உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26670 topics in this forum
-
வாஷிங்டன்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இருந்து வரும் 3 நாள் உண்ணாவிரதத்திற்கு குஜராத்தில் மட்டுமல்லாமல், குஜராத்துக்கு வெளியே அமெரிக்காவிலும் பெரும் ஆதரவு காணப்படுகிறது. அமெரிக்காவின் பல நகரங்களிலும் அவரது ஆதரவாளர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். அமைதி, மத நல்லிணக்கம் ஆகியவற்றை வலியுறுத்தி நரேந்திர மோடி 3 நாள் உண்ணாவிரதத்தை நேற்று தொடங்கினார். இந்தப் போராட்டத்திற்குப் பெரும் ஆதரவு காணப்படுகிறது. பெரும் திரளான முஸ்லீம்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவித்திருப்பது வியப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவிலும் மோடி ஆதரவாளர்கள் உண்ணாவிரதத்தில் குதித்துள்ளனர். பாஜகவின் வெளிநாட்டு நண்பர்கள் என்ற அமைப்பு இந்த உண்ணாவிரதத்திற்கு ஏ…
-
- 0 replies
- 588 views
-
-
பார்வையாளர்கள் மீது வீழ்ந்து நொறுங்கிய சாகச விமானம் : 3 பேர் பலி அமெரிக்காவின் நெவேடாவில் நடைபெற்றுவந்த தேசிய விமான சாகச நிகழ்வின் போது திடீரென விமானமொன்று கட்டுப்பாட்டை இழந்து பார்வையாளர்கள் அமர்ந்திருந்த தரை பிரதேசத்ததில் வீழ்ந்து சுக்கல் சுக்கலாக வெடித்து சிதறியதில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 50 க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் புகழ்பெற்ற ஹாலிவூட் விமான ஸ்டண்ட் ஓட்டுனரும் பலியாகியுள்ளார். இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட Era- P-51 எனும் விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளது. இயந்திர கோளாறே விமான விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரான்ஸ்டான் எனும் இடத்தில் விமானம் விபத்துக்குள்ளானது…
-
- 1 reply
- 569 views
-
-
சென்னை, செப். 17- கனிமொழிக்கு ஜாமீன் கோரும் மனு அரசியல் நோக்கத்தோடு நடத்தப்படுகின்ற வழக்காகவே தெரிகிறது என்று கருணாநிதி கூறியுள்ளார். இதுகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்து விசாரணையில் சட்ட விவகாரம் சம்மந்தமாக தொடர்புடையவர்கள் எனப் பலர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். பல மாதங்கள் ஆகியும் கூட அது சம்பந்தமாக விசாரணை எதுவும் நடைபெறாமல் கைதானவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படாமல், அதற்கான வழக்கு நடைபெறுகின்ற நீதிமன்றத்தில் ஏதேதோ காரணங்களைக் கூறி காலம் கடத்தி கொண்டேயிருக்கிறார்கள். அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் கடும் கண்டனங்களைத் தெரிவித்து செய்தி வெளியிட்ட ஏடுகள் கூட, இந்த வழக்கைக் காரணம் காட்…
-
- 2 replies
- 932 views
-
-
