உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26599 topics in this forum
-
மறைந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ, 1993ம் ஆண்டு வட கொரியாவுக்குச் சென்றபோது முக்கிய அணு ரகசியங்களை தனது கைப்பட வட கொரிய அரசிடம் வழங்கியதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. பெனாசிர் பூட்டோவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான ஷியாம் பாட்டியா என்பவர் எழுதியுள்ள, பெனாசிர் பூட்டோவின் வாழ்க்கை வரலாற்று நூலில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1993ம் ஆண்டு பெனாசிர் பூட்டோ, வட கொரியத் தலைநகர் பியாங்கியாங்கிற்குச் சென்றார். அப்போது முக்கிய அணு தொழில்நுட்பம் குறித்த தகவல்கள் அடங்கிய ஆவணங்களை தனது மேலாடையினுள் வைத்துக் கொண்டார். அவற்றை வட கொரிய அரசின் முக்கிய அதிகாரிகளிடம் தனது கைப்பட பெனாசிர் பூட்டோ வழங்கினார் என பாட்டியாவின் நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 716 views
-
-
சேது சமுத்திர திட்ட வழக்கில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகி வாதாடிய ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி, இந்த திட்டத்தை நிறைவேற்றினால் விடுதலைப்புலிகளுக்கு உதவியாக அமைந்து விடும் என்று கூறினார். சேது சமுத்திர திட்ட வழக்கு சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ராமர் பாலத்தை இடிக்கக்கூடாது என்று கோரி இந்து அமைப்புகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆகியோரும் இதேபோன்று மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் இறுதிக் கட்ட விசாரணை நடந்து வருகிறது. தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரன், ஜே.எம்.பன்சால் ஆகியோர் முன்னிலையில் நேற்று மீண்டும் இ…
-
- 23 replies
- 3.3k views
-
-
சென்னை: இலங்கை இனப் பிரச்சனைக்கு போர் மூலம் தீர்வு இருக்க முடியாது என வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். இலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என்று கோரி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியிருந்தார். அதற்கு வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், கூறப்பட்டுள்ளதாவது: இலங்கை குறித்த நமது கொள்கை, இனப் பிரச்சனைக்கு போர் மூலம் தீர்வு இருக்க முடியாது என்ற நிலைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. அந்த நாட்டில் வன்முறையையும் மக்களின் துன்பத்தையும் குறைக்க வழிவகுக்கு…
-
- 1 reply
- 845 views
-
-
நீர்முழ்கிக் கப்பல் தளத்தை சீனா ரகசியமாக அமைத்து வருவதாக லண்டனில் இருந்து வெளிவரும் "தி டெய்லி டெலிகிராப்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நீர்முழ்கிக் கப்பல் தளத்தை செயற்கைக்கோள் தெளிவாக படம்பிடித்து அனுப்பியுள்ளதாக அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. இந்தத் தளத்தில் ஏவுகணைகள் மற்றும் போர்விமானங்கள் தாங்கிய கப்பல்களை நிறுத்தி வைக்கும் நோக்கில் அமைத்து வருகிறது. சீனாவின் இந்த நடவடிக்கை பிற ஆசிய நாடுகளுக்கு அதிர்ச்சி தரும் விதத்தில அமைந்துள்ளது. குறிப்பாக தெற்கு சீனக் கடல் பகுதியில் தங்களது வலிமையை நிலை நிறுத்த முயலும் அமெரிக்காவுக்கு இது பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை என்றும் அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது. ஆங்கிலத்தில் முளுமயாக…
