கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
ஈழமணித் திருநாட்டில் சுற்றிவரும் அலையோசை வளங்கொழிக்கும் குளிர்வாடை நாட்டிடையே ஆர்ப்பரிக்க வடதிசை யொலிக்கின்ற ஓங்கார நாதமுமே நடைபோடும் நல்லுலகின் யேசுபிரான் நாமமும் கீழ்த்திசை யலையோடு குர்ஆனும் ஒலிகேட்க திரிகரண சுத்தியுடன் திடமாக நின்றறிருந்தால் பரிவில்லாச் சிங்களனும் பார்த்துமே பறந்திருப்பான் தமிழனிற்குள் தனித்தொரு அணிபிரிந்து அழியாவண்ணம் வழிவழியே வையகத்தில் வசையான கேலிக்கதை நிலையாமல் நெஞ்சத்தில் நிறுத்தி நாளும் கலையாத கருத்தோடு காண்கின்ற ஒற்றுமையுள் ஈழமண்ணின் கனிச்சுவையும் இனிப்பான நன்னீரும் பாணன் தன் புகழ்சூழ்ந்த யாழ்ப்பாண நகர்தன்னில் தங்கத் தமிழ்மக்கள் தனித்தோர் கோலோச்ச மங்காத மறவர்கள் மரணித்து விதையாகி வஞ்சக எதிரிகளை வென்ற…
-
- 0 replies
- 785 views
-
-
காதல் சின்னங்கள் குட்டிப்புலிகளாய்..... கவிதை - இளங்கவி மனதெல்லாம் வண்ணங்கள் என்னை மயக்கிடும் எண்ணங்கள் நாளை என் திருமணம் ; அதனால் மனத்திலே ஓர் பயம்..... தூக்கம் இழந்து சுழல்கின்றேன் படுக்கையிலே சரிதான் போதுமடி எழுந்திரடி சொல்கிறது என் ஊர்குருவி சோம்பல் முறிக்கின்றேன் அந்நேரம் தோழியரும் என்னை சூழ்கின்றார்..... கிணற்றடியில் மறைந்து நீராட என்னை பார்க்கிறது ஓர் பச்சை கிளி.. என்னை கொள்ளைகொண்ட போராளிக்கு கொடுக்கப் போகும் என்னழகை நீயா பார்ப்பது அவன் துப்பாக்கி வாங்கி உன்னை சிதறடிப்பென் என்றுசொல்லி ச்சீ.... போ என்று கலைக்கிறேன்.... அதன் பின் அலங்காரம் அழகான மணவறை அவன் அருகில் அமர்ந்து அவனை நேரில் பார்க்காமல…
-
- 0 replies
- 1.2k views
-
-
தொழிலாளர் தினம் பாரிலுள்ள தொழிலாளர் பர்ர்த்திருந்த மே ஒன்று ஊரெங்கும் உன்னதமாய் உருவெடுக்கும் ஊர்வலங்கள் தினக்கூலி ஊழியரும் ஆர்ப்பரிக்கும் மேதினத்தில் மனக்கெழிர்ச்சி பொங்கியங்கே முழக்கமிடும் நாளின்று அலுவலகத் தொழிலாளர் ஆலை நிறுவனங்கள் கல்லுடைப்போர் மற்றும் கட்டிட வல்லுனர்கள் உழவுசெய்து உணவளிக்கும் உத்தமத் தொழிலாளி வழக்கம் போல் விதைகளைத் தூவிநிற்க இன்று மூழ்கிநிற்கும் இயற்கையின் வருகையிலே நன்றேயுழைத் தால்தான் உணவில்லா நிலைமாறும் அன்னாளே பொன்னாளாய் ஆறுகின்ற வார்த்தையொடு உழைப்பவரின் வியர்வையிங்கே உலருமுன்னே ஊதியங்கள் அழைத்தங்கே அளித்திடல் வேண்டுமென ஆன்றோர்கள் அன்போடு அறவார்த்தை அனைவர்க்கும் பொதுவாக உன்னத கருத்துக்கள் உவந்தார்கள் அந்நாளில் உ…
-
- 0 replies
