கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
பல்லாண்டு காலமாய் ஆண்ட தமிழ் அடிமையாய் கிடப்பதா? சொல்லாண்டு தமிழினம் அடிபட்டு சாவதா? பொல்லாக்குணம் கொண்ட கொடியர்கள் எம் மண் ஆழ்வதா? மெல்ல தமிழ் இனம் இனி சாகுமா? வெல்லா போர்களம் எங்கும் தமிழனுக்கு உண்டா? எல்லாத்தமிழனும் ஒன்றே ஆகுவோம் எள்ளாய் நினைத்தவன் எலும்பை நொருக்குவோம் கொல்லா குணம் இன்னும் தேவையோ? எல்லாம் அழிந்த பின் நீ அழுவது நியாயமோ? செல்லாப் போர்களம் தோல்வியை நோக்கி ஷெல்லால் அடித்தாதல் உன் ஊர் நாசம்..! கல்லாய் நீயும் இருப்பதோ..! கடவுளையும் துணைக்கழைப்பதோ..! மெல்லத் திறந்திடு உந்தன் சிந்தனையை பொல்லாப்பகை விரட்ட -புலி படையுடன் இணைந்திடு நல்லார் உலகை படைக்க நாமும் இணைவோம் சொல்லார் எம் மீத…
-
- 4 replies
- 1.1k views
-
-
எம் தேசியத்தை இறுதிவரை இழக்கப்போவதில்லை சுனாமிப் பேரலையில் அம்மாவை இழந்தேன் சுற்றிவளைப்பில் அப்பாவையும் இழந்தேன் கண்ணி வெடியில் அண்ணா காலை இழந்தான் கடத்தலிலே அக்கா கற்பை இழந்தாள் செல்வீச்சில் சொந்தங்களை இழந்தேன் குண்டு வீச்சில் குடியிருப்புக்களை இழந்தேன் இப்போது எஞ்சியிருப்பது என்னுயிர்தான் எதை இழந்தபோதிலும் எம்தேசியத்தை நாம் இறுதிவரை இழக்கப்போவில்லை . கனடாவில் இருந்து வெளிவரும் உலகத்தமிழர் பத்திரிகையில் பரமேஸ்வரி துரைசிங்கம் அவர்களினால் எழுதி சிறப்புப்பாராட்டு பெற்ற கவிதை இது.
-
- 3 replies
- 1.2k views
-
-
பிஞ்சுகளைப் பிளந்த பிசாசுகள் செஞ்சோலையில்-எங்கள் பிஞ்சுகளின் செங்குருதி குடித்த இரும்புப் பறவைகளே முல்லையின் மரண ஓலம் கேட்கிறதா..? வானம் பார்த்து விழிமூடிக் கிடக்கும்-எங்கள் வண்ணப் பூக்களை வந்து பாருங்கள் யுத்தவெறி பிடித்த புத்தமுகம் கிழியும்! உங்கள் தாகம் தீர்த்துக் கொள்ள தமிழனின் குருதியென்ன மதுபானமா? பிணவெறி பிடித்த இனவெறிகளே! எங்கள் வலிகளைக் சேமிக்கும் இதயங்கள் இனியும் தாங்காது வலிகளைச் செலவு செய்ய வருவோம்! எங்கள் குருதியால் எழுதப்படும் சிங்கள மகிந்தவின் சிந்னைக்கு எரிமலைப் பிழம்புகள் கொடுப்போம்! எல்லை மீறிய எதிரிகள் கூட்டமே-இனி எழுது கருவிகள்கூட ஏவுகணையாகும் எட்டுத் திக்கிலும் வெற்றி எமதாகும!; கனத்த நெஞ்சுட…
-
- 8 replies
- 1.5k views
-
-
