உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26673 topics in this forum
-
இவ்வாண்டின் பிரபஞ்ச அழகியாக அங்கோலாவின் கறுப்பின பெண் தெரிவு _ 9/13/2011 1:51:07 PM வீரகேசரி இணையம் நடப்பு ஆண்டின் பிரபஞ்ச அழகி மகுடத்தை அங்கோலா நாட்டைச் சேர்ந்த லைலா லோபஸ் வென்றார். பிரேசில் நாட்டில் சா பாவ்லோ நகரில் நடைபெற்ற பிரபஞ்ச அழகியைத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான இறுதிச் சுற்றில் சீனா, பிலிப்பைன்ஸ், உக்ரைம், அங்கோலா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், போர்ச்சுக்கல் உள்ளிட்ட 10 நாட்டு அழகிகள் தேர்வாகினர். இவர்களில் அங்கோலா நாட்டைச் சேர்ந்த லைலா லோபஸ் உட்பட 5 அழகிகள் பட்டத்துக்குரிய சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதில் லைலா லோபஸ் வெற்றி பெற்று உலக அழகியாக மகுடம் சூட்டப்பட்டார். கடந்த ஆண்டு பட்டத்தை வென்ற மெக்சிகோ அழகி நவரத்தே, அவருக்கு மகுடம் …
-
- 6 replies
- 1k views
-
-
பிரான்ஸ் அணு உலையில் குண்டு வெடிப்பு பிரான்ஸ் நாட்டில் உள்ள அணு உலையில் இன்று குண்டு வெடித்தது. தெற்கு பிரான்ஸ் பகுதியில் உள்ள மார்குலே அணு உலையில் இன்று குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதனால் ஏற்பட்ட தீ விபத்தில் பணியாளர் ஒருவர் பலியானார். 3 பேர் காயம் அடைந்தனர். இதனால் கதிர்வீச்சு அபாயம் ஏதும் ஏற்படவில்லை என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். http://www.dinamalar.com/News_Detail.asp?Id=311920
-
- 1 reply
- 694 views
-
-
எகிப்தில் இஸ்ரேல் தூதரகம் தகர்ப்பு: அவசரநிலை பிரகடனம்! எகிப்து தலைநகர் கெய்ரோவிலுள்ள இஸ்ரேல் தூதரகத்தைப் பொதுமக்கள் அடித்துத் தகர்த்தனர். இதனைத் தொடர்ந்து கலவரம் ஏற்பட்டத்தையடுத்து, எகிப்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவில் இஸ்ரேலின் தூதரக அலுவலகம் உள்ளது. ஹோஸ்னி முபாரக் அதிபராக இருந்தவரை இஸ்ரேலுக்கும், எகிப்துக்கும் இடையே நல்லுறவு இருந்து வந்தது. முபாரக்கிற்கு எதிராக மக்கள் கிளர்ச்சி ஏற்பட்டு, ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் இஸ்ரேலுடனான உறவுக்கு எதிராக பொதுமக்கள் அவ்வபோது கிளர்ச்சி செய்து வந்தனர். இந்நிலையில், கடந்த மாதம் எகிப்து ஆயுத குழுக்களுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அதில் எகிப்தைச் சேர்ந்த 5 பே…
-
- 1 reply
- 573 views
-
-
அலங்கோலமான ஆங்கில ஆர்ப்பாட்டம் -சச்சிதானந்தன் சுகிர்தராஜா- ரோமாபுரி எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்துக்கொண்டிருந்தான் என்று பாடப்புத்தகங்களில் படித் திருப்பீர்கள். லண்டனும் பார்மீங்கமும் தீக்கிரையானபோது நான் அந்த அரசன் போல் இசைக்கருவியில் மெனக்கெடவில்லை. எல்லாரையும் போல் ஆங்கிலக் கலவரத்தைத் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தேன். இவ்வளவுக்கும் நான் வசிக்கும் இடத்திலிருந்து பத்துப் பேருந்து நிற்குமிடங்களைத் தாண்டியிருக்கும் நகர் மையக் கடைகள் சூறையாடப்பட்டுக்கொண்டிருந்தன. என்னுடைய இங்கிலாந்து வாழ் நாள் அனுபவத்தில் இது நான் பார்க்கும் இரண்டாவது பெரிய கலவரம். முதலாவது 1981இல் நடந்தது. இவை இரண்டுக்குமிடையே சில இணைவுகளும் வேறுபாடுகளும் உண்டு.…
