Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சென்னை: ரோபோ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்த கையோடு தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் அனைவரையும் சந்திக்கிறார் ரஜினிகாந்த். வழக்கம் போல ஹேஷ்யமாக இல்லாமல், ரஜினி மன்றங்களின் தலைவர் சத்யநாராயணாவே இதை அறிவித்துள்ளதால் செய்திக்கு கூடுதல் முக்கியம் கிடைத்துள்ளது. ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கு முதல் படியாக, தனது மன்றத்தின் அதிகாரப்பூர்வமான கொடியை அக்டோபர் சந்திப்பின்போது ரஜினி அறிவிக்க உள்ளதாக பரபரப்பு கிளம்பியுள்ளது. ஒவ்வொரு ரஜினி பட வெளியீட்டுக்கு முன்பும் பின்பும், அவை வென்றாலும் தோற்றாலும் தவறாமல் விவாதிக்கப்படும் விஷயம் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா... வழக்கமாக இந்தக் கேள்வி படம் ரிலீசான சில வாரங்களில் கரைந்து போகும். கேள்விக்கு பதிலும் கிடைக்…

    • 20 replies
    • 3.2k views
  2. பாங்காக்: டிவியில் சமையல் நிகழ்ச்சியை தொகுத்தளித்த தாய்லாந்து பிரதமர் சமக் சுந்தரவேஜ் பதவி விலக வேண்டும் என தாய் அரசியல் சட்ட கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தாய்லாந்து சட்டப்படி அரசுப் பதவியில் இருப்பவர்கள் லாப நோக்கில் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கக் கூடாதுஎன்பது விதியாகும். ஆனால் அதை மீறி தாய்லாந்து பிரதமர் சமக், அந்நாட்டு டிவி ஒன்றில் சமையல் நிகழ்ச்சிக்கான தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். பல ஆண்டுகளாகவே இவர் தொகுப்பாளராக இருக்கிறார். ஆனால் பிரதமர் பதவிக்கு வந்த பிறகும் தொகுப்பாளர் பணியை விடவில்லை. தொடர்ந்து தொகுப்பாளராக செயல்பட்டு வந்தார். இதைக் கண்டித்து ஜனநாயகத்திற்கான மக்கள் கூட்டணி என்ற பெயரில் எதர்க்கட்சியினர் பிரதமர் அலுவலகம் முன்புதொடர் போராட்டத்தில் ஈடுபட்…

  3. திருச்சி: சேது சமுத்திரத் திட்டத்தின் கீழ் இதுவரை 11 மீட்டர் ஆழத்திற்கு தோண்டியாகி விட்டது. இன்னும் ஒரு மீட்டர் ஆழம் மட்டுமே தோண்டப்பட வேண்டியுள்ளது என்று மத்திய நெடுஞ்சாலைத்துறை மற்றும் கப்பல்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். திருச்சி வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சேது சமுத்திர திட்ட பணிகள் சிறப்பாக நடந்து வருகின்றன. இதுவரை 11 மீட்டர் ஆழம் தோண்டப்பட்டு விட்டது. இன்னும் ஒரு மீட்டர் ஆழம் தான் தோண்ட வேண்டும். த‌மிழக‌த்‌தி‌ல் நட‌ந்து வரு‌ம் த‌ங்க நா‌ற்கரசாலை‌‌ப் ப‌ணிக‌ள் அனை‌த்து‌ம் முடிவடையு‌ம் ‌நிலை‌யி‌ல் உ‌ள்ளன. தே‌சிய நெடு‌ஞ்சாலை எ‌ண்.7-ல் உள்ள பணகுடி முதல் கன்னியாகுமரி வரையிலான சாலை தவிர மற்ற அனைத்து 4 வழிச்சாலைகளும் வரு‌ம் டிசம்பர் 31ஆ‌ம் …

  4. இந்தியப் படையும் மாவோயிஸ்ட்டுகளும் சிறாரை படையில் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு சிறார்களை மோதல்களில் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று இந்திய பாதுகாப்புப் படையினரையும், மாவோயிஸ்ட் கிளர்ச்சிக்காரர்களையும் சர்வதேச செயற்பாட்டு அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கோரியுள்ளது. இந்தியாவின் சட்டீஸ்கர் மாநிலத்தில் அனைத்துத் தரப்பினரும் சிறார்களை ஆயுத நடவடிக்கைகளில் பயன்படுத்துவதாக அது கூறுகிறது. தாம் சிறாரை ஆட்சேர்ப்புச் செய்வதாகவும், சில சமயங்களில் 12 வயதுச் சிறாரைக் கூட ஆட்சேர்ப்புச் செய்வதாகவும் கிளர்ச்சிக்காரர்கள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் அரச ஆதரவுடனான சல்வா ஜூடூம் ஆயுதக்குழுவினரும் சிறார்களைப் பயன்படுத்துவ…