மறக்குமோ நெஞ்சம்? ஈழத் தமிழர் ஏட்டில் இன்னுமோர் வரலாற்றுப் பதிவு! நேருக்கு நேர் நின்று போர் செய்ய முடியா கோழைகளின்! வெறியாட்ட அரங்கேற்றம்! செஞ்சோலை!! செங்குருதியில் குளித்த ஓராண்டு நிறைவு! பிஞ்சுகளை எல்லாம் நஞ்சுகள் நசுக்கிய நாள் இது! ஈழத்தமிழர் நெஞ்சங்களில் பதிந்திட்ட ஆறாதவடு! எங்களின் மலர் முகங்களை மறக்க இயலவில்லை!மனங்களில் கண்ணீரோடு கதறிய கதறல் உலுக்குகிறது ஈழத் தமிழனை! பொறுப்பதில்லை எதற்கும் இனி!. "ஏன்" என்று எந்த அரசும் கேட்கவில்லை! போனது "தமிழ்" உயிர் தானே! "அலட்சியத்தில்" உயர்ந்து நிற்கின்றது எங்கள் வேங்கைகளின் இலட்சியம்! இனி!!....வெல்லும் காலம்! "ஓயும் அகதி எனும் ஓலம்! சிங்களத்தினை செங்களமாடும்…
-
- 6 replies
- 1.5k views
-
-
வெறுமை சாலைகளிலும் மரங்களிலும் மனிதர்களிலும் இறங்குகிறது வெறுமையான இரவு. காத்திருப்பவை நாய்களின் குரைப்பும் சோற்றின் மௌனமும். ஏதொ மறந்து போய்விட்டது யாருடைய களைத்த முகமும் உன்னைத் தேடுவதில்லை. இழந்தது வசவுகளின் கசிந்த அன்பு. இன்று கால்களுக்குக் கீழ் எந்தத் தரையும் இல்லை என்னிடம் தரப்பட்டவை வார்த்தைகள் என் பின் இருப்பவை துகள்கள். கதியில் மறைந்தது சிரிப்பு ஏன் அழுகையாகக்கூட இருக்கலாம். இப்பொழுதுதான் இங்கு எங்கேயோ ஓய்ந்திருக்கவேண்டும் அந்தப்பாடல் கண்களில் ஒளிர்ந்து தன் புறாக்களை அசைத்து போகிறாள் ஒரு பெண் உச்சிவெயிலில் வேர்க்க விறுவிறுக்க வந்த நண்பன் நீல மேகங்களிடை மறைந்த ஒரு தேவதையைப் பார்த்திருக்கவேண்ட…
-
- 9 replies
- 1.6k views
-
-
பூக்கள் எப்படி அது நடக்கப் போயிற்று ஒரு மாதத்திற்கு முன்வரை எங்களுக்குள்ளே உறவு முறை சுமுகமாய் இருந்தது ஒன்று சேர்ந்து அருகருகே உட்காரும் குருவிகளாய் ஒருவொருக்கொருவர் மிகவும் பணிந்து போய் ரொம்பவும் நேசத்துடனே இப்போது நினைக்கவே என்னவோபோல இருக்கிறது இருவருக்குமுள்ள தூரம் நீண்டு போய் பார்த்துக்கொள்ளவே மனசைக் கொண்டு வர முடிவதில்லை அப்படியே பார்த்துக் கொண்டாலும் பேசுவதற்கு ஒன்றுமேயில்லாமல் வேற்று மனிதர்களாய் முகங்கள் குரங்குகளாய் மாற அடையாளங்கள் மறந்துபோக கோபம் மட்டும் இந்த சமயத்தில் வரவே கூடாது கோபம் பழைய கணக்குகளைப் போடும் போன மாதம் நான் என்ன பேசினேன் அதற்கு முன்மாதம் அங்கே என்ன நடந்தது குழப்பம் அதிகமாகிக் கதவு தானே மூடிக்கொள்ளும் …
-
- 4 replies
- 1.3k views
-
-
மூன்று கற்கள் கனவில் கிடைத்த மூன்று கற்களில் முதல் கல்லை வீசினேன் சூரியனை நினைத்தபடி பார்வையால் பொசுக்கும் வேகத்துடன் பட்டென்று ரதமிறங்கி வந்து நின்றான் இழுத்து வந்த குதிரைகள் இரைத்த படி மூச்சுவாங்கின வெளிச்சச் சில்லுகள் பதித்த தேகத்தில் வேர்வை வழிந்தது தாகத்துக்கு அருந்த இளநீரை நீட்டினேன் ஆசுவாசமுற்ற ஆனந்தத்தில் வெற்ற்லை பாக்கு போட்டபடி வேடிக்கைக்க கதைகள் பேசிவிட்டுச் சென்றான் காற்றை நினைத்தபடி இரண்டாம் கல்லை வீசினேன் விண்ணுக்கும் மண்ணுக்குமிடையே விஸ்வரூபத்துடன் வந்தான் வாயுதேவன் முகம்பார்க்க முடியவில்லையே என்றதும் உடல்சுருக்கி எதிரில் சிரித்தான் இளநீரை விரும்பிப் பருகிய பின்னர் ஏராளமான கதைகள் சொன்னான் ஒவ்வொரு மூச்சும்…
