Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. "இலங்கையில் அமைதி ஏற்படுவதற்காக அங்கு மோதலில் ஈடுபடும் இரண்டு பிரிவினர்களுக்கும் இடையே இந்திய அரசு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று தமிழ்நாடு சட்டசபை தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. இந்தத் தீர்மானத்திற்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த தீர்மானத்திற்கான விவாதத்தின் போது சர்ச்சைக்குரிய பல விடயங்கள் தமிழ்நாட்டின் சட்டசபையில் பேசப்பட்டன. ஈழத் தமிழர்களுக்கு இந்தியா செய்த அநியாயங்கள் பற்றி பேசியவர்களின் பேச்சுக்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. ஆனால் பிழையான ஒரு வரலாற்றுத் தகவல் அவைக் குறிப்பில் பதியப்பட்டு விட்டது. அதற்கு காரணம், அதைக் கூறியது தமிழ்நாட்டின் முதலமைச்சர் கலைஞர் அவர்கள். "இந்தியா தலையிட்டு இரண்டு பிரிவினரையு…

  2. ''லண்டனில் சர்வதேச தமிழ் மீடியா கருத்தரங்கு... 'புலி ஆதரவாளர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட கருத்தரங்கு இது' என்றொரு பேச்சிருந்த நிலையில், லண்டன் செல்ல விசா கேட்டு இங்கிலாந்து தூதரகத்தில் மனுச்செய்தார் பழ. நெடுமாறன். நிராகரிக்கப்பட்டது. பார்த்தார்... சென்னை தூதரக உதவி இல்லாமலே லண்டனில் கால்பதித்து விட்டார்!'' ''என்ன சொல்கிறீர்...? எப்படி நடக்கும் இது?'' ''சென்னை தூதரகம்தான் விசா மறுத்தது. அவரோ டெல்லியில் இருக்கும் ஃபிரான்ஸ் தூதரகத்துக்கு விசா கேட்டு மனுப்போட்டார். உடனே கிடைத்தது. முதலில் பறந்தார் பாரீசுக்கு. அங்கிருந்து ஜெர்மன்... அப்படியே லண்டன்...'' ''லண்டனில் பிரச்னை இல்லையா?'' ''இல்லாமலா? 'இந்த நகருக்குள் வருவதற்கு நீங்கள் கோரிய விசா நிராகரி…

    • 6 replies
    • 2.8k views
  3. பொருளாதார வீழ்ச்சியை சமாளிக்க 100 பில்லியன் டாலர் வரித் தள்ளுபடி -புஷ் 29.04.2008 / நிருபர் வானதி அமெரிக்காவில் நாடெங்கிலும் உள்ள மக்களுக்கு 100 பில்லியன் டாலர்கள் வரித் தள்ளுபடி வழங்கும் நடவடிக்கைகளை அந்த நாட்டு அரசு ஆரம்பித்துள்ளது. திங்கள் முதல், பல லட்சக்கணக்கான அமெரிக்கர்கள், ஒவ்வொருவரும் தலா 600 டாலர்கள் வரையிலான கொடுப்பனவைப் பெற ஆரம்பிப்பார்கள். அமெரிக்க பொருளாதாரத்துக்கு ஊக்கம் அளிக்கும் அதிபர் புஷ்ஷின் திட்டத்தின் ஒரு அங்கம் இது. வணிக நிறுவனங்களும் இதன்படி 50 பில்லியன் வரித் தள்ளுபடியைப் பெறும். பொருளாதார வீழ்ச்சியின் சமிக்ஞையை தமது அரசு முன்கூட்டியே காண்பதாகக் கூறுகின்ற அதிபர் புஷ், அதனை எதிர்கொள்ள இந்த வரித் தள்ளுபடி உதவ…

