Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. காணவல்லாயோ எனும் எனது கவிதையின் மீது கண்ணெறிந்தோர் அனைவருக்கும் குறிப்பாக அனஸ் அவர்களுக்குமாக இன்னொமொரு கவிதை. "ஊருக்குப் போனேன் " எனும் தலைப்பில் எனது பயண அனுபவத்தையும் வீடு செல்லும் அனுபவத்தையும் சில காலத்திற்கு முன் இத்தளத்தில் வெளியிட்டிருந்தேன். பலர் வாசித்துப் பாராட்டினார்கள். இங்கு நான் வெளியிடும் இக்கவிதையும் "வீடு செல்லலுடன்" தொடர்புடைய ஒரு கருத்தியலை முன்வைக்கிறது. புகலிட வாழ்க்கையும் அதன் அனுபவப்படிவுகளும் உள்நோக்கிய பார்வையினூகக் கவனிப்படவேண்டியவை என நான் கருதுகிறேன். சந்தமும் சொல்லடுக்கும் மாத்திரமே கவிதை என எண்ணிய காலம் அவதியாகிவிட்டதென நான் கருதுகிறேன். அதற்காக சந்தமும் சொல்லடுக்கும் தேவையற்றவை என நான் சொல்லுவதாகக் கருத வேண்டாம். …

  2. புதுக்கவிதை சுருக்கமான வரலாறு ஜெயமோகன் புதுக்கவிதை என்று தமிழில் இப்போது வழங்கிவரும் இலக்கியவடிவம் மிகமிகப்பரவலானதும் பல்நோக்கு பயன்பாடு கொண்டதுமாகும். இன்றையசூழலில் இவ்வடிவத்தைப்பற்றிய ஒரு வரையறையை அளிப்பது எளிதல்ல என்னுமளவுக்கு இது பரநது விரிந்திருக்கிறது. ஆகவே கோட்பாட்டு ரீதியாக ”ஒரு மொழியில் ஒரு சொல்லுக்குப் பின் இன்னொரு சொல் வரக்கூடியதும் எழுதியவராலோ பிரசுரித்தவராலோ வாசித்தவராலோ அல்லது சம்பந்தமில்லாத பிறராலோ கவிதை என்று கருதப்படுவதுமான ஓர் மொழியமைப்பே கவிதை’ என்ற பொதுவரையறை இங்கே அளிக்கப்படுகிறது. புதுக்கவிதை என்ற பெயரை இதற்கு போட்டவர் க.நா.சுப்ரமணியம் என்ற இலக்கிய விமரிசகர். ஆங்கிலத்தில் new poetry என்ற சொல்லை எஸ்ரா பவுண்ட் என்ற கவிஞர் பயன்படுத்திருப்பத…

  3. கல்வாரித் தென்றல் கல்லறைக்குள் அடங்காத கவிதை இவர் எவர் கண்களிலும் பொங்குகின்ற கருணை இவர் கல்வாரியின் அன்புச் சுனையும் இவர் அன்புக் கடலினிலே சங்கமிக்கும் நதியும் இவர் பிறரன்பு புரிய வைத்த பெருமை இவர் பிறருக்காய் உயிரீந்த வள்ளல் இவர் மனிதத்தை மலரவைத்த மாண்பும் இவர் மனித நேயத்தை தேடவைத்த தேடல் இவர் ஆற்றலாய் அறிவதுவாய் அருமருந்தாய் தேற்றரவாளனாய் தினம் உணவாய் நேற்றைய தினம் போன்று இன்றும் என்றும் மாற்றமே இல்லாத மகிமை இவர் மனிதனைப் புனிதனாய் மாற்றுதற்காய் புனிதனின் அவதார விந்தை இவர் துன்பத்தில் துவண்டுவிடும் எம்மவர்க்காய் தன்னையே அர்ப்பணித்த தியாகம்; இவர் தூய மனத்தவர்கள் பேறுபெற்றோர் என்று துயருற்றோர் இடர்களைந்த சுடரும் இவர் அமைதிப் பூக…

