வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5554 topics in this forum
-
வர்த்தக சூதாட்டத்தால் வதைபடும் தமிழ் சினிமா! - தயாளன் 100 கோடி முதலீடு இருந்தால் தான் சினிமா எடுக்கணுமா? சிறிய பட்ஜெட் படங்களே கூடாதா? மலையாளம், கன்னடம்,தெலுங்கு, வங்க மொழிகளின் சிறிய பட்ஜெட் படங்கள் அங்கு அமோக வரவேற்பு பெறுகின்றன. இங்கு சிறிய பட்ஜெட் படங்கள் திரைக்கு வராமல் முடங்கும் சூழல் எப்படி ஏற்பட்டது? தமிழ் சினிமாவை கட்டுப்படுத்துவது யார்? திரைப்பட நடிகரும், தயாரிப்பாளருமான விஷால், “ஒரு கோடி முதல் 4 கோடி வரை பட்ஜெட் உள்ள படங்களை எடுக்க திரைத்துறைக்கு யாரும் வராதீர்கள். அதற்குப் பதில் அந்த பணத்திற்கு நிலம் வாங்கிப் போடுங்கள். 125 சிறு பட்ஜெட் படங்கள் முடங்கிக் கிடக்கின்றன. பெரிய பட்ஜெட் படங்கள் மட்டுமே தப்பிக்க முடியும்.…
-
- 0 replies
- 178 views
-
-
மார்க் ஆண்டனி: விமர்சனம்! SelvamSep 16, 2023 14:44PM ஒரு கமர்ஷியல் படத்தில் என்னவெல்லாம் இருக்க வேண்டும்? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வது கடினம். ஏனென்றால், என்னமாதிரியான படங்கள் வெற்றி பெறும் என்று எவராலும் கணிக்க முடியாது. உலகம் முழுக்க இதே நிலைமைதான். அதையும் மீறிச் சில சங்கதிகளைச் சொல்லலாம். புதிதாக, புத்துணர்வூட்டுவதாக, களிப்பூட்டுவதாக, நெஞ்சம் நெகிழ்வதாக, அடுத்து என்ன நிகழும் என்ற எதிர்பார்ப்பைத் தருவதாக, நாடி நரம்பை முறுக்கேற்றுவதாக, நமது கணிப்புகளைப் பொய்யாக்குவதாக ஒரு திரைக்கதை அமைய வேண்டும். ரசிகர்கள் ஒவ்வொருவரது விருப்பங்களையும் கணக்கில் கொண்டால், இன்னும் பல பாயிண்டுகள் சேரும். ஒட்டுமொத்தமாக நோக்கினால், படம் பார்த்து முடித்தபிறகு …
-
- 0 replies
- 287 views
-
-
'மறக்குமா நெஞ்சம்' - ஏமாற்றமடைந்த ரசிகர்களுக்கு ஏ.ஆர். ரஹ்மான் வேண்டுகோள் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், படங்களைத் தாண்டி பல நாடுகளில் இசைக் கச்சேரி நடத்தி வருகிறார். இவரது நிகழ்ச்சிக்கு சில நிமிடங்களிலேயே டிக்கெட் விற்பனையாகி சாதனை படைத்திருக்கிறது. இந்நிலையில் 'மறக்குமா நெஞ்சம்' என்ற தலைப்பில் கடந்த மாதம் 12ஆம் தேதி சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் தொடர்ந்து வெளிநாடுகளிலும் இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அன்று அரங்கில் மழை காரணமாக நீர் தேங்கியதால் ஒத்தி வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்காக பல்வேறு ஊர்களிலிருந…
-
- 3 replies
- 502 views
-
-
இசையமைப்பாளர் பரத்வாஜ் மொழி தெரியாத ஒருவர் இலங்கை தமிழ் வானொலியை கேட்டு தமிழ் இசையமைப்பாளர் ஆகி உள்ளார்.
