கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
நான் குறும்பன் குரல் கொடுத்த பழைய கவிதைகளை கேட்க விரும்பி சொடுக்கிய போது Not Authorised என வருகிறது. என்ன செய்யலாம்.
-
- 6 replies
- 1.7k views
-
-
உன் நினைவுகள் * உன் பெயர் எழுத என் பேனா ஓடும் போதெல்லாம் கேலிச் சிரிப்போடு வந்து பிள்ளைக் குறும்பாய் பிடுங்கி எரிந்தாய்! * உன் மெல்லிய உதடுகளால் புன்னகையிட்டு மேனியெங்கும் மின்சாரம் பாய்ச்சி என் போர்வைக்குள் புகுந்து நித்திரை கலைத்தாய்! * என் ஜன்னல் வழி நழுவி வந்து சில்மிஷக் கணங்களில் என் பெண்மை பூக்கச் செய்து உயிரை உருக்கி உலையிலிட்டு ஜீவன் பருகி தாகம் தீர்த்தாய்! * உன் முத்தங்களை பொக்கிஷமாய் மார்புக்குள் பொத்தி வைத்தேன் பிரிவின் துயரில் அவை கரைந்து போயின! * ஞாபகச் சின்னமான நம் நிழல்படம் சிதிலமாகி சிதைந்து கிடக்கிறது! * வீத…
-
- 8 replies
- 3.6k views
-
-
சுதந்திரக்காற்று... வீசத்தொடங்கிற்று 58 வருடங்களுக்கு முன்னால்.... ஆனாலும் நாம் சுவாசித்ததில்லை ஒரு நாள் ......!! நன்றி.. கார்ட்டூன் உரிமையாளருக்கும், தேடி உதவியவருக்கும்
-
- 6 replies
- 1.9k views
-
-
எம் இல்லங்கள் மீது - இடி இறங்கும் ஒரு நாளில்- இலங்கையின் - சுதந்திரம் பற்றி- ஏன் ஒரு கவலை-உனக்கு? புறங்கையால் அதை தள்ளிவிடு சோதரா! உன் கண்களில் ஊசி தைத்துபோனதை கண்டு சொல்ல இன்னொருவன் வேணுமா? என்ன நீ? சொத்து-சுகம்- சொந்தம் பந்தம்- ஒட்டுமொத்தமாய் கூட்டியள்ளி கொளுத்திவிட்டு வந்து- கட்டிடகாட்டின் மத்தியில் நின்று- உன் கண்ணீரை பிறர் காணுமுன் துடைக்கிறாயே - அது பொய்யா-? சிங்கத்தின் வால் கொண்டு முகம் துடைப்பவன் எவனாயிருந்தாலும் வாழட்டும்- இரு ஒரு விநாடி- உன் முழங்கையை ஒரு தடவை முகர்ந்து பார்- நண்பா! சிதறி போன உன் உறவுகளை - துண்டம் துண்டமாய் பொறுக்கி சென்று கொள்ளி வைத்துவிட்டு வந்தாயே- ரத்தவாடை இன்னும் உன் நாசி துவாரங்களில் க…
-
- 2 replies
- 1.3k views
-
-
குழந்தை தொழிலாளர்கள் குழந்தை தொழிலாளர்கள் இருக்கக்கூடாதென்று அவனை பள்ளிக்கு அனுப்பினேன்.. அவனை ஆசிரியர் அனுப்பினார் டீ வாங்கி வர.. கோபம் எப்ப வரும் என்று தெரியாது வந்தா என்ன நடக்கும் என்று தெரியாது எச்சரிக்கை..
