வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
சிலருக்கு மட்டுமே உருமாற்றம் சாத்தியம். பிரகாஷ்ராஜ் இதில் டாக்டரேட்! புரியவில்லை? ஒரு படத்தில் துரத்தி துரத்தி காதலித்து விட்டு அடுத்தப் படத்தில் அதே நடிகைக்கு அப்பாவாக நடிப்பது சாதாரணமா? எஸ்., பிரகாஷ்ராஜுக்கு இது சாதாரணம் மனிதர் ஐ லவ் யூடா செல்லம் என ஒரு படத்தில் மிரட்டுவார். அடுத்தப் படத்தில் சிரிப்பு வைத்தியம் என்று கிச்சு கிச்சு மூட்டுவார். இன்னொன்றில் பீத்தேவன் பிறந்த நாளுக்கு பீர் குடித்து நம் வயிற்றை புண்ணாக்குவார். பீடிகை போதும். விஷயத்துக்கு வருவோம். ராதாமோகனின் புதிய படத்தை அதே பழைய பிரகாஷ்ராஜின் டூயட் மூவிஸ் தயாரிக்கிறது. பிரகாஷ்ராஜ் படத்தின் பிரதான கேரக்டர். இன்னொருவர் த்ரிஷா. 'கில்லி' படத்தில் ஐ லவ் யூடா செல்லம் என த்ரிஷாவை துரத்தி துரத்தி ஸாரி,…
-
- 0 replies
- 927 views
-
-
'பாகுபலி' ரிலீஸையொட்டி கல்லூரிக்கு விடுமுறை விடுங்கள், இல்லாவிட்டாலும் வரமாட்டோம்: பி.இ. மாணவர்கள். ஹைதராபாத்: பாகுபலி படம் ரிலீஸாவதையொட்டி ஜூலை 10ம் தேதி அன்று விடுமுறை விடக் கோரி தெலுங்கானாவைச் சேர்ந்த என்ஜினியரிங் மாணவர்கள் கல்லூரி முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளனர். எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, தமன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள பாகுபலி படம் இன்று பிரமாண்டமாக ரிலீஸாகியுள்ளது. இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் மெட்சல், ஹைதராபாத்தில் உள்ள சிஎம்ஆர்ஐடி கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் முதல்வருக்கு வியாழக்கிழமை கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் அவர்கள் கூறியிருப்பதாவது, மதிப்பிற்குரிய ஐயா, சிஎம்ஆர்ஐடி கல்லூரியில் உள்ள சிஎஸ்இ டிபார்ட்மென்ட்டைச் சேர்ந்த மாணவர்கள…
-
- 0 replies
- 988 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், தேஜா லேலே பதவி, பிபிசி செய்தியாளர் 21 ஏப்ரல் 2024 ஆயுர்வேதம், 3,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தோன்றியது. இந்த பண்டைய மருத்துவ முறையின் மறுமலர்ச்சி மையமாக கேரளா உள்ளது. கேரளாவிற்கு விடுமுறையைக் கழிக்கச் சென்ற ஷில்பா ஐயர், ஆயுர்வேத சிகிச்சைக்கு புகழ் பெற்ற ‘ஆர்ய வைத்யா சாலா’ அமைந்துள்ள கோட்டக்கல் நகரத்திற்குச் செல்ல முடிவு செய்தார். இந்த மையம் 1902ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. ஏழு நாட்கள் அங்கு தங்கி, உடல் மற்றும் மனதை தூய்மைப்படுத்தும் மற்றும் புத்துணர்ச்சியூட்டும் சிகிச்சையான பஞ்சகர்மாவை முடித்த பிறகே அந்த சிகிச்சை மையத்தை விட்டு வெளியேறினார…
-
