உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26867 topics in this forum
-
மனித முடியை விட மெல்லியது: நுண்ணிய தேசிய கொடி உருவாக்கி கனடா விஞ்ஞானிகள் கின்னஸ் சாதனை கின்னஸ் சாதனை படைத்த கனடா தேசியக் கொடி. மனித முடியை விட நூறில் ஒரு பங்கு அளவு கொண்ட உலகின் மிக நுண்ணிய தேசியக் கொடியை வடிவமைத்து கனடா விஞ்ஞானிகள் கின்னஸ் உலகச் சாதனை படைத்துள்ளனர். கனடாவில் உள்ள வாட்டர்லூ பல்கலைக்கழகத்தின் குவான்டம் கம்யூடிங் பிரிவைச் சேர்ந்த நாதன் நெல்சன் பிட்ஸ்பேட்ரிக் மற்றும் பொறியியல் மாணவர் நடாலியே பிரிஸ்லிங்கர் பின்சின் இருவரும் இணைந்து கனடாவின் 150-வது ஆண்டு விழாவை முன்னிட்டு இந்தத் தேசியக் கொடியை வடிவமைத்துள்ளனர். சிலிக்கான் உறையில் எலக்ட்ரான் பீம் லித்தோகிராபி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த தேசியக் …
-
- 0 replies
- 433 views
-
-
எலியனின் நண்பர் ஃபிடல் இறந்து விட்டார் எலியன் கொன்ஸாலீஸ் தனது நண்பரை இழந்துவிட்டான். "கியூபா ஒரு நரகம். யாரால் இங்கே இருக்க முடியும்? நாம் அமெரிக்காவுக்குப் போய்விடுவோம்" என்று ஆண் நண்பரோடும் ஆறு வயது மகன் எலியனோடும் கள்ளத் தோணியில் ஏறினார் விவாகரத்தான எலிசபெத். அந்த அலுமினியப் படகின் ஓட்டை இன்ஜினால் 10 பேரைத் தாங்க முடியவில்லை. நடுக் கடலில் கவிழ்ந்த அதன் மேல் உட்கார்ந்துகொண்டு எலியன் தப்பினான். கடற்படையினர் மீட்டு அமெரிக்காவில் வசித்த தாத்தா - பாட்டியிடம் அவனைச் சேர்த்தனர். 16 வருடங்களுக்கு முன் நடந்தது இது. அமெரிக்க - கியூப உறவுகளின் கவுரவப் பிரச்சினையாகவும் மாறியது இது. ஒற்றைச் சிறுவனுக்காக ஒட்டுமொ…
-
- 0 replies
- 614 views
-
-
பாதுகாப்புச் செயலாளராக கருப்பினத்தவரை தேர்வுசெய்தார் பைடன் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் தனது பாதுகாப்புச் செயலாளராக ஓய்வுபெற்ற (ஜெனரல்) லாயிட் ஆஸ்டினை தேர்வு செய்துள்ளார் நம்கத் தகுந்த வட்டாரங்கள் திங்கட்கிழமை தெரிவித்துள்ளன. லாயிட் ஆஸ்டின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் கீழ் மத்திய கிழக்கில் அமெரிக்க படைகளை பார்வையிட்டவர் ஆவார். இதன் மூலம் அமெரிக்காவின் முதல் கருப்பின பாதுகாப்புச் செயலாளராக லாயிட் ஆஸ்டின் தேர்ந்தெடுக்கப்பட்டு, முன்னாள் பாதுகாப்புத் துறை அதிகாரியான மைக்கேல் ஃப்ளோர்னாயை ஆச்சரியப்படுத்தியுள்ளார். இந்த பதவியில் லாயிட் ஆஸ்டின் அமர்ந்தால் பென்டகன் தலைவராக பொறுப்பு ஏற்கும் முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க…
-
- 0 replies
- 553 views
-
-
வெளியுலக தொடர்பில்லாமல் வாழும் பூர்வீக குடிகள் :அந்நியர்களை நுழையவிடாமல் தடுக்கும் அதிர்ச்சி சம்பவம் 20,000 வருடங்கள் பழமையுடையவர்களாக கருதப்படும் ஒரு பூர்வீககுடி தன்னினம் வாழும் பகுதிகளுக்குள் அந்நியரை நுழையவிடாமல் வாழும் அதிர்ச்சியான சம்பவம் பிரேஸிலின் பேரு எல்லைப்பகுதியிலுள்ள மலைக்காட்டுப்பகுதியில் நடந்துள்ளது. புகைப்படக்கலைஞரான ரிச்சர்சோ ஸ்டக்கர் தனது கேமாராவில் அமேசன் வனப்பகுதிகளை பதிவுசெய்ய ஹெலிக்ஹோப்டர் மூலம் பயணித்துள்ளார். பேரு எல்லைப்பகுதியிலுள்ள மலைக்காட்டுப்பகுதியில் சில ஆள் நடமாட்டங்கள் இருக்கவே அம்மக்களை தனது புகைப்படக்கருவியிற்குள் பதிவு செய்ய முற்பட்ட நிலையில் எதிர்பாராத விதமாக அம்மக்கள் கூட்டத்தினர் ஹெலிக்ஹோப்டரை நோக்…