-
- 2 replies
- 1.1k views
-
-
காத்திருப்பு உன்னைப் பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டது. உனது குரலில் அன்பை அனுபவிக்க ஏங்கித் தவிக்கிறது மனம். பாசம் நிறைந்த உன் பார்வைக்குள் நனையும் நாளின் நினைவுகளில் கழிகிறதென் நிகழ்காலம். கால நீட்சியில் உனது கோலத்தில் எழில் கூடியிருக்கும் என்று நினைக்கிறேன் இத்தனை காலப் பிரிவினால் நீயும் என்னைப் போலவே தவித்தபடி இருக்கலாம். நேரில் பேச வேண்டிய செய்திகளை சுமக்கின்ற எங்களின் மனங்களில் சுமைகளை மாற்றிக் கொள்கின்ற நாளின் வருகையை எதிர்பார்க்கின்ற கணங்களில் அழிவுகள் வருடங்களாக நகர்கின்ற பொழுதிலும் தொடர்கிறது உனக்கான எனது காத்திருப்பு. பேசிக்கொள்ள நேரமற்ற விதமாய் உணர்வுமிக்க பொழுதொன்றில் சந்திக்கனும் உனது கனிவான பார்வையே போதும் இன்னும் ஆய…
-
- 15 replies
- 21.1k views
-
-
புதிய இசையின் பதற்றம் பீறிட்டெழும் என் பதற்றத்தின் பார்வை அமைதி அமைதி என பச்சைப் புல் தேடுகிறது அவலங்களின் நாவுகள் பயணித்த சுவை வழியே மௌனம் யாசிக்கிறது நடுக்கம் சிவப்புக் கம்பளம் விரித்த கூடமொன்றிலிருந்து நிர்வாகவியல் குறித்த வரைவுகள் தொடங்குகின்றன குளிரூட்டப்பட்ட சதுரங்கள் உரையாடலை வாசிக்கின்றன உணவுகளின் வரிசையில் எண்ணிக்கைகள் தொடர்கின்றன பசி மட்டும் சாசுவதம் கழிப்பறை சுவர் சிரித்த இசை கனவுப் பிரதேசமாய் விரிகிறது நடுநிசியளவு அல்லது பகலா ஏதோ ஒன்றிலிருந்து எழும் ஓலம் ஞாபகங்கள் மீது நதி நீரற்ற தனிமையை வீசுகிறது நடவடிக்கைகளின் ஒழுங்கு படுத்தலை ஒளி அறைகிறது நெஞ்சுப் பலகை மீது விழிகளின் அச்சம் வினாக்குறிகளை உமிழ்கிறது பழைய கேள்விதான் …
-
- 2 replies
- 1.1k views
-
-
-
ஒரு தமிழனின் கைரேகைப் பலன்கள்! கடுமையான உழைப்பினால் உன் ஆயுள் ரேகை அழிந்தது....... அரசியல் வாதிகளின் ஆரவாரப் பேச்சுக்கு கை தட்டியே உன் அதிர்ஷ்ட ரேகை கலைந்தது...... எண்ணற்ற சினிமாக்களால் உன் புத்தி ரேகை மழுங்கியது........ லாட்டரிச் சீட்டுகளைச் சுரண்டியதாலேயே உன் உழைப்பு ரேகை உருக்குலைந்தது........ தங்கைகளின் திருமண ஏற்பாட்டில் அலைந்து திரிந்ததில் உன் திருமண ரேகையும் தொலைந்து போனது..... முதுமை ரேகை மட்டுமே முறியாமல் உள்ளது....... கொஞ்ச நாட்கள் கழிந்தால் உன் குறையெல்லாம் போய் விடும் போ! -கவிஞர் கலைவேந்தன்
