உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
27027 topics in this forum
-
சென்னை: தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் 60-வது பிறந்த நாளையொட்டி மணி விழா திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் இன்று கொண்டாடப்பட்டது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த திமுக தொண்டர்கள் ஸ்டாலினுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். மணிவிழா ஸ்டாலின் மணிவிழா நிகழ்ச்சி அடையாறு ஹோட்டல் ஒன்றில் இன்று காலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திமுக பொதுச்செயலர் அன்பழகன் முன்னிலை வகித்தார். பட்டு வேட்டி, சட்டையுடன் மு.க.ஸ்டாலினும், பட்டுப்புடவை அணிந்து அவரது மனைவி துர்காவும் மேடைக்கு வந்தனர். கருணாநிதி முன்னிலையில் மு.க.ஸ்டாலினும் துர்கா ஸ்டாலினும் மாலை மாற்றிக் கொண்டனர். துர்காவுக்கு மங்கல நாணையும் ஸ்டாலின் அணிவித்தார். இதையடுத்து இருவரும் கருணாநிதி மற்றும் அன்பழகன் காலில் விழுந்து…
-
- 12 replies
- 936 views
-
-
ஜப்பானில் கதிர்வீச்சு பாதித்த புகுஷிமாவில் புற்றுநோய் பரவும் ஆபத்து! [Friday, 2013-03-01 17:57:46] ஜப்பானில் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் 11-ந் தேதி 9 ரிக்டர் அளவில் பூகம்பமும், அதை தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது. அதனால் புகுஷிமா அணு உலை வெடித்து கதிர்வீச்சு வெளியானது. இதனால் தண்ணீர், பால் மற்றும் உணவு பொருட்களில் கதிர் வீச்சு பரவியது. அதை தொடர்ந்து அப்பகுதியில் 20 கி.மீட்டர் சுற்றளவில் தங்கிருந்தவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். பின்னர் அணு கதிர் வீச்சு கசிவு சரிசெய்யப்பட்டது. இருந்தும், புகுஷிமா பகுதியில் வாழும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. அதில், அங்கு வாழ்பவர்களுக்கு புற்று நோய் பரவும் அபாயம் உள்ளது தெரியவ…
-
- 1 reply
- 325 views
-
-
மோடியை தோலுரித்து காட்டும் உச்ச நீதிமன்ற நீதிபதி! இந்திய நாட்டுமக்களுக்கு மோடியை தோலுரித்து காட்டியுள்ளார் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கட்சு அவர்கள். ”குஜராத்தில் முஸ்லிம்கள் பயந்து வாழ்கின்றனர்..” ஜெர்மனி மக்களை போன்று முடிவு எடுத்து விடாதீர்கள்! நாட்டு மக்களுக்கு மோடியை தோலுரித்து காட்டும் கட்சு! நீதியான, நேர்மையான அதே சமயம் அதிகார வர்க்கத்தினருக்கு எதிராக சாட்டையடித் தீர்ப்பு வழங்கி மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றிருப்பவர் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியான மார்க்கண்டேய கட்சு. “அரேபியாவின் அனைத்து வாசனை திரவியங்கள்..” என்ற தலைப்பில் ” தி ஹிந்து ” நாளிதழில் பிப்ரவரி 15 2013 ல் மார்கண்டே கட்சு அவர்களின் ஆக்கத்தை அப்படியே மொழிபெயர்த்து இங்கு தரு…
-
- 5 replies
- 866 views
-
-
