Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பாகிஸ்தான் பள்ளி வாசல்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பலர் கொல்லப்பட்டுள்ளனர் 28 May 10 03:24 pm (BST) பாகிஸ்தானின் பள்ளி வாசல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் பலர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. லாகூர் நகரின் இரண்டு பள்ளி வாசல்கள் மீது துப்பாக்கிதாரிகள் தாக்குதல் நடத்தியதாகவும், இந்த தாக்குதல் சம்பவத்தில் குறைந்தபட்சம் 70 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் குறிப்பிடப்படுகிறது. சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வடையக் கூடுமெனத் தெரிவிக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை மத்தியான தொழுகை நேரத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த மிலேச்சத் தனமான தாக்குதலை மேற்கொண்டவர்கள் தப்பிச் சென…

    • 0 replies
    • 402 views
  2. சென்னை: எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தோல்வியடைந்த 2 சென்னை மாணவிகள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். ஆவடி சேக்காட்டை சேர்ந்தவர் சசி (15) தேர்வில் தோல்வியடைந்ததையடுத்து உடலில் மண்ணெண்ணெணை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அதே போல கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சுகன்யா (17) ஆற்காடு ரோட்டில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். பலத்த காயத்துடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். தற்கொலைக்கு முயன்ற இன்னொரு மாணவி: கோயம்பேடு திருவீதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பிரியங்கா, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தோல்வியடைந்ததா…

  3. 2 வயதில் 40 சிகரெட் ஊதும் இந்தோனேசிய சிறுவன் இவர் தனது முதலாவது சிகரெட்டை 18 மாதத்தில் தந்தையிடம் வாங்கி ஊதியிருக்கிறார். http://www.youtube.com/watch?v=mtbDPbU1xaw வீடியோ பார்க்க... http://www.bild.de/BILD/video/clip/news/vermischtes/2010/05/26/ardi.html

  4. சென்னை: கள் இறக்க அனுமதி கோரி கொங்குநாடு முன்னேற்றப் பேரவை நடத்தும் போராட்டத்துக்கு பாஜக வாழ்த்து தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மது விற்பனையில் முதல் மாநிலமாக, போதைக்கு அடிமையானவர்களை அதிகமாகக் கொண்டிருப்பதில் முதல் மாநிலமாக தமிழகத்தை மாற்றியே தீருவது என்பதில் தமிழக அரசு தீவிரமாகவும் திட்டமிட்டும் செயல்பட்டு வருகிறது. தினமும் காலை 8 மணிக்கே மதுக் கடைகளை திறந்து வைத்து இரவு 10 மணி வரை மது விற்பனையில் ஈடுபடுவதும் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள மகாவீர் ஜெயந்தி, காந்தி ஜெயந்தி தினங்களில் கூட கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபடுவதும் நிச்சயம் மக்கள் நல அரசுக்கு இலக்கணமல்ல. பள்ளிகள், கல…

  5. . தொழிலதிபராக நடித்த நிருபரிடம் ரூ.3 கோடி லஞ்சம் கேட்ட இங்கிலாந்து இளவரசி! லண்டன்: தன்னை தொழிலதிபர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட நிருபரிடம் பிரிட்டிஷ் ராணி எலிசபெத்தின் மருமகள் சாரா ரூ. 3 கோடி லஞ்சம் கேட்டார். ராணி எலிசபெத்தின் 2வது மகன் இளவரசர் ஆன்ட்ரூ. இவரது முன்னாள் மனைவி சாரா பர்கூசன். நியூஸ் ஆப் தி வேர்ல்டு என்ற பத்திரிகையின் நிருபர் ஒருவர் இவரை சமீபத்தில் சந்தித்தார். அப்போது அவர் தன்னை இந்தியத் தொழிலதிபர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். இங்கிலாந்து நாட்டில் தொழிற்சாலை தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக ஆன்ட்ரூவை சந்திக்க விரும்புவதாகவும் சாராவிடம் கூறினார். ஆன்ட்ரூவை சந்திக்க ஏற்பாடு செய்யவேண்டுமானால் தனக்கு ரூ.3 க…

