உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26610 topics in this forum
-
தமிழ்நாடு, புதுச்சேரியில் அமெரிக்காவின் கெஎஃப்சி உணவகத்தை பெரியார் சிந்தனை கழகத்தை சேர்ந்தவர்கள் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் தொடர்பாக உள்ளூர் விசாரணையே போதும் என்று, ஐ.நாவில் அமெரிக்கா தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்தது. இதற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், புதுச்சேரி காந்தி வீதியில் அமெரிக்காவின் கெஎஃப்சி உணவகத்தில் இன்று பெரியார் சிந்தனை கழகத்தை சேர்ந்த 5க்கும் மேற்பட்டவர்கள் உள்ளே புகுந்து, அங்கிருந்த கண்ணாடிகள், கதவுகள், கம்ப்யூட்டர், மேஜை, நாற்காலிகளை அடித்து உடைத்தனர். மேலும் அங்கிருந்த மீன் கழிவுகளை உணவகம் மீது கொட்டினர். பின்னர், அமெரிக்காவுக்கு எதிரான துண்டு பிரசுரங…
-
- 0 replies
- 823 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சீனாவின் ஏவுகணைகள் (கோப்புப் படம்) கட்டுரை தகவல் எழுதியவர், கெல்லி என்.ஜி & ஃப்ரான்செஸ் மாவோ பதவி, பிபிசி செய்திகள் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கண்டம் தாண்டிய இலக்குகளை நோக்கித் தாக்குதல் நடத்தும் தொலைதூர ஏவுகணைகளை (intercontinental ballistic missile - ICBM) வைத்துச் சோதனை நடத்தியுள்ளதாகக் கூறியிருக்கிறது சீனா. சர்வதேச கடல்பரப்பில் சீனா இத்தகைய சோதனையை மேற்கொண்டது அண்டை நாடுகளில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நாற்பது ஆண்டுகளில் முதன்முறையாக கடந்த புதன்கிழமை அன்று (செப்டம்பர் 25) இத்தகைய சோதனையை சீனா மேற்கொண்டுள்ளது. இது ஒரு வழக்கமான சோதனை ஓட்டம் தான் …
-
- 0 replies
- 393 views
- 1 follower
-
-
இஸ்ரேலிய குடியேற்றங்கள் மீது சர்வதேச விசாரணைக்கு ஐ.நா உத்தரவு! Published on March 23, 2012-11:10 pm · இஸ்ரேலிய குடியேற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையை ஐ.நா. உத்தரவிட்டுள்ளது இஸ்ரேலிய குடியேற்றத் திட்டங்களானவை பலஸ்தீனர்களின் உரிமைகளை மீறுகிறதா என்பதை ஆராய்வதற்கான சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்பது உட்பட இஸ்ரேலுக்கு எதிரான 5 தீர்மானங்களை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை நேற்று நிறைவேற்றியது. இது தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 36 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. 10 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. அமெரிக்கா மாத்திரம் இத்தீர்மானங்களுக்கு எதிராக வாக்களித்தது. இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் சார்பில் பாகிஸ்தான் இப்பிரேரணையை முன…
-
- 0 replies
- 584 views
-
-
நைஜீரியாவில் வாழ்கைசெலவு அதிகரிப்பிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 29 சிறுவர்களிற்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நேற்று இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டவேளை நால்வர் மயங்கி விழுந்துள்ளனர். வாழ்க்கை செலவு அதிகரிப்பிற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 76 பேருக்கு எதிரான தேசத்துரோக குற்றச்சாட்டுகள் உட்பட பல குற்றச்சாட்டுகளை நைஜீரியா அரசாங்கம் சுமத்தியுள்ளது. இவர்களில் 14 முதல் 17 வயதானவர்களும் காணப்படுகின்றனர். நைஜீரியாவில் வாழ்க்கை செலவு அதிகரிப்பு குறித்த விரக்தி காரணமாக பொதுமக்கள் தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆகஸ்ட் மாதம் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட நால்வர் …
-
- 0 replies
- 163 views
- 1 follower
-
-
