கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
ஜாதிகளும்.... மதங்களும்..... தூக்கிப் பிடிக்கும் கொடிகளாகிவிட்ட பின்னர், "ஜனநாயகம்" என்ற போலிச்சாயம் பூசிய அழுக்குத் துணிகளுக்கு, ஏன் வெள்ளைச் சிறகுகள்....???????
-
- 0 replies
- 960 views
-
-
"கருப்பு பூனை குறுக்கே பாய" "கருப்பு பூனை குறுக்கே பாய கருப்பாயி கலங்கி பயணம் நிறுத்த மருண்டு அருண்டு எலி பதுங்க வெருண்டு வெறுத்து பூனை பார்க்குது!" "கருப்பு காகம் முற்றத்தில் கரைய கருப்பாயி வாசல் கதவு பார்க்க கருப்பன் வரும் நம்பிக்கை துளிர நெருப்பு மனது எரியுது தவிக்குது !" "கருப்பு விழிக்கு விக்கல் வர கருப்பன் இவள் நினைவோ என வருடி அழுத்தி நெஞ்சை இளக்க இருந்த விக்கல் மறையுது போகுது!" "கருப்பு பல்லி தலையில் விழ கருப்பாயி நெஞ்சம் பதைத்து துடித்து கருப்பன் என்ன ஏதோ என ஒரு தீபம் கொளுத்துது காட்டுது!" "கருப்பு இருட்டில் சென்ற கருப்பன் வெருண்டு அலைந்து வீடு திரும்ப குருட்டு பிசாசு ப…
-
- 0 replies
- 208 views
-
-
தமிழ் பெண் கவிஞர்கள் – ஆங்கிலத்தில் – ஆதி மந்தியார் முதல் உமா மஹேஸ்வரி வரை - வெங்கட் சாமிநாதன் சில ஆச்சரியகரமான நிகழ்வுகள் இன்றைய தமிழ்ச் சூழலில் கூட நிகழ்ந்துவிடுகின்றனதான். இவையெல்லாம் நாமறிந்த தர்க்கத்தின் வட்டத்திற்குள் அகப்பட்டு விடுவதில்லை சங்க காலத்திலிருந்து இன்றைய உமா மகேஸ்வரி வரை,, ஒரு வேளை இவர்களில் மிக இளம் வயதினராக லீனா மணிமேகலையோ அல்லது அ.வெண்ணிலாவோ இருக்கக் கூடும். ஆக கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருட நீட்சியில் தமிழ் கவிதைக்கு பெண் கவிஞர்களின் பங்களிப்பை நம் முன் வைத்துள்ளார் கே.எஸ் சுப்ரமணியன். கடந்த சில ஆண்டுகளாகவே அவர் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தி வருகிறார். பத்து வருடங்களுக்கு முன் நான் சென்னை வந்ததும் எனக்கு அறி…
-
- 0 replies
- 1.5k views
-
-
காத்திருக்க வேண்டாமே ! --------------------------------- துவளாத தமிழினமாய் துடிப்புடனே நீ நடந்து உலகத்தை நீ வென்று உயர்வடைய எழுச்சி கொள்வாய் ! புலம்பெயர் தேசமெங்கும் பதியமாய் நீ இருந்தே உதயத்தைக் காண்பதற்கு உறுதியுடன் நீ எழுவாய் கடுகதியாய் ஓடுகின்ற காலமொன்று விரைவாகும் களம் மாறும் வேளை வரை காத்திருக்க வேண்டாமே ! இவ்வண்ணம் நொச்சியான்
-
- 0 replies
- 856 views
-
-