நாடகமாடுகிறார் கருணாநிதி... நாம் யாருடன் கூட்டணி வைகோ சிறப்பு பேட்டி.(காணொளி) புறநகருக்கே என்று இருக்கும் அனலும் கனலுமாக வெயில் தகிக்க, தென்னந்தோப்பில் துண்டை விரித்து மல்லாந்து படுத்திருந்தார் வைகோ. அவருக்கு ரத்த அழுத்தம் பரிசோதித்த டாக்டர், 'ஓ.கே’ சொல்லிப் புன்னகைக்க... ''இந்த வண்டி ஓட வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கே!'' என்று தெம்பாகச் சிரிக்கிறார் வைகோ. ''நடை பயண அனுபவம் எப்படி இருக்கிறது... மக்களின் மனவோட்டத்தை உணர முடிகிறதா?'' ''அரிசி தொடங்கி எல்லாமே இலவசம். அதனால், கிராம மக்கள் சொற்ப வருமானத்தையும் குடித்து அழித்துவிட்டு, சோம்பிக்கிடக்கிறார்கள். இலவசத்துக்கும் போதைக்கும் பழகிய மக்கள் வேலைக்குப் போகாததால், வட மாநிலத் தொழிலாளர்கள் …
-
- 2 replies
- 659 views
-
-
பிரிட்டனின் மாபெரும் ரயில் கொள்ளை என்று வர்ணிக்கப்படும் கொள்ளையை 50 ஆண்டுகளுக்கு முன்னர் திட்டமிட்டு நடத்திய கொள்ளையன் ப்ரூஸ் ரெய்னால்ட்ஸ் இறந்துவிட்டார். லண்டனின் வடமேற்குப் பகுதியில் சென்று கொண்டிருந்த மெயில் ரயிலை தடுத்து நிறுத்தி, இன்றைய பண மதிப்பில் பார்த்தால், சுமார் 60 மில்லியன் டொலர்கள் பணத்தைக் கொள்ளையடித்த குழுவிற்கு ப்ரூஸ் ரெய்னால்ட்ஸ் தலைமை தாங்கினார். அவர் ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் பிடிபட்டு, பின்னர் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார். விடுதலையான பின்னர் அவர் கொள்ளையடிப்பது தொடர்பாக தயாரான திரைப்படம் ஒன்றிற்கு ஆலோசகராக வேலைசெய்தார். "ஒரு திருடனின் சுயசரிதை" என்ற புத்தகத்தையும் எழுதினார். 81 வயதான அவர் தூக்கத்தில் இறந்தார் என்று அவரது மகன் கூறினார்…
-
- 0 replies
- 270 views
-
-
அமெரிக்காவில் உள்ள ஒரு பெண் வால்மார்ட் கடையில் $499 விலையில் வாங்கிய ஐபேட் பெட்டியில், உள்ளே வெறும் பிளாஸ்டிக் டப்பா மட்டும் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பாகியுள்ளது. அமெரிக்காவின் வால்மார்ட் கடையில் Suzanne Nassie என்ற பெண், $499 கொடுத்து ஐபேட் ஒன்றை வாங்கினார். பின்னர் வீட்டிற்கு சென்று பிரித்து பார்த்ததில் ஐபெட் இருப்பதற்கு பதிலாக வெறும் பிளாஸ்டிக்கினால் ஆன வெற்று டப்பா மட்டுமே இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், உடனே மீண்டும் கடைக்கு சென்று தனது பில்லை காண்பித்து புகார் தெரிவித்தார். வால்மார்ட் கடை ஊழியர் வேறு ஐபேட்டை மாற்றிதர மறுத்ததால், Suzanne Nassie கடை மானேஜரிடம் புகார் செய்தார். அவர் இதுகுறித்து விசாரனை செய்து, அந்த பெண…
-
- 0 replies
- 445 views
-
-
மிஸ். அமெரிக்க அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அழகி, தனக்கு கிடைத்த அழகி கிரீடத்தை தன்னை பார்க்க வந்த சிறுமிகளுக்கு அணிவித்து அழகு பார்த்தார். மிஸ் அமெரிக்க அழகியாக கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட Miss America Mallory Hagan தன்னை பார்த்து வாழ்த்து கூற வந்த 10 குழந்தைகளில், மூன்று குழந்தைகளுக்கு தான் பரிசாக பெற்ற அழகி கிரீடத்தை அணிவித்து அவர்களை மகிழ்ச்சியுற செய்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, கிரீடத்தை அவர்கள் தலையில் அணிவித்ததும் அவர்கள் பெற்ற மகிழ்ச்சியை பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அவர்களுக்கு தாங்கள் மிஸ். அமெரிக்காவாக வரவேண்டும் என்ற எண்ணத்தை அது தோற்றுவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார் குழந்தைக்கு கீரீடம் சூட்டி அழகு பார்க்கும் மிஸ…
-
- 0 replies
- 437 views
-
-