-
- 0 replies
- 485 views
-
-
லியோ படத்தில் கை வைத்த சென்சார்! விஜய் நடித்துள்ள லியோ படத்தில் இடம்பெற்றுள்ள நா ரெடி பாடலின் வரிகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த பாடலின் சில வரிகளை சென்சார் போர்டு நீக்கியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரம் சர்ச்சை வருவதற்கு முன்பு பாடல் வரிகளை சென்சார் போர்டு ஏன் நீக்கவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது. விக்ரம் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், சஞ்சய் தத், அர்ஜுன், த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் லியோ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அக்டோபர் 19 ஆம் தேதி லியோ வெளியாகும் என அறிவிக்கப்பட்டு போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. …
-
- 0 replies
- 492 views
-
-
நடிகர் மாரிமுத்து காலமானார்! monishaSep 08, 2023 10:36AM இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து (57) மாரடைப்பால் இன்று (செப்டம்பர் 😎 காலமானார். தமிழ் சினிமாவில் இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து புலிவால், கண்ணும் கண்ணும் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்ததன் மூலம் ட்ரெண்டிங் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருந்தார். இதன் மூலம் சமீபத்தில் ஏராளமான நேர்காணல்களிலும் இடம் பெற்றிருந்தார் மாரிமுத்து. இறுதியாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் இன்று சீரியலுக்கு டப்பிங் பேசிக் கொண்டிருந்த போது காலை 8.30 மணியளவில் மாரிமுத்துவிற்கு திட…
-
- 7 replies
- 883 views
- 1 follower
-
-
தமிழ்க்குடிமகன் : விமர்சனம்! christopherSep 08, 2023 10:18AM சாதீயச் சடங்குகளுக்கு எதிரான வேள்வி! மனித வாழ்வில் பல்வேறு சடங்கு சம்பிரதாயங்கள் வந்துபோனாலும், பிறப்பும் இறப்பும் மிக முக்கியப் பங்கை வகிக்கின்றன. அவை தொடர்பான நம்பிக்கைகளும் வழக்கங்களும் கிராமங்களில் இன்றும் தொடர்ந்து வருகின்றன. அப்படியொரு சூழலில், ஈமச்சடங்குகள் செய்யும் நடைமுறைகளில் இருந்து விடுபட முனையும் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மனிதரின் வாழ்வைப் பேசுவதாக இருந்தது ‘தமிழ்க்குடிமகன்’ படத்தின் ட்ரெய்லர். இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ள இப்படத்தில் சேரன், ஸ்ரீபிரியங்கா, லால், அருள்தாஸ், வேல.ராமமூர்த்தி, எஸ்.ஏ.சந்திரசேகர், தீப்ஷிகா, துருவா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் நமக்குத்…
-
- 0 replies
- 213 views
-
-