-
- 4 replies
- 1.5k views
-
-
அமெரிக்காவின் பயங்கரவாதப் பட்டியலில் நெல்சன் மண்டேலா தொடர்ந்து நீடித்து வருகின்றார். தென்னாபிரிக்காவில் இனவெறி அரசுக்கு எதிராக போராட்டத்தை நெல்மண்டேலாவை அப்போதை தென்னாபிரிக் அரசாங்கம் பயங்கரவாதி என அறிவித்தது. இதனை உள்வாங்கிய அமெரிக்கா நெல்சன் மண்டேலாவின் பெயரை பங்கரவாதிகள் பட்டியலில் இணைத்திருந்தது. தற்போது தென்னாபிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா மற்றும் தென்னாபிரிக்க தேசிய காங்கிரசில் அங்கம் வகிக்கும் தலைவர்களின் பெயர்களையும் பங்கரவாதிகள் பட்டியலிருந்து நீக்கும் முகமாக தீர்மானம் ஒன்று அமெரிக்காவில் கொண்டு வர ஹொவர்டு பெர்மன் தீர்மானித்துள்ளார். இதன் மூலம் பயங்கரவாதிகள் பட்டியலிருந்து நெல்சன் மண்டேலாவின் பெயர் நீக்கப்பட்டால் மட்டுமே நெல்சன் மண்ட…
-
- 0 replies
- 735 views
-
-
அணுசக்தி உடன்பாடு செத்துவிட்டது: இடதுசாரிகள்! வியாழன், 8 மே 2008( 18:18 IST ) இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு எல்லா விதத்திலும் செத்துவிட்டதாக இடதுசாரிக் கட்சிகள் கூறியுள்ளன. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ரூப் சந்த் பால், ஃபார்வார்ட் பிளாக் கட்சியின் தேசியச் செயலர் ஜி.தேவராஜன் ஆகியோர் கூறுகையில், "அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு எல்லா விதத்திலும் செத்துவிட்டது" என்றனர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் ஏ.பி.பரதன், "அணுசக்தி உடன்பாடு இந்தக் கணத்தில் சட்டப்படி செல்லாததாகிவ…
-
- 0 replies
- 750 views
-
-
முப்பது வருடங்களுக்கு மேலாக இலங்கையில் தொடர்ந்துவரும் மோதல்களால் பல்வேறு பிரச்சினைகளுக்கு இலங்கை மக்கள் முகம்கொடுத்துள்ளனர். இளம் பெண்களுக்கு வரன் தேடுவது அதில் ஒரு முக்கிய பிரச்சினையாக இடம்பிடித்துள்ளது. இலங்கையிலிருந்து பல இளைஞர்கள் அச்சம் காரணமாக வெளியேறியிருப்பதால் இளம் பெண்களுக்கு வரன் தேடுவதில் சிக்கல் நிலை தோன்றியிருப்பதாக சென்னையிலிருந்து வெளியாகும் ‘ஈழ சுதந்திரம்’ எனும் மாதாந்த சஞ்சிகை சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த 1983ஆம் ஆண்டிலிருந்து பல இளைஞர்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். 30 வயதைத் தாண்டிய ஈழப்பெண்கள் பலர் இன்னமும் திருமணம் ஆகாதநிலையில் இருப்பதாக அந்த சஞ்சிகை சுட்டிக்காட்டியுள்ளது. இதனால் தமிழ் இளைஞர்களுக்கு பெரும் கேள்வி இருப்பதால் பெரும்தொகைப் …
-
- 0 replies
- 855 views
-
-
