கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
''அதிரடி தாக்குதல் நடக்குது விடுதலை ஈழம் பிறக்குது....|| தீயாய் எழுந்து தீங்குகள் எரி கயவர் என அறிந்தால் காவு எடு... ஈழத் தாய் ஈன்ற- நீ ஈழ மகனென்றால் இன்னல் துடை இரும்பு கரம் அறு.... போர் வாளெடுத்து போருக்காய் வந்த பகை வாளை பந்தாடு..... நீ காவிய தாய் மகனெ;னறால் கலங்கம் துடை ''புலம் பெயர்ந்து வந்தாயாயினும் புலியாகி எழு.......'' சிறும் பம்பாகி - பகை சீறி வந்தால் சிரச் சேதம் செய்..... உன் தமிழை உரையாடி உன்னோடு உறவாடி உள்ளிருந்து உளவெடுத்து உன்னை உதைப்பானாயின்- அவனை வெட்டி எறி- உலகிருந்து வெற்றிட மாக்கு..... போலியென நீ அறிந்தால் பொறுக்கியாய் இரு கயவன் அவனே தான் களுத்தை அறு..... ''வந்த நாடதுவ…
-
- 1 reply
- 1k views
-
-
வாழ்க! நீடு வாழ்கவே! வையம் போற்ற வாழ்கவே! வாழ்க! தமிழ் ஈழமே! வாழ்க! என்றும் வாழ்கவே! ஆற்றலுடை தொழில் வளமும், அறிவியல் துறை வளர்வும், மாற்றமுறாப் பண்பு நிறை மாட்சிமைகொள் ஆட்சிசெய்தும், ஏற்றமுடன் தமை ஈந்த சரித்திரத்து நாயகரை சாற்றிவைத்து கூற்றியம்ப சத்தான புலமை செய்தும், வாழ்க! நீடு வாழ்கவே! வையம் போற்ற வாழ்கவே! வாழ்க! தமிழ் ஈழமே! வாழ்க! என்றும் வாழ்கவே! காடுகளும், கழனிகளும் கலை கொழிக்கும் கூத்துகளும், களங்கள் பல கண்ட – வீரக் கதைகள் சொல்லும் ஆவணமும், வேழமொத்த பகை விரட்ட வெகுண்டெழுந்த வேங்கையமும், வீரமுடன் பாடிப் பாடி வெற்றி வாகை சூடியே வாழ்க! நீடு வாழ்கவே! வையம் போற்ற வாழ்கவே! வாழ்க! தமிழ் ஈழமே! வாழ்க! என்றும…
-
- 4 replies
- 1.2k views
-
-
''இது இறுதிப் போர்....'' எந்தன் வீட்டில் மஞ்சள் அட்டை ஏறி வந்து விழுகுதப்பா கண் விழித்து பார்க்கையிலே சிவப்பு அட்டை நிக்குதப்பா... எங்கு போய் ஒளிவதப்பா...? எனக்கு வழி தெரியவில்லை எறி வள்ளம் ஓடிவிட எல்லைக்கது போனேனப்பா... அங்க வைத்து என்னை ஜயா பிடிச்சிழுத்து வந்தாங்கப்பா... எங்கள் மண்ணை காத்து விட எம் படையில் இணைந்து விடு... காலமதின் கட்டளையை கண்ணா நீயும் ஏற்றுவிடு தோளின் மேலே சுடுகளனை சுமந்து நீயும் நடந்து விடு... எல்லைக்கின்று போய் நீயும் எங்கள் நாட்டை காத்துவிடு எத்தனை காலம் எம் மண்ணில் அடிமையாக நீ இருப்பாய்...??? உன் உரிமை காத்து விட உன் உயிரை விட்டு விடு எங்கள் ஈழம் மலர்ந்து விட எங்கள் களம் வந்து விடு..…