- 0 replies
- 295 views
- 1 follower
-
-
இன்று தமிழ் தொலைக்காட்சிகளில் சினிமா.சினிமா..சினிமா. 'சினிமாவைத் தவிர வேறொன்றும் தெரியாது பராபரமே!' என்கிறார்கள் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள். சினிமாவை விட்டால் வருடக்கணக்கில் நீளும் அரைத்த மாவையே அரைக்கும் நெடுந்தொடர்கள். நல்ல நிகழ்ச்சிகளும் வருகின்றன. அவை மிக சொற்ப அளவில் உள்ளன என்பது தான் நம் ஆதங்கமே. ஊறுகாய் போலத் தொட்டுக்கொள்ள வேண்டிய விஷயங்களே சாப்பாடாய் ஆகிப்போனது வருந்தத்தக்க விஷயம். நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக்கொண்டு கெட்ட விஷயங்கள் என்று நினைப்பவற்றைப் புறந்தள்ளிவிட வேண்டியது தானே என்று ஒரு குரல் கேட்கிறது. அய்யா...உங்கள் அளவுக்குப் பக்குவம் அடைந்தவர்கள் எண்ணிக்கை மிக மிக மிகக் குறைவு என்பது தான் வேதனையே. உடலில் புண் இருந்தால் அதைச்சுற்றி அரிப்…
-
- 0 replies
- 954 views
-
-
ஏகப்பட்ட எதிர்பார்ப்பு ... கமல் பத்து வேடத்துல நடிக்கிறார் , எழுபது கோடி பொருட் செலவு ... இருந்தாலும் எப்பவும் போல மற்ற எல்லா படங்களையும் போல இது ஒரு சாதா தமிழ் படம் தான் . இப்படி எக்க சக்கமா செலவு பண்ணி 'உலக தரம்' வாய்ந்த படம் கொடுக்க மெனக்கெடும் நடிகரோ அல்லது டயரடக்கரோ எதற்காக கமலுக்கு பத்து கதா பாத்திரம் கொடுக்க வேண்டும். கமலை தவிர வேற யாருக்கும் நடிக்க வராதா???... சும்மா எல்லாத்தையும் நாமே செய்வோம்-தர வெட்டி பெருமைய தவிர வேறொன்றும் இல்லை. உதாரணம், படம் முடிவில் கடைசியாக உணர்ச்சிவச பட்டு பேசும் தொன்நூத்தி அஞ்சு வயசு பாட்டி மனம் உருகும் பேச்சு கூட - அந்த பாட்டி கமல் தான் என்பதால் அந்த கட்சி மனதை சற்றும் பாதிக்கவில்லை. அதுவே மற்றொரு உண்மையான தொன்நூத்தி அஞ்சு வய…
-
- 0 replies
- 1.1k views
-
-
Karnan- Realeased first on 14th Jan 1964, first digitised film in Tamil to get wide release in 2012 ran for 150 days collected more than 10 Crores.My take on that film. கதைகளில் மகாபாரதத்தை மீறிய Epic உலகளவில் இல்லாதது போல ,கர்ணனை மீறிய பாத்திர படைப்பு இது வரை உலகம் கண்டதில்லை. வீரபாண்டிய கட்டபொம்மனை குறிப்பிடும் போது ஒரே single agenda , ஒரே பகைவன், ஒரு சில ஆள்காட்டிகள் என்பதோடு பன்முக தன்மை இல்லாத பாத்திரம். ஆனால் கர்ணனோ மிக பெரிய பராக்கிரம சாலியும் அவன்தான். உலகத்தின் மிக துர்பக்கியசாலியும் அவன்தான். மிக மிக போற்ற பட்ட மனிதனும் அவன்தான். ஆனால் எதிரிகளாலேயே சூழ பட்டு வாழ்ந்த மனிதனும் அவன்தான். எல்லோரும் கவனம் செலுத்திய மனிதனும் அவன்தான். ஆனால் தாய் முதல் ,வாழும் குல…
-
- 0 replies
- 793 views
-
-