  6. மங்களூரில் தரையிறங்கிய துபாய் விமானம் விபத்தில் சிக்கி சிதறியது- 158 பேர் பலி சனிக்கிழமை, மே 22, 2010, 10:30[iST] மங்களூர்: துபாயிலிருந்து மங்களூர் வந்த விமானம் [^] தரையிறங்கிய சமயத்தில், வேகமாக ஓடி ரன்வேயை விட்டு விலகி தீப்பிடித்துக் கொண்டதில் வெடித்துச் சிதறியது. இதில் விமானத்தில் இருந்த 160 பேர் உயிரிழந்தனர். 8 பேர் படுகாயங்களுடன் மீ்ட்கப்பட்டனர். இன்று காலை ஆறரை மணியளவில் இந்த கோரச் சம்பவம் நடந்தது. விமான விபத்து குறித்து ஏர் இந்தியா நிறுவன மும்பை பிராந்திய இயக்குநர் அனுப் ஸ்ரீவத்சவா செய்தியாளர்களிடம் பேசுகையில், விபத்துக்குள்ளான அந்த போயிங் 737 விமானம் இன்று அதிகாலை 1.15மணிக்கு துபாயிலிருந்து கிளம்பி மங்களூர் வந்தது. காலை 6.03 மணியளவில் விமா…

    • 14 replies
    • 914 views
  7. திருவனந்தபுரம்: மங்களூர் விமான விபத்தில் பலியானவர்களில் 8 பேர் போலி பாஸ்போர்ட்டில் வந்திருக்கலாம் என்று தெரிகிறது. இதனால் அவர்களின் உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மங்களூர் விமான விபத்தில் பலியான 158 பேரில் 22 பேரின் உடல்கள் அடையாளம் காணமுடியாத அளவுக்கு கருகி விட்டன. அவர்களை அடையாளம் காண டிஎன்ஏ சோதனைகள் ஒருபுறம் நடக்கின்றன. அத்தோடு பயணிகள் பட்டியலையும், பாஸ்போர்ட்டில் உள்ள பெயர் விபரங்களையும் ஒப்பிட்டு பார்க்கும் பணியும் நடந்து வருகிறது. இது தொடர்பாக கேரளாவின் கோழிக்கோடு, மலப்புரத்தில் உள்ள பஸ்போ்ர்ட் அலுவலக்களின் உதவியை அதிகாரிகள் நாடியுள்ளனர். அதில திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் பலியான எட்டு பேருக்கு தங்கள் அலுவ…

  8. மாவோயிஸ்டுகள் அப்பாவிகளை கொல்வதில்லை: லாலு காவல்துறையினருக்கு உளவு சொல்பவர்களையே மாவோயிஸ்டுகள் கொல்கின்றனர் என்று ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார். பீகா‌ர் தலைநக‌ர் பா‌ட்னா‌வி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌‌ம் பே‌சிய அவ‌ர், சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங் கருத்துக்கு லாலு பிராசத் எதிர்ப்பு. மாவோயிஸ்டுகள் எப்போதும் அப்பாவிகளை கொல்வதில்லை. தண்டேவாடா பேருந்து தாக்குதலில் கொல்லப்பட்டவர்களும் உளவாளிகளே. சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் பதவி உள்ளதற்கு ராமனே பொறுப்பேற்க வேண்டும். பீகார் முதல்வரும் மாவோயிஸ்டுகளை கையாளத்தெரியாமல் விழிக்கிறார் என்றார். மேலும் பேசிய லாலு, மாவோயிஸ்டுகள் மிகப்பெரிய தீவிரவாதிகள் என்ற ராமனின் கருத்துக்கு லாலு கண்…