  5. சென்னை: தன்னைப் பற்றியும், தனது தோழி சசிகலா குறித்தும் அவதூறாக செய்தி வெளியிட்டதாக கூறி ஜூனியர் விகடன் மற்றும் குமுதம் ரிப்போர்ட்ஸ் வார இதழ்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஒரு பத்திரிகைக்கு தனது வக்கீல் நவநீத கிருஷ்ணன் மூலமாக ஜெயலலிதா அனுப்பியுள்ள நோட்டீஸில், கட்சியின் பொதுச் செயலாளர் நான் தான்; போடுங்கள் கையெழுத்து என்று சசிகலா கூறியதாக சசிகலா அரங்கேற்றிய பவர்கட் பிளான் என்ற தலைப்பில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த செய்தி எனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் திட்டமிட்டு விஷமத்தனத்துடன் உண்மைக்கு புறம்பாக புனையப்பட்ட தகவல்களை கொண்டு வெளியிடப்பட்டுள்ளது. எனது அரசியல் எதிரியான கருணாநிதி உத்தரவுபடியே அந்த செய்தி வ…

  6. வீரகேசரி நாளேடு - பிரித்தானிய பக்கிங்ஹாம் மாளிகை காவலாளிகளின் தொப்பிகளானது சுமார் 200 ஆண்டுகளுக்குப் பின்னர் மாற்றத்துக்குள்ளாகிறது. கரடிகளின் தோலால் உருவாக்கப்பட்ட இந்த நீண்ட கறுப்பு தொப்பிகளானது, மேற்படி அமெரிக்க கருங்கரடிகளைப் பாதுகாக்கும் முகமாக மாற்றத்திற்கு உள்ளாகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் பிரகாரம் தொழில் பாதுகாப்புக்கான அமைச்சர் பாரோனஸ் டெய்லர், மிருக பாதுகாப்பு அமைப்பான பெடாவைச் சேர்ந்த பிரதிநிதிகளை நாளை செவ்வாய்க்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்நிலையில் கரடித் தோலுக்குப் பதிலாக அனைத்து காலநிலைகளுக்கும் பொருந்தக் கூடிய உயர்தராதரமுள்ள மூலப் பொருட்களைப் பயன்படுத்தி மேற்படி தொப்பிகளை தயாரிப்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாகத் த…

  7. பெங்களூர்: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கோவைக்கு வந்த விமானத்தில் என்ஜின் கோளாறு ஏற்பட்டதால் அந்த விமானம் பெங்களூரில் தரையிறக்கப்பட்டது. முன்னதாக மோசமான வானிலை காரணமாக அந்த விமானம் பெங்களூருக்குத் திருப்பி விடப்பட்டதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், என்ஜினில் கோளாறு ஏற்பட்டதே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. டெல்லியில் இருந்து ஜிம்ஆர் கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான பால்கன் ரக தனி விமானத்தில் சோனியாவும் நிதியமைச்சர் ப.சிதம்பரமும் கோவை வந்தனர். பெங்களூரில் இருந்து 45 கி.மீ தூரத்தில் பறந்து கொண்டிருந்தபோது அந்த விமானத்தின் ஒரு பக்க என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அந்த என்ஜினின் இயக்கத்தை நிறுத்திய விமானி, உடனே விமானத்த…

  8. வீரகேசரி நாளேடு - கனடாவின் ஆர்க்டிக் பிராந்தியத்தில் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக, 4500 ஆண்டுகள் பழைமையான "மார்கம்' பனிப்பறையில் 19 சதுர மைல் பரப்பளவுள்ள பகுதி உருகியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். மேற்படி பனிப்பாறைப் பகுதியானது கடந்த ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் திடீரென மாயமாகியுள்ளமை தம்மை அதிர்ச்சியடையச் செய்துள்ளதாக கனடாவின் ஒன்டாறியோவிலுள்ள ரென்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதேசமயம் "வார்ட் ஹன்ட்' பனிப்பாறை தொடர்ந்து உருகி சிதைவடைந்து வருவதாக இவ்விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் 170 சதுர மைல் பரப்பளவு கொண்ட "வார்ட் ஹன்ட்' பனிப்பாறையில், 7 சதுர மைல் பரப்பளவான பகுதி கடந்த மாதம் அழிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

