கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
சாப்பாட்டுப் பயணங்களில்...! பசியின் ஆற்றாமையில் கவளம் கவளமாய் தொடங்கிய சாப்பாட்டுப் பயணம் இடவலமாய் கை சுழற்றி வீசுகிறது இடையிடையே கிழிந்த இலையில்! இறுதிவரை நிகழவேயில்லை பசி மாற்றம்! பசியின் துவக்கத்தில் பருக்கைகளின் மேல் துளிர்க்கும் வேட்கையும் விருப்பும் ஆசையும் ஆர்வமும் உள்ளிறங்கும் போது முற்றிலும் நீர்த்துப்போகிறது ருசியின் சுவைகளின்றி! எல்லாப் பந்தியின் நிறைவிலும் உள்நுழைவதில் பரபரப்பு வியாதியாய்! ஒரு முறையாவது பந்தியில் முதலில் உட்கார வேண்டும் சங்கல்பம் தோன்றி மறைகிறது வழக்கம் போல முட்டி மோதி இறுதியாய் இடம் பிடிக்கையில்! http://nejamanallavan.blogspot.com/
-
- 3 replies
- 1.6k views
-
-
இன்றைய தேதியில்... மகிமைக்கு உரிய அத்தனை பேரையும், பத்துநாள் பட்டினி போட்டால் திருந்துவார்கள்! அந்தஸ்தோடு ஆட்டிப்படைக்கும் மனித எந்திரங்கள்!! அதிகாரங்களின் அதிகாரங்கள் இவர்கள்!!! அவர்களை நினைத்தாலே போதும் ... ஒலிவாங்கியோடு ஒரு ஒளிநாடாதான் எம் கண்முன் நிற்கும். அதை விட்டால் வேறொன்றும் வராது!? வராதா....????!!!! அடங்குவதும் தாங்குவதும் அவர்களுக்கும் இயல்புதான். அவர்கள் வாழும் முகவரியும் அதே எங்கள் பூமிதான். வலியும் கிலியும் அவர்களுக்கும் இருக்கு. வழியும் சளியும் ... நெளியும் பாம்பும் அவர்களையும் பயமுறுத்தும். என்றாவது ஒருநாளேனும் அவர்களை இயல்பாய் பார்த்திருக்கின்றோமா? பசித்தலும் புசித்தலும்... புசித்தபின் படுத்தலும் , காலையிலெழுதலும் காலைக…
-
- 2 replies
- 850 views
-
-
முற்குறிப்பு - வழக்கம் போல் ஓரளவு நீண்ட கவிதை, பொறுமை உள்ளவர்களுக்கு மட்டும்.. - இது போன்ற தொனிப்பொருளில் நான் எழுதுவது குறைவு போட்டி காரணமாக எழுத விழைந்தேன் .(ஏனென்றால் உணர்வு பற்றிய கவிதைகள் பாதிப்பது அதிகம் என உணர்ந்ததால், பற்றும பழைய கசப்புகள் ) விழிபற்றி விதையாகி... (வழங்கப்பட்ட கருப்பொருள் விழியதன் வழியினிலே) எழுதியவர்: மதுரகன் செல்வராஜா துடிக்கின்ற விரல்களிலிருந்து கண்களைப்பற்றி ஆயிரம் கவிதைகள் எழுதவேண்டும் - காதல் மயக்கத்தில் அல்ல... கண்ணீர் பற்றியெரியும் கதைகளையும் வற்றிப்போன விழிகளையும் கொண்டு இன்னும் சிலிர்க்கின்ற மயிர்களும் புடைக்கின்ற நரம்புகளும் கொஞ்சம் மீதமிருப்பதை எதிரிக்குப்புலப்படுத்த வலிக்கின்ற இதயங்களுடன…
-
- 10 replies
- 1.8k views
-
-
என்னை கைப் பிடித்தவன் மொழி,இன,மத வேறுபாடு பார்ப்பதில்லை அதேபோல் நானும் எந்த வேறுபாடும் பார்ப்பதில்லை என்னை அவன் இயக்கினான் நானும் இயங்கினேன் தோளில் சுமந்தான் நானும் அழகாக தூங்குவேன் நண்பனுக்கு அறிமுகம் செய்தான் அவன் என்னை பார்த்து வியந்தான் ஒரு நாள் வீழ்த்தினான் முன்நின்றவனை எதிரி என்றான் இன்னோரு நாள் வீழ்த்தினான் முன்நின்றவனை துரோகி என்றான் மற்றொருநாள் இவன் வீழ்ந்தான் நானும் வீழ்ந்தேன்,முனகினான் மற்றொருவன் ஒடி வந்தான் என்னை தூக்கினான் நிறுத்தினான் அவன் முனகளை இனியோரு நாள் இவனும் வீழ்வான் நான் இன,மத மொழி பார்க்கமாட்டேன் ஆனால் என்னை இயக்குபவன் .......