    • 5 replies
    • 857 views
  9. இந்தியத்தின் தலையிடா கொள்கை... ஈழத்தின் திற்வு கோல்...... * ஈழத்திற்கு இந்திய இராணுவத்தை அனுப்பாதே என விடுதலைப்புலிகள் இயக்கத் தோழர் திலீபன் மற்றும் அன்னை பூபதி ஆகியோர் தொடங்கிய உண்ணாவிரதம் தேவையற்றது. * தமிழ் மக்களின் கோரிக்கைகளையும் இறந்த விடுதலைப்புலிகளையும் மதிக்காமல் அவர்கள் மேடையிலேயே இறந்த போதும் எங்கள் தலைவர் ராஜீவ் காந்தி அதை உதாசீனப்படுத்தி ஈழத்திற்கு படைகளை அனுப்பியது சரியான நடவடிக்கை தான். இதுதான் நாங்கள் காந்திக்கு செய்யும் மரியாதையாகும்.. * அங்குள்ள தமிழ் பெண்களை இந்திய இராணுவம் வல்லுறவு செய்ததும் இளைஞர்களை கொன்று குவித்ததும் சரியே. * இந்திய இராணுவம். தமிழ் பெண்களை பாலியல் சித்தரவதைக்குள்ளாக்கி, அவர்களை பாலியல் வல்ல…

    • 22 replies
    • 5.4k views
  10. தெற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படைகளின் பெரிய தளத்தின் மீது நடத்தி தாக்குதலுக்கு தாலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. நேற்று இரவு நடத்தப்பட்ட இத்தாக்குதலில், ராக்கெட்டுகள், மார்ட்டர்ஸ், தானியங்கி ஆயுதங்கள் கொண்டு பெரும் தாக்குதல் நடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. இத்தாக்குதலில் நேட்டோ படையினரும், ஊழியர்களும் காயமுற்றுள்ளதாகவும், இதுவரை உயிரிழப்பு குறித்த எந்தத் தகவலும் இல்லை என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. http://tamil.webdunia.com/newsworld/news/international/1005/23/1100523008_1.htm

    • 0 replies
    • 461 views
  11. இந்தியாவிற்கு வேண்டியது தலையாட்டி பொம்மைகளும் வால் பிடிக்கும் குரங்குகளும் . இப்படி ஈழத்தமிழனை மாற்ற முயற்சித்து முடியாததால் ஏற்பட்ட விளைவு தான் கடந்த வருடம் நடந்த சோகம் . எல்லா வளரும் வல்லரசுகள் செய்யும் சித்து விளையாட்டு இது . இப்போது சிங்களம் அந்த வரிசையில் இருப்பது போல படுகிறது . இந்தியாவிற்கு வால் பிடிக்க அல்லது தலையாட்ட சிங்களம் மறுக்கும் போது ஏற்படும் எதிர்விளைவுகள் மிக கொடூரமாக இருக்கும் . தன் வம்சாவளியையே( ஈழ தமிழர் ), தன்னாட்டின் ஒரு பகுதியையே ( கச்சதீவு ) தன்னாட்டின் ஒரு பகுதி மக்களின்( தமிழக மக்கள் ) உறவுகளையே தன் சுய நலனுக்காக காவு கொடுத்திருக்கும் இந்தியா தான் நினைத்தது கிட்டவில்லை என்றால் என்ன செய்யும் என்று உங்களுக்கெல்லாம் சொல்லி தெரிய வேண்டியதில்…

