Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. உலகின் மிகப்பெரிய கான்கிரீட் கால்வாய்கள் நீர்பாசன திட்டமான நர்மதா திட்டம், வெற்றிகரமாக செயல்படுத்தி இருக்கிறது குஜராத்.

    • 0 replies
    • 465 views
  2. வீடற்றவர்களும் வயது முதிந்தவர்களுமே உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள். வட இந்தியா முழுவதும் நிலவும் கடும் குளிர் காரணமாக குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய அரச வானொலி அறிவித்துள்ளது. உத்திர பிரதேசத்திலேயே கூடுதலானோர் குளிருக்குப் பலியாகியுள்ளனர். ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா ஆகிய மற்ற வடஇந்திய மாநிலங்களிலும் கடுமையான குளிர் காலநிலை நிலவுகிறது. வீடற்றவர்களும் வயது முதிந்தவர்களுமே உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள். தலைநகர் டெல்லியிலும் அண்டை மாநிலங்களிலும் கடுமையான பனிமூட்டம் காரணமாக விமான சேவைகளும் ரயில் போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டுள்ளன. டெல்லியில் வெப்பநிலை 7 பாகை வரை குறைந்து, கடும் குளிர் காணப்படுகிறது. அங்கு விமான பயண நேரங்களும் குழம்பியுள்ள…

  3. கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 26 டிசம்பர், 2012 - 12:29 ஜிஎம்டி சீனாவில் அதிவேக விரைவு ரயில்கள் அதிகரித்து வருகின்றன உலகின் மிக நீண்ட அதிவேக ரயில் பாதை சீனாவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தலைநகர் பீஜிங்கிலிருந்து தென் பகுதியில் இருக்கும் குவாங்ஷோ நகர் வரை இந்தப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 2,300 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த அதிவேக பாதையில் பயணிகளை ஏற்றிக் கொண்டு புதிய ரயில் பீஜிங்கிலிருந்து இன்று-புதன்கிழமையன்று(26.12.12) புறப்பட்டது. இந்த இரு நகரங்களுக்கும் இடையேயான பயண நேரம் முன்னர் இருபது மணித்தியாலங்களுக்கும் மேலாக இருந்தது. பயணிகளை வரவேற்க தயாராக இருக்கும் சீன ரயில்வே பணியாளர் இப்போது அந்த தூரத்தை எட்டு மணி நேரத்தில் கடக்க முடியும். ஐந்து …

  4. ஒண்டோரியோவின் Thornhill பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு இன்றைய கிறிஸ்துமஸ், மிகவும் அதிர்ஷடகரமான நாளாகவும் இருந்துள்ளது. அவர் வாங்கிய லாட்டரி சீட்டு ஒன்றுக்கு $50 மில்லியன் டாலர் பரிசு கிடைத்துள்ளது. டிசம்பர் 21ஆம் தேதி நடைபெற்ற மெகா குலுக்கல் லாட்டரி பரிசு ஒன்று Susan Flam என்ற பெண்மணிக்கு கிடைத்துள்ளது. அவர் பரிசு விழுந்ததையே அறியாமல் தான் நடத்தும் கடை ஒன்றில் வேலை பார்த்து கொண்டிருக்கும்பொழுது, அதிகாரிகள் அவரை தேடி வந்து, அவருக்கு பரிசு விழுந்த விபரங்களை கூறியவுடன் ஆச்சரியத்தில் மூழ்கினார் அந்த பெண். Susan Flam என்ற பெண், சுமார் 60 வயதை கடந்தவர். இந்த வயதில், அதுவும் கிறிஸ்துமஸ் தினத்தன்று தனக்கு பரிசு விழுந்த செய்தியை கேட்டு தான் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக அவர் செய்…

  5. December 24, 2012 இன்று திங்கட்கிழமை அதிகாலையில் நியுயோர்க் பகுதி தீயணைக்கும் படையைச் சேர்ந்த இருவர் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி மரணமடைந்துள்ளனர் எனவும் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்னர் எனவும் பிந்திய செய்தி தெரிவிக்கின்றது. றேசெஸ்ரர் பகுதியில் பல வீடுகள் தீப்பிடித்து எரிந்தகொண்டிருந்தபோது அவற்றைத் தணிப்பதற்காக விரைந்த தீயணைக்கும் படையினரை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுளளது. துப்பாக்கிக் காயமடைந்த தீயணைப்பு படையினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருப்பதாக வைத்தியசாலை நிர்வாகம் கூறுகின்றது. அப்பகுதி உள்ளுர்த் தகவல்களின்படி தீப்பிடித்த பகுதிக்கு அண்டிய பகுதியிலுள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு அப்பக…

