கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
-
- 7 replies
- 2.9k views
-
-
வீரத்தின் வனப்பிற்கு உவமை தந்த வரலாறே! காரிருள் போர்த்தி நிலம் கண்விழித்துப் பார்த்திருக்க, கறுப்புமுகில் தான் கவிந்து காணவென்று பூத்திருக்க, ஆழிமகள் அணைக்கவென்ற ஆர்ப்பரிப்பில் அலை எறிய. வந்துதித்த ஆதவனே! வாழிய நீ பல்லாண்டு. புற்றீசல் மெட்டெடுத்து புதுப்பாடல் இசைத்திருக்க, புவி நனைத்து வர்ணமகன் பன்னீரை வார்த்திருக்க, நறுமலர்கள் வாடாத நனிதிங்கள் கார்த்திகையில் பிறப்பெடுத்த பெருமகனே! வாழிய நீ பல்லாண்டு. கிழக்குமுகம் சிரிக்க எழும் ஒளியின் அடர்வே!. செம் பொன்னள்ளி வீசிவரும் சூரியச் சுடரே! இலக்கெடுத்துச் சுயம் ஒடுக்கும் மானிடத் திருவே! இலங்குபுகழ் தலைமகனாய் வாழிய நீ பல்லாண்டு. தாயகத்தை நெஞ்சிலேற்ற தலைமை வேளே! தனித்துவப் …
-
- 2 replies
- 907 views
-
-
கார்த்திகையின் தீபங்கள்...... மாவீரர்களின் நினைவுக்காய்..... தமிழினத்தின் கண்ணீரை உங்கள் உதிரத்தால் கழுவிவிட்டு எங்கள் கண்களெல்லாம் மழையாக்கி கவலையற்று உறங்குகிறீர்... கார்த்திகையில் ஓர் நாள் ஆம்..! இருபத்தியேழாம் நாள் தமிழினத்தின் கவலை நீக்க உயிரையே அர்ப்பணித்த எம் மண்ணின் காவியங்கள் உங்களை நாம் வணங்கிடும் நாள்..... எம் மண்ணில் ஒளிகொடுக்க தம் உயிரையே மெழுகாக்கி உருகிவிட்ட ஈழத்தின் வேங்கைகளை எழுச்சியுடன் நினைத்திடும் நாள்.... மாவீரர் நீங்களெல்லாம் நம் மனமெல்லாம் நிறைந்திடுவீர்..... ஈழத்தின் நிலங்களிலே கார்த்திகைப் பூக்களாய் மலர்ந்திடுவீர்..... எதிரியின் படையெடுப்பை இயற்கையாய் நின்று எதிர்த்திடுவீர்..... ம…
-
- 4 replies
- 1.4k views
-
-
http://www.imeem.com/vaseeharan/music/NoO0...yadiyil_vallam/ பாடலைக் கேட்பதற்கு இங்கே அழுத்தவும் பல்லவி தாளையடியில் வள்ளம் எடுத்து தாய்நாட்டை விட்டுப் போகின்றோம் தமிழ் நாட்டின் கரையைத் தேடி உயிரைச் சுமந்து போகின்றோம் நீயொரு வள்ளத்திலே- அடி நானொரு வள்ளத்திலே இந்தக் கடலில் கரைந்து போவோமோ இல்லை கடலைக் கடந்து போவோமோ சரணம்-1 மேற்கில் சாய்ந்த சூரியன்-நாளை எங்கள் கண்ணில் விடியலாம் மேகக் கூந்தல் காற்றில் விரிய எங்கள் மேனியும் சிலிர்க்கலாம் எனக்குத் தெரியும் வெண்ணிலவு அன்பே உனக்கும் தெரியலாம் எனக்குள் எரியும் காதல் நெருப்பை கடல் நீரும் குடிக்கலாம் உப்புக் காற்றின் ஈரம் வந்து காதில் இனிப்பைச் சொல்லுமோ அனலில் வீழ்ந்த எங்கள் …
