Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Started by Thamilthangai,

    அன்னையே சக்தியே!..... மங்காப் பொன்னென மனதினில் நிறைபவள் கண்ணில் தெரிகின்ற காட்சியாய் இருப்பவள் அண்டங்கள் யாவிலும் அன்னை உறைபவள் கொண்டிடும் கோலங்கள் அனைத்திலும் பொலிபவள் என்னென்ன வேண்டுமோ தாயிடம் கேளுங்கள் பிள்ளையின் குறைதனை அன்பினால் தீர்ப்பவள் தீயவை எல்லாம் திரிசூலத்தால் அழிப்பவள் அன்பென்ற ஒன்றுக்காய் அகிலமே அளிப்பவள் குங்குமத் தாயவள் மங்களத் தாயவள் மடி ஏந்தி வேண்டினால் மனக்குறை போக்குவாள் தங்கிடும் வெற்றிக்கு சக்தியை வேண்டுவோம் விரைவினில் ஈழம் மலர்ந்திட வேண்டியே பாடுவோம்!

  2. நவராத்திரி நாயகியே! முத்தமிழாய் இனிக்கின்ற முப்பெரும் தேவியரின் விந்தைகளை வித்தைகளைக் கொண்டாடும் நாள் வருது! இத்தரையில் பிறந்துவிட்ட அத்தனை பேரினுள்ளும் சக்தி என்றே ஒன்றேதான் இயக்கங்கள் நடத்திடுது! "அன்னை" என்ற சொல் ஒன்றே அன்பை அள்ளி வழங்குதல் தான் தேவைகளைத் தான் அறிந்து கொடுக்கின்ற உறவு அவள் தான்! முதல் மூன்று நாட்களும் மன உறுதி வீரம் தனை அள்ளித் தருகின்ற மலைமகளாய்!அடுத்த மூன்று நாட்களிலும் குறையாத வளம் நிறைவாகத் தரும் செல்வி திருமகளாய் நிறைவாய் மூன்று நாட்களிலும் அறிவுக்கண்ணைத் திறந்து கல்விஞானம் கொடுக்கின்ற கலைமகளாய் அருள் வழங்கும் சக்தி அவள்! அவல்,கடலை,சுண்டல் என இந்து வீடெங்கும் களைகட்டும்! பாடல்களும் பண்ணுமங்கே மனசுக்கு சுகம் கூட்டும்! விண்ணாளும் த…

    • 15 replies
    • 2.5k views
  3. அவளை அனுபவிக்கஇ அணு அணுவாய் உள்ளிழுக்கஇ இதழ் குவித்து இன்பம் காணஇ சுற்றம் மறந்து சுகம் காணஇ சற்று நேரம் சொர்கம் செல்லஇ விரல் இடுக்கில்இ இதழ் இடுக்கில் - இறுதியில் இதய அடுக்கில் - இன்பமாய் இடம் மாறிட. வெண்ணிற மேனியில் பொன்னிற கேணியில் மூழ்கி நான் மூச்சிழுக்க... அவளை அழைத்துஇ ஆடை உரித்துஇ வாயில் பொருத்தினேன் - சிகரெட்

    • 7 replies
    • 3.6k views
  4. Started by suthesigan,

    இளைஞனே சாட்டை எடு. சவுக்கடி கொடு. சமுதாயம் அழட்டும் சத்தம் போட்டு அழட்டும். போதும் நிறுத்து - மதம் என்ற பெயரில் மனிதனை கொல்வதை. எடுத்திடு ஒரு தீ கொளுத்திடு சாதி தரித்திர தலைவர்கள் தலை சாய்க்கட்டும் சரித்திர தலைவர்கள் உருவாகட்டும். புரட்சிகள் படை புது யுகம் விடை.