  6. சேலத்தில் காமனேரி அருகே உள்ள சாத்தப்பாடியில் சாந்தி என்பவருக்கு சொந்தமான திருவிழாவிற்காக பயன்படுத்தப்படும் நாட்டு பட்டாசுகள் தயாரிக்கும் குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும் படுகாயமடைந்த 7 பேர் சேலம், மேட்டூர், ஒமலூர் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  7. ஆபிரிக்க நாடுகளில் அல்-காய்தாவின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளதால், அந்நாடுகளின் பாதுகாப்புக்கு அமெரிக்கப் படைகள் அனுப்பப்பட உள்ளன. பயங்கரவாதத்தை கடுமையாக எதிர்த்து போரிட்டு வரும் அமெரிக்காவை, ஆப்பிரிக்க நாடுகளில் அதிகரித்து வரும் அல்-காய்தா மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகளின் மிரட்டல்கள் கவலையடையச் செய்துள்ளது. எனவே, ஆப்பிரிக்க நாடுகளுக்கு தனது படைகளை அனுப்பி பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அடுத்த மாத தொடக்கத்தில் அமெரிக்கப் படைகள் அங்கு அனுப்பி வைக்கப்பட இருக்கிறது. லிபியா, சூடான், அல்ஜீரியா, நைஜர் போன்ற நாடுகளில் அல்-காய்தாவுடன் தொடர்புடைய பயங்கரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் தீவிரமாக உள்ளன. கென்யா, உகாண்டா போன்ற நாடுகள், சோமாலிய…

  8. இஸ்ரேலில் இருந்து அழிந்து போனதாகக் கூறப்படுகின்ற ஒரு பழங்குடியினத்தின் பிரதிநிதிகள் என்று தம்மைக் கூறிக்கொள்ளும் இந்திய சமூகம் ஒன்றைச் சேர்ந்த 50 பேர் இன்று தமது பாரம்பரிய தாயகமான இஸ்ரேலுக்கு திரும்பிச் சென்றடைந்திருக்கிறார்கள். விவிலியத்தில் கூறப்படுகின்ற ஒரு புராதன காலகட்டத்தில் இஸ்ரேலில் இருந்ததாகக் கூறப்படும் பினாய் மெனெசா என்னும் இந்த சமூகத்தினர் குகி- சின் மிஷோ என்னும் யூத பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் தாம் என்று நம்புகிறார்கள். இப்படியாக அந்தக் காலகட்டத்தில் அங்கு 10 பழங்குடியினங்கள் இருந்ததாகக் கூறப்படுகின்றது. விவிலியத்தில் கூறப்பட்டிருப்பதன்படி, கிமு 721 ஆம் ஆண்டில் அசிரியர்களின் ஆக்கிரமிப்பின் போது இவர்கள் அங்கிருந்து துரத்தப்பட்டார்கள் என்று கருதப்படுகிற…

    • 0 replies
    • 554 views
  9. சிலி நாட்டில் எரிமலை ஒன்று வெடித்து சிதறி, நெருப்புக்குழம்புகளை வெளியேற்றும் சூழ்நிலை இருப்பதால், அருகிலுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். சிலி நாட்டில் Copahue என்ற இடத்தின் அருகிலுள்ள எரிமலை என்று பயங்கர புகையை தற்போது வெளியேற்றி வருகிறது. இந்த புகையால் அருகிலுள்ள இடங்கள் யாவும் புகைமண்டலமாக காணப்படுகிறது. எந்த நேரமும் எரிமலை வெடிக்கும் அபாயத்தில் இருப்பதால், அதன் அருகில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்த காவல்துறையினர்களுக்கு அரசு ஆணையிட்டுள்ளது. அர்ஜெண்டினா நாட்டின் எல்லையில் இருக்கும் நகரத்திற்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சிலி நாட்டின் Biobio region பகுதி மக்களுக்கு ONEMI என்ற சிலி நாட்டின் அதிரடிப்படை அமைப்பு இ…