-
- 0 replies
- 568 views
-
-
http://www.imeem.com/vaseeharan/music/PnPS...tamizhan_tamiz/ - பாடலைக் கேட்பதற்கு இங்கே அழுத்தவும் பல்லவி தமிழன் தமிழன் ஒருவன் தங்கத் தமிழன் ஒருவன்-எங்கள் தலைவன் தலைவன் மறவன் தமிழர் படைத்த பிரமன்- அண்ணன் பிரபா பிரபா பிரபாகரன் பிரபா பிரபா பிரபாகரன் சரணம் 1 தமிழ்த்தாய் கண்ட கனவுஇவன்-அந்தக் கனவோடு முளைத்த நனவுஇவன் அன்னை தமிழால் சிகரமிவன்-எங்கள் அன்பை மதிக்கின்ற தலைவன்இவன் பகலில் அண்ணன் சூரியனே இரவில் அண்ணன் சந்திரனே சரணம் 2 பார்வையிலே தமிழ்ப்பூமியிருக்கும் பண்டார வன்னியனின் ஆசியிருக்கும் பாயும் விழிகளிலே தீயிருக்கும் படை விரட்டும் திறன் நெஞ்சிலிருக்கும் பகலில் அண்ணன் சூரியனே இரவில் அண்ணன் சந்திரனே ச…
-
- 0 replies
- 770 views
-
-
காலம் தன் சுழலும் ஒவ்வொரு பற்களிடையேயும் பிணங்களையிழுத்துச் செல்லும் யுத்தகாலப்பொழுதில் இனி வடிகட்டிய செய்திகளை மட்டுமே அறிவதற்கென ஒரு சிறுவனை கனவினில் நெய்யத் தொடங்கினேன் அவன் நான் விடியலில் எழும்புவதற்குமுன் சமாதானத்து நிற திரைச்சீலைகளைத் தொங்கவிட்டான் குருதியை நினைவுபடுத்திவிடுமோ என்ற எச்சரிக்கையில் சிவப்பாய்ப் பூக்கும் செடிகளையெல்லாம் களைகளைப்போல அகற்றிவிட்டதில் அவனது அன்பு விளங்கியது செவ்வந்திகள் செம்மஞ்சளாய்ப் பூத்து 'மண்ணின்' நினைவுகளை வேரில் தேக்கிவைத்திருப்பதால் அகற்றுவதா இல்லை விடுவதாவென என் சுபீட்சத்தின் பொருட்டுச் சிறுவனுக்கு மிகப்பெரும் குழப்பம் உள்ளதும் நான…
-
- 0 replies
- 815 views
-
-
நிம்மதி தேடி வந்த அந்நிய தேசத்தில் என் பிழைப்பு; என் மதி நிறைந்ததோ சொந்த மண்ணின் நினைப்பு. மன அமைதி இழந்து நாளும் வாழ்கிறேன் வாழ்க்கை; தாய்மண்ணின் வாசத்தை நுகரத்துடிக்கும் நெஞ்சு. சோர்வுற்ற வேளை தந்தையின் ஆதரவும் நோயுற்றவேளை சாய்ந்திட அன்னை மடி பிரிந்து வாழ்வோம் என மறந்து சண்டையிட்ட சகோதரங்களின் இனிய பாசம் இவை இழந்தேன். ஓலைப்பாய் நித்திரை தந்த சுகம் நினைந்து - இங்கே பஞ்சு மெத்தையில் கூட நிம்மதியில்லா உறக்கம். ஓய்வுக்காய் மேலைநாட்டு மக்கள் செல்லும் தேசம் அது எம் தாயகம் போல் மன அமைதி தரும் இடமே. அந்நிய மண்ணில், அந்நியனாய் வாழும் நானும் -ஏங்குகிறேன் அவ் அந்நியன் போல்; என் தாய்மண்ணில் வாழ்ந்திடவே!