-
- 13 replies
- 2k views
-
-
புலிப்படை வீரர் இருக்கிறார் – அவர் எங்கும் எதிலும் இருக்கிறார் புலிப்படை வீரர் இருக்கிறார் – அவர் எதிலும் எங்கும் இருக்கிறார் கடலினில் தரையினில் காட்சிகள் நடத்துறார் வானத்தில் எதிரியின் கதையை முடிக்கிறார் புலிப்படை வீரர் இருக்கிறார் – அவர் எங்கும் எதிலும் இருக்கிறார் வாகரை மண்ணில் இருக்கிறார் – அவர் பற்றியில் இன்னும் இருக்கிறர் கோணமலையிலும் இருக்கிறார் – திருக் கேதீச் சரத்தில் இருக்கிறார் கொழும்பில் இருக்கிறார் காலியில் இருக்கிறார் கொடும்பகை இதயத்தில் குண்டுகள் வெடிக்கிறார் விலைகளை விண்மண் ஆக்குறார் – பங்கு விலைச் சுட்டெண்ணில் இருக்கிறார் (புலிப்படை) நிலத்தில் நிலையாய் இருக்கிறார் – இவர் நலமாய் நாட்டை நடத்துறார் கடல…
-
- 2 replies
- 1k views
-
-
-
தோரண வாயில் எல்லாம் விளம்பர விசாரிப்புகள் வெள்ளை கோபுரம் வண்ணமேற்றி கொண்டுள்ளது கருங்கல் தூண்கள் பளிங்குப் போர்வையில் பதுங்கிவிட்டன தொன்னையில் சிரித்த பொங்கல் நயிலான் பையில் அழுகின்றது அர்ச்சகரெல்லாம் நகைக்கடை ஒப்பனைகளாய் சாமி சயனத்தில் இருப்பதால் சந்திக்க இயலாதாம் ஏமாற்ற் வெளினடப்பில் எதிர்ப்பட்ட சிறுவன் ஏந்திய கையில் இருந்த இறைவன் கேட்டான் “இங்கு விடுத்து எங்கு தேடினாய் என்னை” என்று
-
- 7 replies
- 1.4k views
-
-
என் காதலை உன்னிடம் சொன்னபோது உன் இதயம் வெற்றிடமாக இல்லையென்றாய், உன் இதயக் கோயிலில் குடியிருக்கும் குபேரனை நினைத்துப் பொறாமைப்பட்டேன், அவனைவிட அதிஸ்டசாலி இருக்கமுடியாதென்று. அப்புறம்தான் அறிந்துகொண்டேன் உன் இதயம் ஒரேயொரு ஆண்டவனுக்குரிய ஆலயமல்ல, பல குடியிருப்பாளர்களைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பென்று. ஆறுதலாக வீடு தேடிய அதிஸ்டசாலி இப்போது நான்தான்.
-
- 1 reply
- 915 views
-
-
மலர்களிலே குருதி மணக்கிறது, நாளை அவைகள் குண்டுகள் காய்க்கலாம் வன்டுகள் இப்பொழுதெல்லாம் தேன் குடிப்பதில்லை - அவை குருதி குடிக்கப் பழகியதால் துப்பாக்கிகளையல்லவா காதலிக்கின்றன. காற்றில் உயிர்கள் மிதக்கின்றன அவை பலாத்காரமாக பறிக்கப் பட்டதனால் உரிய இடம் சேராமல் காற்றில் மிதந்து அலைகின்றன. நாளைகளில் ஊர்கள் இருக்கும் புல் பூண்டு, மிருகம், பறவைகள் எல்லமே இருக்கும் மனிதனைத் தவிர..............
