உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26686 topics in this forum
-
கொலவெறிப்பாட்டைக் கேட்டதும் நடுவராக இருந்த ஜெயச்சந்திரன் வெளியேறுகிறார் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறும் ஜெயச்சந்திரன் மலையாளப் பின்னணிப் பாடகர் என்றாலும் நல்ல தமிழ்ப் பாடல்களை வரிகளைச் சிதைக்காமல் பாடியவர். அதனால்தான் அவருக்கு இந்தக் கோபம். (மின்னஞ்சல் ஊடாக ) கொலவெறிப்பாட்டைக் கேட்டதும் நடுவராக இருந்த மலையாளி ழுந்து வெளியேறுகிறார். எதனால் அவர் வெளிப்போகிறார் என்று புரியவில்லை. பாடல் தமிழ்நாட்டில் இருந்து வெளிவந்தது என்பதால் எழுந்து போகிறாரா? அல்லது பாடலின் தரம் பற்றி எழுந்து போகிறாரா என்று தெரியவில்லை. எதுவாக இருப்பினும், ஏன் தமிழ்க் கலைஞர்களுக்கோ, மொழித் துறையினர்க்கோ இப்படிப் புறக்கணிக்கும் சீற்றம் வருவதில்லை. புழுவிற்குக் கூட சீற்றம் வ…
-
- 18 replies
- 4.5k views
-
-
ஈரானின் அணுசக்தி உருவாக்கம் முடிவடைந்தது உலகத்திற்குத் தெரியாது நிலத்தடியில் ஈரான் உருவாக்கிவந்த அணு குண்டு அல்லது அணுசக்தி உருவாக்க தொழில் நுட்ப முயற்சி வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலை நாடுகளுக்கு எதிரான இஸ்லாமிய ஸ்ரேற்றான ஈரானில் முதலாவது அணுசக்தி உருவாக்கம் மலர்ந்ததுள்ளதாக ஈரானிய அதிகாரிகள் மகிழ்வு தெரிவித்தனர். இந்த நிலத்தடி அணுசக்தி உருவாக்க மையத்தில் யுரேனிய பிரிப்பு முயற்சி நிறைவடைந்துள்ளதாகவும், தாம் இதை ஆதாரமாக வைத்து, மின்சாரத்தை உருவாக்க இருப்பதாகவும் ஈரான் அறிவித்துள்ளது. தலைநர் தெகிரானில் சியா முஸ்லீம்களின் ஆன்மீக நகரமான குவோமில் மேற்கண்ட நிலத்தடி இரகசிய மையம் இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஐ.நாவின்…
-
- 1 reply
- 1k views
-
-
-
- 0 replies
- 1k views
-
-
ஜெ குறித்த கட்டுரை: நக்கீரன் அலுவலகம் மீது அ.தி.மு.கவினர் நாள் முழுக்க தாக்குதல்! சென்னை: ஜெயலலிதா குறித்த கட்டுரையுடன் வெளியான நக்கீரன் இதழைக் கொளுத்திய அதிமுகவினர், சென்னையில் உள்ள அந்த பத்திரிகையின் அலுவலகம் மீது கடும் தாக்குதல் நடத்தினர். 'மாட்டுக்கறி சாப்பிடும் மாமி நான்' என்ற தலைப்புடன் ஜெயலலிதா அட்டைப்படம் தாங்கி வெளியாகியுள்ள இந்த வார நக்கீரன் இதழை தமிழகம் முழுக்க அதிமுகவினர் கொளுத்தி வருகின்றனர். ஜெயலலிதாவைப் பற்றி மிகக் கேவலமாக எழுதியுள்ள நக்கீரன் இதழை இனி விற்கக் கூடாது என பல கடைகளையும் அதிமுகவினர் நேரடியாக மிரட்டியுள்ளதாக புகார் கூறப்பட்டது. தமிழகம் முழுவதும் எரிப்பு... அமைச்சர்கள் ஆர்ப்பாட்டம் நக்கீரன் இதழை தமிழகம் முழுக்க அதிமுகவினர் ஆர்ப…
-
- 10 replies
- 1.6k views
-
-
அமெரிக்க ராணுவ நெடுநோக்குத் திட்டம் புதிய ராணுவ நெடுநோக்குத் திட்டத்தை அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமா 5ம் நாள் வெளியிட்டார். வரவு செலவு நிர்ப்பந்தத்தை எதிர்கொண்டாலும், வலுவான ராணுவத் தகுநிலையை உறுதிப்படுத்த அமெரிக்கா பாடுபடும் என்று இந்த நெடுநோக்குத் திட்டத்தில் கூறப்படுகிறது. அமெரிக்கா ராணுவப் படை இருப்பை ஆசிய-பசிபிக் பிரதேசத்தை நோக்கி நகர்த்தும் என்றும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ராணுவ நெடுநோக்கு அறிக்கையை பராக் ஒபாமா பென்ட்கானில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் வெளியிட்டார். தரைப்படை அளவை அமெரிக்கா குறைக்கும். ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்காவின் ராணுவப் படைகளின் இருப்பை குறைத்து, ஆசிய-பசிபிக் பிரதேசத்தில் அமெரிக்காவின் ராணுவப் படைகளி…
