உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26680 topics in this forum
-
'யூரோ'வை கைவிடுகிறது ஜெர்மனி [Wednesday, 2011-06-29 10:58:04] ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனி, யூரோ கரன்சியை கைவிட்டு, பழைய கரன்சியான, டச்மார்க்கிற்கு மாற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐரோப்பிய நாடுகள் அனைத்தும், ஒரே மாதிரியாக யூரோ கரன்சியை பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில், ஜெர்மனி நாட்டின் மத்திய வங்கியான, பண்டெஸ் வங்கி, டச்மார்க் சின்னம் பதித்த ரூபாய் நோட்டுகளை அச்சிட உத்தரவிட்டுள்ளதாகவும், இதையடுத்து, "டச்மார்க்' சின்னம் கொண்ட ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணி நடந்து வருவதாகவும், அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜெர்மன் நாட்டில், இரண்டாம் உலகப் போருக்குப் பின், டச்மார்க் கரன்சி பயன்படுத்தப்பட்டு வந்தது. அமெரிக்காவின் டாலருக்குப் பிறகு, உல…
-
- 28 replies
- 2.9k views
-
-
சர்வதேச நாணய நிதியத்திற்கு தலைமைதாங்கவுள்ள முதல் பெண் சர்வதேச நாணய நிதியத்தின் புதிய தலைவர் பதவிக்காக பிரான்ஸ் நாட்டின் நிதியமைச்சர் திருமதி கிறிஸ்டைன் லகார்ட் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். 24 பேர்கொண்ட சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக்குழுவினரின் வாக்கெடுப்பின்மூலமே இவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்திற்கு பெண்ணொருவர் தலைமை தாங்கவுள்ளமை இதுவே முதற்தடவையாகும். ஐந்து ஆண்டுகளுக்கான இவரது பதவிக்காலம் எதிர்வரும் ஜூலை 5ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-07-14-09-13-37/23904-2011-06-28-19-44-49.html http://www.youtube.com/watch?v=L64fgMno2Ho&feature=player_embedded
-
- 1 reply
- 596 views
-
-
இன்று இல்லாவிட்டால், நாளை நல்ல காலம் வரும். நாளை இல்லாவிட்டால், அதற்கு மறுநாள் நல்லதாக விடியும்!’ என நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் தி.மு.க. உடன்பிறப்புகள். ஆனால், அந்தக் கட்சியின் குடும்பப் புள்ளிகளை மையம்கொண்டு அடுத்தடுத்து சுழல்கிறதே சர்ச்சை றாவளிகள். 2ஜி அலைக்கற்றையில் ஆரம்பித்த அதகளம், இப்போது ஓர் அயல்நாட்டு காரில் வந்து நிற்கிறது. மும்பையில் உள்ள நவசேவா துறைமுகத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, 'மஸராட்டி’ என்ற சொகுசு கார் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. அந்த காரை வாங்கிய அகமதாபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர், சென்னையில் ஒருவருக்கு அதை விற்பனை செய்தார். 2 கோடி மதிப்பு உடைய காரை மிக மிகக் குறைந்த மதிப்பாகக் காட்டி, வரி ஏய்ப்பு செய்ததாக புகார் கிளம்பியது.…
-
- 3 replies
- 957 views
-
-
ஜனதா கட்சியின் தேசியத் தலைவரான சுப்பிரமணியன் சுவாமி, அடுத்த ஏழு வாரங்களுக்கு கௌரவப் பேராசிரியராக அவதாரம் எடுக்கப்போகிறார். (அப்பாடா! ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கியவர்கள் பெருமூச்சுவிடலாம்!) ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகப் பொருளாதாரத் துறையில், சம்மர் கோர்ஸ் நடத்துவதற்காக சுவாமி செல்வது வழக்கம். அதற்காக, கடந்த புதன்கிழமை கிளம்பியவரை சென்னை விமான நிலையத்தில் சந்தித்தோம். ''2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் மூன்றாவது குற்றப் பத்திரிகை தாக்கல் ஆகப்போகிறதே? அதில் இடம் பெறப்போகும் வி.ஐ.பி-க்கள் பட்டியல் பற்றி சொல்லுங்களேன்?'' ''இந்தக் கேள்விக்கு என்னுடைய '2ஜி ஸ்பெக்ட்ரம் ஸ்காம்' புத்தகத்தில் விரிவாகப் பதில் எழுதி இருக்கிறேன். அதிகாரத்தில் உள்ள…