  4. காண வல்லாயோ ? ------------------------------------------------------ நீ இக்கணத்தில் ஒரு ஆற்றங்கரையிலோ அன்றில் ஒரு கடற்கரையிலோ உலாவிக் கொண்டிருக்கிறாயென நான் கனவு கண்டுகொண்டிருக்கிறேன். மிருதுவான ஒரு மணற்தரையில் உன் வெறும்பாதங்கள் நடந்து கொண்டிருப்பதாகவும் நான் உன்னையெண்ணிக் கனவு கண்டுகொண்டிருக்கிறேனென நீ கனவு கண்டவாறே நிர்மலமான ஆகாயத்தையும் அடிவானத்தையும் மோகப் போதையுடன் பார்த்து முறுவலிப்பதாகவும் என் கனவுகள் விரிந்தவண்முள்ளன. நிறமிழந்து பெயர்களையிழந்து வயதிழந்து இருத்தலையும் இழந்து நித்தியமானவளாகவும் முழுமையானவளாகவும் ஆகிவிட்ட என் காதலியே ! காதலிப்போர் அனைவரினதும் காதலில் பதுங்கிக்கிடக்கும் என்னு…

    • 4 replies
    • 1.6k views
  5. இயந்திர வயல் வெண்நாரைகளின் இயந்திரவயல்களில் கறுப்புக்காகங்கள் உருக்குலைய கரிய மை உதிர்க்கும் எழுதுகோல் உறைத்துப்போனது. மூன்றாந்தர உலகநாடுகளில் போரை வளர்க்கும் முதல்தர வல்லாண்மைகளின் பிடியில் சிக்கி மீளமுடியா வலிக்குள் புதைகிறது மனிதம் கந்தகப் பரீட்சிப்பு வளங்களைத் தின்ன, உயிருக்காய் அஞ்சிப் புகலிடம் தேடும் மனித வளங்களைத் தின்று கொழுத்தன வலியவை. நூற்றாண்டுகளின் கடப்பில் தொடர்ந்தபடி.. மனுநீதி வல்லரசுகளின் காலடியில் நசியுண்டு கிடக்க, போலி வெண்புறாக்கள் பூரித்துப் பறப்பது மூன்றாந்தர நாடுகள்மேல் திணிக்கப்பட்ட சாபம் எண்ணச் சூடேற்றலில் மனிதம் கொதிக்க இயந்திர வயல்களின் அழைப்பு.. உறைய வைத்தது.

  6. பட்டாம் பூச்சியின் கனவு மனம் வலிக்கிறது. சம்பிரதாயச் சடங்கின் வடிவில் கழுத்தை சுற்றிப் பொன்நாகம் பளபளக்கிறது. அவளுக்கு கட்டாயக் கைதும், விலங்கு மாட்டலும்.. உடல் அவளுக்கானதாக இல்லை. முதல் முத்தம், முதல் தழுவல் வலியாக.. ஒரு படர்கையின் கனத்தில் பெண்மை நொறுங்கிப் போனது. அவள் சுயம் மறுக்கப்பட்டது. குரல் ஒடுக்கப்பட்டது. இன்னொரு வடிவம் அவளுள் சங்கமிக்க அவள் அனுமதியின்றி எல்லாம் ஆகிவிட்டது. நீளும் ஒவ்வொரு இரவிலும் சுயம் ஏளனப்படுத்தப்படுகிறது இரவுகள் விடியும் ஒவ்வொருகணமும் படர்ந்த இன்னொரு வடிவம் வெற்றிக் களிப்பில் நெஞ்சு நிமிர்த்துகையில் அவள் மனதில் படிந்தவலி விசுவரூபம் எடுக்கிறது. உள்ளக்கிடக்கையில் கிடந்துழலும் சுயம் அடிக்கடி பீற…

    • 10 replies
    • 2.6k views
  7. --> யூனிக்கோட் எழுத்துருவில் வேகமாகத் தட்டச்சு இணைக்க முடிந்தவர்கள் இணைத்தால் நல்லது.