காக்கா முட்டை', 'குற்றமே தண்டனை', 'ஆண்டவன் கட்டளை' வரிசையில் மணிகண்டனின் மற்றுமொரு சர்வதேச தரத்துக்கு இணையான நம்பிக்கை படைப்புதான் இந்த 'கடைசி விவசாயி'. பல வருடங்களுக்குப் பிறகு குலதெய்வ வழிபாட்டை நடத்த நினைக்கும் கிராமம். குல தெய்வத்துக்கு படைப்பதற்காக நெல் விளைவிக்கும் கிராமத்தின் கடைசி விவசாயி மாயாண்டி எதிர்பாராத ஒரு சிக்கலில் சிக்கிக்கொள்ள, அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார், கிராமத்தின் குலதெய்வ வழிபாடு எப்படி நடக்கிறது என்பதே ’கடைசி விவசாயி’ படத்தின் ஒன்லைன். முதியவர் மாயாண்டி கதாபாத்திரம்தான் கதையின் மையம். படத்தின் மிகப்பெரிய பலம் கதையின் நாயகன் விவசாயி மாயாண்டி கேரக்டரில் நடித்துள்ள நல்லாண்டி. மின்சார வசதிகூட இல்லாத வீட்டில், நவீன வாழ்க்கை அண்டாத ஒரு த…
-
- 4 replies
- 905 views
- 2 followers
-
-
நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி காலமானார் - சமூக வலைதளங்களில் இரங்கல் சென்னை ’அபூர்வ சகோதரர்கள்’, ‘அன்பே சிவம்’, ‘கார்கி’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்த ஆர்.எஸ்.சிவாஜி காலமானார். அவருக்கு வயது 66. நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி 1981ஆம் ஆண்டு வெளியான ‘பன்னீர் புஷ்பங்கள்’ திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவர் நடிகரும் இயக்குநருமான சந்தானபாரதியின் சகோதரர் ஆவார். ‘மீண்டும் ஒரு காதல் கதை’, ‘விக்ரம்’, ‘சத்யா’, ‘ஜீவா’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும், 1989ஆம் ஆண்டு வெளியான ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் இவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. ஜனகராஜுடன் சேர்ந்து இவர் பேசும் ‘எங்கேயோ போய்ட்டீங்க சார்’ என்ற வசனம் மிகவும் பிரபலம். …
-
- 4 replies
- 325 views
-
-
இயக்குநர் ஆன் ஹங் ட்ரான். பாலைவனத்தில் உச்சபட்ச தாகத்தோடு நடந்து செல்பவனுக்கு கைகளில் அள்ளிப் பருக சில்லென்று சிறு ஊற்றுநீர் கிடைத்தால் எப்படியிருக்கும்... அப்படி வியட்நாம் மக்களுக்கு கிடைத்தவர்தான் இயக்குநர் ஆன் ஹங் ட்ரான் (Anh Hung Tran). போர் முடிந்த பிறகு கூட அதையே நினைத்துக்கொண்டு அதையே படமாக எடுத்துக்கொண்டு அதன் இழப்புகளையே எந்நேரமும் அதன் வலியையே ரணங்களையே பேசிக் கொண்டிருந்தவர்களின் போக்கை மெல்ல மெல்ல மாற்ற வழி அமைத்தவர் ஆன் ஹங் ட்ரான். ஆரம்ப காலங்களில், அதாவது 30-களில் பெரும்பாலான வியட்நாம் படங்கள் கேலிக்கூத்து காமெடிகளாக இருக்கும். நீண்ட இடைவெளிக்கு, அதாவது போருக்குப் பிறகு வந்த படங்கள் போரின் ரணங்களையே பேசிக்கொண்டிருக்கும். சினிமா எ…
-
- 0 replies
- 194 views
-
-
கடந்த ஞாயிறு அன்று (27.08.2023) இந்தப் படம் பார்த்தேன். மிகப் புதுமையான திரைப்படம்! ‘சமுகச் சிக்கல்களைத் தட்டிக் கேட்கும் நாயகன்’ எனும் கதை தலைமுறை தலைமுறையாகப் பார்த்ததுதான். ஆனால் அதைச் சொன்ன விதத்தில் படம் தனித்து நிற்கிறது! ‘மண்டேலா’ எனும் உலகத்தரமான தூய இயல்பியப் (surrealism) படத்தைக் கொடுத்த இயக்குநர் மடோன் அசுவின், அடுத்து அதற்கு முற்றிலும் எதிரான மாய இயல்பியத்தை (magical realism) இந்தப் படத்தில் கதைக்களமாக எடுத்துக் கொண்டிருப்பது தன் திறமை மீது அவருக்குள்ள அலாதியான நம்பிக்கையைக் காட்டுகிறது. மாய இயல்பியத்தை அறிவுலக மேட்டிமைத்தனம் (intellectual arrogance) இல்லாமல் மக்கள் மொழியிலேயே சொல்ல முடியும் எனக் காட்டியதற்கே இவரைப் பாராட்டலாம்…
