கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
கட்டபொம்மன் காலத்தில் மட்டுமல்ல எட்டப்பர்கள் இன்றும் இருக்கின்றனர் தமிழனே! இன்னும் எத்தனை காலத்துக்கென்றுதான் கண்ணீர் வடிப்பாயோ? விழிநீர் உப்புடன் விருந்துண்பவனே நரகிற் கிடந்துழலும் விதியை எவனடா எழுதினான் உன் தலையில்? விடுதலைக்காக நீ விழி திறக்கும் போதெல்லாம் கூடப்பிறப்பொன்றே உனக்குக் குழி பறிக்கும். நீ படை வைத்து அரசாண்ட காலத்தில் இன்று சந்திரனுக்குச் சென்று சாதனை படைத்தானே, அவன் ஆடுகள் மேய்த்துக் கொண்டிருந்தான். செவ்விந்தியனைக் கொன்று சிம்மாசனம் பிடித்தவன் இன்று "சர்வதேசப் பொலிஸ்காரன்" ஆகிவிட்டான். கோட்டைகட்டியாண்ட குலத்துக்குரிய நீ மட்டும் மாட்டைப் பூட்டியே இன்றும் மண்ணைக் கிளறுகின்றாய். நீ கப்பலேறிக் 'கடோரம்' வென்றபோது ஜப்…
-
- 3 replies
- 1.3k views
-
-
உலகமே அஞ்சும்.... ஏடெடுத்து கவியெழுத எழுகவடி பெண்ணே- நீ அடிமையில்லை யென்றுரைக்க அகிலம் எழு பெண்ணே... தீயோடு சண்டையிட்டாய் திரூதடி பெண்ணே- நீ தீயாகி எழுந்து பாரில் தீயை வை பெண்ணே.. செக்கிழுத்த மாடாகி-சமையல் செக்கிழுத்தாய் போதுமடி புதிய உலக விதிமுறையில் புரட்சி பெண்ணாய் எழுகவடி ... பிரசவத்து இயந்திரமாய் பரிதவித்தாய் போதும்- இந்த பீத்தலிற்கு தையலிட்டு- கணை பிரிதிவியாய் பாயடி.. அடக்கு முறை உனக்கு இனி அகிலமதில் இல்லையடி- நீ அகல விழி திறந்தெழுந்தால் அவையே உனக்கு அஞ்சுமடி... விழுந்தழுதாய் போதுமடி வெகுண்டே இன்று எழுகவடி எழுந்து விட்டால் போதுமடி ஏழ் உலகும் அஞ்சுமடி..! வன்னி மைந்தன்.////…
-
- 2 replies
- 1.3k views
-
-
சமத்துவ உறவொப்பந்தம் ----------------------------------------------------------- வாசுதேவன். பெண்ணே, உன்னில் எத்தனை விழுக்காடு ஆணுண்டென்பதையும் என்னில் எத்தனை விழுக்காடு பெண்ணுன்டென்பதையும் அளவிடுவதற்கு இன்னமும் உயிரியற் கருவிகளேதும் கண்டுபிடிக்கப்படவில்லையென்
-
- 12 replies
- 2.4k views
-
-
-
- 15 replies
- 2.3k views
-
-
தாயே அன்று உந்தன் மடியில் மறந்து போன என் எல்லா சோகமும் ஒன்று சேர்ந்து என்னைக் கொல்கிறது எனைத் தூங்க வைக்க தூரத்தில் நீ என்பதால் * இந்த உலகில் எந்த மூலையிலும் கிடைக்கவில்லை உந்தன் கருவறையில் கிடைத்த எனக்கான பாதுகாப்பு * என் மேலான உந்தன் கவனத்துக்காகவே எத்தனை முறை வேண்டுமானாலும் குழந்தையாய் பிறக்கலாம் உனக்கு நான் * எந்தப் பாசப்படியைக் கொண்டு நிறுத்தாயோ தெரியவில்லை உன் எல்லா குழந்தைக்கும் ஒரே அளவிலான அன்பையே காட்டுகிறாயே * என் தாரத்தின் மறுபிறவியில் உணர்ந்து கொண்டேன் நான் பிறக்க நீ தாங்கிய பிரசவ வலியை * உன்னில் தடுக்கி நான் விழுந்தபோதும்…