-
- 0 replies
- 340 views
-
-
ரயில் நிலையத்தில் தூங்கிய நபரை உயிரோடு கொழுத்த முயன்றதாக 7 அகதிகள் கைது கிறிஸ்துமஸ் தினத்தன்று வீடில்லாத ஒரு நபரை தீ வைத்து கொழுத்த முயற்சி செய்ததாக கூறி ஏழு இளம் அகதிகள் மீது ஜெர்மனியில் உள்ள அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். சுரங்க ரயில் நிலையத்தில் பாதிக்கப்பட்ட நபர் உறங்கிக் கொண்டிருந்த இடம் பெர்லினில் உள்ள ஒரு சுரங்க ரயில் நிலையத்தில் இருந்த அந்த நபர் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் தொடர்பாக கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் வெளியிட்ட பிறகு, உடனடியாக ஆறு சந்தேக நபர்கள் போலீசாரிடம் சரணடைந்தனர். இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் எந்த வித பாதிப்புக்கும் ஆளாகாமல் தப்பினார். ஜெர்மன் நாட்டினரால், வீட…
-
- 0 replies
- 401 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தை ஒற்றை சந்தையாக பிரிட்டன் அணுகாது - தெரீசா மே ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் விலகுகின்றபோது ஒற்றை ஐரோப்பிய சந்தையில் உறுப்பினராகத் தொடர்வதை பிரிட்டன் பிரதமர் தெரீசா மே நிராகரித்திருக்கிறார். லண்டனில் லன்காஸ்டர் இல்லத்தில் நடைபெற்ற மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அவருடைய உரையில், ஒற்றை சந்தையில் தொடர்ந்து நீடிப்பது, ஐரோப்பிய ஒன்றிய விதிகளை வகுப்பதில் இடம்பெறாமல், அவற்றை ஏற்றுகொள்வதற்கு சமமானதாகும் என்று அவர் தெரிவித்தார், சுங்க வரி விதிப்பு ஒன்றாக இருக்கும் ஒரு நிலை குறித்து பேசிய அவர், இதில் முழு உறுப்பினர் என்ற நிலை, பிரிட்டன் அதனுடைய வர்த்தக ஒப்பந்தங்களை பேச்சுவார்த்தைகளில் உருவாக்கி கொள்வதை தடுக…
-
- 0 replies
- 523 views
-
-
அமெரிக்காவின் உளவு முகத்தை உலகம் முழுவதும் அம்பலப்படுத்திய பெரும் பரபரப்பூட்டிய விக்கீக்ஸ் அதிபர் ஜூலியன் அசாஞ்சே அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளார். பிறப்பால் ஆஸ்திரேலியரான இவர், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் செனட் தேர்தலில் தனது கட்சியை களம் இறக்கியுள்ளார். இத்தேர்தலில் 2 இந்திய வம்சவாளியினருக்கும் அவர் தேர்தலில் சீட் கொடுத்துள்ளார். மொத்தம் 7 வேட்பாளர்களை அசாஞ்சே இதுவரை அறிவித்துள்ளார். அதில் 2 பேர் இந்திய வம்சவாளியினர் என்பது குறிப்பிடத்தக்கது.லண்டனிலிருந்தபடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் தனது கட்சியை தொடங்குவதாக அறிவித்தார் அசாஞ்சே.மேலும் விக்டோரியா தொகுதியிலிருந்து தானே போட்டியிடுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.மலேசியாவில் பிறந்தவரான பினோய் கம்ப்மார்க் விக்டோரியா மேல் சபைக்குப்…
-
- 2 replies
- 321 views
-
-
