உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
27008 topics in this forum
-
மாவீரன் முத்துக்குமார் சிலை திறப்புக்கு தடை நீங்கியது! நவ 23, 2010 மாவீரன் முத்துக்குமாருக்கு சிலை அமைப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈழத்தமிழர்களுக்காக இன்னுயிர் நீத்த ஈகி முத்துக்குமாருக்கு தஞ்சை செங்கிப்பட்டியில் சிலை ஒன்றை நிறுவ, கடந்த சூலை மாதம் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி விழா நடத்தியது. மாவீரன் முத்துக்குமாரின் சிலையை இளந்தமிழர் இயக்கம் வடிவமைத்து வழங்கியது. இந்நிகழ்வின் போது, பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கிய காவல்துறை, மாவீரன் முத்துக்குமாருக்கு சிலை வைக்க அனுமதியளிக்கவில்லை. இதையடுத்து சிலையை நிறுவ த.தே.பொ.க. சார்பில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்நிலையில், …
-
- 3 replies
- 523 views
-
-
அமெரிக்காவின் ஆதரவுடன் மட்டுமே ஐ.நா.பாதுகாப்புப் பேரவையின் நிரந்தர உறுப்பினராக இந்தியா ஆக முடியாது என்றும், அதற்கு சீனா, இரஷ்ய ஆதரவும் தேவை என்றும் ஐ.நா.விற்கான பாகிஸ்தானின் தூதர் அப்துல்லா ஹாரூன் கூறியுள்ளார். பாகிஸ்தான் ஹைதராபாத் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அப்துல்லா ஹாரூன், “சீனா, இரஷ்ய ஆதரவு பெற்று நிரந்தர உறுப்பினராக ஆனாலும், வீட்டோ அதிகாரமற்ற இந்தியாவால் பாகிஸ்தானிற்கு எந்த அச்சுறுத்தலும் இருக்காது” என்று கூறியுள்ளார். பாகிஸ்தானை பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் தங்களது நண்பன் என்று நாளும் கூறிக்கொள்ளும் அமெரிக்கா, ஐ.நா.பாது.பே.யின் நிரந்தர உறுப்பினராக ஆதரவு அளிக்கும் என்ற செய்தி பாகிஸ்தானில் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. ஐ.நா.வின் நிரந்தர உறுப்பினர்…
-
- 2 replies
- 725 views
-
-
. விஜயகாந்துக்கு அமெரிக்க இறையியல் பல்கலை டாக்டர் பட்டம். சென்னை: சமூக சேவை செய்ததற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் சர்ச் மேனேஜ்மென்ட் (ஐ.ஐ.சி.எம்.) என்ற இறையியல் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்குகிறது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பிளைமெளத் நகரிலிருந்து இந்த பல்கலைக்கழகம் இயங்குகிறது. சென்னை சேத்துப்பட்டில் தனியார் பள்ளி மைதானத்தில் வரும் 3ம் தேதி விஜய்காந்துக்கு இந்த பட்டம் வழங்கப்படும். இதற்கான அழைப்பிதழ் அச்சடிப்பு, நிகழ்ச்சி ஏற்பாடுகளை தே.மு.தி.க. நிர்வாகிகள் செய்து வருகின்றனர். நன்றி தற்ஸ் தமிழ். .