அம்மா,, நான் உன் கருவறையில் உதைத்தது உன்னை நோகடிக்க அல்ல,, என்னை சுமக்கும் அன்பானவள் உன்னைக்கானவே.. பிஞ்சு வயதில் நான் கெஞ்சலாக அழுதது பசியினால் அல்ல,, பால் குடிக்கும் சாட்டில் உன் இதயத்தை முத்தமிட.. பள்ளிக்கு செல்லும் போதும் அழுதேன் அம்மா படிக்கும் கள்ளத்தால் அல்ல சில மணிநேரம் உன்னை பிரிகிரேனே என்ற துடிப்பால்.. திருமணத்தில் நான் அழுதேன் காதலில் தோற்றுப்போய் அல்ல,, கல்யாணம் உன்னிடத்தில் இருந்து என்னை பிரிக்குமோ என்ற பயத்தால்.. வெளிநாடு போகும்போதும் அம்மா நான் அழுதேன் உன்னை பிரிவதால் அல்ல பசியால் நான் அழுதபோது நீ பசிகிடந்து உன் கண்ணீர் மறைத்து என்னை காத்த தெய்வமே உன்னை நான் காக்கும் காலம் இதுவென்ற…
-
- 0 replies
- 794 views
-
-
"இலக்கணம் படிக்க ஆசை பட்டேன்" "இலக்கணம் படிக்க ஆசை பட்டேன் இலத்திர ஊடகத்தில் தேடி அலைந்தேன் இணங்கி ஒருவள் மனு போட்டாள் இயைபு கொண்டு நானும் வரவேற்றேன்" "இசை போன்ற அழகிய பேச்சில் இடைவெளி விட்டு தள்ளி அமர்ந்து இறைவி நேரே வந்தது போல இதயம் மகிழ பாடம் தொடங்கினாள்" "இலக்கியம் கொஞ்சம் எடுத்துக் காட்டி இரு வரி திருக்குறள் கூறிக்காட்டி இயல் இசை நாடகம் சொல்லிக்காட்டி இயற்றமிழ் தொல் காப்பியம் இயம்பினாள்" "இரட்டைக் கிளவி பயிற்சி தந்து இலக்கணம் ஐந்துக்கும் விளக்கம் கூறி இடைச்சொல் கூறி கயல் விழியாள் இடை வளைவு குலுங்க புன்னகைத்தாள்" "இலக்கியம் சொல்லா குறுநகை அழகில் இதயம் பறிகொடுத்து கிட்ட நெருங்க இளமையும…
-
- 0 replies
- 111 views
-
-
கார்த்திகைப் பூக்கள் உங்களுக்காய் பூத்து நிற்கும்.... கவிதை- இளங்கவி எங்கள் மக்களின் அவலத்தில் எங்கள் வீரர்களை மறந்தோமா..? மாவீரர் ஆகி விட்ட எங்கள் புலிகளை மறந்தோமா...? ஆழிப்பேரலை போல் அழித்தவண்ணம் வந்தவனை சிறு மண்மேடாய் நின்று தடுத்தவரை மறந்தோமா..? சுற்றிவிழும் எறிகனைகள் நெருப்பு கக்கிவரும் பீரங்கிகள் காற்றுப் போல் சன்னங்கள் கழுகு போட்ட கொத்தணிகள் கருக்கிவிடும் வாயுக்கள் பொஸ்பரசின் பொசுக்கல்கள் இத்தனையும் தாங்கி எரிமலையில் நின்றுகொன்டு தன்னுயிர் போக முதல் ஒவ்வொரு தமிழரையும் காத்த எங்கள் கருங்கல்லு மலைகலை கனவிலும் நாம் மறப்போமா...? வேங்கைகள் பலருடனும் வீழ்ந்த பல விரத்தளபதிகள்... எங்கள் மக்களுக்காய் மடிந்த இ…
-
- 0 replies
- 719 views
-
-