சவூதி இளவரசர் அல்வாலிட் பின் டல்பால் பின் அப்துல் அசிஸ் அல் சவுத்திற்கு எதிரான பாலியல் வழக்கொன்றின் விசாரணையை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஸ்பெயின் நாட்டு நீதிமன்றமொன்று அந்நாட்டின் பிறிதொரு நீதிமன்றத்தின் நீதிபதிக்கு உத்தரவிட்டுள்ளது. சவூதி இளவரசரான அல் வாலிட் 2008 ஆம் ஆண்டு 20 வயது மொடல் அழகியொருவரை ஸ்பெயினின் லிபிஷா தீவுப்பகுதியில் சொகுசுப் படகொன்றினுள் வைத்து போதையூட்டி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக ஸ்பெயின் நாட்டின் நீதிமன்றமொன்றில் வழக்குத் தொடுக்கப்பட்டது. போதிய சாட்சிகள் இல்லையென்ற காரணத்தினால் அந்நாட்டு நீதிமன்றமொன்று இவ்வழக்கினை கடந்த வருடம் நிறைவு செய்தது. எனினும் தற்போது அந்நாட்டு நீதிமன்றமொன்று இவ்வழக்கை மீண்டும் விசாரணை செய்யும்படியும் இளவரச…
-
- 3 replies
- 1.2k views
-
-
சுவிஸ் வங்கியில் ராஜீவ்காந்தி பெயரில் கோடிக்கணக்கில் கறுப்பு பணம் ஆந்திர மாநிலம் குண் டூர் மாவட்டம் கொத்தபேட்டையில் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் ஊழலுக்கு எதிரான பேரணி நடந்தது. இதில் கட்சியின் மாநில தலைவர் நாராயணா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- இந்திய தலைவர்கள் பலர் ஊழல் மூலம் கொள்ளையடித்த பல லட்சம் கோடி கறுப்பு பணத்தை சுவிஸ் வங்கிகளில் போட்டு வைத்துள்ளனர். அதில் ராஜீவ்காந்தி பெயரில் ரூ.1.9 லட்சம் கோடி கறுப்பு பணம் போடப்பட்டுள்ளது. இந்த விவரம் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு நன்றாகத் தெரியும். இதை வெளியிட்டால் தனது பதவிக்கு ஆபத்து வந்துவிடும் என்று அவர் கருதுகிறார். சில சுவிஸ் வங்கிகள் தாமாக முன்வந்து கறுப்பு பணத்தை எடுத்துச் செல்லுங்கள் எ…
-
- 0 replies
- 426 views
-
-
அமெரிக்க நாசா விண்வெளி மையத்திற்குச் சொந்தமான ஐந்து தொன் எடையுள்ள 20 ஆண்டுகள் பழமையான செயற்கைக் கோள் ஒன்று அதன் கட்டுப்பாட்டை இழந்து பூமியை நோக்கி நெருங்கி வரும் நிலையில்.. அது பூமியின் வாயு மண்டத்தில் பிரவேசிக்கும் போது.. துண்டுகளாகி.. பூமியில் மக்கள் வாழும் இடங்கள் உட்பட எங்கு வேண்டுமானாலும் விழும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நிகழ்வு இம்மாதம் (செப்டம்பர்).. வரும் 24ம் திகதி நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக.. மக்கள் அதிகம் பரந்து வாழும்.. மத்திய கோட்டுக்கு.. வடக்குத்.. தெற்காக.. 57 பாகை விஸ்தீரணம் கொண்ட பூமியின் எப்பகுதியிலும் இது விழக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை நாசா உலகிற்கு வழங்கியுள்ளது. இதற்கிடையே.. இந்த செயற்கை…
-
- 4 replies
- 1.6k views
-
-
இந்திய பதுங்குழிகளை சேதப்படுத்திய சீன ராணுவம் September 14, 2011 இந்திய எல்லைக்குள் சீன ராணுவப்படையினர் அத்துமீறி நுழைந்து இந்திய-சீன எல்லைப்பகுதியில் உள்ள இந்திய ராணுவ முகாமினை சேதப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. இந்திய-திபெத் எல்லை கட்டுப்பாட்டுப்பகுதியில் உள்ள லே பகுதியிலிருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள நையோபா செக்டரர் எல்லைப்பகுதி இந்திய-திபெத் மற்றும் சீன எல்லைப்பகுதியாகும். இந்த எல்லையில் சீனா ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்துள்ளனர். மேலும் இங்குள்ள மிகவும் பழமையான இந்திய எல்லையை கண்காணிக்கும் முகாம்கள் மற்றும் பதுங்கு குழிகள் உள்ளன. இவற்றினை சேதப்படுத்தியுள்ளனர். இது குறித்து வடக்குப்பகுதியின் உதாம்பூரைச் சேர்ந்த ராணுவ செய்தி தொடர்பாளர்…