  5. விதியுடன் அரங்கேறும் எம் விளையாட்டு வினையிது யார் செய்த பாவம்-கண்ணே உயிர்கள் பணயம் எம் உள்ளத்தில் உறங்காத பய அலைகள் நீயும் சேர்ந்து கொண்டாய் நீளும் எம் துயரங்களுடன் அனுபவித்துப்பார் இதுதான்-இந்த அந்தரங்க உலகில் எம் அவசர வாழ்வு அனாதைகளை காக்க இல்லங்கள் ஆயிரம் இன்னும் கட்டுவோம்-ஆம் அனாதைகளுக்கு எம்மிடம் பஞ்சமில்லை அங்கவீனர்கள் பாவம் அங்கே தனிமையிலே அவர்களுக்கு கதைபேசி மகிழ புதிய நண்பர்கள் விரைவில்... வெறுக்காதே இம்மண்ணுலக வாழ்வை வெறுத்திடு இம்மண்ணில் உன் பிறப்பை மட்டும்....

  6. எழுதியவர்: கி.பி. அரவிந்தன் [01] இப்படியாக இருந்து வரும் நாளொன்றில் இங்கோர் ஈரவலயக் காட்டினில் புயலடித்து ஓய்ந்திருந்தது. தூறல் மழையும் ஈரலித்த காற்றும் ஓயாதிருந்தது. வேனிற் காலமும் தள்ளிப் போயிற்று. குழந்தைகளோ புயல் துழாவிச் சென்ற காட்டினைக் காணவும் அக்காட்டிடை உலவவும் ஆவல் கொண்டிருந்தனர். அவர்தம் ஆவல் மேலிட வீட்டின் மூலை முடுக்கிலும் புத்தக அடுக்கிலும் நாற்புற சுவரிலும் தொங்கத் தொடங்கின காடுகள். காடென்றால் பெரு விருட்சங்களும் நெடு மரங்களும் பற்றைகளும் செடி கொடிகளுமாய் அடர்ந்து கிடக்கும் காடுகளவை. சிறுகாடு பெருங்காடு மழைக்காடு பற்றைக்காடு ஈரவலயக்காடு வெப்பவலயக்காடு இப்படியாய் பலவகைக் காடுகள்.. அவ…

  7. சயனைட் குப்பி...... கவிதை...... எங்கள் கோவில்களில் தெய்வமாய் வணங்குதற்கு தாராள தகுதிபெற்ற தனியொரு ஆயுதம் நீர்..... எதிரியிடம் பிடிபட்டு சிதைவழிந்து சாகாமல் கெளரவமாய் மரணத்தை வளங்கும் கொடை வள்ளல்..... காற்றாக உள் சென்று கண்ணிமைக்கும் நேரத்தில் உயிர் மூச்சை நிறுத்திவிடும் உன்னதப் படைப்பு நீங்கள்.... குட்டி எமன்களாக - வீரர் கழுத்திலே தொங்கிடுவீர் பாசத்தின் கயிற்றினாலே மரணத்தை மறுக்காமல் தந்திடுவீர்.... வீரர்களின் மனத்திடத்தை உரைத்து நிற்கும் உன்னதமாய் அன்று முதல் இன்று வரை ஆட்சி செய்யும் செங்கோல் நீர்..... உன் தொழில் அழித்தல் மட்டுமல்ல ஆக்கும் கடமை உண்டு இரசாயனவியல் துறையில் உனக்…

  8. காதல் முதல் காதல் வரை.......... கவிதை பஞ்சு மிட்டாய் வாங்கி பகிர்ந்து அதை உண்டோம்... பட்டாசு கொளுத்தி பயந்து ஓடினோம்...... பம்பரம் விட்டும் பார்த்து ரசித்தோம்..... பக்கத்துவீட்டு மாங்காயும் பிடுங்கினோம்.... நாவற்பழம் தின்று நம் உதடுகள் சிவக்கும்... ஒருவரை ஒருவர் பாசத்துடன் அணைப்போம்.... எமக்கு உள்ளத்து உணர்ச்சிகள் ஒன்றும் தோன்றவில்லை..... சில வருடங்கள் செல்ல எம்மில் சில மாற்றங்கள்.... நீயோ இன்று பருவம் அடைந்து பழிங்குச் சிலையாய் நானோ இன்று பாய்ந்திடும் காளையாய்.... உன் இளமை மாற்றம் என் மனதைக் கவர்ந்திட... என் உடல் தோற்றமோ உன் மனதினை மயக்கிட... அன்று சிறுவயதில் சிரித்திடும் …