-
- 1 reply
- 684 views
-
-
London 80 Gigapixels This Photo is the largest 360° Panorama in the world as of November 2010. http://www.360cities.net/london-photo-en.html
-
- 0 replies
- 658 views
-
-
கம்போடியாவின் "தண்ணீர் திருவிழாவில்" பயங்கரம் ஒரு முக்கிய திருவிழாவான கம்போடியாவின் "தண்ணீர் திருவிழாவில்", கடைசி நாளில் இடம்பெற்ற நிகழ்வில், குழப்பம் அடைந்த மக்கள் ஒருவர் மேல் ஒருவரை நசித்தும், பாலத்தில் இருந்து தவறி விழுந்தும் பயங்கர அழிவு ஏற்பட்டுள்ளது. 300 க்கும் மேலானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். http://www.guardian.co.uk/world/2010/nov/22/cambodia-stampede-phnom-penh
-
- 1 reply
- 729 views
-
-
எதிர்காலத்தில் பாரிய யுத்தம் விண்வெளியில் இடம்பெறுவதற்கான சாத்தியம் இருப்பதால் கனடா தன்னை அதற்கேற்ற விதத்தில் தயார் படுத்திக் கொள்வது அவசியம் என கனடிய பாதுகாப்பு திணைக்களம் வலியுறுத்தியுள்ளது. கனடாவின் விண்வெளி பாதுகாப்பு குறித்து அதிக அக்கறை காண்பிக்கப்படுவது அவசியம் என இராணுவ அதிகாரியான கேணல் அன்றே டூபியஸ் (Andre Dupuis) நேற்றுத் தெரிவித்தார். கனடா விண்வெளி சங்கத்தின் வருடாந்த மகாநாடு நடைபெறும் நிலையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். அடுத்த மகா யுத்தம் தரையில், வானத்தில் அல்லது கடலில் நடைபெறும் என்பதிலும் பார்க்க விண்வெளியிலேயே நடக்கும் என்று எதிர்பார்க்கலாம் என அவர் குறிப்பிட்டார். விண் வெளி பாதுகாப்பு குறித்து கனடா முதன் முதலில் 12 வருடங்களுக…
-
- 3 replies
- 861 views
-
-
நில ஊழல் புகாரில் சிக்கியுள்ள எடியூரப்பாவின் முதல்வர் பதவி ஆட்டம் கண்டுள்ளது. இதைப் புரிந்து கொண்ட எடியூரப்பா, ‘அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால், எனக்குப் பதில் எனது ஆதரவாளருக்குத்தான் முதல்வர் பதவி தர வேண்டும்’ என்று நிபந்தனை விதித்துள்ளதாக டெல்லியில் பா.ஜ. வட்டாரங்கள் கூறின. கர்நாடக முதல்வர் எடியூரப்பா தனது குடும்பத்தினருக்கு அரசு நிலம் ஒதுக்கிய விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு எதிராக பா.ஜ. பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி நாடாளுமன்றத்தை முடக்கிவரும் நிலையில் எடியூரப்பா மீதான ஊழல் புகார்கள் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரை பதவியில் இருந்து நீக்கினால் மட்டுமே மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து போர்…
-
- 2 replies
- 498 views
-
-
தமது பணி இலகுவானதென நகைச்சுவையாக தெரிவித்த காரணத்தினால் ஜப்பான் அமைச்சர் ராஜினாமா 22 November 10 04:22 am (BST) தமது பணி இலகுவானதென நகைச்சுவையாக தெரிவித்த காரணத்தினால் ஜப்பான் அமைச்சரொருவர் தமது பதவியை இராஜினாமா செய்ய நேரிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜப்பானின் நீதி அமைச்சர் யானாகீடா என்பவரே இவ்வாறு தமது பதவியை இழந்துள்ளார். பணி மிகவும் இலகுவானதென நகைச்சுவையாக தெரித்த காரணத்தினால் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக பதவியை இராஜினாமா செய்துள்ளார். நீதி அமைச்சர் பதவி விலகியதனால் முக்கிய வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதில் ஆளும் கட்சி நெருக்கடிகளை எதிர்நோக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. தமது பதவியை இராஜினாமா செய்வதாக நீதி அமைச்சர் தலைநகர் டோ…
-
- 2 replies
- 521 views
-
-
ஏற்கனவே யாராவது இதனை இங்கு இணைத்திருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்.