    • 0 replies
    • 576 views
  4. இஸ்ரோ நிறுவனம் இன்று சாதனை 28.04.2008 / நிருபர் வானதி உலகிலேயே முதல் தடவையாக 10 செயற்கைக் கோள்களை ஒரே றொக்கெற்றில் ஏவி இந்திய விண்வெளி ஆய்வுக்கழகமான இஸ்ரோ இன்று சாதனை படைத்துள்ளது. இன்று காலை 9.30 மணிக்கு இந்த சாதனையை இஸ்ரோ நிறுவனம் தொடக்கியுள்ளது. றொக்கெற் ஏவப்பட்ட சிறிது நேரத்தில் அதிலிருந்து செயற்கைக் கோள்களும் வெற்றிக்கரமாக பிரிந்து சென்றுள்ளன. தற்போது இந்த செயற்கைக் கோள்களை அதனதன் வட்டப் பாதைக்கு நகர்த்திச் செல்லும் பணியில் இஸ்ரோவின் தரை கட்டுப்பாட்டு மையம் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. sankathi.com

    • 3 replies
    • 1.4k views
  5. கொலை முயற்சியிலிருந்து காயம் எதுவுமின்றி உயிர் தப்பினார் ஆப்கான் ஜனாதிபதி ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீட் கார்சாய் படுகொலை முயற்சியிலிருந்து மயிரிழையில் உயிர்தப்பியுள்ளார். கார்சாய் கலந்து கொண்ட இராணுவ நிகழ்வொன்றின் மீது கைக்குண்டு மற்றும் துப்பாக்கிப் பிரயோகத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சம்பவ இடத்திலிருந்து கார்சாய் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை நூற்றுக்கணக்கான மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடியதாகத் தெரிவிக்கப்படுகிறது. சோவியத் ஒன்றிய ஆதரவுடனான ஆட்சி முடிவுக்கு வந்து 16 வருடங்கள் நிறைவு பெறுவதை முன்னிட்டு இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இத்தாக்குதல் தமது அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதில் தமது 3 …

    • 0 replies
    • 597 views
  6. இந்தியா- நேபாளம் மேற்கொண்டிருந்த சகல ஒப்பந்தங்களும் ரத்து செய்யப்படும் [27 - April - 2008] *மாவோயிஸ்ட்டுகளின் தலைவர் பிரசண்டா இந்தியாவுடன் நேபாளம் செய்து கொண்டுள்ள அனைத்து ஒப்பந்தங்களும் ரத்து செய்யப்படும் என்று நேபாள மாவோயிஸ்ட் தலைவர் பிரசண்டா கூறியுள்ளார். நேபாளத்தில் மாவோயிஸ்ட்டுகள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் அக்கட்சி தலைவர் பிரசண்டா அளித்துள்ள பேட்டி வருமாறு; 1950 இல் இந்தியாவுக்கும் நேபாளத்திற்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட அமைதி மற்றும் நட்புறவு ஒப்பந்தம் உள்ளிட்ட அனைத்து ஒப்பந்தங்களும் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற எங்கள் கட்சி நிலையில் மாற்றமில்லை. அனைத்து நாடுகளுடன் நெருங்கிய உறவை பராமரிக்க வேண்டும் என்பது எங்கள் கட்சியின் ந…

  7. சீனாவில் பொது இடங்களில் புகைபிடிக்கத் தடை [27 - April - 2008] சீனாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதையொட்டி பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆயிரம் பேருக்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. மேலும் பொது இடங்களில் புகைபிடிப்பவர்களை கண்காணிப்பதற்காக 1,00,000 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் என சீன சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மே 1 ஆம் திகதி முதல் இத்தடை அமுலுக்கு வருகிறது. மீறி புகைபிடிப்பவர்களுக்கு 1.4 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்படுகிறது. புகைபிடிக்கும் இடங்களுக்கு தகுந்தவாறு அபராதத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இடங்களுக்கு தகுந்தவாறு 143 அமெரிக்க டொலர் முதல் 714 அமெரிக்க ட…