-
- 2 replies
- 769 views
-
-
உள்ளாட்சி தேர்தலில் திமுக- அதிமுக இரண்டு பெரிய கட்சிகளும் தனித்து போட்டியிடும் என்று அறிவித்துவிட்ட நிலையில் காங்கிரஸ் கட்சியின் நிலை என்ன என்பது குறித்து நிர்வாகிகளுடன் கே.வி.தங்கபாலு இன்று சத்யமூர்த்திபவனில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குட்டத்தில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திருநாவுக்கரசர், சோ. பாலகிருஷ்ணன், யசோதா, ஜே.ஆருண், யுவராஜ், உடபட பலர் கலந்துகொண்டனர். ஆலோசனையின் முடிவில், உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்துப்போட்டியிடுகிறது என்று தங்கபாலு அறிவித்தார். அவர் மேலும், ‘’செப்டம்பர் 18ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. மனுவை ஒப்படைக்க 20ம் தேதி கடைசி நாள் ஆகும். மேயர் பதவி விருப்ப மனு கட்டணம் -ரூ.10ஆயிரம், நகராட்ச…
-
- 1 reply
- 563 views
-
-
ஈராக்கிற்கு போர் விமானங்களை விற்பனை செய்கின்றது அமெரிக்கா _ வீரகேசரி இணையம் 9/16/2011 11:01:12 AM Share அமெரிக்காவானது ஈராக்கிற்கு எப் 16 வகை போர் விமானங்கள் 18 ஐ விற்பனை செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்படி தகவலானது வெள்ளைமாளிகை அதிகாரியொருவர் மூலமே ஊடகங்களுக்கு கசிந்துள்ளது. ஈராக் மொத்தமாக 32 விமானங்களைக் கொள்வனவு செய்யவுள்ளதாகவும் அதன் முதற்கட்டமாக அமெரிக்கா 18 விமானங்களை விற்பனை செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இக் கொடுக்கல் வாங்கல்களின் மொத்தப் பெறுமதி 4.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. எனினும் இது தொடர்பில் இறுதி முடிவு இதுவரை எட்டப்படவில்லையெனவும் கூடிய விரைவில் இது தொடர்பான …
-
- 0 replies
- 379 views
- 1 follower
-
-
சோனியா சொன்னதைத்தான் நாங்களும் சொல்கிறோம்! ஆக்கம்: ப.திருமாவேலன் சென்னை - டெல்லி - குமாரபாளையம் - டெல்லி - கோவை - சென்னை - ஆத்தூர்... நித்தமும் வேறு வேறு ஊர்கள். மூன்று தமிழர்களின் உயிர் காப்பு, முல்லைப் பெரியாறுக்காக உண்ணாவிரதம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு, போர்க் குற்ற விசாரணை... வைகோவுக்கு நித்தம் நித்தம் யுத்தம்தான்! ''ஜெயலலிதா, தனது 100 நாட்கள் ஆட்சியைச் சாதனை விழாவாகக் கொண்டாடிவிட்டார். இந்த 100 நாட்கள்பற்றிய உங்களது கருத்து என்ன?'' ''இலங்கையைப் போர்க் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியது, இலங்கை மீது பொருளாதாரத் தடை வேண்டும் எனக் கேட்டது, கச்சத் தீவை மீட்க வேண்டும் என்றது, மூன்று தமிழர்களின் உயிர் காக்க தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்…
-
- 1 reply
- 705 views
-
-