-
- 15 replies
- 2k views
-
-
ஆகாயக் கூரையின் கீழ் அலைபாயும் நினைவுகளை அலையவிட்டு அலையவிட்டு ஆனசுகம் தேடுகின்றேன். காயம்பட்ட நினைவுகளை கண்ணீரில் தோய்த்தெடுத்து நாளைவரும் தலைமுறைக்கு நல்லகவி பாடுகின்றேன். தண்ணீரில் துன்பம் கரையாது என்றே கண்ணீரில் மையெடுத்து கவியெழுதப் பார்க்கின்றேன். மேகம்போல் நெஞ்சில் முன்னோடும் நினைவுகளை முன்னிறுத்தி முன்னிறுத்து முகவரியை தேடுகின்றேன். முன்நிலாக் காலத்தில் - என் முதிராத பருவத்தில் கண்டதெல்லாம் கனவாமோ ? கண்டறியத் துடிக்கின்றேன். இந்தநிலாக் காலத்தில் யாருமில்லா பக்கத்தில் அந்தநிலா ஒளியெறிந்து - என்னை விளையாட அழைக்கிறதே. உள்ளசுகம் அத்தனையும் அடைந்துவிடத் துடித்தாலும் வந்ததெல்லாம் வலி…
-
- 2 replies
- 998 views
-
-
அம்மா மூக்குவழி நீருகுக்க வைக்கும் இந்த முன்பனிக் காலம் இதயமாயில்லை. காதுமடல் களவாடிச் செல்லும் பைன்மரக்காடுகளின் ஊதற்காற்று துன்பம் தருகிறதம்மா! என்னிலும் சற்று வெளிறியவன் ஏவலிட்டான். மாதக் கடைசியை மனம்கொண்டு தேய்த்ததில் பாத்திரங்கள் போலத்தான் கைகளும் வெளுத்துப் போயின. என்ன குறையென்று நேற்றென் நண்பன் கேட்டான். ஏதுமில்லைத்தான் சொல்லுதற்கு. ஆனாலும் ஆனாலும் உறுத்துகிறது ஏதோவொன்று கவளம் சோற்றில் கடிபட்ட கல்லாய். அம்மா! நானும் அப்பா போல் பெரியவனாகி விட்டேன் அப்பாக்கு அறுபத்தாறில் அடங்காதென்ற "நாரிப்பிடிப்பு" உன்மகனுக்கு இருபத்தாறில். இங்கு பருவங்களில் ஒன்றாம் வசந்த க…
-
- 8 replies
- 1.4k views
-
-
நண்பர்களே! தமிழீழ தேசிய கீதத்தை எழுதும் போட்டியொன்றை விடுதலைப்புலிகள் அறிவித்திருந்தமை நீங்கள் அறிந்திருக்கக் கூடியதே. இது வரை அப்படி ஒரு தேசிய கீதம் இயற்றப்பட்டதாகவோ யாரும் பரிசு பெற்றதாகவோ நான் அறியவில்லை. இங்கு கவி வடிக்கும் பல கவிஞர்களின் திறமையையும் கண்டு வியந்த நான் ஏன் நீங்கள் அதற்கு முயற்சி செய்யக்கூடாது என்று கேட்கிறேன்? தமிழீழ தேசிய கீதம் மிக எளிமையான சொற்களால் ஆனதாக இருக்கவேண்டும். ஆக, இது வரை நாம் அறிந்த இலகுவான தமிழ்ச் சொற்களின் கோர்வையே தமிழீழ தேசிய கீதமாக மலரப்போகிறது. ஆனால், அது எதைச் சொல்லப்போகிறது, சொல்ல வேண்டும் என்பதே கேள்வி. எனவே, பல்வேறு நாடுகளின் தேசிய கீதங்களையும் தமிழில் சேகரிப்போமென ஒரு முயற்சியைத் தொடங்குகின்றேன். சேகரிக்கப்படும் …
-
- 12 replies
- 4.8k views
-
-
-
