கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
ஒரு கதை கேள் தோழி. ஒரு வசந்தம் மட்டுமே வாழ்கிற ரோமியோக்களின் கதை கேள். காகிதப் பூக்களின் நகரத்தில் காதலில் கசிந்து தேனுக்கு அலைந்தது பட்டாம் பூச்சி. என் இனிய பட்டாம் பூச்சியே சுவர்க் காடுகளுள் தேடாதே. நான் வனத்தின் சிரிப்பு வழுக்குப் பாறைகளில் கண்சிமிட்டும் வானவில் குஞ்செனப் பாடியது பிஞ்சுக்கு ஏங்கிய காட்டுப் பூ. ராணித் தேனீக்களே எட்டாத கோபுரப் பாறைகளில் இருந்து கம கமவென இறங்கியது அதன் நூலேணி. வாசனையில் தொற்றிவந்த வண்ணத்துப் பூச்சியிடம் இனிவரும் வசந்தங்களிலும் தேனுக்கு வா என்றது பூ. காதல் பூவே வசந்தங்கள்தோறும் ஊட்டுவேன் உனக்கு மகரந்தம் என்கிற பட்டாம் பூச்சியின் எதிர்ப்பாட்டில் உலகம் தழைத்தது. நிலைப்ப தொன்றில்லா வாழ்…
-
- 3 replies
- 1.2k views
-
-
காற்று வந்து காது துடைத்து கலைத்துப் போகும் பஞ்சு மேகம்...!! விண்ணில் கோடி விதைகள் கொண்டு விதைத்த பருத்தி பஞ்சு மேகம்...!! நட்சத்திர மழலை கண்ணாமூச்சி ஆட வைக்கும் பிஞ்சு பஞ்சு மேகம்..!! நனைந்த நிலவு நுதல் முற்றும் சுற்றிக் கொள்ளும் பஞ்சு மேகம்...!! பகலவன் கொஞ்சம் இளைப்பாறிச் செல்லும் சொகுசு பக்கணம் பஞ்சு மேகம்...!! கடலோடு மணம் கொண்டு கருவாகி மழை ஈன்று பஞ்சரிக்கும் பஞ்சு மேகம்...!! வானத்தோடு மின்னல் சண்டை அமைதித் தூது வெளிர் பஞ்சு மேகம்...!! அண்டையோடு சண்டையிட்டும் அன்பு குழகி ஆர்ப்பரிக்கும் தரணி மெச்சும் பஞ்சு மேகம்...!! அர்த்தங்கள்: பஞ்சரித்தல் - கொஞ்சிப் பேசுதல்…
-
- 27 replies
- 6.3k views
-
-
இன்று மொட்டவிழ்ந்த இனிய பூவே! உனக்கு இதயபூர்வமான எனது பிறந்தநாள் வாழ்த்துகள்! எந்தன் கண்களில் வாழ்க்கையின் இரகசியம் எதுவெனச் சொல்லும் பூவே நீ வாழ்க! வண்டுகள் கால்களில் மகரந்த தூதுவிட்டு மணியான காதல்செய்யும் பூவே நீ வாழ்க! தன்னிலை மறந்து துன்புறும் மனிதனுக்கு அன்பினை போதிக்கின்ற பூவே நீ வாழ்க! ஓர்நாளில் நீ வாடிப் போனாலும் என்நெஞ்சில் நீங்காத இடம்பிடித்து நீடூழி வாழ்வாய்! என் உயிருடன் உறவாடும் உன் மெல்லிய இதழ்களில் தருவேன் நான் என்றும் ஒருகோடி முத்தங்கள்!