திரை விமர்சனம்: தர்மதுரை இயக்குநர் சீனு ராமசாமி ‘நீர்ப் பறவை’ திரைப்படத்துக்குப் பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து இயக்கியிருக்கும் படம் ‘தர்மதுரை’. மருத்துவர்கள் கிராமங் களுக்குப் பணியாற்ற செல்லத் தயங்கக் கூடாது என்பதை குடும்ப ‘நாடக’ பின்னணியில் சொல்ல முற்பட்டிருக்கிறது இந்தப் படம். மருத்துவரான தர்மதுரை (விஜய் சேதுபதி) தொழிலைக் கவனிக்காமல் குடிப் பழக்கத்துக்கு அடிமையாகிக் குடும்பத்தினருக்குத் தொல்லை கொடுத்துவருகிறார். நான்கு சகோதரர்கள், ஒரு சகோதரி என ஐந்து பேரைக் கொண்ட குடும்பத்தை அவர்களுடைய அம்மா பாண்டி யம்மா (ராதிகா) ஒற்றுமையாக வைத்திருக்க முயற்சி செய்கிறார். தங்களுடைய தொழிலுக்கு இடைஞ்சலாக இருப்பதால், தர்மதுரையை ஒழித்து…
-
- 0 replies
- 389 views
-
-
மீண்டும் ஜேம்ஸ்பொண்ட் படங்களில் நடிப்பதற்காக டேனியல் கிறேக்குக்கு 2,230 கோடி ரூபா 2016-09-11 09:33:04 ஜேம்ஸ்பொண்ட் வேடத்தில் மீண் டும் நடிப்பதற்காக டேனியல் கிறேக்குக்கு 150 மில்லியன் டொலர்களை (சுமார் 2,230 கோடி ரூபா) வழங்க தயாரிப்பாளர்கள் முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கெசினோ ரோயல் (2006), குவாண் டம் ஒவ் சோலாஸ் (2008), ஸ்கை போல் (2012), ஸ்பெக்ரர் ஆகிய நான்கு திரைப்படங்களில் ஜேம்ஸ்பொண்ட் வேடத்தில் டேனியல் கிறேக் நடித்தார். தொடர்ந்தும் ஜேம்ஸ் பொண்ட் வேடத்தில் நடிப்பதற்கு தான் விரும்பவில்லை என அவர் தெரிவித்திருந்தார். அதையடுத்து ஜேம்ஸ் பொண்ட் வேடத்தில் நடிக்கவிருப்பார் ய…
-
- 0 replies
- 235 views
-
-
சிலருக்கு ‘அபிராமி' எனும் காரணத்தால், சிலருக்கு 'கமல்' எனும் காரணத்தால், சிலருக்கு ‘ரோஷினி' எனும் காரணத்தால், சிலருக்கு 'மனிதர்கள் உணர்ந்துகொள்ள இது மனிதக் காதலல்ல' எனும் காரணத்தால்... இப்படி, நம்மில் பலருக்கு வெவ்வேறு காரணங்களால், ‘குணா' திரைப்படம் நமக்குப் பிடித்தமான திரைப்படங்களின் பட்டியலில் இடம்பெற்றிருக்கும்! 90-களின் ஆரம்பம் தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் புதிய உத்வேகத்தைத் தந்த காலம். கதைக்கு முக்கியத்துவம் கொண்ட திரைக்கதைகளுடன் பல இயக்குநர்கள் வந்தனர். அந்தக் கதைகளுக்காக நாயகர்களும் தங்களின் ‘ஸ்டார் வேல்யூ' பற்றியெல்லாம் கவலைப்படாமல் நடிக்க ஆரம்பித்தனர். அந்தக் கணக்கை கமல் ஆரம்பித்து வைத்தார் என்று சொன்னால் அதில் மிகையில்லை. மனநலம் பிறழ்ந்த நாயகன், …
-
- 0 replies
- 424 views
-
-
