உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26608 topics in this forum
-
தென்னிந்திய திரைப்படக் கூட்டமைப்பு மற்றும் பிலிம்சேம்பர் விடுத்த வேண்டுகோள் மற்றும் தடை எச்சரிக்கையை அலட்சியப்படுத்திவிட்டு, ஐஃபா விழாவில் பங்கேற்ற வட இந்திய நட்சத்திரங்கள் அனைவரது படங்களுக்கும் இன்றுமுதல் தடை விதிக்கப்படுகிறது. தென்னிந்தியாவின் 5 மாநிலங்களிலும் இந்த நடிகர் நடிகைகள் தொடர்புடைய எந்தப் படத்தையும் விநியோகஸ்தர்கள் வாங்க மாட்டார்கள், திரையரங்குகளில் ரிலீஸ் செய்யவும் மாட்டார்கள்.பெஃப்ஸி அமைப்பின் தலைவர் வி.சி.குகநாதன் இதனைத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: இலங்கையில் நடைபெறும் படவிழாவில் பங்கேற்க வேண்டாம் என்று தென்னிந்திய திரையுலகின் அனைத்து அமைப்புகளும் கேட்டுக் கொண்டன. அதை ஏற்று பலபேர் அவ்விழாவுக்கு செல்லவில்லை. எங்கள் வேண்டுகோளுக்கு மரி…
-
- 4 replies
- 437 views
-
-
காஸ்ஸாவுக்கு மீண்டும் நிவாரண உதவிக் கப்பல்களை அனுப்பப் போவதாகவும்,அதனை இஸ்ரேல் தடுத்தால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் காஸ்ஸா விடுதலை இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காஸ்ஸாவுக்கு உதவிப்பொருள்களை ஏற்றிக்கொண்டு சென்ற துருக்கிக் கப்பலை,கடந்த திங்கட்கிழமையன்று இரவு நடுக்கடலில் இஸ்ரேல் கடற்படையினர் வழி மறித்து உள்ளே நுழைந்து,சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதில் 15 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்துக்கு ஐ.நா. மற்றும் பல்வேறு உலக நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில்,காஸ்ஸாவுக்கு மீண்டும் உதவிக் கப்பல்களை அனுப்பப் போவதாகவும்,அதனை இஸ்ரேல் தடுத்தால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் காஸா விடுதலை இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காஸ்ஸாவுக்கு மீண்டும…
-
- 0 replies
- 331 views
-
-
தமிழ்நாடு சென்னையிலுள்ள ஐந்து திரையரங்குகளில் வெளியிடப்பட்டிருந்த இந்தி நடிகர் ஹ்ரிதிக் ரோஷனின் புதிய திரைப்படமான "கைட்ச்" ரத்து செய்யப்பட்டுள்ளது. கொழும்பில் நடைபெற்றுவரும் ஐஃபா சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் கலந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே குரித்த திரப்படம் ரத்து செய்யப்பட்டுள்லதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.tamil.dailymirror.lk/செய்திகள்/2852
-
- 0 replies
- 456 views
-
-
முதல் ஒரு நாள் போட்டியில் ஜிம்பாப்வேயிடம் தோல்வியைச் சந்தித்த இந்திய அணி, இன்று ஹராரேயில் நடந்த 2வது போட்டியிலும் கேவலமான முறையில் தோல்வியைச் சந்தித்தது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி இந்தியாவை முதலில் பேட் செய்யப் பணித்தது. முரளி விஜய்யும், திணேஷ் கார்த்திக்கும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இந்த முறையும் விஜய் ரன் குவிக்கத் தவறினார். 56 பந்துகளைச் சந்தித்த அவர் வெறும் 21 ரன்களை மட்டுமே எடுத்தார். திணேஷ் கார்த்திக் 47 பந்துகளைச் சந்தித்து 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விராத் கோலி 18, ரோஹித் சர்மா 13 ஆகியோர் சொற்ப ரன்களில் விழுந்தனர். ரோஹித் சர்மா அவுட் ஆனதுமே இந்தியா பெரிய ஸ்கோரை எட்டாதோ என்ற சந்தேகம் வந்து விட்டது. கேப்டன் சுரேஷ் ரெய்னா 3 ரன்களில் சு…
-
- 3 replies
- 664 views
-
-