-
- 14 replies
- 1.7k views
-
-
என்னுடைய அதிகபட்ச ஆசைகள் என்பதெல்லாம், நான் எழுதுகின்ற மாதிரியே வாழணும்! வாழுகின்ற விஷயங்களையே எழுதணும்!... என்பதுதான்!! எதிர்த்த மாடிக்கட்டிடங்களின் கண்ணாடிகளில், முகம் பார்க்கவேண்டிய நிர்ப்பந்தம்! அவை முகத்தில் ஓடும் சோக நரம்புகளை மட்டுமே பெருப்பித்துக் காட்டுகின்றன! எம் கண்ணீரில் பட்டுத் தெறிக்கும் சூரிய ஒளியும் வானவில்லாகி... கட்டணப் பரிமாற்றங்களில் ஊர்போய்ச் சேர்கின்றது! அந்நியத் தெருக்களில் கொஞ்ச தூரம் நடந்தவுடன், களைத்துப் போகின்றேன்... ! ஏனென்று புரியவில்லை!? பழக்கப்படாத தெருக்களும், கொஞ்சம் பழகின முகங்களும்... ஏதோ, அகழிகள் போல் பயமுறுத்துகின்றன! என்னுடைய ஊர் ஒழுங்கைகளின் புழுதிமண் வாசனையும்... மழைக்கால சகதிகளும்... இப்பொழுது, எவ…
-
- 2 replies
- 1k views
-
-
நான் லிங்கமாலா ஆனேன் ஜுனில் வெளிவந்த ராவய பத்திரிகையில் அதன் ஆசிரியர் குழுவிலுள்ள மஞ்சுள வெடிவர்தன எழுதி, செல்வர் என்பவரால் தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட கவிதை இது. சிங்கள வாசகர்களை நோக்கி எழுதப்பட்ட இந்த கவிதை மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட கவிதை. சிங்கள பேரினவாத சக்திகள் மத்தியில் சர்ச்சையையும் கிளப்பிவிட்டிருந்த கவிதை இது. மஞ்சுள வெடிவர்தனவின் கன்னி மரியா எனும் சிறுகதைத் தொகுதி சென்றவருடம் இலங்கை அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டது. அது இன்னமும் நீதிமன்ற விசாரணையில் சிக்கியிருக்கிறது. ”பறை” வாசகர்களுக்காக மீண்டும் அவரது கவிதை. வெசாக்தின முழுநிலவு தலையில் கைவைத்து அழுகிறது அதன் மூக்குச் சளி சாரளம் வழியால் தெறிக்கின்றது அயல்…
-
- 12 replies
- 2.2k views
-
-
கைக்கு எட்டாத வானமாய் - என் கண்களில் தெரிகின்றாய் நீலமாய்! தொலைதூர நோக்கங்கள் எதுவுமில்லை, தோலுரித்த இசைகளைத் தவிர! உன் புன்னகைக்குள் விழுந்து கிடக்கும் வீரனாய், இன்னும் இருக்கின்றேன் உயிருடன்! உன் கண்கள் இன்னும் என்னைச் சீண்டுகின்றன... கூர்மையான வாளுடன்! கொஞ்சமேனும் தள்ளிப்போடு யுத்தத்தை, நான் போராட என்னுயிர் வேண்டும்! அதுவும்.... நீதான்!
