கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
எண்பத்தி மூன்றினிலே (யுகசாரதி) எண்பத்தி மூன்றினிலே - ஆ இலங்கைத் தீவினிலே எண்பத்தி மூன்றினிலே இந்து மா கடலுக்கு நடுவினிலே - ஆடி இருபத்து நான்கிற் தொடங்கியதே துயர் இலங்கைத் தீவினிலே கண்பட்டதோ இத் தமிழினத்திற்கென கண்டவர் யாரும் வருந்திட எங்களைப் புண்படச் செய்தனரே-ஒரு போக்கிடமற்ற அகதிகளாக்கியே எண்பட்ட யாவரையும் தமிழ் என்றறிந்தால் உடன் கொன்றெறிந்தார் - அந்தோ (எண்பத்தி...) நெஞ்சங் குமுறிடவே-கற்பு நீங்கிடச் செய்த கொடுமையிலே - அந்தப் பஞ்சைத் தமிழ் மகளிர்-கொடும் பாவிகளாற் தங்கள் ஆவியை விட்டிட அஞ்சிய பாலகர்கள்-தங்கள் அன்னையர் மார்பில் அமுதமருந்தியே துஞ்சிய செய்திகளும்-பல துயரக் கதைகளும் மறந்திடுமோ-அந்த (எண்பத்தி...) …
-
- 13 replies
- 2.4k views
-
-
கறுப்பு யூலை மறக்கடிக்கப்படாத மறக்கப்படாத அழியாத அத்துயர் நினைவுகள் எல்லோர் தமிழர் நெஞ்சங்களிலும் தடம் பதித்திருக்கும் மாதம் யூலை கறுப்பு யூலை.... அப்பாவித் தமிழர்களின் உடல்கள் சிதைக்கப்பட்டு அதில் இருந்து வெளியேறிய இரத்தம் அன்று இரத்த ஆறாக ஓடிய காலம்...! இலங்கை அரசாங்கத்தின் அத்துமீறிய கட்டவிழ்ப்புகளால் திட்டமிட்டே நம் இனங்களின் வாழ்விடங்களை எரித்தும் சொத்துக்களை அபகரித்தும் பலரை உயிரோடு எரித்தும் வெட்டியும், கொத்தியும் நம் இனங்களை நாட்டை விட்டு விரட்டிய காலம்... சிங்கள வெறியர்கள் ஆடிய ஆட்டத்தில் நம் இன உயிர்களை வதைத்து, கதிகலங்க வைத்து அதில் அவர்கள் குளிர் …
-
- 17 replies
- 2.6k views
-
-
கொதிக்கும் பாலைத்திங்கள் சொல்ல முடியாத சொல்லுக்குள் அடங்காத வில்லங்க வேதனைகள் வீதியுலா வந்ததெல்லாம் 83 இன் யுூலைக்கே தெரியும்! தென்னிலங்கையில் தமிழன் தோலை உரித்துத் தொங்க விட்ட வேளைகளைச் சுமந்த பாலைத் திங்களிது! கோர நினைவுகள், கொடுமைச் சாவுகள், அப்பப்பா!.......... . ஈர மனங்களைத் தீப்பிழம்பாய் ஆக்கிய அன்றைய நாட்கள்! தமிழச்சி என்பதனால் கொங்கைகள் அறுத்தும், கொப்பழிக்கும் தாரினுள் எம் பிஞ்சுகளை முக்கி எடுத்தும், செங்களங்கள் ஆடாத சிறுமைக் காடையர்கள் செந்தமிழர் உயிர்க்குலையில் வெந்தணலை இட்டதெல்லாம் நேற்றைய நாட்கனவாக நினைவுக்கிப் போய் விடுமா? அழியாத வடுக்கள், ஆறாத ரணங்கள், இழிவான நிலைகள், இதயத்துச் சு…
-
- 8 replies
- 1.3k views
-
-
காரிருள் ஆடி இலங்கையை உலுப்பி இரத்தத்தை உறைய வைத்து . கலக்கத்தை மேம்படுத்தியதே காரிருள் ஆடி கலையாது எம்மவரின் காயம் தொலையாது . காலத்தின் தேவை கலங்கிய தமிழரின் பலத்தையும் தளத்தையும் பறை சாற்றும் . பாவியரின் குணம் பரவியதால் அகிலத்தில் நிலைத்ததே ஈழத்தவரின் பெருமை - இதற்கு . நிச்சயம் பதிலிறுக்கும் ஈழதேசம்.