முதலீட்டு வங்கியாளர் ஒருவர் காரணமாக இரண்டு பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுவிஸ் வங்கி ஒன்று அறிவித்தது. அனுமதி பெறப்படாது முதலீடுகளை மேற்கொண்ட தமது வங்கியின் முதலீட்டு வங்கியாளர் ஒருவர் காரணமாக, இரண்டு பில்லியன் டொலர் நட்டம் ஏற்பட்டுள்ளதாக சுவிற்சர்லாந்தின் UBS வங்கி அறிவித்தது. இந்த விடயம் தொடர்பாகத் தற்போது விசாரணை இடம்பெறுவதாகவும், இழப்புக்களின் அளவு மாற்றமடையலாமெனவும் வங்கி அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது. ஆனால், வங்கியில் முதலிட்டுள்ள வாடிக்கையாளர்களின் கணக்குகள் பாதிக்கப்படவில்லையென UBS குறிப்பிட்டது. இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டிற்கான வங்கியின் நிதி நிலை நட்டமாக அமையலாமெனவும் அது தெரிவிக்கிறது. இந்த அறிவிப்பு வெளியாகியதைத் தொடர்ந்து, வங்கி…
-
- 0 replies
- 649 views
-
-
பேரறிஞர் அண்ணா 103வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இன்று இரவு (15.9.2011) மதிமுக திறந்தவெளி மாநாடு நெல்லை சீமையில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 10 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இம்மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத், பேராசிரியர் பெரியார்தாசன் உட்பட பலர் இந்த மாநாட்டில் சிறைப்புரையாற்றிக்கொண்டிருக்கின்றனர். இந்த மாநாட்டில் மூன்று தமிழர்களின் உயிர்காக்க, ஊழலற்ற உள்ளாட்சி நிர்வாகத்திற்கு உறுதி, முல்லைப்பெரியாறு அணை, தமிழீழமே தீர்வு, கட்சத்தீவு மீட்பது, விலைவாசி கட்டுப்பாடு, கூடன்குளம் அணு உலையை மூடவேண்டும் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1.தாய்தமிழகத்தில் தரணி எங்கும் வாழுகின்ற தமிழர்க…
-
- 0 replies
- 748 views
-
-
ஐ.நாவில் பாலஸ்தீனத்திற்கு நிரந்த உறுப்புரிமை வருகிறது பிரேரணை ஐ.நாவில் பாலஸ்தீனத்திற்கு நிரந்தர உறுப்புரிமை வழங்கும் பிரேரணை வரும் 23ம் திகதி ஐ.நாவுக்கு வருகிறது. இந்தப் பிரேரணையை சமர்ப்பிக்கும் முயற்சியில் பின் வாங்குவதற்கு இனி யாதொரு முகாந்திரமும் இல்லை என்று பாலஸ்தீன தலைவர் முகமட் அபாஸ் தெரிவித்தார். இனி ஐ.நாவில் உறுப்புரிமை பெறும் நாடுகளில் பாலஸ்தீனாவும் ஒன்று என்ற பிரேரணை இஸ்ரேலை தாண்டி அப்பால் சென்றுள்ளது. இந்தப் பிரேரணை அமெரிக்கா – ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பாரிய சிக்கலை கொடுத்தாலும் இந்த விவகாரத்தில் ஒரு தீர்வு காண வேண்டிய கடைசி நிலை வந்துவிட்டமை கவனிக்கத்தக்கது. பாலஸ்தீனர்கள் ஐ.நா சபையில் தீர்மானத்தை கொண்டுவர முன்னர் இஸ்ரேலுடன் பே…
-
- 0 replies
- 461 views
-
-
தற்கொடைத்தாக்குதலுக்கு தயாரான அமெரிக்க விமானப்படை வீரர்கள் முதலில் இரட்டைக்கோபுரம் மீதான தாக்குதல் ஒரு தனிப்பட்ட விமானத்தின் விமானியின் தவறால் ஏற்பட்டது என நம்பப்பட்டு பின்னர் அது இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதல் என உணரப்பட்டது. அந்த வேளையில் மேலும் விமானங்கள் கடத்தப்பட்டு அமெரிக்காவின் தலைநகரை இலக்கு வைத்து தாக்குதல் நடாத்தலாம் என அறியப்பட்டபொழுது, அமெரிக்கா போர்விமானங்கள் அந்த விமானங்களுடன் மோதி தற்கொடைத்தாக்குதலையும் நடாத்த தயாராகி இருந்தன என இப்பொழுது தகவல்கள் வெளியாகியுள்ளன. விமானத்திற்கு தேவையான குண்டுகளை பொருத்த நேரம் காணாமல் இருந்ததாகவும், அவை பொருத்திய விமானங்கள் அடுத்தகட்டமாக பறக்க இருந்தவேளையில் ஒருகட்ட விமானிகள் தமது போர் விமானங்களை கட…