  9. கட்டழகி தந்த காயம்.... கவிதை...... என் பார்வையில் மயங்கி பதிலுக்கு சிரித்தாள் நானும் சிரித்தேன்........ பக்கத்தில் வந்தாள் நானும் மகிழ்ந்தேன்...... தன் பெயர் கூடச் சொன்னாள் என் பெயர் நானும் சொன்னேன்..... ஓர் நாள் பழக்கத்தில் ஓர் உடல் ஆனோம்...... ஒன்றாகக் கை கோர்த்து பூங்காவில் நடந்தோம்..... சந்தோசத்தில் நாம் எமை மறந்து நடக்க.... கால் தடம் புரண்டு அவள் ஆற்றினில் விழுந்தாள்...... எனக்கு நீச்சல் தெரியாது இருந்தும் என் உயிரைக்காக்க ஆற்றினில் குதித்தேன்... என்னால் நீச்சல் முடியாமல் நீரின் மேலுக்கு வந்தேன்... தண்ணீரில் விழுந்த வலியும் தாங்காமல் என் மூக்கிலிருந்து நீரை எடுத்தேன்... என்னால் முய…

  10. வைரமுத்துவின் கவிதைகள் 1. சங்க காலம் ஆற்றுத் தூநீர் ஆரல் உண்டு குருகு பறக்கும் தீம்புனல் நாடன் கற்றை நிலவு காயும் காட்டிடை என்கை பற்றி இலங்குவளை நெகிழ்த்து மேனி வியர்ப்ப மெல்லிடை ஒடித்து வாட்கண் மயங்க உண்டதை மீண்டும் பசலை உண்ணும் பாராய் தோழி 2. காவிய காலம் பொன்னங் கொடியென்பார் போதலரும் பூவென்பார் மின்னல் மிடைந்த இடையென்பார் - இன்னும் கரும்பிருக்கும் கூந்தல் சுடர்த்தொடிஉன் சொல்லில் கரும்பிருக்கும் என்பார் கவி. 3. சமய காலம் வெண்ணிலவால் பொங்குதியோ விரக்தியால் பொங்குதியோ பெண்ணொருத்தி நான்விடுக்கும் பெருமூச்சாற் பொங்குதியோ பண்ணளந்த மால்வண்ணன் பள்ளிகொண்ட பான்மையினால் விண்ணளந்து பொங்குதியோ விளம்பாய் பாற்கடலே! …

  11. திலீபனின் நினைவுகளில்...... கவிதை.... இருபத்தொரு வருடங்கள் முன் பாரதத்திடம் நீதி வேண்டி எங்களின் இதமொன்று நல்லூர் கந்தனின் வீதியிலே அமர்கிறது... கத்தியின்றி ரத்தமின்றி ஈழக் கனவொன்றே மனதில் கொண்டு கையிலெடுத்த ஆயுதந்தான் அகிம்சை எனும் அழியா ஆயுதம்.... கனவுகளைச் சுமந்தபடி எங்கள் கண்கள் முன்னே வருகிறான் சாவை அவன் விளையாட்டாய் நினைக்கவில்லை அது வீரனுக்கும் அழகல்ல...... யுத்தம் தொடங்கிறது அவனின் உடற் பசிக்கும் அவன் கொண்ட விடுதலை உணர்வுக்கும்.... பாரதமும் பார்க்கிறது அவனை பாதியாய் கொன்றுவிட்டு... சில நாட்கள் சென்றிடவே அவனின் யுத்தத்தின் முடிவும் முன் நோக்கி வந்திடவே உணர்வ…

