Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பிரான்சில் தீவிரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியதாக 16 வயது யுவதி உட்பட 4 பேர் கைது பிரான்சில் தீவிரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியதாக சந்தேகத்தின்பேரில் 16 வயது யுவதி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரான்சில் கடந்த இரண்டு ஆண்டுகளான அடுத்தடுத்து நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்கள் காரணமாக 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதன் காரணமாக அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வகையில், தெற்கு பிரான்சின் மோன்ட்பெல்லியரில் சந்தேகப்படும்படியான நபர்கள் இருப்பதாக காவல்துறைக்கு கிடைத்த தகவலை அடுத்து அப்பகுதியை சுற்றி வளைத்த காவல்துறையினர் 16 வயது இளம்பெண் உள்பட 4 பேரை கைது செய்தனர். …

  2. ஆஸ்பத்திரியில் மண்டேலா... புதைக்கும் இடம் குறித்த சண்டையில், கோர்ட் சென்ற குடும்பத்தினர். ஜோகன்ஸ்பர்க்: மருத்துவமனையில் இருக்கும் மண்டேலா நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என உலக மக்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் அதே வேளையில், மண்டேலா குடும்பத்தினர் மண்டேலா இறந்த பிறகு எங்கே புதைப்பது என்ற சச்சரவில் கோர்ட் படியேறியுள்ளனர். கறுப்பர் இன விடுதலைக்காக 27 ஆண்டுகள் சிறையிலேயே தன் வாழ்க்கையைக் கழித்த ,தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா தற்போது உடல் நலக்குறைவு காரணமாக பிரேடோரிகாவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 94 வயதான மண்டேலா, கடந்த 25 நாட்களாக தீவிர கண்காணிப்பு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மண்டேலா மிகவும் கவலைக்க…

  3. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * வடகொரிய தலைவரின் சகோதரரின் உடலில் வி எக்ஸ் என்னும் நரம்பு மண்டலத்தை தாக்கும் நச்சு வேதிப்பொருளை மலேசிய போலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். விமாநிலையத்திலும் வி எக்ஸ்-இற்கான தடயங்கள் தேடப்பட்டன. * தனது முன்னைய நடவடிக்கைகளுக்காக தான் குற்ற உணர்வில் வாடுவதாக கெமர் ரூஜ் அமைப்பின் முன்னாள் விசாரணையாளர் கூறுகிறார். தான் தண்டிக்கப்படவும் வேண்டுமாம். * பரபரப்பான நகரத்துக்கு கீழே சுரங்கத்தில் ஒரு பெரும் விவசாயப் பண்ணை. அங்கு என்னென்ன செடிகள் மற்றும் மூலிகைகள் வளர்க்கப்படுகின்றன என்று பார்க்கலாமா?

  4. வைத்தியர் வேடத்தில் வந்த ஐஎஸ் தீவிரவாதிகளால் 38 பேர் பலி : ஆப்கானிஸ்தானில் சம்பவம்..! ஆப்கானிஸ்தானிலுள்ள இராணுவ வைத்தியசாலையில், தீவிரவாதிகள் வைத்தியர்களை போல உடை அணிந்து சென்று தாக்குதல் நடத்தியதால் 38 பேர் இறந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் தலை நகர் காபூலிலுள்ள, முஹம்மது தாவுத் கான் இராணுவ வைத்தியசாலையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் மீது சரமாரியான தாக்குதல்களை ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. மேலும் வைத்தியர்கள் உடையில் வந்தவர்களால் நிலைகுலைந்த வைத்தியசாலை இராணுவத்தினர் மற்றும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் மீது, தீவிரவாதிகள் கடுமையான தாக்குதல்களை முன்னெடுத்துள்ளனர். அத்…