-
- 2 replies
- 1.4k views
-
-
புஸ் காலத்தில் மூன்று சாத்தான்கள் என்று வர்ணிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று நோர்த் கொரியா. பாகிஸ்தானுக்கு பெனசீர் பூட்டோ பிரதமாராக இருந்த பொழுது அணுஆயுத தொழில்நுட்பத்தை நீண்டதூர ஏவுகணை தொழில்நுட்பத்தை கொடுத்து நோர்த் கொரியா பெற்றுக்கொண்டது. பல தடைகளுக்கு மத்தியில் தனது அணுஆயுத வல்லரசு கனவை வளர்த்து வந்தவண்ணம் உள்ளது. ஆனால் உலகின் ஒரு பட்டினி பஞ்சம் கூடிய நாடுகளில் ஒன்றாகும் நோர்த் கொரியா. தான் இரகசியமாக வடிவமைத்துள்ள ஒரு அணு ஆயுத உற்பத்திக்கான யூரேனிய தரப்படுத்தலை செய்யும் தொழில்சாலையை அமெரிக்கர் ஒருவருக்கு காட்டி மேற்கைத்திய நாடுகளை ஆச்சரியப்படுதியுள்ளது. கடந்த இரு நாட்களாக போர்த்துக்கல், லிஸ்பனில் நடந்த நேட்டோ மாநாட்டில் இது பற்றியும் விவாதிக்கப்படுள்ளது. T…
-
- 0 replies
- 768 views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 21, நவம்பர் 2010 (12:5 IST) ஜெர்மனி பாராளுமன்றத்தை தாக்க அல்கொய்தா திட்டம்! ஜெர்மனியில் அல் கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் அந்நாட்டு பாராளுமன்றத்தை தாக்க திட்டமிட்டுள்ளதாக புதிய தகவல் பரவியுள்ளது. இத்தகவலை ஜெர்மனியில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது. ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பாராளுமன்ற கட்டிடத்தில் புகுந்து அங்குள்ளவர்களை பிணைக் கைதிகளாக பிடிக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இச்செயலில் 6 தீவிரவாதிகள் ஈடுபட்டுள்ளனர். அவர்க…
-
- 2 replies
- 757 views
-
-
சி.என்.என். ஆல் நடத்தப்பட்ட யார் உலகின் தலைசிறந்த "ஹீரோ" 2010 இல் அனுராதா கொய்ராலா முதலாவதாக தெரிவுசெய்யப்பட்டு ஒரு இலட்சம் அமெரிக்க டாலர்களை தன் சேவையை தொடர பெற்றார். http://www.cnn.com/2010/LIVING/11/21/cnnheroes.hero.of.year/index.html?hpt=C1 இவர் இளம் பெண்கள் பாலியல் வேலைக்கு கடத்தப்படுதலை தடுக்கும் சேவையை செய்பவர். இதில் ஒரு தமிழரும் தனது சேவைக்காக நியமிக்கப்படிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.cnn.com/SPECIALS/cnn.heroes/archive10/naryanan.krishnan.html ==================== தொடர்புபட்ட செய்தி இவருக்கு வாக்களியுங்கள்: 2010 – உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன் http://www.yarl.com/forum3/index.php?showtopic=76881
-
- 0 replies
- 734 views
-
-
செல்டிக் புலியின் வீழ்ச்சி! எம். மணிகண்டன் சிங்கப்பூர், ஹாங்காங், தென்கொரியா போன்ற நாடுகளையும் தைவானையும் ஆசியப் புலிகள் என்பார்கள். 1980-களில் இந்த நாடுகளில் தொழில் பெருக்கம் விறுவிறுப்பாக இருந்தது. முடங்கிக் கிடந்த பொருளாதாரம், அசுர வேகத்தில் வளர்ச்சி கண்டது. இந்த நான்குகால் பாய்ச்சலின் வேகத்துக்காக கிடைத்ததுதான் பொருளாதாரப் புலிகள் என்கிற பட்டம். 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையையும் இப்போதைய நிலையையும் ஓப்பிட்டுப் பார்த்தால், இது உண்மையான பொருளாதார வளர்ச்சி என்பதை ஒப்புக் கொள்ள முடியும். 1990-களின் மத்தியில் ஆசியப் புலிகளின் வேகம் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றைத் தொற்றிக் கொண்டது. அவற்றுள் ஒன்றுதான் அயர்லாந்து. பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்துக் கொ…
-
- 1 reply
- 757 views
-
-
தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலிலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தொடரும் என்று மூத்த காங்கிரஸ் தலைவரும் மத்திய நிதியமைச்சருமான பிரணாப் முகர்ஜி அறிவித்தார். மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் துரை தயாநிதிஅனுஷா திருமணம் வியாழக்கிழமை மதுரையில் நடந்தது.மணவிழாவில் பிரணாப் பேசியதாவது;மாநிலத்திலும் மத்தியிலும் எங்கள் கூட்டணி 2004 இல் தொடங்கியது.ஆறரை ஆண்டுகள் முடிந்துவிட்டன.நாங்கள் ஒன்றாக இருப்பதால் இன்னும் நிறைய சாதனை படைப்போம்.இதில் எந்த சந்தேகமும் இல்லை. கடந்த ஆறரை ஆண்டுகளில் நாட்டில் சமூகபொருளாதார வளர்ச்சிக்கு காரணமாக உள்ள ஐக்கிய முற்போக்குக்கூட்டணி அடுத்த மூன்றரை ஆண்டுகளுக்குக்கும் தொடரும்.வரும் காலங்களில் இந்தக்கூட்டணி இன்னும் நிறையச் செய்திடமுடியும்.நாட்டின் அரசியல் ம…
-
- 0 replies
- 474 views
-
-
நேட்டோ உச்சி மாநாடு 19 மற்றும் 20ம் நாள் போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் நடைபெறும். இந்த உச்சி மாநாட்டின் மிக முக்கிய கடமை, நேட்டோவின் புதிய நெடுநோக்கு திட்டத்தை வகுப்பது தான். நேட்டோ 28 உறுப்பு நாடுகளின் தலைவர்கள், நேட்டோவின் புதிய நெடுநோக்கு திட்டத்தை அங்கீகரித்து, புதிய வளர்ச்சி போக்கை தெளிவுப்படுத்தி, நேட்டோவின் வாழ்வு மற்றும் வளர்ச்சியின் தத்துவத்தைக் கண்டறிய வேண்டும். நேட்டோவின் புதிய நெடுநோக்கு திட்டம், நேட்டோ வளர்ச்சிக்கு வழிகாட்டும் ஆவணமாகும். நேட்டோவின் சாராம்சம், நோக்கம், கடமை ஆகியவற்றை இது முடிவு செய்யும். 1949ம் ஆண்டு நேட்டோ உருவாகிய பிறகு, 6 புதிய நெடுநோக்கு திட்டங்களை உருவாக்கியுள்ளது. இவற்றில் 2 திட்டங்கள் முக்கியமானவை. லிஸ்பன் உச்சி மாநாட்டி…
-
- 0 replies
- 903 views
-
-
பிரித்தானியாவின் இளவரசர் வில்லியம், தனது நீண்டகால பெண் நண்பி கேட் மிடில்டனை (Kate Middleton), அடுத்த ஆண்டு திருமணம் செய்துகொள்வாரென பிரித்தானிய அரச குடும்பம் அறிவித்தது. அடுத்த ஆண்டு வசந்த காலத்தில், அல்லது கோடை காலத்தில் அவர்களது திருமணம் இடம்பெறுமென்றும், திருமணம் குறித்த மேலதிக தகவல்கள் பின்னர் வெளியிடப்படுமெனவும் அரச மாளிகை அறிவித்தது. எட்டு வருடங்களுக்கு முன்னர் சென் அன்றூஸ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றபோது, அவர்கள் இருவரும் டேடிங் செய்ய ஆரம்பித்தார்கள். இளவரசர் சாள்ஸ், டயானாவைத் திருமணம் செய்து அடுத்த ஆண்டுடன் முப்பது வருடங்கள் நிறைவடைகின்றன. மிடில்டன் குடும்பத்தினர், அரச குடும்பத்தினரோ, பிரபுக் குடும்பத்தினரோ அல்லவென்பது குறிப்பிடத்தக்கது. …
-
- 17 replies
- 1.7k views
-
-
காஷ்மீர் குறித்து ஈரான் தலைவர் அயாத்துல்லா கமேனி தெரிவித்த கருத்து குறித்து அந்நாட்டு தூதரை நேரில் அழைத்து இந்தியா தனது ஆட்சேபத்தை தெரிவித்துள்ளது. ஹஜ் யாத்ரீகர்களுக்கான செய்தி ஒன்றை வெளியிட்டிருந்த அயாத்துல்லா கமேனி, உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் ஜம்மு காஷ்மீரில் நடக்கும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கூறியிருந்ததோடு, வட இந்தியா ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் பாகிஸ்தான் போன்று இருப்பதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில் கமேனியின் இந்த கருத்து குறித்து கடும் அதிருப்தியடைந்த இந்திய அயலுறவுத் துறை அமைச்சகம், டெல்லியிலுள்ள ஈரானிய தூதரக அதிகாரியை சம்மன் அனுப்பி இன்று நேரில் வரவழைத்தது. பின்னர் அவரிடம் இந்திய அயலுறவுத் துறை அமைச்சக இணைச் செயலர…