- 1k views
-
-
ஏ சர்வதேச சமூகமே! கவிப்பேரரசு வைரமுத்து சொந்தநாய்களுக்குச் சொத்தெழுதிவைக்கும் தேசங்களே! ஓர் இனமே நிலமிழந்து நிற்கிறதே நெஞ்சிரங்க மாட்டீரா? பூனையொன்று காய்ச்சல் கண்டால் மெர்சிடீஸ் கார் ஏற்றி மருத்துவமனை ஏகும் முதல் உலக நாடுகளே! ஈழத்து உப்பங்கழியில் மரணத்தின் வட்டத்தில் மனித குலம் நிற்கிறதே! மனம் அருள மாட்டீரா? வற்றியகுளத்தில் செத்துக்கிடக்கும் வாளை மீனைப்போல் உமிழ்நீர் வற்றிய வாயில் ஒட்டிக்கிடக்கும் உள்நாக்கோடு ரொட்டி ரொட்டி ரொட்டியென்று கைநீட்டும் விரல்கள் கண்குத்தவில்லையோ அமெரிக்க அதிபரே! தமிழச்சிகளின் மானக்குழிகளில் துப்பாக்கி ஊன்றித் துளைக்கும் சிங்களவெறிக் கூத்துகளை அறிந்தும் அறியாயோ ஐ.நாவே? வாய்வழி புக…
-
- 1 reply
- 1.3k views
-
-
ராஜபக்க்ஷே..! நம் சாம்பல் மேட்டில் உன் கருகிய பிணம் விழும்.... கவிதை - இளங்கவி துட்ட கைமுணுவின் அடுத்த அவதாரம்..... சிங்களர் புகழ்வார் உன் புகழ் எந்நாளும்...... சிங்களர் வாழ்வில் நீயோர் சரித்திரம் தமிழர் வாழ்வுக்கொ நீயோர் தரித்திரம்..... பூக்காத மொட்டையும் கருவிலே கசக்கினாய்.... பூத்த மலரெல்லாம் தீயிலே பொசுக்கினாய்.... தமிழர் பிணங்களின் நடுவில் உன் இராச்சியம் நடத்துவாய்.... பொய்கள் உரைத்து உன் தேசியம் விளக்குவாய்..... தமிழரின் அழுகுரல் உனக்கு உன் தேசிய கீதமா...? எங்களின் பிணங்கள் உன் புல் தரை புற்களா...? ஆடுகள் நனைவதில் நீ ஓநாய் கவலையாம் உன் அழிவுத்திட்டத்துக்கு; தமிழரை அழைப்பதே உன் வேலையாம்.... தம் உ…
-
- 2 replies
- 1.4k views
-
-
பரமேஷ்வரா எங்கேயடா உன் அந்த அழகிய புன்னகை!!!!! ஆகாரம் தண்ணி இன்றி இருந்த போதும் முகம் நிறைய புன்னகையை அள்ளி தந்தாய் உன் உடல் சோர்ந்து போய்க் கொண்டிருக்கையிலும் உன் புன்னகையை அள்ளி தந்தாய் மக்கள் வெள்ளம் உனை சூழ்ந்து கொண்டிருந்த போதும் உன் புன்னகையை அள்ளி தந்தாய் உன் முடிவில் மாற்ரம் இல்லை என மன உறுதியுடன் நீ உரைத்த போதும் உன் புன்னகையை அள்ளி தந்தாய் உன் அருகில் வந்தவர்க் கெல்லாம் உன் புன்னகையை அள்ளி தந்தாய் தற்போது மட்டும் உன் புன்னகையை எங்கே புதைத்து விட்டாய் ஒரு முறையேனும் உன் புன்னகையை எமக்காக தருவாயா உன் வலி தெரிகிறது இருந்தும் உன் புன்னகைக்காக எம் மனங்கள் ஏங்குகின்றன......... காத்துக் கிடக்கின்றன........... எங்கள் உடன் பிறவா உறவே ஒரு …
-
- 0 replies
- 1.4k views
-
-