-
- 1 reply
- 392 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 27 ஆகஸ்ட் 2023 இந்திய தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நிறுவனமாக உருவெடுத்துள்ள லைகா நிறுவனம், தனது திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை இலங்கையில் ஆரம்பித்துள்ளது. இந்த நிறுவனத்தின் அங்குரார்பண நிகழ்வு கொழும்பு தாஜ்சமுத்திர நட்சத்திர ஹோட்டலில் மிகவும் பிரமாண்டமாக கடந்த வியாழன் அன்று நடைபெற்றது. நிறுவனத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஷ்கரன் தலைமையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டிருந்த மிக பிரமாண்ட மேடையில், பிரமாண்டமான முறையில் நிகழ்வுகள் நடைபெற்றன. இந்த நிகழ்விற்கு சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பின…
-
- 2 replies
- 384 views
- 1 follower
-
-
திரைப்பட விருதுகளும், பாஜகவின் அரசியலும்! விருதுகளின் பின்னணியில் இத்தனை வில்லங்கங்களா..? தேசிய விருதுகளுக்கு பாஜக அரசு வைத்துள்ள அளவுகோல்கள் என்ன? விருதுகளின் பின்னணியில் இருக்கும் அரசியலை விமர்சிக்காமல் கடப்பது அரசியல் தலைவர்களுக்கு அழகா..? யமுனா ராஜேந்திரன் நேர்காணல்; சர்ச்சைக்கு உள்ளான காஷ்மீர் ஃபைல்ஸ், விண்வெளி விஞ்ஞானியாக மாதவன் நடித்த ராக்கெட்டரி, கடைசி விவசாயி போன்ற படங்கள் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதே சமயம் ஜெய்பீம், கர்ணன், சர்தார் உத்தம் சிங், சார்பட்டா பரம்பரை போன்ற படங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் திரை விமர்சகரான யமுனா ராஜேந்திரன் விருது வழங்குவதன் அடிப்படை, அதிலுள்ள அரசியல் போன்றவை பற்றி இந்த நேர்காணலில் பேச…
-
- 1 reply
- 337 views
-
-
பிளாக் ‘n’ வைற் (Black and white ) திரைப்படம் பார்த்தேன். இந்த வருடம் வைகாசியில் வெளிவந்திருந்தது. Zee ரிவியில் ஒளிபரப்பி இருந்தார்கள். இப்பொழுது OTTயிலும், இணையத்தளத்திலும் பார்க்கக் கிடைக்கிறது. கொரோனா தொற்று நோய் நேரத்தில் இருந்து கதை ஆரம்பிக்கிறது. பாசமான குடும்பம். அம்மா, அப்பா, மகள், மகன் என நடுத்தரக் குடும்பத்தை மையப்படுத்தி இருக்கும் கதை. கொரோனாவால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் பெரும் பணத்தைச் செலவழித்து, கடன் சுமை தாங்காமல், ஒரு வருடத்துக்குள் மீண்டும் வாங்கிக் கொள்கிறோம் என்று சொல்லி ஐம்பது இலட்சங்களுக்கு தமது வீட்டை விற்று விடுகிறார்கள். ஒரு வருடத்தின் பின்னர் அவர்கள் வீட்டைத் திரும்ப வாங்கிக் கொண்டார்களா? என்பதுதான் கதை. கதை சொல்லும் விதம் புதுமைய…
-
- 0 replies
- 549 views
-
-