-
- 17 replies
- 2.3k views
-
-
ஆடிப் போனது வாழ்க்கையா...? ------------------------ ஆடிக் கலவரத்தில் ஆடிப் போனது நாட்டு நிலவரம் என்பதால் ஆவணியில் அவனியின் ஆதரவுக்காய் ஆலாய்ப் பறந்தும் பயனில்லாது புரட்டாதியில் புதிய படை புறப்பட்டு புரட்சி செய்ய முற்பட்டு ஐப்பசியிலும் எப்பசியும் தீராத முட்டுக்கட்டை முகடாய் விரிய கார்த்திகையில் காரிருள் நீக்கும் காவலர் படை ஆகுதியாய் களமிறங்கி மார்கழியில் மரபுப் படையாய் மதங் கொண்டு போராடி தை பிறந்தால் வழி பிறக்கும் தமிழர் நம்பிக்கை பொய்த்துப்போய் மாசியிலும் மனதிலொரு நம்பிக்கை முளை விடும் எண்ணம் பொதிந்து பங்குனியில் சகுனிகளின் சதிவலை நீண்டு விரிந்து சதி செய்ய சித்திரையில் இத்திரை விலகும் கனவுடன் தமிழ் வருடம் தொடங்க வைகாசியில் வ…
-
- 11 replies
- 1.8k views
-
-
நெருப்புக் குயில்கள் நிந்தனை எத்தனை வந்தணைத்தாலும் தங்கள் கருத்தை தயங்காது உரைக்கும் சிகப்புப் பக்கச் சிந்தனையாளர்கள். சகட்டுமேனிச் சமூகத்தை - தங்கள் சிகப்பு எண்ணங்களால் சீர்தூக்கி வைப்பவர்கள். முரட்டு மாட்டின் முதுகில் ஏறி - அதைப் புரட்டி எடுத்து சிறு பேனா முனையில் விரட்டும் விவேகிகள். முட்டாள்த் தனத்தின் முகமூடி கிழிப்பவர்கள். கட்டாக் காலிகளையும் தம் எழுத்துக்களால் கட்டி வைப்பவர்கள். எட்டா உயரத்தில் எதுவும் இல்லையென்று சிட்டாகப் பறந்து சிறகடித்துக் காட்டுபவர்கள் சாட்டையாய் வீசும் சடுகுடு வார்த்தைக்குள் - ஓர் சமுதாயத்தின் பொல்லாச் சங்கதிகள் உரைப்பவர்கள். பழமையை எதிர்த்து புதுமையை அணைத்தாலும் பாழாய் போகாமல் பண்பு…
-
- 10 replies
- 1.9k views
-
-
திருமலை தந்த சீலனே திரும்பி பார்க்க மறந்தனர் புல தமிழன் புலிகளின் மூத்த தாக்குதல் தளபதி நீ உன் முதல் இலக்கு சிங்க கொடி உயிர் குடிக்கும் ஆயுததாரிகளின் முன்னே தனித்து நின்று தீக்கிரையாக்கினாய் அக்கொடியை தந்தையும் தனயனும் நெஞ்சில் சுமந்தனர் அக்கொடியினை புலத்தில் சுமந்தாய் நீ தமிழை நெஞ்சில் விளையாட்டு வேறு அரசியல் வேறு விளக்கம் கொடுத்தனர் கனவான்கள் விளையாட்டு பருவத்தையே துறந்தாய் விடுதலைக்காக,மறந்தனர் புல தமிழர் படைத்தான் தலைவன் உன் பெயரில் படையணி உன் உறவுகள் தொடர்ந்த்னர் உன் பணியினை தகர்ந்தன சிங்க கொடி இராணுவ தளங்கள் கொடி காவி விமானங்கள்,நிலையங்கள் காவுகின்றனர் கொடியினை கையில் புல தமிழர்கள் விளக்கம் கொடுக்கின்றனர் நடுநி…
-
- 23 replies
- 3.6k views
-
-
அழகா அழகா வான் மதிதான் அழகா பூமியில் பெண்மதி அவள்தான் அழகா வானத்து விண்மீன்கள் ஒளிதான் அழகா மங்கை அவள் கண் சிமிட்டல்தான் அழகா மேகத்தில் தோன்றுகின்ற வானவில்தான் அழகா மங்கை அவள் தாவணியின் வர்னங்கள்தான் அழகா கீழ்வானம் சிவக்கின்ற சூரியன் தான் அழகா வெக்கத்தால் சிவக்கின்ற அவள் கன்னங்கள்தான் அழகா பூமியை நனைக்கின்ற மழைத்துளிகள்தான் அழகா க்ண்களைக் கழுவும் அவள் குறும்பு அழுகைதான் அழகா கூவுகின்ற குயிலின் குரல்தான் அழகா அவள் பேசுகின்ற தமிழ்தான் அழகா
-
- 20 replies
- 3k views
-
-
விடுதலை வேண்டும் என்கின்ற மானிடா இறக்கை அடிக்கும் பச்சைகிளிதான் நானடா என்னை சிறைப்படுத்தி அழகு பார்ப்பது ஏனடா அழகா இருப்பது என் தப்பா நீயும் சொல்லடா உனக்கு இருக்கும் உரிமை எனக்கு ஏன் இல்லையா? இது என்ன நியாயம் நீயும் சொல்லடா?