பர்மாவில் சூறாவளியில் பலியானவர்களின் எண்ணிக்கை 22,000 ஆக உயர்வு பர்மாவில் கடந்த சனிக்கிழமையன்று ஏற்பட்ட சூறாவளித் தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 22,000 ஆக உயர்ந்துள்ளது என பர்மிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. 40, 000 பேருக்கும் அதிகமானவர்களை காணவில்லை எனவும் அரசு ஊடகம் கூறுகிறது. இந்தக் கடும் சூறாவளியின் காரணத்தால் நகரத்தை நோக்கி பாய்ந்த நீர்மட்டத்தின் அளவு மிக அதிகமாக இருந்ததாலேயே, பெருமளவிலான மக்கள் மரணமடைய நேர்ந்தது என்று ஆளும் இராணுவ அரசின் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். பொகாலே நகரத்தில் இருந்த 95 சதவீத வீடுகள் அழிந்து விட்டதாகவும், நகரின் 1,90,000 மக்கட்தொகையில் பெரும்பாலானவர்கள் தங்கும் வசதியற்ற நிலையில் இருப்பதாகவும் அரசு கூறுகிறது. சூறாவள…
-
- 8 replies
- 1.7k views
-
-
பெங்களூர்: ராமேஸ்வரம் கடல் பகுதியில் ராமர் பாலம் இருந்ததற்கு ஏராளமான ஆதாரங்கள் இருப்பதாக பெங்களூர், இந்திய அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராமர் பாலம் குறித்து முழுமையாக ஆய்வு செய்த மையத்தின் இயக்குநர் ஹரி கூறுகையில், வால்மீகி ராமாயணத்தை முழுமையாக ஆய்வு செய்து பார்த்ததில் ராமேஸ்வரம் கடல்பகுதியில் ராமர் பாலம் கட்டியிருப்பது உண்மை என்று தெரியவருகிறது. இந்தியா - இலங்கை இடையிலான கடல் பகுதியில் 103 குறுமலைகளை இணைத்து வானரப் படையின் உதவியுடன் 34 கிமீ தூரமுள்ள பாலத்தை ராமர் 5 நாட்களில் கட்டி முடித்தார் என்று வால்மீகி ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு வந்த பல வெளிநாட்டு ஆய்வறிஞர்கள் இதைப் பதிவு செய்துள்ளனர். இந்தியாவிலிருந்து இலங்கைக்கு ராம…
-
- 144 replies
- 25.3k views
-
-
சென்னை: மதிமுகவிலிருந்து விலகிய சிலர் என்.எஸ்.தேவன் என்பவர் தலைமையில் பெரியார் அதிமுக என்ற புதுக் கட்சியைத் தொடங்கியுள்ளனர். திமுகவிலிருந்து பிறந்தது அதிமுக. பின்னர் வந்தது மதிமுக. இப்போது மதிமுகவிலிருந்து பிரிந்த சிலர் சேர்ந்து பெரியார் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் ஒரு கட்சியைத் தொடங்கியுள்ளனர். இந்தக் கட்சியின் நிறுவனத் தலைவராக என்.எஸ்.தேவன் அறிவிக்கப்பட்டுள்ளார். இன்று பிறந்த இக்கட்சி குறித்து தேவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது கொள்கை மற்றும் நேர்மையை காப்பாற்றத் தவறிவிட்டார். என்று கொள்கையை வைகோ விட்டாரோ, அப்போதே நாங்களும் விலகி விட்டோம். உட்கட்சி பூசலை தீர்க்க வைகோ தவறிவிட்டார். எனவே நாங்கள் அங்கு இருக…
-
- 5 replies
- 1.8k views
-
-
தமிழ் மக்களுக்கு எதிரான இனக்கொலை நடவடிக்கை களுக்காகச் சிங்கள அரசு மீது "கண்டனம் செய்தல்" மற்றும் "எச்சரிக்கைகளை விடுத்தல்" என்ற நிலையிலிருந்து அதன் மீது "தண்டனைகள் வழங்கல்" என்ற ஆக்கப்பூர்வமான செயற்பாடுகளில் உலக நாடுகள் படிப்படியாக இறங்கி யுள்ளன. நீண்ட பல ஆண்டுகளாகச் சிங்கள அரசிற்குப் பொருளா தார - இராணுவ உதவிகளையும், அரசியல் ஆதரவுகளையும் வழங்கி வந்த மேலை நாடுகள் தற்போது சிங்கள அரசைக் கைவிட்டு ஒதுங்கும் அரசியல் போக்கை மேற்கொண்டு வருகின்றன. உலக அரசுகள் மற்றும் மனித உரிமை அமைப்புகளின் தொடர்ச்சியான கண்டனங்களைப் புறந்தள்ளிவிட்டு தமிழினக் கொலையைத் தீவிரப்படுத்தியுள்ள சிங்கள அரசை ஒரு "பயங்கரவாத அரசாக" முத்திரை குத்தும் ஆரம்ப முயற்சிகளில் அனைத்துலக சமூகம் இறங்கியுள்ளது. …