  5. ஆப்கானிஸ்தான் இராணுவத்திற்கு ஆதரவாக, தலிபான்கள் மீது... தொடர்ந்து விமான தாக்குதல்: அமெரிக்கா தெரிவிப்பு ஆப்கானிஸ்தான் இராணுவத்திற்கு ஆதரவாக தலிபான்கள் மீது தொடர்ந்து விமான தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகனின் ஊடக செயலாளர் ஜோன் கிர்பி கூறுகையில், “ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு நிலைமை மோசமாக உள்ளது. அங்கிருக்கும் எங்கள் அதிகாரிகள் மூலம் தொடர்ந்து விமான தாக்குதல் நடத்தி ஆதரவளிப்போம்” என கூறினார். எனினும், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஒகஸ்ட் இறுதிக்குள் இராணுவம் முழுமையாக திரும்பப் பெறும் என அறிவித்துள்ள நிலையில், அதன்பிறகும் ஆதரவு தொடருமா என்ற கேள்விக்கு ஜோன் பதிலளிக்கவில்லை…

  6. விபத்துக்குள்ளானது அகதிகள் கப்பல்; பத்து குழந்தைகள் உட்பட 34 பேர் பலி! அளவுக்கதிகமான அகதிகளை ஏற்றிச்சென்ற படகு விபத்துக்குள்ளானதில் 10 குழந்தைகள் உட்பட 34 பேர் பலியாகினர். லிபியாவுக்கு 20 கடல் மைல் தொலைவில் பயணித்துக்கொண்டிருந்த இந்தப் படகில் சுமார் ஐந்நூறு பேர் இருந்ததாகவும், அலை ஒன்று மோதியதில் படகில் பயணித்துக்கொண்டிருந்த சுமார் 200 பேர் கடலில் விழுந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது பற்றிய தகவல் கிடைத்ததும் இத்தாலி கரையோரப் பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்துக்குச் சென்று கடலில் தத்தளித்துக்கொண்டிருந்தவர்களுக்கு உயிர்காப்பு அங்கிகளை வழங்கியதுடன் அவர்களை மீட்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர். எவ்வாறெனினும், 34 பேரின் இறந்த …

  7. அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் சூரிய ஒளி தகடு பதித்த சுவர்: டிரம்ப் ஆலோசனை அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் புதிதாக கட்டப்படும் சுவரில் சூரிய ஒளி மின்சாரம் தகடுகள் பதிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆலோசனை செய்கிறார். வாஷிங்டன்: கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின் போது மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டப்படும் என டொனால்டு டிரம்ப் அறிவித்தார். இதன் மூலம் மெக்சிகோ நாட்டினர் அமெரிக்காவில் நுழைந்து குடியேறுவதை தடுக்க முடியும். போதை பொருள் கடத்தலுக்கு முடிவு கட்ட முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்று அதிபரானதும் மெக்சிக…

  8. இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஹிந்து மத விழாவொன்றில் ஏற்பட்ட நெரிசலில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 115 ஆக உயர்ந்திருக்கிறது என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ரத்தன்கார் நெரிசல் : இறந்தோர் எண்ணிக்கை உயர்வு இம்மாநிலத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு செல்லும் பாதையில் இருந்த குறுகிய பாலம் ஒன்றை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடக்க முயன்றபோது பலர் நெரிசலில் சிக்கி இறந்தனர். வேறு சிலர் பாலத்துக்குக் கீழே இருக்கும் நதியில் குதித்து நெரிசலில் இருந்து தப்ப முயல்கையில், நதியில் மூழ்கி இறந்தனர். நதியில் மேலும் உடல்கள் இருக்கின்றனவா என்று மீட்புப் பணியாளர்கள் தேடிக்கொண்டிருக்கின்றனர். இந்தப் பாலம் இடியப்போகிறது என்ற வதந்திகள் பரவியதால் இந்த நெரிசல் ஏற்பட்டது என்று போலிசார் கூறினர்.…