-
- 7 replies
- 1.2k views
-
-
உணர்ச்சியலைகள் அடித்தோய்ந்த பின்பும் உன் கரையில் மணலையள்ளி வருடியபடி வெண்ணிலா உன்னை ரசித்திருப்பேன்! கடல் மீண்டும் கரைதொடும்... நிலவு மீண்டும் வானம் வரும்... என்ற எதிர்பார்ப்புடன், வெற்று வானத்தை பார்த்தபடி... சுடுமணலில் நான்!
-
- 4 replies
- 1.7k views
-
-
தூக்கமில்லாத இரவுகளோடு போராடித் தோற்றுப்போனபோதும் கனவுகளுக்கு ஏங்கிய இரவுகள் அதிகம்! நினைவுகளும் ஞாபகங்களும் ஒவ்வொரு இரவிலும் என்னைக் கொன்று போட்டாலும், உன் நினைப்புடன்தான் உயிர்க்கின்றேன் ... அதிகாலைகளில்...! இப்பொழுதெல்லாம்... அதிவிரைவுச் சாலைகள் எனக்கு , பழக்கப்பட்ட ஒழுங்கைகள் போல இருக்கிறது ! வேகங்கள் என்னைப் பயமுறுத்துவதில்லை! சதா ரணமுமாய் சாவதைவிட செத்துப்போனால் பரவாயில்லை என்று தோன்றும்போது, சில அசாதாரணங்கள் கூட.... சாதாரணமாய் மாறிவிடுகின்றனவோ ? நான்.... செத்துத் தொலைந்தால் நன்றாய் இருக்கும்!
-
- 2 replies
- 813 views
-
-
அறுத்தெறியப்பட்ட இதயத்தின் இரத்தக் குழாய்கள் கொப்பளித்த சிவப்பணுக்களில் - என் உயிர் உச்சரித்த உன் காதற் சிதறல்களைத் தேடிக்கொண்டிருக்கின்றேன் இன்னும்! புரிதல்களும் புரியாமையும்.... புரிந்துகொள்ளப்படுவதற்கு, சில காலங்கள் செல்லும்! - அதுவரை, இந்த ரணவலித் தேடல்கள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்!!!
-
- 5 replies
- 897 views
-
-
உள்ளம் பேதலிக்க... எண்ணம் கொடு! என் வாழ்விலும்... வண்ணக் கோலமிடு! எல்லை மீறும்போது... என்னைத் தடு! "கொஞ்சக்" கனவிலேனும்... என்னை விடு!
-
- 2 replies
- 874 views
-
-
பிரிவுகளும் இழப்புக்களும் அடிக்கடி வந்து பழக்கப்பட்டதென்றாலும், வலிகளும் வேதனைகளும் சர்வசாதாரணமென்று நினைத்தாலும், மீண்டும் பார்ப்போம்... என்ற நம்பிக்கையில் பிரியும் போதும் கூட, விழியோரத்தில் கசியும் நீர்த்துளிகள் ... கட்டுப்பாட்டை மீறும் தருணங்கள், கேள்விகள் கேட்டு நிற்கின்றன..... இது உனக்குப் புதியதா?... என்று !!!
-
- 2 replies
- 904 views
-
-
ஜாதிகளும்.... மதங்களும்..... தூக்கிப் பிடிக்கும் கொடிகளாகிவிட்ட பின்னர், "ஜனநாயகம்" என்ற போலிச்சாயம் பூசிய அழுக்குத் துணிகளுக்கு, ஏன் வெள்ளைச் சிறகுகள்....???????