-
- 0 replies
- 831 views
-
-
புரட்டாதி 7 ஆம் தேதி அன்று பிரித்தானியா சனல் 4-ல் ஒலிபரப்பாகிய இந்த காணொளியை அதிகமானவர்கள் பார்த்து இருப்பீர்கள், இருப்பினும் பார்க்காதவர்கள் இதைப் பார்வையிட இங்கே இணைக்கிறேன். பின் லாடனைச் சுட்டுக் கொல்லும் அந்த நொடியில் நேரடியாக அந்த சம்பவத்தைக் கமரா இணைப்பில் பார்த்துக் கொண்டு இருந்தவர்களின் அதிர்ச்சியான நிலையா அல்லது அதற்கு முன்பா? http://www.channel4....oot-to-kill/4od
-
- 4 replies
- 1.5k views
-
-
ஆப்கானிஸ்த்தானில் அமெரிக்கப் படைகள் மீது பாரிய தற்கொலைத் தாக்குதல் இரட்டைக் கோஉரத் தாக்குதலின் பத்தாவது நினைவுநாளான இன்று ஆப்கானிஸ்த்தானிலுள்ள அமெரிக்க ஆப்கானியக் கூட்டுப்ப்டை முகாம் ஒன்றின்மீது இஸ்லாமியப் பயங்கரவாதிகள் பார ஊர்தி ஒன்றின் மூலம் தற்கொலைத் தாக்குதல் நடத்தியுள்ளனர். சுமார் 80 அமெரிக்கப் போர்வீரர்கள் இத்தாக்குதலில் காயமடைந்துள்ளதாக அமெரிக்கப் பேச்சாளர் தெரிவித்திருக்கிறார். இதாக்குதலில் இரு ஆப்கானிய சிவிலியன்களும் கொல்லப்பட்டிருக்கின்றனர். வோர்டோக்க் மாகாணத்தில் அமைந்திருக்கின்ற முகாமிலேயே இத்தாகுதல் நடைபெற்றிருக்கிறது. காயமடைந்தவர்களில் எவருக்கும் ஆஅத்தான காயங்கள் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, இன்னொரு மாகாணத்திலும் அமெரிக்கப் பட…
-
- 1 reply
- 715 views
-
-
தமிழகத்தில் துப்பாக்கிச் சூடு மூன்று பேர் பலி. 11 செப்டம்பர் 2011 பரமக்குடியில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பலியானர்களின் எண்ணிக்கை நான்காக உயந்துள்ளது. சம்பவ இடத்தில் மூவர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் மதுரை மருத்துவமனையில் சிறிது நேரத்தின் முன்னர் உயிரிழந்தார். இதனால் கடும் பதட்டம் நிலவுகிறது. ஆங்காங்கே பேருந்துகள், வணிக நிறுவனங்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதால் தென் மாவட்டங்கள் முழுக்க கடைகள் அடைக்கப்பட்டு பேருந்துகள் ஓட வில்லை. தென் மாவட்டங்களில் கலவர அபாயம் - முழு பதட்டம். இமானுவேல் சேகரனின் நினைவு நாளான இன்று பரமக்குடியிலும் மதுரையிலும் எழுந்த கலவரத்தில் மூன்று தலித்துக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் …
-
- 0 replies
- 686 views
-
-
பிரசுரித்தவர்: admin September 11, 2011 சென்னை: ரஜினி, சிவாஜி, ஏவிஎம், ராஜ்கபூர் போன்றவர்களின் குடும்பங்கள் சினிமாவில் இருக்கின்றன. ஆனால் கருணாநிதி குடும்பத்திடமல்லவா சினிமா சிக்கிக் கிடந்தது, என்றார் இயக்குநர் சீமான். நாம் தமிழர் கட்சியின் சார்பில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழா கூட்டத்தில் பேசிய சீமான், “முன்னாள் முதல்வர் கருணாநிதி குடும்பத்தினர் எந்த அளவு சினிமா துறையை சீரழித்தார்கள் என்பதை கடந்த சில மாதங்களாக, இப்போதைய அரசு வெளிச்சம்போட்டுக் காட்டிவருகிறது. இன்றைக்கு சன் பிக்சர்ஸ் சக்சேனா, அய்யப்பன் ஆகியோர், போலீசார் அடிச்சிட்டாங்க என்று கூறி டிவியில் அழுகிறார்களே… இவர்கள் ஆட்சிக் காலத்தில் இவர்களிடம் மாட்டிக் கொண்டு விழித்தவர்…