  8. Started by nunavilan,

    ஈழத்தமிழன் நீரால் பிரிந்தாயோ தமிழா நிலத்தால் பிரிந்தாயோ தமிழா இயற்கை பிரித்ததோ தமிழா தமிழ் மொழியால் ஒன்றுபட்டோம் - தமிழா வாழ்கை நெறி கண்டவனும் தமிழன் உயர்வு வாழ்வுநெறி சொன்னவனும் தமிழன் உலக நீதி கண்டவனும் தமிழன் உலகம் முழுவதும் வாழ்பவனும் தமிழன் வான்புகழ் கண்ட வள்ளுவனும் தமிழன் மானம் உயிரெனக் கொண்டவனும் தமிழன் கொஞ்சும் தமிழ் கண்ணீர் சிந்துதே குளிர்ந்த ப10மி குருதியில் நனையுதே இதைக் கண்டு எம்கண்கள் குளம் ஆகுதே எட்டுத் திக்கும் மகிழ்ந்து தமிழ் வாழுமா? ஈழத்தமிழனின் சோகக்கதைதான் தீருமா? இருளை விலக்கித் தமிழ் ஈழம் தளைக்குமா? உண்மையென்றும் சாவது இல்லை தமிழா! உன் உரிமைக்கு நீதி கிடைக்கும் தமிழா! J.டானியல் (யாழ்ப்பாணம்) கி…

  9. பனி தந்த ஈரலிப்பு எதுவரை? காலக்கரைகளிலே வீசிய காற்றில் பறந்த சருகுகள் எங்கோ நாற்றமெடுத்த கூவங்களில் மிதந்து, கானல் கழிவுகளாய் காய்ந்து, மறுபடியும் வீசிய காற்றில் பறந்தபோது மகுடம் சூடியதாய் நினைத்துக் கொண்டன. மடி கனத்த முடிப்போடு குடி கெடுக்க மனக்கணக்குப் போட்டபடி மல்லாக்கக் கிடந்தன. பூமிச்சுழற்சியிலே மல்லாக்கக் கிடப்பவை புதிய புல்வெளிகளில் தம்மைப் பச்சையம் உள்ளவையாகப் பதிவிக்க முயல்கின்றன. பனி தந்த ஈரலிப்பு எதுவரை என்று அறியாத வரைக்கும் அனைத்துச் சருகுகளும்......

  10. Started by வாசகன்,

    காதல் ஒரு கல்வெட்டு கல்லு அங்கேயே கிடக்கும் காதலர் போய்விடுவர் காதல் ஒரு நீரோட்டம் காதல் போய்விடும் காதலர் அங்கெயே இருப்பர் காதல் ஒரு நெருப்பு வெப்பம் அகன்ற பின் சாம்பலே மிஞ்சும். காதல் ஒரு வெளிச்சம் குருடருக்கு காதல்தான் உயிர்காற்று பிணங்களுக்கு காதல் ஒரு நிலம் கடலில் தொலைந்து போனவனுக்கு எனக்கும் என் காதலிக்கும் மட்டும் காதல் 50Kr ரோஜா எரிச்சலுடன் வாசகன்

  11. காதலர் தினத்தையொட்டி இரு காதல் பாடல்கள். அனைத்து யாழ்கள உறவுகளும் மகிழ்வோடு காதலர் தினத்தைக் கொண்டாட என்னுடைய வாழ்த்துக்கள். கடந்த பத்து வருடங்களுக்கு முன் என் மனதில் விழுந்த நதிக்காக நான் எழுதிய இரு பாடல்கள் இங்கே. இந்தப் பாடல்களின் தோற்றத்தால் இரு இறுவட்டுக்களும் ஒரு திரைப்படமும் உருவானதில் பெரு மகிழ்ச்சி. காதலர் தினத்தைக் கொண்டாட தயங்குபவன் தமிழனாக இருக்க முடியாது. காதலைப் போற்றாதவன் மனிதனாக வாழ முடியாது. காதல் என்பது இன்பத்துள் பேரின்பம், உணர்ச்சியுள் பேருணர்ச்சி, ஆற்றலுள் பேராற்றல், அடிப்படையுள் பேரடிப்படை, எல்லோருக்கும் உரியது, நட்பினுள் இரு பாலரையும் இணைப்பது என்பதைச் சங்கத் தமிழர்கள் மட்டுமல்ல உலகத் தமிழர்களும் அறிந்திருக்க வேண்டும். காதல் என்பது என்னைப் பொறு…