-
- 16 replies
- 1.3k views
-
-
-
- 34 replies
- 2.7k views
-
-
தத்தித் தவழும் குழந்தை தத்தித் தவழும் கண்ணே நீ...... பூமியில் கால் தடம் பதித்து நடந்து செல்லும் அழகு வெகு தூரத்தில் இல்லை.... இன்னும் நீ தவழ்ந்து சென்று நிற்க முயற்சிக்கும் திறனைப் பார்த்து உன் எதிர் காலத்தைக் கணித்துவிட்டேன்.. நான் உன் அழகிய எதிர்காலத்தைக் கணித்துவிட்டேன்....... உன்னவள் தாய்க்கரங்களிற்கு இனியும் பாரத்தைக் கொடுக்காமல் இந்த வயதிலே பொறுப்பை உணர்ந்தபடி நீ... முயற்சி செய்கின்றாயே... தவழ்ந்து தவழ்ந்து நடக்க முயற்சி செய்கின்றாயே... நீ.. வாழ்வாய் இவ்வுலகில் நலமுடன் சந்தோஷமாக வாழ்வாய் என்றென்றும் வாழ்வாய்.......
-
- 6 replies
- 3.8k views
-
-
என்றேனும் நினைத்ததுண்டா? புலம்பெயர்ந்து வந்திங்கே புதுவாழ்வு பெற்றாலும் பிறந்தஎம் மண்நினைவாய் என்றென்றும் வாழ்கின்றோம். எல்லோர் முன்னாலும் எடுப்பாகப் பேசும்பலர் எமமண்ணின் குறைகளைய எதனையுமே செய்ததில்லை பசியெடுக்க வில்லையெந்தன் பிள்ளைக்கு எனச்சொல்லி பரிகாரம் செய்வதற்காய்ப் பகலிரவாய் அலைபவர்கள் பசியெடுத்த போதெல்லாம் பச்சைத் தண்ணீரால் பசிமாற்றும் எம்மீழக் குழந்தைகளை நினைப்பதில்லை கிழங்குப் பொரியலுடன் குளிர்பானம் கொடுத்துத்தம் குழந்தை இடையுணவுத் தேவையினைப் போக்கும்பலர் கிழங்கை அவித்துத்தம் முழுநேர உணவாக்கும் கண்மணிகள் பசியகற்ற உருப்படியாய்ச் செய்ததில்லை பிறந்த நாளென்றும் பிறவென்றும் கொண்டாடிப் புகைப்படப் பெட்டிமுன்னால் புன்னகைத்து நிற…
-
- 15 replies
- 2.1k views
-
-
நோயினை சொல்லுவார் நொடிகளை விரையமாக்குவர் நோக்கமின்றியே -பலர் ஊக்கத்தை கெடுப்பார்கள் வாதிடு என்பார் போதுமினி என்கண்டாய் என்பர் மேடையின் எறி முழக்கம் மடமையில் பல உளறல்கள் வாடையில் கூட இல்லை அவர் வாயில் வாய்மை எழு எழு என்றார் எழுந்த பின் மறைந்தார் மானத்தமிழராம் இவர்கள் மக்கள் தொண்டராம் இவர்கள் மண்ணுக்காய் மக்களுக்காய் மாய்த்திட தம் சொகுது மறுத்தே நிற்கும் ம(ா)ன தமிழர்கள் ஆனையிறவை மீட்க அதை வைத்து ஓடி வந்தார் அடுத்த முகாம் பிடிக்க அடுத்தடுத்து வந்தார் ஆனாலும் தடை கண்டு அடுப்படி சென்றார்.. ஆகுதியான வீராரின் நமத்தை சுமந்து அடிக்கடி வந்தார் தடைச் செய்தி கேட்டு தம் சுய நலத்திற்காய் தியாகச்சுடர்களை மறந்தா…
-
- 13 replies
- 1.6k views
-
-