-
- 3 replies
- 1.6k views
-
-
தமிழன் - யாரோ? கூட இருப்பன் கொலையுண்டு போனாலும் - ஒரு பக்கத்தில் ஒதுக்கி விட்டு பஞ்சாமிர்தம் சாப்பிட நினைப்பவன்! தமிழன் என்றால் யாரோ- ? முயற்சி செய்பவருக்கு தடையாய்- இலாபம் இல்லை என்று தெரிந்தும்..... ஏட்டிக்கு போட்டியாய் ஏதும் செய்ய நினைப்பவன்! தமிழன் எவரோ- தாயை தவிக்க விட்டு - பாயை சுருட்டி கொண்டு பரதேசம் ஓடுபவன்! தமிழன் என்ன செய்வானோ? உப்பு யாரும் அள்ளினால்- சாக்கை தூக்கி கொண்டு ஓடுவான் -அவனும்! உப்பு நீரை பாத்திகட்டிவைக்க- நினைக்கான்! தமிழன் இன்னும் என்ன செய்வானோ-? கருத்து யாரும் ஆரம்பித்தால்தான்- தானும் எழுதுவான் - கவிதை என்று யாரும் ஆரம்பித்தால்தான்- தானும் மூக்கை இடையில் நீட்டுவான்! தமிழனுக்கு வீரம் உ…
-
- 4 replies
- 1.7k views
-
-
பனியின்றி குளிரின்றி இந்த வருடத்தின் முதல் சிரிப்பு இயற்கையின் சிரிப்பில் துளிர்ப்பது மரம் மட்டுந்தானா..! மலர்வது மலர் மட்டுந்தானா..! மனிதர்களுந்தான்..! நகரமே சிரித்தது யேர்மனியின் அந்த நகரமே சிரித்தது சிரித்துக் களித்தது இயற்கையும் சிரிக்க மனிதரும் சிரிக்க மலராய்த் தெரிந்தது குட்டைப் பாவாடைகளும் கட்டை ரீசேர்ட்டுகளும் தலை காட்டா விட்டாலும் சிட்டுக் குருவிகளாய் இளசுகள் உதட்டோடு உதடுரசி மூக்கோடு மூக்குரசி கெஞ்சலும் கொஞ்சலுமாய்..... வட்ட மேசைகளைச் சுற்றி வட்ட மிட்ட கதிரைகளில் பெரிசுகளும் சிறிசுகளும் கண் பார்த்துக் கதை பேசி மெல்லுதட்டில் தமை மறந்து ஐஸ் சுவைத்து...... கை கோர்த்து நடக்கையிலும் காதலுடன் இடை தழுவி …
-
- 2 replies
- 1.6k views
-
-
திறக்கப்பட்ட கதவுகளின் வழியே... கடந்துசெல்லும் காலங்களின் ஊடாக திறக்கப்பட்ட கதவுகள் மூடப்பட்டும் மூடப்பட்ட கதவுகள் மறுபடி திறக்கப்பட்டும் சிலவேளைகளில் மட்டும் காற்று வருமென்ற எண்ணங்களோடுதான் காத்திருப்பு தொடர்கிறது எங்களுக்கு...! எங்களின் எதிர்காலம் குறித்த பேச்சுக்களை விட்டால் நிகழ்காலம் குறித்த நாற்காலிகளின் கனவுகள் வெறும்... கனவாகவே போய்விடும் அவர்களுக்கு...! இதனால்தான் அன்போடு பேசலாமென அக்கறையோடு அவர்கள் இடைக்கிடையே வருவார்கள்...! வாருங்கள் ஊரெல்லாம் ஓடித்திரியலாமென அழைத்துப்போவார்கள் சுமக்கமுடியாத சுமைகளைஎல்லாம் நெஞ்சிலே சுமந்துகொண்டு அவர்களின் பின்னாலே ஓடித்திரிவோம் கடைசியாகக்கூட அவர்கள் ஒன்…
-
- 4 replies
- 1.8k views
-
-