  12. Started by Thamilthangai,

    காதல் நவரசம் காதல் நவரசம்:.. கொஞ்சி நிற்கும் கருமை விழிகள் கெஞ்ச வைக்கும் செவ்வாய் இதழ்கள்! விரல் தொடுகையின் போது செல்ல மிரட்டல்! வாரி அணைக்கையில் படபடக்கும் நெஞ்சம்! காலை வணக்கம் சொல்ல மறந்தால் சின்னப்பிள்ளைக் கோபம்! ஊட்டி விடுகையில் உன் விரல் பிடித்துக் கடித்தால்!! அருவருப்பாய் ஒரு நெளிப்பு! அலுவல் முடிந்து களைத்து வருகையில் கருணைவழியும் கவனிப்பு!! என்ன தருவாய் பெண்ணே என்றால்!! நாணத்தில் விழி மூடி உன் வீரம்மொத்தமும் கூட்டித் திரட்டி’வைப்பாய் இதழ் முத்தம்!! காதல் நவரசம் யாவும் உன் செல்ல முகத்திலே காண்கிறேன்!! பெண்ணே உன்னால் வாழ்கிறேன்! நன்றி.. எல்லாம் என் பாதி சொன்னதைக்கோர்த்தொரு வடிவம்..)))

  13. Started by nunavilan,

    காதலி மலர்களிலும் சிறந்தவளே என் கரம் மறுத்த கனிமொழியே - உன் கண்ணீரை பூக்களாக தூவி விடு என் கல்லறையில் வஞ்சி உன்னிடம் நான் கெஞ்சி நிற்க வெஞ்சினம் கொண்டு வெறுத்து சிவந்;தவளே செவ்வானமும் சிறகடிக்கும் புள்ளினமும் வண்ணிலவும் வருடும் பூங்காற்றும் செந்தணல் மூட்டி என்னைச் சிதறடிக்க உன் கண்ணீரை பூக்களாக தூவி விடு என் கல்லறையில் வெண்சங்கு கழுத்தழகி விலையற்ற மணியவளே உன் சொல்லில் உண்மையில்லை உதயம் இனி உலகிலில்லை வெறுத்து நிற்கும் மலரிடம் வெதும்பி நிற்கும் வண்டு இது உயிரற்று விழுமொழிய ஒதுங்கி மட்டும் போய்விடாது என்றாவது உன் உணர்வுகளில் சலனம் என்று ஒன்று வந்தால் உன் கண்ணீரை பூக்களாக தூவி விடு என் கல்லறையில். . . . eelam…

    • 1 reply
    • 999 views
  14. Started by Thamilthangai,

    நீ! என் நிழலல்ல நிஜம்! நான் நிகழ்த்திவந்த காதல் தவத்தின் வரம்! உள்ளத்தில் செதுக்கிவைத்த உருவத்தின் உயிர் வடிவம் நீ! அள்ள அள்ளக் குறையாத அன்பு தந்து என் ஆயுள் வளர்க்கின்ற அமுதமும் நீ! எப்படிச் செல்லம் நீ எனக்குள் புகுந்தாய்? கள்ளூறும் தமிழாலே கவிதைகள் தந்ததாலா? தெள்ளுத்தமிழ் சொல்லாலே என் இதயம் தொட்டதாலா?! நெருக்குப்பட்டு மனம் சுருங்கும் வேளையில் சுருக்கென உன்னைத் தைக்கும் சொற்களில்!! மெளனம் காத்த பொழுதுகள் தன்னில் மிரட்டும் வார்த்தையின் அடர்த்திக் கணங்களில்!! என்னை நீ ஆராதித்த பொழுதுகளாலா? !எந்தன் தவறை எனக்கே உணர்த்தி உனக்கு ஈடாய் என்னைச் செதுக்கி கவிதைத் தமிழைப் பருக்கி பருக்கி! உருக்கிவிட்ட உன்னதத் தாலா?!! எந்தன் தமிழே என் உயிரின…