-
- 18 replies
- 4.9k views
-
-
-
இதுவரை நான் எந்தக் கவிதையையும் சுட்டதில்லை உன் பெயரைத் தவிர * என் கற்பனைகள்தான் அதிகமாய் வாசகர்களுக்கு காட்டிக் கொடுக்கிறது உன்னை நான் கவிதையாய் காதலிப்பதை * உன் சேலை நழுவுவதைப் பார்த்தால் பயமாக இருக்கிறது விழுந்து விடுவேனோ என்று * நீ எனை காதலிக்கிறாய் என்பதை கேக்க காத்திருக்கவில்லை நீ என்னை காதலிக்கவில்லை என்பதையாவது கேக்கத்தான் காத்திருக்கிறேன் * நீ எது கேட்டாலும் சொல்வேன் உன் அழகுகளில் எந்த அழகு பிடிக்கும் என்று கேட்டால் மட்டும் சொல்லமாட்டேன் சொன்னால்... உன் எல்லா அழகுகளின் கோவத்துக்கும் ஆளாகிவிடுவேன் காதல்பித்தன் -யாழ்_அகத்தியன்
-
- 1 reply
- 937 views
-
-
இன்றைய கவிதை 06.08.2007 ஆண் பெண் படைத்து அங்கம் வேறாக்கி அந்தரங்க உறவு காட்டி அற்புதங்கள் செய்தவன் யார் ? பார்க்கும்போதே ஈர்க்கும் சக்தி பார்வையாலே பேசும் மொழி கண்ணை மூட கற்பனை கண்திறந்தால் அற்புதம் படைத்தவன் யார் ? சிறிய குறிப்பு இது தினம் ஒரு கவிதைக்கான தலைப்பு இதற்கான விமர்சனங்கள் உங்கள் கருத்துக்களை அதற்கான தலைப்பின் கீழ் இட்டுக்கொள்ளுங்கள். விரும்பிய உறவுகள் உங்கள் கவிதைகளையும் தினம் ஓரு கவிதையாக இங்கு இடலாம் நட்புடன் பரணீதரன்
-
- 38 replies
- 9.5k views
-
-
உன்னை எழுதுவதைவிட உன்னை வாசிப்பதில்தான் அதிக ஆர்வம் எனக்கு * உனக்காய் கவி எழுத கற்பனைக் குதிரையை தட்டிவிட்டேன் அது உன்னைக் காட்டிக் கொடுத்துவிட்டு தூங்கிவிட்டது * என் கண்கள் காட்டிக் கொடுத்ததில் துரோகமில்லாத ஒன்று என்றால் அது உன்னைக் காட்டிக் கொடுத்தது மட்டும்தான் * நீ குளிக்கையில் தண்ணீரோடு நானும் குளிக்கிறேன் * உன்னைக் கவிதையாய் வெளியிட விரும்பி இன்றுவரை உன் கண்களை பற்றித்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன் -யாழ்_அகத்தியன்
-
- 2 replies
- 935 views
-
-
ஓடிடுவீர்..... மூவொரு நாளத முடிந்ததுவே மூடர்கள் பகுப்பு முடியலயே இதுபோலும் இதுபோலும் இவரறிவு....? இவரா உரைத்தனர் பகுத்தறிவு....?? இடியப்ப சிக்கலை கலைவாரோ இன்றதை இவரத குலைப்பாரோ...?? மதியுகியத மதியியுரையோ இவரது சிந்தையின் மதியிதுவோ...??? சேற்றில் விழுந்த வெண்ணாடை சேறாகி வராமல் என் செய்யும்...? காழ்புணர்வு தாங்கிய நெஞ்சில் கடுப்பது பொங்காமல் என் செய்யும்... எடு புத்தி மீதினில் இவர் சென்றால் எங்கனும் தானே போய் முடிவார்.... நடக்கட்டும் நடக்கட்டும் நடக்கட்டமே- நானிலம் உம்மை உமிழட்டுமே அதுவரை நீரும் ஆடிடவீர் அட்டம் கலைந்ததம் ஓடிடுவீர்....! எழுத்து பிழைகளை திருத்தி படிக்கவும்...