நியோகா By அனோஜன் பாலகிருஷ்ணன் நியோகா திரைப்படத்தை இறுதியில் கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி திரையரங்கில் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. இத்திரைப்படம் இலங்கையில் பிறந்து புலம்பெயர்ந்து தற்பொழுது கனடாவில் வசிக்கும் எழுத்தாளரும் நடிகரும் குறும்பட இயக்குநருமான சுமதி பலராமனால் எழுதி இயக்கப்பட்ட முழுநீளத் திரைப்படமாகும். போருக்குப் பின்பான விளைவுகளைப் பேசும் இலக்கியங்கள் ஓரளவுக்கு எழுதப்பட்டுவிட்டன. ஆனால், காண்பியக் கலையில் அவற்றைப் பேசுவது தற்பொழுதுதான் ஓரளவுக்கு அதிகரிக்கின்றது. நியோகா திரைப்படமும் போருக்குப் பின்பாக இடைவிடாது துரத்தும் துன்பமான விளைவு ஒன்றைப் பெண்களின் உணர்வுத் தளத்திலிருந்து பேசுகின்றது. …
-
- 0 replies
- 391 views
-
-
படகுப் பயணம் சட்டத்தை மீறுவதாகாது என்றே நினைக்கிறேன்: கார் சர்ச்சைக் குறித்து அமலாபால் படகுப் பயணம் சட்டத்தை மீறுவதாகாது என்றே நினைக்கிறேன் என்று கார் சர்ச்சைக் குறித்து அமலாபால் தெரிவித்துள்ளார். வாகனங்களுக்கு அளிக்கப்படும் குறைந்த வரியைப் பெற புதுச்சேரியில் தங்கி இருப்பது போன்று ஆவணங்களைத் தயாரித்து திரை நட்சத்திரங்கள் தொடங்கி விஐபிக்கள் வரை பலரும் உயர் ரக கார்களைப் பதிவு செய்து வருவது உறுதியாகியுள்ளது. நடிகை அமலாபால், நடிகர் பகத் பாசில் என புதுச்சேரியில் கார் பதிவு செய்தோர் விவரங்களை போலீஸார் திரட்டி வருவதால் பலர் கலக்கமடைந்துள்ளனர். இந்த சர்ச்சைத் தொடர்பாக அமலாபால் தனது…
-
- 0 replies
- 226 views
-
-
சினிமா செய்திகள் கமல் கூட்டத்தை தவிர்த்த ரஜினி, சரித்திர நாயகியாக சன்னி லியோன் பகிர்க முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் உருவாக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள சில தமிழ் திரைப்படங்கள் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள். காவிரிக்காக கமல் நடத்திய கூட்டம் காவிரிக்கான தமிழகத்தின் குரல் என்ற தலைப்பில் கமல்ஹாசன் அனைத்து கட்சி கூட்டம் நடத்தினார். ஆனால் தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட 9 கட்சிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. பா.ம.க சார்பில் அன்புமணி ராமதாஸ், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தங்க தமிழரசன், ஆம் ஆத்மி கட்சியின் வசீகரன் மற்றும் விவசாய சங்கங்களின் தலைவர்கள் பி.ஆர் பாண்டியன், தெய்வ சிகாமணி …
-
- 0 replies
- 543 views
-
-
பட மூலாதாரம்,VIDUTHALAI MOVIE கட்டுரை தகவல் எழுதியவர்,கவியரசு வி பதவி,பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் நாவல்களைத் தழுவி வெற்றிமாறன் உருவாக்கிய படங்கள் அனைத்தும் விமர்சனரீதியாகவும் வர்த்தகரீதியாகவும் வெற்றியடைந்தவை என்பது தமிழ் சினிமா அறிந்ததுதான். இருப்பினும் அவருடைய படங்கள் அவை தழுவி எடுக்கும் புனைவுகளுக்கு முழுதும் நியாயம் செய்தனவா என்ற கேள்வி தொடர்ந்து விவாதமாக்கப்பட்டு வருகிறது. இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘விடுதலை’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. ஜெயமோகனின் ‘துணைவன்’ என்னும் சிறுகதையைத் தழுவி உருவாகியுள்ள இந்தப் படம், விமர்சனரீதியாகவும் வர்த்தகரீதியாகவும் ரசிகர்களிடை…