-
- 1 reply
- 1.1k views
-
-
உள்ளாடை போடாமல் வந்த கொலம்பிய அழகி பிரேஸிலில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மிஸ் யுனிவர்ஸ் - 2011 போட்டிக்கு, கொலம்பியா சார்பில் பங்கேற்ற மொடல் அழகி, உள்ளாடை எதுவும் அணியாமல் வந்து அதிர வைத்துள்ளார். பிரேஸிலில் உள்ள சாபவ்லோ நகரில் 2011ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி (பிரபஞ்ச அழகி போட்டி) நடைபெற்று வருகிறது. இதற்கான, முதல் சுற்றுப்போட்டி நேற்று நடந்தது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அழகிகள் மேடையில் தோன்றினார்கள். அதில், கொலம்பிய நாட்டு அழகி கேடாலினா ரொபாயோ (வயது - 22). இவர் குட்டைப் பாவாடை அணிந்திருந்த அதேவேளை உள்ளாடை எதுவும் அணியவில்லை. இது போட்டியைக் காண வந்தவர்களையும், போட்டி நடுவர் களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால் போட்டிக்கு வந்த அழகி அ…
-
- 2 replies
- 1.9k views
-
-
தூக்கு தண்டனை கைதிகளான பேரறிவாளன்,சாந்தன்,முருகன், மூவரின் உயிர் காக்க சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் பிரமாண்ட கூட்டம் சென்னை எம்.ஜி.ஆர் நகரில் நாம் தமிழர் இயக்கம் சீமான் தலைமையில் நடந்தது. இதில் சீமான்,இயக்குனர் மணிவண்ணன்,பேராசிரியர் தீரன்,தடாசந்திரசேகர் மற்றும் பலர் கலந்துகொண்டு உணர்ச்சி பொங்க பேசினார்கள் கூட்டத்தில் பேசிய அனைவரும் மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றும், காங்கிரஸ் கட்சி மற்றும் தினமலர் நாளிதழை விமர்சித்தும் பேசினார்கள். இயக்குனர் மணிவண்ணன் பேசும் போது " நான் இறந்த பின்னர் என்னுடைய உடலை நாம் தமிழர் கட்சி சீமானிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், அவர் தான் என்னுடைய இறுதிச் சடங்கை செய்ய …
-
- 2 replies
- 1.7k views
-
-
சட்டசபையில் இன்று போக்குவரத்து துறை மானியத்தின் மீது நடந்த விவாதத்துக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பதில் அளித்தார். அப்போது தி.மு.க. ஆட்சியின் போது போக்கு வரத்து துறையில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகவும், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பல முறைகேடுகளை செய்து இருப்பதாகவும் கூறினார். அதுபற்றிய விவரங்களை புத்தகமாக அச்சடித்து உறுப்பினர்களுக்கு வழங்க போவதாகவும் அறிவித்தார். இதுகுறித்து சபாநாயகர் ஜெயக்குமார் பேசும்போது, இந்த புத்தகங்களை பத்திரிகையாளர்களுக்கும் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். குணசேகரன் (இந்திய. கம்யூ.), இந்த ஊழல் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். அதற்கான அறிவிப்பை முதலமைச்சர் இப்போதே வெளியிட வேண்டும் என்று வலியுறுத்த…
-
- 0 replies
- 826 views
-
-