விற்பனையை அதிகரிக்க நெருக்கடி- மது பானங்களை ஹோம் டெலிவரி செய்யும் டாஸ்மாக் கடைகள்! ஈரோடு: மதுபானக் கடைகளின் வருவாயை உயர்த்த வேண்டும் என்ற அதிகாரிகளின் நெருக்கடியால் இலவச ஹோம் டெலிவரி முறையை அரசு டாஸ்மாக் கடை பணியாளர்கள் நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளனர். டாஸ்மாக் மதுபானக் கடைகள் ஒவ்வொன்றுக்கும் அதிகாரிகள் விற்பனை இலக்கை நிர்ணயித்துள்ளனர். விற்பனை இலக்கை எட்ட முடியாத கடையின் பணியாளர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்படும் நிலையும் இருக்கிறது. இதைக் கண்டித்து தொழிற்சங்கங்களும் போராடி வருகின்றன. இந்நிலையில்தான் அதிகாரிகளின் நெருக்கடியை சமாளிக்கும் வகையில் ஈரோடு, பெருந்துறை சாலை, குமலன்குட்டை உள்ளிட்ட இடங்க்ளில் டாஸ்மாக் பணியாளர்கள்…
-
- 0 replies
- 986 views
-
-
காரைக்கால்: நாடாளுமன்றத்தில் கட்சிகளின் எம்பிக்களின் எண்ணிக்கை அடிப்படையில் இலங்கை செல்லும் எம்.பிக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் அடிப்படையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரோ, திருமாவளவனோ இக் குழுவில் இடம் பெறமுடியவில்லை என்றும் பிரதமர் அலுவலகத்துறை இணையமைச்சர் வி.நாராயணசாமி கூறினார், திருமாவளவன் இந்தக் குழுவில் இடம் பெறுவதை இலங்கை அரசு விரும்பவில்லை. இதனால் தான் அவரை இதில் சேர்க்காமல் விட்டார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந் நிலையில் காரைக்காலில் நிருபர்களிடம் பேசிய நாராயணசாமி, இலங்கைக்கு இந்திய எம்.பிக்கள் குழு செல்கிறது. இவர்கள் அங்கு செல்வதன் மூலம் அங்குள்ள தமிழர்கள் போருக்குப் பிறகு உள்ள நிலையை தெரிந்து கொள்ள முடியும். இந்தக் குழு அங்கு செல்வதால்…
-
- 0 replies
- 722 views
-
-
குண்டுப்புரளி, ஜேர்மன் விமானம் அவசர தரையிறக்கம் Ca.Thamil Cathamil December 07, 2015 Canada விமானத்தில் குண்டு வைத்திருப்பதாகக் கிடைத்த தொலைபேசி மிரட்டல் ஒன்றின் அடிப்படையில் பெர்லினிருந்து எகிப்து நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த ஜேர்மனி, கொன்டோர் விமான சேவை நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் அவசரமாக தரையிறங்கிய சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. எனினும், விமானத்தை சோதனை செய்த ஹங்கேரி பொலிசார் குண்டு எதுவும் இல்லையென பின்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.canadamirror.com/canada/53653.html#sthash.iCf6wGWb.dpuf
-
- 0 replies
- 812 views
-
-
இந்தியாவின் முதல் புல்லட் ரயிலுக்கான ஒப்பந்தம்: மோடி - அபே முன்னிலையில் கையெழுத்து ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே (இடது); இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (வலது) | பட உதவி: பிஐபி. இந்தியாவில் புல்லட் ரயில் உள்கட்டமைப்பு வசதியை நிர்மாணிப்பதற்கான ரூ.98 ஆயிரம் கோடி ஒப்பந்தம் கையெழுத்தானது. மூன்று நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, இன்று (சனிக்கிழமை) டெல்லி ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். தொடர்ந்து இருநாட்டுப் பிரதமரும் இந்திய - ஜப்பானிய தொழிலதிபர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கு தலைமையேற்று தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர். பின்னர் இருநாடுகளுக்க…
-
- 0 replies
- 543 views
-
-
அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு செயலாளர் நியமனம் January 25, 2025 02:14 pm முன்னாள் fox news தொகுப்பாளரான பீட்டர் ஹெக்செத், அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனத்திற்காக நடத்தப்பட்ட செனட் சபை வாக்கெடுப்பில், ஹெக்செத்திக்கு ஆதரவாகவும் எதிராகவும் தலா 50 வாக்குகள் அளிக்கப்பட்டன. அந்த நேரத்தில், அமெரிக்க துணைத் ஜனாதிபதி ஜே.டி. வெங்ஸ் ஹெக்செத்திக்கு ஆதரவாக வாக்களித்ததன் காரணமாக அவர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. தீவிர வலதுசாரி கிறிஸ்தவரும், கடும் கோபம் கொள்ளும் நபருமான பீட்டர் ஹெக்செத்தை இந்தப் பதவிக்கு ஜனாதிபதி டிரம்ப் பரிந்துரைத்தது தொடக்கத்திலிருந்தே சர்ச்…
-
- 0 replies
- 144 views
-
-
ஜெர்மனியின் பிரபல லூப்தான்ஸா விமான நிறுவன ஊழியர்கள் ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், அந்நிறுவனத்தின் 700 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஜெர்மனியின் மிகப்பெரிய விமான நிறுவனமாக திகழும் லூப்தான்ஸா, பல்வேறு நகரங்களுக்கும் விமானங்களை இயக்கி வருகிறது. இந்நிலையில், அந்நிறுவன ஊழியர்கள் 48 மணி நேர வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இன்று ஒரே நாளில் 700 விமானங்களை அந்நிறுவனம் ரத்து செய்தது. பிராங்பர்ட் விமான நிலையத்தில் மட்டும் 400 விமானங்களை லூப்தான்ஸா ரத்து செய்தது. முனிச் விமான நிலையத்தில் 250 விமானங்களும், மேலும் சில சிறிய விமான நிலையங்களில் 50 வரையிலான விமானங்களும் லூப்தான்ஸா நிறுவனத்தால் ரத்து ச…
-
- 0 replies
- 803 views
-
-
அவசர மருத்துவ சிகிச்சைக்காக லண்டன் புறப்பட்டுச் சென்றார் மாலத்தீவு முன்னாள் அதிபர் நஷீத் முகமது நஷீத் மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் (48) அவசர மருத்துவ சிகிச்சைக்காக நேற்று கொழும்பு நகரிலிருந்து லண்ட னுக்கு புறப்பட்டுச் சென்றார். முன்னாள் அதிபர் மவுமூன் அப்துல் கயூமின் 30 ஆண்டு கால தொடர் ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைத்து, முதன்முறையாக ஜனநாயக முறைப்படி கடந்த 2008-ல் அதிபரானார் நஷீத். 2012-ம் ஆண்டு ஊழல் புகார் காரணமாக தலைமை நீதிபதி கைது செய்யப்பட்டதால், நஷீதுக்கு எதிராக போராட்டம் வெடித்தது. இதையடுத்து அவர் பதவி விலகினார். நீதிபதி கைது செய்யப்பட்டது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் நஷ…
-
- 0 replies
- 332 views
-
-
வெற்றி திருமகள் ” பசாரா நகரை குறிவைக்கும் ஈராக்கிய அணுகுமுறைகள்” திங்கள், 12 மே 2008 [கொழும்பிலிருந்து மயூரன்] ஈராக்கின் பசாரா மாநிலத்தில் பிரித்தானிய அமெரிக்க படைகள் கூட்டாக களமிறக்கப்பட் டிருப்பது பற்றிய செய்திகள் பரவலாக பேசப் படும் இத்தருணத்தில், பசாரா மாநிலத்தின் முக்கியத்துவம் பற்றியதாகவும் பசாரா மாநிலத்தைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத் திருக்கும் சியா இஸ்லாமிய பிரிவினர் பற்றிய தாகவும் அமைகின்றது இச் சிறுகட்டுரை. ஈராக்கை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் பன்னாட்டுப் படைகள் பசாரா மாநிலத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சியா இஸ் லாமிய பிரிவினரை உள்ளடக்கிய மெகிடி போராளிகளுக்கு எதிராகவும், பாக்தாத்தில் சியா இஸ்லாமிய பிரிவினர் பிரதேசத்தில் வாழும் போராளிகளுக்க…
-
- 0 replies
- 572 views
-
-
கொரோனா வைரஸின் தாக்கம் : ஆசியாவிற்கு வெளியே முதல் மரணம் பதிவு! கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட 80 வயதுடைய சீன சுற்றுலாப் பயணி ஒருவர் பிரான்சில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இது ஆசியாவிற்கு வெளியே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைககள் பலனின்றி ஏற்ட்ட முதலாவது மரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேவேளை சீனாவில் தற்போத வரை உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுநோயாளர்களின் எண்ணிக்கை 66,492 ஆகவும் இறப்பு எண்ணிக்கை 1,524 ஆகவும் உய உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/75703