-
- 9 replies
- 1.5k views
-
-
உன் மெளனம் கூட ஆசைப்படுகிறது நீ பேசுவதைப் பார்த்து கவிதையாக வேண்டுமென்று * பூச் செடிக்கு பக்கத்தில் வைத்து உன்னை படம் எடுத்ததில் உன்னைப் பறித்த பூவின் புன்னகை தெரிகிறது * இரவு வந்தால் போதும் கவிதை நேரத்துக்காய் காத்துக் கிடக்கிறேன் வானொலிக்கு பக்கத்தில் அல்ல என் கைபேசிக்கு பக்கத்தில் * உனக்கு பிடித்த எல்லாம் எனக்குப் பிடிக்கும் உனக்கு பிடித்த கவிஞர்களைத் தவிர * வாசல் அழகுக்காய் கோலம் போடுகிறாய் நீ கோலம் போடும் வரைதான் அழகாக தெரிகிறது வாசல் -யாழ்_அகத்தியன்
-
- 3 replies
- 1.2k views
-
-
-
இதுவரை கணக்குகளை மட்டும் விளங்கபடுத்த என் கையோடு கூடிய பேனா முதல் முறை உனக்கு கவி எழுத என் கையோடு கூட்டியதில் வந்த கழித்தல்கள் இவை தயவு செய்து சிரித்துவிடாதே கலைந்து கிடக்கும் என் எழுத்துக்கள் இன்னும் கலைந்துவிடும் பல கோடி கவிதைகளை கண்டபின்னும் பசியாறவில்லை இன்னும் காதலுக்கு எப்படி எழுதப்போகிறேனோ உனக்கொரு கவி சிலையின் கையில் கொடுக்கப்பட்ட பேனாபோல் அசையாமல் மிதக்கிறேன் கற்பனைக்கடலில் எப்படி எழுதப்போகிறேனோ உனக்கொரு கவி எண்ணில் விட்டதில்லை எழுத்துக்களில் விடுவதுண்டு பிழை எப்படி எழுதப்போகிறேனோ உனக்கொரு கவி உனக்காய் கவி எழுத விடிய விடிய யோசித்ததில் இரவுகளின் நீளத்தை என்னால் இப்படித்தான் அளக்க முடிந்தது ந…
-
- 5 replies
- 1.7k views
-
-
மறக்க முடியாத உன் முதல் முத்தம் வேண்டாம் நான் இறக்க வேண்டும் கடைசி முத்தம் கொடு * நீ தூங்குவதே இல்லையா என் தூக்கங்களில் கனவாய் வருகிறாயே * எல்லாரும் கவிதைக்குள் கருத்தைதான் தேடுவார்கள் நீ மட்டும் உன்னைத் தேடுவாய் * நீ வாங்கிக் கொடுத்த செருப்போடுதான் இன்றும் நடக்கிறேன் கைகளில் சுமந்தபடி * என் கவிதைகளை எப்படி படிக்க வருகிறாய் என்பதை கற்றுக்கொடு நீ குளிப்பதை எப்படி எட்டிப் பார்ப்பது என்பதை கற்றுக் கொள்கிறேன் -யாழ்_அகத்தியன்
-
- 3 replies
- 989 views
-
-
உன்னை நினைக்க மறந்த இரவொன்றில் நிலவின் துணை கொண்டு எழுதிய கவிதை இது தயவு செய்து வாசித்துவிடாதே உன் கண்ணீரை ஏந்தினால் என் கவிதை இறந்துவிடும் காலங்கள் கரைந்தாலும் கரை சேராத நதியாய் தேங்கியபடியே கிடக்கிறது என் காதல் உன்னால் காதல் எனும் வானத்தில் நாமிருவரும் பறந்து திரிந்த காலங்களை எண்ணியபடியே சிறகுகள் இன்றி தனிமரமாய் இன்று நான் என் காதல் உன்னை மட்டும் காதலிக்க கற்றுத்தரவில்லை உன்னைத் தவிர யாரையும் காதலிக்க கூடாது என்பதையும்தான் கற்றுத்தந்தது உன் இரவுகளின் தாலாட்டு எது என்பதை நானறியேன் ஆனால் என் ஒவ்வொரு விடியலின் ஓசையும் என் கவிக்குழந்தையின் அழுகுரல்தான் உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை நீ என்னோடு இருந்தபோது ஒவ்வொர…