    • 2 replies
    • 935 views
  8. இதிருப்பதி: தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தெலுங்கு மக்களின் நலன் பாதிக்கப்பட்டால், தெலுங்கு கங்கைத் திட்டத்தின் கீழ் ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழகத்திற்குத் தரப்பட மாட்டாது என்று ராயலசீமா ஹக்குல ஐக்கிய வேதிகே (ராயலசீமா வளர்ச்சி இயக்கம்) என்ற தெலுங்கு அமைப்பு எச்சரித்துள்ளது. திருப்பதியில் இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் டி.ஜி.வெங்கடேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகப் பள்ளிகளில் தெலுங்கு மொழி பேசுவோரின் நலன்கள் புறக்கணிக்கப்படுகின்றன. இந்த நிலை தொடர்ந்தால், தெலுங்கு கங்கைத் திட்டத்தின் கீழ் ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழகத்திற்குத் தர அனுமதிக்க மாட்டோம். தமிழகத்தில் 10 சதவீதம் பேர் தெலுங்கு மொழி பேசுகின்றனர். எனவே அவர்களுக்காக தமிழக அரசு தெலுங்கு மொழிப் பள்ளிக…

    • 1 reply
    • 1.1k views
  9. பின்லேடன் தீவிரவாத பாதைக்கு திரும்பியது எப்படி? என்பது பற்றி புதிய தகவல் வெளியாகி உள்ளது. பின்லேடன் அமெரிக்க அரசாங்கத்தால் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டு, தீவிரமாக தேடப்பட்டு வரும் அல்-கொய்தா இயக்க தலைவர் பின்லேடன் பற்றி புதிய புத்தகம் ஒன்று வெளியாகி உள்ளது. `தி பின்லேடன்ஸ்' என்ற அந்த புத்தகத்தை புலிட்சர் விருது பெற்ற ஸ்டீவ் கோல் எழுதி உள்ளார். இதில் பின்லேடன் தீவிரவாத பாதைக்கு திரும்பியது எப்படி? என்பது பற்றி புதிய தகவலை அவர் வெளியிட்டு உள்ளார். அதன் விவரம் வருமாறு:- சவூதி அரேபியாவில் மிகப்பெரும் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த பின்லேடன், தனது சகோதரர்கள், சகோதரிகள் ஆகியோருடன் வசித்தார். சிறு வயதில் அவர் மத படிப்புகளில் மூழ்கி இருந்தார். அந்த நேரத்தி…

    • 0 replies
    • 881 views
  10. அஸ்திரேலியாவில் ஏப்ரல் மாத நடுப்பகுதியில் நடைபெற்ற சிட்னி அரபுத் திரைப்படவிழா 2008 இல், பலஸ்தீனப் படங்கள் பிரிவில் திரையிடப்பட்ட இரும்புச் சுவர் (The Iron Wall) என்ற திரைப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. இஸ்ரேலிய அரசு தனது சியோனிசவாத (Zionism) இன அழிப்புக் கொள்கைகள் மூலம் பலஸ்தீன மக்களை எவ்வாறு தொடர்ந்து நிர்மூலமாக்கி அழித்து வருகிறது என்பதை படம் தெளிவாக எடுத்துக் காட்டியது. 52 நிமிடங்களில் ஒரு மக்கள் கூட்டம் அனுபவிக்கும் துன்பங்களையும் கொடுமைகளையும் மனதில் தைக்கும் வண்ணம் சிறந்த முறையில் வெளிப்படுத்திய ஆவணப்படம் இது. படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது திரையரங்கில் கேட்ட பல விசும்பல் ஒலிகள் படம் ஏற்படுத்திய தாக்கத்தை வெளிப்படுத்தின. படத்தின் இயக்குனர் மொஹமட்…

  11. சென்னை: தனக்கு தொடர்ந்து பேச வாய்ப்பு தராததால் சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ கண்ணீர் விட்டு அழுதார். சட்டசபையில் இன்று கல்வித்துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது. அப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ. கோபிநாத் பேசுகையில், முதலாம் வகுப்பு முதல் 3ம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடம் என்று உள்ள தால் எல்லை மாவட்டங்களில் படிக்கக்கூடிய தெலுங்கு மாணவர்கள் கஷ்டப்படுகிறார்கள். இதனால் சுமார் 1 லட்சம் தெலுங்கு மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றார். அப்போது சபாநாயகர் குறுக்கீட்டு, உங்களுக்கு பேச ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்து விட்டது. உட்காருங்கள் என்று கூறி அடுத்த உறுப்பினரை பேச அழைத்தார். தன்னை தொடர்ந்து பேச விடாமல் தடுத்…