-
- 0 replies
- 485 views
-
-
ஜேம்ஸ் கல்லஹர் பிபிசி உடல்நல மற்றும் அறிவியல் செய்தியாளர் கொரோனா வைரஸ் இதுவரை 70க்கும் மேலான நாடுகளில் பரவியுள்ளது. இது மேலும் பரவும் என பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. இப்போது வரை கொரோனா வைரஸ் வராமல் தடுப்பதற்கான மருந்து ஏதும் தயாராகவில்லை. ஆனால் இந்த நிலை எப்போது மாறும்? கொரோனாவுக்கு தடுப்பு மருந்து எப்போது வரும்? ஆராய்ச்சியாளர்கள் தடுப்பு மருந்து உருவாக்கிவிட்டனர். அதை விலங்குகள் மேல் பரிசோதிக்கவும் தொடங்கிவிட்டார்கள். அது வெற்றி பெற்றால் இந்த ஆண்டு இறுதிக்குள் மனிதர்களிடம் பரிசோதனை நடத்துவது தொடங்கும். இந்த ஆண்டு கிறிஸ்துமஸுக்குள் ஆராய்ச்சியாளர்கள் இதை உருவாக்கிவிட்டாலும் அதன் பிறகு அதை பெருமளவில் தயாரிக்கும் பெரிய பணி இருக்…
-
- 0 replies
- 566 views
-
-
ஸ்பானிஷ் கால்பந்துப் பயிற்சியாளர் கொரோனா வைரஸால் உயிரிழந்தார் 21 வயதான ஸ்பானிஷ் கால்பந்துப் பயிற்சியாளர் கொரோனா வைரஸால் பீடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். மாலகாவைத் தளமாகக் கொண்ட அற்லெரிகோ போர்ட்வா ஆல்ராவின் (Atletico Portada Alta) இளைஞர் அணியின் பயிற்சியாளரான பிரான்சிஸ்கோ கார்சியா கொரோனா வைரஸின் அறிகுறிகளுடன் மருத்துவமனைக்குச் சென்ற பின்னர் அவருக்கு இரத்தப் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. ஸ்பானிஷ் பத்திரிகை மாலகா ஹோய் (Malaga Hoy) செய்தியின்படி கார்சியா சுவாசிக்கச் சிரமப்பட்ட நிலையில் மேலதிக மருத்துவ உதவியை நாடுமாறு அறிவுறுத்தப்பட்டார். மேலும் அவருக்கு கொரோனா வைரஸ் மற்றும் நிமோனியா இரண்டுமே இருப்பதாகக் கூறப்பட்டது. அத்துடன் அவருக்கு லூகேமியா இருப்பதாகவு…
-
- 0 replies
- 327 views
-
-
கொரோனாவை கட்டுப்படுத்த அமெரிக்க பல்கலைக்கழகத்தால் மருந்து பரிந்துரை! by : Litharsan கொவிட்-19 நோய்க்கு இரத்தம் கட்டுவதை நீக்கும் மருந்துகள் பயன்படலாம் என்று கருதப்படுகிறது. இதன்பொருட்டு அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழகத்தில் நடைபெறும் ஆய்வுகளில் மாரடைப்பு போன்றவற்றில் பயன்படுத்தப்டும் Tissue Plasminogen Activator என்ற மருந்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள சில மருத்துவனைகள் இந்த மருந்தின் தாக்கம் எத்தகையது என்று ஆய்வுசெய்து வருகின்றன. இரத்தம் கட்டுவதைத் தடுக்கும் இத்தகைய மருந்து கோவிட்-19 நோய்க்கு எதிராகப் பயன்படலாம் என்று அண்மையில் ஆய்வேடுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உடல் உறுப்புகள்…
-
- 0 replies
- 445 views
-
-
"புரட்சிகளை உருவாக்கிய எழுத்துக்கள்" முனைவர் கோமதி நாயகம் எடுத்துக்காட்டு மொழிச் செழுமையில் எழுத்தாளர் பங்கு என்னும் கருத்தரங்கில் அதிர்வுகளை ஏற்படுத்திய எழுத்துக்கள் என்ற தலைப்பில் முனைவர் பழ.கோமதிநாயகம் ஆற்றிய உரை. உலக வரலாற்றில் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு புரட்சிகளை ஏற்படுத்தியவை எழுததுக்கள்தான். எழுத்துகள் சரித்திரத்தை மாற்றி உள்ளன. அப்படிப்பட்ட எழுத்தாளர்களின் பங்கு பெரிதும் போற்றத் தக்கது. வாளை விட பேனா தான் சிறந்தது என்பதை உலகில் பல்வேறு நாடுகளில் பல காலகட்டங்களில் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள். “எழுத்துக்கள் முதலில் அதிர்வுளை ஏற்படுத்தும். பின்னர் அதிர்ச்சியை ஏற்படுத்தும். கலிலியோ சூரியனைச் சுற்றி உலகம் சுற்றுகிறது என்று சொன்னார்.…
-
- 0 replies
- 1.1k views
-
-