-
- 8 replies
- 1.5k views
-
-
எனக்காக நீதான் உனக்காக நான் தான் இது தானே நீ சொன்ன முதல் வாக்கியம் இப்போது எங்கே உன் சொல் ஓவியம் கவி எழுத மறந்தேன் - உன் கதை தனை யாசித்தேன் -இப்போ காணாமல் நானும் பூஜித்தேன் ஆனாலும் உனக்காக காத்திருப்பேன்
-
- 10 replies
- 2.4k views
-
-
ஏனிந்தப் புன்னகை? கண்ணே என் கண்ணின் மணியே பொன்னே என் சின்னத் தமிழ்ப் பெண்ணே உன் புன்னகையின் எண்ணங்களை என்னால் புரிய முடியவில்லை... ஏனிந்தப் புன்னகை? யாரைப் பார்த்து தாய்நாட்டில் குண்டுகளின் மத்தியில் அன்னை பிச்சையெடுக்க ஐரோப்பாவில் மகன் இந்திய நடிகைக்கு பொன் நகை அணிவிக்கிறான். அதைக் கண்டா இப்புன்னகை? எண்ணமும் நினைவும் எம் மூச்சும் உதிரமும் உடலும் என்றும் எம் தமிழிற்கே என்று அரசியல் மேடையில் முழங்கியவர்கள் இங்கு - பெற்றபிள்ளையது தமிழை அறிந்திடுமோ அது தவறு என்று தடுப்பவர்களைப் பார்த்தா இப்புன்னகை? இன்னொரு எத்தியோப்பியா ஈழத்தில் உருவாகிக் கொண்டிருக்க இங்கே பக்தி வெள்ளம் பல கோடி பணம் செலவு செய்து …
-
- 2 replies
- 1.4k views
-
-
தேடல் உனக்காக நானும் எனக்காக நீயும் எம் மழலைகளுக்காக நாமும் எத்தனை இரவுகள் தூக்கத்தைத் தொலைத்தோம் ஆனாலும் நீ நிரந்தரமாய் தூங்கிய அந்த இரவில் மட்டும் நான் நிரந்தரமாய்த் தொலைத்தது என் தூக்கத்தை மட்டுமா? நிரந்தர இருளுக்குள் நித்தமும் தேடுகின்றேன் உன்னை மட்டுமல்ல என்னையும் தான்
-
- 3 replies
- 1.2k views
-
-
தமிழீழ புலனாய்துறையினரின்வெளியீடு விழித்திருப்போம் கேட்டுப்பாருங்கள் http://www.esnips.com/doc/eab937d6-453d-48...et=documentIcon
-
- 5 replies
- 1.7k views
-
-
குருதி படிந்த சுவடுகள் கல்லறைக்குள் அடங்காத கவிதை இவர் எவர் கண்களிலும் பொங்குகின்ற கவிதை இவர் கல்வாரியின் அன்புச் சுனையும் இவர் அன்புக் கடலினிலே சங்கமிக்கம் நதியும் இவர் பிறரன்பு புரியவைத்த பெருமை இவர் அன்று பிறருக்காய் உயிரீந்த வள்ளல் இவர் மனிதத்தை மலர வைத்த மாண்பும் இவர் மனித நேயத்தைத் தேடவைத்த தேடல் இவர் ஆற்றலாய் அறிவதுவாய் அருமருந்தாய் தேற்றரவாளனாய் தினம் உணவாய் நேற்றைய தினம் போல இன்றும் என்றும் மாற்றமே இல்லாத மகிமை இவர் மனிதனைப் புனிதனாய் மாற்றுதற்காய் புனிதனின் அவதார விந்தை இவர் துன்பத்தில் துவண்டுவிடும் எம்மவர்க்காய் துன்னையே அர்ப்பண்pத்த தியாகம் இவர் தூய மனத்தவர்கள் பேறுபெற்றோர் என்று துயருற்றோர் துயர் களைந்த சு…