-
- 9 replies
- 1.8k views
-
-
இரவாய் இருந்த எம் வாழ்க்கை பகலாய் விடிய வந்துதித்த தலைவா வாழீ நீ! முதலாய் வந்த குடியின் முதுகெலும்பு ஒடிக்கப்பட்ட போது உனக்கு மீசை கூட முளைக்கவில்லை! ஆசை அரும்புகின்ற அந்த வயதில் ஆயுத பாஷையன்றி வேறெதுவும் இவர்க்குப் புரியாதென உணர்ந்தவன் நீ! துவக்கை கைகளில் எடுத்தவன் நீ! தமிழின விடுதலைக்குப் புது துவக்கம் கொடுத்தவன் நீ! உலகில் தமிழின இருப்பை எதிரொலிக்கச் செய்தவன் நீ காந்திய வழியில் நடந்து சோர்ந்தவர்களுக்கு நீ பிறந்தது பெரும் தெம்பு! ஏந்திய துவக்கின் வாய் திறந்து பேசிய வார்த்தையால் தான் பேச்சு வார்த்தை கூட நடந்தது! உன் வேர்கள் ஆழமானது நீ பரப்பி…
-
- 3 replies
- 1.3k views
-
-
''இன்ர நெட்'' லவ்..... கவிதை.... பலகோடி ''லவ் பேட்ஸ்''கள் இணையத் தளங்களிலே வலங்கள் வரும்.... அதில் சிலகோடி தங்களுக்காய் ஜோடிகள் தேடி நிற்கும்.... ஜோடிகள் கிடைத்தவுடன் ஜோராக சேர்ந்து கொண்டு தங்கள் உணர்வெல்லாம் ''மொனிட்டரிலே'' உண்மையாய் கொட்டி நிற்கும் .... அழுவதற்கும் கை விரல்கள் அழகாக ரைப் அடிக்கும்... கோபப் படுவதற்கு ''கீ போட்''டை கொதிப்புடன் உடைத்தெறியும்..... அழுவதும் எழுத்தில் தான்... சிரிப்பதும் எழுத்தில் தான்... முகம் பார்க்க முன்னர் ''என் கேஜ்'' ஐ முடிவு செய்வதும் எழுத்தில் தான்.... இரண்டும் பார்த்திராது ஒன்று இக்கரையில் நின்று நீதான் என் ''பியூட்டி'' எனும்.... மறுகரைய…
-
- 10 replies
- 2.7k views
-
-
ஈழத் தலைமகனே! "அடிமை" என்னும் விலங்கறுக்க வந்த தலைவன் "மிடிமை" நீக்கி தலை நிமிரச் செய்த தமிழன் கொடுமை கண்டு பொங்கிய எரிமலை இவன் விடிவை நோக்கி பயணிக்க எழுந்த ஆதவன் பொங்கும் கடல் தந்த ஈழத் தமிழ்மகன்- தமிழ் வாழ வேண்டி தமிழன்னை ஈந்த தலைமகன் ஈழ அன்னையாவருக்கும் மூத்த பிள்ளை நாம் அழைப்போம் என்றும் எங்கள் அண்ணை" தமிழர்க்கொரு இன்னல் என்றால் வேங்கையாவான் தமிழீழப் பிள்ளைக்கெல்லாம் தமையனாவான் ஈழமே மூச்சென்று என்றும் வாழ்பவன்! எந்த இடர் வந்திடினும் சோர்ந்திடாதவன் உறுதிகொண்ட மனங்கள் சேர்த்து படையமைத்தவன் உலகம் வியந்துநிற்கும் வகையினிலே எமைச்சமைத்தவன் கலங்கிடாத களத்திற்கே இவன் தளபதி! அண்ணன் கட்டளைக்காய் காத்திருக்கும் புலிப்படையணி விழி…
-
- 0 replies
- 865 views
-
-
-