  10. கியூபெக்கில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பனிப்புயலின் காரணமாக பழுதுபட்ட மின்சார வழித்தடங்களை சீர் செய்யும் பணியில் ஹைட்ரோ கியூபெக் பணியாட்கள் இரவு பகலாக செயல்பட்டுக்கொண்டு வருகின்றனர். வடக்கு மற்றும் மேற்கு மாண்ட்ரீயல் பகுதிகளில் சுமார் பத்தாயிரம் பொதுமக்கள் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு பரிதவிப்பில் இருக்கின்றனர். இங்கு ஐரோப்பிய நேரப்படி இன்று காலை 8 மணி முதல் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இன்று இரவுக்குள் பணிகள் முழுமையடைந்து மின்சாரம் வரக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மீட்பு பணியில் சுமார் 800 பணியாட்கள், பனி தாக்காத ஷூக்களை அணிந்து, தொடர்ந்து பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். Laurentians, Lanaudière மற்றும் Outaouais பகுதிகளிலும் கடந்த …

  11. கனடாவின் சுற்றுப்புற சூழல் நலத்துறை அமைப்பு இன்று காலை வெளியிட்ட ஒரு அறிக்கையில் கனடாவின் GTA பகுதிகளிலும், தெற்கு ஒண்டோரியோ பகுதிகளிலும் பனிப்புயல் தாக்கக்கூடிய அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை அமெரிக்காவில் தாக்கிய பனிப்புயலின் தாக்கம் வரும் வியாழன் வரை தொடர இருப்பதால், அதன் பாதிப்பு தெற்கு ஒண்டோரியோவில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள்து. இந்த பனிப்புயலால், 10-20 செ.மீ வரை பனி சாலைகளில் படியும் வாய்ப்பு இருப்பதாகவும், எனவே சாலைகளில் வாகனங்கள் உபயோகப்படுத்துபவர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பனிப்புயலின்போது குறைந்த காற்றழுத்தமும் காணப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் அவ்வப்போது தட்ப…

  12. அஸ்ஸாம் ஆட்டங்கள் நீ நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கிறது ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படும் மாநிலங்களில் ஒன்றான அஸ்ஸாம். ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் வசிக்கும் கிராமங்களை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்தனர். ஆளாளுக்கு முகாம்களுக்கு சென்று போட்டோக்களுக்கு போஸ் கொடுத்தார்கள், எல்லாம் சரியாகிவிட்டது என்று அறிவித்தார்கள். ஆனாலும் அஸ்ஸாம் அவ்வப்போது எரிந்துகொண்டே இருக்கிறது. குழு மோதலாக தொடங்கி, இனக் கலவரமாக மாறி உயிருக்கும் உடமைகளுக்கும் பேரிழப்பாக தொடர்கிறது. மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரசே ஆட்சியில் இருந்தாலும் ஒன்றை ஒன்று மாற்றி மாற்றி குற்றம் சுமத்திக் கொள்கின்றன. நாட்டில் எங்கு குண்டு வெடிப்பு நிகழ்ந்…

  13. பர்மாவில் விமானம் அவசர தரையிறக்கம்: 2 பேர் பலி ரங்கூன், டிச. 25- பர்மாவில் தனியாருக்கு சொந்தமான ஏர் பேகன் என்ற விமானம் 60 பயணிகளை ஏற்றிக்கொண்டு தலைநகர் ரங்கூனில் இருந்து ஹெஹோ நகர் நோக்கி சென்றுகொண்டிருந்தது. ஹெஹோ விமான நிலையத்தை அடைய சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் இருந்தபோது, எந்திரத்தில் தீப்பிடித்தது. இதனால் அவசரமாக அப்பகுதியில் உள்ள ஒரு வயலில் அந்த விமானம் தரையிறக்கப்பட்டது. முன்னதாக தரையை ஒட்டி சீறிப்பாய்ந்து சென்ற அந்த விமானம் சாலையில் மோட்டர் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தவர் மீது மோதியது. இதில் பைக்கில் வந்த நபர் உயிரிழந்தார். விமானம் தரையிறங்கி தீப்பிடித்தது. அப்போது விமானத்தில் இருந்த 11 வயது குழந்தை உயிரிழந்துள்ளது. 2 விமானிகள், 4 வெளிநாட்டு பயணிகள் உ…