-
- 1 reply
- 1.1k views
-
-
கல்வாரித் தென்றல் கல்லறைக்குள் அடங்காத கவிதை இவர் எவர் கண்களிலும் பொங்குகின்ற கருணை இவர் கல்வாரியின் அன்புச் சுனையும் இவர் அன்புக் கடலினிலே சங்கமிக்கும் நதியும் இவர் பிறரன்பு புரிய வைத்த பெருமை இவர் பிறருக்காய் உயிரீந்த வள்ளல் இவர் மனிதத்தை மலரவைத்த மாண்பும் இவர் மனித நேயத்தை தேடவைத்த தேடல் இவர் ஆற்றலாய் அறிவதுவாய் அருமருந்தாய் தேற்றரவாளனாய் தினம் உணவாய் நேற்றைய தினம் போன்று இன்றும் என்றும் மாற்றமே இல்லாத மகிமை இவர் மனிதனைப் புனிதனாய் மாற்றுதற்காய் புனிதனின் அவதார விந்தை இவர் துன்பத்தில் துவண்டுவிடும் எம்மவர்க்காய் தன்னையே அர்ப்பணித்த தியாகம்; இவர் தூய மனத்தவர்கள் பேறுபெற்றோர் என்று துயருற்றோர் இடர்களைந்த சுடரும் இவர் அமைதிப் பூக…
-
- 6 replies
- 1.8k views
-
-
புதுக்கவிதை சுருக்கமான வரலாறு ஜெயமோகன் புதுக்கவிதை என்று தமிழில் இப்போது வழங்கிவரும் இலக்கியவடிவம் மிகமிகப்பரவலானதும் பல்நோக்கு பயன்பாடு கொண்டதுமாகும். இன்றையசூழலில் இவ்வடிவத்தைப்பற்றிய ஒரு வரையறையை அளிப்பது எளிதல்ல என்னுமளவுக்கு இது பரநது விரிந்திருக்கிறது. ஆகவே கோட்பாட்டு ரீதியாக ”ஒரு மொழியில் ஒரு சொல்லுக்குப் பின் இன்னொரு சொல் வரக்கூடியதும் எழுதியவராலோ பிரசுரித்தவராலோ வாசித்தவராலோ அல்லது சம்பந்தமில்லாத பிறராலோ கவிதை என்று கருதப்படுவதுமான ஓர் மொழியமைப்பே கவிதை’ என்ற பொதுவரையறை இங்கே அளிக்கப்படுகிறது. புதுக்கவிதை என்ற பெயரை இதற்கு போட்டவர் க.நா.சுப்ரமணியம் என்ற இலக்கிய விமரிசகர். ஆங்கிலத்தில் new poetry என்ற சொல்லை எஸ்ரா பவுண்ட் என்ற கவிஞர் பயன்படுத்திருப்பத…
-
- 3 replies
- 2.4k views
-
-
புறப்பட்ட இடத்திற்கு "மீளவரல்" பற்றிய கவிதையை வாசித்தவர்க்கும்இ அபிப்பிராயம் தெரிவித்தவர்க்கும் எனது மனமாரந்த நன்றிகள். ஒரு கவிதையின் விளக்கம் அல்லது புரிந்துணர்வு இன்னொரு கவிதைக்குள் பொதிந்து கிடக்கக்கூடும், புலப்படாது தப்பித்துச் செல்லவும் கூடும். ஒரு கவிதையிலிருந்து இன்னொரு கவிதைக்கு அழைத்துச் செல்லும் பாலத்தின் கீழ் படந்தோடிக்கொண்டிருக்ககிற
-
- 5 replies
- 1.6k views
-
-
மான்புலிக்கிளிகள் "வட்டம்பூ" விபரித்த ஆண்டாங்குளம் "குமாரபுரம்" வர்ணித்த அரியாத்தை இவ்விரண்டும் குழைந்த கலவையாக மாலதி படையணி... மலைத்துப் போனேன் நாட்காட்டியில்...புத்தகத்தில
-
- 7 replies
- 2k views
-