-
- 4 replies
- 1.2k views
-
-
தெற்கு சூடான் நாடு விடுதலை பெற்றும் பயனற்ற ஒரு நாடாகவே தனது அரசியல் முன்நகர்வை நடாத்திக் கொண்டிருக்கிறது. கடந்த ஒரு வார காலத்தில் 3000 பேர் மானிடப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். ரூவாண்டா, சிறீலங்கா போன்ற நாடுகளில் இடம் பெற்ற மானிடப் படுகொலைக்கு ஒப்பான செயல் இதுவாகும். இக்கொலைகள் சர்வதேச போர்க் குற்றத்தில் கொண்டுவரப்படக்கூடிய கொடுஞ் செயல் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆண் – பெண் – குழந்தைகள் – முதியோர் என்ற போதம் பார்க்காமல் அனைவரையும் கொல்லும் எத்தனத்தில் ஒரு தாக்குதல் நடந்தால் அது சர்வதேச போர்க் குற்றமாகும். தெற்கு சூடானில் உள்ள ஜங்கிலி பகுதியில் இந்த அனர்த்தம் நடைபெற்றுள்ளது. ஒரு பகுதியில் உள்ள மக்கள் ஆண், பெண், குழந்தைகள் என்ற பேதமின்றி ஒட்டு மொத்தமாக கொன்றொழிக்கப்ப…
-
- 1 reply
- 623 views
-
-
Accountability for the Alleged Violations of International Humanitarian and Human Rights in Sri Lanka By Michael H. Posner, Assistant Secretary for the Bureau of Democracy, Human Rights and Labor at the Department of State The United States shares your concern about accountability for the alleged violations of international humanitarian and human rights law that occurred during Sri Lanka's recent conflict and is committed to working with the government of Sri Lanka, the United Nations, and the international community to implement a just and equitable reconciliation process for all Sri Lankans. At the request of Congress, the Department of State prepared two re…
-
- 0 replies
- 517 views
-
-
கோடாக்கின் உயர்ச்சியும் வீழ்ச்சியும் புகைப்படைத்துறையில் ஒரு காலத்தில், நீண்டகாலமாக கொடிகட்டிப்பறந்த ஒரு நிறுவனம் இன்று வங்குரோத்து நிலையில் உள்ளது. கோடாக்கின் புகைப்படச்சுருளை தெரியாவர்கள் ஒரு காலத்தில் இருக்கவில்லை. அது புகைப்படத்துறையில் பெரிய ஒரு அத்தியாயத்தை தொடக்கி, சாதாரண மக்கள் வரை புகைப்படத்துறையை எடுத்து சென்றது. இதனால் ஒருவித புரட்சியை கூட அது உருவாக்கியது. மேலும், பல ஆயிரம் பேரை வேலையில் அமர்த்தியது. இவ்வாறு சரித்திரத்தை எழுதிய கோடாக் மாறும் உலகத்திற்கு ஏற்ப தன்னை மாற்றுவதில் சிரமப்பட்டது. புதிய தொழில்நுட்பம் ஊடாக இலத்திரனியல் முறையால் புகைப்படங்களை எடுக்கும் கருவிகள் அறிமுகப்பட்டத்தப்பட்டன. அத்துடன் அந்த தொழில்நுட்பம் மலிந்து, சாதாராண க…
-
- 8 replies
- 1.3k views
-
-
லிபியாவில் ஆயுதம் ஏந்திய குழுக்களிடையே தற்போது பயங்கரமான மோதல்கள் ஆரம்பித்திருக்கிறது. நேற்று முன்தினம் தலைநகர் திரிப்போலியில் நடைபெற்ற துப்பாக்கி மோதலில் நான்கு போராளிகள் கொல்லப்பட்டனர். கடாபியை அகற்றப் போராடிய இவர்கள் இப்போது அதிகாரத்திற்காக அடிபட ஆரம்பித்துள்ளார்கள். மேலும் ஒழுங்கு கட்டுப்பாடு எதுவுமற்ற லிபிய ஆயுதம் தாங்கிய குழுக்கள் இப்போது தமக்குள் மோதலை ஆரம்பித்திருப்பது புதுமையான ஒன்றல்ல, இதற்கான பதட்டம் கடந்த பல மாதங்களாகவே நிலவி வருகிறது. பல்வேறு கருத்துக்களை கொண்ட ஆயுதக்குழுக்கள் ஆளையாள் ஆயுதங்களை தூக்கியபடியே ஆங்காங்கு கப்பமும் கட்டப்பஞ்சாயத்துமாக காலம் ஓட்டி வருகிறார்கள். லிபியாவில் கடாபி இருந்தபோது கடாபியின் இராணுவம் பொது மக்களுக்கு பாரிய ஆபத்தாக வி…