-
- 0 replies
- 194 views
- 1 follower
-
-
சோனாக்ஷி காட்டில் அடை மழை திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014 லிங்கா திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தென்னிந்திய சினிமாவில் கால்பதித்துள்ள சோனாக்ஷி சின்ஹாவுக்கு பாராட்டுகளும் வாய்ப்புகளும் குவிகின்றன. புதிய தமிழ்ப் திரைப்படங்களில் நடிக்க அவருக்கு பெரிய இயக்குநர்களிடமிருந்து அழைப்புகள் வந்தாலும், நல்ல கதைக்காக அவர் காத்திருப்பதாகக் கூறியுள்ளார். லிங்காவில் ராஜா லிங்கேஸ்வரன் பாத்திரத்தில் வரும் ரஜினியின் ஜோடி சோனாக்ஷி. ஹிந்திப் திரைப்படங்களில் தாராள கவர்ச்சியுடன் நடிக்கும் சோனாக்ஷிக்கு இந்தப் திரைப்படத்தில் பழங்கால தமிழ்ப் பெண்களைப் போல, ரவிக்கையில்லாமல் புடவை கட்டி நடிக்க வேண்டிய வேடம். அவரும் சிறப்பாக நடித்திருந்தார். அனுஷ்காவை விட ச…
-
- 0 replies
- 677 views
-
-
ஓர் ஆண்டுக்கும் மேலாக பேச்சு வார்த்தை இல்லாமல் இருந்த இளையராஜா-எஸ்.பி.பி மீண்டும் சந்திப்பு ராஜா, எஸ்.பி.பி போடா எல்லாம் விட்டுத்தள்ளு பழச எல்லாம் சுட்டுத்தள்ளு "நட்புனான என்னான்னு தெரியுமா" இந்த வசனம் யாருக்கு பொருந்துமோ இல்லையோ இளையராஜாவுக்கும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கும் நிச்சயம் பொருந்தும். நண்பர்களுக்குள் சண்டைகளும் சகஜம்தானே. ஆம், கிட்டத்தட்ட ஓர் ஆண்டுக்கும் மேலாகப் பாடல்களில் ராயல்டி பிரச்னையால் இருவரையும் முன்னர் போல் ஒன்றாக மேடைகளில் பார்க்க முடியவில்லை. தற்போது இருவரும் ஒரே மேடையில் இணைந்து இசைக் கச்சேரியில் பங்கேற்கவுள்ளனர். எஸ்.பி.பி, மனோபாலா, ராஜா Vikatan ஜூன் 2 ம் தேதி …
-
- 0 replies
- 544 views
-
-
தலை எழுத்து இது ஒரு படத்தின் பெயர்தான். நியூசிலாந்தில் நடந்த ஒர் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்தப் படத்தின் கதை. கொக்கி பட சஞ்சனா மீரா கிருஷ்ணன், குள்ள நடிகர் பக்ரூ ஆகியோர் நடிக்கிறார்கள்.நாயகனாக நடிக்கும் ரிச்சர்ட் ராஜின் தலை எழுத்தை இந்தப் படம் மாற்றுமா? **** வடிவேலு மூன்று வேடங்களில் நடிக்கும் இந்திர லோகத்தில் நா அழகப்பன் படத்தில் ஸ்ரேயா ஒரே ஒரு பாடலுக்கு நடனமாட அழைத்ததும் ஒப்புக் கொண்டுவிட்டாராம். "மல்லிகா ஷெராவத்தா மர்லின் மன்றோவா " என்ற பாடல் காட்சியில் வடிவேலுவின் பாடி லாங்குவேஜைப் பார்த்து சிரிப்பை அடக்க முடியவில்லையாம். (வடிவேலுவிற்கும் ஸ்ரேயாவின் பாடி லாங்குவேஜ் ரசிக்காதா என்ன?) ஸ்ரேயா வடிவேலுவின் தீவிர ரசிகையாம். டி. வி யில் வடிவேலுவின் காமெ…