"Sonia Gandhi simply can't believe that the man she loves is dead and she will no longer feel his caresses or the warmth of his kisses. The Hindu priests refused to allow her to be present at the cremation. It is not the custom for the widow to be there, even less if she is of another religion. But here Sonia was inflexible. Under no circumstances would she stay at home while the whole world went to witness her husband's second death." This is an excerpt from Madrid-based writer Javier Moro's El Sari Rojo, a book that is the latest to come under the Congress' censor radar. Moro will soon be out with the English version of the book that has caused a furore in t…
-
- 1 reply
- 633 views
-
-
Home » புலத்தமிழர் » (2ம் இணைப்பு) பிரித்தானியாவின் முன்பள்ளிகளில் தமிழ்மொழி கற்பிக்க ஏற்பாடு (2ம் இணைப்பு) பிரித்தானியாவின் முன்பள்ளிகளில் தமிழ்மொழி கற்பிக்க ஏற்பாடு * இவ் விடயம் 01. 06. 2010, (வியாழன்), தமிழீழ நேரம் 21:14க்கு பதிவு செய்யப்பட்டது புலத்தமிழர் முன்பள்ளிகளில் தமிழ்மொழி ஒரு பாடமாக கற்பிக்கப்படுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரிட்டிஷ் அரசின் புதிய கல்விக் கொள்கைக்கமைய எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் தமிழ்மொழி கற்பிக்கப்டுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. http://www.nerudal.com/nerudal.16610.html பிரித்தானியாவின் கல்விப் பாடத்திட்டத்தில் தமிழ் மொழியும் ஒரு பாடமாக இணைக்கப்படவுள்ளதாக பிரித்தானியா…
-
- 0 replies
- 564 views
-
-
. டாய்லெட்டில் விமானி: 7,000 அடி கீழே பாய்ந்த துபாய்-புனே ஏர் இந்தியா விமானம். புனே: துபாயில் இருந்து புனே வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திடீரென 7,000 அடி கீழே தாவி, எதிரே வந்த விமானத்துடன் மோத இருந்த மாபெரும் விபத்து தவி்ர்க்கப்பட்டுள்ளது. கடந்த 26ம் தேதி, மங்களூர் விமான விபத்து நடந்த 4 நாட்களில், மஸ்கட் வான் வெளியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. துபாயிலிருந்து புனே வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தை 'ஆட்டோ பைலட்' கட்டுப்பாட்டில் விட்டுவிட்டு, விமானி அனுபம் திவாரி சிறுநீர் கழிக்கச் சென்றார். காக்பிட்டில் துணை விமானி இருந்தார். அப்போது அந்த விமானம் மஸ்கட் மீது 37,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. இந் நிலையில் வானில் வெற்றி…
-
- 7 replies
- 1.3k views
-
-
துருக்கி-இஸ்ரேல் மோதல் முற்றுகிறது மத்திய கிழக்கின் காசா பகுதிக்கு உதவி நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல் தொடரணி மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில், அதிலிருந்த நான்கு துருக்கிய செயற்பாட்டாளர்கள் கொல்லப்பட்டது துருக்கியில் தேசிய உணர்வுகளை பெருமளவில் தூண்டிவிட்டுள்ளது. இந்தச் சம்பவத்தை அடுத்து, இஸ்ரேலுடனான அனைத்து இராணுவ மற்றும் பொருளாதார உறவுகளையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என துருக்கிய நாடாளுமன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. துருக்கியை ஆளும் நீதி மற்றும் வளர்ச்சிக்கான கட்சியின் சில உறுப்பினர்கள் இஸ்ரேல் மீது இன்னும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் முகமான அறிக்கையை கோரினார்கள். இதில் இஸ்ரேலுடன் துருக்கிக்கு இருக்கும் குறிப்பிடத்தக்க …
-
- 0 replies
- 596 views
-
-