[Wednesday, 2011-09-07 12:42:48] ராஜீவ் காந்தியின் சிலைகளுக்குப் பலத்த பாதுகாப்பு அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள ராஜீவ் காந்தி சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை தூக்கில் போடக் கூடாது என்று பல்வேறு கட்சிகள், அமைப்புகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இவர்களது போராட்டம் வரலாறு காணாத வகையில் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து தமிழக அரசு சட்டசபையில் மூவருக்கும் விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையைக் குறைக்க வேண்டும் என்று கோரி தீர்மானம் நிறைவேற்றியது. சென்னை உயர்நீதிமன்றமும் இடைக்காலத் …
-
- 2 replies
- 916 views
-
-
புதுதில்லி உயநீதிமன்றத்தில் குண்டு வெடிப்பு இரண்டு பேர் பலி. 07 செப்டம்பர் 2011 பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த புதுதில்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் ஐந்நாம் நுழைவாயிலில் இன்று காலை 10-17 மணிக்கு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியார்கள், வழக்கு தொடர்புடையோர் நீதிமன்றத்திற்கு வந்த நிலையில் இந்த குண்டு வெடித்துள்ளது இந்த குண்டு வெடிப்பின் காரணமாக சுமார் 25 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று தெரிகிறது. இந்த குண்டு வெடிப்பில் இரண்டு பேர் மரணித்திருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் இந்த குண்டு வெடிப்பிற்கு எந்த அமைப்பும் இது வரை பொறுப்பேற்க முடியாத நிலையில் மேலும் தகவல்கள் எதிர்ப்பார்க்கப்படுகின்றன. சென்ற ஏழாம…
-
- 14 replies
- 1.3k views
-
-
ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா தாக்குதலுக்குள்ளாகுமா? வரும் ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவின் இரட்டைக்கோபுர தாக்குதலின் பத்தாவது வருட நினைவுதினத்தில் அமெரிக்காவின் நியுயோர்க் மற்றும் வாசிங்க்டன் நகரங்கள் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நம்பகரமான தகவல் என்றும் ஆனால் உறுதிப்படுத்த முடியவில்லை எனவும் கூறப்படுகின்றது. மூவர் இந்த தாக்குதலில் ஈடுபடலாம் எனவும் ஒருவர் அமெரிக்க பிரசை எனவும் கூறப்படுகின்றது. இவர்களின் பெயர்கள் பொதுவான பெயர்களாக உள்ளதால் இவர்களை தேடிப்பிடிப்பது கடினமாக உள்ளது என கூறப்படுகின்றது. இந்த தாக்குதல் ஒரு கடத்தப்பட்ட வாகனம் ஒன்றின் ஊடாக நடாத்தப்படலாம் என ஊகிக்கப்படுகின்றது. ஒசாமா பின்லாடனை கொலை செய்த பொழுது அவர் இருந்த வீட்ட…
-
- 4 replies
- 832 views
-
-
ரூ.30,000 கோடி செலவில் ஒபாமாவின் வேலை வாய்ப்பு திட்டம்! வாஷிங்டன்: அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி தரும் ரூ.30 ஆயிரம் கோடி செலவிலான திட்டத்தை அந்நாட்டு அதிபர் பாரக் ஒபாமா இறுதி செய்துள்ளார். அமெரிக்க பொருளாதாரம் மிகப்பெரிய நெருக்கடியில் சிக்கியுள்ளது. கடன் தர வரிசையில் சறுக்கல், வேலையின்மை, பொருளாதார பின்னடைவு, சர்வதேச அரசியலில் ஆளுமை குறைந்தது போன்றவற்றால் அமெரிக்க மக்கள் ஒபாமாவின் தலைமை மீது நம்பிக்கை இழந்து வருகிறார்கள். வேலையில்லாத் திண்டாட்டம் இப்போது 9 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. இதை குறைக்க வேண்டும் என்று ஒபாமா மிகுந்த பிரயத்தனம் செய்துவருகிறார். அப்படி குறைத்தால் மட்டுமே அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நடக்க இருக்கும் அதிபர் தேர்தலில் தா…