சொந்த நாய்களுக்குச் சொத்தெழுதி வைக்கும் தேசங்களே! ஓர் இனமே நிலமிழந்து நிற்கிறதே நிலம் மீட்டுத்தாருங்கள் பூனையொன்று காய்ச்சல் கண்டால் மெர்சிடீஸ் கார் ஏற்றி மருத்துவமனை ஏகும் முதல் உலக நாடுகளே! ஈழத்து உப்பங்கழியில் மரணத்தை தொட்டு மனித குலம் நிற்கிறதே! மனம் இரங்கி வாருங்கள்! வற்றிய குளத்தில் செத்துக்கிடக்கும் வாளை மீனைப்போல் உமிழ்நீர் வற்றிய வாயில் ஒட்டிக்கிடக்கும் உள்நாக்கோடு ரொட்டி ரொட்டியென்று கைநீட்டிம் சிறூவர்க்குக் கை கொடுக்க வாருங்கள்! தமிழச்சிகளின் மானக்குழிகளில் துப்பாக்கி ஊன்றித் துளைக்கும் சிங்கள வெறிக் கூத்துக்களை நிரந்தரமாய் நிறுத்துங்கள்! வாய்வழி புகட்டிய தாய்ப்பால் காதுவழி ரத்தமாய் வடிவது கண்டு கண…
-
- 0 replies
- 1.2k views
-
-
உணர்ச்சியுள்ள தமிழரெல்லாம் ஒன்று கூடினோம் உயிர்ப் பலியாகும் ஈழத் தமிழர்க்காக என்றும் வாடினோம் செல்வா காலம் முதல் சிங்களர் ஆதிக்கம் வீழ்த்த பரணி பாடினோம் சிறைச்சாலை, சிம்மாசனம் இழப்பு என்று சித்ரவதை கண்டு வாடினோம் ஈழ விடுதலைப் போருக்கு இந்திரா காந்தியும் ராஜீவும் இணக்கம் தந்தனர் இந்தியாவில் மலைமுகடு, வன வனாந்தரங்களில் பாசறை அமைத்து இடையறாப் பயிற்சியும் வழங்கி ஈழ விடுதலைப் போராளிகளாக்கினர் அந்த விடுதலைத் தளகர்த்தர்க்கிடையே விரிசல் விரிசல் என்று வேறுபட்டு நின்று; ஆளுக்கொரு ஆயுதம் ஏந்தி அவர்களை அவர்களே அழித்துக் கொண்டனர் பிரித்தாளும் சூழ்ச்சியிலே பிரிட்டிஷாரையும் வெல்லுகின்ற சிங்களத்து வெறியர்களால் சீரழிந்து போனதய்யா சிங்கத் தமிழினத்தின் ஒற்றுமை…
-
- 8 replies
- 2.7k views
-
-
தமிழினமே.......நீ தகிக்காதே தவிக்காதே தளர்ந்து விடாதே.... துடிக்காதே துவளாதே துன்பப்படாதே..... மறக்காதே மயங்காதே மடிந்து விடாதே....... ஓடாதே ஒழியாதே ஓய்ந்து விடாதே....... தயங்காதே தலை குனியாதே தனியாதே தாகம் தான் தமிழீழத் தாகம் தான் திக்காதே திணறாதே திகைக்காதே பொய்க்காதே தமிழீழம் பொய்க்காதே.
-
- 0 replies
- 1.4k views
-
-
திக்குத்தெரியாத காட்டினிலே திசை தேடி அலைகின்றோம் திறக்காத கதவுகளை தினம் தினம் தட்டுகின்றோம் கருணையில்லா உள்ளங்களை கருணை காட்டச் சொல்கின்றோம் முட்டுகின்றோம் மோதுகின்றோம் முழிக்கின்றோம் செய்வதறியாது ஏனிந்த வாழ்வென்று ஏங்குகின்றோம் நாள்தோறும் தமிழினத்தின் தலையெழுத்தை தயவின்றி எழுதிவிட்டான் இறைவனவன் காலங்கள் சென்ற போதும் கோலங்கள் மாறவில்லை, எங்கள் அவலங்கள் முடியவில்லை திக்குத்தெரியாத காட்டினிலே திசை தேடி அலைகின்றோம்....