-
அனைத்துலக பெண்கள் நாள் பங்குனி 8. மகளிர்தினத்தை முன்னிட்டு நான் ரசித்த இந்த கவிதை இதோ. 'பெண்' பெண்ணே உலகின் ஆதாரம் அவளற்ற ஆண் வெறும் தளமற்ற கட்டிடம் உள்ளத் தவிப்புக்கு மருந்தும் உயிரின் துடிப்புக்குச் சமாதானமும் பெண்ணே இன்றி பெறுவதுதான் எப்படி கலையா கணினியா இலக்கியமா இராணுவமா நாட்டுத் தலைமையா விண்வெளிப் புரட்சியா எங்கே இல்லை அவள் சொல்லுங்களேன் உயிரைச் சுமக்கும் ஒரே உயிர் உலகில் பெண்தானே? துவண்ட மனதுக்கு மடிதந்து தலைகோத ஒரு பெண்ணற்றுப் போயின் மனித இனம் மொத்தமும் சுடுகாட்டுப் பிணங்கள்தானே எல்லாச் சுகங்களும் எங்கும் கிடந்தாலும் ஒரு பெண்ணில்லா பூமியில் சிறு பொழுதேனும் நகருமா அந்தப் பூமியும் கூட ஓர் …
-
- 5 replies
- 1.9k views
-
-
காணவல்லாயோ எனும் எனது கவிதையின் மீது கண்ணெறிந்தோர் அனைவருக்கும் குறிப்பாக அனஸ் அவர்களுக்குமாக இன்னொமொரு கவிதை. "ஊருக்குப் போனேன் " எனும் தலைப்பில் எனது பயண அனுபவத்தையும் வீடு செல்லும் அனுபவத்தையும் சில காலத்திற்கு முன் இத்தளத்தில் வெளியிட்டிருந்தேன். பலர் வாசித்துப் பாராட்டினார்கள். இங்கு நான் வெளியிடும் இக்கவிதையும் "வீடு செல்லலுடன்" தொடர்புடைய ஒரு கருத்தியலை முன்வைக்கிறது. புகலிட வாழ்க்கையும் அதன் அனுபவப்படிவுகளும் உள்நோக்கிய பார்வையினூகக் கவனிப்படவேண்டியவை என நான் கருதுகிறேன். சந்தமும் சொல்லடுக்கும் மாத்திரமே கவிதை என எண்ணிய காலம் அவதியாகிவிட்டதென நான் கருதுகிறேன். அதற்காக சந்தமும் சொல்லடுக்கும் தேவையற்றவை என நான் சொல்லுவதாகக் கருத வேண்டாம். …
-
- 10 replies
- 1.6k views
-
-
அம்மா இங்கே வா வா!! அம்மா இங்கே வா வா! Arrest Warrant தா தா! வேலூர் ஜெயிலில் போட்டு கண்ணுல தண்ணியும் காட்டு! அப்புவும் ரவியும் கூட்டு சின்ன 'சாமி'க்கும் வேட்டு குடுத்தாங்க மாமீங்க பேட்டி சாயம் போச்சுது காவி வேட்டி பெருசுங்க பொருளுங்க குட்தாங்க கூடவே போட்டாவும் புட்ச்சாங்க எதிராளிய குத்தம் சொன்னாங்க மீதிய அமுக்கினு போனாங்க போஸ்டரு நோட்டிசு அடிப்பாங்க கட்டவுடுக்கு பாலும் ஊத்துவாங்க அந்த 'ஸ்டாரோட' குஞ்சு-கல காணோங்க பாலில்ல! ஒருபுள்ள போச்சுதுங்க அபலைங்க சோகமும் பார்த்தாச்சி அனுதாபமும் எரக்கமும் பட்டாச்சி பழய துணிமணி கொடுத்தாச்சி சுனாமி சோகமும் போயாச்சி மிருனாள் சென் -ஆ! யாருங்க? ஜெயலச்சுமி செரினா தெரியுங்க ஐயோ! '…
-
- 6 replies
- 1.8k views
-
-
--> யூனிக்கோட் எழுத்துருவில் வேகமாகத் தட்டச்சு இணைக்க முடிந்தவர்கள் இணைத்தால் நல்லது.