  9. கியூபாவை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் குஸ்தவ் எனப்பெயரிடப்பட்டுள்ள சூறாவளி வலுப்பெற்று வருகின்றது.மணிக்கு 180 கி.மீ வேகத்தில் சென்றவாறு வலுப்பெற்றுக் கொண்டிருக்கும் இந்த சூறாவளி அபாய வகையில் மூன்றாம் இடத்தில் இருப்பதாக மியாமியில் இருக்கும் அமெரிக்க தேசிய சூறவாளி மையம் தெரிவித்துள்ளது. முதன்முதலாக சூறாவளி தாக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டுள்ள கியூபாவின் மேற்கு பகுதியில் இருந்து முப்பதாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர். நன்றி வீரகேசரி

  10. உலக தமிழர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதப் போவதாக கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்க விழாவில் கவிஞர் வைரமுத்து பேசுகையில், உலகமயமாதல் என்ற அகில உலக சுனாமியிலிருந்து நாம் மீள வேண்டுமானால் இனம், மொழி இரண்டையும் பாதுகாக்கும் பெரும்பணியை நாம் இப்போதே தொடங்க வேண்டும். காலப்போக்கில் வட்டார மொழிகளும், குறுமொழிகளும் அழிந்து போகும் அபாயமிருக்கிறது. தமிழ் அப்படி அழிந்து போகக்கூடாது. தமிழ் அழியவும் அழியாது. உலகில் இன்று பல ஆயிரம் மொழிகள் பேசப்படுகின்றன. ஆனால் அடுத்தடுத்து வரும் நூற்றாண்டுகளில் ஆறே ஆறு பெரிய மொழிகள் மட்டும்தான் தப்பிப் பிழைக்கும் என்று ஆய்வு சொல்கிறது. சீனம், ஆங்கிலம், இந்தி…

    • 1 reply
    • 1.2k views
  11. பாகல்கோட்: கர்நாடகத்தில் தெய்வ நம்பிக்கை காரணமாக கர்நாடகவைச் சேர்ந்த முதியவர் தனது ஒரு தோண்டி எடுத்து முக்தி அடைந்த ஞானிக்கு நேர்த்தி கடன் செலுத்தினார். இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று மற்றொரு கண்ணையும் தோண்டி எடுத்தார். கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம் அடகா கிராமத்தைச் சேர்ந்தவர் முதுகப்பா எல்லப்பா கரடி (55). இந்த கிராமத்தில் சங்கராஜா சுவாமிகள் மடம் உள்ளது. தெய்வ நம்பிக்கை அதிகம் கொண்ட முதுகப்பா, கடந்த 28ம் தேதி நள்ளிரவு மடத்துக்கு சென்றார். தனது கனவில் சங்கராஜா சுவாமிகள் தோன்றி, கண் கேட்டதாக கூறி, தனது வலது கண்ணை கட்டை விரலால் தோண்டி எடுத்து வைத்து சாமி கும்பிட்டார். கண்ணில் இருந்து ரத்தம் பெருக்கெடுத்தது. வலி தாங்கா…

  12. டெல்லி: பாகிஸ்தான் அதிபர் பதவியிலிருந்து பர்வேஸ் முஷாரப் விலகிய பின்னர், இந்தியாவுக்கான ஐஎஸ்ஐ மிரட்டல் அதிகரித்து விட்டது என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் தெரிவித்துள்ளார். தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில், இதைத் தெரிவித்துள்ளார் நாராயணன். இதுகுறித்து அவர் கூறுகையில், முஷாரப் அதிபர் பதவியில் இருந்தபோது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் ஆரோக்கியமாக இருந்தன. இதனை மேலும் பலப்படுத்த, சிறந்த நிர்வாகத் திறனும், தைரியமும் தேவைப்படுகிறது. காஷ்மீர் விவகாரம் என்பது அவ்வளவு சுலபமாக தீர்க்கக் கூடியதல்ல. பாக்.,கின் அடுத்த அதிபராக பதவியேற்கவுள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் ஆசிப் அலி சர்தாரி, தனது முதல் முயற்சியாக இப்பிரச்னைக்கு நல்லதொரு தீர்வைக் காண்ப…