அமெரிக்காவில் பாஸ்டன் நகரிலுள்ள Emerson கல்லூரியில் Donnie Collins(20) என்பவர் படித்து வருகிறார். பிறவியில் பெண்ணாக அவதரித்த போதிலும் 17 வயதிற்கு மேல் இவருக்கு ஆண் போன்ற உணர்வு ஏற்படத்தொடங்கியது. எனவே ஆண் நண்பர்களுடனேயே தங்குகிறார். இதனால் அவருக்கு ‘செக்ஸ்’ மாற்று அறுவை சிகிச்சைக்கு நண்பர்கள் ஏற்பாடு செய்கிறார்கள். இதன் செலவுக்காக மாணவர்கள் சங்கம் சார்பில் நிதி திரட்டுவதில் தீவிரமாக இறங்கியுள்ளனர். பிப்ரவரி 9ஆம் தேதி நிதி திரட்ட ஆரம்பித்த மாணவர்கள் $4800 வரை மொத்தம் நிதி திரட்ட முடிவு செய்தனர். ஆனால் தற்போது அவர்களுக்கு $16000 வரை நிதி குவிந்துள்ளது. இன்னும் நிதி வந்து கொண்டே இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ய காத்திருக்கும் மாணவரி…
-
- 0 replies
- 550 views
-
-
முகேஷ் அம்பானியை தாக்குவோம் - இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு மிரட்டல் கடந்த 24ம் திகதி ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் முகேஷ் அம்பானியின் அலுவலகத்திற்கு வந்த மர்ம நபர் ஒருவர் அங்குள்ள ஊழியரிடம் கவரொன்றை கொடுத்துவிட்டு சென்றார். அதைப் பிரித்து படித்துப் பார்த்தபோது இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு முகேஷ் அம்பானிக்கு மிரட்டல் விடுத்துள்ளமை தெரியவந்தது. முகேஷ் குஜராத் முதல்வர் மோடியை ஆதரிப்பது மற்றும் குஜராத்தில் முதலீடு செய்வதை நிறுத்திக் கொள்ளாவிட்டால் அவரையும், அவரது 27 அடுக்குமாடி வீடான ஆன்டில்லாவையும் தாக்கப் போவதாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தங்கள் கூட்டாளியான டேனிஷ் என்பவரை விடுதலை செய்யாவிட்டால் முகேஷ் அம்பானிக்கு தான் கேடு என்றும்…
-
- 0 replies
- 354 views
-
-
அமெரிக்காவின் நிலப்பரப்பு முழுவதும் எங்களின் ராக்கெட் மற்றும் அணு ஆயுதங்களின் தாக்குதல் எல்லைக்குள்தான் உள்ளது என்று வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீபத்தில் 3ஆவது அணு ஆயுத சோதனையை நடத்தி முடித்துள்ள வட கொரியா, அமெரிக்கா தனது தாக்குதல் எல்லைக்குள்தான் உள்ளது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. வட கொரியா தேசிய அமைதிக் குழு உறுப்பினரான யூரிமின் ஜோக்கிரியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் இது குறித்துக் கூறியிருப்பதாவது: ராக்கெட் மற்றும் அணு ஆயுதங்களில் தன்னிறைவு பெற்ற நாடாக வட கொரியா மாறியுள்ளது. அமெரிக்கா இனி எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எங்களின் அணு ஆயுதம் மற்றும் ராக்கெட்டுகளின் தாக்குதல் எல்லைக்குள்தான் அந்நாடு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை இலக…
-
- 0 replies
- 1.6k views
-
-
அல்,கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் கொல்லப்பட்டு 2 ஆண்டுகள் கடந்த நிலையில், தடை விதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் இருந்து அவரது பெயரை ஐ.நா. நீக்கியுள்ளது. இருப்பினும், பின்லேடனின் சொத்துகள் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்த விடாமல் முட க்கி வைக்கும் நடவடிக்கைகளை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தொடர்ந்து மேற்கொள்ளும்.பின்லேடன் கொல்லப்பட்டு 2 ஆண்டுகள் கடந்த நிலையில் தடை விதிக்கப்பட்டோர் பட்டியலில் இருந்து அவரது பெயரை தற்போது ஐ.நா. நீக்கியுள்ளது. அல்,கொய்தாவினருக்கு ஐ.நா. விதித்துள்ள தடை பட்டியலில் இப்போதும் 233 தீவிரவாதிகள், 63 அமைப்புகள், அறக்கட்டளைகள், நிறுவனங்கள் உள்ளன. http://www.seithy.com/breifNews.php?newsID=76992&category=WorldNews&language=tamil