-
- 6 replies
- 2k views
-
-
தொழிலதிபர்களை மயக்கி ஆபாச படம் எடுத்து பணம் பறிப்பு-'மிஸஸ் இந்தியா' சிமி குமார் கைது! சென்னை: தொழிலதிபர்களையும், பெரும் பணக்காரர்களையும் மயக்கி அவர்களுடன் ஆபாசமாக இருந்து, படம் பிடித்து அதைக் காட்டி பண் பறித்து வருவதாக குற்றம் சாட்டப்பட்ட மிஸஸ் இந்தியா அழகி சிமி குமார் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். 5 கோடீஸ்வரர்களிடம் மோசடியாக திருமணம் செய்து பணம் பறித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தமிழகத்தைப் பெரும் பரபரப்பில் ஆழ்த்தினார் நடிகை பத்மா. வீராசாமி படத்தில் நடித்துள்ள பத்மா, பணக்கார வாலிபர்களை மயக்கி அவர்களுடன் உல்லாசாமாக இருந்து, அதை வீடியோவில் படமாக்கி அதைக் காட்டி பணம் பறித்து வந்ததாக கூறப்பட்டது. அவரைப் பொறி வைத்து போலீஸார…
-
- 1 reply
- 1.4k views
-
-
நளினி-பிரியங்கா விவகாரத்தில் மீண்டும் திருப்பம்? நளினி-பிரியங்கா விவகாரத்தில் மீண்டும் திருப்பம் சென்னை, மே. 6: வேலூர் பெண்கள் தனிச் சிறையில் நளினி, பிரிங்கா சந்திப்பு நடக்க வில்லை எனக்கூறிய சிறை கண்காணிப்பாளர் இராஜசௌந்தரி திடீர் பல்டி அடித்துள்ளார். இந்த சந்திப்பு நடைபெற்றது உண்மை. மேலும் விவரங்கள் தெரிவிக்க இயலாது என வழக்கறிஞர் டி.ராஜ்குமாருக்கு திடீர் கடிதம் எழுதியுள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக வேலூர் பெண்கள் தனிச் சிறையில் நளினி அடைக்கப்பட்டுள்ளார். இவரை மார்ச் 19-ம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா சந்தித்துப் பேசினார். எந்த விதிகளின் அடிப்படையில் இவர்கள் சந்திப்பு நடந்தது?, எவ்வளவு நேரம் பேசினார…
-
- 0 replies
- 930 views
-
-
பர்மாவில் கடந்த சனிக்கிழமையன்று ஏற்பட்ட சூறாவளித் தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 22,000 ஆக உயர்ந்துள்ளது என பர்மிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. 40, 000 பேருக்கும் அதிகமானவர்களை காணவில்லை எனவும் அரசு ஊடகம் கூறுகிறது. அவர்களுக்கு உதவுவது நமது கடமை. உதவ விரும்புபவர்கள் கேர் (Care)அமைப்பு மூலம் உங்களால் முடிந்த அளவு உதவலாம். Care அமைப்பின் இணைய லிங் இதோ:- https://my.care.org/05/myanmar/?qp_source=170860490000
-
- 2 replies
- 1.1k views
-
-