  12. ஈழத்தமிழருக்காக பிரளயனின் கலைக் குரல். -வ.ஐ.ச.ஜெயபாலன் இரண்டு இரவுகளும் ஒரு பகலும் என்னால் எழுத முடியவில்லை. பண்டிச்சேரி பல்கலைக் களக நடபகத்துறையினர் தயாரிப்பில் பிரளயன் இயக்கிய பாரி படுகளம் நாடகத்தின் தாக்கத்துள் இருந்து இன்னும் வெளிவர இயலவில்லை என்பதுதான் அதற்க்குக் காரணம். மூவேந்தர்களால் சுற்றி வழைக்கப் பட்ட பரம்பும் கூலிக்குப் போராட வந்த மூவேந்தர் படையும் மண்ணையும் மக்களையும் மீட்க்கப் போராடும் பெண்களும் ஆண்களும். மாவீரர் தின நடுகல் வழிபாடும். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றும் தமிழால் ஒன்றுபடுவோம் என்றும் எழும் வானதிரும் கோசங்களும். சுவடிக்குள் உட்சுவடியாக ஈழத்தமிழர் போராட்ட ஆதரவு கலைத்துவமாக வெளிப்பட்டு மனசு கனக்க நிறைந்தது. மாவீரர் நடுகல் வழிபாட்டில் போர…

    • 0 replies
    • 771 views
  13. காதல் வானம் இறுவட்டுக்கு தமிழகத்தில் இருந்து கிடைக்கப் பெற்ற மூன்று வேறுபட்ட விமர்சனங்களை இங்கே யாழ்கள உறவுகளுக்காக பதிவு செய்கின்றேன். நீங்கள் படித்துவிட்டு ஒரு இறுவட்டை வாங்கிக் கேட்டால் எங்களுடைய அடுத்த படைப்பை உருவாக்க பெரிய உதவியாக இருக்கும். நன்றியுடன் வசீகரன்-வி.எஸ்.உதயா கண்ணீர் தேசத்தின் 'காதல் வானம்'! -15.09.2008 http://thatstamil.oneindia.in/movies/speci...usic-album.html இலங்கை கவிஞர்கள் யாராக இருந்தாலும் கண்ணீரை மட்டும்தான் பதிவு செய்வார்கள் என்ற கூற்றைப் பொய்யாக்கியிருக்கிறார் ஒருவர். அவர் வசீகரன்... தமிழ் திரையுலகுக்கு ஏற்கெனவே பரிச்சயமானவர்தான் இவர். காதல் கடிதம் எனும் அர்த்தமுள்ள இசைத் தொகுப்பைத் தயாரித்தவர். ஈழத்திலிருந்து நா…

  14. கிழிந்தது முகத்திரை குனிந்தது பாரதம் ! முதுகினிலே குத்துகின்றாள் பாரதத்தாய் வெட்கித்துக் குனிகிறது எம் தலையும் வேடமிட்டு ஆடுவது போதும் போதும் வெட்கமற்ற பாரதமாய் போனதும் ஏனோ ! பக்கத்தில் இருந்தபடி எமை அழிக்க படைக் கருவி முதலோடு ஆளணியும் கொடுத்தல்லோ கொல்கின்றாய் எம்மை நீயும் தடுப்பதற்கு விண்ணப்பம் உன்னிடமா ! கொலைக் கருவி பணமென்று கொடுத்தவாறு எமைக் கொல்வதற்காய் உன் படைகளையும் அனுப்பிவிட்டு அமர்ந்திருக்கும் பாரதத்தின் வஞ்கமே உருவான நரியின் அழகே அழகு ! வார்த்தையிலே நஞ்சமர்ந்த வடிவம் கொண்டே பேச்சிலேதான் தீர்வென்று ஏனோ நீயும் பசப்புவதேன் பாரதத்தின் ஆட்சியரே கிழிந்ததுன் முகத்திரையும் குனிந்தாய் நீயே ! பெருமைகொள் பாரதத்தின் பெருமை …