பகல் கனவு கன்னிப் பருவத்தின் வாசலிலே அவள் பொற்ச்சிலையாக நிற்கையிலே வீர நடை போட்டுக் கொண்டே அங்கே அழகிய வாலிபன் போகையிலே சந்தன வாசம் அவன் மூக்கைத் துளைக்கையிலே அத்திசை நோக்கியும் அவன் பார்க்கையிலே பட்டென பதிந்திட்ட அவள் முகம் உணர்ந்து அவன் தன்னிலை மறந்து கனவின் வாசலிலே..... இராத்திரி அவன் பார்த்த திரைப் படத்தினிலே காதலர்களாக வந்து ஆடிப்பாடியவர்கள் போலே அவனும், அவனை தன்னிலை மறக்க வைத்த பெண்ணுடனே காதல் கொண்டு ஆடிப்பாடினான் அமெரிக்காவினிலே.......... ஆடிபாடின வேளையிலே சட்டென யாரோ கைகள் அவன் தோளைத் தொடுகையிலே சிலிர்த்தவன் நெஞ்சினில் பல எண்ணங்களிலே தொட்டவர் கைகளை இறுகப் பற்றையிலே சடாரென விழுந்தது அறைகள் அவன் கன…
-
- 2 replies
- 838 views
-
-
கடவுள்மார் எல்லோரும் பம்மல் கே சம்பந்தம் படம் பார்த்த பின் ஒன்றுகூடி பதிலாக இதை மணிவாசகனிடம் கொடுக்கும் படி என்னிடம் அனுப்பி வைத்தார்கள்........ எல்லாம் தெரிந்தவன் வல்லவன் செய்பவன் என்றது நானா அல்லது நீயா :?: அநியாயகாரனை உருவாக்கியது நானா அல்லது நீயா :?: என்னை பாரென்று சொன்னது நானா அல்லது நீயா :?: என்னுடன் பிரியமா இரு என்றது நானா அல்லது நீயா :?: மனிதராக பக்குவபடாதற்கு காரணம் நானா அல்லது நீயா :?: நடுநிலை தவறியதற்கு காரணம் நானா அல்லது நீயா :?: எல்லாம் கொடுத்தது பறித்தெடுத்தது நானா அல்லது நீயா :?: மனசடங்கை பணசடங்காக்கியது நானா அல்லது நீயா :?: எனக்கு கோபுரம் கட்டி குண்டு போட சொன்னது நானா அல்லது நீயா :?: தர்மாகர்த்தாவை உண்டாக்…
-
- 10 replies
- 1.6k views
-
-
இன்னுமா உறக்கம்?...... இன்னுமா....உறக்கம்? இடியேறு உன்னில் விழ.. ஈழத்தில் உன்னினம் அழிப்பு. இங்கு நீ இன்னும்..... இதமாய் உறங்கு! ஊருக்கொரு சங்கமென்று கூறுபோட்டதுதான் மிச்சம் ஊர்ச்சனத்தின் வாழ்வு உனக்கெதற்குப் போய் உறங்கு! நிலம்விட்டு வந்த உந்தன் புலன்போற திக்கைப் பார்த்து புல்லரிப்புப் பொங்குது! புூரிப்பாக் கிடக்குது! புளுகுக்குச் சொல்லவில்லை பக்குவமா உறங்கு! எல்லாம் முடிந்த பின்னால்எங்கே? ஏது பிழை? ஆயிரமாய்க்கூடி அங்கலாய்க்க வேண்டுமே.. அதற்காக உறங்கு! கறுப்புப் படிந்துவிடக் கதவோரம் நிற்கிறது களையாகக் கைகூப்பி வரவேற்க நிற்கவேணும் இப்போது கண்ணுறங்கு! பிடறியில கொண்டு வந்து வெடிகுண்டைப் போட்டாலும் புண்ணாக்குத் தின்னிகளே! போர்த்திக்கொண்டு உறங்குங்கள்! ம…
-
- 28 replies
- 3.4k views
-
-