-
- 6 replies
- 3.6k views
-
-
வருவாயா... ஈழ மண்ணின் குரலதுவும் போனது போனது தானா தமிழிழமின்று குருதியிலே தோய்வது..தோய்வது..முறைதானா...? மதியுரை மந்திரி மன்னவனே உனையிழந்தின்று தேசமே யழுகிறதே-நீ கூடியே வாழ்ந்த குருவியெல்லாம் கூடிட உன்னையே தேடுறதே... கடலம் அலையும் அலைகிறதே கடலினுள் அவையும் அழுகிறதே வெகுமதி உன்னை இழந்ததினால்- அந்த வெண்ணிலா கூட தேய்கிறதே... ஈழ மண்ணின் குரலதுவும் போனத போனது தானா தமிழிழமின்று குருதியிலே தோய்வது தோய்வது முறைதானா... நோயுடல் உன்னை வாட்டியதோ தமிழீழ விடுதலை புட்டியதோ போற்றியே வாழ்ந்த உலகமெல்லாம்- இன்று போதனை மறந்து வாழ்கிறதே... அண்ணனே அண்ணனே வருவாயா அகிலத்தில் மீண்டும் பிறப்பாயா வீழ்ந்தே நொருங்கிய வெண்புறாவை மீண்டும…
-
- 3 replies
- 968 views
-
-
வான வில்லின் வர்ணங்கள் வளைத்து எண்ணம் என்னும் வண்ணம் எடுத்து கற்பனைத்தேன் கலந்து காரிகை உனைக் கிறுக்க தூரிகை நான் எடுத்தேன் காவியம் பேசும்- அவள் கண்கள் வரைய கரு முகிலை தூதுவிட்டு கருவிழியாக்கினேன் சிறகடிக்கும் சிட்டுக்குருவியின் இறகை- அவள் இமைக்கு மடலாக்கினேன் வளர்ந்து வரும் வளர் பிறையை வளைத்து-அவள் வதனத்தில் வைத்தேன் இளம் தளிர்-அவள் இதழ் வைக்க இதழோடு-பூ இதழ் வைத்தேன் கார் காலத்து கரும் இருளை காதல்-கள்ளியின் கூந்தலாக்கினேன் தேன் நிலவு தேவியை தேடி-பிடித்து திருமகளின்-திரு திலகமாக்கினேன்.
-
- 17 replies
- 2.4k views
-
-
எழுத்துப் பிழையின்றி எழுத நினைக்கும் காதல் எழுத்துப் பிழையின்றி வாசிக்க நினைக்கும் நட்பு * என் நண்பனை அறிமுகப்படுத்தினேன் சந்தோசப்பட்டனர் என் நண்பியை அறிமுகபடுத்தினேன் சந்தேகபட்டனர் * காதலி கொடுத்த பூ வாடிப்போனது நண்பி கொடுத்த பூ வாடவில்லை அதுதான் நட்பு * காயப்படுத்திய கரம் நட்பென்றாலும் அதே கரத்தையே தேடும் குணப்படுத்த நட்பு -யாழ்_அகத்தியன்
-
- 8 replies
- 2.1k views
-
-
குற்றம் ஏர்.... ஊருக்கு உண்மைகள் உரைப்பேன்- எனக்கறிந்த உண்மைகள் அத்தனை உரைப்பேன் பாருக்கெல்லாம் முதலாகுமென்ற பாரதியை வார்த்தையை உரைப்போம்... தாளப்பறந்த விமானம் தள்ளாடி விழ்வது முறையே கண்ணேதிர் முன்னே நின்ற கட்டிடம் காண பிழையே... உச்ச கதிரோன் தானெனவே உசந்ததாய் நினைத்தத பிழைதானே மதியதை மதியதை மறந்தாரே- இன்று மனிதமதையெ இழந்தாரே.... கூடு கட்டிய குருவிகளின் கூடது உடைத்தத பிழைதானே மாட மாளிகையில் தானெனவே மனிதா நினைத்தத பிழைதானே.... நீதிநெறியதை மறந்தாரே- இன்று நீதிகெட்டின்று விழந்தாரே தூக்கிட யாரின்று வருவாரோ...? துன்பத்தில் தவிப்பது முறைதானே... இகழ்வதும் புகழ்வதும் முறைதானே- தொடர் இகழ்வது இகழ்வது பிழைதானே மனிதன் போட…