இயலாமையின் மடிப்புகளில்.. ஒரு புழுவினும் கீழாய் என்னை நிறுத்தி நகர்கின்றது காலம் எனது நிலங்களை பேய்கள் அபகரிக்கும் செய்திகளிலெல்லாம் வந்தமருகின்றது என் இயலாமையின் தருணங்கள் முகம் எங்கும் அப்பி கிடக்கிறது போராட சென்ற தோழர்களின் சாவு. அங்கு அவர்கள் சாகும் பொழுதுகளிலும் குளிருகின்ற இரவில் மனைவியுடன் கலவி கொண்டு களித்து இருந்தேன் நானிங்கு வீட்டின் முன் இலைகளற்றும் மண்ணின் பிடிப்புடன் நிமிர்ந்து நிற்கின்றது ஒரு மரம் மண்ணற்ற என்னை பார்பதும் இல்லை தன் கிளையில் வந்தமரும் குருவியிடம் சொல்லி வைத்திருந்தது என்னிடம் பேச வேண்டாமென துணிவற்றவனுடன் கதையெதுக்கு என்று கேட்டது அது வீட்டிற்குள் சென்று உடலினை…
-
- 20 replies
- 2.8k views
-
-
" கார்த்திகைப் பூக்கள்" மானத்தை உயிரெனக் கொண்டவர் - மண் மானத்தை உயர்வெனக் கொண்டவர் தன் மானமே தமிழென நின்றவர் -வீர தலைவனின் வழியினில் சென்றவர்! பொங்கிடும் கடல்அலையும் வீரரைப்பணிந்து நிற்கும் வீசிடும் காற்றலையோ ஈழ மறவரைப் புகழ்ந்து நிற்கும் நெஞ்சிலே தாங்கிநின்றோம் உம்மை நித்தமும் பூஜிக்கின்றோம் வெங்களம் ஆடிநின்றே சிங்களக் கொட்டத்தை அடக்கி நின்றீர்! எங்களின் மானம் ஒன்றே தமிழீழமே என்றுரைத்தீர் தாயகம் காக்கவே இன்னுயிர் கொடுத்தே உயர்ந்து நின்றீர்! கார்த்திகை மாதமல்ல வீரரைக் நினைக்க ஓர் பொழுதென்ன?! என்றுமே உங்களைத்தான் தெய்வமாய் எண்ணுகின்றோம் காப்பதே கடவுள் என்றே நாம் அறிந்ததை உம்மில் கண்டோம்! 'கல்லறை வாழுகின்ற க…
-
- 1 reply
- 1k views
-
-
பதிவுகள் பத்திரமாய் பேணுங்கள் ......... தமிழ் ஈழத்தாயின் ,விடுதலை நோக்கிய தியாக பாதையின் சுவடுகளை ,பத்திரமாய் பதிவுப் பெட்டகத்தில் பாது காத்து வையுங்கள் நான் இறந்தால் என் மகனும் அவன் இறந்தால் அவன் மகனும் முழு தமிழ் ஈழ சந்ததியும் . படித்து மகிழவேண்டும் ,ஈழவிடுதலை வலியை எம் தலைவனின் ,வழி காட்டலை ,வீரத்தை பார் போற்றும் உத்தமனை ,கலங்காத நெஞ்சனை கருமமே கண் ஆனவனை ,ஒரு வழிக்காட்டியை என் குடும்பம் ,தப்பி வந்தது தன் சந்ததியை காக்க எனக்கு என்ன உரிமை என் தமிழ் ஈழத்தில் என் உடலிலும் தமிழ் ரத்தம் ஓடுவதாலா காட்டிலும் மேட்டிலும் கந்தக புகையிலும் கொட்டும் மழையிலும், கூடார நிழலிலும் என் சனம் துன்பப்பட ,ஓடி வந்த எனக்கு என்ன சொந்த…
-
- 7 replies
- 1.3k views
-
-
நெருப்பு நதிகள் நிலம் தடவி நடக்கின்றன. பொறுத்திருப்பீர். பொறுப்பற்ற நா நுனியில் ஏளனத்தைப் பூட்டாதீர். இருப்பிற்கான எல்லாம் இனிவரும் காலத்தில் தெளிவுறும். உரம் அள்ளிச் செறிவோம். உற்சாக வார்த்தை தன்னும் உடன் அள்ளித் தருவோம் கரத்திற்கும், நாவிற்கும் பணியுள்ள காலமிது. இயங்காப் புலனிருப்பின்... எம் இன்னுயிர்க்கு மதிப்பில்லை. அது.... இருந்தென்ன ? செத்தென்ன? என்றைக்கோ ஒரு நாள்... சாவெமைத் தின்னும். எதற்குமே பயனற்றா... எம்கட்டை வேகும்?