-
- 1 reply
- 727 views
-
-
விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்திருந்த மத்திய அரசின் அறிவிக்கையை உறுதி செய்து சிறப்புத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு எதிராக கடந்த 1991 ஆம் ஆண்டு விதிக்கப்பட்டுள்ள தடையை, இந்திய அரசு இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நீட்டித்து வருகிறது. இதன்படி கடந்த மே மாதம் தடை நீட்டிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையடுத்து, மத்திய தீர்ப்பாயம் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்தியது. டெல்லி உயர்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நீதிபதி விக்ரம் ஜித் சென் தலைமையிலான தீர்ப்பாயம் சென்னை, உதகமண்டலம், டெல்லியில் கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்தியது. விடுதலைப்புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டு விட்டதாக அறிவிக்கப்ப…
-
- 13 replies
- 1.1k views
-
-
இந்த மாதத்தின் இறுதிப் பகுதியில் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெறலாமென ஜேர்மனியின் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனையடுத்து, விமான நிலையங்கள், தொடரூந்து நிலையங்கள் உட்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் அதிகரித்துள்ளார்கள். இந்த மாதத்தின் இறுதிப் பகுதியில் தாக்குதல்களை நடத்துவதற்குப் பயங்கரவாதிகள் திட்டமிடுவதற்கான தெளிவான அறிகுறிகள் உள்ளதாகவும், மற்றொரு நாட்டிடம் இருந்து அது குறித்த தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், ஜேர்மனியின் உள்துறை அமைச்சர் தெரிவித்தார். http://www.cmr.fm/thamilfm/Newclients/NewsDetail.aspx?ID=5437 http://www.dw-world.de/dw/article/0,,6241246,00.html
-
- 1 reply
- 662 views
-
-
லண்டனில் தீ விபத்து: இலங்கை இளைஞர் பலி வீரகேசரி இணையம் 11/18/2010 11:58:34 AM லண்டனில் உள்ள மாடிக் கட்டிடமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தால் இலங்கை இளைஞர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். சாய்தமருதுவைச் சேர்ந்த 30 வயதுடைய அப்துல் அஸீஸ் பௌசுல் இஹ்ஸான் என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் தங்கியிருந்த மாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட மின்னொழுக்கின் காரணமாக இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. __
-
- 0 replies
- 489 views
-
-
திமுகவைச் சேர்ந்த மத்திய தகவல் தொழில்நுட்ப மற்றும் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். 2ஜி எனப்படும் இரண்டாம் தலைமுறை தொலைத் தொடர்பு அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுத்தும் வகையில் முறைகேடு நடந்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவர் பதவி விலகியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னையிலிருந்து டெல்லி வந்த அவர், நேரடியாக பிரதமரின் இல்லத்துக்குச் சென்று தனது ராஜிநாமா கடிதத்தை சமர்ப்பித்தார். பிரதமரிடம் தனது ராஜிநாமாவை சமர்ப்பித்துவிட்டு வெளியே வந்த ராசா செய்தியாளர்களிடம் பேசும்போது, தனது கட்சித் தலைவரின் அறிவுரையின்பேரில், அரசுக்கு ஏற்படும் தர்மசங்கடத்தைத் தவிர்க்கும் வகையில் பதவியை ராஜிநா…
-
- 4 replies
- 940 views
-
-