எனது தேசம் -------------- நீல விசும்பின் ஓரத்தில் உறைந்திருக்கும் நீரினாலும் குளிர்விக்கமுடியா இரணங்கள் ஒற்றைக் குருவியின் ஓலமாய் மனது விம்மித் தணிகிறது நேற்றைகளைத் தீயில் கருக்கி நாளைகளின் தடத்தினை தொலைத்து விட்ட தேசம் இன்னுமொரு பொழுதில் பசி சுமந்து துயர் சுமந்து வாழ்வதற்கான முகாந்திரமின்றி வாழ்கின்றது என்றோ வரப்போகும் ஒளிக்கீற்றுக்காய் இன்றும் நாளையும் நாட்களை எண்ணியபடி... -எல்லாள மஹாராஜா-
-
- 13 replies
- 12.6k views
-
-
கும்மியடி பெண்னே கும்மியடி தமிழ் ஈழம் மலர்ந்தது எனக்கும்மியடி கும்மியடி பெண்னே கும்மியடி வீரத்தலைவன் புகழ்பாடிக் கும்மியடி கும்மியடி பெண்னே கும்மியடி மாவீரர் புகழ்பாடிக் கும்மியடி கும்மியடி பெண்னே கும்மியடி புலிக்கொடியைப் போற்றிக் கும்மியடி கும்மியடி பெண்னே கும்மியடி தமிழனின் அடிமை விலங்கு உடைந்தது எனக் கும்மியடி கும்மியடி பெண்னே கும்மியடி தமிழுக்கு என ஒருநாடு உண்டு எனக் கும்மியடி கும்மியடி பெண்னே கும்மியடி இந்தக்கவிஞன் கனவு நினைவாகும் எனக் கும்மியடி
-
- 6 replies
- 1.2k views
-
-
முழுமதி நிலவே வா வெண்மதிச் சரமே வா இயல் இசைக் கவியே வா சுந்தரத் தமிழே வா இனிமையின் குரலே நீ வா வானவில்லின் நிறமே வா தோகையின் அழகே வா தென்றலின் உணர்வே வா தென்மாங்கு பாடி நீயும் வா
-
- 8 replies
- 1.4k views
-
-
ரசிகா கவிதை ரசிக்க கூடியமாதிரி உள்ளது. இதைப்படித்ததும் கவிஞர் காசியானந்தனின் வரிகள் என் நினைவுக்கு வந்தன அன்னை தமிழீழ மண்ணே உன்னை மறப்பேனா.. நீ என் அன்னை ...... அன்று முற்றத்தில் அழித்து அழித்து நான் ஆ னா எழுதிய மண்ணல்லவா... தாயின் நினைவையும் தாய்நிலத்து நினைவையும் ஒன்றாகத் தந்நதமைக்கு நன்றிகள்
-
- 1 reply
- 785 views
-
-
மறக்கலாமா நீ தமிழா உனக்கு இங்கிலீசு நன்றாகக் கதைக்கத் தெரிந்ந்து விட்டால் நீ என்ன வெள்ளைக் காரன் ஆகிவிட முடியுமா..??? அல்லது திராவிடர் தோற்றம் தான் உன்னை விட்டுப் போய்விடுமா???? வெள்ளையர் கூட நம்மைக் கண்டு விட்டால் தம் மொழியில் ஹாய் சொல்லி சிரித்து விட்டு செல்கின்றனர் உனக்கு என்ன செருக்கா...??? தமிழனைக் கண்டு விட்டால் எதிரியைக் கண்டது போல் முகத்தை திருப்பி வைத்துப் போகின்றாயே..... தமிழனுடன் தமிழில் கதைக்க உனக்கு என்ன கேவலமா..???? நன்றி கெட்டவர்களே உமக்கு நம் மொழி இழக்காரமாகிவிட்டதா???? வெள்ளையரைத் தாண்டிச் செல்லும் போது கதைக்காமல் போகின்றாய் நீயும் தமிழரைத் தாண்டிச் செல்லும் போது ஆங்கில…
-
- 12 replies
- 2.1k views
-
-