-
- 4 replies
- 649 views
-
-
பயங்கர குண்டுவெடிப்பால் கலங்கிய டெல்லியை இரவில் நிலநடுக்கம் உலுக்கியது! டெல்லி: டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தால் அதிர்ந்து போயிருந்த டெல்லி மக்களுக்கு இரவில் தாக்கிய நிலநடுக்கம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று நள்ளிரவையொட்டி டெல்லியின் பல பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 4.2 ஆக பதிவாகியது. டெல்லி மட்டுமல்லாமல் அதன் துணை நகரங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி ரோடுகளுக்கும், தெருக்களுக்கும் வந்து நின்றனர். ஹரியானா மாநிலம் சோனீபட்டில் இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்தது. டெல்லி தவிர காஜியாபாத், நோய்டா, கர்கான் ஆகிய நகரங்களிலும் மக்கள் நிலநடுக்கத்தை…
-
- 1 reply
- 733 views
-
-
தமிழக காங்கிரசின் பொறுப்பு தலைவராக இருக்கும் தங்கபாலு “காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளும்” விதமாக தனது விசுவாசிகளான கல்லேரிப்பட்டி செல்வராஜ் என்பவரை சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும், எடப்பாடி கோபால் என்பவரை சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் நியமனம் செய்துள்ளார். வாசன் ஆதரவாளர்களான, சேலம் கிழக்கு மாவட்ட தலைவராக இருந்த முன்னாள் எம்.பி தேவதாஸ், மேற்கு மாவட்ட தலைவராக இருந்த ஆர்.ஆர்.சேகரன் இருவரின் ஆதரவாளர்களும் தங்கபாலுவுக்கு எதிராக பல இடங்களில் போராட்டம் நடத்திவருகிறார்கள். இதற்கிடையில், சேலம் மேற்கு மாவட்ட தலைவர் எடப்பாடி கோபால் தனக்கு கீழுள்ள பதவிகளில் உள்ள வாசன் ஆதரவாலர்களை எல்லாம் தூக்கிவிட்டு தனது விசுவாசிகளுக்கு புது பொறுப்பு கொடுக்க …
-
- 0 replies
- 768 views
-
-
புதுடில்லி: காந்தியவாதியான அன்னா ஹசாரே நாளை ( செவ்வாய்க்கிழமை) நடத்தவிருந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு வழங்கிய அனுமதியை போலீசார் ரத்து செய்து விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள ஹசாரே குழுவினர் டில்லியில் நாளை அணுக வேண்டிய விஷயங்கள் குறித்து அவசரமாக ஆலோசித்து வருகின்றனர். அனுமதியை மீறும் பட்சத்தில் டில்லியில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை எற்படும். இதனையடுத்து டில்லி நகர் முழுவதும் போலீசார் உஷாராக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அரசு நினைத்தது போல் வரைவு மசோதா : ஊழல் குற்றம் புரிவோரை தண்டிக்கும் லோக்பால் மசோதாவில் மாற்றம் செய்ய வலியுறுத்தி கடந்த ஏப்ரல் மாதம் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் இருந்தது நாடு முழுவதும் மத்திய அரசுக்கு எதிரான அலையை ஏற்படுத்தியது. இதனையட…
-
- 36 replies
- 2.1k views
-
-