-
- 0 replies
- 799 views
-
-
தமிழகத்தின் அடுத்த முதல்வர் கனிமொழி என்று திமுக பேச்சாளர் வாகை முத்தழகன் பேசியது திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையில், தி.மு.க. நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நெல்லை சங்கீதசபாவில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கருப்பசாமிபாண்டியன் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் மாநில பேச்சாளர் வாகை முத்தழகன் பேசுகையில், சட்டசபைத் தேர்தலில் திமுகவின் தோல்விக்கு காரணம், கட்சித் தொண்டர்களுக்கு எதுவும் செய்யாதது தான். மாவட்டத்தில் குறிப்பிட்ட ஜாதியினருக்குத் தான் கட்சியில் அதிகம் முக்கியத்துவம் தரப்படுகிறது. மாவட்ட செயலாளர் கருப்பசாமி பாண்டியனின் ஆதரவாளர்கள் இன்றைக்கு நெல்லை மாவட்ட அமைச்சரான இசக்கி சுப்பையாவின் பின்னால் அணிவகுத்து செல்கிறார்கள…
-
- 0 replies
- 789 views
-
-
கம்போடியாவில் இடம்பெற்ற இனப்படுகொலைக்காக விசாரணை நடத்தும் நீதிமன்றம் அதன் தலைநகர் நாம்பென்னில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அறியக்கிடைக்கிறது. பொல்பொட் தலைமையிலான கெமரூஜ் என்ற கம்யூனிசக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் 1970களின் இறுதியில் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் கம்போடியர்கள் கொல்லப்பட்டனர். கட்டாயப்படுத்தி வேலை வாங்குதல், பசி பட்டினி மற்றும் சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகள் என பல விடயங்கள் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க காரணமானது. பல தசாப்தங்கள் கடந்துள்ள நிலையில், கெமரூஜ் கட்சியைச் சேர்ந்த, இன்று உயிருடன் இருக்கின்ற நான்கு மூத்த உறுப்பினர்கள், ஐநாவின் அனுசரணை தீர்ப்பாயத்துக்கு முன்னால் நிற்கின்றார்கள். ஆரம்ப கட்ட விசாரணைகள் இந்த வாரம் ஆரம்பித்துள்ளது…
-
- 1 reply
- 377 views
-
-
ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சேவை கைது செய்ய வலியுறுத்தி http://viduthalai.in/new/home/archive/12270.html
-
- 0 replies
- 435 views
-
-
காங்கிரஸுக்குக் கொடுத்த ஆதரவு முடிந்து விட்டது, இப்போது கிடையாது-ஜெயலலிதா டெல்லி: காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு கொடுப்பதாக நான் 2010ம் ஆண்டு கூறிய நிலை இப்போது இல்லை. அந்த வாய்ப்பு அப்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு வழங்கப்பட்ட ஒன்று. இப்போது நிலைமை வெகுவாக மாறி விட்டது. அந்த ஆதரவு வாய்ப்பு இப்போது இல்லை என்று கூறியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு முதல்வர் ஜெயலலிதா சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது... காங்கிரஸுக்கு இப்போதும் உங்களது ஆதரவு உள்ளதா? காங்கிரஸுக்கு ஆதரவு தருவதாக நான் கூறியது 2010ம் ஆண்டு இருந்த சூழ்நிலையின் அடிப்படையில்தான். அது ஒருமுறை கூறப்பட்ட வாய்ப்புதான். இப்போது அது இல்லை. 2010க்குப் பி…
-
- 4 replies
- 605 views
- 1 follower
-
-
