உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26679 topics in this forum
-
[size=2][size=4]எகிப்தின் முன்னாள் சர்வாதிகாரி கொஸ்னி முபாரக் பதவி இறக்கப்பட்ட 500 வது நாளான இன்று எகிப்திற்கு புதிய அதிபர் நியமிக்கப்படுகிறார்.[/size][/size] [size=2][size=4]அதிபர் தேர்தலில் இஸ்லாமிய சகோதர அமைப்பின் வேட்பாளர் முகமட் மசூரி சிறிய பெரும்பான்மையில் வெற்றி பெற்றுள்ளார்.[/size][/size] [size=2][size=4]அரபுலகின் மிகப்பெரிய நாடொன்று ஜனநாயகத் தேர்தலை சந்தித்து, அதற்கான அதிபரை நியமனம் செய்வது, எகிப்தின் ஜனசாயக பாதையில் ஒரு மைல் கல் என்று மேலைத்தேய ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.[/size][/size] [size=2][size=4]இதிலிருந்து ஆரம்பிக்கப்போகும் புதிய முரண்பாடுகள் நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து ஒரு கட்டத்தில் எகிப்தை சரியான ஜனநாயகப் பாதையில் காலடி எடுத்து வைக்கச…
-
- 2 replies
- 498 views
-
-
நாற்பது வருடங்களுக்கு முன்பு முதலாவது சுற்றுச் சூழல் மாநாடு ஸ்ரொக்ஹோம் (Stockholm) நகரில் நடைபெற்றது. உலகளாவிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய பேச்சுக்கள் அதில் நடத்தப்பட்டன. ஆனால் இப்போதெல்லாம் உலகம் தழுவிய கரிசனை காட்டாமல் மேற்கு நாடுகளின் நலனில் தான் கூடுதல் கவனஞ் செலுத்தப்படுகிறது. இருபது வருடங்களுக்கு முன்பு றியோ டி ஜனயிறோ (Rio de Janeiro) நகரில் ஜநா நடத்திய மாநாட்டில் சுற்றுச்சுழலும் மேம்பாடும் (Environment and Development) பற்றிப் பேசப்பட்டது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த 1992ம் ஆண்டு மாநாட்டைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது புவி வெப்பம் அடைவதைத் தடுப்பது என்ற முடிவை உலக நாடுகள் எடுத்தன. புவி வெப்பம் அடைதல் என்பது வெறும் வாய்ப் பேச்சல்ல. அது உண…
-
- 0 replies
- 1.5k views
-
-
உலகின் புதிய ஒழுங்கில், நிலத்திற்காக மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மூலவளச் சுரண்டலிற்காக, வர்த்தகச் சந்தைக்காக வல்லரசுகளும் முட்டி மோதிக் கொண்டிக்கின்றன. பெருந் தேசிய இனவாத ஆட்சியாளர்களும் தமது இறைமையை நிலை நிறுத்திக் கொள்ள, பூர்வீக தேசிய இனங்களின் நிலங்களை ஆக்கிரமிக்கின்றார்கள். அகண்ட பார்வையில், உலகப் பொருளாதாரத்தின் எண்பது சத வீதத்தைக் கொண்ட முதலாளித்துவ முறைமை, நில ஆக்கிரமிப்பின் பின் புலத்தில் நின்று செயற்படுவது தெரிகிறது. தேசிய பாதுகாப்பிற்கும் மூலவளச் சுரண்டலிற்கும் தென் சீனக் கடலில் தீவுகளுக்கு உரிமை கோரும் சீனா, வியட்னாம், பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் நாடுகளைக் காணலாம். மலை வாழ் மக்களை அவர்களது பிரதேசங்களிலிருந்து விரட்டி அடித்து கனிம வள சுரண்டிலிற்க…
-
- 0 replies
- 386 views
-
-
ஜோசப் கோனி (Joseph Kony) என்பவருக்கு எதிராக 2005ம் ஆண்டு அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் அவர் புரிந்த போர் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றச் செயல்களுக்காகக் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அவர் இதுவரை பிடிபடாமல் இருக்கிறார். அவரைக் கைது செய்து நெதர்லாந்து, ஹேக் நீதி மன்றத்தில் நிறுத்தும் நோக்கில் தேடுதல் நடத்தப்படுகிறது. இறைவனுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தடுக்கும் இராணுவம் (Lord’s Resistance Army) என்ற பெயர் பூண்ட உகன்டா நாட்டு கெரில்லா அமைப்பின் தலைவனாக ஜோசப் கோனி இடம்பெறுகிறார். இந்த அமைப்பு எல்ஆர்ஏ (LRA) என்ற மூன்று எழுத்துக்களால் அறியப்படுகிறது. வடக்கு உகன்டாவில் 1961ம் ஆண்டு பிறந்த கோனி அச்சோலி (Acholi) இனக்குழுவைச் சேர்ந்தவர். அவர்…