சென்னை: மதிமுகவின் 15வது ஆண்டு விழாவையொட்டி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, வைகோவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வைகோவுக்கு அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில் ஜெயலலிதா கூறியிருப்பதாவது: கால ஓட்டத்தில் நிகழும் பல்வேறு மாற்றங்களில் கரைந்து போகாமலும், சுய முகத்தை இழக்காமலும், தான் சார்ந்திருக்கும் தமிழ் சமூகத்தை புத்துருவாக்கம் செய்யும் பணியில் மதிமுக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு இன்றோடு 14 ஆண்டுகள் நிறைவடைந்தது. 15ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பது அறிந்து பெருமகிழ்ச்சி அடைகிறேன். மதிமுகவை இரும்புக் கோட்டையாக நிர்மாணிப்பதற்கான லட்சியப் பயணத்தில் ஏற்படும் தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி, துரோகங்களை தூள் தூளாக்கி, நிகழ்கால கோளாறுகளை சரி செய்து, எதிர்கால வர…
-
- 6 replies
- 1.6k views
-
-
பறந்து செல்லும் பெண் உருவம் ஒன்று மெக்சிகோ நாட்டில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. இதனால் வேறு கிரகத்துப் பெண் பூமியில் நடமாடுவதாக பீதி ஏற்பட்டுள்ளது. விஞ்ஞான உலகில் அவ்வப்போது ஏதாவது ஒரு பரபரப்பு ஏற்பட்டு அடங்கும். பறக்கும் தட்டு வந்து இறங்கியது என்பார்கள். வேற்று கிரகவாசிகள் பூமியில் வந்து விட்டுப் போனார்கள் என்றும் தகவலும் காட்டுத் தீயாக பரவுவது உண்டு. சில மாதங்களுக்கு முன் செவ்வாய் கிரகத்தில் மனித உருவம் இருப்பது போன்ற படம் வெளியாகி பெரும் விவாதத்தை உருவாக்கியது. இதேபோல இப்போது பறக்கும் பெண் போன்ற ஒரு மர்ம உருவம் மெக்சிகோ நாட்டின் நிïவோ லியோன் மலைப்பகுதியில் நடமாடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இரண்டு வருடங்களுக்கு முன்பு, 2006-ம் ஆண்டு மே மாதம் இதே போன்ற ஒர…
-
- 6 replies
- 2.3k views
-
-
திருவாரூர்: சேது சமுத்திரத் திட்ட கால்வாய் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த இரு கப்பல்கள் கடலில் நிலவிய பலத்த காற்றில் அடித்து வரப்பட்டு திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கரையில் ஒதுங்கின. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள தோவை வாய்க்கால் எனப்படும் முகத்துவாரப் பகுதியில் நேற்று இரு பெரிய கப்பல்கள் கரை ஒதுங்கின. அக்கப்பல்களில் யாரும் இல்லை. பெரிய அளவிலான இரு கப்பல்கள் தரை ஒதுங்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. விடுதலைப் புலிகளின் கப்பல்களாக இருக்கக் கூடுமோ என்ற குழப்பமும் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து விசாரணையில் இறங்கினர். விசாரணையில் அவை இரண்டும் சேது சமுத்திரத் திட்ட கால்வாய்ப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட கப்பல்கள் எனத் ெதரிய…
-
- 3 replies
- 1.4k views
-
-
வேலூர் சிறையில் ராஜி்வ் கொலையாளி நளினியை சந்தித்த பிரியங்கா சென்னை & டெல்லி: கடந்த மாதம் ரகசியமாக வேலூர் வந்த சோனியா காந்தியின் மகள் பிரியங்கா வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜி்வ் காந்தி கொலையாளியான நளினியை சந்தித்துப் பேசியுள்ள விவரம் இப்போது வெளியாகியுள்ளது. இந்தத் தகவலை பிரியங்காவும் உறுதி செய்துள்ளார். கடந்த மாதம் 19ம் தேதி பிரியங்கா காந்தி ரகசியமாக வேலூர் வந்து சென்றார். அங்குள்ள தங்கக் கோவிலுக்கு அவர் தரிசனம் செய்ய வந்ததாகக் கூறப்பட்டது. சாதாரண உடையில் இருந்த இரு கமாண்டோக்களுடன் விமானம் மூலம் சென்னை வந்த அவரை மாநில உளவுப் பிரிவினர் ரகசியமாக வேலூர் அழைத்துச் சென்றனர். வழியில் ஸ்ரீபெரும்புதூரில் ராஜிவ் காந்தியின் நினைவி…