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கிட்டில் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி முறைகேடு நடந்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவை சி.பி.ஐ. கைது செய்தனர். அவர் திகார் சிறையில் உள்ளார். முன்னதாக ராசாவின் வீடுகள் திருச்சி திருவானைக் காவலில் உள்ள அவரது அண்ணன் ராமச்சந்திரனின் வீடு, சகோதரி வீடுகளில் சி.பி.ஐ. சோதனை செய்தது. அப்போது சொத்துக்கள் சம்பந்தமாக பல ஆவணங்களை சி.பி.ஐ. கைப்பற்றியது. இந்த சொத்துக்கள் சம்பந்தமான ஆவணங்களை சி.பி.ஐ. மத்திய வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தது. இது தொடர்பாக மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ராசா, அவரது அண்ணன் மற்றும் சகோதரி, வருமான விபரம், சொத்து விபரம், ஆகியவற்றை திரட்டினர். இதில் அவரது குடும்பத்தினர் வருமானத்திற்கு அத…
-
- 0 replies
- 655 views
-
-
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக தென்காசி சென்ற லட்சிய தி.மு.க தலைவர் டி.ராஜேந்தருக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் மாவட்ட செயலாளர் கார்மேகராஜன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது நிருபர்களை சந்தித்த டி.ராஜேந்தர், ’’தமிழகத்தில் தற்போது சினிமாத்துறை கடும் வீழ்ச்சி அடைந்து வருகிறது. தியேட்டர்களுக்கு பெண்கள் வருவதில்லை. பெண்கள் சினிமாவிற்கு வந்தால்தான் படம் வெற்றி பெரும். இதனால் சினிமா வளர்ச்சி அடையும். பெண்கள் தியேட்டருக்கு வராததற்கு காரணம் தியோட்டரில் கட்டண உயர்வுதான் காரணம். தியேட்டரில் கட்டணத்தைக் குறைத்து பெண்களை சினிமா தியேட்டருக்கு வரவழைக்க வேண்டும். அப்போதுதான் சினிமா வளர்ச்சி அடையும். தேவைப்பட்டால் சமச்சீர் கல்வியில் ம…
-
- 0 replies
- 719 views
-
-
ஊழல் குற்றச்சாட்டுகளில் இந்திய நடுவன் அரசின் அமைச்சர்கள் பதவி இழப்பதால் புது டில்லியில் அசாதாரண சூழல் நிலவுகிறது. காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியின் பினாமிப் பிரதமராகப் பதவி வகிக்கும் மன்மோகன் சிங் “கூட்டணி அரசில் எனது கைகள் கட்டப்பட்டிருக்கின்றன. யாரை அமைச்சராக்க வேண்டும் என்கிற அதிகாரம் எனக்கில்லை” என்று கண்ணீர் சிந்தாத குறையாகச் சொன்னார். தெற்கு ஆசியாவின் பிராந்திய வல்லரசும், உலகப் பொருளாதாரத்தில் முதல் பத்து நாடுகளில் ஒன்றாக இடம்பெறும் இந்தியாவின் அதியுயர் அரசியல் தலைவரின் இந்த ஒப்புதல் வாக்கு மூலம் உலக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகின் 180 ஊழல் நாடுகளில் இந்தியா 84ம் இடத்தில் இருக்கிறது. இந்தியாவின் ஒரு இலட்சம் கோடிக்கு மே…
-
- 3 replies
- 888 views
- 1 follower
-
-
http://www.maalaimalar.com/2011/06/25154017/Pakistan-foreign-minister-hina.html
-
- 2 replies
- 1k views
-
-
கச்சத்தீவு அருகே நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் 5 கப்பல்களில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டியடித்தனர். இதனால் மீனவர்கள் பாதியிலேயே கரை திரும்பினர். இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், இங்கு மீன் பிடித்தால் வலைகளை பிடுங்கி விடுவோம் என்று கூறினர். இதனால் பாதியிலேயே கரை திரும்பி விட்டோம். இதனால் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=56720
-
- 0 replies
- 406 views
-
-