  9. பயங்கரவாத கூலிப்படையை உருவாக்க முயன்ற... முன்னாள் ஜேர்மன் வீரர்கள் கைது யேமனின் உள்நாட்டுப் போரில் சண்டையிட பயங்கரவாத கூலிப்படையை உருவாக்க முயன்ற சந்தேகத்தின் பேரில் இரண்டு முன்னாள் ஜேர்மன் வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெற்கு ஜேர்மனியில் பொலிஸார் நடத்திய சோதனையை அடுத்து, கைது செய்யப்பட்ட இருவர் மீதும் பயங்கரவாத குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் வீரர்களைக் கொண்ட ஒரு தனியார் இராணுவத்திற்கு 150 ஆட்களை நியமிக்க அவர்கள் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. யேமனில் சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சவுதி அரேபியா அரசுக்கு அவர்கள் தங்கள் சேவைகளை வழங்க விரும்பினர் என்றும் சட்டத்தரணிகள் தெரிவித்தனர். சவுதி அரேபியாவி…

  10. மக்டலினா ஆண்டர்சன் மீண்டும் சுவீடனின் பிரதமராக தேர்வு சுவீடனின் முதல் பெண் பிரதமராக தேர்வுசெய்யப்பட்டு, சில மணிநேரங்களிலேயே தனது பதவியை இராஜினாமா செய்த மக்டலினா ஆண்டர்சன் மீண்டும் பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சுவீடன் பாராளுமன்றில் திங்களன்று நடைபெற்ற மற்றொர் வாக்கெடுப்பு அவருக்கு மீண்டும் பிரதமர் பதவியே பெற்றுத தந்தது. சுவீடன் பாராளுமன்றில் திங்களன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் அண்டர்சன் மிகக் குறைந்த வாக்குகளினால் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 173 பாராளுமன்ற உறுப்பினர்கள் அவருக்கு எதிராக வாக்களித்தனர், மேலும் இருவர் அவருக்கு எதிராக வாக்களித்திருதால் அவர் இந்த உயர் பதவியை இழந்திருப்பார். எவ்வாறெனினும் ஆறு நாட்களில…

  11. நெல்சன் மண்டேலாவின் இரங்கல் கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும், கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோவும் கை குலுக்கிக் கொண்டது ஏற்கனவே திட்டமிட்டதல்ல, எதிர்பாராமல் நடந்தது என அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த 1961-ஆம் ஆண்டு ரஷ்யாவுடன் அரசியல் உறவு ஏற்படுத்திக் கொண்டதால் கியூபாவுடனான அரசியல் உறவை துண்டித்துக் கொண்டது அமெரிக்கா. இந்நிலையில், நேற்று முன்தினம் தென்ஆப்ரிக்காவில் மறைந்த நெல்சன் மண்டேலாவுக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த இரங்கல் கூட்டத்தில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமாவும், கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோவும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக் கொண்டனர். இதற்கு, சுதந்திர உலகத் தலைவர் ஒருவரும், சர்வாதிகாரி ஒருவரும் கைகுலுக்கிக் கொள்வது ஏற்கத்தக்…

  12. ஸ்பெயினில் நடந்த இரட்டை பயங்கரவாத தாக்குதலில் பதின்னான்கு பேர் பலியானது குறித்த செய்திகள், போதைமருந்துக்கு எதிரான தனது போரை பிலிப்பைன்ஸ் அதிபர் தீவிரப்படுத்தியுள்ளது குறித்த செய்தித் தொகுப்பு மற்றும் முதலாம் வகை நீரிழிவு நோய்க்கான புதிய சிகிச்சை முறை ஒன்று குறித்த சிறப்புச் செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  13. சிங்கப்பூரில் கடந்த 8-ந் தேதி அன்று நடந்த வாகன விபத்தில் தமிழ்நாடு புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் பலியானார். இதைத் தொடர்ந்து அங்கு பெரிய அளவில் கலவரம் மூண்டது. சுமார் 40 வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. போலீசார் உள்பட ஏராளமானோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, கலவரப்பகுதியில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. பஸ் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்தும் கொள்கை விதிகள் மேலும் கடுமையாக்கப்படும் என்று அந்த நாட்டு அரசு அறிவித்தது. கலவரத்தில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 53 பேரை நாடுகடத்த சிங்கப்பூர் அரசு முடிவு செய்துள்ளது. இதில் 52 பேர் இந்தியர்கள் ஆவர். ஒருவர் வங்காளதேசத்தை சேர்ந்தவர். விரைவில்…