-
- 0 replies
- 532 views
-
-
கலாமை, மாணவர்கள் திகைப்படையச் செய்தனர். ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகள் வீட்டிலிருந்து துவக்கப்பட வேண்டும் என, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தெரிவித்துள்ளார். ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் நடக்கும், இந்திய அறிவியல் மாநாட்டில், குழந்தைகளுக்கான அறிவியல் மாநாட்டை துவக்கி வைத்து மாணவர்களுடன், அப்துல் கலாம் உரையாடினார். சங்கடமான சில கேள்விகளைக் கேட்டு கலாமை, மாணவர்கள் திகைப்படையச் செய்தனர். அந்த கேள்விகளுக்கெல்லாம் நேரிடையான பதில் தராமல், நாசுக்காக பதிலளித்தார். ஊழல் குறித்த கேள்விக்கு, “ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு நடவடிக்கைகள் எல்லாம், வீட்டிலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும்’ என்றார். “”நீங்கள் ஜனாதிபதியாக இருந்த போது அறிவியலையும், அரசியலையும் எப்படி சமாளித்தீர்க…
-
- 0 replies
- 606 views
-
-
ஈரான்: உலகத்திற்குமே பாரிய பிரச்சனை? ஈரான் பிரச்சனை தெற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு மட்டுமல்ல முழு உலகத்திற்குமே பாரிய பிரச்சனையாகப் போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சிறப்பாக மசகு எண்ணெய் விலை 50 வீதம் அதிரடியாக உயரக்கூடிய பேரபாயம் உள்ளதாக நியூயோர்க் ரைம்ஸ் எச்சரித்துள்ளது. அப்படியொரு நிலை வருமாக இருந்தால் இன்றய பொருளாதார நெருக்கடியில் மீள முடியாத பேரவலத்திற்குள் உலகம் சிக்குண்டு போகும் என்பதும் தெரிந்த விவகாரமே. ஈரான் அணு குண்டை செய்யும் முயற்சியை நிறுத்தாவிட்டால் ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தை உறை நிலைக்கு கொண்டுவந்து, செயற்பட முடியாதவாறு செய்வோம் என்று அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் கருத்து தெரிவித்த நிலையில் இந்த விவகாரம் வெடித்துள்ளது. ஈரான் மீது த…
-
- 1 reply
- 945 views
-
-
யாழ். திருநெல்வேலி சந்தையின் மாடிக்கட்டடம் இம்மாதம் இறுதிக்குள் வியாபார நடவடிக்கைகளுக்காக வழங்கப்படவுள்ளதாக நல்லூர் பிரதேச சபைத் தலைவர் வசந்தகுமார் தெரிவித்துள்ளார். நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட திருநெல்வேலி சந்தையின் இரண்டாம் மாடிக் கட்டடம் 85 மில்லியன் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள மரக்கறிச் சந்தையானது கீழ் மாடியிலேயே இடம்பெறுகிறது. இதனால் மரக்கறிகளில் மண், தூசு போன்ற அழுக்குகள் படிவதாக மக்களும் வியாபாரிகளும் விசனம் தெரிவிக்கின்றனர். இதனால் மக்களது சுகாதாரத்தை பாதிக்கும் இதனைக் கருத்திற் கொண்டே இரண்டாம் மாடிக்கு சந்தை மாற்றப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தற்போது வியாபார நடவடிக்கை இடம்பெறும் பகுதி வாகனங்கள் நிறுத்துவதற்குரிய…
-
- 0 replies
- 677 views
-
-