-
- 9 replies
- 592 views
-
-
வங்கதேச இஸ்லாமியக் கட்சியின் உபதலைவருக்கு மரண தண்டனை கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 28 பிப்ரவரி, 2013 - 10:41 ஜிஎம்டி வங்கதேசத்தின் மிகப்பெரிய இஸ்லாமியக் கட்சியின் தலைவருக்கு ஒரு சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை பெறுவதற்கான வங்கதேசத்தின் சுதந்திரப் போராட்டத்தின் போது (1971) அவர் செய்ததாகக் கூறப்படும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களுக்காக அவருக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டது. மனிதப் படுகொலை, சித்ரவதைகள் ஆகியவைகள் உட்பட பல குற்றங்களுக்காக ஜமாத் ஈ இஸ்லாமி கட்சியின் உபதலைவரான டெல்வார் ஹொசைன் சைதீ அவர்களுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அரசியல் பக்கசார்பானது என்று இந்த வழக்கு விசாரணையை விமர்சிக்கும் ஜமாத் கட்சியி…
-
- 0 replies
- 282 views
-
-
உலக நாடுகளுக்கு அமெரிக்கா உத்தரவிட முடியாது: புதிய பாதுகாப்பு மந்திரி சக் ஹேகல் அமெரிக்க பாதுகாப்புத் துறையின் புதிய மந்திரியாக சக் ஹேகல் நேற்று பதவி ஏற்றார். பின்னர் பென்டகனில் பணிபுரிபவர்களுக்கு உரையாற்றினார்.அப்போது அவர் கூறியதாவது:-நாம் உலகின் பலம் மிக்க நாடாக இருக்கிறோம். அந்த பலத்தை எப்படி பயன்படுத்தப் போகிறோம் என்பதே முக்கியம். நாம் மற்ற நாடுகளுக்கு உத்தரவிட முடியாது. நட்பு நாடுகளுடன் இணைத்து, தலைமை ஏற்று செயல்பட வேண்டும். அமெரிக்காவைத் தவிர வேறு எந்த நாடும் இதனை தனியாகச் செய்ய முடியாது. மற்ற நாடுகளை நாம் புத்திசாலித்தனமாக வழிநடத்த வேண்டும். நமது நாட்டிற்காகவோ, நமது நட்பு நாடுகளுக்காகவோ வளங்களைப் பயன்படுத்தும் போது புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். ந…
-
- 0 replies
- 527 views
-
-
காவிரிநீரை பங்கீடு செய்வது தொடர்பாக காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007ம் ஆண்டு இறுதி தீர்ப்பு அளித்தது. இதனை மத்திய அரசிதழில் வெளியிட கடந்த மாதம் சுப்ரீம் கோர்ட் கெடு விதித்தது. இதை தொடர்ந்து கர்நாடக அரசின் எதிர்ப்பை மீறி கடந்த வாரம் கெடு முடியும் நாளன்று மத்திய அரசிதழில் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு வெளியிடப்பட்டது. இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும். இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். வாரியம் அமைப்பதை தடுத்து நிறுத்த கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் டெல்லியில் முகாமிட்டுள்ளார். இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு தடை விதிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர…
-
- 0 replies
- 360 views
-
-