படக்குறிப்பு, தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் இன்று தனது 71-ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார் கட்டுரை தகவல் எழுதியவர், காவிய பிருந்தா உமாமகேஷ்வரன் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் இன்று தனது 71-ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். நூறு வருடத்தைக் கடந்து, பல்லாயிரக்கணக்கான நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களின் கனவோடும், உழைப்போடும் இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவில் கறுப்பு நிறம், பளீர் சிரிப்பு, வீர நடை, எப்பொழுதும் சிவந்த கண்கள், கணீர் குரல் என தனது தனித்தன்மைகளால் 150 திரைப்படங்களுக்கும் மேல் நடித்து தமி…
-
- 1 reply
- 455 views
- 1 follower
-
-
உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்து ஆசி வாங்கிய ரஜினிகாந்த்! இமயமலையில் தியானத்தை முடித்த நடிகர் ரஜினிகாந்த் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இல்லத்துக்கு சென்று அவரது காலில் விழுந்து ஆசி வாங்கினார். தன்னை விட 21 வருடங்கள் இளையவரான யோகி ஆதித்யநாத்தின் காலில் ரஜினி விழுந்தது விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. லக்னோ: உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் நடிகர் ரஜினிகாந்த் விழுந்து ஆசி பெற்றார். இதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகின்றன. நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து அண்மையில் வெளியாகிய திரைப்படம் 'ஜெயிலர்'. இந்த திர…
-
- 4 replies
- 685 views
- 1 follower
-
-
கறுப்புத் திரை. அதற்குப் பின்னால் சமூகத்தின் வெவ்வேறு வகையறா மனிதர்களின் குரல்கள் ஒவ்வொன்றாக ஒலிக்கின்றன. அவர்களுக்கென தனி முகங்கள் கிடையாது. பிரத்யேக பெயர்கள் கிடையாது. இங்கே நடக்கும் அன்றாட திருமணங்களில் பங்கேற்கும் அதே நான்கு பேர்தான் அவர்கள்!. ‘ரமேஷன் இன்னும் நல்ல பொண்ணா பாத்துருக்கலாம்’, ‘நகை ரொம்ப கம்மி’, ‘சாப்பாட்டுல உப்பில்ல’, ‘மண்டபம் சரியில்ல’, ‘பொண்ணு என்ன இப்படி இருக்கு’... இப்படியான பேச்சின் மூலம் வன்மம் கக்கும் சோகால்டு சொசைட்டியின் வழியே படத்தின் தொடக்கத்திலேயே அழுத்தமான கதைக்கான முன்னோட்டத்தைக் கொண்டு படத்தை அழகாக தொடங்குகிறார் இயக்குநர் சென்னா ஹெக்டே. மேற்கண்ட திருமணம் ரமேஷனுக்கும் (குஞ்சாக்கோ போபன்), ஸ்மிருதிக்கும் (வின்சி அலோஷியஸ்) நடக்கிறது.…
-
- 1 reply
- 339 views
-
-
வன்முறைக் கொண்டாட்டம் ராஜன் குறை மனிதர்களைத் தவிர பிற விலங்கினங்கள் எதுவும் தன் இனத்தையே கொல்வதையோ, அழிப்பதையோ ஒரு பழக்கமாகப் பயில்வது இல்லை. அப்படி ஒன்றிரண்டு நிகழ்ந்தாலும் அது அபூர்வமானதே. ஒரு விலங்கு பிற விலங்கு இனங்களைக் கொல்வதுகூட உணவுக்காகவோ, தற்காப்புக்காகவோ இருக்குமே தவிர, தேவையற்று கொல்வது இல்லை. ஆனால், மனித இனம் போரை, கூட்டமாக பிற மனிதர்களைக் கொல்வதைத் தொழிலாக, வித்தையாக, கலையாக, அறிவியலாக, தத்துவமாக வளர்த்தெடுத்துள்ளது. விலங்குகளைக் கொல்வதோ ஒரு விளையாட்டாகவே கருதப்பட்டுள்ளது. இப்படி ஒரு கொலையார்வம் இருந்தாலும் மிருகங்களைவிட நாகரீகமும், பகுத்தறிவும் உள்ள இனம் என்று மனிதம் தன்னைக் கருதிக்கொள்ளவும் செய்கிறது. மனித இனத்தின் அடிப்படை உள்முரண் ஒன்…