இந்தியாவில் ரயில் மீது மாவோயிஸ்ட் போராளிகள் நடத்திய தாக்குதலில் இதுவரையில் 65பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். மும்பையிலிருந்து மேற்கு வங்க மாநிலத்திலுள்ள மித்னாபூர் மாவட்டத்தை நோக்கிப் பயணித்த பயணிகள் ரயில் இலக்கு வைக்கப்பட்டு தகர்க்கப்பட்டது. தடம் புரண்ட நிலையிலுள்ள ரயில் பெட்டிகளை படத்தில் காணலாம்: http://www.tamil.dailymirror.lk/2009-08-26-06-32-39/2682
-
- 10 replies
- 905 views
-
-
காசாவுக்கு அனுப்பப்பட்ட நிவாரணக் கப்பல்கள் மீது இஸ்ரேலியக் கொமாண்டோக்கள் தாக்குதல் இஸ்ரேலிய பொருளாதார மற்றும் ராணுவ முற்றுகைக்குள் அகப்பட்டிருக்கும் காசாப் பகுதி பலஸ்த்தீனியர்களைக் காப்பாற்றும் முயற்சியாக உலகெங்குமுள்ள மனித நேய அமைப்புக்கள், இஸ்லாமிய நிவாரண அமைப்புக்களால் ஒழுங்குசெய்யப்பட்ட நிவாறணக் கப்பல்த் தொகுதி மீது நேற்று இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகளின் கொமாண்டோக்கள் நடத்திய திடீர் தாக்குதலில் இதுவரை 19 நிவாரணப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். நிராயுத பாணிகளாக இருந்த கப்பல் சிப்பந்திகள் மீது இக்கொடுமையான தாக்குதலை நடத்திவிட்டு, "கப்பலிலிருந்து எம்மை நோக்கி துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன, அதனால்த்தான் திருப்பித் தாக்க வேண்டி ஏற்பட்டத்" என்ற வழமையான அடக்கு…
-
- 3 replies
- 647 views
-
-
கொழும்பு: உலகெங்கும் உள்ள தமிழர்களின் தொடர் கோரிக்கைகள், போராட்டங்களுக்கு மதிப்பளித்து கொழும்பு நகரில் நாளை தொடங்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் கலந்து கொள்வதில்லை என்று இந்தித் திரையுலகின் அனைத்து சூப்பர் ஸ்டார் நடிகர்களும், நடிகைகளும் முடிவு செய்துள்ளதால், கொழும்புப் பட விழா களையிழந்துள்ளது. கொழும்பில் நாளை தொடங்கி 3 நாட்களுக்கு இஃபா எனப்படும் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடைபெறுகிறது. இதில் அமிதாப் பச்சன் உள்ளிட்ட வட இந்திய திரையுலகப் பிரபலங்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நாம் தமிழர் இயக்கம் களத்தில் இறங்கியது. பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்து ரத்தக்கறையுடன் உள்ள ராஜபக்சே அரசு, தனது சுய லாபத்துக்…
-
- 0 replies
- 369 views
-
-
இஸ்ரேல் மீது சர்வதேச கண்டனம் காசாவை நோக்கிச் சென்ற உதவி நிவாரணக் கப்பல்களின் மீது இஸ்ரேலிய கமாண்டோக்கள் நடத்திய தாக்குதல் குறித்து பக்கசார்பற்ற விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டுமென்று ஐநாவின் பாதுகாப்புச் சபை விடுத்துள்ள அறிக்கை ஒன்று கூறியுள்ளது. அந்த விசாரணை உடனடியாகவும், பக்கசார்பற்றதாகவும், நம்பகத்தன்மை மிக்கதாகவும், வெளிப்படைத்தன்மை மிக்கதாகவும் இருக்க வேண்டும் என்று பாதுகாப்புச் சபையின் அறிக்கை கூறுகிறது. இந்தத் தாக்குதல் குறித்து கடுமையான சர்வதேச கண்டனம் எழுந்துள்ள அதேவேளை காசா மீதான தடைகளை இஸ்ரேல் நீக்க வேண்டும் என்று பல நாடுகள் வலியுறுத்தியுள்ளன. இரவு முழுவதும் பாதுகாப்புச் சபையின் கூட்டம் பல மணி நேரம் விவாதித்ததை அடுத்தே இந்த தீர்மானம் வெளியாகி…
-
- 0 replies
- 450 views
-
-
Save Tamils Movement has launched a global petition demanding the change of IIFA 2010 venue from Colombo. Only 5 days left for us to act. When we get more than 1000 signatures, we will use it to mount pressure on Bollywood. Request you to sign the petition (will take just 2 mins) and pass it on to friends through all possible means (Facebook, Twitter, blog, websites, fwd mails). http://save-tamils.org/sign-petition.html