பாதுகாப்புத்துறைக்கு ரூ. 43,000 கோடி கூடுதலாக ஒதுக்கீடு ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு- வரி ஏதும் இல்லை ரூ. 2 முதல் ரூ. 5 லட்சம் வரை- 10% வரி 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை- 20% வரி 20 லட்சத்துக்கு மேல் ஊதியம் உள்ளவர்களுக்கு -30% வருமான வரி 1 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு- 30 சதவீதம் பிளஸ் 10 சதவீதம் வரி கூடுதல் நேரடி வரிகள் மூலம் ரூ. 30,000 கோடி கூடுதலாகக் கிடைக்கும் கூடுதல் மறைமுக வரிகள் மூலம் ரூ. 4,700 கோடி கூடுதலாகக் கிடைக்கும் ஏசி ஹோட்டல்கள் அனைத்துக்கும் சேவை வரி விதிப்பு மார்பிள் மீதான வரி சதுர மீட்டருக்கு 30 ரூபாயிலிருந்து 60 ரூபாயாக அதிகரிப்பு ரூ. 2000க்கு மேல் அதிக மதிப்புள்ள செல்போன்கள் மீதான வரி 6 சதவீதம் அதிகரிப்பு …
-
- 0 replies
- 486 views
-
-
இங்கிலாந்தில் உள்ள Hartlepool என்ற நகரத்தில் வசிக்கும் ஒரு 15 வயது சிறுவன் தொடர்ந்து பல மாதங்களாக இண்டர்நெட்டில் ஆபாச இணையதளங்கள் பார்த்ததால், செக்ஸில் அதிக ஆர்வமாகி, 14 வயது சிறுமியை தன்னுடைய நண்பன் ஒருவனுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டான். Hartlepool நகர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, நீதிபதி Judge Bourne-Arton அவர்கள் அளித்த தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் தலா மூன்று ஆண்டுகள் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் வைத்து காவல் காக்குமாறு உத்தரவிட்டார். மேலும் சிறுவனை மிகவும் கண்டித்த நீதிபதி, இந்த சிறிய வயதில் இணையத்தின் ஆபாச இணையதளங்களை பார்த்து பாலியல் குற்றங்கள் புரியும் நிகழ்வை தடுக…
-
- 1 reply
- 578 views
-
-
அமெரிக்காவில் G20 கட்டிடத்தின் ஜன்னல்களை உடைத்து நொறுக்கிவிட்டு தலைமறைவாக வாழ்ந்து வந்த ஒருவர் டொரண்டோவில் கைது செய்யப்பட்டார். Quinn McCormic, என்ற 25 வயது அமெரிக்க நபர் G20 கட்டிடத்தின் கதவு ஜன்னல்களை சேதப்படுத்தியது உள்பட நான்குவித குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்தான். அவனை பிடிக்க அமெரிக்க காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில் அவன் கனடாவில் தலைமறைவு வாழ்க்கை வாழ்வதாக வந்த தகவலை அடுத்து, கனடாவின் காவல்துறைக்கும் தகவல் அனுப்பப்பட்டது. நேற்று டொரண்டோவின் பியர்சன் சர்வதேச விமானநிலையத்தில் Quinn McCormic என்ற நபரை அடையாளம் கண்ட டொரண்டோ காவல்துறையினர் அவனை சுற்றிவளைத்து பிடித்து கைது செய்து டொரண்டோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். Quinn McCormic…
-
- 0 replies
- 406 views
-
-
டொரண்டோ கல்வித்துறை இயக்ககம் எடுத்த அதிரடி நடவடிக்கையால் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கல்வித்துறை தங்களது பட்ஜெட்டில் $55 மில்லியன் டாலர்கள் மதிப்பில் தற்போது ஆசிரியர்கள் அனுபவித்து வரும் சலுகைகளை அதிரடியாக நீக்கியது. இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் பொருட்டு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். கல்வித்துறையின்சலுகை பறிப்பு நடவடிக்கையால் 115 முழுநேர ஆசிரியர்கள், 133 மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நூலக அலுவலர்கள், பிரின்சிபால் மற்றும் சில கல்வித்துறை அலுவலர்களும் பாதிப்பு அடைந்துள்ளதாக தெரிகிறது. பள்ளி கல்வித்துறையின் பட்ஜெட்டில் மற்ற எல்லா செலவினங்களை விட ஊழியர்களுக்கு சம்பள் வகையில்தான் அதிக செலவு…