-
- 0 replies
- 429 views
-
-
இன்று தூவானம் திரையிடப்படுகிறது என்பதாலேயோ தெரியவில்லை சிட்னியிலும் மழைபெய்து ஓய்ந்தாலும் மழைத் தூறல் இருந்து கொண்டிருந்தது. திரையரங்கு நிரம்பிருக்க படத்தின் முதல் காட்சி கூத்து நிகழ்ச்சியுடன் ஆரம்பமாகிறது. அபிமன்யு சூழ்ச்சியால் இறப்பதை கூறியபடி படம் தொடங்குகிறது. காலை வேளையில் முருகண்டிப் பிள்ளையார் கோவிலையும் அதன் சுற்றுப்புறத்தையும்பார்க்கும் பொழுது 30 வருடங்களின் போனவருக்கு இருந்த உணர்வுதான் அடிக்கடி ஊருக்குப் போவோருக்கும் இருக்கும் என நம்புகிறேன். தனது பழைய நினைவுகளை பிள்ளைகளுடன் மீண்டுக்கொண்டு வருபவரை, தங்கையின்தொலைபேசி குழப்புகிறது.. காலை சாப்பாட்டிற்கு என்ன செய்யிறது என படத்தின் முக்கிய கதாபாத்திரத்தின் தங்கை கேட்கும் பொழுது எனது சகோதரி நான் கிள…
-
- 13 replies
- 1.2k views
-
-
திருச்சியில் பெண்களை குறிவைத்து ஒரே ஃபார்மெட்டில் தொடர் கொலைகள் நிகழ்த்தப்படுகின்றன. எந்தவித தடயமும் கிடைக்காததால் குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடியாமல் உள்ளூர் காவல் துறை திணறுகிறது. இதனால், இந்த வழக்கு கிரைம் பிரான்ச் எஸ்.பி.லோகநாதனிடம் (சரத்குமார்) ஒப்படைக்கப்படுகிறது. அவரிடம் புதிதாக டிஎஸ்பியாக பணி நியமனம் பெற்ற பிரகாஷ் (அசோக் செல்வன்) பயிற்சிக்காக இணைகிறார். சைக்கோ கொலைகாரனை கண்டுபிடிக்கும் முயற்சியில் இருவரும் விசாரணையை தொடங்குகின்றனர். இறுதியில், கொடூரக் கொலைகளை அரங்கேற்றும் சீரியல் கில்லர் யார்? எதற்காக அவர் இப்படியான கொலைகளை செய்கிறார்? பின்புலம் என்ன? - இதையெல்லாம் சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியில் சொல்லியிருக்கும் படம்தான் ‘போர் தொழில்’. முறையான…
-
- 4 replies
- 671 views
-
-
Oppenheimer- “Prometheus stole fire from the gods and gave it to man. For this he was chained to a rock and tortured for eternity.” என்ற கிரேக்க தேச புராணகதை வசனங்களுடன் தொடங்குகிறது Oppenheimer திரைப்படம். அணுகுண்டின் தந்தை என வர்ணிக்கப்படும் Julius Robert Oppenheimerன் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஒரு வரலாற்றுத் திரைப்படம். முக்கியமாக அவரது இளமைப்பருவம், இரண்டாம் உலகப்போரின் முக்கிய அங்கமான மான்ஹட்டன் திட்டத்தில் அவரின் பங்களிப்பு, புகழின் உச்சியிலிருந்து அவரது சரிவு என்பவற்றை விபரிக்கிறது. பரிசோதனைக் கூடத்தை அதிகம் விரும்பாத கோட்பாடுகளில் அதீத ஈடுபாடு கொண்ட ராபர்டை, மான்ஹட்டன் திட்டம் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது. அதன் பின் அவர் எவ்…
-
- 9 replies
- 1.3k views
-
-