-
- 7 replies
- 1.4k views
-
-
மரணித்த தியாகிகளே நான் சிறு துரும்பென உணர்கின்றேன் உங்கள் ஒவ்வொருவரின் இழப்புகளில் வேகின்றது ஆகுதி ஆன எம் பரம்பரையின் உயிர் என் வயது தான் உங்களுக்கும் சில வருடம் குறையலாம் பெண் சுகம் என்னவென்று தெரியுமா? அல்குளின் இன்பம் தெரியுமா? உங்களுக்கு நான் சொல்வேன் என்னவென்று? சொல்லுங்கள் எனக்கு தியாகியாகி போவதன் சுகம் என்னவென்று இனம் காக்க மண் மேல் வீழ்வதன் சுகம் என்னவென்று பல இலட்சம் அடிமைகளின் விலங்கு உடைக்கும் சுகம் எனக்கு தெரியாது பல் கோடி சதிகளின் கண்ணி உடைக்க தெரியாது ஆயினும் அல்குளின் சுகம் என்னவென்று நான் சொல்வேன் சொல்லுங்கள் ஏன் என்னை போல நீங்கள் இல்லை ஏன் பெண் சுகம் நாடவில்லை காட்டாறுவ…
-
- 0 replies
- 850 views
-
-
ஊனுடலை விட்டு உயிர் பிரிந்தாலும், - தமிழர் உணர்வெல்லாம் நிறைந்தோரே! மாவீரரே...!! பேரினவாதம் எனும் கொடிய மிருகம் ஒன்று கர்ச்சிக்கும் பலமாக தமிழர் உரிமைகளைக் கொன்று. தமிழர் தம் துயரத்தை துடைத்திட வேண்டும் என்று, கிளம்பிய வீரர்கள் நீங்கள் தியாக தீபங்கள் அன்றோ! அன்னையின் அரவணைப்பு, தந்தையரின் ஆதரவு, உடன் பிறந்து உறவாடிய சகோதரரின் பாசம், வாழ்வில் உயர்ச்சிகாண நீர் தொடர்ந்த கல்வி, இத்தனையும் துறந்திட்டீர்; வீரவேங்கைகளாய் புறப்படீர். தாய்மண்ணின் மீட்பிற்காய் உம் உயிரையும் ஈந்துவிட்டீர். மாவீரரே..! ஈழத்தமிழர் வீரத்தின் சின்னங்களே...! நிகரற்ற தியாகிகளே...! உமை என்றும் நினைவு கூர்வோம். ஈழத்தமிழர் விடுதலைக்காய் நீர் வீறுடன் செய்த பயணம், உம் வழிவந்…
-
- 1 reply
- 717 views
-
-
ஈழத்தின் போர்க் கோலத்தால் உலகெங்கும் சிதறி வாழும் நாம் நாளும் பல கருத்துக்களை - யாழ் தளத்திலே பரிமாறி உறவுகளானோம். பிழைகள் செய்தோமென தாழ்வுணர்ச்சி கொண்டு விலகி யாவரும் ஓடினால், எஞ்சுபவர் யாரிங்கே? யாழ் கொண்ட களை அது போய்விடாதோ? களை அல்ல நீர். யாழ் என்னும் பயிர் செழிக்க பொழிவீர் உம் நற் கருத்தை மழை நீராய். குற்றங்கள் களைந்து, நற் சிந்தனை புகுத்தி மாற்றங்கள் செய்து ஊற்றுவோம் தமிழ் நீர். சளைக்காதீர் தோழர்களே மீள வாரீர் யாழுடன் தமிழ் மொழியும், தேசியமும் தளைத்து ஓங்க வாரீர்! வாரீர்!! (அண்மையில் யாழின் உறவுகள் இருவர் (கு.சா அண்ணை, முனிவர்) யாழில் கருத்துகள் எழுதாமல், பார்வையாளராக மட்டும் இருப்போமென வேதனையுடன் சொல்லிச் சென்றார்கள். இன்னும்,…
-
- 13 replies
- 1.8k views
- 1 follower
-
-