4 லட்சம் பிரித்தானியத் தமிழர்கள் வாக்குகளை இழக்கவிருக்கும் கான்சர்வேட்டிவ் கட்சி ! இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெலத் மாநாட்டிற்கு பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் செல்லக்கூடாது, என்று தமிழர்கள் தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள். பிரித்தானியாவில் இயங்கிவரும் தமிழ் சொலிடாரிட்டி குழுவினர் மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவையினர் இதுதொடர்பாக பிரித்தானிய அரசுக்கு தொடர்ந்தும் அழுத்தங்களைக் கொடுத்து வருகிறார்கள். சுமார் 4 லட்சம் தமிழர்கள் வாழும் பிரித்தானியாவில், அவர்கள் உணர்வுகளைப் புரிந்துகொள்ளுமாறு பல வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பிரித்தானிய வெளியுறவு அமைச்சுக்கு தமிழ் சொலிடாரிட்டி குழுவினர் இதுதொடர்பாக கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்கள். பி…
-
- 0 replies
- 455 views
-
-
பருந்தின் உயிரை காப்பற்றிய நபர்: - உயிர் காத்தவனை தினமும் பார்க்க வரும் பருந்து [Saturday 2017-04-29 07:00] பருந்தின் உயிரை ஒருவர் காப்பற்றியதையடுத்து அது தினமும் அந்த நபரின் வீட்டுக்கு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. தமிழ்நாட்டின் பொள்ளாச்சி அருகில் இருக்கும் கிராமத்தில் வசித்து வருபவர் அனில்குமார். கள் இறக்கும் தொழிலாளரான அனில்குமார் 5 மாதங்களுக்கு முன்னர் கள் பானையை இறக்கி கொண்டிருக்கும் போது ஒரு பருந்து குஞ்சு சிறகு ஒடிந்து காலில் அடிபட்ட நிலையில் பறக்க முடியாமல்திணறியிருக்கிறது அந்த பருந்தை காப்பாற்றிய அனில்குமார் அதை தன் வீட்டுக்கு அழைத்து சென்று காயங்களை குணமாக்கி 3 மாதங்களுக்கு தன் வீட்டிலே அதை வைத்துள்ளார…
-
- 1 reply
- 439 views
-
-
ஜூலியன் அசாஞ் மீதான பாலியல் குற்றச்சாட்டு விசாரணையை கைவிடுகிறது ஸ்வீடன் படத்தின் காப்புரிமைAFP Image captionஜூலியன் அசாஞ் மீதான பாலியல் குற்றச்சாட்டு விசாரணையை கைவிடுகிறது ஸ்வீடன் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ் மீதான பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை கைவிடலாம் என ஸ்வீடனின் பொது வழக்குகளுக்கான இயக்குனர் முடிவு செய்திருக்கிறார். அசாஞ் மீது ஏழு ஆண்டுகளுக்கு முன்பு விதிக்கப்பட்ட கைது வாரண்டை திரும்பப் பெறுவதாக, ஸ்டாக்ஹோம் மாவட்ட நீதிமன்றத்தில் மேரியானே நேய் கோரிக்கை மனு தாக்கல் செய்தார். 45 வயதான அசாஞ், தம்மை அயல்நாட்டிடம் ஒப்படைப்பதை தவிர்ப்பதற்காக, 2012 ஆம் ஆண்டிலிருந்து லண்டனில் உள்ள எக்கவடோ…
-
- 2 replies
- 856 views
-
-
தலிபான்களின் ஆட்சியில் வாழ்க்கை எப்படி இருக்கும்? ================================== தலிபான்களை விரட்டுவதற்காக ஆப்கானிஸ்தானில் மேற்கு நாடுகள் தலையிட்ட போது, சில இரத்தக்களரி மோதல்கள் ஹெல்மண்ட் மாகாணத்தில் நடந்தன. ஆனால், படைகளின் வெளியேற்றம் தாம் இழந்த பெரும்பாலான பிராந்தியத்தை தீவிரவாதிகள் மீளக்கைப்பற்ற வழி செய்தது. தலிபான்களின் கீழான வாழ்க்கை எப்படியிருக்கும் என்பது குறித்து மிகவும் குறைவாகவே தெரிந்த நிலையில், பிபிசியின் ஒலியா அட்ராஃபிக்கு அண்மையில் அந்த குழுவின் தலைநகராக பார்க்கப்படும் மூஸாகலாவுக்கு செல்ல அபூர்வமான வாய்ப்பு கிடைத்தது. இவை குறித்த பிபிசியின் காணொளி. BBC