முதலமைச்சர் ஜெயலலிதாவை மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், பாஜக மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜ் இன்று சந்தித்து பேசினார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள முதல்வர் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது முதலமைச்சராக பொறுப்பேற்ற ஜெயலலிதாவுக்கு சுஷ்மா, வாழ்த்து தெரிவித்துக் கொண்டார். சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுஷ்மா, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்தும், கச்சத் தீவை மீட்பது குறித்தும் நாடாளுமன்றத்தில் பாஜக குரல் எழுப்பும் என்று தெரிவித்தார். http://www.nakkheeeran.com/users/frmNews.aspx?N=56674
-
- 1 reply
- 712 views
-
-
Jun 26, 2011 கடந்த திங்கள் முதல் ஆரம்பித்த LE BOURGET விமானக் கண்காட்சி வெள்ளிக்கிழமை முதல் பொதுமக்கள் பார்வைக்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. AIRBUS ன் பிரபலத் தயாரிப்பான A380 மற்றும் லிபியப் போரில் பல சாதனைகள் நிகழ்த்திய RAFALE, மற்றும் Patrouille de France விமானங்களின் வர்ணஜார சாகசங்கள், சூரிய விமானம், Eurocopter இறுதித் தயாரிப்பான X3 போன்றவை சாகசங்கள் காட்டித் திறமையை நிரூபிக்க உள்ளன. வெள்ளிக்கிழமை மாணவர்களிற்கான இலவச தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பெரியவர்களிற்கு 13 யூரோக்களும் 7 வயதிற்குக் குறைந்தவர்ளிற்கு இலவசமாகமும் நுழைவுக்கட்டணம் நிர்ணயித்துள்ளனர். கடந்த நாட்கள் நிகழ்ந்த கண்காட்சியில் AIRBUS A320…
-
- 1 reply
- 553 views
-
-
என்கிட்ட ஃபேக்ட்ஸ் இருக்கு சீமான் கிட்ட பேச்சு இருக்கு: நடிகை விஜயலெட்சுமி...? ‘‘மூணு வருஷமாக நானும் சீமானும் ரிலேஷன்ஷிப்ல தான் இருக்கோம். அவர் ஜெயிலுக்குப் போனதிலிருந்து, அவரோட அப்ஸ் அண்ட் டவுன்ஸ் எல்லாத்திலும் நான் கூடவே இருந்திருக்கேன். நாங்க கல்யாணம் பண்றதாகத்தான் இருந்துச்சு. எங்க ஃபேமிலியில எங்க திருமணத்தை ஏத்துக்கிட்டதாலதான் தொடர்ந்து ரிலேஷன்ஷிப்ல இ ருந்தோம். பொதுவாக ஜெயிலுக்குப் போயிட்டு வந்தா யாரும் என்கரேஜ் பண்ண மாட்டாங்க. ஆனால் அப்ப கூட அவரோடயே நான் இருந்திருக்கேன். போன மாசம்தான் நாங்க ‘கல்யாணம் நடக்கவே மாட்டேங்குதே’னு கேட்டோம். சில வி.ஐ.பி.க்களை வைச்சு பேசிப் பார்த்தோம். அவங்ககிட்ட ‘எனக்கு அப்படியொரு ஐடியாவே இல்ல. நான் அவளைப் பார்த்தே ஒண்ணரை வருஷ…
-
- 4 replies
- 1.4k views
- 1 follower
-
-
மதிமுகவின் முதல் வழக்கறிஞர்கள் மாநில மாநாடு திருச்சியில் உள்ள ஹோட்டல் பெமினாவில் தொடங்கியது. 100கணக்கான வழக்கறிஞர்கள் கலந்து கொண்ட இம்மாநாட்டில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவை. 1. சென்னை உயர்நீதி மன்றம் என்ற பெயரை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என மாற்ற வேண்டும். 2. மதுரைக்கு தனி நீதிபதிகளை நியமிக்க வேண்டும். 3. தமிழகம் முழுவதும் தமிழில் பெயர் பலகையை வைக்க வேண்டும். 4. உயர்நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடும் உரிமை வேண்டும். 5. வழக்கறிஞர்களை தாக்கிய காவலர்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 6. புலிகள் மீதான தடையை இந்திய அரசு நீக்க வேண்டும். 7. இலங்கை உடனான எல்லா விதமான உறவையும் இந்திய அரசு முறித்துக்கொள்ள வேண்டும்…
-
- 0 replies
- 375 views
-
-