    • 7 replies
    • 1.9k views
  15. தேம்ஸ் நதியின் புன்னகை வ.ஐ.ச.ஜெயபாலன் பாலத்தின்கீழே வாழிய தேம்ஸ் நதியே என்றபடி இறங்கியபோது `நீர் லில்லி` இலைகள் பரப்பிய உன் கரை கண்ணாடியாய் நெழிய அன்னங்களின் கீழே நீ அன்று தூக்கத்தில் நடந்தாய் தேம்ஸ். மென்காற்றில் குனிந்து வசந்தப் பூ முகம் பார்க்க நெரியும் கரையோர மரங்களின்கீழ் நடந்துவந்தோம். கழுத்தை நெழித்து சிறகை அகட்டி நீர்மீது ஓடி வான் எழுந்த அன்னப் பறவை ஒன்றின் கர்வத்தோடு மோனத் தவத்தில் முகில்களின்மீது எந்தன் கவிமனசு. சிறுமியோ நனவுகளின் புல்வெளியில் நடக்கின்றாள். நானோ தேம்ஸ் அமைதியின் தேவதை என்றேன். ”என் அம்மா மாதிரி நம்ப முடியாதவள் மாமா” என்று அந்தச் சிறுமி உன்னைக் கிண்டல் செய்தாள்.. இதே தேம்ஸ் இதே இதே இதே தே…

    • 2 replies
    • 1.8k views
  16. நெஞ்சில் இனித்த நினைப்பு --------------------------------- -மு.கருணாநிதி தொங்கு சதை கிழவிஜெயா அறிக்கை புலி மங்கு சனிக்குணமும் பொங்கு பசிவயிறும் தங்கு தனியிடமும் தழுவுகலா சேவையும் வங்கு ரோத்துதனமும் வறட்சிமிகு மூளையும் கொண்டதனால் குழப்பமிகு அரசியல் ஆட்சி தந்தபணால் பன்னிகளும் புடைசூழ நின்று வெந்தபுண்ணாய் மக்கள் வெதும்பி அழுதிட வந்தமாற்றம் என்னிடம் அரசு ஆட்சியாய் ரெண்டுரூபாய் அரிசிக்காய் ரெட்டையிலை தூக்கி கூவத்தில்வீசும் கலர்டீவிகாட்ட கைநாட்டு போடும் பாமரத்தமிழன் பாராளுங்கனவோடு பசிவயிறு மேல் ஈரத்துணி போட்டு இரந்துவாழ் நாள்மட்டும் எந்தனாட்சி என்வீட்டு ஆட்சியாய்வரு சாட்சியாய் ஒன்றுரெண்டு மூன்றுமனுசி பெத்தவாரிசு ஆட…

  17. நிறுவைக்கோளாறு. -------------------------------------------------- தராசின் ஒரு பக்கத்தில் என் உறுதிப்பாடுகளை வைத்தேன் மறுபக்கத்தில் என் சந்தேகங்களை அவிழ்த்துக் கொட்டினேன் சந்தேகப் பக்கம் தாழ்ந்து நின்றது பின் உறுதிப்பாடுகளுடன் சிறிது விவாதங்களை அடுக்கினேன் அப்பாடா அதன்பின் தாழ்ந்து நின்றது உறுதிப்பாட்டின் பக்கம் உறுதிப்பாடுகளால் சந்தேகங்களை அளந்தேனா ? அல்லது சந்தேகங்களால் உறுதிப்பாடுகளை அளந்தேனா ? நிறுவைப் படிகள் எவை? நிறுக்கப்படுபவை எவை ? மீண்டும் மேலெழுந்தது உறுதிப்பாடுகளின் பக்கம் இவ்வாறாக இவ்வாறாக தமக்குள் ஏதோ நானறியா ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டவைபோல் எழுவதும் தாழ்வதுமாய் என்னை ஏளனம் செய்தவாறே தமத…