-
- 0 replies
- 527 views
-
-
இத்தாலியத் தீவான லேம்பெதுசாவிற்கு அருகே தஞ்சம் கோரி வந்தவர்கள் பயணித்த படகொன்று கவிழ்ந்ததில் குறைந்தது 94 பேர் இறந்திருக்கிறார்கள் என்று அதிகாரிகள் கூறினர். வட ஆப்ரிக்காவிலிருந்து வந்த இந்த படகு இந்த தீவின் கடற்கரையிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருந்த போது தீப்பிடித்து பின்னர் கவிழ்ந்தது. கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 163 பேர் காப்பாற்றப்பட்டதாகவும், இன்னும் பலர் கடலில் இருக்கிறார்கள் என்றும் இத்தாலியக் கடலோரக் காவற்படை கூறியது. இந்தப் படகில் சுமார் 500 பேர் வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்தப் படகில் கர்ப்பிணித் தாய்மார்களும், குழந்தைகளும் இருந்தனர் என்று கூறப்படுகிறது. இது ஒரு பெரும் துயர சம்பவம் என்று இத்தாலியப் பிரதமர் வர்ணித்தார்.…
-
- 3 replies
- 441 views
-
-
ஜெர்மனியில் திடீரென தாக்குதல்! தாய்லாந்து மன்னரை அதிரவைத்த பொம்மைத் துப்பாக்கி தாய்லாந்து மன்னர் வாஜிராலங்கோர்ன் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடந்தது. பின்னர், விசாரணையில் சிறுவர்களின் பொம்மைத் துப்பாக்கி எனத் தெரியவந்தது. தாய்லாந்து மன்னர் வாஜிராலங்கோர்ன் ஜெர்மனியில் தங்கி அந்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஜெர்மனி நகரின் முனிச் நகரிலுள்ள லேக் ஸ்டர்ன்பெர்க்கில் தங்கியிருந்த மன்னர், நகரைச் சுற்றிப்பார்க்க தன்னுடைய மோட்டார் சைக்கிள் வாகனத்தில் நகர்வலம் சென்றார். பாதுகாவலர்களோடு நகர் வலம் வந்த மன்னர் மீது திடீரென ஒரு துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. அது பிளாஸ்டிக் குண்டு என்பதால் முதலில் அதிர்ச்சியடைந்த மன்னர் நிதானமடைந…
-
- 0 replies
- 411 views
-
-
சூடானில் பிரதமர் அப்தல்லா ஹாம்டோகிடம் ஆட்சியை மீண்டும் ஒப்படைக்க இராணுவம் சம்மதம்! சூடானில் பிரதமர் அப்தல்லா ஹாம்டோகிடம் ஆட்சியை மீண்டும் ஒப்படைக்க, இராணுவம் சம்மதம் தெரிவித்துள்ளது. ஐ.நா. அமைப்பும் அமெரிக்காவும் முக்கியப் பங்கு வகித்த ராணுவத்துக்கும் அரசியல் தலைவர்களுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைக்கு பிறகு இதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு கைது செய்யப்பட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரையும் விடுவிக்கவும் இராணுவம் சம்மதித்தது. மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, சுதந்திரமான ஓர் அமைச்சரவைக்கு ஹாம்டோக் தலைமை வகிப்பார். ஆட்சியில் தனது பிடியை இறுக்கும் வகையில் புதிய இறையாண்மை சபையை இராணுவம் அ…
-
- 0 replies
- 216 views
-
-