ஈனக்குரல் - தேவஅபிரா அலையிழந்து அடங்கியகடல் ஆடையிழந்து கூடாகிய உடல் நிலைகுலைந்து நின்றது நீயும் நீ அவளில்லை. அவள் நீயில்லை. எவளில்லை நீ? எவளென்றாலும் கறைபடிந்த உள்ளாடையுடன் காத்திருப்பர். கூடு கலைந்து ஒடியநாளில் கைவிடப்பட உயிர்களிடம் எஞ்சியிருந்தவற்றைக் காவி வந்தவர்கள் எவருமில்லை படிமங்கள் ஆயிரம் புனைவுகள் கோடி போரையும் வாழ்வையும் சொல்ல முடிந்த கவிஞர்கள் இங்கில்லை. யாரையும் நோகாது செல்லக் காற்றுக்கு முடியும்; கண்ணீருக்கு முடியாது. பெண்ணே நீ நின்ற கடல் சேறானது. உன்னைக் கைவிட்ட காலம் ஊனமானது. செய்யாதன செய்த அவன் அரியாசனம் பற்றி எரிகவென்று அறம்பாடச் சொல்வறண்டு போன கவிஞனடி நான். பொன்னே பொய்வாழுதடி போடி போன இலட்சம் உயிர்களோ…
-
- 0 replies
- 508 views
-
-
நண்பர்களே நான்தேடும் பாடல் உங்களிடம் இருக்கிறதா அல்லது எங்கு தரவறக்கம் செய்யலாம். இன்று என்னிடம் ஒரு நண்பர் பாடல்கள் சிலவற்றை போட்டு காட்டினார் அவையனைத்தும் தமிழில் பிரசித்தி பெற்ற சினிமா பாடல்களின் உல்டா மிகவும் நகைச்சுவையாக இருந்தன நாதம்.கொம்மில் தரவிறக்கம் செய்ததாக கூறினார் ஆனால் இப்பாடல்கள் தற்போது அங்கு காணமுடியவில்லை உங்களில்யாருக்காவது தெரியுமா சுறுளியின் குரலில் கேட்கவே மிக நகைச்சுவையாகவிருக்ம்.
-
- 0 replies
- 861 views
-
-
யாரது ? இலக்கத் தகடுகள் அடையாளம் சுட்ட குற்றவாழிகளாய் தனித்தனி அடையாளங்களுடன்..... தெரிந்த முகங்களைத் தேடிக்கொண்டு போனதில் அவள் திடீரென ஞாபகத்துக்குள் வந்தாள் பின்னே ஓடியவரிசை முன்னிழுந்துப் பார்த்து உறுதியாகிறது அவள் தான் அது.... மணியாய் ஒலித்த குரல் மறக்காத குரலுக்குரிய மொழி மண்தரையில் ஒலிவாங்கியோ ஏதோ இருமருங்கும் தடுத்திருக்க ஏதோ சொல்லிக் கொண்டிருக்கிறாள் . செஞ்சோலைக் குழந்தைகளின் சித்தியாய் சிறந்த பாடகியாய் தோழமையின் ஆழமாய் அறிமுகமானவள்...... மூச்சு முட்ட சுதந்திர தேசக்கனவோடு களங்களில் நின்று காவியச் செதுக்கலில் தன் கடமைகள் செய்தவள்..... இன்று..., எல்லாம் எல்லாருமாய் ஆட்தேடும் வரிசையில் அவளும்…
-
- 0 replies
- 963 views
-
-
புதைத்த இடத்தினிலே புழுதி அடங்கவில்லை விதைத்த வித்துடலில் குருதி காயவில்லை அதற்குள் சிதைத்த கல்லறையில் சிலிர்த்து நிற்குமெங்கள் ஆவி ஈழம் மீட்டெடுத்து தமிழ் இனத்தின் மானம் காக்கவென மார்தட்டி வா தமிழா எம் கல்லறையில் சத்தியம் தா தமிழா.. http://www.tnrf.co.uk/2010/11/05/%E0%AE%95%E2%80%8C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E2%80%8C%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E2%80%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E2%80%8C%E0%AE%AE%E0%AF%8D/
-
- 0 replies
- 545 views
-
-
சமீபத்தில் நடந்த பேஸ்புக் சந்த வசந்தக் குழுமத்தின் காணொளிக் கவியரங்கத்தில் இடம்பெற்ற கவிதை.