-
- 0 replies
- 798 views
-
-
தமிழனத் தலைவனவர் தமிழகத்தில் தானின்று அமிழ்தெனுந் தமிழுக்கே அவப்பெயரை தந்ததுமேன்? பாரே யொரு பதிலை பார்த்துக் கண்பூத்திருக்க யாரோ சொன்னதென உபவாசம் திறந்திருந்தார் பாரிலுள்ள பைந்தமிழர் பாரிய பேரணிகள் உரியமுறை உணவருந்தா உபவாசம் உறுத்தியே மருவிநிற்கு வுலகினையே கருப்பொருளைக் கேட்டுநின்று இருபத்தோர் நாளாய் இழைத்துக் கிடக்கையிலே கண்டனமும் எச்சரிப்பும் களிகூர்ந்த பேச்சுக்களும் ஆண்டபேர் நாடுகளும் ஆற்றுவது புதுமையிலை இயலான கவிநடையில் இயற்றுகின்ற வசனமதால் அயலாகும் நாடாகி அழித்தொழிக்க அரவணைக்கும் நடுவண் ணரசபையின் பொய்வார்த்தை புரியாமல் கூடும்குடும்பத்தார் குதூகலிக்க கைவிட்டீர் பெருமிதமாய் கூக…
-
- 0 replies
- 800 views
-
-
உயிரை கொடுத்து உணர்வை வளர்த்தாய் நீ இட்ட தீ எரிந்து சமைக்கும் முத்துக்குமரா!! மாறாத புன்னகையே மாசற்ற முத்துக்குமரா ஆறாத காயங்களை தாங்கிநிற்கும் தமிழ்மண்ணின் சோகத்தைத் தாங்காமல் சோதனை தந்தாயோ பாகத்தின் நிலையுறுத்தி பாரெங்கும் தெளியவைத்து வீறாகி உன்னுயிரை சுடரேற்றி உரமிட்டாய் என்னருமைத் தமிழுக்கு வித்தான வெண்ணிலவே கண்களிலே நீரழைக்க கனலேற்றித் துடித்தாயே பித்தரைப் போலநாம் புலம்பெயர்ந்த நாட்டினிலே புத்தரையடி பேணும் புனிதரல்லாச் சிங்களனின் முத்திரை பதிக்கின்ற போலி முகங்களுடன் கிண்டலுடன் கேலிபண்ணும் தாயைப்பழி துணைகளுடன் ஏதுவழி யறியாமல் சட்டதிட்ட வகையுணர்ந்து பேசவழியறியாது அடக்கமது தான்மருவி இனமழிக்கும் ராஜபக்ஷ மகிந்தனெனும் மகாவசுரன் …
-
- 2 replies
- 798 views
-
-
சொந்தநாய்களுக்குச் சொத்தெழுதிவைக்கும் தேசங்களே! ஓர் இனமே நிலமிழந்து நிற்கிறதே நெஞ்சிரங்க மாட்டீரா? பூனையொன்று காய்ச்சல் கண்டால் மெர்சிடீஸ் கார் ஏற்றி மருத்துவமனை ஏகும் முதல் உலக நாடுகளே! ஈழத்து உப்பங்கழியில் மரணத்தின் வட்டத்தில் மனித குலம் நிற்கிறதே! மனம் அருள மாட்டீரா? வற்றியகுளத்தில் செத்துக்கிடக்கும் வாளை மீனைப்போல் உமிழ்நீர் வற்றிய வாயில் ஒட்டிக்கிடக்கும் உள்நாக்கோடு ரொட்டி ரொட்டி ரொட்டியென்று கைநீட்டும் விரல்கள் கண்குத்தவில்லையோ அமெரிக்க அதிபரே! தமிழச்சிகளின் மானக்குழிகளில் துப்பாக்கி ஊன்றித் துளைக்கும் சிங்களவெறிக் கூத்துகளை அறிந்தும் அறியாயோ ஐ.நாவே? வாய்வழி புகட்டிய தாய்ப்பால் காதுவழி ரத்தமாய் வடிவது க…
-
- 2 replies
- 1.3k views
-
-
-
அகிம்சைக்கு கதவடைப்பு வரலாற்றுப்பதிவுகள் பரமேஷ்வரா.................எனக்கு உன் முகம் தெரியவில்லை அண்ணா திலீபன் முகம் தான் தெரிகிறது அன்று நல்லூரின் வீதியில் இன்று லண்டனின் வீதியில் அகிம்சைக்கு கதவடைப்பு, சிங்களவன் அக்கிரமத்துக்கு வரவேற்பு மேற்குலக நாடுகளே வெற்கித் தலை குனியுங்கள் வரலாறு சொல்லட்டும் அதர்மத்தின் பக்கம் நின்று தமிழர்க்கு இழைத்தீர்கள் அநீதி என்று...