-
- 3 replies
- 2.4k views
-
-
ஈழபாரதியின் சருகுகள் என்ற கவிதைத் தொகுப்பில் இருந்து சில கவிதைகள். இறைவனுக்கு என்னோடு வா! இறைவா! என்னோடு வா! அழைக்கின்றேன் - உன்னை துதிக்கின்றேன் உன்னை அருள் தரும் வாழ்வு - இனி புதுசுகம் தரும் வாழ்வு மனிதத்தை விதைத்து நேசத்தை வளர்ப்போம்!! மாயத்தைக் களைந்து உண்மையை உடுப்போம்!!! போர்களை ஒழிப்போம்! புதுமைகள் செய்வோம்! பாவங்களை மன்னிப்போம்! பகைவர்களை நேசிப்போம்!! பயந்துவிடாதே! மரங்கள் இல்லை இங்கே - உனக்கு சிலுவைகள் செய்ய!
-
- 2 replies
- 1.2k views
-
-
ஈழபாரதியின் சருகுகள் என்ற கவிதைத் தொகுப்பில் இருந்து சில கவிதைகள். அன்னை எனது ஜனனத்திற்காக பல முறை மரணவாயிலை எட்டிப்பார்த்தவள் - நீ உன் விரல்களை பற்றிக் கொண்டு - தான் நடை பழகினேன் - இன்று உனக்கு முன்பாகச் செல்வதைக் கண்டும் சந்தோசப்படுகிறாய்! உன் அசைவுகளைக் கண்டு பேசத் துவங்கியவன்!! இன்று உன்னை விடவும் பேசுவதைக் கண்டும் சந்தோசப்படுகிறாய்! உன் விரல்களைக் கொண்டு எழுதப் பழகியவன்-இன்று உன்னை விடவும் எழுதுவதைக் கண்டும் சந்தோசப்படுகிறாய்! எத்தனை இரவுகள் உன் தூக்கம் தொலைத்திருப்பாய்...! வலிகளை மட்டும் கற்றுத் தந்தவன் நான்.... என் வலி கண்டதும்.... - நீ ஏன் துடிதுடித்துப் போகிறாய்? தாய் என்பதாலா...?
-
- 2 replies
- 951 views
-
-
மனத்தின் ரணங்களால் மரணத்தின் வாசலில் மண்டியிட்டு தினமும் கண்ணீர் வடிக்கும் நான் ஒரு பெண் என்னோடு கதை ஆனால் வதைக்காதே நான் ஒரு நிலவு என்னை ரசித்திடு தொட நினைக்காதே நான் ஒரு கிளி எனை பறக்கவிடு அடைக்க முயலாதே நான் ஒரு வாசமுள்ள பூ மோர்ந்து பார் கசக்கி எறியாதே நான் ஒரு புல்லாங்குழல் என்னை வாசித்திடு முறித்து எறியாதே நான் ஒரு புரியா கவிதை எடுத்து படி மடித்து வீசாதே நான் ஒரு நெருப்பு எரிய விடு அணைக்காதே தயவுசெய்து தள்ளி நில்லு எனை அணைக்காதே மரணத்தின் வாசலில் நான்
-
- 14 replies
- 2.4k views
-
-
புத்தன் காந்தி யேசு பிறந்தது பூமியில் எதற்காக தோழா ஏழை நமக்காக தமிழா நீ புத்தன் ஆக இருக்கிறாயா போறவன் வாறவன் எல்லாம் உனக்கு மொட்டையடித்து காவியுடை மட்டும் தந்து விட்டு போவான் தமிழா நீ காந்தியாக இருக்கிறாயா போறவன் வாறவன் எல்லாம் உன்னை சுட்டு விட்டு கோவணம் மட்டும் தந்து விட்டு போவான் தமிழா நீ யேசுவாக இருக்கிறாயா போறவன் வாறவன் எல்லாம் உன்னை சிலுவையில் அறைந்துவிட்டு ஒரு துண்டு துணி மட்டும் தந்து விட்டு போவான் தமிழா நீ புலியாக இருக்கிறாயா போறவன் வாறவன் எல்லாம் உன்னை பார்த்து தலை வணங்கி விட்டு போவான்.
