார்கள். டீப்பேக் என்ற ஏ.ஐ. வீடியோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஒருவரின் முகத்தை வேறு ஒருவரின் உடலோடு பொருத்தி வீடியோ வெளியிடுவது அதிகரித்து வருகிறது. அவ்வகையில், இத்தாலி பெண் பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் டீப்பேக் வீடியோக்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜார்ஜியா மெலோனியின் முகத்தை, ஆபாச த…

  25. கட்டுரை தகவல் எழுதியவர், அலெக்சாண்ட்ரா ஃபௌச் பதவி, பிபிசி உலக சேவை 5 மணி நேரங்களுக்கு முன்னர் டவுன் சிண்ட்ரோம் எனும் மனநல குறைபாடு மீதான கற்பிதங்களை ஒழிப்பதுதான், இந்தாண்டு சர்வதேச டவுன் சிண்ட்ரோம் தினத்தின் கருப்பொருளாக உள்ளது. டவுன் சிண்ட்ரோம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21-ம் தேதி இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. டவுன் சிண்ட்ரோம் உள்ளவர்கள் குறித்தும் அவர்கள் எப்படி இருப்பார்கள் அல்லது அவர்களால் என்ன செய்ய முடியும் என்பது குறித்தும் கட்டமைக்கப்பட்டுள்ள எண்ணங்களை எதித்துப் போராடுவதே இந்நாளின் இலக்கு. டவுன் சிண்ட்ரோமுடன் வாழ்ந்துவரும் இந்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.