குருவி ஒன்று தான் வாழ தேடியது ஒரு தோப்பு வந்தது மாந்தோப்பு வரவினில் கண்டது ஓர் மலர் மலரிடை மலர்ந்தது வாழ்வெனும் வசந்தம் மலரதும் குருவியதும் படைக்குது ஒரு காவியம் அது... மாநிலத்தில் மானிடர் தாம் கண்டிடாத புனித காவியம். தோப்பருகே ஒரு குடிசை அங்கும் வாழுது ஒரு கூட்டம்..! வஞ்சகமும் பொறாமையும் அவர்தம் மனங்களில் கறுவும் மனதை அடக்க முடியா கலங்கி நிற்குது அவர் சித்தம்..! கற்பனையில் கூட அடுத்தவன் வீழ்ச்சியில் அகம் மகிழவே துடிக்குது..! பாவம் அவர் அறிவிருந்தும் அறியாமையில்...! தோப்பிருந்த குருவியது மனமிரங்கி மலருடனிணைந்து பாவப்பட்டவர் மீது ரட்சிக்கிறது மானிடா.... மனமதில் அமைதி கொள் வாழ்வதில் சிறப்பாய் மாற்றா…
-
- 20 replies
- 4.4k views
-
-
எனது பிரத்தியேக கோவையை நேற்று இரவு சரிபார்த்தபோது அதனுள் இருந்த சில "நிழற் பிரதி"களுல் ஒன்றாய் பின்வரும் கவிதையும் இருந்தது... ஆழமான அர்த்தமும் உணர்வுகளும் நிரம்பிய இக் கவிதையை உங்களுடன் பகிர்ந்துகொள்ளப் பிரியப்படுகிறேன்.. "நிலா"என்ற பெயரிலான பெண்போராளி எழுதியிருக்கிறார்..... நீங்களும் இரவும் நாங்களும் ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தைப் பிடிக்க விரைந்து கொண்டிருக்கும் எங்களை மறித்து உங்களின் கரங்கள் நீளும் நிற்போம் "அண்ணை நானும் வரட்டா?" என்பீர்கள் வாயில் வார்த்தை எதுவுமே வராது போவோம். ஏதேனும் சிந்தனையில் மூழ்கி நாங்கள் ஒரு கணம் நிதானம் இழ்ந்து போனால் "டிம்" இல்லையோடா? என்று திட்டுவீர்கள். சிரிப்பும் கவலையும் சேர்ந்தே வரும். …
-
- 9 replies
- 2.1k views
-
-
புரட்சி அழுது பார்த்தோம் தொழுது பார்த்தோம் உழுதும் பார்த்து விட்டோம் சமூகத்தைப் பழுது பார்க்கவெனத் தலைவன் புறப்பட்டான் ஆலம் விழுதுகளாய் தோழர்கள் ஆயிரம் பார்த்து விட்டோம் இனி எழுகின்ற கதிரவனைப் பார்த்திடுவோம் பார்த்திடுவோம் Inthuja Mahendrarajah நன்றி இது என் மனதை நன்றாக கவர்ந்த ஒரு கவிதை அதனால் தான் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.
-
- 7 replies
- 2k views
-
-
பூங்கா மிருகங்களின் அன்புமொழி ஒருபக்கம் பறைவகளின் சங்கீதம் ஒருபக்கம் சின்னஞ் சிறுவர்களின் மழலை மொழியோ மறுபக்கம் காதலர்களின் காதல் மொழியோ இன்னொருபக்கம் இவை மட்டுமா? மரம், செடி, கொடிகள் அசையும் இனிய கீதங்கள் அத்துடன் கூடியே அழகிய பூக்களின் நறுமணங்கள் இவற்றையெல்லாம் உள்ளடக்கிய –ஓர் அழகிய இடம் பூங்கா!