உக்ரைனிய தலைநகர் மீதான ரஷ்யாவின் தாக்குதலில் 9 பேர் படுகாயம்! உக்ரைனிய தலைநகர் கீவ் மீதான ரஷ்யாவின் பாரிய தாக்குதல்களில் , குறைந்தது ஒன்பது பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கீவ் மேயர் வித்தாலி கிளிட்ச்கோ தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களில் ஒரு கர்ப்பிணிப் பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் அடங்குதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, குறித்த தாக்குதலில் மருத்துவமனை வசதிகள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் உட்பட பல மாவட்டங்களில் தீ விபத்துக்கள் மற்றும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. தாக்குதலின் விளைவாக ஏற்பட்ட மின்சாரத் தடைகள் சரிசெய்யப்பட்டாலும், வெப்பமூட்டும் வசதிகளில் தடைகள் இன்னும் நீடிப்பதாக அவர் தெரிவித்தார். மேலும், மேயர் மருத்துவர்களும் அவசரகால சேவைகளும் எல்…
-
- 0 replies
- 108 views
-
-
ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல் மீது முதன் முறையாக நீருக்கடியிலான ட்ரோன் தாக்குதலை நடத்தியது உக்ரைன்! 16 Dec, 2025 | 11:45 AM நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிடுவதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கூறிய நிலையில், உக்ரைன் தனது முதல் நீருக்கடியிலான ட்ரோன் தாக்குதல் மூலம் ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பலை தாக்கி அழித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரைன் நேட்டோவில்(NATO) இணைய முயன்றதைத் தொடர்ந்து, ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தது. அந்த போர் ஆண்டுக்கணக்கில் நீண்டுகொண்டிருக்கும் நிலையில் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தின் மூலம் போர் சமாதான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த இறுதிகட்ட தீவிர பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவரும் நிலையில், உக்ரைன் மீ…
-
- 0 replies
- 183 views
- 1 follower
-
-
அமெரிக்காவை புரட்டியெடுத்து வரும் கொரோனா- ஒரேநாள் உயிரிழப்பு 2500ஐத் தாண்டியது! கொரோனா வைரஸ் பெருந்தொற்று அமெரிக்காவைப் புரட்டியெடுத்துவரும் நிலையில் அங்கு நேற்று மட்டும் 2 ஆயிரத்து 500இற்கும் மேற்பட்டோர் மரணித்துள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவில் மட்டும் உயிரிழப்புக்கள் 75 ஆயிரத்தை எட்டியுள்ளதுடன் மொத்த பாதிப்பு 12 இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேல் பதிவாகியுள்ளது. இதனைவிட அமெரிக்க நாடான பிரேஸிலில் முதன்முறையாக நேற்று ஒரேநாளில் 600இற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் மரணித்துள்ளமை பதிவாகியுள்ளது. உலகின் 200இற்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில் நேற்று மட்டும் வைரஸ் தொற்றுக்கு இலக்கான 95 ஆயிரத்து 325 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் …
-
- 0 replies
- 396 views
-
-
ஹிஸ்புல் முஜாகீதின் இயக்கத்தின் கமாண்டர் புர்கான் வானி இந்திய ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதில் இருந்து காஷ்மீரில் தொடர்ந்து வன்முறை வெடித்து வருகிறது. இதுவரை 35க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். சுமார் 1,400 பேர் காயமடைந்துள்ளனர். ஸ்ரீநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் 144 தடையுத்தரவு அமலில் இருக்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை கடந்த 5 நாட்களாக பாதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகரில் கடைகள் திறக்கப்படாததால், மக்கள் உணவு பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். பெரும்பாலான மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை.வீட்டை விட்டு வெளியே சென்று உணவுபொருட்களைத்தேட முடியாத நிலை. தேடினாலும் கிடைக்காது. அல்லது உயிரே பறிபோனலும் வியப்படையை ஒன்றும் இல்லை என்பதே தற்போதைய காஷ்மீ…