-
- 0 replies
- 961 views
-
-
வெள்ளைப் புறாவுடன் வந்து... "சமாதானம்" வந்துவிட்டது என்றார்கள்!? சிவப்புப் பறவைகளாய்... சிதறிப் போயின அவை! அதன்பின்புதான் பார்த்தோம்... நம் மண்ணில், புறாக்களும் பிணந்தின்னும் என்று!
-
- 0 replies
- 559 views
-
-
வண்ண வண்ணக் காகிதங்கள் வேண்டுமென எண்ணி... மனித நேயங்களை காலி பண்ணிய உலகத்திலே, காசு மட்டும் பேசும் என்று முடிவாகிவிட்ட பிறகும்.. என்றாவது ஒருநாள் அந்த வண்ணமுத்திரைகள், வானவில்லாகிப் போகாதா? என்று... ஏங்கும் , பசித்து ஒட்டிய வயிறுகள்!!! மனித நேசங்கள் பேசிக்கொள்ளும்போது... பணம் பந்தியில் இருக்காது! "காலங்கள் மாறும்" என்பது.... வெறும் நம்பிக்கையாய் மட்டும்!!!
-
- 0 replies
- 515 views
-
-
நான் உச்சரித்த முதன்முதற் கவிதை... ஒரேயொரு வார்த்தையில் " அம்மா " என்பதுதான்! இன்னும் எத்தனை கவிதை எழுதினாலும்... அத்தனை அழகு இதில் மட்டுந்தான்!
-
- 4 replies
- 1.3k views
-
-
பூக்கள் பூப்பதற்கு காத்திருப்பதைப் போல உன் அழைப்புக்களுக்காக விழிகள் பூத்திருப்பேன்! இந்த உலகத்தில் பறக்கும் அத்தனை பட்டாம்பூச்சிகளும் என்னைச் சுற்றியே பறப்பதாய் உணர்வேன்... நீ என்னோடு பேசிக்கொண்டிருக்கும் தருணங்களில்! இத்தனை இனிமை இருப்பதாய்க் கேள்விப்பட்டால்... தேனீக்கள் உன்னை மட்டும் சுற்றியே வட்டமிடும்! நிலவும் உன்னைப் பார்க்கப் பூலோகம் வரும்! தென்றலும் உன்னைத் தேடி தெருத்தெருவாய் அலையும்! கடலலைகள் உன் காலடியில் தவங்கிடக்கும்! என்னைப் போலவே....!
-
- 0 replies
- 603 views
-
-
நினைவுவலிகளை நீக்குமொரு நிகழ்வுப்பயணத்தை நினைவுகளூடே நீட்டிக்கொள்கிறேன்..... காலக்கரைவுகளில் புது வர்ணங்கள் பூசப்பட பூரித்துப்போகிறது நிகழ் கணங்களில் முகம் . வல்வைக்கடலுவர்க்காற்று வந்துமோதி முற்றத்து முல்லை பூவுருத்திப்போகும்_ .அதுவே மயங்குமாலையில் மன்மத வாசம் பூசும் காற்றில் ............. எருக்கலையும் நாயுருவியும் தெருக்கரைகளில் கதைபேசும் உருக்குலைதிருந்தாலும் எந்தநூர் திருக்கலையாதிருக்கும் பிணிஎதுமில்லாமல் போய்வர முனியப்பரை துணை கேட்டு வல்லை வெளியூடே எல்லைத்தாண்டும் பயணம் தொடரும் . உடுவை சந்தியில் உணர்வரியா உவர்ப்புடன் தேடல் பாடுபொரு…
-
- 4 replies
- 1.1k views
-
-