அலங்காரக் கந்தனே ! அஞ்சற்க, என்று அறிவித்த பொருளே!! அஞ்சுக அருகில் வந்திருப்பது பேய்களென்பதை அறிக!! வங்காளப் பேய்களுடன் கூடிநின்ற "பெருமாளின்" பின்னவர்கள் , மஞ்சள் துண்டுக்கே கழுத்தறுக்கும் கும்பல்கள் விடுதலை கேட்டு வயிறு வளர்க்கும் முகமூடிகள் ஜனநாயகத்தின் விபச்சாரிகள் எல்லாமே இப்போது உன்னருகில் வந்துள்ளன. குப்பையள்ளும் பதவி பெற்று குப்பையெல்லாம் உன் தெருவில். எப்படி முருகா நிம்மதியாய் உறங்குகின்றாய்? உன் கழுத்தில் உள்ளவற்றில் தங்கத்தை அகற்றிவிடு. இல்லையென்றால் ... உன் கழுத்தும் களவாடப்படலாம். வேலெடுத்த வேலவனே ! வேலை விட்டெறி - உன் பன்னிரு கரங்களில் ஒன்றால் "ஆட்லெறியை" கையிலெடு!! பதினொரு க…
-
- 6 replies
- 1.5k views
-
-
'' போராட போ'....'' எம் தமிழா ஏனழுதாய் என்று கொஞ்சம் எண்ணு விளங்கி விட்டால் எம் படையில் வந்துயின்று நில்லு... உந்தன் முன்னால் நிக்கும்- பகை வந்துயின்று கொல்லு- எங்கள் உரிமை போரில் வந்து நீயும் பங்கெடுத்து நில்லு.... அன்னை மண்ணை ஆளவந்தான் அடித்தவனை கொல்லு அந்த பகையை அழித்திடவே போர்களமே செல்லு.... துரத்தி வந்த பகையவனை துரத்தி நீயும் கொல்லு- நீ ஈழ மண்ணின் மைந்தனென்றால் இன்று அதை செய்யு.... பாத்திருந்த போதும் நீயும் பங்கெடுத்து நில்லு - அந்த பல்லிழித்த காலமதை இன்றுடனே வில்லு.... உன்னடிமை நீ உடைக்க உரிமையுடன்; செல்லு அந்த புனித போரில் பங்கெடுத்து இன்று நீயும் வெல்லு.... அன்னை மண்ணை ஆள வந்தான் அடித்தவனை…
-
- 4 replies
- 1.3k views
-
-
குண்டு மழை பொழிந்து குருதி ஆறு காணும் ஈழம் ஈன்றெடுத்த என் இனிய சிநேகிதியே உறவு தேடி வந்தாயா இல்லை உதவி தேடி வந்தாயா நம் மொழி பேசிய மக்கள் நம்மொடு இல்லையடி அமெரிக்க ஆங்கிலம் அழகாகப் பேசுவேன் தாய் மொழி கேட்டால் பேய் விழி விழிப்பேன் மென்பொருள் உறவில் மெய்ப்பொருள் மறந்து வீறுநடை போடும் சீறுடைப் பிணமடி நான் அடுக்குமாடி குடியிருப்பின் அங்கமாய் ஆறு மாத குழந்தை அப்பா என் முகம் பார்ப்பது தப்பாது இரவு பத்து மணி அவள் அம்மாவை பார்ப்பது அரை மணி நேரம் முன்னதாக அச்சடித்த காகிதத்தின் அவசர தேவைக்கு அகுறிணை யாகிப்போன உயர் திணையடி நான் திரைப்படம் இல்லையென்றால் திகட்டாது என் வாழ்க்கை நாளொரு "தினம்" கொண்டாட வேண்டும் …
-
- 9 replies
- 1.6k views
-
-
-