-
- 0 replies
- 605 views
-
-
[size=4]பெங்களூர்: பள்ளி மாணவியை கற்பழித்து கொலை செய்த வழக்கில் மரண தண்டனை பெற்ற கைதி இறந்து ஐந்து ஆண்டுகளுக்கு பின் அவரது தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைத்து கருணை காட்டியுள்ளார் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல்.[/size] [size=3][size=4]இவரால் கருணை காட்டப்பட்டவர், பிரதீபா பாட்டீல் சார்ந்த மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.[/size][/size] [size=3][size=4]மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாண்டு பாபுராவ் திட்கே. அவர் கடந்த 2002ம் ஆண்டு பகல்கோட்டில் உள்ள ஜூலியால் தாலுகாவில் குடியேறி, சதாசிவ அப்பண்ணா மடத்தில் தங்கியிருந்தார். அவர் மடத்தின் அருகிலுள்ள பள்ளிக் கூடத்திலிருந்து 16 வயது சிறுமியை கடத்தி வந்து மடத்தில் வை…
-
- 0 replies
- 386 views
-
-
[size=3]டாஸ்மார்க் சாராயத்தை ஒளித்துக் கடத்தும் சிறுவன்[/size] "ஓடி விளையாடு பாப்பா" என்று குழந்தைகளுக்கு, பா பாடி, அகமகிழ்ந்து நன்நெறிப்படுத்திய பாரதி, இன்று தமிழகத்தில் டாஸ்மார்க்கைத் தேடி, ஓடி ஒளித்து விளையாடும் இந்த விளையாட்டைக் கண்டு பூரித்து போவார்! "கழுதை அறியுமா கற்பூர வாசனை?" என 'நவீனத்து தமிழர்கள்', அவரை எள்ளி நகையாடக் கூடும்! யார் கண்டார்கள்? -a picture from FB.
-
- 2 replies
- 3.6k views
-
-
முன்னாள் திமுக அமைச்சர்கள் உள்ளிட்ட கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பலர் மீது அதிமுக அரசு மேற்கொண்டுவரும் கைது நடவடிக்கைகளை கண்டித்து வருகிற ஜூலை 4 ம் தேதியன்று சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்றும், மத்தியில் ஆளும் கூட்டணி ஆட்சியில் மாற்றம் ஏற்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் திமுக தெரிவித்துள்ளது. திமுக முன்னணி நிர்வாகிகள் பலர் மீது அதிமுக அரசு மேற்கொண்டுவரும் கைது நடவடிக்கைகளை எதிர்கொள்வது குறித்து, இன்று கூடிய திமுக செயற்குழுவில், விவாதிக்கப்பட்டது. கூட்ட முடிவில் திமுகவினர் மீது காவல்துறையினர் பொய் வழக்குகளை போடுவதாக கூறி அதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மான்ம் நிறைவேற்றப்பட்டது. சிறை நிரப்பும் போராட்டம் மேலும் அதிமுக அரசு மேற்கொண்டுவரும் கை…
-
- 2 replies
- 703 views
-
-
[size=5]கிரேக்கத்தில் தேர்தல்: யூரோ வலயத்தின் எதிர்காலம்?[/size] [size=4]யூரோ வலயத்தில் தமது எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடிய தீர்க்கமான தேர்தலொன்றில் கிரேக்க மக்கள் வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள்.[/size] [size=4]கிரேக்கத்தின் நிதிநெருக்கடி தொடர்பான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மிக இறுக்கமான சிக்கன நடவடிக்கைகளை வற்புறுத்தும் 'கடன்மீட்சிக்கான உடன்படிக்கையை' ஏற்றுக்கொள்ள வேண்டுமா அல்லது அதனை நிராகரித்துவிட்டு சமூக நலத்திட்டங்களுக்கான செலவினங்களை ஊக்குவிப்பதா என்ற பிரச்சாரங்களை முன்வைத்து வலதுசாரி புதிய ஜனநாயகக் கட்சியும் இடதுசாரிகளின் கூட்டணியும் இந்தத் தேர்தலில் மோதுகின்றன.[/size] [size=3][size=4]தேர்தலுக்கு முன்னரான கருத்துக்கணிப்புகள் இரண்டு வாரங்களுக்கு த…
-
- 12 replies
- 1.2k views
-
-