  14. வீட்டிற்கு வெள்ளை அடிக்க வேண்டுமென கூட்டிச் சென்ற இளைஞரை, இரு நபர்கள் ஏமாற்றி குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை செய்து, பணத்துடன் ஓட்டம் பிடித்த சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்துள்ளது. சரிஷாகுரி என்ற கிராமத்தை சேர்ந்த தயாள் மகாதோ (வயது 45), என்பவர் தினக்கூலி தொழிலாளி ஆவார். ஆறு குழந்தைகளுக்கு தந்தையான இவர், அருகில் உள்ள சாஸ் என்ற பகுதிக்கு சென்று வேலை ஏதாவது கிடைக்குமா என தேடுவது வழக்கம். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு, வழக்கம் போல சாஸ் நகரின் டீக்கடை முன் உட்கார்ந்திருந்த தயாள், வேலைக்கு யாராவது கூப்பிடுவார்களா என எதிர்பார்த்து காத்திருந்தார். அங்கு வந்த இருவர், வெள்ளையடிக்க வேண்டியுள்ளது வருகிறாயா? என தயாளிடம் கேட்டுள்ளனர். சம்பளம், வேலை நேரம் என, அனைத்தையும்…

  15. சென்னை: தங்களை கொன்றுவிடுவதாக பாமக மிரட்டுகிறது என்று காதல் திருமணம் செய்த ஆசிரியை கணவருடன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தஞ்சமடைந்து புகார் அளித்துள்ளார். தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள படைத்தலைவன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னப்பன். இவரது மகள் வினோதா (22).இவர் அதே பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன் என்ற வாலிபரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார். வினோதா ஆசிரியை பயிற்சி படிப்பை முடித்துள்ளார்.தேவேந்திரன் ஓட்டல் மேனேஜ்மெண்ட் முடித்துள்ளார்.சிறு வயதிலிருந்தே இருவரும் ஒரே பள்ளியில் படித்துள்ளனர். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டனர்.இருவரும் வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால்,வினோதாவின் வீட்டி…

  16. சென்னை: கூடங்குளம் அணு உலையில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதும் தமிழகத்துக்கே வழங்கப்பட வேண்டும் என்று கோரி பிரதமருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில்,"தமிழகம் தற்போது கடுமையான மின் பற்றாக்குறையால் அவதிப்பட்டு வருவது உங்களுக்குத் தெரிந்திருக்கும். தமிழகத்தின் மின் தேவை 12,000 மெகா வாட் என்ற அளவில் இருக்கும் போது, தற்போது தமிழகத்துக்கு 8 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது. சுமார் 4 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் பற்றாக்குறையாக உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் விரைவில் துவங்கப்பட உள்ள கூடங்குளம் அணு மின் நிலையத்தில் இருந்து உற்பத்தியாகும் 2000 மெகாவாட் மின்சாரம் …

  17. தென்னாப்பிரிக்கா அருகிலுள்ள Swaziland என்ற நாட்டின் மன்னர் King Mswati III என்பவர் தன் மக்களுக்கு ஒரு அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளார். அது, பெண்கள் பிற ஆண்களை தவறு செய்ய தூண்டும் வகையில் மினி ஸ்கர்ட், மற்றும் உடலமைப்பு தெரியும்படியான கவர்ச்ச் டாப்ஸ் முதலியவற்றை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி செயல்படும் பெண்களுக்கு ஆறுமாதங்கள் வரை சிறைதண்டனை அளிக்கப்படும் என்பதே அவரது அதிரடி உத்தரவாகும். தென்னாப்பிரிக்க கண்டத்தில், தென்னாப்பிரிக்காவிற்கு தெற்கு, மற்றும் தென்மேற்கே அமைந்துள்ள ஒரு சிறிய நாடு Swaziland என்பதாகும். அந்த நாட்டின் மன்னராக விளங்குபவர் King Mswati III. சமீபத்தில் இந்தியா போன்ற நாடுகளில் அடிக்கடி ஏற்படும் பாலியல் வன்முறை போன்ற செய்திகளை பார்…