’அண்ணாத்த’ - ‘பீஸ்ட்’ என்ற இரு தோல்விகளுக்குப் பிறகு ஒரு ஹிட் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயம் ரஜினி - நெல்சன் இருவருக்குமே இருந்தது. ‘கபாலி’ திரைப்படத்துக்குப் பிறகு சிறப்பான ஓபனிங் என்று சொல்லப்படும் அளவுக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘ஜெயிலர்’, ரஜினி - நெல்சன் இருவருக்கும் கம்பேக் ஆக அமைந்ததா என்று பார்க்கலாம். சிட்டியில் சிலை கடத்தும் கும்பல் ஒன்று பல்வேறு கோயில் சிலைகளை திருடி வெளிநாடுகளுக்கு கடத்தி வருகிறது. இதனைத் தடுக்க பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறார் போலீஸ் அதிகாரியான அர்ஜுன் (வசந்த் ரவி). சிலை கடத்தல் கும்பலின் தலைவனான (விநாயகன்) எதற்கும் வளைந்து கொடுக்காமல் நேர்மையாக இருக்கும் அர்ஜுனை கடத்திக் கொல்கிறார். இதனால் நிலைகுலைந்து போகும் அர்ஜுனி…
-
- 4 replies
- 503 views
-
-
இயக்குநர் சித்திக் : வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் 'நேசமணிகளை' உருவாக்கியவர் பட மூலாதாரம்,SIDDIQUE கட்டுரை தகவல் எழுதியவர், காவிய பிருந்தா உமாமகேஷ்வரன் பதவி, பிபிசி நியூஸ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் சித்திக் நேற்று மாரடைப்பால் (ஆகஸ்ட்-8) காலமானார். அவருக்கு வயது 69. விஜய்யின் “பிரண்ட்ஸ்”, “காவலன்”, விஜயகாந்தின் “எங்கள்அண்ணா”, நடிகர் பிரசன்னாவின் “சாது மிரண்டா", நடிகர் அரவிந்த் சாமியின் “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” உள்ளிட்ட திரைப்படங்களை இவர் இயக்கியிருக்கிறார். இயக்குநர் சித்திக்கின் மறைவுக்கு ரசிகர்களும…
-
- 0 replies
- 205 views
- 1 follower
-
-
நேற்று ஊர்வசி நடித்த அப்பாத்தா திரைப்படம் பார்த்தேன். ஊர்வசியின் 700வது திரைப்படம் என்று விளம்பரம் செய்திருந்தார்கள். படம் ஆரம்பத்தில் அமைதியாகப் போய்க் கொண்டிருந்தது. தனது மகன் கேட்டுக் கொண்டதற்காக சென்னை வருகிறார் ஊர்வசி. மகன் பாசத்தால் தாயைக் கூப்பிடவில்லை மாறாக அவன் குடும்பத்துடன் சுற்றுலா போகும் போது தனது நாயை கவனிக்கவே கூப்பிடுகிறான் என்ற கட்டத்தில் இருந்து படம் கலகலப்பாகப் போகிறது. ‘ஊர்வசி ஒரு நடிப்பு ராட்சசி’ என்று கமல்ஹாசன் ஒருதடவை சொல்லியிருந்தார். அது இந்தப் படத்திலும் தெரிகிறது. படத்தை பிரியதர்சன் இயக்கி இருந்தார். பழைய பாணியிலேயே படம் இருந்தது. ஆனாலும் பார்க்கும் போது அடுத்தது என்ன என்ற ஆர்வம் இருந்தது. குடும்பமாகப் பார்க்கலாம்.
-
- 0 replies
- 424 views
-
-
பட மூலாதாரம்,JANASENA PARTY/FACEBOOK படக்குறிப்பு, நடிகர் பவன் கல்யாண் கட்டுரை தகவல் எழுதியவர், காவிய பிருந்தா உமாமகேஷ்வரன் பதவி, பிபிசி தமிழுக்காக 30 ஜூலை 2023, 07:44 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பின் (ஃபெஃப்சி) (Film Emloyees Federation Of South India) புது விதிகள் குறித்து தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் கருத்து தெரிவித்தது சினிமா வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு, ஃபெஃப்சி புதிய விதிகளை அறிவித்திருந்தது. தமிழ் திரைப்படங்களில், தமிழ் தொழில…
-
- 0 replies
- 179 views
- 1 follower
-