    • 18 replies
    • 2.4k views
  12. டெல்லி: நேரு மற்றும் ராஜாஜியின் புத்தகங்களை வெளியிட மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட ரூ. 5 கோடி சிறப்பு நிதி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தலைவராகக் கொண்ட ஒரு அறக்கட்டளைக்கு சட்ட விரோதமாகத் திருப்பி விடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதைவிடக் கொடுமையாக இந்த அறக்கட்டளையில் பிரதமர் மன்மோகன் சிங்கும் ஒரு அறங்காவலராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய தணிக்கை அதிகாரியின் சிறப்பு ஆடிட்டிங்கில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளது. மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள நேரு நினைவு மியூசியம் மற்றும் நூலகம் இந்த நிதியை ஜவஹர்லால் நேரு நினைவு நிதி அறக்கட்டளைக்கு அளித்துள்ளது. இந்த அறக்கட்டளை முழுக்க முழுக்க தனியாரால் நிர்வகிக்கப்படும் அமைப்பாகும். இதில் …

  13. தமிழ் உணர்வாளர்களே... நடிகர் கமல் அவசர அறிக்கை இலங்கைத் தலைநகர் கொழும்புவில் நடைபெறவுள்ள சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவிற்கு வணிக ஆதரவு அளித்துள்ள இந்தியத் தொழில் மற்றும் வர்த்தக் கூட்டமைப்பு (FICCI) பொறுப்பிலிருந்து நடிகர் கமல்ஹாசன் விலக வேண்டும் என்று மே 17 இயக்கம் இன்று கமல் வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு கமல் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தமிழ் உணர்வாளர்களே... மேற்சொன்ன விலாசம் தவிர வேறு பொறுப்புகளில் உள்ளோர் பெயர்கள் இல்லாததால், கடிதம் ஒட்டுமொத்தமாக தமிழின உணர்வாளர்களுக்கு எழுதப்படுகிறது. அவ்விலாசம் எனக்கும் பொருந்தும் என்ற மயக்கமற்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. ஃபிக்கி …

  14. டெல்லி: டெல்லி யில் குடி போதையில் தாறுமாறாக கார் ஓட்டிச் சென்ற பெண் 2 பேரைக் கொன்றார். நேற்று இரவு 11.30 மணியளவில் கண்டோன்மென்ட் பகுதியில்,இந்த பரிதாபச் சம்பவம் நடந்துள்ளது. அவரது ஹோண்டா சிட்டி காரில் சிக்கி 2 பேர் உடல் நசுங்கி இறந்தனர். இருவரும் அந்த இடத்திலேயே இறந்தனர். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர். இருவரையும் சப்தர்ஜிங் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். காரை ஓட்டிச் சென்ற பெண் ராணுவ கர்னலின் மனைவியாம். நல்ல போதையில் இருந்தாராம். இந்த சம்பவம் தொடர்பாக அதிவேகமாக கார் ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்தியது, கொலை ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அந்தப் பெண்ணைப் பிடித்து போலீஸார் தற்போது விசாரித்து வருகின்றனர். thatstamil.com

  15. தஞ்சை: தஞ்சை செங்கிப்பட்டியில் தனியார் ஒருவர் அளித்த நிலத்தில் முத்துக்குமார் சிலையைத் திறக்க போலீசார் தடை விதித்துள்ள செயலுக்கு தமிழ் தேசிய இயக்க தலைவர் [^] பழ. நெடுமாறன் கடும் கண்னம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்துத் தன்னையே தீயில் எரித்துக் கொண்டு உன்னதமான உயிர்த்தியாகம் செய்த முத்துக்குமாரின் சிலையைத் திறப்பதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்ததை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். தஞ்சைக்கு அருகில் உள்ள செங்கிப்பட்டியில் தனியார் ஒருவர் அளித்த நிலத்தில் முத்துக்குமார் சிலையைத் திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்த் தேசிய…