-
- 9 replies
- 2.2k views
-
-
பாலக்காடு 2006 வ.ஐ.ச.ஜெயபாலன் வண்ன ஆடைகளை வானெங்கும் வீசிவிட்டு அம்மணச் செஞ் சூரியன் அரபிக் கடல் இறங்க ஆகாச விளிம்பு பற்றும். நாமும் பகலின் பல்லக்குத் தூக்கி களைத்துப்போய் இருந்தோம். கிளர்ந்து குன்று தளுவும் முகிலின் ஈரக் கருங்கூந்தல் இரப்பர் காட்டில் சரிந்து கீழே அறுவடையாகும் வயல்மீதும் சிந்திப் படர்கிறது. வான் நோக்கும் அறுவடைக்காரி முதல் துளியையே குருவி எச்சமாய் அருவருத்து நச்சு வசவுகளை உமிழ்கிறாள். நாளை அவளே வெட்கமின்றி பொங்கலும் வைத்து மழையே வா எனப் பாடுவாள். இது வாழ்வு. வானில் இரவு தன் இளம்பிறை மதுக் கிண்ணத்தை உயர்த்திய…
-
- 5 replies
- 1.5k views
-
-
வாழ்தல் - வ.ஐ.ச.ஜெயபாலன் தொடுவானில் கை அசைக்கும் மணக்கோலச் சூரியன். பின்னே படுக்கை அறை வாசலின் நீலத் திரை அசைந்தபடி. எப்படியும் வந்துவிடுகிறது விடைபெறும் நேரம் பறவைகளாக உதிர்ந்து ஆர்ப்பரித்துச் சிதறிய வானம் இனி வீதியோரப் பசுமரங்களுள் அடைந்துவிடும். என் தலைக்குமேல் இன்று நிலா முழைக்குமா நட்சத்திர வயல்தான் பூக்கப் போகிறதா அல்லது கறுப்புக் கம்பளத்தில் பறக்குமா இந்த மாரி இரவு. கண் சிந்தும் பிரிவுகளில் நிறைகிறது வாழ்வு. ஒவ்வொரு தோழதோழியர் செல்கிறபோதும் காதலியர் வசைபாடி அகல்கையிலும் நாளை விடியாதென உடைந்தேன். இனி முடிந்ததென்கிற போதெல்லாம் பிழைத்துக் கொள்கிறது தாய் வீழ்ந்த அடியில் குட்டிவாழை பூக்கிற உலகு. ஒப்ப மறுக்கினும…
-
- 6 replies
- 1.7k views
-
-
ஈழபாரதியின் சருகுகள் என்ற கவிதைத் தொகுப்பில் இருந்து சில கவிதைகள். ஹைக்கூ கவிதைகள் * வெடிகுண்டு சப்தம் தாலாட்டுகிறது ஈழக் குழந்தைகளை...! * குடித்த பின் குடும்பச் செலவானது குவளைகள்...! * மைல்கள் சாமியானது சந்தோஷம் பூசாரி! * காந்தி ஜெயந்தி கனவு கலைந்தது `குடி' மகனுக்கு! * மரண அறிவித்தல் தவளையின் சப்தம் * சாலையோர மரம் சாமியானதும் சரியாமல் நின்றது!