பர்மாவின் மேற்கில் பௌத்த மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள வன்முறை மோதல்களில், 90,000 பேர் வரை தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளதாக உதவி நிறுவன பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு இடம்பெயர்ந்துள்ள மக்களில் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு தாம் அவசரகால உணவு உதவிகளை வழங்கியுள்ளதாக உலக உனவுத்திட்ட அதிகாரிகள் கூறுகின்றனர். பர்மாவிலிருந்து வெளியேறி தமது எல்லைக்குள் நுழைவதற்கு முயற்சித்த அகதிகளை வங்கதேசம் திருப்பி அனுப்பியுள்ளது. பர்மாவில் மூன்று முஸ்லிம் ஆண்கள் பௌத்த பெண்ணொருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக தகவல் பரவியதை அடுத்து, அங்கு இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதல்களில் இதுவரை ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளன…
-
- 9 replies
- 990 views
-
-
[size=4]பிரித்தானியாவின் நீதி மன்றங்களின் தீர்ப்பின்படி சுவீடன் நாட்டுக்கு நாடுகடத்தப்படும் நிலையில் உள்ள சர்ச்சைக்குரிய விக்லீக்ஸ் ஸ்தாபகர் யூலியன் எசேன்ஜ் (40 வயது) 240000 ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் பிணையில் விடப்பட்டுள்ளார். எனினும் தான் சுவீடனுக்காக நாடு கடத்தப்படும் நிலையிலிருந்து விடுபடுவதற்காகவும் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் பிரித்தானியாவில் உள்ள எக்குவாடோர் தூதரகத்தில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார்.[/size] [size=4]மேலும் அவர் தனக்கு சட்ட உதவி தேவைப்படுகின்றது என்று பிரித்தானிய பத்திரிகைகள் மூலம் வேண்டுகோள் விடுத்ததையடுத்து பிரித்தானியாவில் குடிவரவு சட்ட நிறுவனம் ஒன்றை நடத்திவரும் திரு தமிழினி குலேந்திரன் தனது நிறுவனம் மூலம் திரு யூலியனுக்கு சட்ட உதவிகளை இல…
-
- 0 replies
- 601 views
-
-
1958ம் ஆண்டு உருவாக்கப்பட்ட 5வது குடியரசில் 4வது முறையாக இடது சாரிகள் நாடாளுமன்றப் பெரும் பான்மையைப் பெற்றுள்ளனர். இதன் மூலம் இவர்கள் செய்து முடிக்கப்போகும் சாதனைகள் என்னவென்று பார்ப்பதற்கு இன்னமும் காலமெடுக்கும். 314 இடங்களைச் சோசலிசக்கட்சி தனித்தே பெற்றுள்ளது. அறுதிப் பெரும்பான்மை என்று சொல்லப்படும் 289 ஆசனங்களிலிருந்து அதிகப்படியான ஆசனங்களை சோசலிசக் கடசியே நிரூபித்துள்ளது. இது 1981ம் ஆண்டு 285 சோசலிசக் கட்சிப் நாடாளுமன்ற உறுப்பினர்களை மக்கள் நாடாளுமன்றத்திற்கு அனுப்பினார்கள். அப்போது நாடாளுமன்றம் மொத்தமாக 450 ஆசனங்கள் இருந்தன. அதன் பின்னர் அதனிலும் அதிகப்படியாக இம்முறை கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து இடது சாரிகள் 343 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளனர். ஆனால் க…
-
- 0 replies
- 537 views
-
-
[size=3][/size] [size=3][size=4]உள் நாடுகளிலும் வெளிநாடுகளிலும் இடம்பெயர்ந்து தற்போது உலகம் முழுக்க 44 மில்லியன் மக்கள் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர் என ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் அமையம் தெரிவித்துள்ளது.[/size][/size] [size=3][size=4]இன்று 20 ம் திகதி சர்வதேச அகதிகள் தினம் நினைவு கூறப்படுகின்றது. அகதிகளின் மறுபெயர் இலங்கைத் தமிழர்கள் என்றால் அது தவறில்லை.[/size][/size] [size=3][size=4]உலகின் 54 நாடுகளில் இலங்கைத் தமிழர்கள்அகதிகளாக வாழ்கின்றார்கள். உலகின் அதிக நாடுகளில் அகதிகளாக வாழும் ஒரே இனம் இலங்கைத் தமிழர்கள் என்று ஐ.நா வின் சேவை அமைப்பான யுனிசெப் கூறியுள்ளது.[/size][/size] [size=3][size=4]தற்போது கூட இலங்கைத்தமிழர்கள் முல்வேளிகளுக்குள் வாழ்ந்து வருகின்றார்…
-
- 2 replies
- 593 views
-
-