-
- 3 replies
- 1k views
-
-
உன் பார்வையில் பார்த்துக் கொண்டேன் என் கண் காட்சியை * உன்னை சுற்றியதில் சேலைக்கு கிடைத்தது அழகான தேவதை * தேடிப் பார்க்க தொடங்கினேன் எனக்குள் இருக்கும் உன்னைக் கொண்டு உனக்குள் இருக்கும் என்னை * உன்னை பார்த்த களைப்பில் ஓய்வெடுக்க விரும்புகிறது கண்கள் உழைக்க விரும்புகிறது உதடுகள் * முத்தத்தை முடித்து வைக்க பிரம்மன் வைத்தான் உன் உதட்டில் ஒரு மச்சம் -யாழ்_அகத்தியன்
-
- 2 replies
- 855 views
-
-
அன்னை தேசம் சிந்தும் குருதி அகிலம் எங்கும் உறைய வைத்தும் ஈழத் தமிழன் ஈந்திடும் கண்ணீர் ஈரம் கண்டும் இரங்காத உலகம் சிங்கள வெறியன் சீண்டிடும் கைகள் சீறும் படையால் சிதைந்திடும் காணீர் எம் நிலம் வந்து எம்மையே கொல்லும் துரோகிகள் துரோகம் தூர்ந்திடும் விரைவில் தீந்தமிழ் வீரர் தியாகம் வேள்வி தன்னிலை மாறி தமிழீழம் பிறக்கும்...
-
- 8 replies
- 1.8k views
-
-
இலங்கை சிறு தீவில் சூழ்ந்தது போர் மேகங்கள் அணி வகுத்தது இரு தரப்புக்கள் ஆதிக்கவெறி இன வெறி கொண்ட ஒரு தரப்பும் சுதந்திரத்துக்காய் விடுதலைக்காய் மறுதரப்பும் உள்நாட்டு பிரச்சினை என உலகம் கண்ணை மூடிக்கொண்டிருக்க கொலை கொள்ளை பலாத்காரம் என இன அழிப்பில் கொக்காளம் இட்டது சிங்கள தரப்பு வீரம் கொண்ட தமிழ் இனம் தனது சொந்தக்காலிலே நின்று பதிலடி கொடுக்கத்தொடங்கியபோது விழித்துக் கொண்டது உலகம் மூன்றாம் தரப்பு இணைத்தலைமை அமைதிப்படை சமாதானத்தூதுவர் இன்னும் என்னவோ பெயர்களிலெல்லாம் போதும் போதும் இவர்களெல்லாம் மத்தியஸ்தம் செய்வதுக்கு நாங்கள் நடத்துவது விடுதலைப் போரா இல்லை குறுக்கெழுத்துப் போட்டியா?
-
- 5 replies
- 1.5k views
-
-
குருவிக்கு வேண்டுகோள் : ஞானக்கூத்தன் கூடுகட்ட விடமாட்டேன் சின்னக் குருவியே! என் வீட்டு சன்னல்கள் திறந்திருக்கக் காரணம் பருவக் காற்றுகள் உள்ளே வர எஞ்சிய உணவின் வாசம் மறையவும் துவைக்கப்படாத துணிகளின் வாடை போகவும் இன்னும் ஏதோ ஒன்று என்னவென்று தெரியாத ஒன்றின் சிறு நெடி போகவும் பருவக்காற்றுகள் உள்ளே வீசத் திறந்துள்ளன எனது சன்னல்கள் எனது வீட்டுக்குள் வருவோர் தனது வாசத்தோடு வந்து போகிறார் திரும்பிப் போகும் போது அதிலே கொஞ்சம் விட்டு விட்டே போகிறார் தெரியுமா? சன்னல் வழியே சிறகை மடக்கி வர முயலாத சின்னக் குருவியே கூடு கட்டப் பொருந்தி இடங்கள் இல்லை குருவியே எனது வீட்டில் நாட்டின் வளர்ந்த மரங்கள் எல்லாம் என்ன ஆயின? நீயேன் கூட்டை…