  14. ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த வாரத்தில் இது 4வது தாக்குதல் . ஆஸ்திரேலியாவில் பிரிஸ்பேன் நகரில் இந்தியர்கள் 2 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பிரஸ்பேன் நகரில் இரண்டு வெவ்வறு இடங்களில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. தெற்கு பிரிஸ்பேன் மேக்கிரகர் எனும் இடத்தில் 25 வயது இளைஞர் தாக்கப்பட்டு, அவரது பர்சும் பறிக்கப்பட்டுள்ளது. மற்றொரு சம்பவத்தில் தென்கிழக்கு பிரிஸ்பேனில் இந்திய டாக்சி டிரைவர் மீது அந்த டாக்சியில் பயணித்தவர்கள், முகத்தில் பலமுறை குத்தி மோசமாக தாக்‌கியதோடு காரையும் சேதப்படுத்தியுள்ளனர். இந்த இளைஞர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகி…

  15. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மர்ம மரணம் தொடர்பான ஆவணங்களை வெளியிடுமாறு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்பட்டதற்கு பதிலளிக்குமாறு அவரது குடும்பத்தினர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை வலியுறுத்தியுள்ளனர். சிங்கப்பூரில் இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி வெள்ளையரை எதிர்த்துப் போரிடத் திட்டமிட்ட நேதாஜி இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மாயமானார். அவரது மரணம் குறித்த மர்மம் இன்றளவும் நீடிக்கிறது. நேதாஜியின் மரணம் குறித்த ஆவணங்களை அளிக்குமாறு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தில்லியைச் சேர்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர் அனுஜ் தார் கோரியிருந்தார். அதற்கு மேற்கு வங்க முதல்வர் அலுவலகம் பதில் அளிக்கவில்லை. இந்நிலையில், மேற்கண்ட ஆவணங்களை மேற்கு வங்க அரசு வெ…

  16. உக்ரைன் இன்று ரஷ்யாமீது ஏவுகணைத்தாக்குதலை மேற்கொண்டுள்ளது.. இதை ரஷ்யாவும் உறுதி செய்துள்ளது.. உக்ரைன் ரஷ்யா எல்லையில் இருந்து 40கிலோமீற்றர் உள்ளே ரஷ்யாவில் இருக்கும் எண்ணெய்க்கிடங்கின் மீது உக்ரைன் ஏவுகணைத்தாக்குதலை நிகழ்த்தி உள்ளது.. ஏவுகணை எண்ணெய் சேமிப்பு நிலையத்தை தாக்கும் வீடியோவையும் ரஷ்யா வெளியிட்டுள்ளது.. இதை அடுத்து உக்ரைன் மீது தாக்குதலை தீவிரப்படுத்த போவதகா ரஷ்யா அறிவித்துள்ளது.. அநேகமாக அண்மையில் நடந்ததுதான் இரண்டு நாளுகளுக்கும் இடையிலான கடைசி பேச்சுவார்த்தையாக இருக்கும்போல..