  15. வ.ஐ.ச.ஜெயபாலன் பாடல்கள் நா.கண்ணன் [தமிழ் மரபு அறக்கட்டளை Tamil Heritage Foundation <http://www.tamilheritage.org/> தங்கள் மினிதழில் வெளியிட்ட விமர்சனமும் பேட்டியும் இணைத்துள்ளேன்.] ஈழத்து முன்னணிக்கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதைகள் தமிழ் கூறும் நல்லுலகிற்கு எப்போதும் அறிமுகமானவையே. ஆயினும் நோர்வே நாட்டிற்குப் புலம் பெயர்ந்த பின் இக்கவிஞர் தன் கவிதைகளை, தனது கவிதா விசிறியும், வாழ்க்கைத் துணைவியும், இனிய பாடகியுமான வாசுகியுடன் சேர்ந்து இசைப் பாடல்களாக உருவாக்கியிருக்கிறார்கள். தமிழகத்தின் 'மெல்லிசை மன்னன்' எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுடன் தொழில் புரிந்த கலைஞர் உ.தியாகராஜன் அவர்கள் ஜெயபாலன் பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார்கள். "பாலை" எனும் இவ்விசைத்தகடு வாசுகி ஜெயபாலனும் …

  16. என் வாழ்வில் ஓர் மின்னல்..... கவிதை..... என் வாழ்வில் ஓர் மின்னல்.... முழு நிலவொன்று மின்னலாய் என் கண்களை கடந்து செல்ல....! அதை கண்டதும் அதிசயித்து பின் எனதாக்க முயன்றேன்....! முயற்ச்சித்தேன் பல வழியில் முதலில் மருண்டாள்.. பின்னர் அடம்பிடித்தாள்... அதன் பின் சேர்ந்துகொண்டாள்....! என் வாழ்க்கையின் வெளிச்சம் நீ என்றேன் மகிழ்ந்து கொண்டாள்.. பின்னர் ஓர் இரவு.... காணாமல் மறைந்து விட்டாள்.....! தேடினேன் கிடைக்கவில்லை அதன் பின் தெரிந்து கொண்டேன்.... மின்னலின் குணமோ தோன்றி மறைவதென்று....! தவறு என்மேல் தான் அதை தடுக்க நினைத்ததற்கு....! இளங்கவி

  17. அள்ளித் தெளிக்கும் அழகு அளவாய் கொண்டு ஆடம்பரமில்லா அலங்காரமிட்டு ஆரவாரமில்லா பேச்சொடு இரவலற்ற புன்னகை தந்து இரங்கும் பார்வை கொட்டி ஈயும் இதயம் காட்டி ஈர்ந்தாள் என்னை உருளும் கரு விழி கொண்டு. உள்ளத்தில் உவகை பொங்க ஊரின் சாயலில் பேசி ஊடலற்ற பொழுதுகள் தந்து எழிமை நடை பயில எழில் கொண்டு வந்தாள் ஏடு தூக்கும் கரத்தால் ஏக்கம் தீர ஐயுறவின்றித் தழுவி ஐக்கியமாகும் எண்ணத்தில்..! ஒரு தரம் என் கரம் பற்றினாள் ஒரு பெரும் பொறி பிறந்தது ஓராயிரம் உணர்வுகள் பொங்க ஓரமாய் உடலெங்கும் பற்றியெரிந்தது ஒளடதம் தேட ஒளவையின் அடுக்குமொழி தந்தாள். அடுத்து என்ன.. அகேனம் விதி வழி சேர அடுக்கிய கனவுகள் அனைத்தும் ஒடிந்தன விழிகள் விழிக்கையில்..…