ரஷ்ய விமான விபத்தில் 43 பேர் பலி ரஷ்யாவில் இன்று இடம்பெற்ற விமான விபத்தொன்றில் 43 பேர் பலியாகியுள்ளனர். மொஸ்கோவிலிருந்து 250 கிலோமீற்றர் தொலைவிலுள்ள யாரோஸ்லோவ்ல் நகரிலுள்ள விமான நிலையத்திலிருந்து இவ்விமானம் புறப்பட்டு சிறிதுநேரத்தில் விபத்துக்குள்ளானதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். யாரோஸ்லாவ் ஐஸ் ஹொக்கி அணியின் அங்கத்தவர்களை ஏற்றிச்சென்ற விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளது. இவர்கள் இப்பருவகாலத்தின் முதல் போட்டிக்காக பெலாரஸுக்கு சென்றுகொண்டிருந்தாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இறந்தவர்களில் எத்தனை பேர் இவ்விளையாட்டு அணியின் அங்கத்தவர்கள் என்ற விபரம் தெரியவில்லை. விமானத்தின் சிதைவுகள் வொல்கா நதியில் கண்டுபிடிக்கப்பட்டன. இச்சம்பவத்தில் மேலும் …
-
- 1 reply
- 455 views
-
-
'தனக்கு அதிகாரம் இல்லை என்று யாரோ சொன் னதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு காலம் கடத்தாமல்... தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ள மூவரையும் காப்பாற்ற ஜெயலலிதா முன்வர வேண்டும்!'' என முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி கூறி இருக்கிறார்! இவ்வாறு கூறியதோடு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட தியாகு, புலவர் கலியபெருமாள் ஆகியோ ரின் தண்டனைகளை தான் குறைத்ததுபற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். யார் யாருக்கு இவர் தூக்குத் தண்டனைகளைக் குறைத்தார் என்பது இப்போது கேள்வி அல்ல. 'சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கு தூக்குத் தண்டனையைக் குறைக்க, இவர் அதிகாரத்தில் இருந்தபோது எதுவும் செய்யவில்லையே ஏன்?’ என்பதுதான் இப்போதைய கேள்வி. வழக்கம்போல இந்தக் கேள்விக்குப் பதில் கூறாமல் திசை திருப்பும் முயற…
-
- 0 replies
- 542 views
-
-
பாதுகாப்பாக சென்றார் கடாபி? இரண்டு வாகன தொகுதிகள், முதலாவது தொகுதியில் கூடுதலான வாகனங்கள் சென்றன. இவற்றில் அதிகளவில் பணமும் தங்கமும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இவர்களை நேட்டோ படையினர் தெரிந்தே செல்லவிட்டனர் எனக்கூறப்படுகின்றது. மேலும், இவர்களுக்கு நைஜர் நாட்டு இராணுவமும் பாதுகாப்பு வழங்கியுள்ளது. அதேவேளை கடாபி குடும்பத்தினர்கள் இன்னொரு ஆபிரிக்க நாடான புர்கினோபாசோவுக்கு செல்லலாம் எனவும் கூறப்படுகின்றது. ஆனால் இவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது உலகசட்டத்திற்கு முரணானது என சொல்லப்படுகின்றது. Large Libyan armoured convoy arrives in Niger About 250 vehicles enter country, as Libyan fighters hol…
-
- 4 replies
- 1.4k views
-
-