-
- 0 replies
- 684 views
-
-
இத்தாலி எருமையின் எட்டப்பன் நீதி கவிதை - இளங்கவி தமிழனின் இனத்தையே நம்பவைத்து கழுத்தறுத்த கரு நாய் நீ தீயே...... தமிழினம் உனை மறவா இதுவே உன் தலைவிதியே..... துரோகத்தின் கலைக்கூடம் தமிழன் துன்பத்துக்கு ஓர் உருவம் தமிழனின் சரித்திரத்தில் நீ தவறிவிட்ட ஓர் அகரம்.... கவிதையால் நமை தடவிவிட்டு கத்தியால் கழுத்தறுத்த கடைசித்தமிழனாய் இருந்துவிடு :இல்லையேல் நம் ஆயிரமாம் உயிர்களுடன் உடன் கட்டை ஏறிவிடு..... தவறிய சகோதரத்தை தட்டிவைத்தான் நம் தலைவன் நெளிவான நடைபாதை நிமிர்த்திவைத்தான் நம் தலைவன்; அதை சகோதர யுத்தமென்று எம் தலையை குனியவைத்தாய் கடைசியில் இத்தாலி எருமையின் எட்டப்பனாய் மாறிவிட்டாய்..... தமிழுக்காய் உன் பதவி …
-
- 3 replies
- 1.8k views
-
-
மெல்லத் தமிழினி மேற்சாகப் போகுதோ மெல்ல ரும் மெளனம் காட்டுமோ வுலகம் வெழுதினான் வல்லவனிருந்தே வெறத்தானுணவை மெல்லக் கதறினேன் மூழ்கினேன் சோகத்தில் மெல்ல முடியா மலே. வெள்ளிப் பனியுறையும் வெள்ளையர் தேசத்தே தெள்ளிய குறிக்கோளாய் தானவர் தரணிக்கு காவுகொள்ளும் தமிழனத்தின் குருதியது வழிந்தோட மேவியே வழிகாட்டும் அரக்கர்களின் கொடுமைதனை சீலத்தன்மையொடு சிந்தனையும் சேர்த்தங்கே காலவன் கைகளுக்கு கைவிலங்கு போட்டிடவே மனிதத்தின் வகையறிந்து மாயுமெங்கள் உறவுகளை கனிவுகொண்டு காத்திடவே கருவாக எண்ணியங்கே பண்பாளன் பார்த்திபனாம் திலீபனென்னும் மறுபெயரான் காட்டிய வழிநெருங்கி கடந்தவீரெட்டு தினங்களாய் ஏட்டிலோரைந்து கோரிக்கை தான் வைத்து …
-
- 1 reply
- 673 views
-
-
அகிலமெங்கும் உன் பெயர் குழந்தை அடிமை நாட்டில் நீ ஓர் தீவிரவாதி! ஆம் நீ ஓர் தீவிரவாதி! பார்வைக் கணையால் பதைக்க வைக்கும் நீ ஓர் தீவிரவாதி பறக்கு முன்னே உன் இறகொடித்த பின்னும் பார்வையால் கொல்லும் நீ ஓர் தீவிரவாதி! மனிதம் இழந்த மனிதர் மத்தியில் மனம் தேடும் நீ ஓர் தீவிரவாதி! அப்படிப் பார்க்காதே அன்பே அதைத்தாங்கும் வலிவெமக்கில்லை மன்னித்து விடு தேவதையே இது மானிடர் வாழும் பூமி! தேவதைகளுக்கு இங்கே இடமில்லை! இல்லாத இறைவைனின் இறையாண்மை இங்கு வேதம்! அரசியல் சட்டமென்றோர் அரக்கச் சட்டையணிந்த அசுரர் வாழும் அவனியிப் பூமி! தமிழனாய் பிறந்ததால் தன்மானம் இருப்பதால் சுடப்பட்டாய் நீ சுதந்திரம் கேட்டதால்! …
-
- 2 replies
- 1.8k views
-
-