  12. இத்தாலியில் புகையிரதத்தில் பயணித்த ஒரு 30 வயது நிரம்பிய இளைஞன் அவன் முன்னிருக்கையில் அமர்ந்திருந்த 55 வயது நிரம்பிய பெண்ணை தீவிரமாக பார்த்தமைக்கு 10 நாள் சிறைத்தண்டனையும் 40 யூரோ அபராதமும் நீதிமன்றில் அளிக்கப்பட்டது. மேலும் வாசிக்க http://vizhippu.blogspot.com/2008/04/10.html

  13. சென்னை: சென்னை அருகே இரு கிராமங்களில் நடந்த அரசினர் தட்டம்மை தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போடப்பட்ட 4 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை அருகே உள்ளது பென்னலூர்ப்பேட்டை மற்றும் வெங்கடாபுரம் கிராமங்கள். இரண்டும் திருவள்ளூர் மாவட்டத்திற்குள் உள்ளன. புதன்கிழமை இந்த கிராமங்களில் தட்டம்மை தடுப்பூசி முகாம் அரசு மருத்துவமனை சார்பில் நடத்தப்பட்டது. தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு ஏராளமான பேர் தங்களது குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டனர். இதில் நந்தினி, பூஜா, மோகனபிரியா, லோகேஷ் ஆகிய நான்கு குழந்தைகள் ஊசி போட்ட சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. இதுதவிர மேலும் 15 குழந்தைகளுக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டது. அந்தக் குழந்த…

  14. வேலூர் சிறையில் நடந்த பிரியங்கா _ நளினி சந்திப்பு கடந்த ஒரு வார காலமாகவே சர்வதேச மீடியாக்களின் தலைப்புச் செய்திகளில் அடிபட்டு வருகிறது. தனது கணவர் ராஜீவ் காந்தியின் படுகொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நளினி மீது, காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காட்டும் பரிவு, சர்வதேச அரங்கில் அவர் மீதான நன்மதிப்பை அதிகப்படுத்தியிருக்கிறது. தனது தந்தை கொலைக்கான நிஜப் பின்னணியை அறியும் பொருட்டே, கடந்த மார்ச் மாதம் 19_ம் தேதி பிரியங்கா, நளினியைச் சந்தித்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், நளினியோடு ஆயுள் தண்டனைக் கைதியாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ரவிச்சந்திரன், அவரது வழக்கறிஞர் மூலமாக நம்மைத் தொடர்பு கொண்டார். அதில், ‘இந்தப் படுகொலையில் இதுவரை வெளியில் வராத பல…

    • 1 reply
    • 1.6k views
  15. பென்சில்வேனியா: ஹிலாரி வெற்றி . Wednesday, 23 April, 2008 11:55 AM . பிலடெல்பியா, ஏப்.23: பென்சில்வேனியா மாகாணத்தில் நடைபெற்ற ஜனநாயக கட்சி வேட்பாளரை தேர்வு செய்யும் முதற்கட்ட வாக்குப்பதிவில் தன்னை எதிர்த்து போட்டியிடும் கருப்பின தலைவரான பாரக் ஒபாமாவை விட கூடுதல் வாக்குகள் பெற்று ஹிலாரி கிளிண்டன் முன்னிலை பெற்றுள்ளார். . இதன் மூலம் அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இதுவரை முடிவுகள் வெளியாகி உள்ள 32 சதவிகித வாக்கெடுப்பில் ஹிலாரிக்கு 54 சதவிகித வாக்குகளும், ஒபாமாவுக்கு 46 சதவிகித வாக்குகளும் கிடைத்துள்ளன. பென்சில்வேனியா மாகாணத்தில் நடைபெற்ற முதல்கட்ட வாக்கெடுப்பில் த…