-
- 7 replies
- 2.4k views
-
-
காண வல்லாயோ ? ------------------------------------------------------ நீ இக்கணத்தில் ஒரு ஆற்றங்கரையிலோ அன்றில் ஒரு கடற்கரையிலோ உலாவிக் கொண்டிருக்கிறாயென நான் கனவு கண்டுகொண்டிருக்கிறேன். மிருதுவான ஒரு மணற்தரையில் உன் வெறும்பாதங்கள் நடந்து கொண்டிருப்பதாகவும் நான் உன்னையெண்ணிக் கனவு கண்டுகொண்டிருக்கிறேனென நீ கனவு கண்டவாறே நிர்மலமான ஆகாயத்தையும் அடிவானத்தையும் மோகப் போதையுடன் பார்த்து முறுவலிப்பதாகவும் என் கனவுகள் விரிந்தவண்முள்ளன. நிறமிழந்து பெயர்களையிழந்து வயதிழந்து இருத்தலையும் இழந்து நித்தியமானவளாகவும் முழுமையானவளாகவும் ஆகிவிட்ட என் காதலியே ! காதலிப்போர் அனைவரினதும் காதலில் பதுங்கிக்கிடக்கும் என்னு…
-
- 4 replies
- 1.6k views
-
-
பனி தந்த ஈரலிப்பு எதுவரை? காலக்கரைகளிலே வீசிய காற்றில் பறந்த சருகுகள் எங்கோ நாற்றமெடுத்த கூவங்களில் மிதந்து, கானல் கழிவுகளாய் காய்ந்து, மறுபடியும் வீசிய காற்றில் பறந்தபோது மகுடம் சூடியதாய் நினைத்துக் கொண்டன. மடி கனத்த முடிப்போடு குடி கெடுக்க மனக்கணக்குப் போட்டபடி மல்லாக்கக் கிடந்தன. பூமிச்சுழற்சியிலே மல்லாக்கக் கிடப்பவை புதிய புல்வெளிகளில் தம்மைப் பச்சையம் உள்ளவையாகப் பதிவிக்க முயல்கின்றன. பனி தந்த ஈரலிப்பு எதுவரை என்று அறியாத வரைக்கும் அனைத்துச் சருகுகளும்......
-
- 5 replies
- 1.7k views
-
-
காதல் ஒரு கல்வெட்டு கல்லு அங்கேயே கிடக்கும் காதலர் போய்விடுவர் காதல் ஒரு நீரோட்டம் காதல் போய்விடும் காதலர் அங்கெயே இருப்பர் காதல் ஒரு நெருப்பு வெப்பம் அகன்ற பின் சாம்பலே மிஞ்சும். காதல் ஒரு வெளிச்சம் குருடருக்கு காதல்தான் உயிர்காற்று பிணங்களுக்கு காதல் ஒரு நிலம் கடலில் தொலைந்து போனவனுக்கு எனக்கும் என் காதலிக்கும் மட்டும் காதல் 50Kr ரோஜா எரிச்சலுடன் வாசகன்
-
- 4 replies
- 1.5k views
-
-
ஈழத்தமிழன் நீரால் பிரிந்தாயோ தமிழா நிலத்தால் பிரிந்தாயோ தமிழா இயற்கை பிரித்ததோ தமிழா தமிழ் மொழியால் ஒன்றுபட்டோம் - தமிழா வாழ்கை நெறி கண்டவனும் தமிழன் உயர்வு வாழ்வுநெறி சொன்னவனும் தமிழன் உலக நீதி கண்டவனும் தமிழன் உலகம் முழுவதும் வாழ்பவனும் தமிழன் வான்புகழ் கண்ட வள்ளுவனும் தமிழன் மானம் உயிரெனக் கொண்டவனும் தமிழன் கொஞ்சும் தமிழ் கண்ணீர் சிந்துதே குளிர்ந்த ப10மி குருதியில் நனையுதே இதைக் கண்டு எம்கண்கள் குளம் ஆகுதே எட்டுத் திக்கும் மகிழ்ந்து தமிழ் வாழுமா? ஈழத்தமிழனின் சோகக்கதைதான் தீருமா? இருளை விலக்கித் தமிழ் ஈழம் தளைக்குமா? உண்மையென்றும் சாவது இல்லை தமிழா! உன் உரிமைக்கு நீதி கிடைக்கும் தமிழா! J.டானியல் (யாழ்ப்பாணம்) கி…