-
- 16 replies
- 3.1k views
-
-
ஆவி சுருங்க..உடல் களைக்கப் பயிர்செய்துழவன் மேதினிதழைக்க வேர்வை சிந்தி- ஆதவன் வருகைக்காய் காலைப்பனியில் எழுந்து காத்திருக்கிறான் - நீ பாடி மகிழ்ந்திடு குயிலே பொங்கலோ பொங்கல்! மாவிலைகள் பருவமங்கையின் காதெணியென்றாகி காற்றில் ஆட - வாயிலில் போட்ட கோலம் வண்ணப்பூக்களென நெஞ்சையள்ள- பொங்கிவரும் பானையின் விளிம்பு பார்- அழகு! சின்னக்குழந்தையின் மனசென்று நீயாகி- சிரித்து மகிழ்ந்திடு குயிலே பொங்கலோ பொங்கல்! நேற்றைய பொழுதது நிச்சயமென்று இருந்ததில்லை! இன்றைய வாழ்வும் ஒன்றும் இனிப்பதாய் தெரியவில்லை! நாளைய நாள் என்னாகுமோ நாமறியோம்! நானிலத்தில் தமிழர்திருநாளாம் இன்று இனி நல்லதே நடக்கும் என்று நீ நம்பு குயிலே பொங்கலோ பொங்கல்! ஊர்மனையாவிலும் பால் …
-
- 7 replies
- 2.5k views
-
-
கீழேயுள்ளது தூயாவின் கற்பனை காதலிக்கு ஒரு மன்மதராசா இருந்தா எப்பிடியிருக்கும் என்று ஒரு கற்பனை உலா... ---------------------------------------------- ¿ýÈ¡¸ ±ý ¸ñ¨½ À¡÷òÐ ¦º¡ø... ------------------------------------------- ¸ñ§½.. §À¨¾ô ¦Àñ§½... §¸û! ¯ý ¿ñÀ÷¸û §Åñ¼¡õ ±ý§Èý ±¾ü¸¡¸? ¯É째 ¦¾Ã¢Ôõ «Å÷¸û ÀüÈ¢ þý¦È¡ÕÅý ¿¡¨Ç¦Â¡ÕÅý ±É, º£÷¦¸ðÎ ¾¢ÕÔõ ¿ñÀ÷¸û ÜðÎ ¯ÉìÌ §Åñ¼¡õ ±ý§Èý. ÍüÈõ ÀüÈ¢ ¦º¡ýÉ¡ö... «ó¾ ÍüÈõ ¿õ ¸¡¾¨Ä ¦¸¡î¨º ¦ºö¾¨¾ «È¢Â¡§Â¡? ¿õ¨Á À¢Ã¢ì¸ «Å÷ §À¡ð¼ ¾¢ð¼§ÁÛõ «È¢Â¡§Â¡? ÀÊô¦À¾üÌ §Å¨Ä ±¾ü¦¸É §¸ð¼¾¡ö ¦º¡ýÉ¡ö ¯É째 ¦¾Ã¢Ôõ ¿£ ÀÊôÀ¢ø 'நெஅக்' ±ýÚõ, ÀÊôÀ¢ø «ì¸¨È¢ø¨Ä ±ýÚõ «Ð¾¡ý §¸¡Àò¾¢ø …
-
- 8 replies
- 2.5k views
-
-
தை திருநாளா? தை திரு நாளா? இல்லை.. எங்கள் வாழ்வதை ஊசியாய் .. சிங்களம் தைக்கின்ற போதில் வரும் ஒரு நாளா! பானையில் பால் பொங்கி வழிந்தால் ... உழவர் திருநாள் என்கிறோம்... இதயம் எல்லாம் இரத்தம் வழியும் ஒரு நாளாய் போனதே.. எம் வாழ்வு.... இந்நாளதில்... இதை என்ன பெயர் கொண்டு சொல்லியழைப்போம்?? மனங்கள் பொங்கி வழியும் நாளில் ............... பானைகள் மட்டும் சும்மா பொங்கி பயனேதும் உண்டா? சிறகில் தீ பிடித்தாலும் ... அதன் ஒளியை கொடுத்து இனம் கொண்ட இருள் அகற்ற விளைகிறோம்! வருக தை பொங்கலே...!! அனைத்து கள உறவுகளுக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.