  18. சொன்னால் தான் புரியுமா என் கண்ணே மனசுக்குள் பல வண்ணப் பட்டாம்பூச்சி பறப்பது... உள்ளுக்குள் தெரிந்தாலும் உண்மையிது புரிந்தாலும் நான் சொல்லிக் கேட்பதில் உனக்குப் பரவசம்! நாடுகள் எமைப் பிரிக்கும் எம் உயிர் தாங்கும் கூடுகள் தான் அதை மதிக்கும்... எம் உயிருக்கு ஏதடி இடைவெளி? உலவலாம் எங்கெங்கும் உலகமிது சமவெளி! விண்ணில் ஏறுவோம் விண்மீன் எறிந்து விளையாடுவோம் மண்ணில் இறங்கிப் பாடுவோம் பூக்களின் மகரந்தப் பொடி அள்ளித் தூவுவோம் வண்டுகள் எமை மொய்க்கும் உன் கண்ணிரண்டு கண்டு தம்மினமோ என்று யோசித்து நிற்கும்! யாசித்து வருவதில்லையே அன்பு நமைப் போல் நேசித்து நின்றால் …

  19. Started by Jamuna,

    அன்புத்துளியே!! வானில் இருந்து விழுந்த மழைதுளியில் ஒரு துளி நீயம்மா கல்லான என் இதயத்தை ஈரமாக்கிய அந்த ஒரு துளி நீயம்மா... என் விழியில் வடிந்த கண்ணீரை நீக்கிய என் அன்பு துளி நீயம்மா சில மழைதுளி போல் என் வாழ்வில் உடைந்திடாத அன்பு துளி நீயம்மா!! இதமான பேச்சில் இதயத்தையே தொட்டுடும் துளியம்மா நீ என் கோபத்தை கூட புன்சிரிப்பில் கரைத்திடும் அன்பு துளியம்மா நீ.. மழையில் கிடைத்த இந்த துளியை கண்ணில் வைத்தேன் என் கண்மணியாய் அக்கணமே என் கண்ணில் இருந்து கண்ணீர் துளி வருவதில்லையம்மா.. குடை பிடிக்க மறுக்கும் என் கரங்கள் குடை பிடிக்க தொடங்கிவிட்டன வேறோரு மழைதுளி என் மேல் விழாமல் என் கண்ணில் இருக்கும் உனைக் காக்க.. …

    • 17 replies
    • 2.6k views
  20. வரலாறு. ---------------------------------------------------- தாயம் விளையாடிக் கடவுள் ஒருதடவை தன்னை மறந்ததனால் காலம் பெருக்கெடுத்துக் கரையுடைந்து தொடங்கியது வரல் ஆறு மறதிக் கருங்குழியில் மறைவுபெறும் மானிடமும் மற்றனைத்தும் வெறும் மடையிழந்த பாய்ச்சல்களே எறும்புகளின் புற்றானாலென்ன தேனீக்களின் கூடுகளானாலென்ன மனிதர்களின் நகரங்களானாலென்ன காலத்தின் கண்களில் இவையெல்லாம் ஒன்றே. எங்கே அந்த பபிலோனியா? எங்கே என் மொகஞ்சதாரோ ? பாலைவனங்களுக்குள் எத்தனை நகரங்கள் தூசியாய் போனது ? மசெடோனியாவின் மகாபுதல்வன் பபிலோனியாவில்மரித்தது விதியின் முரண்நகை. வீழ்த்திய நகரிலேயே வீழ்தான் இப்பேர்மனிதன். எங்கே உறங்குகிறாய் நீ அலெக்ஸாண்டர்?…

    • 10 replies
    • 2.3k views
  21. Started by ANAS,

    கவிதை அந்தப் பொழுது..... ஒவ்வொரு முறையும் எனது இருளக்குள்ளேயே நான் தொலைந்து போகிறேன் ஒளி வரும் பாதைகளை எதிர்பார்த்தபடிக்கு ஓர் ஒளியிடையேனும் விகாரமில்லாத எதுவும் தென்படாத படிக்கு மூலையில் கிடக்கிறது இருள். எல்லா நியாயங்களுக்குமான கூக்குரலை உயர்த்தி கத்தியபடிக்கு ஒரே ஒரு வெளியில் அலைந்தபடிக்கு உள்ளேன். எனது சுமைகள் எதனையும் பொருட்படுத்த முடியாமல் பாரப்பட்ட வெளியை விட்டும் தூரமாகிவிட்டேன். உயிரை ஒரு ஜீவித காலத்துக்கு மட்டுமாகிலும் நகர்த்தினால் உத்தமம். மரணம் பற்றிய ஒவ்வொரு நினைவினூடாகவும் கழிந்து போகின்றன நொடிகள். இருள் சூழும் பொழுதை விரட்டியபடிக்கு ஒரு இயலாக் கருவியாய் எறியப்பட்டுப் போனேன் மூலையில் ஒரு புரட…