இந்திய விமானப் படையில் உள்ள மிராஜ்-2000 ரக போர் விமானங்களில் பயன்படுத்துவதற்காக ரூ. 6,600 கோடி செலவில் 490 நவீன ஏவுகணைகளை இந்தியா வாங்கவுள்ளது. பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் ஏவியேசன் (Dassault Aviation) நிறுவன தயாரிப்பு தான் மிராஜ்-2000 போர் விமானங்கள். பல ஆண்டுகளாக இந்திய விமானப் படையில் பயன்பாட்டில் உள்ள இந்த விமானங்கள் எதிரி நாட்டு விமானங்களை நடுவானில் வழி மறிப்பது, குறைந்த உயரத்தில் பறந்து எதிரிகளின் ரேடார்களில் கண்ணில் படாமல் இலக்கை தாக்குவது, எதிரி நாட்டின் ரேடார்களையே jam செய்து செயலிழக்கச் செய்வது உள்ளிட்ட திறன்களைக் கொண்டது. இந்தியாவிடம் இந்த ரகத்தைச் சேர்ந்த 51 விமானங்கள் உள்ளன. இவை இப்போது ரூ. 10,947 கோடி செலவில் நவீனப்படுத்தப்பட்டு வருகின்றன. அத்த…
-
- 2 replies
- 887 views
-
-
இந்திய தலைநகரம் புதுடில்லியிலுள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று வியாழக்கிழமை அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் பல கோடி ரூபா மதிப்புள்ள சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. இதேவேளை, எவ்வித உயிராபத்துக்களும் இன்றி சுமார் 5 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று அதிகாலை 12.45 மணியளவில் மேற்படி விமான நிலையத்தின் சரக்கு முனையத்திலுள்ள செல்பி என்ற நிறுவனத்தின் மனிதவளத்துறை பிரிவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் விமான நிலையத்திலுள்ள எயார் இந்தியா, கல்ப் எயார், தாய் எயார், ஏரோ ஃப்ளைட் உட்பட 10 பிரபல எயார்லைன் நிறுவனங்களின் அலுவலகங்களில் தீ பரவியதை அடுத்து அந்நிறுவனங்கள் தீயில…
-
- 0 replies
- 493 views
-
-
அமெரிக்க ஐஓவா வாக்கெடுப்பில் மிட் றொம்நி வெற்றி அமெரிக்க மசச்சூசெட்ஸ் மாநிலத்தின் ஆளுனரான மிட் றொம்நி அவர்கள் குடியரசுக் கட்சியின் அதிபர் தேர்தலுக்கான வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான போட்டியில், முதல் வாக்கெடுப்பு ஒன்றில் மிகவும் சொற்ப வாக்குகளில் வெற்றி பெற்றிருக்கிறார். ஒரு லட்சத்து இருபதினாயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைக் கொண்ட ஐஓவா மாநிலத்தில் தனக்கு அடுத்ததாக வந்த செனட் சபையின் முன்னாள் உறுப்பினரான றிக் சண்டொரம்மை விட வெறுமனே 8 வாக்குகள் அதிகமாகப் பெற்று றொம்நி வெற்றிபெற்றார். இருவருக்கும் தலா 25 வீத ஆதரவு கிடைத்திருந்தது. சண்டோரம் அவர்கள் ஐஒவாவில் மாத்திரம் முழுமையாக தனது முயற்சியை குவித்திருந்த நிலையில் தான் தேசிய மட்டத்தில் பிரச்சாரத…
-
- 49 replies
- 4.7k views
-
-
அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளிடமிருந்து நவீன ஆயுதங்களைப் பாகிஸ்தான் பறிமுதல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் எல்லைக்குள் நேட்டோ படையினர் தாக்குதல் நடத்தியதில் 24 வீரர்கள் பலியானார்கள். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்கா, பாகிஸ்தான் உறவில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள நேட்டோ படைக்குப் பொருட்களை எடுத்து செல்ல பாகிஸ்தான் தடை விதித்தது. இதனால் பாகிஸ்தானில் வைத்துள்ள ராணுவ தளவாடங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் முதலானவற்றை அமெரிக்கா அவசரம் அவசரமாக வெளியேற்றி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைக்குச் சொந்தமான நவீன ராணுவ ஆயுதங்களை, பாகிஸ்தான் பறிமுதல் செய்துள்ளது. இவை 250 கண்டெய்னர்களில் இருப்பதாக பாகிஸ்தான…
-
- 1 reply
- 754 views
-
-