[size=5]பிறான்சில் துப்பாக்கி நபர் ஒருவர் வங்கி ஒன்றில் நான்கு பேரைப் பணயக் கைதிகளாக தடுத்து வைத்துள்ளார்.[/size] [size=4]பிறான்சின் ரூலூஸ் நகரில் உள்ள வங்கி ஒன்றில், துப்பாக்கி நபர் ஒருவர், நான்கு பேரைப் பணயக் கைதிகளாக தடுத்து வைத்துள்ளார். [/size] [size=4]அல் கைடா அமைப்புடன் தான் தொடர்பு கொண்டுள்ள ஒருவரென தெரிவித்த அந்த நபர், வங்கியின் முகாமையாளர் உட்பட நான்கு பேரை தடுத்து வைத்துள்ளார்.[/size] [size=4]மார்ச் மாதம் ஏழு பேரைக் கொலை செய்த மொஹமெட் மெறா வசித்து வந்த வீட்;டில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் அந்த வங்கி அமைந்துள்ளது. மெறாவை சுட்ட சிறப்புப் படையினருடன் பேச விரும்புவதாக அந்த நபர் தெரிவித்தார். வங்கியைக் காவல்துறையினர் சுற்றி வளைத்துள்ளார்கள்.[/size]…
-
- 1 reply
- 391 views
-
-
தூத்துக்குடி: உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை திருச்செந்தூரில் அமைக்கப்பட உள்ளதாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ஆஷிஸ் குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், தூத்துக்குடி மாவட்ட வெள்ளி விழாவை முன்னிட்டு திருச்செந்தூரில் உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை அமைக்கப்பட உள்ளது. திருச்செந்தூரில் உள்ள முருகன் கோவிலின் மூலவர் சிலையை மாதிரியாகக் கொண்டு நாகர்கோவிலை சேர்ந்த சிற்பிகள் இந்த புதிய சிலையை வடிவமைத்து தந்துள்ளனர். ஆனால் அதை கற்சிலையாக அமைப்பதா அல்லது கான்கிரீட்டால் அமைப்பதா என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. இந்த சிலை அமைப்பதற்கான செலவை சிருங்கேரி மடம் ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது. சிலை அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு முடிவு செய்ததற்கு பிற…
-
- 0 replies
- 308 views
-
-
நேபாளத்தில் ஆளும் ஐக்கிய நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில் (மாவோயிஸ்ட்) பிளவு ஏற்பட்டுள்ளது. கட்சியில் இருந்து பிரிந்து தனிக் குழுவை அமைத்துள்ள மோகன் வைத்யா கிரண், மீண்டும் ஆயுதம் ஏந்திப் போராடப்போவதாக அறிவித்துள்ளார். இதனால் நேபாளம் முழுவதுமே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிராகவும் கிரண் கடுமையான கருத்துகளைத் தெரிவித்துள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேபாள எல்லையில் உள்ள இந்திய பாதுகாப்புப் படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். நேபாள மாவோயிஸ்ட் கட்சியின் மூன்று நாள் தேசிய கூட்டம் செவ்வாய்க்கிழமை முடிந்த நிலையில், கட்சியில் இருந்து விலகி தனிக் குழுவாக இயங்க இருப்பதாக கிரண் அறிவித்தார். "எங்களுக்கு நாடாளுமன்ற ஆட்சி முறையில் நம்பிக்கையில்லை. எனவே புதிய மக்கள் குடியரசை அ…
-
- 0 replies
- 299 views
-
-
[size=5]முபாரக் மரணம்? ராணுவம் மவுனம்[/size] [size=4]எகிப்து மாஜி அதிபர் ஹோஸ்னி முபாரக் மரணம் அடைந்ததாக மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கிறது. ஆனால் ராணுவம் அதனை மறுக்கிறது.[/size] [size=4]கடந்த 30 ஆண்டுகளாக அதிபராக இருந்து வந்த முபாரக், நாட்டில் அரசுக்கெதிரான கிளர்ச்சியில் பதவி பறிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறை தண்டனை அளிக்கப்பட்ட நிலையில் 84 வயதான முபாரக்கிறகு பக்கவாத நோயினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணம் அடைந்ததாக மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கிறது. ஆனால் ராணுவம் அதனை மறுத்து வருகிறது.[/size] http://tamil.yahoo.com/%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0-00…