-
- 0 replies
- 909 views
-
-
காதல் நவரசம் காதல் நவரசம்:.. கொஞ்சி நிற்கும் கருமை விழிகள் கெஞ்ச வைக்கும் செவ்வாய் இதழ்கள்! விரல் தொடுகையின் போது செல்ல மிரட்டல்! வாரி அணைக்கையில் படபடக்கும் நெஞ்சம்! காலை வணக்கம் சொல்ல மறந்தால் சின்னப்பிள்ளைக் கோபம்! ஊட்டி விடுகையில் உன் விரல் பிடித்துக் கடித்தால்!! அருவருப்பாய் ஒரு நெளிப்பு! அலுவல் முடிந்து களைத்து வருகையில் கருணைவழியும் கவனிப்பு!! என்ன தருவாய் பெண்ணே என்றால்!! நாணத்தில் விழி மூடி உன் வீரம்மொத்தமும் கூட்டித் திரட்டி’வைப்பாய் இதழ் முத்தம்!! காதல் நவரசம் யாவும் உன் செல்ல முகத்திலே காண்கிறேன்!! பெண்ணே உன்னால் வாழ்கிறேன்! நன்றி.. எல்லாம் என் பாதி சொன்னதைக்கோர்த்தொரு வடிவம்..)))
-
- 9 replies
- 3.4k views
-
-
எழுச்சி பொறிகக்கும் விழியோடு புறப்பட்டு விட்டோம்! போராட நாள் குறித்தோம்! எறிகுண்டு பாய்ந்தாலும் இருகைகொண்டேற்போம்! எதற்கும் நாம் துணிந்துவிட்டோம்! நெறிகெட்ட பகைவரின் முறைகெட்ட வாழ்வால் நெருப்பாக மாறிவிட்டோம்! வெறிகொண்டு தாவினோம்! வீரத்தின் மடியில் விளையாடத் தொடங்கிவிட்டோம்! திசையெட்டும் அதிரயாம் பறைகொட்டி நின்றோம்! தெய்வத்தை வணங்கி வந்தோம்! தசையெலாம் முறுக்கேறி நின்றோம்! எழுந்தோம்! தாயின் மேல் ஆணையிட்டோம்! வசைகெட்டு வாழாத வரலாறு கொண்டோம்! வல்லமை நூறு கொண்டோம்! இசை பெற்ற மிளிர்கின்ற எதிர்காலம் ஒன்றை இப்போதே செய்து வைப்போம்! கடல் பொங்கினாற்போல் உடல்பொங்கி வந்தோம் களத்திலே ஆட வந்தோம்! படைகொண்டு மானத்தின் நடைகொண்டு வந்தோம் பழி தீர்க்…
-
- 4 replies
- 5.7k views
-
-
நீ! என் நிழலல்ல நிஜம்! நான் நிகழ்த்திவந்த காதல் தவத்தின் வரம்! உள்ளத்தில் செதுக்கிவைத்த உருவத்தின் உயிர் வடிவம் நீ! அள்ள அள்ளக் குறையாத அன்பு தந்து என் ஆயுள் வளர்க்கின்ற அமுதமும் நீ! எப்படிச் செல்லம் நீ எனக்குள் புகுந்தாய்? கள்ளூறும் தமிழாலே கவிதைகள் தந்ததாலா? தெள்ளுத்தமிழ் சொல்லாலே என் இதயம் தொட்டதாலா?! நெருக்குப்பட்டு மனம் சுருங்கும் வேளையில் சுருக்கென உன்னைத் தைக்கும் சொற்களில்!! மெளனம் காத்த பொழுதுகள் தன்னில் மிரட்டும் வார்த்தையின் அடர்த்திக் கணங்களில்!! என்னை நீ ஆராதித்த பொழுதுகளாலா? !எந்தன் தவறை எனக்கே உணர்த்தி உனக்கு ஈடாய் என்னைச் செதுக்கி கவிதைத் தமிழைப் பருக்கி பருக்கி! உருக்கிவிட்ட உன்னதத் தாலா?!! எந்தன் தமிழே என் உயிரின…
-
- 7 replies
- 1.9k views
-