அலுவலகம் திறக்கிறது தலிபான் கத்தாரிலோ அல்லது வேறு ஒரு இஸ்லாமிய நாட்டிலோ தனது அரசியல் அலுவலகத்தை திறப்பதற்கான பூர்வாங்க ஒப்பந்தம் ஒன்றை செய்திருப்பதாக ஆப்கானில் உள்ள தலிபான் அமைப்பு கூறியுள்ளது. சர்வதேச சமூகத்துடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கு இந்த நகர்வு உதவும் என்று அவர்கள் கூறுகிறார்கள். சமாதான நடவடிக்கைகளை பலப்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, கத்தாரில் அலுவலகம் அமைக்கும் யோசனையை தாம் வரவேற்போம் என்று கடந்த வாரம் ஆப்கான் அதிபர் ஹமீத் கர்சாய் தெரிவித்திருந்தார். இந்த விடயத்தில் அமெரிக்காவுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே சர்ச்சை நிலவியதாக முன்னர் நம்பப்பட்டதாக செய்தியாளர்கள் கூறுகின்றனர். http://www.bbc.co.uk...penoffice.shtml
-
- 0 replies
- 491 views
-
-
வன்னிப் போருடன் முடிவடைந்த கண்ணாணிப்பு குழு செப்படி வித்தை சிரிய போர் நிறுத்தக் கண்காணிப்பு குழு திரும்பும் அவலம் சிரியா சென்றுள்ள அரபுலீக்கின் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு செல்லாக்காசு வேலை என்பதை இப்போது அரபுலீக்கே உணர ஆரம்பித்துள்ளது. இவர்கள் சர்வாதிகாரி பஸார் அல் ஆஸாட்டுக்கு செல்லம் கொடுக்கும் போக்கையே கடைப்பிடிக்கிறார்கள். இவர்கள் அங்கு போய் இறங்கிய பின்னர் நிலமைகள் மோசமடைந்துள்ளதே தவிர வேறெந்த மாற்றங்களும் நடைபெறவில்லை. இவர்களில் முக்கியமான ஒருவராக சூடான் நாட்டு கோமாள ஜெனரல் சிரிய சர்வாதிகாரிக்கு நட்பான கருத்தை தெரிவித்து, தான் வந்த வேலையை மறந்து போனது தெரிந்ததே. இந்த நிலையில் செல்லாக்காசு போர் நிறுத்தக் கண்காணிப்பு குழுவை அரபுலீக் திருப்பி அழைக…
-
- 1 reply
- 792 views
-
-
சீனாவின் வளர்ச்சி – ஒரு பார்வை – ஜி.விஸ்வநாதன் கல்வி தொடர்பான தகவல் பரிமாற்றத்துக்காக வெவ்வேறு சமயங்களில் சீனா சென்று வரும் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன், பல்வேறு துறைகளில் சீனா கண்டுள்ள வளர்ச்சி, அதற்கான காரணங்கள், சீனாவிடம் இருந்து இந்தியா கற்க வேண்டிய பாடம் ஆகியவற்றை, இந்த குறுகிய கட்டுரைத் தொடரில் விளக்குகிறார். படம்: சீனப் பிரதமருடன் ஜி.விஸ்வநாதன்... வளர்ந்து வரும் நாடுகள் என்று குறிப்பிடப்படும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா (BRIC Countries) ஆகியவற்றின் செயல்பாடுகளை உலகம் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறது. இந்த நான்கு நாடுகளில் இந்தியாவும், சீனாவும்தான் மக்கள் தொகையில் மிகப் பெரிய எண்ணிக்கையைக் கொண்டவை. ஆகவே, இந்த இரு நாடு…
-
- 1 reply
- 7k views
-
-
-
- 1 reply
- 804 views
-
-
சீனாவில் இந்திய தூதரக அதிகாரி மீது தாக்குதல் சீனாவின் இவூ நகரில் இந்திய தூதரக அதிகாரியை சீன வர்த்தகர்கள் கும்பலாக சேர்ந்து தாக்கியதில் அவர் படுகாயமடைந்து மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கிழக்கு சீனாவில் உள்ள இவூ நகரில் Euro Global Trading என்ற நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் அந் நாட்டு வர்த்தகர்கள் சிலருக்கு பாக்கி வைத்துள்ளது. பணத்தை தராத அந்த நிறுவனத்தின் அதிபர் சீனாவிலிருந்து தப்பிவிட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து அந்த நிறுவனத்தில் பணியாற்றும் இரு இந்திய ஊழியர்களான தீபக் ரகேஜா, ஷியாம்சுந்தர் அகர்வால் ஆகியோரை சீன வர்த்தகர்கள் கடத்திச் சென்று சிறை வைத்தனர். இதையடுத்து அவர்களை மீட்க இந்திய வெளியுறவுத்துறை நடவடிக்கை…