-
- 1 reply
- 814 views
-
-
பிரணாப் 28ம் தேதி வேட்பு மனு தாக்கல்: மனுவை முன்மொழிந்து கருணாநிதி கையெழுத்து. டெல்லி: ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரணாப் முகர்ஜி வரும் 28ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார். அந்த மனுவில் பிரணாபை முன்மொழிந்து திமுக தலைவர் கருணாநிதி தான் கையெழுத்து போட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரணாப் இந்த வாரத்தில் தனது மத்திய நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்பு மனுதாக்கல் கடந்த 16ம் தேதி தொடங்கியது. மனுதாக்கல் செய்ய வரும் 30ம் தேதி கடைசி நாளாகும். காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரான பிரணாப் முகர்ஜி வருகிற 28ம் தேதி மனுதாக்கல் செய்கிறார். இதற்காக 4 பிரதிகள் கொண்ட வேட்பு மனுக்கள் தயாராகி வருகின்றன. பிரதமர் மன்மோகன் சிங், க…
-
- 1 reply
- 479 views
-
-
பார்ப்பனர்களின் கண்ணீரைத் துடைக்கும் சீமானும் நாம் தமிழர்கட்சியும்! – அம்பலப்படுத்துகிறார் கொளத்தூர் மணி Published By பெரியார்தளம் On Sunday, June 3rd 2012. Under செய்திகள், முதன்மைச்செய்திகள் பார்ப்பனர்களின் கண்ணீரைத் துடைக்கும் சீமானும் நாம் தமிழர்கட்சியும்! – அம்பலப்படுத்துகிறார் கொளத்தூர் மணி நன்றி: தமிழக அரசியல் http://www.tamilveli.com/showurl.php?url=http://www.periyarthalam.com/2012/06/03/seemaan-supports-paarppaans/&type=P&itemid=231550
-
- 56 replies
- 5.9k views
-
-
ஓவியா திங்கள், 18 ஜூன் 2012 23:57 பயனாளர் தரப்படுத்தல்: / 9 குறைந்தஅதி சிறந்த உலகம் உருண்டை என்று முதன் முதலில் அறிவியல் எடுத்துரைக்க எத்தனித்தது. மதவாதிகள் மருண்டனர். வெகுண்டெழுந்து எதிர்த்தனர். தங்களது மேதாவிலாசத்தின் மீது மிகை மதிப்புக் கொண்டு, அறிவியல் அறிஞர்களை முட்டாள்களாகப் பாவித்து எள்ளி நகையாடினர். அவர்கள் வீசிய வினாக் கணைகளுள் ஒன்று பின்வருமாறு: உலகம் உருண்டையானால் நியாயத் தீர்ப்பு வழங்கும் நாளில், எல்லோரையும் கடவுள் ஒரே நேரத்தில் எப்படிப் பார்க்க முடியும்? அப்படி வசதியில்லாத ஒரு வடிவத்திலா கடவுள் உலகத்தைப் படைத்திருப்பார்? எனவே உலகம் தட்டையானதுதான். இதனை இன்று வாசிக்கும் நமக்கு என்ன தோன்றுகிறது? ‘அடடா, மனிதர்கள் இப்படியெல்லாம் விசித்திரமாக ச…
-
- 2 replies
- 874 views
-
-
[size=3][/size] [size=3][size=4]நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை பெற்ற, பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானியின் பதவி கடந்த ஏப்ரல் மாதமே தகுதி நீக்கம் செய்யப்பட்டு விட்டது. எனவே, புதிய பிரதமரை, அதிபர் சர்தாரி நியமிக்க வேண்டும் என பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானின் தற்போதைய ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி, இவரது மனைவி பெனசிர் புட்டோ பிரதமராக இருந்த காலத்தில், ஏராளமான ஊழல் பணத்தை சுவிஸ் வங்கிகளில் பதுக்கியதாக வழக்கு தொடரப்பட்டது.[/size][/size] [size=3][size=4]முஷாரப் ஜனாதிபதியாக இருந்தபோது, அவசரச் சட்டத்தின் மூலம், இந்த ஊழல் வழக்கு ரத்து செய்யப்பட்டது. எனினும், இந்த அவசரச் சட்டம் பாராளுமன்றில் நிறைவேற்றப்படாததால், சர்தாரி மீதான வழக்கை, மீண்டும் விசார…
-
- 0 replies
- 357 views
-
-