  17. குரான் எரிப்பு விவகாரம்: சுவீடனில், நான்காவது நாளாக... தொடரும் மோதல்கள்! தீவிர வலதுசாரி, புலம்பெயர்ந்த எதிர்ப்புக் குழுவினால் வெளிப்படையாக குரான் எரிக்கப்பட்டதால் தூண்டப்பட்ட மோதல்கள், பல சுவீடன் நகரங்களில் நான்காவது நாளாக மோதல்களுக்கு வழிவகுத்துள்ளன. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கிழக்கு நகரமான நோர்கோபிங்கில் கலவரக்காரர்கள் மீது பொலிஸார் எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூன்று பேர் காயமடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த மோதலின் போது, பல வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது மற்றும் குறைந்தது 17பேர் கைது செய்யப்பட்டனர். சனிக்கிழமையன்று, தெற்கு நகரமான மால்மோவில் தீவிர வலதுசாரி பேரணியின் போது பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் தீ வைத்து எரிக்க…

    • 4 replies
    • 496 views
  18. இந்தி பேசத்தெரியாத காரணத்தால் மோடியை எதிர்த்து போட்டியிடவில்லை: ப.சிதம்பரம் பேட்டி [Tuesday, 2014-04-01 12:10:27] எனக்கு இந்தி பேசத்தெரியாததால் தான் மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடவில்லை என்று மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறினார். பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா, மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தை நேற்றுமுன்தினம் மிகவும் கடுமையாக விமர்சித்து பேட்டி அளித்தார். அதற்கு பதிலடி கொடுப்பதுபோல நேற்று டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடந்த பத்திரிகையாளர் கூட்டத்தில், ப.சிதம்பரம், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 10 ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் நிலை குறித்துப் பேசினார். பா.ஜ.க.வின் பொருளாதார கொள்கை பற்றியும் அக்க…

  19. கனடாவில்... 16 பேருக்கு, குரங்கு காய்ச்சல் பாதிப்பு! கனடாவில் 16 பேருக்கு குரங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக கனடாவின் பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அனைத்தும் கியூபெக்கில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைரஸ் நோயின் பரவல் குறித்த சமீபத்திய புதுப்பிப்பில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. உறுதிப்படுத்தல் சோதனைக்காக கனடாவின் தேசிய நுண்ணுயிரியல் ஆய்வகம் பல அதிகார வரம்புகளிலிருந்து மாதிரிகளை தொடர்ந்து பெற்று வருவதாக அறிக்கை கூறுகிறது. இந்த நேரத்தில், குரங்கு காய்ச்சலின் வழக்குகள் உள்ளூர் சுகாதார நிலையங்களால் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஒரு முன் எச்சரிக்கை நடவடி…

  20. ஸிம்பாப்வே தலைநகரத் தெருக்களில் இராணுவ டாங்கிகள்! அதிரடிப்புரட்சியல்ல என்கிறது இராணுவம்!! 37 ஆண்டுகள் ஆட்சி நடத்திய அதிபர் முகாபே பாதுகாப்பாக இருப்பதாக அறிவிப்பு!!! பிபிசி தரும் நேரடிச் செய்திகள்!! ஆஃப்கானிஸ்தானில் அதிகரிக்கும் இளவயது ஹெராயின் அடிமைகள்! ஒன்பது வயதான சிறுவர்களை போதையிலிருந்து மீட்கப்போராடும் மருத்துவமனை!! மற்றும் உலக அளவில் அதிகரிக்கும் உடலுறுப்பு பற்றாக்குறை! பிரிட்டனில் வாழும் ஆசியர்கள், ஆப்ரிக்களுக்கு பெரும் பாதிப்பு!! ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  21. ஈலோன் மஸ்க்குடன் உறவை முறித்துக் கொண்ட திருநங்கை மகள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தன்னுடைய பெயரையும் பாலினத்தையும் மாற்றக்கோரி உலகின் பெரும் பணக்காரர் ஈலோன் மஸ்க்கின் மகள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் ஒரு திருநங்கை. மேலும், "தன் தந்தையுடன் இனி எவ்வித உறவையும் பேண விரும்பவில்லை" என அவர் தெரிவித்துள்ளார். 18 வயதான அவர் தன்னை பெண் ஆக அங்கீகரிக்குமாறும் தன் பெயரை விவியன் ஜென்னா வில்சன் என மாற்ற அனுமதி கோரியும் அம்மனுவை தாக்கல் செய்துள்ளார். முன்னதாக, அவருடைய பெயர் சேவியர் அலெக்சாண்டர் மஸ்க் ஆக இருந்தது. பெயர் மாற்றம் மற்றும் புதிய பிறப்பு சான்ற…