-
- 28 replies
- 7.6k views
-
-
உள்ளாட்சித் தேர்தலில் தொழிற்கட்சி அடைந்துள்ள தோல்வியை பிரிட்டிஷ் பிரதமர் ஒப்புக்கொண்டுள்ளார் பிரதமர் கோர்டன் பிரவுண் இங்கிலாந்திலும், வேல்ஸ் பகுதியிலும் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் தமது தொழில் கட்சி மிகவும் மோசமான தோல்வியை அடைந்துள்ளதாக பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிரவுண் ஒப்புக்கொண்டுள்ளார். தசாப்த காலத்தில் அந்தக் கட்சி கண்ட மோசமான தோல்வி இதுவாகும். டொனி பிளயர் அவர்களிடம் இருந்து பிரதமர் பொறுப்பை ஏற்ற பின்னர் முதல் தடவையாக ஒரு முக்கிய தேர்தல் சோதனையை எதிர்கொண்ட கோர்டன் பிரவுண் அவர்கள், தான் இதனால் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும், மக்களின் கருத்தை தான் செவிமடுப்பேன் என்றும் கூறியுள்ளார். பெருமளவு முடிவுகள் வந்துள்ள நிலையில், 24 வீத வாக்குகளை …
-
- 1 reply
- 1.1k views
-
-
ரஷ்ய அமைதிப்படை வலுப்படுத்தலை நேட்டோ குறை கூறுகிறது 01.05.2008 / நிருபர் வானதி ஜார்ஜியாவிலிருந்து பிரிந்து சென்ற இரண்டு பிரதேசங்களான அப்காஜியா மற்றும் தெற்கு ஒசேட்டியா ஆகிய பகுதிகளில் தனது அமைதிகாக்கும் படையை வலுப்படுத்தும் ரஷியாவின் திட்டத்தினை நேட்டோ இராணுவ கூட்டணி குறை கூறியுள்ளது. இவ்வாறான நடவடிக்கை ஜார்ஜியாவின் இறையாண்மையை குறைத்து மதிப்பிடுவதாகும் என நேட்டோவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையினை நேட்டோ கவலையுடன் கவனித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார் sankathi.com
-
- 0 replies
- 676 views
-
-
சீனாவில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்தில் முதன்மை செயலாளராக பணியாற்றி வந்தவர், எம்.எம். சர்மா. இவர் பீஜிங் நகரில் உள்ள அலுவலகத்தில் பணியாற்றிய போது, சீன ஆசிரியை ஒருவருக்கும், அவருக்கும் கள்ள தொடர்பு ஏற்பட்டது. இது பற்றிய புகாரில் பேரில், இந்திய அதிகாரி சர்மா, இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார். இதுபற்றி டெல்லியில் வெளிஉறவுத்துறை அதிகாரி நவ்தேஜ் சர்னா கூறுகையில், "டெல்லியில் சர்மாவின் மனைவி மருத்துவமனையில் இருக்கிறார். எனவே சர்மாவின் வேண்டுகோள் படி, அவர் டெல்லிக்கு மாற்றப்பட்டு இருக்கிறார்'' என்றார். http://isoorya.blogspot.com/
-
- 0 replies
- 949 views
-
-