  16. உச்சகட்ட கற்பனைக்குப் போயிடாதீங்க... சினேகாவின் இந்த அம்மா புரமோஷன், நிஜத்திலல்ல, திரையில். மோகன்லாலுடன் முதல்முறையாக ஜோடி சேர்ந்துள்ள சினேகா, அந்தப் படத்தில் நடிக்கும் நாடோடிகள் புகழ் அனன்யாவுக்கு அம்மாவாக நடிக்கிறாராம். மம்முட்டியுடன் மூன்று படங்களில் ஜோடி சேர்ந்துவிட்டார் சினேகா. ஆனால் மலையாளத்தின் இன்னொரு முன்னணி நடிகரான மோகன்லாலுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு மட்டும் கிடைக்கவே இல்லையாம். இப்போது அதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது அவருக்கு. ஷிகார் என தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் மோகன்லால் லாரி டிரைவராக நடிக்கிறார். அவருக்கு மனைவியாக சினேகாவும் மகளாக நாடோடிகள் புகழ் அனன்யாவும் நடிக்கிறார்கள். அனன்யாவுக்கு அம்மா என்றதும் சற்றுத் தயங்கிய சினேகாவுக்கு…

    • 3 replies
    • 802 views
  17. ஆலங்குளம்: திருமணமான அன்றே மணக்கோலத்தில் காதலனுடன் கேரளாவுக்கு தப்பியோடிய இளம்பெண்ணை ஆலங்குளம் போலீசார் மடக்கி பிடித்தனர். கயத்தாறு அருகேயுள்ள அய்யனார் ஊத்து இந்திரா நகரை சேர்ந்தவர் முகமது காசிம். இவரது மகள் ஆயிஷா. இவருக்கும் அதே ஊர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்துபட்டன் என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதல் இருந்து வந்ததுள்ளது. இந்நிலையில் ஆயிஷாவிற்கு சங்கரன்கோவிலை சேர்ந்த தீவான் மைதீன என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதன்படி நேற்று காலை அய்யனார் ஊத்தில் ஆயிஷாவுக்கும், திவான் மைதீனுக்கும் திருமணம் நடந்தது. பின்னர் மாலையில் மணப்பெண்ணுடன் மாப்பிள்ளை வீடு செல்வதற்காக கார் ஓன்றில் திவான் மைதீன், ஆயிஷா மற்றும் உறவினர்கள் சங்கரன்கோவிலுக்கு சென்று கொண…

  18. காளஹஸ்தி கோயிலில் தனக்கு சால்வை போட முயன்ற தொண்டர்கள் இருவரை கன்னத்தில் அறைந்து அதிர்ச்சி ஏற்படுத்தினார் நடிகர் [^] பாலகிருஷ்ணா. தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் பாலகிருஷ்ணா. மறைந்த ஆந்திர முதல்வர் என்டி ராமாராவின் மகன். தெலுங்கு தேசம் கட்சியின் முக்கியத் தலைவராகவும் திகழ்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவர் ஹீரோவாக நடித்து வெளியாகியுள்ள 'சிம்மா' படம் வசூலில் கலக்கி வருகிறது. இந்த வெற்றியையடுத்து, பாலகிருஷ்ணா கோயில் கோயிலாகப் போய் நேர்த்திக் கடன் செலுத்தி வருகிறார். அதன் ஒருபகுதியாக நேற்று காளஹஸ்தி கோயிலுக்கு வந்திருந்தார் பாலகிருஷ்ணா. அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளித்தனர் தெலுங்கு தேசம் கட்சியினர். அவர் கோயிலுக்குள் நுழைய முயன்…

  19. தோற்றத்தில் மட்டுமல்ல, சீற்றத்திலும் சீமான் ஒரு புலிதான் என்பதை நிருபித்தது அந்த முதல் கூட்டம்! அவரது 'நாம் தமிழர்' அரசியல் கட்சியின் முதல் பொதுக்கூட்டமல்லவா? 18-5-10 அன்று நடந்த அந்த கூட்டத்தையும் அவரது ஒவ்வொரு அசைவையும் சக அரசியல் கட்சிகளும், உலகெங்கும் வாழும் தமிழ் சொந்தங்களும் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மட்டும் நன்றாகவே உணர முடிந்தது. நெருப்பை பொட்டலத்தில் கட்டிய மாதிரி தீயாக தகித்துக் கொண்டிருந்தார்கள் திரளாக கூடியிருந்த சீமானின் தம்பிகள். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையைதான் முதல் மேடைக்கு பொருத்தமான இடமாக தேர்வு செய்திருந்தார் சீமான். ஊருக்கு ஒதுக்குபுறமாக மைதானம் இருந்தாலும், அன்றைய தினம் ஊரே அங்குதான் இருந்தது. மாலை நாலு மணிக்கு துவங்கி…