-
- 3 replies
- 923 views
-
-
பேஷ் பேஷ்!- இனி கோவில்களில் வடை, பாயாசத்துடன் அன்னதானம்!! சென்னை: தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தின் கீழ் வரும் கோவில்களில் தற்போது வழங்கப்பட்டு வரும் அன்னதானத் திட்டத்தை விரிவுபடுத்தி கூடுதலாக வடை, பாயாசமும் வழங்கவுள்ளனர். இந்த வடை, பாயாசம், வெள்ளிக்கிழமைகள் மற்றும் பிரதோஷம் உள்ளிட்ட விசேஷ சிறப்பு நாட்களில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2002ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் திருக்கோவில் அன்னதானத் திட்டம் தொடங்கப்பட்டது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இந்தத் திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக 63 கோவில்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் படிப்படியாக விஸ்தரிக்கப்பட்டு த…
-
- 0 replies
- 1k views
-
-
காஷ்மீரில் அக்கிரமம்- மின்சாரம் கேட்டுப் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி! காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டம் போனியார் என்ற இடத்தில் மின் தட்டுப்பாட்டைக் கண்டித்து மக்கள் நடத்திய போராட்டத்தில் திடீரென மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார், 2 பேர் படுகாயமடைந்தனர். இதனால் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பெரும் பதட்டம் நிலவுகிறது. போனியார் பகுதியில் தொடர்ந்து மின் தட்டுப்பாடு இருந்து வருவதால் அதைக் கண்டித்தும், முறையாக மின்விநியோகம் செய்யுமாறும் கோரி மக்கள் கிட்டத்தட்ட 500 பேர் அங்குள்ள மின் நிலையத்திற்கு வெளியே கூடி போர…
-
- 0 replies
- 391 views
-
-
கனடாவில் இந்திய மாணவர் மர்ம நபரால் சுட்டுக் கொலை. கனடாவின் சர்ரே நகரில், கிறிஸ்துமஸ் தினத்தன்று இந்திய மாணவர், மர்ம நபர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி தற்போது வெளியாகியுள்ளது. பிரிட்டனின் மான்செஸ்டர் நகரில், அனுஜ் பித்வே, 23, என்ற இந்திய மாணவர் மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில், கனடாவிலும் இந்திய மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள க்வான்ட்லென் பல்கலைக் கழகத்தில், மேலாண்மைத் துறையில் இந்தியாவைச் சேர்ந்த அலோக் குப்தா, 27, என்ற மாணவர் பட்டப்படிப்பு படித்து வந்தார். சர்ரே நகரில் உள்ள ஒரு கடையின் உரிமையாளர்கள…
-
- 11 replies
- 1.4k views
-
-
இந்தியாவுடன் மோதுவது நெருப்புடன் மோதுவதற்கு சமம். நாங்கள் நெருப்புடன் விளையாட முட்டாள் அல்ல,” என இந்தியாவுக்கான சீனா துணை தூதர் நியோ கியூங்பயோ பேசினார். இந்தோ-சீனா நட்புறவுக்கழக கருத்தரங்கம் மதுரையில் நேற்று நடந்தது. பேராசிரியர் சாலமன் செல்வம் வரவேற்றார். சங்க செயலாளர் சுரேந்திரன் துவங்கி வைத்தார். சிறப்பு விருந்தினர் சீனா துணை தூதர் நியோ கியூங்பயோ பேசியதாவது இந்தியா பகுதிகளை ஆக்கிரமித்தது உட்பட சீனா மீது 4 புகார்கள் கூறப்படுகின்றன. இந்தியா – சீனா இடையே எல்லைகள் முறையாக வரையறுக்கப்படவில்லை. அதேசமயம், எல்லைகள் பாதுகாப்பாக, பலமாக உள்ளன. இந்திய கம்ப்யூட்டர்களில் சீனா ஊடுருவுதாக புகார் கூறுகின்றனர். உலகில் தரமான தகவல் தொழில் நுட்ப வல்லுநர்கள் இந்தியாவில்தான் உள்ளனர்…
-
- 9 replies
- 1.8k views
-