-
- 33 replies
- 1.7k views
-
-
லிபியாவில் தலைமறைவாக வாழும் தலைவர் கேணல் கடாபியின் மகன்மாரில் ஒருவரான சாடி கடாபி, லண்டனிலுள்ள தனது குடும்பத்துக்கு சொந்தமான 11 மில்லியன் ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான ஆடம்பர இல்லத்தில் வாழ்ந்தபோது விலைமாதுகளுக்கும் போதைப் பொருட்களுக்கும் பணத்தை வாரி இறைத்தமை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. லண்டனில் சாடி கடாபி (38 வயது) தங்கியிருந்தபோது அவருக்கு மெய்ப்பாதுகாவலராக செயற்பட்ட ஸ்டீபன் பெல்லால் öதரிவிக்கப்பட்ட இத்தகவல்களை பிரித்தானிய "த சண்' ஊடகம் புதன்கிழமை வெளியிட்டுள்ளது. சாடிக்கு பாதுகாவலை வழங்குவதற்குஸ்டீபன் பெல்லிற்கு (33 வயது) ஒருநாளுக்கு 300 ஸ்ரேலிங் பவுண் கட்டணம் செலுத்தப்பட்டு வந்துள்ளது. சாடி கடாபி மிக மோசமான ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்ததாக தெரிவி…
-
- 0 replies
- 485 views
-
-
வாஷிங்டன்: வரும் 2014-ம் ஆண்டு நடக்கவிருக்கும் பிரதமர் தேர்தலில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி- குஜராத் முதல்வர் நரேந்திர மோடி போட்டியிடுவது கிட்டத் தட்ட உறுதியாகிவிட்டது. இதில் மோடி பிரதமராக வேண்டும் என்பதே அமெரிக்காவின் விருப்பம் என அமெரிக்க நாடாளுமன்ற அறிக்கை தெரிவிக்கிறது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஆய்வுக் குழு இந்தியா தொடர்பான பல்வேறு அறிக்கைகளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில் 2014-ம் ஆண்டு பிரதமர் தேர்தல் பற்றியும் குறிப்பிட்டுள்ளது. அந்த அறிக்கையில், "இந்தியாவில் சிறந்த நிர்வாகம், ஆட்சி புரிதல், வளர்ச்சி ஆகியவற்றுக்கு மிகச் சிறந்த உதாரணமாக குஜராத் மாநிலமும், அதன் முதல்வர் நரேந்திர மோடியும் திகழ்கின்றனர். மோடியின் ஆட்சியின் கீ…
-
- 4 replies
- 834 views
-
-
ஆப்கானிஸ்தானில் யுஎஸ் தூதரகம், நேடோ தலைமையகம் மீது தலிபான்கள் பயங்கர தாக்குதல் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று தலிபான்கள் அமெரிக்கத் தூதரகம், நேடோ படையினரின் தலைமையகம் உள்ளிட்ட அதிகபட்ச பாதுகாப்பு கொண்ட கட்டடங்கள் மீது பயங்கர தாக்குதல்களை நடத்தினர். அமெரிக்க உளவுப் பிரிவான சிஐஏவின் அலுவலகம், சில ஐரோப்பிய நாடுகளின் தூதரக கட்டடங்கள், ஆப்கானிஸ்தான் ராணுவ தலைமையகம் மீதும் தாக்குதல் நடத்தினர். ஏராளமான தலிபான் தற்கொலைப் படையினர் உடலில் வெடிகுண்டுகளுடன் இந்தக் கட்டடங்களில் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து வந்த தலிபான்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியும், வாகனங்களின் வெடிகுண்டுகளை ஏற்றி வந்தும் தாக்குதல் நடத்தினர். பகல் 1 மணியளலில் ஆரம…
-
- 3 replies
- 855 views
-
-