    • 0 replies
    • 766 views
  16. பராகுவே நாட்டின் 60 ஆண்டு ஆட்சி முடிவுக்கு வந்தது தென்னமரிக்கா பாராகுவே நாட்டின் 60 ஆண்டுகால ஆட்சி கிறிஸ்தவ பிஷப்பாக இருந்த பெர்னான்டோ லுகோ முடிவு கட்டி உள்ளார். 1947ம் ஆண்டு இக் கட்சி ஆட்சியை பிடித்தது. இதுவரை காலமும் கொலராடோ என்ற கட்சியின் ஆட்சி நடந்தது. அண்மையில் நடைபெற்ற தேர்தலில் பெர்னான்டோ லுகோவுக்கு 41 சதவீத ஆதரவு கிடைத்தது. இது ஆளும் கட்சி வேட்பாளர் பிளாங்கா ஓவ்லருக்கு 31 சதவீதம் கிடைத்தது. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண் வேட்பாளரான ஓவ்லர் தன் தோல்வி அடைந்துள்ளார். pathivu.com

    • 0 replies
    • 742 views
  17. அமெரிக்காவின் பயங்கரவாதிகள் பட்டியலில் இடம்பிடித்திருத்த/இருக்கின்ற நேபாள மாவோஜிட் போராளிகள்.. சமாதான வழிக்குத் திரும்பி இடைக்கால அரசில் அங்கம் வகித்து.. நேபாளத்தில் அண்மையில் நடந்த பொதுத் தேர்தலில் நேபாள மக்களின் அமோக ஆதரவைப் பெற்று அரசமைக்க உள்ள தறுவாயில்.. அப்போராளிகள் மீது அடக்குமுறையை முன்னைய நேபாள மன்னர் சார்பு அரசு கட்டவிழ்த்துவிட ஆயுத உதவி மற்றும் இராஜதந்திர வழிகளில் உதவிய அமெரிக்கா.. இப்போ அப் போராளிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறது. கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக நேபாளத்தில் முடியாட்சியை முறிவுறுத்த மாவோஜிட்டுக்கள் போராடி வந்தனர் என்பதும் சந்திரிக்கா அம்மையார் காலத்தில் நேபாளப் போராளிகளுக்கு விடுதலைப்புகள் பயிற்சி அளிப்பதாக இந்தியா உட்பட சிறீலங்காவு…

    • 5 replies
    • 1.9k views
  18. சோனியாவை பிரதமராக்க தயாராக இருந்தார் கலாம்: உதவியாளர் பி.எம்.நாயர் திங்கள்கிழமை, ஏப்ரல் 21, 2008 டெல்லி: சோனியா காந்தியை பிரதமராக்க முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தயாராக இருந்தார். இதற்கான அழைப்புக் கடிதத்தையும் அவர் தயார் செய்து வைத்திருந்தார் என்று கலாமிடம் உதவியாளராக இருந்த பி.எம்.நாயர் கூறியுள்ளார். பி.எம்.நாயர் அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக இருந்தபோது அவரது செயலாளராக இருந்தவர். தற்போது 'கூடஞு ஓச்டூச்ட் உஞூஞூஞுஞிt: Mதூ தூஞுச்ணூண் தீடிtட tடஞு கணூஞுண்டிஞீஞுணt' என்ற பெயரில் நூல் ஒன்றை எழுதியுள்ளார் நாயர். அதில் சோனியா காந்தி குறித்து பல தகவல்களைக் குறிப்பிட்டுள்ளார் நாயர். அந்த நூலில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள். 2004ம…

  19. அணு ஆயுதங்களை நெடுந்தூரம் தாங்கிச் சென்று தாக்கவல்ல ஏவுகணையை, பாகிஸ்தான் இன்று சோதனை செய்தது. இது, குறிப்பாக இந்தியாவிற்குள் உள்ள இலக்குகளை குறிவைத்துத் தாக்குதல் நடத்தக் கூடிய திறன் பொருந்தியதாகும். கடந்த மூன்று நாட்களில் இரண்டாவது முறையாக பாகிஸ்தான் ஏவுகணை சோதனை மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக பாகிஸ்தான் ராணுவம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஷாகீன் - 2' அலல்து 'ஹத்ஃப் - VI' என்றழைக்கப்படும் அணு ஆயுதங்களை ஏற்றிக் கொண்டு சுமார் 2000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்ட ஏவுகணை சோதனை , முதன்முறையாக ராணுவப் போர் படையால் மேற்கொள்ளப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளது. இதற்கு, முந்தைய சோதனைகள் யாவும் ராணுவ விஞ்ஞானிகள்…