[size=4]கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள ஐரோப்பிய நாடுகளுக்கு உதவ 50ஆயிரம் கோடி ரூபாவை வழங்க இந்தியா முன் வந்துள்ளது. சர்வதேச நாணயநிதித்தின் ஊடாக இந்த நிதியை இந்தியா வழங்கவுள்ளது. மெக்ஸிகோவில் நடந்து வரும் ஜி-20 நாடுகளின் கூட்டத்தில் இந்திய தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் இதை அறிவித்தார். மேலும் இந்த விஷயத்தில் சீனா உள்ளிட்ட அனைத்து ஜி-20 நாடுகளும் உதவ முன் வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். ஐரோப்பிய பொருளாதார சிக்கல் காரணமாக சர்வதேச அளவில் பிரச்சனைகள் எழுந்துள்ளன. மேலும் இந்தியா, சீனா உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகளும் இதன் தாக்கத்தை சந்திக்க ஆரம்பித்துள்ளன. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டதற்கு ஐரோப்பிய சிக்கலே முக்கிய காரணம். இதனால், …
-
- 3 replies
- 630 views
-
-
Fantasist, 44, claimed she was the 'office cougar' and carried out a sinister campaign of sexual harassment against married male colleagues Cambridge graduate Jeevani Wickramaratna, 44, emailed a co-worker's wife, claiming he was having an affair with her She alleged in a Facebook post that colleague Paul Stokes was HIV positive - a claim that was untrue She sent sexually explicit and abusive emails and claimed a fellow worker had harassed HER One victim was forced to change his phone number after being bombarded with calls District judge told her she was living in a 'complete fantasy world' and jailed her By Luke Salkeld PUBLISH…
-
- 3 replies
- 1.2k views
-
-
[size="5"]ஜப்பானில் நில நடுக்கம்[/size] [size=2]ஜப்பானில் இன்று (18.09.2012) அதிகாலை 4.30 மணியளவில் கடும் நில நடுக்கம் ஏற்பட்டது. ஹோன்சு கடற்கரை பகுதியில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் அப்பகுதியில் வீடுகள் குலுங்கின. அப்போது அயர்ந்து தூங்கி கொண்டிருந்த மக்கள் அதிர்ச்சியுடன் கண் விழித்தனர். [/size] [size=2]நில நடுக்கம் ஏற்பட்டதை அறிந்ததும் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறி ஓட்டம் பிடித்தனர். ஜப்பானில் 6.1 ரிக்டர் அளவில் நில நடுக்கம் பதிவானதாக சீன பூகம்ப ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆழ்கடலில் 40 கி.மீட்டர் ஆழத்தில் உருவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. [/size] [size=2]அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் இங்கு 6.4 ரிக்டர் அளவில் பசிபிக் கடற்கரையில் உள்ள மொரியோகோவில் 31…
-
- 0 replies
- 412 views
-
-
அல்- ஹலீல்: கடந்த ஞாயிற்றுக்கிழமை (17.06.2012) அல் ஹலீல் பிராந்தியத்தில் கூலித்தொழிலில் ஈடுபட்டிருந்த பலஸ்தீனர்களைச் சுற்றிவளைத்துக்கொண்ட யூத ஆக்கிரமிப்பாளர் குழுவொன்று, அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளது. வெறிக்கூச்சல் போட்டபடி இரு பலஸ்தீன் இளைஞர்களை விரட்டிப் பிடித்துக் கடத்திச் சென்ற ஆக்கிரமிப்பாளர்களின் அடாவடித்தனத்தைத் தடுத்து நிறுத்த முனையாமல், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப்படை கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்ததாகவும், காயப்பட்ட மற்றொரு பலஸ்தீனரைக் கைதுசெய்து இழுத்துச் சென்றதாகவும் சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர். கூலித் தொழிலாளிகளான அன்வர் அப்துல் ரப் (வயது 30), நயீம் அல் நஜ்ஜார் (வயது 32) ஆகிய இருவரின் சடலங்களும்…
-
- 0 replies
- 437 views
-
-
பிரித்தானியாவில் தமிழீழக் கொடிக்குத் தடை இல்லை. www.Tamilkathir.com
-
- 0 replies
- 488 views
-