லிபியாவில் தலைமறைவாக வாழும் தலைவர் கேணல் மும்மர் கடாபி அந்நாட்டில் தற்போது இடம்பெற்று வரும் புரட்சிக்கு பின்னணியில் வெளிநாடுகளின் செல்வாக்கு இருப்பதாக திங்கட்கிழமை வெளியிடப்பட்ட செய்தியில் குற்றஞ்சாட்டியுள்ளார். கடாபிக்கு ஆதரவான படையினரால் பிரதான எண்ணெய் தொழிற்றுறை மீது இரட்டைத் தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கு சில மணித்தியாலங்களின் முன் சிரிய "அல்ராய்' தொலைக்காட்சியில் தன்னால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே கடாபி இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார். எதிர்க்கட்சி படையினரை தேசத் துரோகிகள் என விமர்சித்த கடாபி, அவர்கள் லிபியாவின் எண்ணெய் வளங்களை அபகரிக்க முயற்சிக்கும் வெளிநாட்டு அக்கறைகளுக்கு ஏற்ப செயற்படுவதாக கூறினார். ""தேசத் துரோகிகள் விரும்புவது போன்று நாங்கள் லிபி…
-
- 1 reply
- 639 views
-
-
சிறு பொறி இருந்தாலே பற்றிக் கொள்ளும் தென் மாவட்டங்களில், இப்போது பெரு நெருப்பே கொளுத்தி விடப்பட்டிருக்கிறது. பரமக்குடியில் ஏற்பட்டுள்ள கலவரத்தால் தமிழகமே பரபரப்பில் இருக்க, “நீண்ட நாள் கோபத்தின் வெளிப்பாடுதான் இந்த துப்பாக்கிச் சூடு’’ என கலவரத்திற்கு பின்னணி சொல்லிப் பதறுகிறார்கள். தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளையொட்டி (11-ம் தேதி) அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வழக்கம் போல் இந்த ஆண்டும் தலித் மக்கள் தயாராயினர். இது தொடர்பான பிரச்னைகள் இந்த மாத ஆரம்பத்திலேயே ஏற்பட்டது. மதுரை உத்தப்புரத்தில் இம்மானுவேல் சேகரன் குருபூஜை சம்பந்தமான ஃபிளக்ஸ் போர்டு ஒன்றை தலித் மக்கள் வைக்க, அதில் தங்கள் மனதைப் புண்படுத்தும் வாசகங்கள் உள்ளதாக இன்னொரு பிரிவினர் அதற்கு எதிர்…
-
- 0 replies
- 778 views
-
-
அரக்கோணம் அருகே ரயில்கள் மோதல்-15 பேர் பலி; ஏராளமானோர் படுகாயம் புதன்கிழமை, செப்டம்பர் 14, 2011, 0:10 அரக்கோணம்: அரக்கோணம் அருகே இரு ரயில்கள் மோதிக் கொண்டதில் 15 பேர் பலியாகியுள்ளனர். 50க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில் இந்த விபத்து நடந்தது. அரக்கோணத்தில் இருந்து காட்பாடி சென்ற பயணிகள் ரயில் சித்தேரி ரயில் நிலையம் அருகே சிக்னலுக்காக நின்று கொண்டிருந்தது. அப்போது மருவத்தூரில் இருந்து வேலூர் கண்டோன்மெண்ட் சென்ற ரயில் நின்று கொண்டிருந்த ரயிலின் மீது மோதியது. இதில் காட்பாடி ரயிலின் இரு பெட்டிகளும் வேலூர் ரயிலின் ஒரு பெட்டியும் நசுங்கி கவிழ்ந்தன. இந்த விபத்தில் ஏராளமானோர் பலியாகிவிட்டதாக அஞ்சப்படுகிறது…
-
- 9 replies
- 1.1k views
-
-
கனடா நாட்டில் ஒண்டோரியாவிற்கு தெற்கே சார்னியா என்ற இடத்தில் புனித கிளார் ஆறு உள்ளது. இதில் திங்கள் பிற்பகல் சுமார் 2.45 மணிக்கு மூன்று பேர் முழ்கினார்கள். இதில் இரண்டு பேர்கள் நீச்சலடித்து தப்பித்தனர். ஆனால் மூன்றாம் நபரைக் காணவில்லை. தகவல் கிடைத்தவுடன் கனடா மற்றும் அமெரிக்காவிலிருந்து தீயணைப்புப்படை,போலீஸ் , கடலோரக் காவல் படையினர் மற்றும் மூழ்கு நீச்சல் பயிற்சி பெற்றவர்கள் ஆகியோர் சூரியன் மறையும் மாலை நேரம் வரை காணாமல் போன நபரை தேடினர். பின்னர் ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்தது. ஆனால் முழ்கிய நபர் கிடைக்கவில்லை. தொடர்ந்து தீவிரமாக தேடி வருவதாக தீயணைப்புப் படை வீரர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே கிளார் ஆற்றின் கரையினில் ஏதாவது பிணம் கரை ஒத…