  13. "மொழி இனம் காப்பது எழுத்தாளர் கடமை" முனைவர் க. நெடுஞ்செழியன் அறைகூவல் சீன எழுத்தாளன் நூசிங் என்பவ ரைப் பற்றி நாம் அறிவோம். சாதாரண வறிய குடும்பத்தில் பிறந்தவன். இளமை யில் தன் தந்தையை இழந்தவன். தாய் அண்டை வீடுகளில் பாத்திரம் கழுவி அதில் வரக்கூடிய வருமானத்தில் குடும் பத்தை நடத்திக் கொண்டிருக்கிற பொழுது தான் அவன் பல் மருத்துவத்தைப் படிப் பதற்காக சப்பானுக்குச் செல்கிறான். இளமைத் துடிப்பும் மற்ற இளைஞர்களைப் போல வாழ வேண்டும் என்கிற ஏக்கமும் இருந்தாலும்கூட தன் குடும்ப வறுமையைப் போக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்த அந்த இளைஞன் ஒரு நாள் ஒரு ஓவியக் கண்காட்சிக்குச் செல்கிறான். அப் போது ஒரு குறிப்பிட்ட ஓவியத்தை மட்டும் சப்பானியர்கள் மிக்க ஆர்வத்தோடு பற்று தலுடன் கூட…

  14. "பச்சோந்தி தலைவர்களால் தமிழ் வாழாது" மூத்தத் தமிழறிஞர் தமிழண்ணல் கருத்துரை எழுத்தாளர்களின் சமூகக் கடமை கள் என்ற கருத்தரங்கத்தில் தொடக்கவுரை ஆற்றிய தமிழண்ணல் அவர்களின் உரை தான் நேசிக்கும் பல தலைவர்களில் நூற்றுக்கு நூறு தான் நேசிக்கும் தலைவர் பழ.நெடுமாறன் எனவும் இதை தான் முகமனாகப் பேசவில்லை எனவும், நம்முடைய காலத்தில் ஏதேனும் ஒரு வெற்றி கிடைக்காதா என்ற ஏக்கத்தில் இருக்கின்ற நிலைமையில் தான் இருப்ப தாகவும் கூறி தன் உரையைத் துவக்கினார். இரண்டு திங்களுக்கு முன்னால் திரு.நெடுமாறன் அவர்கள் எழுதியிருந்த ஒரு கட்டுரையை - எந்த ஒரு துறையிலும் நாம் வெற்றி பெறவில்லை என்பதைப் பட்டியல் இட்டிருந்தாகச் சுட்டிக்காட்டி, நாம் ஆட்சிக்கட்டிலிலும் வெற்றி பெற வில்லை - தமிழைக் …

  15. சென்னை: அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் ஒரு கிலோ அரிசி ரூ.1க்கு விற்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்தது. இதில் அமைச்சர்கள், அனைத்து மாவட்டச் செயலாளர்கள், மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, ரகுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஒன்றாக, நியாய விலைக் கடைகளில் தற்போது வழங்கப்படும் உளுந்து, துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவற்றை தொடர்ந்து குறைந்த விலைக்கு வழங்க வேண்டும் என்று தமிழக அரசை இந்த கூட்டம் வலியுறுத்துகிறது. அதேபோல, தமிழக…

  16. துபாய்: ஈரான் மீது யாராவது தாக்குதல் நடத்தினால் அது உலகப் போராக மாறும் என்று ஈரான் ராணுவ துணைத் தளபதி சயீத் மசூத் ஜஸாயரி எச்சரித்துள்ளார். இதுகுறித்து டெஹ்ரானில் அவர் கூறுகையில், அமெரிக்க நிர்வாகத்தின் அராஜகமும், ஜியோனிசத்தின் ஆதிக்க மனப்பான்மையும் சூடான், ஈராக், ஆப்கானிஸ்தான் என பரவி இப்போது ஈரானைக் குறி வைத்து நிற்கின்றன. இதன் மூலம் உலகம் பிளவுபடும் நிலை உருவாகியுள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உலகநாடுகள் அணி திரளும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் ஈரானை யாராவது தொட்டால் அது உலக போராக மூளும் என்று எச்சரிக்க விரும்புகிறோம். அது மாதிரியான போரின்போது ஏகாதிபத்திய அரசுகள் அகற்றப்படும் என்று கூறியுள்ளார் ஜஸாயரி. நன்றி தற்ஸ் தமிழ்