-
- 1 reply
- 818 views
-
-
-
வாழ்தல் - வ.ஐ.ச.ஜெயபாலன் தொடுவானில் கை அசைக்கும் மணக்கோலச் சூரியன். பின்னே படுக்கை அறை வாசலின் நீலத் திரை அசைந்தபடி. எப்படியும் வந்துவிடுகிறது விடைபெறும் நேரம் பறவைகளாக உதிர்ந்து ஆர்ப்பரித்துச் சிதறிய வானம் இனி வீதியோரப் பசுமரங்களுள் அடைந்துவிடும். என் தலைக்குமேல் இன்று நிலா முழைக்குமா நட்சத்திர வயல்தான் பூக்கப் போகிறதா அல்லது கறுப்புக் கம்பளத்தில் பறக்குமா இந்த மாரி இரவு. கண் சிந்தும் பிரிவுகளில் நிறைகிறது வாழ்வு. ஒவ்வொரு தோழதோழியர் செல்கிறபோதும் காதலியர் வசைபாடி அகல்கையிலும் நாளை விடியாதென உடைந்தேன். இனி முடிந்ததென்கிற போதெல்லாம் பிழைத்துக் கொள்கிறது தாய் வீழ்ந்த அடியில் குட்டிவாழை பூக்கிற உலகு. ஒப்ப மறுக்கினும…
-
- 6 replies
- 1.7k views
-
-
இன்றைய மது வ.ஐ.ச.ஜெயபாலன் உலகம் விதியின் கள்ளு மொந்தை. நிறைந்து வழிகிறது அது மதுக் கிண்ணம் தாங்கியவர்களால் எப்போதும் நுரைத்தபடி. நேற்றிருந்தது வேறு. இங்கே நுரைபொங்குவது புதிய மது. அது இன்றைய நாயகனுக்கானது. நாளை கிண்ணம் நிறைகிறபோது வேறு ஒருவன் காத்திருப்பான். நிச்சயம் இல்லை நமக்கு நாளைய மது அல்லது நாளை. எனக்காக இன்று சூரியனை ஏற்றி வைத்தவனுக்கு நன்றி. அது என் கண் அசையும் திசைகளில் சுவர்க்கத்தின் கதவுகளைத் திறக்கிறது. மயக்கும் இரவுகளில் நிலாவுக்காக ஓரம்போகிற சூரியனே உன்னையும் வணங்கத் தோன்றுகிறதடா. கள்ளு நிலா வெறிக்கின்ற இரவுகள்தோறும் ஏவாளும் நானும் கலகம் செய்தோம். ஏடன் தோப்பினால் விரட்டி அடித்தோமே கடவுளையு…
-
- 5 replies
- 1.2k views
-
-
எங்குதான் கற்றாய் நீ பொய்.. இளமை சொல்கிறதா... ஆசை சொல்லத் தூண்டுகிறதா.. இதுவரை இல்லாமல்.. இப்போது.. பொருத்தம் இல்லாமல்.. பொய்சொல்கிறாயே.. நீ உரைப்பதை நம்பிவிடும்.. முட்டாளா நான் மாறிவிட்டேன் என்று எண்ணிவிட்டாயா..முட்டாள்க் காதலனே... நீ நிற்பது கடல் நடுவில்.. நான் நிற்பது கரைமணலில்.. நீதான் இங்கு வரவேண்டும் நானல்ல.. காதல் மனதைத் தொடும் கலை.. உடலைத் தொட அலைவது கொலை காமம் தாம்பத்யத்தை ஸ்திரப்படுத்த... காதலைப் பலவீனப்படுத்த அல்ல நீ நேசிப்பது என்னையென்றால்.. நான் என் இதயத்தை என்று எடுத்துக் கொண்டேன்.. நீ உடலை என்பதைக் காட்டிச்சென்றாய்.. உன் வேலையாகவில்லை என்று எரிகிறாய்.. என் காதலன் கண்ணியத்தை எண்ணி நான் அழுகிறேன்.. பரிபூரண இதயத்தைக் க…
-
- 37 replies
- 4.6k views
-