-
- 0 replies
- 500 views
-
-
கனடவில் மின்னணு பாதுகாப்பு ஏற்பாடுகள் அடங்கிய இ பாஸ்போர்ட்டுகள் அனைத்து கனடிய மக்களுக்கும் வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் மாநாடு மாண்ட்ரீல் தலைமையகத்தில் நடந்தது. இதில் பேசிய கனடாவின் தலைமை பாஸ்போர்ட் நிர்வாக அதிகாரி திரு.கிறிஸ்டின் டெஸ்லோகஸ்கூறியபோது, "அடுத்த ஆண்டு இறுதிக்குள் இ பாஸ்போர்ட் முழுமையாக வழங்கப்பட்டுவிடும்" என்று உறுதியளித்தார். ஆனால், கனடாவில் பாதுகாப்பு நிபுணர்கள் இந்த இ பாஸ்போர்ட்டில் அனைத்து விதமான பாதுகாப்புகள் ஏற்பாடுகள் இருக்காது என அச்சுறுத்தியுள்ளனர். இ பாஸ்போர்ட் மாதிரிப் படம் பார்க்க.... http://www.thedipaar.com/news/news.php?id=33789
-
- 0 replies
- 451 views
-
-
இவ்வாண்டின் பிரபஞ்ச அழகியாக அங்கோலாவின் கறுப்பின பெண் தெரிவு _ 9/13/2011 1:51:07 PM வீரகேசரி இணையம் நடப்பு ஆண்டின் பிரபஞ்ச அழகி மகுடத்தை அங்கோலா நாட்டைச் சேர்ந்த லைலா லோபஸ் வென்றார். பிரேசில் நாட்டில் சா பாவ்லோ நகரில் நடைபெற்ற பிரபஞ்ச அழகியைத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான இறுதிச் சுற்றில் சீனா, பிலிப்பைன்ஸ், உக்ரைம், அங்கோலா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், போர்ச்சுக்கல் உள்ளிட்ட 10 நாட்டு அழகிகள் தேர்வாகினர். இவர்களில் அங்கோலா நாட்டைச் சேர்ந்த லைலா லோபஸ் உட்பட 5 அழகிகள் பட்டத்துக்குரிய சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதில் லைலா லோபஸ் வெற்றி பெற்று உலக அழகியாக மகுடம் சூட்டப்பட்டார். கடந்த ஆண்டு பட்டத்தை வென்ற மெக்சிகோ அழகி நவரத்தே, அவருக்கு மகுடம் …
-
- 6 replies
- 1k views
-
-
பிரான்ஸ் அணு உலையில் குண்டு வெடிப்பு பிரான்ஸ் நாட்டில் உள்ள அணு உலையில் இன்று குண்டு வெடித்தது. தெற்கு பிரான்ஸ் பகுதியில் உள்ள மார்குலே அணு உலையில் இன்று குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதனால் ஏற்பட்ட தீ விபத்தில் பணியாளர் ஒருவர் பலியானார். 3 பேர் காயம் அடைந்தனர். இதனால் கதிர்வீச்சு அபாயம் ஏதும் ஏற்படவில்லை என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். http://www.dinamalar.com/News_Detail.asp?Id=311920
-
- 1 reply
- 694 views
-
-
எகிப்தில் இஸ்ரேல் தூதரகம் தகர்ப்பு: அவசரநிலை பிரகடனம்! எகிப்து தலைநகர் கெய்ரோவிலுள்ள இஸ்ரேல் தூதரகத்தைப் பொதுமக்கள் அடித்துத் தகர்த்தனர். இதனைத் தொடர்ந்து கலவரம் ஏற்பட்டத்தையடுத்து, எகிப்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவில் இஸ்ரேலின் தூதரக அலுவலகம் உள்ளது. ஹோஸ்னி முபாரக் அதிபராக இருந்தவரை இஸ்ரேலுக்கும், எகிப்துக்கும் இடையே நல்லுறவு இருந்து வந்தது. முபாரக்கிற்கு எதிராக மக்கள் கிளர்ச்சி ஏற்பட்டு, ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் இஸ்ரேலுடனான உறவுக்கு எதிராக பொதுமக்கள் அவ்வபோது கிளர்ச்சி செய்து வந்தனர். இந்நிலையில், கடந்த மாதம் எகிப்து ஆயுத குழுக்களுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அதில் எகிப்தைச் சேர்ந்த 5 பே…
-
- 1 reply
- 573 views
-