-
- 0 replies
- 1k views
-
-
சிம்பு - அனிருத்தின் பீப் விவகாரம் அடங்கும் முன்பே, இன்னொரு ஆபாச சர்ச்சை. இது இரு நடிகைகள் தொடர்பானது. நடிகைகள் பூஜா, பார்வதி மேனன் ஆகிய இருவரும், தங்கள் உடல் அழகை ஆபாச வார்த்தைகளால் சமூக வலைத்தளத்தில் வர்ணித்த ரசிகர்கள் மீது 2 பேருக்கு ஆவேசமாக பாய்ந்து பதிலடி கொடுத்துள்ளனர். பூஜா, ‘நான் கடவுள்' படத்தில் நடித்து பிரபலமானவர். பார்வதி மேனன், ‘சென்னையில் ஒருநாள், மரியான், உத்தம வில்லன் போன்ற படங்களில் நடித்துள்ளார். பூஜாவின் பேஸ்புக்கில் ரசிகர் ஒருவர் புகுந்து நீங்கள் பிங்க் நிற ஆடையில் மிகவும் கவர்ச்சியாக இருக்கிறீர்கள் என்று கருத்து பதிவிட்டு விட்டு தொடர்ந்து அவரது முன்னழகைப் பற்றி ஆபாசமாக எழுதியுள்ளார். …
-
- 0 replies
- 386 views
-
-
இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் தமிழ்சினிமாவில் பாரதிராஜா விதைத்த மண்வாசனை கமழ்ந்து கொண்டே இருக்கும். சினிமாவில் மட்டுமன்றி சீரியலிலும் இதனை சாத்தியப்படுத்த களமிறங்கிவிட்டார் இயக்குனர் இமயம். தெக்கித்திப்பொண்ணு பாரதிராஜா இயக்கும் நெடுந்தொடர் இது. கலைஞர் தொலைக்காட்சியில், வரும் தமிழ் புத்தாண்டு முதல் ஒளிபரபாகவுள்ள இத்தொடருக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். ரத்னகுமார் கதைக்கு தேன்மொழி, சிவாஜி, ரோஸ்முகிலன் ஆகியோர் வசனம் எழுதுகின்றனர். நெப்போலியன், வாகை சந்திரசேகர், ரஞ்சிதா, சொர்ணமால்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இத்தொடர் குறித்து இன்று நிருபர்களிடம் பகிர்ந்து கொண்டார் பாரதிராஜா :- மூணு கிராமத்தைச் சேர்ந்த, மூன்று குடும்பங்களில் நடக்கும் கதைதான் இது. தலைமுற…
-
- 0 replies
- 756 views
-
-
தன் மகள் இயக்கத்தில் நடித்துக்கொடுத்துவிட்டு நிம்மதியாக உட்கார்ந்துவிட்டார் ரஜினிகாந்த். கடைசியாக கோச்சடையான் திரைப்படத்தில் இளவரசன் செங்கோடகனாக நடிக்கும் சரத்குமார் சமீபத்தில் தான் டப்பிங் பேசிமுடித்தார். கோச்சடையான் திரைப்படத்திற்கான டப்பிங் வேலைகளும் முடிந்துவிட்ட நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் திரைப்படத்திற்கு பின்னணி இசை சேர்க்கும் பணிகளை துவங்கிவிட்டார். படப்பிடிப்பு எப்போதோ முடிந்து இன்னும் ரிலீஸ் பற்றி செய்தி வரவில்லையே என ரசிகர்கள் சௌந்தர்யாவின் டுவிட்டர் அக்கவுண்டை சுற்றி சுற்றியே வந்துகொண்டிருந்தனர். படப்பிடிப்பை விட கிராஃபிக்ஸ் வேலைகள் தான் அதிகம் என்பதால் ஸ்டூடியோவிலேயே அதிக நேரத்தை செலவிட்டுக் கொண்டிருக்கிறது கோச்சடையான் டீம். இந்நிலையில் ரசிகர் ஒரு…
-
- 0 replies
- 343 views
-
-