-
- 9 replies
- 2k views
-
-
இளமைக்காலம் இதுவொரு இனிய காலம் இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் பட்டாம் பூச்சி போன்று படபடத்து திரியும் காலம் பட்டென்று பாசமும் சட்டென்று காதலும் நச்சென்று கோபமும் கூடியே வரும் காலம் துடி துடிப்புடனே உற்சாகத்துடன் துள்ளித் திரியும் -ஒரு இனிமையான காலமது
-
- 8 replies
- 2.2k views
-
-
வரிப்புலி ஊர்வலம்! ----------------- ஆடிவரும் கடலையே - சொல்லு எங்கள் தேச ஆளூமை கொண்டவனை -எங்கே ஒளித்து வைத்தாய்? காற்றே வா மெல்ல எம் கதவு திற- பனியிலும் மழையிலும் - சுட்டெரிக்கும் வெய்யிலிலும் சுதந்திரமே பெரிசென்று சுழன்று திரிந்த சுந்தரனை- எங்காவது பார்த்தீயா? சொல்லி போ! சிங்களத்தின் மடியில் ஒரு இடியாய் வெடித்தவன் - சிறுத்தை இனத்தின் தலையில் மணிமுடியாய் உயிர்த்தவன் படை நடத்தும் வீரர்கெல்லாம் ஒரு பாடமாய் இருந்தவன் அவனை வெல்வதற்கு யார்க்கும் ஒரு வழியுமில்லை- விடை சொல்லாமல் போனானே அதுதான் - ஏனென்று இன்னும் தெரியவில்லை! எம்மை அடித்தவனை அடியோடு எரித்த பெரு நெருப்பு- எங்கள் அண்ணன் அணைத்து வளர்த்த அக்கினி குஞ்சு- கிட்டண்ணா - தமிழன்…
-
- 14 replies
- 3.1k views
-
-
வரண்டுபோனதொரு பூமி வானத்தை பார்த்து மழைக்காய் தேடல் கொண்டு தேகம் வாடி நிற்கிறது! பசியென்ற ஒன்று இருப்பதால்தான் உழைப்பின் தேடல் தொடர்கிறது.... பருவம் என்ற ஒன்று இருப்பதால்தான் காதல் என்ற ஒன்று இன்னும் காணாமல் போய்விடாமல் தவிக்கிறது! பகுத்தறிவென்ற ஐந்தோடு சேர்ந்த ஓரறிவு வாழ்வதானாலே அநியாயங்களை காண்கையில் உள்ளம் ஆக்ரோசம் என்ற தேடல் கொள்கிறது! இறப்பு என்ற ஒன்று இருப்பதால்தான் இறைவனை இடைக்கிடையாவது நினைக்கும் தேடல் வாழ்கிறது! எதிர்காலம் பற்றிய பயம் எம்மோடு இருப்பதானால்தான் சேமிப்பு என்ற தேடல் உயிர்கொள்கிறது! தேசியம் என்ற ஒன்று நிமிர்ந்து நிற்பதால்தான் -இனமானம் பற்றிய தேடல் இன்னும் உன்னுள் இருக்கிறது! தெரியாதவனிடம் எல்லாம் அடிவாங்கும் …
-
- 5 replies
- 2.3k views
-
-