-
- 2 replies
- 824 views
-
-
பெளர்மணி, அமாவாசை நாட்களில் தான் சுறா மீன்கள் மக்களை அதிகம் தாக்குதவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதிலும் கருப்பு, வெள்ளை நீச்சல் உடைகளில் குளிப்பவர்களையே சுறாக்கள் அதிகம் தாக்குவதும் தெரியவருகிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரை குறிப்பாக ஆகஸ்ட் மாதங்களில் தான் சுறா தாக்குதல்கள் அதிகமாக உள்ளதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது. அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள வோலுசியா பகுதி கடற்கரையில் தான் உலகிலேயே மிக அதிக அளவில் சுறா தாக்குதல்கள் நடக்கின்றன. இந்தப் பகுதியில் கடந்த 50 ஆண்டுகால சுறா தாக்குதல்களை புளோரிடா பல்கலைக்கழகம் ஆய்வு செய்ததில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன. 1996ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் உலகில் நடந்த சுறா மீன்களின் த…
-
- 4 replies
- 949 views
-
-
இலங்கை படவிழா: மம்முட்டி, மோகன்லால் புறக்கணிப்பு இலங்கையில் வருகிற 3, 4, 5ந் தேதிகளில் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடக்கிறது. ஈழத்தமிழர்களை கொன்று குவித்த இலங்கை நாட்டில் இவ்விழாவை நடத்தக்கூடாது என்று எதிர்ப்புகள் கிளம்பின. வேறு நாட்டுக்கு மாற்றும்படியும் வற்புறுத்தப்பட்டன. அது ஏற்கப்படவில்லை. இதையடுத்து இலங்கை படவிழாவுக்கு செல்லும் நடிகர், நடிகைகள் வீடுகளில் முற்றுகை போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்தியாவில் இருந்து நடிகர், நடிகைகள் யாரும் இலங்கை பட விழாவுக்கு செல்லக்கூடாது என்றும், மீறி சென்றால் அவர்கள் படங்களை தியேட்டர்களில் திரையிட தடைவிதிக்கப்படும் என்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை உள்ளிட்ட திரைத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். …
-
- 2 replies
- 466 views
-
-
நடிகர் விஜய் அரசியலில் குதிப்பது தவிர்க்க முடியாதது என்று அவரது தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் கூறினார். எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரிப்பில் உருவாகியுள்ள 'வெளுத்துக்கட்டு' திரைப்படத்தின் பாடல் அறிமுக விழா திருச்சியில் நடந்தது. விழாவில் கலந்து கொண்ட எஸ்.ஏ.சந்திரசேகர் நிருபர்களிடம் கூறியதாவது: நடிகர்களை நம்பி படம் எடுக்காமல் கதாபாத்திரத்தை நம்பி படம் எடுப்பது என்னுடைய வழக்கம். கதாபாத்திரத்தை நம்பி படம் எடுத்தால் யாரை வேண்டுமானாலும் வைத்து படம் எடுக்கலாம். படத்தில் ஏதாவது விஷயத்தை சொல்ல நினைப்பவன் நான். இப்போது படம் எடுப்பது ரொம்ப எளிது. ஆனால் அந்த படத்தை மக்களிடம் கொண்டு சென்று, வெற்றி பெறுவது கடினம். இதை எப்படி சமாளிப்பது என்று திரைஉலகம் திணறி கொண்டு இருக்கி…
-
- 3 replies
- 611 views
-
-
உண்ணாவிரத்தை முடிக்காவிட்டால் நாடு கடத்துவோம்: ஈழத்தமிழர்களை மிரட்டும் ஐ.நா. அதிகாரிகள் மலேசியா முகாமில் தொடர்ந்து 7வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் ஈழத்தமிழர்களின் நிலை நாளுக்கு நாள் கவலைக்கிடமாக உள்ளது. முதல் மூன்று நாட்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறு மருத்துவ உதவிகள் செய்த, முகாம் அதிகாரிகள் அதன் பிறகு மருத்துவ உதவிகளையும மருத்து விட்டனர். அதனால் இதுவரை 30க்கும் மேற்பட்டவர்கள் சுயநினைவு இல்லாமல் மயக்க நிலையில் இருக்கிறார்கள். இவர்களின் கோரிக்கைகளை கேட்கவும், பேச்சுவார்த்தை நடத்தவும், மலேசிய அதிகாரிகள் யாரும் வரவில்லை. மனித உரிமை ஆர்வலர்களுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் ஈழத் தமிழர்களை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அவர…