ஹிலாரியின் கருத்து தொடர்பில் ஈரான் ஐ. நா. விடம் முறைப்பாடு [02 - May - 2008] அமெரிக்க செனட்டரும் முன்னாள் முதற் பெண்மணியுமான ஹிலாரி கிளின்டன் கடந்த வாரம் வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில் ஈரான் ஐக்கிய நாடுகள் சபையிடம் முறையிட்டுள்ளது. எதிர்வரும் நவம்பரில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக போட்டியிடுவாரென எதிர்பார்க்கப்படும் ஹிலாரி கடந்தவாரம் ஈரான் இஸ்ரேலை தாக்கினால் அமெரிக்கா ஈரானை அழிக்குமெனத் தெரிவித்திருந்தார். தனது அணுநிகழ்ச்சித் திட்டம் சக்தி தேவைக்கானது மட்டுமே எனத் தெரிவித்து வரும் ஈரான், ஹிலாரியின் கருத்து கோபமூட்டக் கூடியதும் பொறுப்பற்றதுமென குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், ஐ.நா. சாசனத்தை வெளிப்படையாக மீறும் கருத்து …
-
- 0 replies
- 676 views
-
-
சாவர்க்காரும் - பகத்சிங்கும் ஒன்றா? பார்ப்பனர்கள்தான் எவ்வளவுக் “கெட்டிக்காரர்கள்!” கெட்டிக் காரர்கள் என்று நாம் சொல்லுவது நயவஞ்சகமாக எப்படியெல்லாம் காய்களை நகர்த்தக் கூடியவர்களாக இருக்கிறார்கள் என்ற அடிப்படையில் சொல்லப்பட்டதாகும். சில தலைவர்கள் பற்றி சுருக்கமாக வரலாறுகளைக் கூறுவது போன்ற சந்தடி சாக்கில், அவாளின் இஷ்ட தெய்வமான ஆசாமிகளை ஓகோ என்று உருவகப்படுத்திக் காட்டி விடுவார்கள். அதிலே “தினமலர்” ஏட்டுக்குத்தான் முதல் பரிசு! “யார் இவர்கள்?” என்ற தலைப்பில் ரவீந்திரநாத் தாகூர், கோபாலகிருஷ்ண கோகலே, ராஜீவ் காந்தி, ராஷ் பிகாரி போஸ், ஜவகர்லால் நேரு இவர்களைப்பற்றி குறிப்புகளைத் தந்துவிட்டு, இறுதியாக இந்தப் பட்டியலில் சாவர்க்காரும் திணிக்கப்பட் டுள்ளார். அதன் வி…
-
- 0 replies
- 1.2k views
-
-
வத்திக்கான் நகரம்தான். ‘தி ஹோலி ஸி’ என அழைக்கப்படும் நாட்டில் பெண்களே இல்லை. கத்தோலிக்கத்தின் தலைமையிடம் அல்லது போப்பாண்டவர்களின் இருப்பிடமாக உள்ளதால் இங்கே பெண்களே கிடையாது. குடும்பம் நடத்துவதற்கு இதுவரை அங்கீகாரம் வழங்கப்படாத நாடும் கூட.0.4 ச.கி.மீ. பரப்பு கொண்ட இந்நாடு இத்தாலியின் ரோம் நகருக்குள் அமைந்துள்ளது. 1859, 1860 மற்றும் 1870ல் இத்தாலியோடு இணைக்கப்பட்ட இந்நாடு, 1929 முதல் தனி நாடாக செயல்பட்டு வருகிறது. போப் ஆண்டவரின் அதிகாரத்திற்கு உட்பட்ட இந்நாடு, ஓவியக்கலையின் தாயகமாக இந்நாடு செயல்பட்டு வருகிறது. இத்தகைய சிறப்புக் காரணம் "மைக்கேல் ஏஞ்சலோ" என்னும் ஓர் சிற்பியே ஆகும். http://tvmalaionline.blogspot.com/2008/04/...-post_7172.html…
-
- 48 replies
- 9.1k views
-
-
வழமைபோல இணைய உலா வந்தபோது திருவடியான் பதிவுகளில் கண்ட இக்கட்டுரையை இணைக்கிறேன். உலகமயமாகும் உணவுப் பஞ்சம் 1. இன்றைக்கு பல நாடுகளின் முக்கியப் பிரச்சினை தீவிரவாதத்தின் மீதான போர் (War on Terrorism) அல்ல. உணவுப் பொருட்களின் திடீர்த் தட்டுப்பாடு. அத் தட்டுப்பாட்டால் ஏற்பட்ட விலைவாசி உயர்வு. விழுந்து கொண்டிருக்கும் டாலர் மதிப்பின் காரணமாக தமது பொருளாதாரம் கண்ணுக்குத் தெரியாமல் தேய்ந்து வருவதை தடுத்து நிறுத்தச் சக்தியற்று, சட்டத்தைக் கையில் வைத்துக் கொண்டு செய்வதறியாமல் திகைக்கும் நாடுகளின் அரசாங்கங்கள் என, உலகம் ஒரு வகையான நெருக்கடிக்குள் சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவில் ஏற்கனவே போராட்டங்கள் தொடங்கி விட்டன. பாராளுமன்றம் அளவில் விவாதங்களுடான கூச்ச…
-
- 0 replies
- 1.3k views
-