இரதை வாழையில் இடிவிழும் போது குறுக்க வெட்டி தங்கம் எடுக்க இலவுகாத்த கிளிகளாக காத்து இருந்தோம் இடி தலையில் விழுந்து முகம் உருக்குலைந்துபோனது வேலியில் சற்று சரிந்து நிற்கும் கருகிய கம்பிக் கட்டையாய் பற்றைகள் வளர்ந்த வயல்க் கரைகளில் எஞ்சியவர்கள் நிற்கின்றார்கள் புரட்டாதிச் சனி விரதம் பிடிப்பவர்கள் காகத்துக்கு சோறுவைக்க இன்னும் கம்பிக்கட்டைகளில் குந்தியிருக்கும் காகங்களை கூப்பிடுகின்றார்கள் நலமடித்த நாம்பன்கள் போல் வேரறுந்த மரங்கள் போல் கப்பாத்து பண்ணப்பட்ட நாய்கள் போல் பரிதவிக்கும் இந்த வாழ்க்கையின் வேதனைக்கு விரதமிருந்து காகத்துக்கு சோறுவைத்து விடிவுகள் தேடும் அவல வாழ்வு எமக்கு மட்டும் எல்லாப் பிரச்சனைகளும் எமக்கு வெ…
-
- 8 replies
- 1.6k views
-
-
நீ கவனமாக இரு……… போராட்டம் வீண் போகாது.” Posted by: on Jul 24, 2011 தமிழீழ விடுதலைப் புலிகள் உலகம் முழுமையும் விழுது பரப்பி நிற்க்கும் பெரு விருட்ச்சம். குருவிச்சைகளும் மாயமான்களும் மாவீரர் தடம் பற்றி ஒருபோதும் தலைதூக்க முடியாது. எவரேனும் ஆணிவேரை அழிக்க நினைத்தால் விழுதுகள் வீரியம் கொடுக்கும ; கறுப்பு யூலைகளும் சிவந்த மேய்களும் உலகின் மனச்சாட்சியை தட்டத் தொடங்கிவிட்டது சாட்சியங்களை ஒப்புவிப்போம். அன்று சிங்களத்தின் சிறைக்கூண்டில் - குட்டிமணி நெஞ்சை நிமிர்த்தி சொன்ன வார்த்தைகள் எங்கோ ஒரு மூலையில் உள்ளுணர்வாய்…. ”ஒரு குட்டிமணியைக் கொல்வீர்களனால் பல்லாயிரம் குட்டிமணிகள் தோற்றம் பெறுவார்கள.;” நான் ஓர் விடுதலைப் போராளி இறுதியா…
-
- 0 replies
- 915 views
-
-
மணல் சுமக்கும் கடற்கரை , இந்தக் கன்னம் சுமக்கும் கை விரல் , . நித்தம் உன் நினைவுகள் சுமக்கும் இந்த இதயம் என மெல்ல நீள்கிறது இந்த கடற்கரை காட்சிகள் இன்னும் என்னுள் கரை தொடாத அலைகலென கனக்கிறது கைரேகை முழுவதும் அழியாத உன் ஞாபகங்கள் !.. - பனித்துளி சங்கர்
-
- 0 replies
- 1.5k views
-
-
தான்தோன்றிக் கவிராயரின் கவிதைகள்! சமீபத்தில் கொழும்பில் நடைபெற்ற ஒரு நாடகத்தொடக்க விழாவில் பேசிய ஒரு பட்டதாரி சிறு கதாசிரியர், சில்லையூர் செல்வராசனின் கவிதைகளைப் பற்றிப் பேசும்போது அவை வெறும் Blank Verse என்று குறிப்பிட்டாராம். இத்தகைய தீர்ப்பை அளிக்க, ஒருவருக்கு யாப்பிலக்கணம், தமிழில் மட்டுமல்ல, ஆங்கிலத்திலும் நன்கு தெரிந்திருக்க வேண்டும். அவ்வாறு தெரியாமல் வாயைப் பிளந்தால் அவரது அறியாமையின் நாற்றந்தான் ஊரெல்லாம் பரிமளிக்கும். பட்டதாரிச் சிறு கதாசிரியரின் பேச்சு இதற்கு நல்ல உதாரணமாக அமைந்துள்ளது. நமது நாட்டிலுள்ள 'மரபு'களில் ஒன்று, நாலு நூல்களை நெட்டுருப் போட்டு, நான்கு முறை நூன சித்தியும் ஐந்தாம் முறை மூன்றாம் வகுப்பில் முழுச் சித்தியும் பெற்றுப் பண்டிதரோ…