மத்திய அமைச்சர் பதவியை ஆ. ராசா ராஜிநாமா செய்திருப்பதைத் தொடர்ந்து கூட்டணியில் எந்தவொரு சூழலையும் எதிர்கொள்ள திமுக தயாராகி வருவதாகத் தெரிகிறது. 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு விவகாரத்தில் ராசா எந்தத் தவறும் செய்யவில்லை என்பதால், அவர் பதவி விலக வேண்டியதில்லை என்று திமுக தலைவரும் தமிழக முதல்வருமான கருணாநிதி சனிக்கிழமை மாலை வரையில் கூறி வந்தார். பிரதமரின் சார்பில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி முதல்வரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை ஆ. ராசா, டி.ஆர். பாலுவுடன் நீண்டநேரம் ஆலோசனை நடத்தினார். பிறகு, நாடாளுமன்றம் சுமுகமாக நடக்க உதவும் வகையில் ராசாவைப் பதவிவிலகக் கோருவதென்ற அறிவிப்பை ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியிட்டார். கடந்த 2 ஆண்…
-
- 0 replies
- 501 views
-
-
பிச்சை எடுத்து, ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி வருகிறார் காரைக்குடியை சேர்ந்த செல்வராஜ் (69). மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த இவர், மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரியில் படித்து, பி.ஏ., பொருளாதார பட்டம் பெற்றவர். போலியோ தாக்கி கால்கள் செயல் இழந்ததால், கைகளில் செருப்பை மாட்டி கொண்டு, தவழ்ந்து செல்கிறார். திருமணம் செய்து கொள்ளாத இவருக்கு வேலையும் கிடைக்கவில்லை. உசிலம்பட்டியில் சைக்கிள் பழுதுபார்க்கும் கடை நடத்தி, நஷ்டமானதால், காரைக்குடிக்கு இடம் பெயர்ந்தார். யாசகம்: தற்போது இவரது தொழில் யாசகம் செய்வது. இது தவறு தான். ஆனால், "கற்கை நன்றே, கற்கை நன்றே. பிச்சை புகினும் கற்கை நன்றே' என்ற நன்னெறியை தழுவி, கடந்த நான்கு ஆண்டாக, ஏழை மாணவர்களுக்கு (இலவச) கல்விச்செல்வம் கொடுத்து வருகிறா…
-
- 1 reply
- 698 views
-
-
ஐ.நா. பிரச்சினைக்குரிய விஷயங்கள் பட்டியலிலிருந்து ஜம்மு காஷ்மீர் நீக்கப்பட்டு விட்டது. தீர்க்கப்படாத பிரச்சினைகள் என்று ஒரு பட்டியலை வைத்துள்ளது ஐ.நா. அதில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பெயரையும் சேர்த்து வைத்திருந்தனர். தற்போது அதை ஐ.நா. நீக்கியுள்ளது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐ.நா..வுக்கான பாகிஸ்தான் பிரதிநிதி அஜ்மத் ஹுசேன் சியால் கூறுகையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் மிகப் பெரிய பழம்பெரும் பிரச்சினை காஷ்மீராகும். ஆனால் தற்போது இப்பிரச்சினையை ஐ.நா. தனது தீர்க்கப்படாத பிரச்சினைகள் பட்டியலிருந்து நீக்கியுள்ளது. இது கண்டனத்துக்குரியதாகும். இது பொருத்தமற்ற, தேவையற்ற செயலாகும் என்றார் சியால். http://thatstamil.oneind…
-
- 2 replies
- 638 views
-
-
தனது பிரித்தானிய கணவருடன் தேன்நிலவுக்காக தென்னாபிரிக்கா சென்றிருந்த இந்திய வம்சாவளிப் பெண் ஒருவர் அங்கு படுகொலை செய்யப்பட்டுள்ளார். அனி தீவானி (28) , மற்றும் இவரது கணவரான ஸ்ரயன் (30) ஆகியோர் இருவாரங்களுக்கு முன்னர் மும்பையில் திருமண பந்தத்தில் இணைந்தனர். இருவரும் தங்களது தேன் நிலவுக்காக தென்னாபிரிக்கா சென்றனர். சனிக்கிழமை இரவு இருவரும் தங்கள் இராப்போசனத்தை முடித்துவிட்டுத் தங்கள் காரில் தங்கியிருந்த விடுதிக்கு புறப்பட்டனர். இதன்போது அவர்களது காரை வழிமறித்த துப்பாக்கிதாரிகள் இருவர், கார் சாரதியை வெளியே இழுத்துத் தள்ளிவிட்டு காரை ஓட்டிச் சென்றுள்ளனர். சுமார் 1 மணி நேர பயணத்திற்கு பிறகு ஸ்ரயனிடம் உள்ளவற்றை கொள்ளையடித்த அந் நபர்கள், அவரையும் காரிலிருந்து…
-
- 0 replies
- 715 views
-