-
- 0 replies
- 404 views
-
-
கனடாவின் North York பகுதியில் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 24 வயது நபர் ஒருவரை டொரண்டோ காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். GreenBush Road, in the Yonge Street and Steeles Avenue area என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 5 வயது சிறுமியை அடைத்து வைத்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திறாக அவன் கைது செய்யப்பட்டான் என டொரண்டோ காவல்துறையினர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவனின் பெயர் Cyril Gayola என்றும் அவனுடைய வயது 24 என்றும், தெரிவித்த அவர்கள், இன்று காலை அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருப்பதாகவும் தெரிவித்தனர். அவன் மீது பாலியல் தொடர்பான மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்லது. கைது செய்யப்பட்டவனின…
-
- 0 replies
- 463 views
-
-
எகிப்து நாட்டின் இளவரசியாக இருந்த உலக பேரழகி கிளியோபாட்ராவின் தங்கை Arsinoe அவர்களின் எலும்புகள் கிரேக்க நாட்டில் கிடைத்துள்ளதாக தொல்லியல் துறை நிபுணர்கள் கூறியுள்ளனர். இளவரசியின் எலும்புகளை கண்டுபிடித்ததற்காக தங்கள் குழுவினர் பெருமைப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர். ஆராய்ச்சியாளர்கள் எலும்புகளின் DNA டெஸ்ட் செய்து பார்த்து உறுதி செய்த பின் செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது, கிரேக்க நாட்டின் மிகப் பழமையான Ephesus என்ற நகரத்தில் உள்ள பாழடைந்த கோவில் ஒன்றில் இருந்து இளவரசி Arsinoeஅவர்களின் எலும்புகள் கிடைத்ததாகவும், அதன் DNA வை வைத்து கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் அவருடைய தோற்றத்தை வரைந்து தற்போது ஊடகங்களுக்கு வெளியிடுவதாகவும் தெரிவித்தனர். கிளியோபாட்ரா தங்கையின்…
-
- 0 replies
- 555 views
-
-
அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை அமைச்சராக சக் ஹேகல் புதன்கிழமை பதவியேற்றார். அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சராக உள்ள லியோன் பனெட்டாவின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, சக் ஹேகல் புதிய அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். முன்னதாக, இப்பதவிக்கு, சக் ஹேகலின் பெயரை ஒபாமா பரிந்துரை செய்திருந்தார். இப்பரிந்துரை மீதான வாக்கெடுப்பு செனட் சபையில் நடைபெற்றது. இதில், ஹேகலுக்கு ஆதரவு தெரிவித்து 58 வாக்குகளும், எதிராக 41 வாக்குகளும் பதிவாகின. ஹேகல், வியத்நாம் போரில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. "நமது நாட்டுக்கு ஹேகல் போன்ற பாதுகாப்புத்துறை அமைச்சர்கள்தான் தேவை. ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளைத் திரும்பப் பெறுவது, எந்த நேரத்திலும் அச்சுறுத்தலைச் சமாளிக்கும் விதத்த…
-
- 0 replies
- 466 views
-
-