சோனியாவை பிரதமராக்க ஆசைப்பட்ட மு.கருணாநிதி கடந்த 2009ம் ஆண்டில், மன்மோகன் சிங்கிற்குப் பதிலாக, சோனியா பிரதமராக வேண்டும் என, தி.மு.க., விரும்பியது’ என்று, விக்கிலீக்ஸ் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த இணையதளத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2008 ஜூனில், அமெரிக்க துணைத் தூதரக அதிகாரி டென்னிஸ் டி.ஹூப்பருடன் பேசிய, தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு நெருக்கமான சிவபிரகாசம் என்பவர், “காங்கிரஸ் கட்சியின் உள்விவகாரத்தில் தி.மு.க., ஒரு போதும் தலையிடாது. இருந்தாலும், 2009ம் ஆண்டில் மன்மோகன் சிங்கை விட, சோனியாவே பிரதமராக வேண்டும் என்பதே தி.மு.க.,வின் விருப்பம். சோனியா பிரதமராக வேண்டும் என்பதையே தமிழக மக்களும் விரும்புகின்றனர். அதே நேரத்தில், …
-
- 1 reply
- 515 views
-
-
இந்தியாவின் புதிய தகவல்: விக்கிலீக்ஸில் அம்பலம் _ 2011.09.05 12.06.19 Share மும்பைத் தாக்குதல் சம்பவத்தின்போது பிரதான கர்த்தாவாக செயற்பட்ட டேவிட்கோல்மென் ஹெட்லியை நாடு கடத்தி கொண்டு வருவதற்கு இந்தியா ஆர்வம் காட்டவில்லை என இந்தியாவுக்கான அமெரிக்க தூதரிடம், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் கூறியதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. மும்பையில் 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி பயங்கரவாதத் தாக்குதல் ஒன்று இடம்பெற்றது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பிரதானமாக செயல்பட்டதாக லஷ்கர் - இ - தொய்பா அமைப்பைச் சேர்ந்த டேவிட்கோல்மென் ஹெட்லி மீது அமெரிக்க நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. 2009 ஆம் …
-
- 1 reply
- 1.3k views
-
-
சர்வதேச சட்டத்தை மதிக்காத சீனாவுடன் கைகோர்க்கும் சிறீலங்கா சர்வதேச நாடுகளின் ஆதரவைப் பெற முடியுமா..? கடாபியின் படைகளுக்கு ஆயுதங்களைக் கொடுப்பது சர்வதேச குற்றச் செயல்.. கடாபியின் விமானங்கள் சர்வதேச வான் பரப்பில் பறந்தால் சுட்டு வீழ்த்தப்படும்.. சொந்த மக்களையே கொன்ற கடாபி சர்வதேச போர்க்குற்ற நீதிமன்று கொண்டுவரப்பட வேண்டிய குற்றவாளி.. அவருடன் வர்த்தகம் செய்வது குற்றச் செயல்.. அவருடைய சொத்துக்கள் யாவும் உலக நாடுகளில் உறைய வைக்கப்பட்டுள்ளன.. ஐ.நாவில் கடாபிக்கு எதிராக இயற்றப்பட்ட தீர்மானத்தின் முக்கிய விடயங்கள் மேலே சொல்லப்பட்டுள்ளன.. உண்மை நிலை இப்படியிருக்க.. ஐ.நா தடைகளுக்கு முரணாக சீனா கடாபியின் படைகளுக்கு ஆயுதங்களையும் வெடி மருந்துகளையு…
-
- 1 reply
- 824 views
-
-
சோமாலியாவில் எதிர்வரும் மாதங்களில் ஏற்படக்கூடிய வறட்சியான காலநிலை மற்றும் பசி பட்டினியால் சுமார் ஏழு இலட்சத்து ஐம்பதாயிரம் மக்கள் மரணமடையக்கூடும் என ஐ.நா எச்சரித்துள்ளது. கிழக்கு ஆபிரிகாவில் 60 வருட காலப்பகுதியில் ஏற்பட்ட வறட்சியான காலநிலை மற்றும் பட்டினியால் பல்லாயிரக் கணக்கான மக்கள் இறந்ததாகவும் ஜ.நா தெரிவித்துள்ளது. இஸ்லாமிய கட்டுப்பாட்டில் உள்ள தென் சோமாலியா பகுதியில் பெரும் பஞ்சம் ஏற்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சுமார் 12 மில்லியன் மக்களுக்கு உணவு தேவை என ஜ.நா சுட்டிக்காட்டியுள்ளது. சோமாலியாவில் சுமார் 4 மில்லியன் மக்கள் பெரும் நெருக்கடி நிலைக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரியவருகிறது. _ http://www.virakesari.lk/news/…
-
- 1 reply
- 938 views
-