-
- 0 replies
- 661 views
-
-
போரடிக்கும் கருவி. எல்லாமே முடிந்து போனதாக இறுகிப்போனது மனசு. இருப்பினும் ஏதோவொரு தொடக்கத்தை நோக்கியே சஞ்சரிக்கிறது சிந்தனை. ஒவ்வொன்றிற்கும் ஒரு காலமுண்டு மௌனமாயிருக்கவும், பேசவும், பகைக்கவும், சிநேகிக்கவும். அதினதன் காலத்தில் அத்தனையையும் நேர்த்தியாக நகர்த்திச் செல்கிறது காலம். முந்தினதும் பிந்தினதுமாக சுழலும் காலத்தின் கைகளில் நானும் ஒரு போரடிக்கும் கருவிதான். 01.08.2015. தமிழினி ஜெயக்குமரன்
-
- 0 replies
- 2.8k views
-
-
நீ வந்து பேசுகையில் பூக்களுக்கு வருத்தம்தான். காற்றிலேயே தேன் குடித்து திரும்பி விடுகின்றனவாம் தேனீக்கள்!
-
- 0 replies
- 794 views
-
-
சிரிப்பு வாழ்க்கை பூட்டியே கிடக்கிறது சிரிப்புச் சத்தம் கேட்கும்போதெல்லாம் அது திறந்து கொள்கிறது வாழ்வின்மீது இயற்கை தெளித்த வாசனைத் தைலம் சிரிப்பு எந்த உதடும் பேசத் தெரிந்த சர்வதேச மொழி சிரிப்பு உதடுகளின் தொழில்கள் ஆறு சிரித்தல் முத்தமிடல் உண்ணால் உறிஞ்சல் உச்சரித்தல் இசைத்தல் சிரிக்காத உதட்டுக்குப் பிற்சொன்ன ஐந்தும் இருந்தென்ன? தொலைந்தென்ன? தருவோன் பெறுவோன் இருவர்க்கும் இழப்பில்லாத அதிசய தானம்தானே சிரிப்பு சிரிக்கத் திறக்கும் உதடுகள் வழியே துன்பம் வெளியேறிவிடுகிறது ஒவ்வொருமுறை சிரிக்கும்போதும் இருதயம் ஒட்டடையடிக்கப்படுகிறது சிரித்துச் சிந்தும் கண்ணீரில் உப்புச் சுவை தெரிவ…
-
- 0 replies
- 517 views
-
-
தமிழினமே.. தமிழினமே.. என் தமிழினமே.. விண்ணை விரல்நுனியில் சுமக்கவும் உயரே பறந்து வான்முட்டி நிற்கவும் என்றோக் கற்ற தமிழினமே... காலத்தை காற்றுப் போல கடந்துவந்துள்ளாய், உலகின் நாகரிகத்தில் உயிரெனக் கலந்துள்ளாய், ஊரின் பேரின் வாழ்தலின் இடுக்களில் மொழியாய் நிறைந்திருக்கிறாய் தமிழினமே... தமிழினமே... தமிழினமே... என் தமிழினமே... எங்கிருக்கிறாய் இன்று தமிழினமே.. யாருக்கு கீழ்நின்று உன் மூச்சை விடுகிறாய் யாரை நம்பிக் கொண்டு இன்னும் உனை யிழக்கிறாய்.. கடல் தின்றதில் கலங்காத நீ காற்றுப் புயலென வீசியதில் கலையாத நீ பூமி இரண்டெனப் பிளந்தபோதும் உள்ளடங்கிவிடாத நீ இப்போது எங்…
-
- 0 replies
- 584 views
-
-