உனக்காய் காத்திருந்து நிலவுகூட பகலில் வந்து விட்டது பகல் நிலவாய் இன்னும் நீதான் வரவில்லை காக்க வைப்பதில் உனக்கு அவ்வளவு சுகமா அதைவிட சுகம் உனக்காய் காத்திருப்பதில் உன் வருவுக்காய் எதிர் பார்த்திருந்தால் நீ வரும் பாதைகூட உன்னை போல் அழகாக வெக்கப்படுகிறது உனக்காய் காத்திருந்து இறந்துபோக ஆசைதான் உனக்காக கவிதைகள் பிறக்காமல் போகுமென்றால் உனக்காய் காத்திருந்து நான் வாடிப் போகவில்லை என் கவிதைகளுக்குத்தான் தாடி முளைக்கிறது நீ தாமதமாய் வரும்வரை எப்படி சமாளிபேன் என் கவிக்குழந்தைகளை ஒவ்வொன்றும் அம்மா வேணும் என்கிறது என்னைக் காக்க வைக்க வேண்டும் என்பதற்காக தயவு செய்து வராமல் விட்டு விட்டாதே என் பேனா ஒரே நாளிளே இறந்…
-
- 4 replies
- 1.5k views
-
-
தூரம் அதிகமில்லை துயரம் இனியுமில்லை கைகட்டி நிற்பதனால்.. தமிழன்கை சோரவில்லை பொறுமையைக் காப்பதனால் பொறுப்புணர்வு மறையவில்லை.. நூறாண்டு இழப்புகள் தேடித்தரப்போவதை.. ஓராண்டு இழப்பால் உருக்குலைத்தல் விவேகமில்லை தலைவர் வீரத்தை தரம் பேசும் தகுதி தரணியில் எவர்க்குமில்லை உறவைப்பிரிந்த உயிர் உரம் கண்டதேயொழிய சோரவில்லை வீரம் மாறவில்லை மக்கள்வரிப்பணத்தால் மகிந்த கந்தக அரிவாள் செய்து தமிழனை அரிவதற்கு.. துணைபோகும் இனத்துரோகியர் வாழ்நாட்கள் நீளமில்லை கீபீர் போட்ட குண்டுகள் கிண்டிய குழிகளில் எங்கள் வயலுக்கு நீர் வார்க்கும்- சிங்களவன் பறித்த உயிரெல்லாம் போராளி ஆன்மாவில் புகுந்து உரம் சேர்க்கும்.. எரிந்த கொட்டில்கள்.. அடுக்குமாடி…
-
- 11 replies
- 2.2k views
-
-
நமக்குள் போர் நிறுத்த ஒப்பந்தம் வேண்டாம் நமக்குள் சமாதான ஒப்பந்தம் செய்து கொள்வோம் அப்படியென்றாலாவது சமாதான மீறல் புரிகிறாயா என்று பாப்பம் நான் குடிக்கவேயில்ல இருந்தபோதும் குடிகாரனாய் நடிக்கிறேன் உன்னை பேசவைக்க வேண்டுமே என்ன தவம் செய்ததோ என் வார்த்தைகள் உனக்காய் கவி எழுதுகையில் மெய் எழுதுக்களும் உயிர் பெற்று விடுகின்றது மழை விட்டது உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும் இருந்தும் என் குடைக்குள் இன்னும் நீ கோவம் வரும் போது உன்னை நினைக்க சொன்னாய் வராத போதும் உன்னை நினைத்தேன் இப்ப என்னை நினைப்பாயோ யாழ்_அகத்தியன்
-
- 5 replies
- 1.5k views
-
-
கறுப்பு ஆடியின் வலிகள் கருவிலே உரிமைக் குரல் கொடுத்து சாவிலும் வாழ்கிறோம் உலகத்தின் இதயத்தில் ஈழத் தீபம் ஏற்றுவோம்! திரும்பத் திரும்ப வந்து புன்னகைக்கும் துயரத்தில் உயிர் கொதிக்கவும் உதிரம் கொதிக்கவும் குளிர்க் கூட்டிலே வலிகள் சுடச் சுட வாழ்க்கை தொடர்கிறது! கண்ணீர்த் துளிகள் விழிகளில் வழிகிற காலம் போய்... கண்ணீர்க் கட்டிகளாய் உதிரம் கொட்டுகிற கலி காலமிது! கருவறையில் இருந்து கனத்த குரல் ஒலிக்கிறது. "அம்மா நான் தலையோடு பிறக்கவா? இல்லை... தலையில்லாமல் பிறக்கவா?" எப்படிப் பிறந்தாலும் என் இறப்பு என்னவோ தலையில்லா முண்டாமாகுமே! நான் வரவா கருவிலே கரைந்து போய்விடவா? இன்னும் இன்னும் மனிதக் குருதி நிரம்ப…