இரண்டடிக்குள் இரண்டரை கோடி! நேற்றுத்தான் அவன் வீடு கட்ட கண்டேன்..... குடும்பத்தோடு வந்து இன்று குடிபுகுந்து விட்டான்! அவனும் கறுப்பு ..அவளும் கறுப்பு.. மகனும் கறுப்பு..மகளும் கறுப்பு... ஆடம்பரம் ஏதுமற்ற வீடு... அருகில் நடப்பதை பற்றி எந்த அக்கறையும் அங்கில்லை... மின்சாரம் இல்லையென்ற கவலை இல்லை.. மேதாவி தனமான பேச்சுகளும் அங்கில்லை... பசி என்று வந்துவிட்டால்- காதலுடன்.. அவன் இதழால் அவளுக்கு ஊட்டிவிட.. தான் பெற்றதை பிஞ்சுகளுக்கும்- இதழாலேயே பரிமாற ஒரு அள்ளு உணவுக்குள் நான்கு உயிர்கள் பசியாறுமா? அழகில்லைத்தான்..அசிங்கம்தான் .. ஒளித்திருந்து பிறர் வாழ்வை பார்ப்பது.. உதவாத பழக்கம் தான்... இருந்தும் மனம் ஏங்கியது........... …
-
- 39 replies
- 6.2k views
-
-
ஏங்குகின்றேன்! உன்னை எப்பொழுது கண்டேனோ அன்று முதல் நான் என்னிடம் இல்லை உன்னால் பசிஇ உறக்கம் ஏன் நிதானத்தை கூட இழந்தேன்! எனக்குள் நானே சிரித்துக் கொள்கின்றேன்! எனக்குள்ளே ஏதேதோ பேசுகின்றேன் இதெல்லாம் உன்னாலடா! நான் எதற்கும் ஏங்கியதில்லை உன்னனக் கண்ட பின் நீ எனக்கு கிடைக்க வேண்டும் என ஏங்குகின்றேனடா! உண்மையில் காதல் என்பது ஒரு நோய் அது எப்போ வரும்இ போகும் என புரியாது என்னுள்வந்துவிட்டது அந்தநோய்! என்னை குணமாக்குவாயா? நீ எனக்கு கிடைப்பாயா? சொல்லடா சொல்!!! :roll: :roll: :roll: (சுட்டது) நன்றி லங்காசிறி.கொம்
-
- 12 replies
- 2.9k views
-
-
நாற்றோடு காற்றுவந்து மோதும் - - கரைகழுவிபோகும் அலைகள் ஏதோ ராகம் பாடும்- - பூ ஒன்றின் இதழெடுத்து பொட்டிடு தோழி- - பொன்மாலையதன் வண்ணம் அள்ளிவந்து வாயிலை அலங்கரி! இராவென்ன பகல் என்ன சொல்லு? நீ இரவுக்குள் பகலாகி நில்லு! மழையென்ன வெய்யில் என்ன -சீ போ! வாழ்வென்ன பலமுறை வருமா? உந்தன் வாழ்வு முடிந்து போனால் -பூமி அதை உனக்கு திருப்பி தருமா? வானத்தை பாரடி தோழி- நீல நிறத்தை கரைத்தூத்தியங்கே நிலவுக்குள் பின்னால் சென்று ஒழிந்து கொண்டதாரடி? வானம் குடைபிடிக்கிறது பார்-பார்! அதன்கீழ் எனக்காய் நானொருமுறை - உனக்காய் நீ ஒருமுறை- - வாழ்ந்து பார்ப்போமே?- வா வா! வரைமுறையென்ற தாலிகட்ட பிறர்யார்? உந்தன் வாழ்வதற்க்கு வேலி போட அவர் யார்? புன்னகைக்க…
-
- 6 replies
- 2.3k views
-
-
அம்மம்மா அம்மா என்று அறிமுகம் ஆனவரே அம்மாவின் அன்பையும் சேர்த்து தந்தவரே அம்மாக்கு நிகர் அம்மாம்மா என்ற புதிய மொழியை சொல்ல வைத்தவரே ஆராரோ பாட்டில் ஆயிரம் கதை சொன்னவரே ஆயிரம் தான் இருந்தாலும் நீங்கள் வேண்டும் எமக்கு அன்னை பிரியும் போது உங்கள் மடியில் கிடத்தினாள் நீங்கள் எம்மை உமது முதுகில் அல்லவா சுமந்தீர்கள் ஆயிரம் பேர் இங்குண்டு அன்பு கொள்ள ஆனாலும் மனம் உங்கள் அன்பைக்காவே ஏங்கின்றது ஆயிரம் புத்திமதிகள் அன்புடனே கூறும் நீங்கள் ஆதரவாய் அரவணைப்பீர்களே நாம் தோற்கும் போதும் எத்தனை அடிகள் வாங்கினாலும் குட்டி நாய்கள் போல் உங்கள் காலடியையே சுற்றி சுற்றியே வருவோம் காலமெல்லாம் கண்ணுக்குள் இமையாக எம்மை காத்தீர் நீர் கண் மூடு…