அசையாத திலீபன்களும் அன்னை பூபதிகளும் கவிதை - இளங்கவி குட்டித் திலீபன்களாய் எங்கள் குமரர்கள் வீதியிலே கட்டிவத்தி விட்டதையா காளை இரத்தம் அவர் உடம்பினிலே..... அன்னை பூபதியாய் எங்கள் அம்மாக்கள் தெருக்களிலே அகிம்சை போராட்டம் குளிரிலே அமைத்த அந்தக் குடிலினிலே..... கொண்டகொள்கை மாறாது தங்கள் உயிர் பாராது தமிழினத்தின் விடியலுக்காய் தான் எரியும் மெழுகுகளாய் தங்கள் உடலெல்லாம் கசங்க கண்களும் பார்வை மங்க நீர்த்துளிகள் சிலகண்டாலும் நெல்லரிசி காணாமல் தமிழர் விடியலுக்காய் பல உயிர்கள் வேள்விகள் நடத்துகின்றார்...... பரமேஸ்வரன் இன்றும் மரணத்தை பார்த்தவண்ணம் நடக்கின்றான் பாதையது தவறாமல் தன் லட்சியத்தை தொடர்கின்றான் வேதனை வி…
-
- 0 replies
- 572 views
-
-
பாவேந்தரின் 131 பிறந்தநாள் இன்று 60 Views பாவேந்தரின் 131 பிறந்தநாள் இன்று ************** கம்பீர தோற்றம், கர்வமில்லா போர்குணம், எழுத்தின் வீச்சு, எரிமலையாய் வெடிக்கும், பகுத்தறிவு பாதையில் சாதிகளை நொறுக்கும், பெண்ணடிமை வேரறுத்து பேரருமையின் உச்சம், பேச்சில் இடி முழக்கம், சமத்துவ பாதையில் கர்ஜித்தக் குரல், விதவை மனம் ஏற்பு, மனுதர்ம கழுத்தறுப்பு, ஏற்றத்தாழ்வு இடிப்பு, சமத்துவமே இவரின் உயிர்த்துடிப்பு, அடிமை விலங்கை உடைத்தெரிந்த ஆயுத நெருப்பு, ஆரியத்தின் தோலை உரித்த …
-
- 0 replies
- 573 views
-
-
தியாகம்.. கார்த்திகை பூ எடுத்து வாடா.! கல்லறைக்குள் துயிலும் கண்மணிகள் காலடியில் போட்டுப் போடா...! இனம் வாழ இவர் செய்தார் தியாகம்.! இவர் எண்ணம் வாழ நாம் செய்வோம் யாகம்.! உறவுகளுக்காய் உயிர் கொடுத்த உத்தமரே..! உங்கள் 'உயிர்விலைக்கு' எது இங்கே ஈடாகும்? உமைக்கருவில் சுமந்த தாய் வயிற்றில் நெருப்பெரியும்..! அந்த நெருப்பினில் விடுதலைத்தீ மூண்டெரியும். ஆறடிக்குள் துயிலும் அற்புதங்களே-எங்கள் ஆணிவேரான ஆலமரங்களே..! வாழ்ந்தாலும் ம(வ)ரமாக... வீழ்ந்தாலும் விதையாக மாவீரன் மறைவதில்லை மாவீரம் அழிவதில்லை ஆண்டுக்கொருமுறையா உமை நினைக்கிறோம் இல்லை தீயெரியும் தேசத்தில் தினம் தினம் உம் நினைவும் சேர்ந்தெரியும். கல்லறைக்கு வருக…
-
- 0 replies
- 2.1k views
-
-
நன்றி முகநூல். நன்றி முகநூல். (படத்தில் அழுத்தி.. பெரிதாக்கியும் வாசிக்கலாம்.)