முதுபெருந் தலைவர்கள் முன்னைநாள் முதல்வர்கள் வெட்டிப் பேச்சளக்கும் அரசியல் கனவான்கள் கோணங்கிகள் கோமளிகள் என்று வேற்று நாட்டவனிடமே சாட்டையடி வாங்கிய பழுத்த அரசியல் மேதைகள் களங் காணும் தருணம் இது... "பாதணிகள் கழிவு விலை *கொசு வலைகள் மலிவு விலை" விளம்பரங்கள் தூள் கிளப்பும் பிரசாரப் புறநகர்கள். கிட்ட நின்று பேசினால் எச்சிலால் உமிழலாம் என்ற பயத்தினால் பந்தல் வைத்து பக்கத்தில் வர மறுக்கும் பெருந்தலைமைக் கூட்டங்கள்.... மேடையேறும் நாடகங்கள் மீண்டும் தெருக்கள் தோறும். செருப்பால் எறிவார்கள் என்ற பயத்தினால் *கொசு வலையின் பின்புறத்தில் கூச்சலிடும் தலைமைகளே பதில் சொல்வீர் "நாளை பாதணிகள் போட்டுவந்தால் பாயுமா? உங்கள…
-
- 0 replies
- 798 views
-
-
உலகத் தமிழர்க்கு தலைவனாம் எண்ணத்தில் கைக்கெட்டும்தூரத்தில் கொத்து கொத்தாய் கொலைகள். தடுக்க தைரியமில்லா தலைவா தப்பான சேர்க்கையில் தன்மானம் இழந்தாயோ? இல்லை வெள்ளை தோலினிலே தன்னிலை தளர்ந்தாயோ? அருகினிலே மாழ்வது உன்னினமே தட்டிக் கேட்க துப்பில்லை தரம் கெட்டவளின் பசப்பினிலே தடுமாறி போனாயோ? இல்லை உடல் தளர்ந்தும் உன் ஆசைகள் தளரவில்லையா? மதி கெட்டவனே அருவருப்பாயில்லை உனக்கு வாக்கெடுப்பு நடாத்தி பார் யார் தமிழினத் தலைவனென்று உன் கரங்களே எங்கள் தம்பிக்கு வாக்களிக்கும். அறிந்தும் அறியாதவன் போல் நாடகம் ஏன்? நாளைய சந்ததி படிக்கும் வர…
-
- 2 replies
- 1.2k views
-
-
பரமேஸ்வரா நீ தியாகத் தீ..! உன்சாவை கண்டுதானா உலகம் விழிக்க வேண்டும்.. நீயும் தமிழமகன்தான். தளராத ஒரு வீரன்தான். பரமேஸ்வரா பார்திருக்க உலகம் நீ பசித்திருக்கின்றாய். நல்லூர் வீதி விட்டு நகர்ந்துள்ள உன்யாகம் வெள்ளை வீதியில் ஆனால் கொடுங்கோல் முடிவில்லை அதை செய்தவரும் மாறவில்லை. தில்லையாடி வள்ளியம்மா பிறந்த மண் என்பார். காந்தீய யாத்திரையால் சுதந்திரம் கொண்டோம் என்பார்.. இன்று கொல்லும் போது எம்மை ஏன் மெளனமாய் உதவுகின்றார். புரியாத எமக்கு புரிய முன்னர் இழவுதான் மிஞ்சும்.. அவர் மெளனம் கலைக்க நீ தொடுத்த போராட்டம் பொய்க்காது. ஒற்றை மரம் தான் கண்ணுக்கு தெரியும் அதை தாங்கும் வேர்கள் என்றுமே தெரியாது. உனக்கு பின் தமிழர் …
-
- 0 replies
- 893 views
-
-