    • 3 replies
    • 742 views
  18. விண்வெளியில் உள்ள 5 லட்சம் கிலோ எடையுள்ள விண்கல்லை சிறிது நகர்த்தி அமைக்க அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான "நாசா' திட்டமிட்டுள்ளது.இந்த முயற்சி வெற்றி பெற்றால், விண்வெளியில் மனிதர்களால் ஏற்படுத்தப்படும் முதல் மாற்றம் இதுவாகத்தான் இருக்கும். செவ்வாய் கிரகத்துக்கு பயணம் செல்லும் விண்வெளி வீரர்கள், தங்கள் ஓடத்தில் எரிபொருள்களை நிரப்புவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள விண்வெளி மையமாகவும் இதனைப் பயன்படுத்த முடியும். பூமிக்கும், நிலவுக்கும் நடுவே இந்த பிரமாண்டமான விண்கல் அமைந்துள்ளது. அட்லஸ் வி ராக்கெட் மூலம் அந்த விண்கல்லைச் சுற்றி உறை அமைக்கப்பட்டு, அது இயல்பான இடத்தில் இருந்து சிறிது நகர்த்தப்படும். விண்வெளியில் உள்ள இதுபோன்ற பிரமாண்டமான விண்கற்கள், குறுங்கோள்…

  19. சீனாவில் சாங்காய் பகுதியில் அமைந்துள்ள வணிக வளாகத்தில் பார்வையாளர்களை கவரும் விதமாக மீன்கள் அருங்காட்சியகம் ஒன்று இருக்கிறது. பெரிய கண்ணாடி தொட்டியில் பெரிய சுறா மீன்கள், சிறிய வகை வண்ணமீன்கள், ஆமைகள் போன்றவை வளர்க்கப்படுகிறது. இந்த மீன்களுக்கு நீச்சல் வீரர்கள் தொட்டிக்குள் இறங்கி உணவு வழங்குவார்கள். இப்படி உணவு வழங்கும் போது அதை ஏராளமானோர் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது கண்ணாடி தொட்டி திடீரென்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது. தண்ணீருடன் சுறா மீன்கள் வணிக வளாகத்திற்கு பாய்ந்து சென்றன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு பார்வையாளர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். கண்ணாடி துண்டுகள் குத்தி கிழித்ததில் சுமார் 15 பேர் படுகாயம் அடைந்தார்கள். 10 அங்குலம் தடி…

  20. அமெரிக்காவில் இன்று காலை 10 மணியளவில் நான்கு மர்ம மனிதர்கள் நியூயார்க் அருகிலுள்ள West Webster என்ற இடத்திலுள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் இதுவரை துப்பாக்கி சூடு நடத்திய மர்ம மனிதர்கள் உள்பட ஆறுபேர் பலியாகினர். இரண்டு பேர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். அமெரிக்காவின் West Webster என்ற இடத்தில் உள்ள Lake Ontario அருகிலுள்ள ஒரு வீட்டில் அதிரடியாக நுழைந்த நான்கு மர்ம மனிதர்கள் அந்த வீட்டில் உள்ளவர்களை சரமாரியாக சுடத்தொடங்கினர். வீட்டில் உள்ள நபர்கள் ஒரு அறைக்குள் நுழைந்து கதவை பூட்டிகொண்டு உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். (துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த…

  21. ஆப்கானிஸ்தான் போலீஸ் அலுவலகத்திற்கு சென்ற அமெரிக்கா ஆலோசகரை, பெண் போலீஸ் துப்பாக்கியால் சுட்டு கொன்றார். அங்கு வெளிநாட்டுக்காரர் மீது பெண் போலீஸ் தாக்குதல் நடத்தியது இதுவே முதல் தடவையாகும். வெளிநாட்டு படைக்கு எதிர்ப்பு ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். 2014–ம் ஆண்டு இறுதிக்குள் இந்த படைகள் வாபஸ் ஆக இருக்கிறது. இதனால் ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாருக்கு பாதுகாப்பு குறித்து பயிற்சி கொடுத்து வருகிறார்கள். இதற்காக அமைந்துள்ள முகாம்களில் இரு தரப்பினரும் தங்கியுள்ளனர். சமீபகாலமாக முகாம்களில் இருக்கும் வெளிநாட்டு படையினருக்கு எதிராக அடிக்கடி தாக்குதல் நடக்கிறது. இத…