அவுஸ்திரெலியாவில் தான் உலகிலே மிகவும் பெரிய வீடுகள் இருக்கின்றன. முன்பு அமெரிக்காவில் தான் உலகிலே பெரியவீடுகள் இருந்தன. ஐரோப்பாக் கண்டத்தில் டென்மார்க்கில் தான் பெரிய வீடுகள் இருக்கின்றன.ஐரோப்பாக் கண்டத்தில் 2ம் இடத்தில் கிறிஸ் நாட்டிலும் 3ம் இடத்தில் நெதர்லாந்திலும் பெரியவீடுகள் இருக்கின்றன. ஐரோப்பாக் கண்டத்தில் பிரித்தானியாவில் தான் மிகவும் சிறிய வீடுகள் இருக்கின்றன. அவுஸ்திரெலியா வீடுகள் பிரித்தானியாவில் உள்ள வீடுகளை விட கிட்டத்தட்ட 3 மடங்கு பெரியவை. இதனால் அவுஸ்திரெலியாவில் இருந்து பிரித்தானியாவுக்கு விடுமுறை செல்பவர்கள், பிரித்தானியாவீடுகளை புறாக்கூடுகள் என்றும் சொல்வதுண்டு. நாடு சராசரி வீடுகளின் பரப்பளவு அவுஸ்திரெலியா 214.6 சதுர…
-
- 0 replies
- 1.2k views
-
-
இந்தியா - பாகிஸ்தான் இடையே, அணு ஆயுதப் போர் மூண்டால், 200 கோடி பேர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக, சர்வதேச அணு ஆயுதப் போர் தடுப்பு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, சர்வதேச அணு ஆயுதப் போர் தடுப்பு ஆர்வலர்கள், தங்கள் அறிக்கையில் கூறியுள்ளதாவது: உலக நாடுகள், தங்களுக்குள் போர் செய்யும் போது, அணு ஆயுதங்களை பயன்படுத்தினால், ஏராளமான உயிர்ச் சேதமும், பொருட்சேதமும் ஏற்படுவதோடு, எதிர்கால சந்ததியினரையும் கடுமையாக பாதிக்கும். இந்தியா - பாகிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக தீராத பிரச்னைகள் உள்ளன. ஏற்கனவே, மூன்று முறை, இரு நாடுகளிடையே போர் நடந்துள்ளது. எனினும், இனி வரும் காலங்களில் இரு நாடுகளிடையே போர் ஏற்பட்டால், அதில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தும் அபாயம் உள்ளது. அவ்வாறு…
-
- 1 reply
- 597 views
-
-
லாலுபிரசாத்தின் கால்களை கழுவிய போலீஸ் அதிகாரி! பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவ் மாட்டுத்தீவன வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த திங்கட்கிழமை அவர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து அவர், முதலில் கோவிலுக்கும் அதன்பின்னர் வீட்டிற்கும் செல்வதாக பயண திட்டம் வகுக்கப்பட்டது. பயணதிட்டத்தின்படி லாலு சிறையில் இருந்து வெளியில்வந்த உடன் தேவ்ரி கோவிலுக்கும் பி்னனர் ராம்கர் மாவட்டத்தில் உள்ள பகுதியில் உள்ள சின்னாமஸ்தா கோவிலுக்கும் சென்றார். சின்னாமஸ்தாகோவிலுக்கு லாலு முயன்ற போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த டி.எஸ்.பி ரேங்கில் உள்ள அசோக்குமார் என்ற போலீஸ் அதிகாரி ஒருவர் லாலுவின் கால்களை தண்…
-
- 0 replies
- 588 views
-
-
கென்யாவில் கடந்த மாதம் நடந்த அதிபர் தேர்தலின் முடிவுகள் செல்லாது என்று அந்த நாட்டு உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது ; செனகலில் வாங்கப்படும் ஆடுகள் உலகெங்கும் விற்பனையாகின்றன! பக்ரீத் பண்டிகைக்காக வாங்கப்படுகின்ற தாக்காரின் ஆடுகள் பற்றிய கதை மற்றும் அலெப்போ மோதல்களின் போது மிருகக்காட்சி சாலையில் கைவிடப்பட்ட விலங்குகளை மீட்கும் ஒருவரின் கதை ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 328 views
-
-
புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு... யேமனில், இரண்டு மாத போர்நிறுத்தம்! முஸ்லிம்களின் புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு யேமனில் இரண்டு மாத போர்நிறுத்தம் கொள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு நாடு தழுவிய அளவில் ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் ஒப்பந்தம் இதுவாகும். பல இஸ்லாமியர்களுக்கு இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதத்தின் முதல் நாள் இன்று (சனிக்கிழமை) ஆகும். சவுதி தலைமையிலான கூட்டணிக்கும் ஈரான் ஆதரவு ஹெளதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான ஒப்பந்தம் இன்று (சனிக்கிழமை) 16:00 மணிக்கு நடைமுறைக்கு வருகின்றது. மேலும், இருவரும் ஒப்புக்கொண்டால் நீடிக்கப்படலாம் போர்நிறுத்தம் நீண்டகாலமாக எதிர்…
-
- 0 replies
- 186 views
-
-
உலகில் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்த டோக்கியோ - புதுடெல்லிக்கு 43-வது இடம் புதுடில்லி: உலகம் முழுதும் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில், டில்லி 43வது இடத்திலும், மும்பை 45வது இடத்திலும் உள்ளது. ஆய்வு பொருளாதார உளவுப்பிரிவு என்ற அமைப்பு உலகின் பாதுகாப்பான நகரங்கள் குறித்து ஆய்வு நடத்தியது. டிஜிட்டல், சுகாதாரம், உள்கட்டமைப்பு தனிநபர் பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நடத்தப்பட்டது. பயங்கரவாத அச்சுறுத்தல்கள், லண்டன், பாரீஸ் மற்றும் பார்சிலோனா நகரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் குறித்தும் கவனத்தில் கொள்ளப்பட்டது. ஆய்வு வெளியிட்ட கிறிஸ் க்ளாக் என்பவர் கூறுகையில், உலகில் பெரும்பாலான நகரங்கள் பொருளாதார ரீதியான நடவடிக்கையை அதிகரிக்கும் நிலையில்…
-
- 0 replies
- 925 views
-
-
உக்ரேனிய கிறிமியா பிராந்தியத்தை இணைப்பதற்கு ரஷ்யாவால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு நகர்வும் அந்நாட்டுடனான இராஜதந்திர கதவுகள் மூடப்படுவதற்கு வழிவகை செய்யும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. கிறிமியா உக்ரேனின் ஒரு பாகம் எனவும் ரஷ்யா அங்கு இராணுவ தலையீட்டை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என ரஷ்ய வெளிநாட்டு அமைச்சர் சொர்கேயி லாவ்ரோவிடம் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன்கெரி வலியுறுத்தியுள்ளார். அதேசமயம் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, உக்ரேனிய நெருக்கடி தொடர்பில் உலகத் தலைவர்களுடன் கலந்துரையாடி வருகிறார். கிறிமியாவுக்குள் நுழைய முயற்சித்த சர்வதேச கண்காணிப்பாளர்கள் குழுவொன்று அங்கு தீர்க்கப்பட்ட எச்சரிக்கை வேட்டுகளால் திரும்ப நேர்ந்ததையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்…
-
- 2 replies
- 704 views
-
-
. தொழிலதிபராக நடித்த நிருபரிடம் ரூ.3 கோடி லஞ்சம் கேட்ட இங்கிலாந்து இளவரசி! லண்டன்: தன்னை தொழிலதிபர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட நிருபரிடம் பிரிட்டிஷ் ராணி எலிசபெத்தின் மருமகள் சாரா ரூ. 3 கோடி லஞ்சம் கேட்டார். ராணி எலிசபெத்தின் 2வது மகன் இளவரசர் ஆன்ட்ரூ. இவரது முன்னாள் மனைவி சாரா பர்கூசன். நியூஸ் ஆப் தி வேர்ல்டு என்ற பத்திரிகையின் நிருபர் ஒருவர் இவரை சமீபத்தில் சந்தித்தார். அப்போது அவர் தன்னை இந்தியத் தொழிலதிபர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். இங்கிலாந்து நாட்டில் தொழிற்சாலை தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக ஆன்ட்ரூவை சந்திக்க விரும்புவதாகவும் சாராவிடம் கூறினார். ஆன்ட்ரூவை சந்திக்க ஏற்பாடு செய்யவேண்டுமானால் தனக்கு ரூ.3 க…