-
- 0 replies
- 364 views
-
-
தமிழக மீனவனின் வாழ்வாதாரத்திற்காக, கட்சத்தீவினை மீட்க இங்கே போராட்டங்கள்நடத்தப்படுகின்றன. ஆனால் வணிகப் பேராசையால் இரு தீவுக் கூட்டங்களை ஆக்கிரமிக்க 6 ஆசிய நாடுகள் மல்லுக்கட்டி வருகின்றன. தெற்கு சீனக் கடலிலுள்ள பாரசெல்ஸ் மற்றும் ஸ்ப்ராட்லிஸ் தீவுகளை சீனா, தைவான், வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புருனே ஆகிய 6 நாடுகளும் தங்களுடையது, என்று சொந்தம் கொண்டாடுகின்றன. நடுவர் தீர்ப்பு நீதிமன்றம் சீனாவிற்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் சீனாவும் அமெரிக்காவும் அப்பகுதியில் போர் விமானங்களையும் கப்பல்களையும் நிலை நிறுத்தியுள்ளதால், தெற்கு சீனக் கடல் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. தெற்கு சீனக்கடலில் அமைந்திருக்கும் மனிதர்கள் வாழாத இரு தீவுக் கூட்டங்கள் தான் பாராசெல் …
-
- 0 replies
- 851 views
-
-
சீனாவில், 875 கோடி ரூபாய் அளவுக்கு, 20 வீடுகளை வாங்கி குவித்த, பெண்ணிடம் விசாரணை நடந்து வருகிறது. சீனாவில், தனி நபர், பல வீடுகளை வைத்திருக்க தடை உள்ளது. இதை மீறி பலர் ரகசியமாக வீடுகளை கட்டி, வாங்கி வருகின்றனர். சமீபத்தில் அரசு அதிகாரி ஒருவர், தன் குடும்ப உறுப்பினர் பெயர்களில், 31 வீடுகளை வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டார். இதற்கிடையே, சீன வங்கி அதிகாரியான கோங் அய்அய், என்ற பெண், ஷான்சி மாகாணத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், தலைநகர் பீஜிங்கிலும், 20 வீடுகள் கட்டி, வாங்கியுள்ளார். பல்வேறு பெயர்களில் வீடுகளை கட்ட, பதிவுத்துறை அதிகாரிகள், இவருக்கு உதவியுள்ளனர். இணைய தளத்தில் பொதுமக்கள் அளித்த புகாரை அடுத்து, கோங் அய்அய், பல இடங்களில் வீடு கட்டியிருப்பது தெரிய வந்…
-
- 0 replies
- 543 views
-
-
வியட்நாம் போரின் வரலாற்று சிறப்புமிக்க புகைப்படத்தை நீக்கி ஃபேஸ்புக் சர்ச்சை அந்த வரலாற்று சிறப்புமிக்க படம் ஃபேஸ்புக் நிறுவனமானது வியட்நாம் போரின் உக்கிரத்தை எடுத்துச் சொல்லும் பிரபல புகைப்படம் ஒன்றை தொடர்ந்து நீக்கி அதன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளது. அந்த புகைப்படத்தில், கொத்துக்குண்டு வீச்சிலிருந்து தப்பிக்க சிறுமி ஒருவர் ஆடைகளின்றி ஓடி வரும் காட்சி உள்ளது. ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு, குழந்தைகளின் நிர்வாண புகைப்படங்களுக்கும், வரலாற்று புகைப்படங்களுக்கும் உள்ள வேறுபாட்டை வேறுபடுத்தி புரிந்து கொள்ள இயலாமை காரணமாக சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதாக நார்வே செய்தித்தாள் நிறுவனமான ஆஃப்டென்போஸ்டென் கருத்து தெரிவித…
-
- 0 replies
- 330 views
-
-
ஆப்கான் ஹெலிகொப்டர் விபத்தில் இராணுவ ஜெனரல் உட்பட 13 பேர் பலி [17 - January - 2009] ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதியில் நேற்று இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தொன்றில் அந்நாட்டின் உயர்மட்ட இராணுவ அதிகாரியுடன் மேலும் 12 பேர் பலியாகியுள்ளனர். ஜெனரல் பஸாலுதின் சயார் பயணித்த ஹெலிகொப்டர் சீரற்ற காலநிலை காரணமாக ஹெராட் மாகாணத்தில் விபத்திற்குள்ளானதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் இராணுவத்தின் பிராந்திய மட்ட 4 தலைவர்களில் ஒருவரான சயார் நாட்டின் மேற்குப் பகுதி நடவடிக்கைகளுக்கு தலைமை வகித்தவர் ஆவார். பராஹ் மாநிலத்திலுள்ள இராணுவ முகாமிற்குச் செல்லும் வழியிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. 2001 இற்குப் பின்னர் இராணுவத்தினர் சந…
-
- 0 replies
- 713 views
-