  22. ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி மாதம் இலங்கை மக்களுக்கு முக்கியமான ஆண்டு. ஒன்று பெப்ரவரி 4 இல் வரக்கூடிய சுதந்திர தினம்! (அப்படியென்றால்...? என்னைக் கேட்டால் எனக்கு என்ன தெரியும்?) மற்றையது பெப்ரவரி 14 இல் வரக்கூடிய காதலர் தினம் (அதாவது... அட போடா எங்களுக்கு தெரியாதாக்கும்...) சரி அதை விடுங்கோ... மிகவும் அக்கறையோடு யோசித்து எழுதிய கவிதையை(?) படிக்கலாம் வாங்கோ... --------------------------------------------------------------------------------- வாலைச் சுருட்டிக் கொண்டு அவரவர் வீட்டுக்குள்ளே பதுங்கி இருங்கள் இன்று சுதந்திர தினம்! சுருட்டு வாங்கப் போகும் தாத்தாவும் கவனம்! உன்னையும் சுருட்டிக் கொண்டு சென்றிடுவர்! சட்டப்புத்தகம்…

    • 2 replies
    • 1.2k views
  23. கல்லரை முன் கண்ணீர் சிந்தி கண்துடைக்க என்னை எழுப்பிவிடாதே உன் கருவறையில் ஜனனிக்க வேண்டும் நான்! ......................... உன் உள்ளங்கையில் குடியேற ஆசைப்பட்டு முற்றத்தில் சொட்டியது அந்திமழை ....................... உதிர்ந்தது பூ வலியில் துடித்தாய் நீ! .................... சொட்டுச்சொட்டாக உள் இறங்கி உரைந்துப் பனிச்சிலையானது! மனசெல்லாம் நீ! ...................... தீக்குள் விரலை வைத்தால் உன்னை தீண்டும் இன்பம் தோன்றுதடி நான் பூக்களை பரித்துவிட்டால் உன் பாதி உயிர் கரையுதடி நீ என்ன முரண்களின் மகளா! .................. என் உதடு யாத்திரீகன்கள் உன் …

  24. சில கற்பனைகள் உன்னுடன், இது போன்றதொரு தருனம், இனி நிகழாதெனில், இன்றே என் வாழ்வின், இறுதி நாளாகட்டும்..!!! உனைப் பார்த்த அந்த சில நொடிகளிலேயே, பற்றிக் கொண்டது காதல் நெருப்பு...! காதல் நெருப்பிலே, நான் கருகுகிறேன்..... நீ... குளிர்காய்கிறாய்....!!!!!!!!!! suddathu....http://rajapattai.blogspot.com/2006/09/blog-post_115712824924957211.html

  25. Started by காவல்துறை,

    காதல் உன்னைக் காகிதத்தில் எழுதி எழுதி தொலைத்து விட்டேன் Posted by கஜந்தி at 9:04 AM காதலன் ஐயோ! பாவம் என் காதலன் அழகழகாய் உடுத்தி என்னோடு திரிந்தவன் பணத்திற்கு ஆசைப்பட்டு பக்கத்து வீட்டுப் பணக்காரப் பெண்ணைக் காதலித்து இப்படி வேலைக்காரன் ஆகி விட்டானே... Posted by கஜந்தி at 9:15 AM கணவன் இப்படி அழகழகாய் உடுத்தி உடுத்தி என் காசையெல்லாம் தண்ணியாய் கரைக்கிறாள் இவள்... ஏனடி என்றால் அவள் அழகாயில்லை என்று தானே என்னிடம் வந்தீர்கள் சின்னவீட்டு தத்துவம் புரியாதா உங்களுக்கு என்கின்றாள்.. Posted by கஜந்தி at 6:07 AM புரியவில்லை... படிப்பது அக்காவா பிள்ளையா என்று …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.