-
- 0 replies
- 565 views
-
-
தமிழகத்தின் நேர்மையான சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுள் உமாசங்கரும் ஒருவர் உமாசங்கரின் நேர்மையை தமிழகத்தில் எல்லா பத்திரிகைகளும் பல சமயங்களில் சுட்டிக் காட்டியுள்ளது. ஆட்சியாளர்களின் அடிவருடியாக இல்லாமல் மக்களுக்காக அரசுப் பதவியை முழுமையாக பயன்படுத்த நினைத்தவர்களின் உமாசங்கரும் ஒருவர். கடந்த கால ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போதும் அஞ்சாமல் அரசியல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து மேலிடத்தின் எதிர்ப்பை சமாதித்தவர். இப்போது கருணாநிதி குடும்பத்தினரால் பழிவாங்கப்படுகிறார். இரண்டு வருடங்களுக்கு முன்னால் தினகரன் நாழிதள் வெளியிட்ட கருத்துக்கணிப்பால் கருணாநிதி குடும்பத்தினருக்குள் பூசல் வெடித்தது. கலாநிதிமாறன் குடும்பத்தினருக்கு எதிராக மதுரையில் போர்க்கொடி தூக்கிய மு.க.அழகிரி தினகரன் …
-
- 0 replies
- 521 views
-
-
ஹெலிகாப்டர் விபத்தில் சவுதி இளவரசர் பலி! சவுதி இளவரசர் மன்சூர் பின் மோக்ரன், ஏமன் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். மன்சூர் பின் மோக்ரன், அசிர் மாநில ஆளுநராகப் பொறுப்பு வகித்துவந்தார். ஞாயிற்றுக்கிழமை அதிகாரிகளுடன் இவர் சென்ற ஹெலிகாப்டர், சவுதி அரேபியா-ஏமன் எல்லையில் விபத்தில் சிக்கியது. அதில், மன்சூர் பின் மோக்ரன் மற்றும் ஹெலிகாப்டரில் இருந்த அதிகாரிகள் உயிரிழந்தனர். மன்சூர் பின் மோக்ரன் உயிரிழந்த செய்தியை அல்-எக்பரியா செய்தித் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. ஆனால், விபத்து ஏற்பட்டதற்கான காரணம்குறித்த தகவல் வெளியாகவில்லை. ஊழல் ஒழிப்பு நடவடிக்கையாக 11 இளவரசர்கள், அமைச்சர்கள் மற்றும் தொழில் அதிபர்களை சவுதி அரேபிய அரசு கை…
-
- 0 replies
- 723 views
-
-
முதலில் மகனுக்கு முடியெடுக்க இலங்கை செல்வதாக கூறிய கருணாஸ், தற்போது இலங்கையில் நடக்க இருக்கும் வானொலியின் ஆண்டுவிழாவில் கலந்து கொள்வதற்காக இலங்கை செல்வதாக முன்னுக்குப் பின் முரணாக கூறுகிறார். நாம் தமிழர் இயக்கத்தின் மீது பழி சொல்வதற்காக யாரோ பின்னணியில் இருந்து பகடைக்காயாக கருணாஸை இயக்குகிறார்கள் என்று அவரது நடவடிக்கை சந்தேகிக்க வைக்கிறது. முன்னதாக கருணாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:- எனது மகனுக்கு முடி எடுக்க இலங்கையில் உள்ள முருகன் கோவிலுக்கு செல்ல முடிவு செய்தேன். இன்று காலை விமானத்தில் டிக்கெட்டும் எடுத்து விட்டேன். நாம் தமிழர் இயக்கம் என்ற பெயரில் நான் இலங்கை செல்வதை கண்டித்து எனது செல்போனுக்கு 150-க்கும் மேற்பட்ட எஸ்.எம்.எஸ்.க்கள் வந்துள்ளன. சிங்களன் …
-
- 12 replies
- 1.1k views
-