  20. சென்னை: முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை, செந்தமிழின் செம்மொழித் தகுதியை நிலைநிறுத்திய நன்னாளாக கொண்டாட வேண்டும் என்று நிதியமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான அன்பழகன் அழைப்பு விடுத்துள்ளார்.??? இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: வாழ்வில் ஓர் திருநாள் வரும் ஜுன் 3-ம் நாள் தமிழர்தம் வாழ்வில் ஓர் திருநாள்; வாழ்வினில் நலம் பெறாதார்க்கெல்லாம் நலஞ்செய் திட்டத்தால் வாழ்வினில் ஒளிபெறச் செய்த நாள் கலைஞரின் பிறந்தநாள். திராவிட இன எழுச்சிக்கும், தன்மான நல்லுணர்வுக்கும், பகுத்தறிவு வழிச் சிந்தனைக்கும், சமுதாய மறுமலர்ச்சிக்கும் வழிவகுத்து, புதியதோர் தமிழகம் [^] படைக்கவும், அல்லும் பகலும், நாளும் கிழமையும், அயராது சி…

  21. நெல்லை யில், புத்தர் சிலை அகற்றப்பட்டு, கோவில் இடித்துத் தகர்க்கப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. பாளையங்கோட்டை திருமலை நகர் பகுதியில் புத்தர் கோயில் ஒன்று கடந்த 2004 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 6 ஆண்டு காலமாக அங்கு வழிபாடும் நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று திடீரென கோட்டாச்சியர் தமிழ்ச்செல்வி தலைமையில் வந்த அதிகாரிகள் புத்தர் சிலையை அகற்றியதோடு, பொக்லைன் இயந்திரம் மூலம் கோயிலையும் இடித்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால், கோயில் ஆக்கரமிப்பு பகுதியில் கட்டப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் விளக்கம் தெரிவித்தனர். 6 ஆண்டு காலம் இல்லாமல் அதிகாரிகளுக்கு திடீர் ஞானோதயம் வந்தது ஏன் என கொதித்தெழுந்தனர். அகற்றப்பட்ட புத்தர் சிலை பாளையங…

    • 13 replies
    • 1.4k views
  22. அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றின் விஞ்ஞானிகள், இந்தியாவில் தேர்தல்களில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை தொழில் நுட்ப ரீதியாக தாக்கக்கூடிய ஒரு யுக்தியை தாங்கள் உருவாக்கியிருப்பதாகக் கூறுகிறார்கள். மிச்சிகன் பல்கலைக்கழகத்தினைச்சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இணையத்தில் பிரசுரித்திருக்கும் ஒரு வீடியோ ஒன்று, அவர்கள் தயாரித்த மின்னணு இயந்திரம் ஒன்றை வாக்குப்பதிவு இயந்திரத்துடன் இணைப்பதைக் காட்டியது. பிறகு அவர்கள் ஒரு மொபைல் தொலைபேசி வாயிலாக இந்த இயந்திரத்துக்கு செய்திகளை அனுப்புவதன் மூலம், வாக்குப் பதிவு முடிவுகளை மாற்ற முடிகிறது. இந்தியத் தேர்தல் அதிகாரிகள் தங்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களை இவ்வாறு மோசடி செய்யப் பயன்படுத்த முடியாது என்றும் மோசடி ச…