  18. அம்மா எனும் உறவு.... தாய்ப் பாசம் அனைத்து உயிரும் ஆசைகொள்ளும் உன்னதப் படைப்பு அவள்.... அம்மா என்று அழைத்ததுமே உன் அருகில் நிற்கும் நினைவு இவள்..... அவளை மனதிலே நினைத்துவிட்டால் காற்றுனை தாலாடும் உணர்வுகொள்வாய்... உன் கவலையெல்லாம் மறந்துவிடும் வானத்து நிலாகூட - உன்னை நெருங்கிவந்து முத்தம் தரும்.... அவளை நினைக்கும் போதெல்லாம் நீ மீண்டும் பிறந்திடுவாய்.... பிறப்பின் உணர்வு கொண்டு குழந்தைப் பருவதின் குதூகலம் உணர்ந்திடுவாய்.... தாயெனும் தெய்வமது தன் பசியில் உனை வளர்ப்பாள்... உன் தூக்கம் தருவதற்கு தன் இரவை செலவுசெய்வாள்... பல கண்டங்கள் தூரத்திலும் உன் துக்கம் அறிந்திடுவாள்.... அதுபோல நீயு…

  19. வல்லமையின் குரல் நலிந்தால் வளவுக்குயில் பாடாது. எழுச்சி கொள்க கவிஞர்களே! தாயகமூச்சு எமக்கில்லையா? ஆயிரம் தடைகளை ஆரும் போட்டாலென்ன? உன்னிப் பெருமூச்செடுத்து உறவணைக்க எழுந்திடுக. நோயுண்ணும் உடல் நலித்தும், பேயுண்ணும் உணர்வொழித்தும், தாய் நிலத்தின் வேதனையை - எம் தோள் தாங்காதிருக்கும் பாழ்வாழ்வு எங்களது என வரலாற்று பதிவேட்டில் பதிவிக்கப் போகிறோமா? கூடாது... கூடவே கூடாது. முற்றத்து மணற்பரப்பில் முழுமதியின் எழிலொளியில், சுற்றம் சூழப் புற்பாய் போட்டமர்ந்து பேசி, அடிவளவு மூலையிலே படர்ந்த முல்லைச் சொதி மணக்கும் கவளச் சோறெண்ணி, ஏக்கங்களை மட்டுமே எமதாக்கி, பனிநிலங்களில் உயிர் தொய்ய வாழ்கிறோமே.... விட்டுவிடுவோமா? தாய்நிலத்தி…

  20. காதலின் வடிவங்கள்....... மேல் நாட்டுக் காதலும் நம் நாட்டுக் காதலும்.... ஆர்ப்பரிக்கும் கடலலையில் வேகப்படகில் நின்று விளையாடும் உணர்ச்சியது இந்த மேல் நாட்டுக்காதல் ! அமைதியான ஆற்றினிலே அந்திப் பொழுதினிலே அமைதியாகப் படகுதனில் பயணிக்கும் உணர்ச்சியது நம் நாட்டுக் காதல் ! நெரிசலான கூட்டத்தினில் நகரத்தின் வீதியிலே நிற மின் குமிழின் வெளிச்சத்திலே உலா வரும் உணர்ச்சியது மேல் நாட்டுக்காதல் ! வெண்ணிலவு பார்த்திருக்க வெண் மணலில் கால் பதித்து மின்மினிகள் ரசித்தபடி உலாவரும் உணர்ச்சியது நம் நாட்டுக்காதல் ! வாகனங்கள் சத்தத்திலே இரவில் உறங்கும் உணர்ச்சி அது ! இரவின் நிசப்தத்தில் அமைதியான உறக்கம் …

  21. பத்து வயதில் பார்த்தேன் நண்பனின் பார்வை என்றால் தந்தையிடம்......... பதினாறில் பார்த்தேன் காதல் பார்வை என்றால் சிநேகிதியிடம்........ நாற்பதில் பார்த்தேன் காம பார்வை என்றால் கணவனிடம்........ அறுவதில் பார்த்தேன் கிழவனுக்கு பார்வை தெரியாது என்றால் பேரனிடம்.... அதே கண்கள் பார்வை வேறு அர்த்தம் வேறு பருவம் வேறு........