  22. மது அருந்திவிட்டு, கார் ஓட்டிய அமெரிக்க எதிர்க்கட்சி எம்.பி., கைது செய்யப்பட்டு உள்ளார்.அமெரிக்காவின் குடியரசு கட்சியை சேர்ந்த, மேல்சபை எம்.பி., மைக்கேல் கிராப்போ. இடாகோ என்ற இடத்திலிருந்து, வாஷிங்டன் நோக்கி காரில் வந்தபோது, விர்ஜினியா மாகாண போலீசார், இவரது காரை தடுத்து நிறுத்தி பரிசோதித்தனர். பரிசோதனையில், இவர் மது அருந்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக, போலீசார் இவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். 50 ஆயிரம் ரூபாய் சொந்த ரொக்க ஜாமினில், இவர் விடுவிக்கப்பட்டார்.இந்த வழக்கு தொடர்பான விசாரணை, அடுத்த மாதம், 4ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. "மது அருந்திவிட்டு, கார் ஓட்டியது தவறு தான், இதற்காக எவ்வளவு தொகை வேண்டுமானாலும் அபராதமாக செலுத்த தயாராக …

  23. டெல்லியில் நடந்து வரும் போராட்டம் காரணமாக, உள்துறை மந்திரி பதவியில் இருந்து சுசில்குமார் ஷிண்டே நீக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. போராட்டம் டெல்லியில் ஓடும் பஸ்சில் பிசியோதெரபி மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடூர செயலில் ஈடுபட்ட 6 பேரையும் போலீசார் கைது செய்து உள்ளனர். மாணவி பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து டெல்லியில் மாணவ–மாணவிகளும் மற்றும் பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபடுபட்டு உள்ளனர். இந்த போராட்டம் மிகவும் தீவிரம் அடைந்து இருக்கிறது. போராட்டத்தில் வன்முறையும் வெடித்து உள்ளது. சுசில்குமார் ஷிண்டே …

  24. முன்னெப்போதும் இல்லாத அளவில் இன்றைய சூழலில் தூக்குத்தண்டனைக்கு ஆதரவான, எதிரான கருத்துக்கள் வலுவாக இந்தியாவில் ஒலித்து வருகிறது. தூக்குதண்டனை வேண்டுமா? வேண்டாமா? என்ற விவாதம் ஒருபுறமிருக்கட்டும், தூக்குதண்டனை இந்தியாவில் எதற்காக வழங்கப்படுகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது! உண்மையிலேயே தூக்குதண்டனை குற்றங்களை குறைப்பதற்காகவா? இல்லை உலக அளவில் இந்தியாவிற்கு என்று இருக்கும் போலியான கவுரவத்தை காப்பதற்காகவா? என்பதே எம் மனதில் திரும்ப, திரும்ப எழும் கேள்வி! கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 16,2012) அன்று மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் ஓடும் பஸ்ஸில் பலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்ப்பட்டுள்ளார். இந்தியாவின் தலைநகரான டெல்லியிலே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லையோ? என்ற அச்சம் நமக்கெல…

  25. பாலியல் வல்லுறவுத் தலைநகராகும் டெல்லி! Posted Date : 15:18 (18/12/2012)Last updated : 16:20 (18/12/2012) டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம்,ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கி உள்ள நிலையில் 'டெல்லி-பாலியல் வல்லுறவுக்கு' தலைநகர்'என்ற நிலையை நோக்கி செல்வதாக சொல்லி அதிரவைக்கிறது தேசிய குற்றப் புலனாய்வு அமைப்பின் புள்ளிவிவரம் ஒன்று! டெல்லியில் கடந்த ஞாயிறன்று இரவில், 23 வயது மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் திரைப்படம் பார்த்துவிட்டு, தனது ஆண் நண்பருடன் பேருந்தில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தபோது, 7 பேர் கொண்ட கும்பல், அப்பெண்ணின் நண்பரை தாக்கிவிட்டு அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது.பின்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.