    • 4 replies
    • 701 views
  23. பூனம் – பசிக்கு உணவில்லாமல் அடிக்கடி புழுதி மண்ணைத் தின்று வந்ததால் மூன்று வயதிலேயே அவளுக்கு சிறுநீரகம் செயலிழக்க ஆரம்பித்து விட்டது. இருமிக்கொண்டே இருக்கும் அவளைப் போலத்தான் அலகாபாத் அருகிலுள்ள கானே என்ற பழங்குடிக் கிராமத்தில் இருக்கும் மற்ற ஏழைச் சிறுவர்களும் மண்ணைத் தின்கிறார்கள். உலகில் மிக வறிய நிலையில் வாழும் மக்களின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவில்தான் இருப்பதாக உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. உணவு என்பது மக்களின் அடிப்படை உரிமை என்ற போராட்டம் எழுந்திருக்கும் நிலையில் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களை வரையறுப்பதில் புது வழியைக் கடைப்பிடித்து மானிய விலையில் உணவுப் பொருட்களை பெற்றுக் கொள்ளுவதற்குத் தகுதியான மக்களின் எண்ணிக்கையை பத்துக்…

  24. வணக்கம், ஜெயா தொலைக்காட்சியில போகிற ஜக்பொட் என்கின்ற நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது, பலரை கவர்ந்தது. எங்கட வீட்டிலையும் அம்மா, அப்பா இதை ஆர்வத்தோட பார்ப்பீனம். பொது அறிவு சம்மந்தமான கேள்விகள் கேட்கப்படும், இரண்டு அணிகள் பங்குபற்றும், பார்ப்பதற்கு மிகவும் சுவாரசியமாய் இருக்கும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலையும் இரவு எட்டு மணிக்கு போகும். நானும் இடைக்கிடை பார்க்கிறது. இந்த நிகழ்ச்சி தமிழ் சினிமா நட்சத்திரம் குஷ்பு அவர்களினால மிகவும் அழகிய முறையில நடாத்தப்பட்டு வந்தது. குஷ்பு அவர்களின் நடிப்பு, நடிகை என்கின்ற அளவில எனக்கு அவரை பெரிதாக பிடிக்கிறது இல்லை. ஆனால்.. இந்த ஜக்பொட் நிகழ்ச்சியை அவர் நடத்தும்விதம், அவரது திறமைகளை இந்த நிகழ்ச்சியில பார்த்தபோது நானும் அவர் பற்றி இருந்த தவற…

  25. சென்னை,​​ மே 16:​ பிர​பல எழுத்​தா​ளர் அனு​ராதா ரம​ணன் ​(62) சென்​னை​யில் ஞாயிற்​றுக்​கி​ழமை கால​மா​னார்.​ உடல்​ந​லக் குறைவு கார​ண​மாக அவர் மருத்​து​வ​ம​னை​யில் சிகிச்சை பெற்று வந்​தார்.​ சென்னை திரு​வான்​மி​யூ​ரில் வசித்து வந்த அனு​ராதா ரம​ணன்,​​ ஆயி​ரத்​துக்​கும் மேற்​பட்ட சிறு​க​தை​க​ளை​யும்,​​ 850 நாவல்​க​ளை​யும் எழு​தி​யுள்​ளார்.​ சிறை,​​ ஒரு வீடு இரு வாசல்,​​ கூட்​டுப் புழுக்​கள் ஆகிய இவ​ரு​டைய நாவல்​கள் திரைப்​ப​டங்​க​ளாக எடுக்​கப்​பட்​டுள்​ளன.​ எழுத்​துத் துறை​யில் சிறந்து விளங்​கி​ய​தற்​காக முன்​னாள் முதல்​வர் எம்.ஜி.ஆரி​ட​மி​ருந்து தங்​கப் பதக்​கம் மற்​றும் சிறந்த எழுத்​தா​ள​ருக்​கான ராஜீவ் காந்தி விருது என பல்​வேறு விரு​து​களை இவர் பெற்​றுள்​ளார்.​ கடந்த ச…

    • 2 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.