    • 3 replies
    • 1.1k views
  17. சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்து வரும் நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோரை விடுதலை செய்யக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று தெரிவித்தது. ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினியும், அதேபோல ஆயுள் தண்டனை பெற்ற ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரும் தங்களை விடுதலை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கை நீதிபதி நாகமுத்து விசாரித்து வருகிறார். இந்த வழக்கில், பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு அவர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி தமிழக அரசு சார்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மாநில அரசின் உள்துறை செயலாளர், சிறைத்துறை கூடுதல் டிஜிபி ஆகியோர் தாக்கல் செ…

  18. ரஷ்யாவினால் ஏவுகணை தடுப்பு தொழில்நுட்பத்தை முறியடித்து தாக்கும் ஏவுகணை பரிசோதனை ஜோர்ஜியா நாட்டின் ரஷ்யாவின் நடவடிக்கைகளை அடுத்து ரஷ்யாவுக்கும் மேற்குலக நாடுகளிடையே ஏற்பட்டுள்ள விரிசல் நிலையில், ரஷ்யா கண்டம் விட்டு கண்டம் சென்று தாங்கக்கூடிய அதி நவீன ஏவுகணை ஒன்றைப் பரிசோதனை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. டோபோல்- ஆர்.எஸ்-12 எம் (Topol - RS - 12M) என்ற அதி நவீன கண்டம் விட்டு கண்டம் சென்ற தாக்கக்கூடிய ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாக சோதனை நடத்தி முடித்துள்ளது. இந்த ஏவுகணை ஏவுகணை தடுப்பு தொழில்நுட்பத்தை முறியடித்து குறித்த இலக்கைச் சென்று 6000 கிலோ மீற்றரில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் வல்லமை பொருந்தியது. வெற்றிகரமாண பரிசோதனையை அடுத்து இது தொடர்பில் …

  19. சென்னை: தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனை மிகக் கடுமையாக தாக்கி முதல்வர் கருணாநிதி கவிதை எழுதியுள்ளார். சமீப காலமாக முதல்வர் கருணாநிதியின் கவிதைகள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. சமீபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. டி.கே.ரங்கராஜனை மறைமுகமாக சாடி கவிதை பாடியிருந்தார் கருணாநிதி. இந்த நிலையில் பழ. நெடுமாறனை மிகக் கடுமையாக சாடி கவிதை எழுதியுள்ளார் கருணாநிதி. நெடுமாறன் எழுதிய ஒரு கட்டுரையில், முதல்வர் குறித்து விமர்சித்திருந்தார். காதோரம் ஒரு முடி நரைத்ததற்கே தசரதன் ராமனை மன்னராக்கினான். ஆனால் கருணாநிதியோ இன்னும் முதல்வர் பதவியை விடாமல் பிடித்திருக்கிறார் என்று அதில் நெடுமாறன் தாக்கியிருந்தார். அதற்குப் பதிலடியாக இந்தக் கவிதையைப் புணை…

    • 13 replies
    • 3.8k views
  20. 28 இலங்கை மீனவர்களுக்கு சிறை தண்டனை வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 29, 2008 இராமநாதபுரம்: இலங்கையைச் சேர்ந்த 28 மீனவர்களுக்கு ராமநாதபுரம் கோர்ட் 12 வார சிறைத் தண்டனை விதித்துள்ளது. ஜூன் 20ம் தேதி கன்னியாகுமரி கடல் பகுதியில், 6 விசைப் படகுகளுடன் இந்த 28 மீனவர்களும் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அவர்களை இந்திய கடலோரக் காவல் படை பிடித்தது. பின்னர் அனைவரும் ராமநாதபுரம் முதன்மை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீதான வழக்கை விசாரித்த நீதிபதி ரவி, 28 மீனவர்களுக்கும் 12 வார கால சிறை தண்டனை, தலா ரூ. 2000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். தீர்ப்பைத் தொடர்ந்து அனைவரும் மதுரை மத்திய சிறை…

    • 2 replies
    • 919 views
  21. சூடானிய போயிங் 737 ரக விமானம் ஒன்று 95 பேருடன் கடந்தப்பட்டுள்ளது. குறித்த விமான சூடானின் Nyala இல் இருந்து Khartoum நோக்கிப் பறந்து கொண்டிருந்த போது கடத்தப்பட்டுள்ளது. அது தற்போது சூடான் - லிபிய எல்லையில் லிபியாவின் விமான நிலையமொன்றில் தரையிறக்கப்பட்டுள்ளது. எரிபொருள் தீரும் நிலை தோன்றியதால் குறித்த விமானம் தரையிறங்க மனிதாபிமான அடிப்படையில் லிபியா அனுமதி அளித்ததுள்ளது. எனினும் கத்தியைக் காட்டி விமானத்தைக் கடத்திய கடத்தல்காரர்/கள் அதைப் பாரீஸ் நோக்கிக் கொண்டு செல்ல எரிபொருள் தருமாறு கோரி வருகின்றனர்..! http://news.bbc.co.uk/1/hi/world/africa/7582975.stm