-
- 30 replies
- 16.7k views
-
-
±ô§À¡Ðõ ±ý ¸Å¢¨¾¸¨Ç - ¦ÁîÍõ ¬Éó¾¢ ¿¡ý Åó¾ §ÀÕóÐ ¿¢ü¸¡¾ ¿¢Úò¾ò¾¢ø ¿¢ü¸¢È¡û - ¨¸Â¢ø ÌÆó¨¾Ô¼ý þô§À¡Ðõ «ýÚ «ÅÙì¦¸É ±Ø¾¢Â ¸Å¢¨¾¸û -¯Â¢÷òÐ ¸¡üÈ¢ø À¼À¼ì¸¢ýÈÉ ±ý Å£ðÊø ±ýɧ𠏢Ú츢¢ÚìÌÐ ±É- §¾¡Æ¢Â¢¼õ ¦º¡øÄ¢ º¢Ã¢ò¾ Ãò¾¢É¡ - ¨¸Â¢ø ̨¼Ô¼ý ¿¢¾Óõ §Å¨ÄìÌ §À¡¸¢È¡û ±ý Å¡ºø ¸¼óÐ Å¡úÅ¢ý ¿¨¸ÓÃñ- «Åû þô§À¡ ¾Á¢ú ËîºÃ¡õ,Å¡ú¸ ¾Á¢ú ¿¡ý ¸øÅ¢ ¸üÚ ÓÊò¾¨¾§Â þýÛõ- ¿õÀ ÁÚìÌõ…
-
- 13 replies
- 2.6k views
-
-
இந்தக் கண்கள் கண்ணீர் கவிதை எழுதுதே... ஏன் இந்த வலி உதிரியானது? சுமையை தாங்க முடியாமலா? அல்ல இதயம் உடைந்ததாலா? பூக் காதல் தீயில் குளிக்குதே வீசிய பூ மேகத்தில் பாவ வாழ்க்கை தொலைக்கவா? சொல் ஏன்? நிஜம் எங்கே.....? மீண்டும் மீண்டும் திரைக்குள் செல்கிறதே ஓசையின் துளி தெறிக்கவா ? அல்லது பூட்டிய அன்பு வாசிக்கவா? சாப அலை வந்து வீசுதே அது அடித்து செல்கிறதே இன்று உடைத்து பார்த்து விட்டதால் பெருகிற கண்ணீர் கவிதை இந்த கண்கள் எழுதுதே நீர்க் குளத்தில் கண்ணீர் பொங்கிப்பொங்கி ... நிலவின் ஒளியில் அருவி வழியில் வடியிது உயிர் இழந்தும் பாடாமல் துடிக்கிறது ......போராடுமா? இலையும் கிளையும் ! இக்கண்ணீர் கவிதையால்..காதல்......சேரும…
-
- 6 replies
- 4.2k views
-
-
மலர்ந்தது புத்தாண்டு !! காலமகள் பெற்றெடுத்தாள் மீண்டும்ஒரு மழலை - நம் கண்ணெதிரே தவழவிட்டாள் புதியதொரு வரவை! ஞாலமெலாம் மகிழ்ந்திருக்க மலர்ந்தது புத்தாண்டு - எழு ஞாயிறுபோல் உதித்ததம்மா நம்மையெலாம் ஆண்டு! ஆண்டுதொறும் அவனிதனை ஆண்டுகொள்வ தால்தான் - இதை "ஆண்டு"எனநாம் அழைத்தோமோ! அரியதொரு பேர்தான்! மீண்டுமொரு படிக்கல்லைத் தாண்டுகின்ற தால்தான் - நாம் மென்மேலும் புத்"தாண்டு"என் றழைத்தோமோ? நேர்தான்!... வான்புகழ்சால் தமிழா,நீ தாண்டுவதற் கென்று - இவ் வையகத்து வாழ்க்கைதனில் எத்தனையோ உண்டு! தான்பிறந்த மண்சிறக்க, தடைகளெலாம் வென்று - நீ தாண்டிடுவாய்! தழைத்திடுவாய், சாதனைகள் கண்டு!…
-
- 6 replies
- 2.5k views
-