இனப்படுகொலை குற்றச்சாட்டு : முதன்முறையாக ஒரு பெண்ணுக்கு ஆயுள் தண்டனை _ வீரகேசரி இணையம் 6/25/2011 3:36:18 PM Share ருவாண்டா நாட்டில் இனப்படுகொலைகள் புரிந்த குற்றவாளியாக இனங்காணப்பட்ட அந்நாட்டின் முன்னாள் பெண் அமைச்சர் மற்றும் அவரது மகன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கி ஐ.நா. போர்க்குற்றவியல் நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது. போவுலின் நீயிராமாசுஹூகோ (65) என்ற அப்பெண் அக்காலப்பகுதியில் ருவாண்டாவின் குடும்ப மற்றும் பெண்கள் விவகார அமைச்சராக இருந்தவர். இவரின் மகனான ஆர்சனி நடாஹோபலி முன்னாள் இராணுவ தலைவராக இருந்தவர். இவர்கள் 1994 ஆம் ஆண்டுப்பகுதியில் 'ஹூடூ' இனத்தவர்களைக் கடத்தி பாலியல் வல்லுறவுகள் மற்றும் இனப்படுகொலைகளை மேற்கொள்ள கட்டளையிட்டதுடன் உதவி…
-
- 0 replies
- 555 views
-
-
தமிழீழபடுகொலையில் கொல்லப்பட்ட தமிழர்களுக்காக நினைவேந்தலை,பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.உலக அரங்கில் இது பேசப்படும் வேளையில் நாம் ஆயிரக்கணக்கில் அஞ்சலி செலுத்த நிற்கும்போது மிகவலிமையாக உணர்த்தும்.எல்லாவற்றையும்விட நினைவேந்தல் செய்வது அம்மக்களுக்கான குறைந்தபட்ச மரியாதை. நிகழ்வை சூன்-26 உலக சித்திரவதைகுள்ளாக்கப்படோருக்கான ஆதரவு தினத்தில் மெரீனாவில் ஒன்றுகூடுவோம். ஒளியேந்தி அஞ்சலி செலுத்துவோம். இரு வாரங்களுக்கு முன் மே 18 ம் தேதி அன்று மெரினாவில் ஈழப்படுகொலைகள் நினைவாக மெழுகுதிரி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. அப்பொழுது அங்கு வந்திருந்த பொது மக்கள் பலரும் என்ன நிகழ்வு நடைபெறுகிறது என்று கேட்டறிந்து அவர்களும் தத்தம் குடும்பத…
-
- 0 replies
- 354 views
-
-
உலகக் கோப்பை மகளில் கால்பந்து போட்டி-'ஜோசியம்' சொல்லும் ஆக்டோபஸ் பாவ்லா பெர்லின்: உலகக் கோப்பை மகளிர் கால்பந்தாட்டப் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், வெல்லப் போவது எந்த அணி என்பது குறித்து ஆருடம் சொல்ல ஆரம்பித்துள்ளது ஆக்டோபஸ் பாவ்லா. கடந்த உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டிகளின்போது ஒவ்வொரு போட்டியின்போதும் வெல்லப் போகும் அணியை மிகச் சரியாகச் சொல்லி உலகளவில் பிரபலமானது ஆக்டோபஸ் பால். ஆனால், உலகக் கோப்பை போட்டிகள் முடிவடைந்த சில மாதங்களில் பால் இறந்தது. இந் நிலையில் பெண்கள் கால்பந்தாட்டப் போட்டி நாளை பெர்னிலில் தொடங்குகிறது. இந்தப் போட்டிகளில் ஜோதிடம் சொல்ல வந்துவிட்டது புதிய ஆக்டோபஸ்சான பாவ்லா. முதல் போட்டி ஜெர்மனி…
-
- 3 replies
- 1k views
-
-
சகவாச தோஷத்தால் காங்கிரஸுக்குத் தோல்வி! – ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கண்ட தோல்வி, தி.மு.க.வுடனான உறவு, அ.தி.மு.க. அரசின் ஆரம்ப நடவடிக்கைகள் – ஆகிய விஷயங்கள் பற்றி, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ‘துக்ளக்’கிற்கு அளித்த பேட்டி: கேள்வி : கடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் 63 தொகுதிகளில் போட்டியிட்டு 5 தொகுதிகளில் மட்டும்தான் வெற்றி பெற்றது. இத்தகைய மோசமான தோல்விக்கு என்ன காரணம்? ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் : ‘சகவாச தோஷம்’தான் எங்களது இந்த நிலைக்கு காரணம். தி.மு.க. அணியில் காங்கிரஸ் இடம் பெற்றதை மக்கள் துளியும் விரும்பவில்லை. காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டிருந்தால் கூட இப்படி ஆகியிருக்காது. இதைவிட கணிச…
-
- 0 replies
- 419 views
-
-