    • 4 replies
    • 1.1k views
  22. புயலை எழுப்பும் 'புதிய பைபிள்' - கொந்தளிக்கும் கிறிஸ்தவ அமைப்புக்கள் கத்தோலிக்க கிறிஸ்துவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது போப்பாண்டவரின் ஆசியோடு வெளியிடப்பட்டிருக்கும் புதிய பைபிள் ஒன்று. இந்த ஒரு புத்தகத்தால் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ மக்களிடையே மதக் கலவரம் ஏற்படும் வாய்ப்பு அதிகரித்திருப்பதாக, அவர்கள் அபயக் குரல் எழுப்புவது ஒட்டுமொத்த அதிர்வலையைக் கிளப்பியிருக்கிறது. புதிய பைபிள் சர்ச்சையைக் கிளப்பியிருக்கும் கத்தோலிக்க விசுவாசிகள் கூட்டமைப்பின் தலைவர் ரபேலை சந்தித்துப் பேசினோம். "இந்து, முஸ்லிம் மதங்களில் உள்ள நல்ல கருத்துக்களை எடுத்துக் கொண்டு, நமது சமூகம் ஒற்றுமையாக இருக்கும் வகையில் அவற்றை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ரோமாபுரியி…

  23. மாஸ்கோ: கிர்கிஸ்தானில் விமானம் விழுந்து நொறுங்கி 70 பயணிகள் பலியாயினர். 20 பேர் உயிர் தப்பிவிட்டனர். முன்னாள் சோவியத் குடியரசு நாடான கிர்கி்ஸ்தான் தலைநகர் பிஷேக் அருகே உள்ள மனாஸ் விமான நிலையத்தில் இருந்து ஈரான் நாட்டின் மஷாத் நகருக்கு அந்த விமானம் சென்று கொண்டிருந்தது. போயிங்௭37 ரகத்தைச் சேர்ந்த அந்த விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானத்தை விமானிகள் மனாஸ் விமான நிலையத்துக்கு திரப்பினர். ஆனால், விமான நிலையத்துக்கு 2 கி.மீ. தூரத்தில் வந்து கொண்டிருந்தபோதே அந்த விமானத்தில் தீப் பிடித்துக் கொண்டது. இதையடுத்து அந்த விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்த 70 பேர் பலியாயினர். விமானி உள்பட சுமா…

  24. சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினியை முன்கூட்டியே விடுதலை செய்வது கூடாது. அவருடைய வழக்கறிஞர் பல உண்மைகளை மறைத்து விட்டார் என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார். தன்னை விரைவில் விடுதலை செய்யக் கோரி நளினி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் தன்னையும் இணைக்க வேண்டும் என்று கோரி சுப்ரமணியன் சுவாமி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அதை ஏற்க உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. இந்த நிலையில், இன்று நளினி மனு நீதிபதி நாகமுத்து முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது திடீரென அங்கு சுப்ரமணியன் சுவாமி ஆஜரானார். பின்னர் அவர் நீதிபதியிடம் கூறுகையில், இந்த வழக்…

  25. புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் திமுக உட்கட்சி தேர்தலில் மு.க. அழகிரி, ஸ்டாலின் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கடும் மோதலுக்கிடையே கீரனூர் பேரூராட்சி செயலாளராக ஸ்டாலின் ஆதரவாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளில் திமுக உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. கிராமப் பகுதிகளுக்கான கிளைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளன. அதனைத் தொடர்ந்து பேரூராட்சி செயலாளர் மற்றும் மாவட்ட பிரதிநிதி தேர்தல் நடைபெறுவதாக திமுக தலைமை அறிவித்தது. அரிமழம், கீரமங்கலம், ஆலங்குடி பேரூராட்சி செயலாளர்கள் மற்றும் மாவட்ட பிரதிநிதிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். கீரனூர் பேரூராட்சியில் அமைச்சர் ஸ்டாலின் ஆதரவாளராக அரசு வக்கீல் செல்லப் பாண்டிய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.