  22. விடுதலையின் விளிம்பில் நாம்..... நம் தாயக மீட்பு வாசல் வரை வந்துவிட்டோம் விடுதலைக்காய் வழிதேடி கண்முன்னே தெரிகிறது காலையது உன் விடியலுக்காய் ! வந்த வழி பார்க்காதே வலி நிறைந்த வாழ்வு அது வடுக்களாலும் வலிகளாலும் நிரம்பி நின்ற சோகமது ! முயற்ச்சியினால் முன்னேறு முழு நிலவைத் தொடுவதற்கு முடிந்துவிட்டால் முழு வசந்தம் உனக்காக காத்திருக்கு ! வாள் நுனியில் நிற்கின்றாய் உன் வசந்தம் ஒரு பக்கம் ? அடிமை வாழ்வோ மறுபக்கம் ? வசந்தந்தான் உன் தேர்வு அடிமை வாழ்வை உன்மனம் தேடாது ! நீரில் மூழ்க மறுத்துவிட்டால் முத்துக்கள் உன் சொந்தமல்ல ! முயற்ச்சியற்று இருந்துவிட்டால் உன் தாய் நாடோ உன் மக்களின் சொந்தமல்…

  23. என் அழகான ராட்சஷி கவிதை ஆசை காட்டி மோசம் செய்த அழகான ராட்சஷி ! அவள் அழகின் சிலையல்ல அனாலும் என் மனதின் மொழியானாள் ! அவள் சொல் கேட்டு நான் மகிழ்ந்திருந்தேன் ! அவள் நடை பார்த்து நான் நெகிழ்ந்திருந்தேன் ! அவள் புன்னகை பார்த்து நான் மலர்ந்திருந்தேன் ! இருந்தும் அவள் குணம் பார்க்க நான் மறந்து விட்டேன் பின்னால் அவள் மனம் பார்த்து நான் உடைந்து விட்டேன் ! நீதான் தன் மனம் என்றாள் நீயில்லா வாழ்வு தனக்கு மரணமென்றாள் அவள் சொல் கேட்டு மகிழ்ந்திருந்தேன் என் கண்களை மழையாக்கி காணாமல் சென்றுவிட்டாள் ! சென்ற பின்னர் ஓர் தடவை என் கண்ணில் தரிசனம் தரவந்தாள் ! அவளை கண்டதுமே என்னை பிரிந்ததற்க்கு காரணம் கே…

  24. இனித்தூங்கி கிடக்கோம்.. குரல் ஓங்கிக் கொடுப்போம்.. கண்ணைமூடி வணங்கும் போது கரும்புலியே உன் வதனப் பட்டொளி பார்த்தேன்..... காலங்கள் அழிக்காமல்.. காட்டாறு கலைக்காமல்-ஈழ மாந்தர் தம் இதயத்தில் நீர் போட்ட கோலம்... எத்தனை அழகு... எத்தனை நிறைவு... எத்தனை ஈகம்... எத்தனை வீரம்... மானம் துறக்காமல்... ஈனம் அழித்தவரே... தாயை தலை நிமிர்த்த எதிரி தலைகளெடுத்தவரே.. உங்கள் துயிலகங்கள்.. எங்கள் இதயங்கள்... என்றும் நினைவோம்... என்றும் கண்ணீர்மழை காணிக்கை செய்வோம்.. வீரவணக்கங்கள்.. விழுதான விருட்சங்களே.. இனித்தூங்கி கிடக்கோம்.. குரல் ஓங்கிக் கொடுப்போம்.. ஈழம்..மலரும்வரை.. செந்நீரை இறைப்போம்.. எம் போரை நினைப்போம் வாழ்க தமிழ்.. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.