சமாதிகோவிலடியும் சாகாத நினைவுகளும். பெஞ்சன் வடலி பெரிய இலுப்பை பிள்ளையார் வாசல் பிரியமான நாவல்... பேச்சியம்மன் கோவில் பேய் வருமென்றாலும் போய்வர விரும்பிய இலந்தைக் கூடல்.... பசுமையாய் பச்சையம் உலராப் பத்துமணியிரவு. பாலூறும் இரவுப் பெளர்ணமி ஒளி. விசாகப்படையலுக்கு வீடுவீடாய் பொருள் சேர்த்து விரித்த பாயில் பரப்பிய தானிய வகைகள் பரந்த சமாதிகோவில் மடம். பாடலபாடம் படித்த வீட்டு முற்றம் பலா மா பழவகை தந்த தோட்டம் துரவுகள் பகலிலும் கொள்ளையடித்த பலட்டன் பனைவெளிப் பனங்காயின் இனிப்பு...... பால் தந்தே எமை வளர்த்த பசுவும் அதன் சிசுவும் பால்யகாலப் பலகதை நினைவும் பாதிவாழ்வில் பயணம் முடிந்தும் பசுமையின் இனிப்ப…
-
- 3 replies
- 1.1k views
-
-
பூநகரியில் புலிதேடும் படலம்..... ஆமிக்காரனும் சட்டம்பியாரும் கேள்வியாயும் பதிலாயும் ஒரு கவிதை ஜயா....ஜயா ... நில்லு..நில்லு.! சந்தியிலே புலி நிக்கா சொல்லு.. சொல்லு ! அந்த வழில புலி கண்டிய... ...? ஒமோம்.. தம்பி... ஒமோம். அந்த வழியிலே புளி நிக்கு கனக்க கனக்க காச்சு கிடக்கு..! இல்ல இல்ல மாத்தய ..! கொட்டியா... கொட்டியா கண்டியா..! ஒமோம்..ஒமோம் கொட்டயோட தான் நான் கண்டேன் இனி கோதுடச்சு ... கொட்டயெடுத்து... கொழும்புக்கு அனுப்பலாம் நீங்கள்... டேய்..ஜயா.. உனக்கு காது கேட்காத..? மாத்தய..நீ போடா போட..! நான் அந்த ஜயாட்ட கேக்கிறன்... தம்பிகளா.. நான் மனதுக்குள்ள சொல்லுறன் புலி தேடவந்த பொன்சேகவின் தம்பிகளே …
-
- 8 replies
- 2.5k views
-
-
புரட்சியொன்று புயலாக ... கவிதை ... ... புரட்சிப் புயலொன்று தமிழகத்தில் மையங்கொண்டு இலங்கை தமிழினத்துக்கு ஆதரவாய் நம் மண் நோக்கி நகர்கிறது... உங்கள் எழுச்சி வெள்ளத்தில் நம் மனமெல்லாம் நனைகிறது.... தமிழகத்தில் மக்கள் விளிப்புக்கொள்ளும் மனிதச் சங்கிலியாய்.... திரையுலகம் திரண்டுவிட்ட உண்ணா விரதங்களாய்..... தொழிளாளர் செய்துவிட்ட தங்கள் கடையடைப்புக்களாய்.... இறுதியில் மாணவர் கொதித்தெளுந்த மாபெரும் டில்லிப் பேரணியாய்..... இன்னும் பலபலவாய் எப்போதும் தோன்றாத ஆழிப்பேரலை போல் தமிழகமே வியந்துகொள்ள வீறுகொண்டு எழுகிறது..... தமிழனெனும் உணர்வின்று தமிழ் மனங்களிலே ஓங்கினின்று போரை நிறுத்தென்று …
-
- 2 replies
- 852 views
-
-
தோல்விகள் பழகு கடலில் ஒரு துளி நீராய் திழைத்திருந்தேன் நான் ஆதவன் ஒரு நாள் எனை எரிக்க எரிக்கப் பறக்கும் பினிக்ஸ் பறவையாய் இல்லையேயென நான் தோற்றுப்போய் ஆவியுமானேன் ஆஹா..வான் வழி பயணம் இனிதோ இனிது என் தோல்வியே தேனாய் இனித்தது கடலாய் கழிந்த காலத்தை கடிந்து கொண்டே மேகமாகி வான் வழியே ஊர்வலம் போனேன் குளிர்த் தென்றல் எனைத் தீண்ட சிலாகித்து நொடிப் பொழுதில் உருகி விட்டேன்.. புவியெனை ஈர்க்க மழையென மாறி மண்ணோக்கி வீழ்ந்தேன் நான்.. மீண்டுமோர் வீழ்ச்சி ! மீழ்வேனாயென மயங்கிச் சில நொடிகிடந்தேன் நான் மண்ணின் மணமும் மலர்போல் படுக்கையும் உயிர் கொடுத்தது எனக்கு.. கடலலை மறந்தேன் வான்வெளி மறந்தேன். மண்ணினில் தவழ்ந்தேன் குழந்தை போல.. க…