இலங்கைக்கு வலுக்கிறது எதிர்ப்பு: இன்று மாநிலங்களவையில் விவாதம் பதிவு செய்த நாள் - பெப்ரவரி 27, 2013 at 7:27:03 AM ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் தீர்மானம் கொண்டு வரவுள்ளது. மேலும், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் உயிருடன் பிடிக்கப்பட்டு பின்னர் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் இலங்கை அரசுக்கு நெருக்கடியை உருவாக்கியுள்ளது. இத்தகைய நிலையில், ஈழத் தமிழர் விவகாரம் இந்தியாவிலும் முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. அது இன்று மாநிலங்களவையிலும் எதிரொலிக்க உள்ளது. …
-
- 10 replies
- 2.3k views
-
-
அவுஸ்திரேலியாவில் 20 வயதான பல்கலைக்கழக மாணவி பாலியல் வல்லுறவுக்கு உட்பபடுத்தப்பட்டார் 27 பெப்ரவரி 2013 இலங்கையை சேர்ந்த இளைஞர் கைது அவுஸ்திரேலியாவில் 20 வயதான பல்கலைக்கழக மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பாக இலங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவரை நியூசவுத்வேல் காவற்துறையினர் கைதுசெய்துள்ளனர். 21 வயதான சந்தேக நபர் அரசியல் தஞ்சம் கோரி அந்த நாட்டுக்கு சென்றவர் என அந்த நாட்டின் குடிவரவு திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. குறித்த மாணவி கடந்த 20 ஆம் திகதி இரவு மெகாரி பல்கலைக்கழகத்தில் உள்ள பெண்கள் விடுதியில் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சந்தேக நபர் மேலும் சில இலங்கை அகதிகளுடன் குறித்த பல்கலைக்கழகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தாக கூறப்ப…
-
- 0 replies
- 359 views
-
-
சிரியாவில், அரசு படைகள், ஏவுகணை தாக்குதல் நடத்தியதில், 140 பேர் பலியாகியுள்ளனர். சிரியாவில், எல்லை புற நகரங்களை, கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக, அரசு படைகள், கடந்த வாரம், அலெப்போ நகரில், நான்கு ஏவுகணைகளை வீசி தாக்கியது. இதில், 20 கட்டடங்கள் தரைமட்டமாயின. 70 குழந்தைகள் உள்பட, 140 பேர் இந்த தாக்குதலில் பலியானதாக, சர்வதேச பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். தலைநகர் டமாஸ்கசில் உள்ள ராணுவ சோதனை சாவடியில், நேற்று கார் வெடிகுண்டு வெடித்ததில், ஐந்து வீரர்கள் பலியாயினர். காபூன் மற்றும் ஜோபார் மாவட்டங்கள் தற்போது கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ளது. இதை மீட்க அரசு படை, கடும் தாக்குதலை நடத்தி வருகிறது. கிளர்ச்சியாளர்களும் பத…
-
- 0 replies
- 314 views
-
-
ம.பி.,யில் ரயில்வே ஊழியர் எரித்து கொலை: 2 குழந்தைகள் பலியானதால் மக்கள் ஆத்திரம் போபால்: மத்திய பிரதேசத்தில் 2 குழந்தைகள் ரயிலில் அடிபட்டு இறந்ததால் ஆத்திரமுற்ற அவர்களது குடும்பத்தினர் ரயில்வே ஸ்டேஷன்களுக்கு தீ வைத்தனர். 2 ஊழியர்களை எரித்து கொல்ல நடந்த முயற்சியில் ஒருவர் கொல்லப்பட்டார். இன்று ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட சில மணித்துளிகளில் இந்த வன்முறைச்சம்பவம் நடந்துள்ளது. தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ம.பி., மாநிலம் குல்பஞ்ச் ரயில் நிலையம் அருகேயுள்ள விதிஷா கிராமத்தில் ரயில் மோதியதில் இரண்டு குழந்தைகள் பலியானார்கள். மக்கள் தண்டவாளத்தை கடக்கும் போது, ரயில் நிலையத்தில் ரயில் கிளம்புவதாக தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் ஸ்டேஷன்…
-
- 0 replies
- 603 views
-