  22. Grisly Photos Reveal Genocide by Sri Lankan Government Against Tamil People http://www.salem-news.com/articles/august072010/srilanka-violence-mv.php Muthamizh Chennai (India)

  23. பெனாசீர் பூட்டோவைக் கைதுசெய்யக் கோரியுள்ளது சர்வதேச பொலிஸ் பாகிஸ்தான் நாட்டு முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோ அவர்களை கைதுசெய்ய கோரி, சர்வதேச பொலிஸ் அமைப்பான இண்டர்போல், உலகம் முழுவதும் தகவல் அனுப்பியுள்ளது. பாகிஸ்தான் அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்கி இண்டர்போல் அமைப்பு, ரெட் நோட்டீஸ் எனப்படும் இந்த தகவலை அனுப்பியுள்ளது என இண்டர்போல் அமைப்பிற்கு பேசவல்ல ஒருவர் தெரிவித்துள்ளார். ஊழல் குற்றச்சாட்டின் பேரில் பெனாசீர் பூட்டோ மற்றும் அவரது கணவர் ஆசிப் அலி சர்தாரி ஆகியோர் பாகிஸ்தான் நாட்டில் தேடப்பட்டு வருகின்றனர். பெனாசீர் பூட்டோ தற்பொழுது பிரித்தன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் நாட்டில் வசித்து வருகின்றார். பூட்டோ தற்பொழுது அமெரிக்க பயணத்தினை மேற்க…

    • 0 replies
    • 1.4k views
  24. திருடாதே பாப்பா, திருடாதே' என்று மாணவர்களுக்குக் கற்றுத் தர வேண்டிய ஆசிரியர் வழிப்பறி வழக்கில் சிக்கியுள்ளார்.தமிழ்நாடு - கர்நாடகா எல்லைப் பகுதியில்உள்ள ஓசூரில் அடிக்கடி வழிப்பறிகள் நடந்து வந்தன. அதனால் போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். சந்தேகத்திற்கு உரிய வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்ததில், அவர் தான் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தவர் என்பது தெரியவந்தது. அவர் பெயர் மதன்மாறன். ஓசூர் அருகே பங்களாப்பள்ளி என்ற கிராமத்தில் உள்ள ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் 4 ஆம் வகுப்பு ஆசிரியராக இருக்கிறார். கல்வி கற்றுத் தர வேண்டிய ஆசிரியர் களவு கற்பது தவறல்லவா என்று கேட்டால், சொகுசாக வாழ்வதற்காக வழிப்பறியில் ஈடுபட்டதாக அந்த வாலிப ஆசிரியர் கூறியுள்ளார். அவரிடமிருந்து 8 ச…

    • 0 replies
    • 539 views
  25. மெல்பேர்னில் பொதுமக்களை மோதித்தள்ளியது கார்- 13 பேர் காயம்- திட்டமிடப்பட்ட சம்பவம் என காவல்துறை தெரிவிப்பு மெல்பேர்னின் பிளின்டர்ஸ் வீதி புகையிரத நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ள விபத்தில் குழந்தை உட்பட 13 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினர் இது பயங்கரவாத திட்டமிடப்பட்ட சம்பவம் எனதெரிவித்துள்ளதுடன் அதேவேளை விசாரணைகள் இடம்பெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.மேலும் மெல்பேர்ன் உட்பட ஏனைய நகரங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பாக பாதசாரிகளிற்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர் காவல்துறையினர் சம்பவத்திற்கான நோக்கம் இதுவரை தெரியவரவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர் இது பயங்கர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.