விடியல் வன்னியில் போர்மேகம் புலத்தில் மக்களின் எழுச்சி .... வீதியில் தாய் தமிழககத்தில்...அரசியல் சித்து சிலபேரின் தற்கொடை தவிர வெறீயின் விளின்பில் தமிழீழம் புலம் மக்களோ வீதியில் எழுச்சியில்... சர்வதேசம் பாராமுகம் விடியல் தூரம் இல்லை விழித்திரு விடியலுக்காக இளையோன்
-
- 0 replies
- 774 views
-
-
சிரங்கள் சிதையினும் எமக்கென்ன -நாம் சிவனைத் தொழுது பயனடைவோம் உயிர்கள் தொலையினும் எமக்கென்ன -நாம் உமையைத் துதித்துப் பயனடைவோம் பிள்ளைகள் இறப்பினும் எமக்கென்ன -நாம் பிள்ளையாரைப் புகழ்ந்து பயனடைவோம் முறை கெட்டாலும் எமக்கென்ன -நாம் முருகனைப் பாடி பயனடைவோம் அநீதி நடந்தால் எமக்கென்ன -நாம் ஆண்டவனைப் போற்றி பயனடைவோம் ஈழமே எரியினும் எமக்கென்ன -நாம் ஈசனை வேண்டிப் பயனடைவோம் இனமே அழியினும் எமக்கென்ன -நாம் இறைவனை நினைந்து பயனடைவோம் http://gkanthan.wordpress.com/index/eelam/payan/
-
- 0 replies
- 746 views
-
-
புறப்படு புலியென!!! கொத்துக்கொத்தாய் செத்துவிழும் என் சொந்தங்கள் கண்டு மரணங்கள் மரத்திங்கே போயாச்சு! எத்தர் கூட்டமிங்கே எக்காளமிட்டுக் களித்திருக்க இன்னும் வலுப்பெற்று மனம் உறுதி ஆயாச்சு! ஆரா"றோ"போடும் பணத்துக்காய் பிணம் குவிக்க எம் இனத்துள்ளே எட்டப்பர் கூட்டங்கள்! வாலாட்டும் நாய்கூட தன் எஜமானர் இனத்திற்கே! இங்கோ உயிர் வளர்க்கும் காக்கை வன்னியர்கள்! எந்த நேரம் வந்து நாடுகள் தடை போட்டதோ அந்த நேரம் பொங்கியெழவில்லை அதனால் உயிரிழப்புகளே நாம் கொடுக்கும் விலை! இனியும் இங்கே பொறுத்திருந்தால் வரலாற்றில் எம் இனமே இல்லை! பங்கு போட்டால் பங்கம் வரும் தன் தேசம் துண்டாகும் என்றொரு பாசாங்கு நடத்துகின்ற கூட்டம்! நம்பி நம்பி நின்ற எம்…
-
- 0 replies
- 885 views
-
-
பரமேஸ்வரன் பாதுகாக்கப்படுவானா...? பனியுறை தேசத்துப் பாராளுமன்ற வாசலுக்குள் பரமேஸ்வரன்...! சாவோடு தினம் குருதிச் சேற்றோடு சாகும் இனத்தைச் சாக்கொண்டு போகாமல் சாகும் வரை விரதமுடன்.... சத்தியனே பரமேஸ்வன் செத்துவிடலாம் போலிருக்கிறது. உனையும் திலீபன் போல இழந்து போவோமோ ? பயம் நெஞ்சுகளில் நெருப்பின் கனதியோடு..... சொகுசுக் கதிரைகளுக்குள் சொர்க்கத்தைக் காண்கின்ற சொக்கன்கள் இங்கும் அதிகம் தோழனே....! இவர்கள் வைத்த வினை ஈழத்தமிழர்களின் இத்தனை விதிக்குமாய் இட்ட வினை. இதையறுத்து எமக்காய் ஒளிதருவர் என்ற நம்பிக்கையின் கடைசித் துருப்பாய் உன்னையுருக்கி உணவுறுத்து உணர்வோடு இன்னும் அனைத்துலகம் மீதான நம்பி…
-
- 10 replies
- 2.3k views
-