ஆண்டவன் என்றனர் சிலர் அரோகர போட்டனர் பலர் அவதாரம் என்றனர் சிலர் அடிமையானார் பலர் மகான் என்றனர் சிலர் மயங்கினோர் பலர் மகாத்மா என்றனர் சிலர் மன்டியிட்டனர் பலர் பாபா என்றனர் சிலர் பஜனை வைத்தனர் பலர் மனிதன் என்றனர் கேள்விகள் எழுந்தன என்ன மதம் என்ன மொழி என்ன சாதி அசியனா ஆப்ரிக்கனா ஜரோப்பியனா.............. ஆயிரம் கேள்விகள்
-
- 9 replies
- 1.6k views
-
-
வெளிநாட்டில் தமிழனுக்கு தமிழில் பேச வெக்கம் நாகரீகம் முத்திப்போய் நடை உடையிலை மாற்றம் பிள்ளைகளின் பெயரைக்கேட்டால் தமிழனோ எனத் தடுமாற்றம் தமிழ் இனத்தின் தலை எழுத்தில் இப்படி ஏன் மாற்றம் இன்னும் இரண்டு தலைமுறையில் இவனின் நிலை இங்கு சோகம் அரசாங்க இலவசப்பணத்தில் ஆடம்பர ஆட்டம் அதை எடுத்து சிலதுகள் இங்கு சூது ஆட்டம் அகதியாகி வந்தும் இங்கே சண்டியர் கூட்டம் கோவில்களில் சிலதுகள் நர பலியாட்டம் காசுக்காக குடும்பம் பிரிந்து இருப்பது இது என்ன கோலம் பிள்ளைகள் வாழ்க்கை பாழகப் போவதுதான் மிச்சம் ஊரில சுவாமிக்கு பந்தம் பிடித்தவன் …
-
- 23 replies
- 2.6k views
-
-
காட்டுமல்லிக்கொடியாய் யாருமற்ற வனத்தில் முளைத்து கிடந்தேன் பூப்பறிக்க வந்தவள் - இந்த கொடியில் ஆசை வைத்து பறித்து போனாள் பதியம் போட்டாள் , பொழுது தவறாமல் நீர் ஊற்றினாள் உரம் போட்டு என் வளர்ச்சிகண்டு பூரித்தாள் மொட்டுவிடும் பருவத்திலொரு நாள் நன்று கொதித்த வெந்நீர் ஊற்றினாள் வேர் வரை பாய்ந்து துடித்தேன் - ஏன் இப்படியென்றேன் பூக்கள் பிடிக்காதென்றாள் பூப்பதுதானே என் இயற்கை விதி என்றேன் பூக்காது பார்த்துக்கொள் என்றாள் ............. முயற்சிக்கிறேன் என்று சொல்லி செத்துப்போனேன்
-
- 7 replies
- 1.5k views
-
-
கொக்கு பற பற............ ஊப்ஸ் ........... மக்கு நீ பற பற!! கூட்டில் - வாழும் ஜீவன் பெயர் கொண்டால். நீயும் குருவியா என்ன? பாம்புக்கும் ஒரு கூடு ....... புற்று என்ற பெயரிலிருக்குமே!! நாயுண்ணியாய்........... ஒட்டி கிட கிட.... வாழ நினைப்பவர் பக்கம் வராதே - வாலை............. ஆட்டிக்கொண்டே பிறர் பக்கம் திரி திரி! பெயரை பார் - பறவையாம்........... தங்காலையில் தமிழன் உறவை......... தங்கம் போல் நிறம் கொண்ட மலரை.. கட்டி தூக்கியபின்னும். கவலை எனக்கு இல்லையென்றே சொல்லி திரிகிறான்.. கருத்துதான் முக்கியம் .............. என்றே கிடக்கிறான்! சொந்த ஒளி இல்லாத - மதியே ............. என் வாழ்வென்று ................. இவன் ச…
-
- 12 replies
- 2.1k views
-