    • 0 replies
    • 905 views
  20. சென்னை: எனக்கு குண்டு துளைக்காத பழைய அம்பாசிடர் கார் கொடுத்துள்ளனர். அந்த காருக்கு பதிலாக குண்டு துளைக்காத டாடா சபாரி அல்லது ஸ்கார்பியோ கார் வழங்கப்பட வேண்டும். சந்திரபாபு நாயுடுவுக்கு தரப்பட்டுள்ளது போல எனக்கும் கமாண்டோ படை பாதுகாப்பாக தர வேண்டும். வெடி குண்டுகளை கண்டுபிடிக்க மோப்ப நாய் வசதி செய்து தர வேண்டும். என் வீட்டுக்கு வரும் கடிதங்களில் குண்டு உள்ளதா என்பதை சோதிக்க கருவிகள் வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா இன்று புதிதாக ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக அரசியல் தலைவர்களில் என் உயிருக்குத் தான் விடுதலைப் புலிகளால் அதிக அச்சுறுத்தல் உள்ளது.…

  21. இலவசமாக செவ்வாய் செல்லலாம் விரவாக் உங்கள் விண்ணப்பத்தை 20.08.2008 முதல் அனுப்புங்கள் விண்ணப்பப்படிவத்திற்கு ............................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_2405.html

    • 6 replies
    • 1.4k views
  22. சென்னை: சென்னை அரசு மருத்துவமனையில் ஒரே நேரத்தில் இரு பெண்களுக்கு நடந்த பிரசவத்திற்குப் பிறகு, அவர்களின் குழந்தைகள் மாறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இரு தரப்பினரும் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து டி.என்.ஏ சோதனை செய்து குழந்தைகளை பெற்றோரிடம் ஒப்படைக்க டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர். சென்னை ராயபுரத்தில் ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு மகப்பேறு மருத்துவமனை உள்ளது. இங்கு பரக்கத் பேகம் என்ற பெண்ணும், காமாட்சி என்ற ெபண்ணும் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டிருந்தனர். நேற்று முன்தினம் இருவருக்கும் குழந்தை பிறந்தது. பரக்கத் பேகத்திற்கு பெண் குழந்தை பிறந்ததாக அவரது கணவர் அன்சாரிடமும், காமாட்சிக்கு ஆண் குழந்ைத பிறந்ததாக அவரது கணவர் இளங்கோவிடமும் மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்த…

  23. இலங்கை அரசுக்காக வக்காலத்து வாங்கும் மத்திய வங்கி http://news.bbc.co.uk/2/hi/programmes/hardtalk/7351220.stm

  24. சி.என்.என் (CNN) செய்தியாளர் ரிச்சார்ட் குவெஸ்ட் கைது CNN வர்த்தக செய்தியாளர் ரிச்சர்ட் குவெஸ்ட் (Richard Quest) நேற்று இரவு அமெரிக்காவில் கைதானார். இவர் போதைபொருள் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைதானார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இவர் CNN தொலைக்காட்சியில் வர்த்தக செய்திகள் வாசிப்பதில் மிகவும் பிரபல்யமானவர். இவர் செய்தி வாசிப்பதில் இவருக்கு என்றே ஒரு தனி பாணி அமைத்து வாசிப்பவர். http://orukanani.blogspot.com/2008/04/cnn.html

  25. அழகியை மணக்கிறார் புதின் . . லண்டன், : ரஷ்ய அதிபர் புதின், தன்னை விட 22 வயது இளையவரான ஜிம்னாஸ்டிக் அழகியை மணக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. . ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு 56 வயதாகிறது. வரும் ஜூன் மாதம் அவரது பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இந்நிலையில், 24 வயதான அலினா கபேவா என்னும் ஜிம்னாஸ்டிக் அழகியோடு புதின் நெருக்கமாக இருப்பதாக செய்திகள் வெளியாகின்றன. இந்த இருவரும் ஜூன் மாதம் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக லண்டன் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. புதின் அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு இந்த திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. புதின் தனது மனைவி லூதுனிலாவை கடந்த இரண்டு மாதங்களாக பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது.…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.