-
- 0 replies
- 834 views
-
-
தமிழீழக் காதல்....... கவிதை..... எங்கள் தாயக மண்ணின் விடுதலைப் போர் பல தியாகங்களை அடிப்படையாகக் கொண்டு முன் நகர்ந்து விருகிறது. அதில் காதலால் உண்டாகும் தியாகத்தை ஒரு கவிதை வடிவில் சொல்லியிருக்கிறேன். பாடசாலைத் திண்ணையிலே பள்ளித் தெருக்களிலே மாமரத் தோப்பினிலே மலர்கொண்ட பூங்காவிலே மனம்போல பலகுருவி மகிழ்ந்து விளையாடும் செல் சத்தங்கள் கேட்டவுடன் மண் தரையில் படுத்துக் கொள்ளும் கிஃபீரின் இரைச்சல் கேட்டால் பதுங்குகுழிக்குள் பாய்ந்துவிடும்....... இக்குருவிக் கூட்டங்களில் சில தாமக ஜோடிசேர்ந்து காதலெனும் கீதம் பாடி கனிவாக வலங்கள் வரும் காதலிலின் சிறுபிரிவுக்காய் ஊடலும் சேர்ந்து கொள்ள..... காதலனில் சந்தேகம் காட்டிடுவாள்…
-
- 4 replies
- 1.6k views
-
-
ஈழத்தின் போர்க்கோலம் வண்டியில் பூட்டிய மாடுகள் முதுகு நிமிர்த்தி நம்பிக்கையோடுதான் நடக்கிறது அகப்பட்டதை ஏற்றிய கைகளும் கால்களும் வலிகளோடுதான் மிதக்கிறது குண்டு சுமந்து வரும் வானூர்தி நெஞ்சைக் கிழிக்கிறது நெடுநாள் எரியும் நெருப்பில் பிஞ்சைப் புதைக்கிறது பதினைந்தைக் கடக்காத பருவத்தின் கனவுகள் பறித்து வன்னிக் காட்டின் நடுவிலே வான் குண்டு குருதிக் கோலம் போடும் ஆசை ஆசையாய்க் கட்டிய வீடுகள் எல்லாம் முகமிழந்து... முகவரியிழந்து... அழிந்து போய்க் கிடக்க ஆச்சியின் புலம்பல் கேட்கும் பாடசாலைக்குப் போன பிள்ளை பாதி வழியிலே... தாய்மண்ணை அணைத்தபடி இரத்தச் சகதிக்குள் விழிகள் திறந்தபடி இழவு வீட்டின் குரல்கள்கூட இல…
-
- 3 replies
- 1.4k views
-
-
மாவீரர் புகழ் பாட தீபம் ஏந்தி செல்வோம் , மலரோடு ,நம் கண்ணீர் மழையாக சொரியும் உடலோடு உயிரும் ,விதையாக் தந்தீர் உயிர் உள்ள வரையும் மறவோமே நாளும் மகன் இல்லா,அன்னை,மகள் இல்லா அன்னை உறவற்ற ஊரார் உயிரற்ற மனைவி ,தன்னை விழி திறந்து பாரீர் ,முடிவு தான் இல்லை வழி ஒன்று பிறக்கும் ,நம் தலைவன் நோக்கில் மாவீரம் ஒரு போதும் ,மறையாது மறையாது தாய் மண்ணின் புதல்வர் ,தம் கடன் முடித்து ஓய்வில்லா உறக்கம் ,கொள்ளுவீர் அங்கு தாய் மண் என்றும் மறவாது சத்தியம் ............... ,
-
- 3 replies
- 1.3k views
-