-
- 0 replies
- 807 views
-
-
எனது உலகம்... போரில் தொலைந்த நகரத்தைச் சுற்றிலும் சிதறிக்கிடக்கும் ஓலங்களால் என் உலகத்தை வனைந்துகொண்டு கண்ணீராய் அருவிகளில் வழிந்தோடும் எம் மக்களின் துயரங்களில் மூழ்கிக்கிடக்கிறது என் ஆன்மா என் மன நிலத்தில் சுழன்றடிக்கும் துயர்க்காற்றின் அணல் உடலெங்கும் பெருநெருப்பாய் எரிக்கிறது பசியால் வாடுமெங்கள் குழந்தைகளை நினைத்து முகில் உரசும் முகடுகளில் பெருங்குரலில் காற்று மோதி இரைகிறது வயல் நிலங்கள் நீளவும் எம் இனத்தின் துயரங்களை உதிர்த்தபடி பெயர் தெரியாத பறவைகள் பிணங்களைக் கட்டி இழுத்துக்கொண்டு கழுகுகளைச் சபித்தபடி செல்கின்றன மேகங்கள் எம் மக்களின் அவலங்களைக் காவிக்கொண்டு கோபமாய் அலைகின்றன நாய்கள் ஊளையி…
-
- 1 reply
- 1.5k views
-
-
நட்சத்திரங்கள் பூத்த வானம் விரிந்திருந்தது! எமக்குப் பின்னால் பாதியாய் ஒளிர்ந்த நிலவு தொடர்ந்து வந்தது! தூரத்து வயல் வெளியை மூடியிருந்தது வெண்பனி தென்னைகளில் மோதி குடியிருப்புகளை ஊடுருவி எம் செவி வழி நுழைந்தது வங்கக் கடலில் எழுகின்ற அலையோசை ! சந்தடி ஓய்ந்த தெரு வழியே நீயும் நானும் விடுதிவரை நடந்தோம் ! இப்படியே எத்தனையோ இரவுகளில் விவாதிப்போம் நெடு நேரம் முடிவில் ,எதிர்காலம் குறித்த அவநம்பிக்கைகளுடன் பிரிந்து செல்வோம் ! பின் வந்த, பதற்றமான பொழுதொன்றில் உன் விடுதலை வேட்கைக்குத் தடையாயிருந்த அனைத்தையும் உதறி அடவி புகுந்தாய் ! பரணி... உன் நினைவுகள் தேய்ந்து கொண்ட…
-
- 0 replies
- 665 views
-
-
ஆண்மை ஊரே மெல்லுறக்கம் கொள்ளும் பின்மதிய நேரம் தெருமுடக்கில் நீட்டிக்கொண்டிருந்தது அன்று விசித்திரப்பிராணியாகிச் சொல்லாமல் வகுப்பினின்று வெளிநடந்தேன் ஓடும் பேருந்தில் திடுக்குற்று விழிதாழ்த்தி அவமானம் உயிர்பிடுங்க கால்நடுவில் துருத்தியது பிறிதொரு நாள் வீட்டிற்குள் புகுந்து சோபாவிலமர்ந்தபடிக் காட்சிப்படுத்திற்று இருள் படர்ந்த தெருவொன்றில் மார்பழுத்தி இறைச்சிக்கடைமிருகமென வாலுரசிப்போனது பின்கழுத்தை நெருங்கி சுடுமூச்செறியும் போதில் ஈரம் படர்ந்து திகைப்பிருள் சூழ்ந்த உன் கண்களை நினைத்தபடி ‘குறி’ தவறாது சுடுகிறேன் இதழ்க்கடையிரண்டிலும் முளைக்கின்றன பற்கள் என் சின்னஞ்சிறுமியே! http://koodu.thamizhstudio.com/thodargal_14_15.php
-
- 0 replies
- 1.4k views
-