அமெரிக்காவின் அலெஸ்கா மாநிலத்தின் அன்கரேஜ் பகுதியில் சற்று முன்னர் பாரிய பூமி அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து இந்தப் பகுதியின் சில இடங்களில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அன்கரேஜ் பகுதியில் இருந்து மேற்காக ஆயிரம் மைல் தூரத்தில் பசுபிக் கடல் பிராந்தியத்திலேயே இந்தப் பூமி அதிர்ச்சி இடம்பெற்றுள்ளது. 7.4றிச்டர் இளவு கொண்டதாக இது பதிவாகியுள்ளது. இந்த பூகம்பத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் பற்றி இதுவரை எதுவும் அறிவிக்கப்படவில்லை. பூகம்பம் ஏற்பட்ட 800 மைல் சுற்றளவு கொண்ட பிரதேசத்துக்கே சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரதான பூமி அதிர்வைத் தொடர்ந்து 7.2 றிச்டர் அளவிலான தொடர் அதிர்வொன்றும் பதிவாகியுள்ளது An earthquake of magnitude 7.2 has struck…
-
- 1 reply
- 561 views
-
-
இரு நாடுகளின் துப்பாக்கிகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டு உயிர் பறிக்கப்படும் ராமேஸ்வரம் மீனவனின் வாழ்க்கையை அவர்களின் மொழியிலேயே பேசுகிறது லீனா மணிமேகலையின் 'செங்கடல்’ திரைப்படம். படத்துக்குத் தரச் சான்றிதழ் தர மறுத்த சென்சார் போர்டுடன் போராடி, டிரிப்யூனலுக்குப் போய் ஒரு வெட்டும் இல்லாமல் வெற்றியோடு திரும்பி இருக்கிறார் லீனா. '' 'இந்தப் படம் இலங்கை அரசை விமர்சிக்கிறது, அதனால்தான் தணிக்கைச் சான்றிதழ் தர முடியாது’ என்றார்கள். அதை எதிர்த்துத்தான் டிரிப்யூனல் போனேன். தனுஷ்கோடியில் 1,000-த்துக்கும் மேற்பட்ட தமிழ் மீனவர்களை இலங்கை ராணுவம் கொன்று இருக்கிறது. ஏராளமான விதவைகள், தாயை, சகோதரியை, சகோதரனை இழந்தவர்கள் சூழ நிற்கிறது அந்த ஊர். பெண்களை உருட்டுக்கட்டையில் தாக்கி மர…
-
- 0 replies
- 461 views
-
-
தேர்தல் தோல்விக்குப் பின் கப்&சிப்பென்று அமைதி காத்த தமிழக காங்கிரஸ் கட்சியிலிருந்து & தங்களை கடுமையாக விமர்சிப்பவர்களை எதிர்த்து முதல் குரல் கொடுத் திருப்பவர் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். காங்கிரஸ் கட்சி மீது கூட்டணிக் கட்சியினரே வைக்கும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு தமக்கேயுரிய பாணியில் சரவெடிபோல் பதிலளித்தார். காங்கிரஸ் கட்சி இலங்கைப் பிரச்னையில் காட்டிய அலட்சியம்தான் உங்கள் கூட்டணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறதே? ‘‘தங்களைத் தாங்களே பொய்யாக சமாதானப்படுத்திக் கொள்ள இங்குள்ள திராவிடத் தலைகள் இப்படி எதையாவது சொல்லலாம். தோல்விக்கான உண்மையான இரு காரணங்கள் - பெருக்கெடுத்த லஞ்ச லாவண்யம், ஊழல்.அடுத்தது குடும்ப ஆட்சியால் நடந…
-
- 0 replies
- 473 views
-
-
ஒரு மெழுகுவர்த்தியின் பயணம்'..சிறையில் மெழுகுவர்த்தி செய்ய கற்றுக் கொள்ளும் கனிமொழி! டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக எம்பி கனிமொழி, அங்கு மெழுகுவர்த்தி செய்யக் கற்று வருவதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கனிமொழி அடைக்கப்பட்டுள்ள திகார் சிறையில் பெண் கைதிகளுக்கான 6ம் எண் பிரிவில், மெழுகுவர்த்தி தயாரிப்புப் பணி நடைபெறுகிறது. கைதிகள் உபயோகமாக நேரத்தை செலவிடும் வகையில் இந்த தொழில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் மெழுகுவர்த்திகள் சிறையிலுள்ள விற்பனை மையத்தின் மூலமாகவே பொது மக்களுக்கு விற்கப்படுகின்றன. இந்த மையத்தில்தான் சக கைதிகளிடம் மெழுகுவர்த்தி செய்ய கனிமொழி கற்ற…
-
- 2 replies
- 1.6k views
- 1 follower
-