-
- 1 reply
- 814 views
-
-
தில்லைநடராஜன் வாசற் திருப்படியில் தொல்லையம்பலங்கள் ஆடுகிறார் திருக்கூத்து எல்லைகடந்துவிட்ட பித்து நிலைபோலும் கல்லைக் கடவுளென்று தம் தேகத்தையாட்டுகிறார். பாலைக்குடித்த பிள்ளை யாரென்று மாலையெதிர்பார்த்து மேடையிலே நின்றமகன் சால்வை போனவிடம் தானுமறியாமல் சதுர்கூத்து ஆடிவிட்டான்; சிவனடியானாகிவிட்டான். கனியாக் காதலுக்கு அடிக்கின்ற புகையிதுவோ? கடவுள் வரமருளி ஆடுகின்ற கூத்திதுவோ? செப்படி வித்தைக்கு சிவனில்லம் சத்திரமோ ? மூளைப்பிசகுக்கு கலையாட்டம் மருத்துவமோ? - தயா ஜிப்ரான் -
-
- 1 reply
- 1.2k views
-
-
கூடினார்கள் எரித்தார்கள் கலைந்தார்கள் சனீஸ்வரர்களுக்கு எள்ளெண்ணெய் வைத்ததில் பூசகர் இல்லம் புனருத்தாரணம் பெற்றது. ------------------------------------- கறிவேப்பிலை, பன்னக்குழை தேங்காய்ப் பொச்சு இவைகடந்து தீச்சட்டி, தீவட்டி, வேப்பிலை, சாணகம் வளர்தொழிலாய் தமிழர்களின் ஏற்றுமதி வியாபாரம். - தயா ஜிப்ரான் -
-
- 1 reply
- 942 views
-
-
ரோஜாக்கள் ஏனடி ரோஜாக்கள் முத்தமாய் தந்துவிடேன் என் மொத்த ஆயுளுக்குமான உந்தன் பரிசை. - தயா ஜிப்பரான் -
-
- 1 reply
- 882 views
-
-
அன்பினில் விளைந்த ஆசை ஆசையை மறைத்த நாணம் இச்சை அறியா நேசம் ஈகம் செய்யும் உழைப்பு உண்மைக்கு வருகின்ற கோபம் ஊமையாய் ரசித்த காதல் என்னிலும் மேலான நாணம் ஏழ்மையில் சிரிக்கின்ற வேதம் ஐயம் எழுந்திட்ட போதும் ஒரு பக்கம் சாரா நீதி இத்தனை இருந்திட்ட போதும் ஊமையாய் விலகியேன் போனாய் இங்கு நான் என்னதானேன் - மழை ஈசல் போல் சிறகினை இழந்தேன்- - தயா ஜிப்ரான் -
-
- 1 reply
- 1k views
-
-
முகம் தேடும் முகவரிகள். ஈழத்தின் வாசலே இந்தியத் தாய் மண்ணே! உயிரிங்கு உருகி நிற்கும் என் வணக்கம் உந்தனுக்கு! உறவுகளும் தோழருமாய் மகிழ்ந்திருந்த என் பூமி மயான பூமியான செய்தி நீ அறிந்திருப்பாய்! ஐந்தாட்டுத் திட்டம் என போட்டுவைத்த போர் நிறுத்தம் கடந்து இரண்டு நாட்கள் காற்றோடு போயாச்சு! ஐந்தாண்டும் நாம்பட்ட இன்னல் ரணம் அறியாயோ? தமிழ் உயிர்கள் மலிந்த நிலை தமிழகமே அறியாயோ? வியர்வை சிந்தி உழைத்த மண்ணில் தமிழ் இரத்தம் சிந்திக் கிடக்கிறது!. பயிர்கள் விளைந்த பூமியெங்கும் தமிழ் உயிர் விதைத்துக் கிடக்கிறது! தமிழரின் வாசல் எங்கும் "கண்ணி'வெடிக் கோலங்கள் எங்களின் வீதியெங்கும் கண்ணீரின் ஓலங்கள்! ஒரே…
-
- 1 reply
- 852 views
-