-
- 5 replies
- 1.3k views
-
-
நெடுந்தீவு ஆச்சிக்கு வ.ஐ.ச.ஜெயபாலன் அலைகளின்மீது பனைக்கரம் உயர எப்போதும் இருக்கிற என்னுடைய ஆச்சி காலம் காலமாய் உன்னைப் பிடித்த பிசாசுகள் எல்லாம் தோற்றுப் போயின போத்துக்கீசரின் எலும்புகள் மீதும் தென்னம் தோப்பு நானும் என் தோழரும் செவ்விளநீர் திருடிய தென்னந் தோப்பு. தருணங்களை யார் வென்றாலும் அவர்களுடைய புதை குழிகளின்மேல் காலத்தை வெல்லுவாள் எனது ஆச்சி. என்ன இது ஆச்சி மீண்டும் உன் கரைகளில் நாங்கள் என்றோ விரட்டி அடித்த போத்துக்கீசரா ? தோல் நிறம் பற்றியும் கண் நிறம் பற்றியும் ஒன்றும் பேசாதே அவர்கள் போத்துக்கீசரே எந்த அன்னியருக்கும் நிலை இல்லை எனது ஊர் நிலைக்கும் என்பதைத்தவிர எதனை எண்ணி நான் ஆறுதல் அடைவேன். நா…
-
- 4 replies
- 1.6k views
-
-
இனி எம் காலம்!. தெறிக்கும் பொறி பறக்கும் புலி படை கண்டு பகை கலங்கும்! வெளிக்கும்! இனிச் சிரிக்கும்-கதிர் தமிழர் கிழக்கில் உதிக்கும்! எதற்கும் இல்லை கலக்கம்!எட்டு திசையும் இங்கே வெளிக்கும் பதுங்கும் புலி பாயும் இனி பொறுப்பதில்லை!. விலங்கு உடைக்கும்! வெடிக்கும் சிங்களக் கூடம்! வேங்கை அடக்கும்! பேரினத்தீயை! எடுக்கும் ஓட்டம் மகிந்த கூட்டம்! பறக்கும் எம் கொடி தலை நகரில்!
-
- 6 replies
- 1.4k views
-
-
தீயின் வம்சமடா நாம் தீமை கண்டால் தீது செய்தால் தீக்கிரையாக்கிடுவோம் விழிகள் திறந்தே உறங்கிக்கொள்வோம் விடியல் வரும் நாள் கண்ணயர்ந்து கொள்வோம் உரசிப்பார் பற்றிக்கொள்வோம் பிரிதல் ஒன்றும் பிரியப்போவதில்லை இணைவோம் எம் லட்சியம் ஈடேறும்போது அரசியல் ஆட்டம் காண எம் ஆட்சி பீடம் ஏற இணைவோம் புரியும் அன்று பிரிவு ஏன் - எம்முள் பிளவு ஏன் ? கிழக்கில் தோன்றும் இருளெல்லாம் - ஓர்நாள் வடக்கில் வெளிச்த்திற்கு அஸ்த்திவாரம் ஓட ஓட விரட்டி எம்மை கொன்றொழித்த ஓர் காலம் ஓடுஓடுவென அரசை கொன்றொழிப்போம் எம் காலம் கருநாகம் படையெடுத்தால் கலங்கிப்போகாதே - அதன் கடிவாளம் எம்மிடத்தே கவலை கொள்ளாதே வீசும் காற்றும் வ…
-
- 7 replies
- 1.5k views
-
-
நீ சொல்லும்வரை நானும் நினைக்கவில்லை மனசெல்லாம் பாரம் ஆனாலும் அது கனக்கவில்லை. எவளைப் பார்த்தாலும் ஏதாவது எழுதிப்பார்ப்பது ஒரு காலம்! ஆவி உயிர் ஆன்மா முன்றும் ஒன்றானாலும் ஒருத்தியிடம் ஒன்றிப்போனேன் இந்தச் சில காலம். என் பழைய கவிதைகளையெல்லாம் தூசு தட்டி படித்து ரசித்தாள்! "கவிதை ஒன்று கவிதை படிக்கிறது" எங்கோ படித்ததை சொல்லிக்காட்டி அசத்தினேன்! ஆர்ப்பாட்டமான மகிழ்ச்சியில் இன்னும் சில கவிதைகளுக்காய் எண்ணங்களைப் போட்டு கசக்கினேன். தொடர்ந்து வந்த இருவருக்குமான தனிமையில் முத்தங்களுக்கான முனைப்புக்களில் சில முன்னகர்வுகளுடன் வெற்றியின் உதயக்களிப்பில் நான்... இடையில் கைமறித்தவள் "யாரந்த கவிதையில் வந்தவள்!" "எவள் அன்ற…
-
- 9 replies
- 1.9k views
-
-
அழுகை நிறுத்தியெழு.... ஈழத் தமிழா ஈழத் தமிழா- நீ இன்னும் அழுவதா...? இந்த இன்னல் தாங்கி தாங்கி இதயமமுடைவதா....?? அன்னை மண்ணை இழந்து நீயும் அகதியாவதா..?- அந்த அன்னியத்து சிங்களங்கள் ஆட்டம் இடுவதா...? இத்தனை நாள் நீயிருந்தா அடிமை உடையடா- அந்த சிங்களத்து கொட்டமதை நீயும் அடையடா... அழுதழுது நீயலைந்த வாழ்வை அழியடா- அந்த அன்னியத்து சிங்களத்தை ஓட கலையடா... பொங்கி நீயம் புலியணியில் புலியாய் இணையடா- அந்த போர்களமே ஏறி நீயும் பகையை விரட்டடா... அழுதழுது நீயலைந்த வாழ்வை தொலையடா அன்னை தமிழ் வீரமதை உலகில் காட்டடா....!
-
- 6 replies
- 1.3k views
-
-
தற்போது களத்தில் காதல் வாசம் வீச்தொடங்கியுள்ளது. ஜம்முவிற்கும் காதல் வந்திடுச்சு அதனால் எனது பழைய கவிதைகளை இங்கு தூசு தட்டி ஜம்முவை வரவேற்கின்றேன் 01 தேய்ந்து போகின்றேன் நீ நடந்த பாதையெங்கும் விழி வினா வீசி காத்திருக்கின்றேன் தாண்டிச்சென்ற பூங்காற்றே மீண்டும் வருவாயா ? காத்திருப்பதில் எத்தனை ஆணந்தம் பூமி காத்திருருக்கின்றது மழையின் வருடலிற்காய் பூக்கள் காத்திருக்கின்றன வண்டின் தீண்டலிற்காய் வானம் காத்திருக்கின்றது நிலவின் நெருக்கத்திற்காய் அன்பே நான் காத்திருக்கின்றேன் உன்தன் உறவிற்காய் பத்துமாதம் அன்னை காத்திருந்தாள் இப் ப+மிமீது உன்னை பூப்பறிக்க வைக்க பல வருடம் நான் காத்திருக்கின்றேன் என் பள்ளியற…
-
- 8 replies
- 1.4k views
-
-
வஞ்சிக்கொடியே வாஞ்சையுடன் என்னோடு கொஞ்சிப் பேசிப் பேசி கொள்ளை கொண்டவளே எனக்கே தெரியாமல் என்னுள் புகுந்து என்னையே கேட்காமல் எண்ணில்லா முத்தங்கள் தந்து என்னை கோபப்படுத்தினாய் என்னை செல்லமாக அழவைத்தாய் என்னுள் உனைத் தேடிக்கொண்டே உன்னில் எனை தேட வைத்தாய் கண்டேன் எனை உன்கண்ணில் கொண்டேன் அளவில்லா இன்பம் மீண்டும் எனை நீங்கி சென்றாய் உன் இருப்பிடம் சற்றேனும் எதிர்பாராபோது சினுங்கிய தொலைபேசியில் உன் அன்பான குரல் கேட்டு என் கையில் இருந்த லொலிபொப் புளிச்சது ஏன்?
-
- 51 replies
- 6.3k views
-