-
- 0 replies
- 465 views
-
-
வேலைப் பளு காரணமாக ஐஃபா விழாவில் தாம் பங்கேற்பது சாத்தியமில்லை என ஷாரூக்கான் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பில் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் தென்னிந்திய நட்சத்திரங்கள் யாரும் பங்கேற்கப் போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மீறி பங்கேற்கும் நட்சத்திரங்களின் படங்களை திரையிடமாட்டோம் என தென்னிந்திய திரைப்பட கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அதேபோல வட இந்திய நட்சத்திரங்கள் யாரும் பங்கேற்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. இலங்கையிலிருந்து இந்த விழாவை வேறு நாட்டுக்கு மாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக ஐஃபா விழா ஏற்பாட்டாளர்களிடம் தென்னிந்திய திரைப்பட பிரதிநிதிகள் நேரில் வலியுறுத்த உள்ளனர். இதையும் மீறி பல முன…
-
- 0 replies
- 480 views
-
-
இந்திய ராணுவத்தினர்-உளவுத்துறையினருக்கு விசா வழங்க கனடா மறுப்பு டெல்லி: இந்திய ராணுவம், மத்திய எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் இந்திய உளவுத்துறையில் பணியாற்றுவோருக்கும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்ர்களுக்கும் விசா வழங்க கனடா மறுத்து வருகிறது. இந்திய எல்லை பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிளாக பணியாற்றி ஓய்வு பெற்ற பதேசிங் பாந்தர் என்பவர், கனடா செல்ல விசா கோரினார். டெல்லியில் உள்ள கனடா தூதரகம் அவரை வரவழைத்து விசாரித்தது. அப்போது அங்கிருந்த அதிகாரிகள், காஷ்மீரில் வன்முறையில் ஈடுபடும் எல்லை படையில் பணியாற்றியவர் நீங்கள் என்று கூறி, அவருக்கு விசா வழங்க மறுத்து விட்டனர். இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. எல்லைப் பாதுகாப்புப் படையை மக்களுக்கு எதிராக வன…
-
- 2 replies
- 872 views
-
-
வன்முறை வேண்டாம்-நக்ஸலைட்டுகளுக்கு கருணாநிதி கோரிக்கை சென்னை: நக்ஸல்களி்ன் லட்சியங்கள் உயர்ந்தவைகளாக இருக்கலாம். ஆனால், அவற்றை நிறைவேற்ற இப்போது அவர்கள் கையாண்டு வரும் வன்முறைகள் மனித நேயத்திற்கு முற்றிலும் விரோதமானவை என்று முதல்வர் கருணாநிதி கூறினார். கோட்டையில் இன்று நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அதன் விவரம்: கேள்வி: துணை முதல்வர் பதவியினையேற்று இன்றுடன் ஓராண்டு முடிவடைகிறது. அவரது ஓராண்டு கால செயல்பாடு உங்களுக்குத் திருப்தி அளிக்கிறதா? பதில்: (சிரித்துக் கொண்டே) திருப்தி அளிக்காவிட்டாலும், திருப்தி அளிக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்... ஆனால், இவரது பணி மிகவும் திருப்தி அளிக்கிறது. கேள்வி: அவர் பதவியேற்றபோது எதிர்க் கட்சிகளுக்கும், அர…
-
- 3 replies
- 591 views
-
-
பஞ்சபூத ஸ்தலங்களில் வாயுலிங்க ஸ்தலமாக விளங்கு கிறது ஆந்திர மாநிலத்தின் காளஹஸ்தி சிவன் கோயில். இங்கே, 500 ஆண்டுகளுக்கு முந்தைய கிருஷ்ணதேவராயர் காலத்து கட்டுமானமாகிய ராஜ கோபுரம் மிக கம்பீரமானது. திடீரென்று ஒருசில நாட் களுக்குமுன் அந்த ராஜகோபுரம் உச்சியில் பெரும் விரிசல் தென்பட... அதை பக்தர்கள் கவனித்து பதறத் துவங்கிய ஓரிரு நாட்களிலேயே விரிசல் விறுவிறுவென அகண்டு கோபுரமே கிட்டத்தட்ட இரண்டாகக் காட்சி தந்து... கடைசியில் கடந்த 26-ம் தேதி இரவு எட்டு மணி சுமாருக்கு மொத்தமாக இடிந்து மண்ணாகிவிட்டது. பொடியாகி விழுந்த காளஹஸ்தி கோபுரம்... ''உட்பாதம் கொடுக்கும் எச்சரிக்கை இது?!'' பஞ்சபூத ஸ்தலங்களில் வாயுலிங்க ஸ்தலமாக விளங்கு கிறது ஆந்திர மாநில…
-
- 1 reply
- 1.4k views
-
-
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு http://www.youtube.com/watch?v=PUe932L2ERohttp://www.youtube.com/watch?v=PUe932L2ERo
-
- 1 reply
- 636 views
-
-
ராஜபக்சேவுக்கு நன்றி: காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராமநாதபுரம் தொகுதியின் எம்.எல்.ஏ.,வாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஹசன்அலி உள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இவரது வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன் கார் உட்பட பொருட்கள் திருட்டு போனது. குற்றத்தில் ஈடுபட்டதாக வீரா என்பவரை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் ஏசுவடியான் என்பவர் கோர்டில் சரணடைந்தார். திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்ட நிலையில், எம்.எல்.ஏ., சார்பில் அறிக்கை ஒன்று ராமநாதபுரம் நிருபர்களுக்கு அனுப்பபட்டது. அவ்வறிக்கையில், ‘’எனது வீட்டில் களவு போன பொருட்கள் அனைத்தும் மீட்கப்பட்டுள்ளன. இதற்கு உதவிய துணை முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் வாசனுக்கும், எப்.3 போலீஸ் ஸ்டேஷன் அதிகாரிகளுக்கும் நன்றி. ட…
-
- 0 replies
- 565 views
-
-
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம்: சீன ஆதரவு கோரும் இந்தியா வெள்ளிக்கிழமை, மே 28, 2010, 10:24[iST] பெய்ஜிங்: ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் இடம் கிடைக்க சீனாவின் ஆதரவை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கோரினார். சீனா சென்றுள்ள அவர் அந் நாட்டு அதிபர் ஹூ ஜின்டாவோவிடம் இந்தக் கோரிக்கையை முன் வைத்தார். இந்தியாவும், சீனாவும் தூதரக உறவுகளை மேற்கொண்டு 60 ஆண்டுகளாகின்றன. இதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் 6 நாள் பயணமாக சீனா சென்றுள்ள பிரதிபாவுக்கு பெய்ஜிங் மக்கள் மாமன்றத்தில் பாரம்பரிய முறையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையுடன் அவரை சீன பிரதமர் வென் ஜியாபோ வரவே…
-
- 8 replies
- 883 views
-
-
சென்னையைச்சேர்ந்த இளைஞர் ஒருவர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி ‘தமிழ் வாழ்க’ என்று எழுதப்பட்ட பெயர் பலகையையும் நட்டி சாதனை படைத்துள்ளார். சென்னை ராயப்பேட்டை லொயிட்ஸ் சாலையைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (26) என்பவரே இவ்வாறு சாதனை படைத்துள்ளார். சந்தோஷ்குமார் (26). சிங்கப்பூரில் ஒரு தனியார் வங்கியில் பணிபுரிகிறார். எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் தமிழர் என்ற சாதனையை படைத்துள்ள இவர் சிறுவர்கள் மீதான பாலியல் கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வுகளுக்கு, இந்த சாதனையை அர்ப்பணிப்பதாக தெரிவித்துள்ளார். காத்மண்டுவில் இருந்து 30ஆம் திகதி எவரெஸ்ட் சிகரம் ஏறும் சாதனை பயணத்தை ஆரம்பித்த இவர் மே 23ஆம் திகதி சிகரத்தை அடைந்தார். மேற்கு ஐரோப்பாவில் உள்ள பிளான்க், நியூசிலா…
-
- 4 replies
- 1k views
-