-
- 0 replies
- 2k views
-
-
-
முள்ளிவாய்க்கால் பரணி! 01 கால்கள் எதுவுமற்ற என் மகள் தன் கால்களைக் குறித்து ஒருநாள் கேட்கையில் நான் என்ன சொல்வேன்? அவர்கள் கூறினர் யுத்தம் ஒன்று ஓர் இனத்திற்கு எதிராக நடக்கவில்லையென ஒருவரும் கொல்லப்படவில்லையென யுத்தமென்றால் ஆட்கள் இறப்பது இயல்பென அவர்கள் கூறினர் ஒரு ஐயாயிரம் பேர் இறந்திருக்கலாமென யுத்தத்தில் நிறையப் பேர் இறந்தை ஒப்புக்கொள்கிறோமென பின்னர் கூறினர் போராளிகளே மக்களைக் கொன்றனரென பின்னர் கூறினர் படைகளால் சனங்கள் கொல்லப்பட்டதை ஏற்கிறோமென இறுதியில் சொல்லினர் யுத்தம் போராளிகளுக்கு எதிரானதென எமை மீட்கும் யுத்தமென்றனர் மீட்பு என்பது இருதயங்களை கிழித்தலா? மனிதாபிமான யுத்தமெ…
-
- 0 replies
- 910 views
-
-
[size=3][size=4]உலகின் எந்த ஒரு இனமும்[/size][/size] [size=3][size=4]கருணைக்காக இவ்வளவு காலமும் ஏங்கி இருக்காது . உலகின் எந்த ஒரு இனமும் சுதந்திரத்திற்காக இவ்வளவு வாதைகளை தாங்கியிருக்காது.[/size] [/size] [size=3]உலகின் எந்த ஒரு இனமும் வாழ்தலின் பொருட்டு இவ்வளவு இழப்புகளை எதிர்கொண்டிருக்காது. [size=4]உலகின் எந்த ஒரு இனமும் சர்வதேசத்தால் இவ்வளவு தூரம் புறக்கணிக்கப் பட்டிருக்காது. உலகின் எந்த ஒரு இனமும் தன் இனத்துரோகிகளால் இவ்வளவு அபத்தமாக காட்டிக் கொடுக்கப்பட்டிருக்காது. உலகின் எந்த ஒரு இனமும் இறையாண்மையின் பெயரால் இவ்வளவு கொடூரமாக கொன்றொழிக்கப் பட்டிருக்காது. . பக்கத்தை வெளியிடு உலகின் எந்த …
-
- 0 replies
- 674 views
-
-
“ஏழடி நடந்தாய் ஏழாயிரம் கனவு கண்டாய்" "ஏழடி நடந்தாய் ஏழாயிரம் கனவு கண்டாய், தாளடி தொழுதாய் பல்லாண்டு வாழ்க வென ஓரடி ஈரடி மூவடி என வாழ்வில் அடிவைத்து சீரடி பாவில் அம்மாவென சிறப்படி வைத்தாய்" "ஆறடி சேலையில் அழகாய் தொட்டில் கட்டி, காலடியில் வைத்து முத்துகளை வளர்த்து எடுத்தாய் ஈரடி திருக்குறளை இதயத்தில் ஏற்றி வைத்து, வாழையடி மரபை பெருமையாக பேணி காத்தாய்" "வேரடி கேட்டோர் விழியடி விரித்து நிற்க சொல்லடி கொடுத்து தலை நிமிர வழிசமைத்தாய் ஏனடி போனாய் ஏகாந்தமாய் எம்மை விட்டு, யாரடி எம்மை அன்பாய் இனி பார்ப்பார்?" (கந்தையா தில்லைவிநாயகலிங்கம் …
-
- 0 replies
- 128 views
-
-
காதல் வானம் இறுவட்டுக்கு தமிழகத்தில் இருந்து கிடைக்கப் பெற்ற மூன்று வேறுபட்ட விமர்சனங்களை இங்கே யாழ்கள உறவுகளுக்காக பதிவு செய்கின்றேன். நீங்கள் படித்துவிட்டு ஒரு இறுவட்டை வாங்கிக் கேட்டால் எங்களுடைய அடுத்த படைப்பை உருவாக்க பெரிய உதவியாக இருக்கும். நன்றியுடன் வசீகரன்-வி.எஸ்.உதயா கண்ணீர் தேசத்தின் 'காதல் வானம்'! -15.09.2008 http://thatstamil.oneindia.in/movies/speci...usic-album.html இலங்கை கவிஞர்கள் யாராக இருந்தாலும் கண்ணீரை மட்டும்தான் பதிவு செய்வார்கள் என்ற கூற்றைப் பொய்யாக்கியிருக்கிறார் ஒருவர். அவர் வசீகரன்... தமிழ் திரையுலகுக்கு ஏற்கெனவே பரிச்சயமானவர்தான் இவர். காதல் கடிதம் எனும் அர்த்தமுள்ள இசைத் தொகுப்பைத் தயாரித்தவர். ஈழத்திலிருந்து நா…
-
- 0 replies
- 650 views
-