2006ம் ஆண்டுக்கான சினிமா முடிவுகள், அஜீத் முன்னிலையில். Thursday, 11 January 2007 ஒவ்வொரு வருடமும் தமிழ்சினிமா.காம் இணையதளம் நடத்தி வரும் சினிமா தேர்தல் அனைத்து தரப்பினராலும் கவனிக்கப்படுவதை வாசகர்கள் அனைவரும் அறிவீர்கள். இந்த முறையும் 2006-ம் ஆண்டின் சிறந்த நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் உள்ளிட்ட திரைப்பட துறையின் பல்வேறு அங்கங்கள் குறித்து இவ் இணையதள ரசிகர்களின் எண்ணங்களை பதிவு செய்துள்ளனர். கடல் அலை போல் வந்து குவிந்த வாக்குகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் விபரம் கீழே வருமாறு- சிறந்த நடிகர் அஜீத் குமார் 49.9 சதவீதம் விஜய் 19.8 சதவீதம் சூர்யா 6.4 சதவீதம் மற்றவர்கள் 26 சதவீதம் சிறந்த நடிகை அசின…
-
- 0 replies
- 903 views
-
-
பிளாக் ‘n’ வைற் (Black and white ) திரைப்படம் பார்த்தேன். இந்த வருடம் வைகாசியில் வெளிவந்திருந்தது. Zee ரிவியில் ஒளிபரப்பி இருந்தார்கள். இப்பொழுது OTTயிலும், இணையத்தளத்திலும் பார்க்கக் கிடைக்கிறது. கொரோனா தொற்று நோய் நேரத்தில் இருந்து கதை ஆரம்பிக்கிறது. பாசமான குடும்பம். அம்மா, அப்பா, மகள், மகன் என நடுத்தரக் குடும்பத்தை மையப்படுத்தி இருக்கும் கதை. கொரோனாவால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் பெரும் பணத்தைச் செலவழித்து, கடன் சுமை தாங்காமல், ஒரு வருடத்துக்குள் மீண்டும் வாங்கிக் கொள்கிறோம் என்று சொல்லி ஐம்பது இலட்சங்களுக்கு தமது வீட்டை விற்று விடுகிறார்கள். ஒரு வருடத்தின் பின்னர் அவர்கள் வீட்டைத் திரும்ப வாங்கிக் கொண்டார்களா? என்பதுதான் கதை. கதை சொல்லும் விதம் புதுமைய…
-
- 0 replies
- 546 views
-
-
இதை பாருங்கள் http://tamilvideo.info/view_video.php?view...amp;category=mr
-
- 0 replies
- 1.1k views
-
-
'ஜெயம்', 'எம்,குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி', 'உனக்கும் எனக்கும்' படங்களுக்குப் பிறகு ஜெயம் ரவியை வைத்து அவரது அண்ணன் ராஜா இயக்கியிருக்கும் படம், 'சந்தோஷ் சுப்பிரமணியம்'. தெலுங்கு 'பொம்மரிலு' படத்தின் ரீ-மேக்கான இதில் ஜெயம் ரவியின் அப்பாவாக பிரகாஷ்ராஜ் நடித்துள்ளார். அம்மா கீதா. இவர்களுடன் கவுசல்யா, சந்தானம், பிரேம்ஜி அமரன் ஆகியோரும் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாதிதின் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகி உள்ளன. வரும் பன்னிரெண்டாம் தேதி படம் வெளியாகிறது. அதற்குமுன் தணிக்கைச் சான்றிதழுக்காக சென்சார் உறுப்பினர்களுக்குப் படம் போட்டுக் காண்பிக்கப்பட்டது. படத்தைப் பார்த்தவர்கள் டீசன்டான பேமிலி என்டர்டெயின்மெண்ட் என இயக்குனர் ராஜாவை பாராட்டியதோடு படத்துக்கு அனைவரும் பா…
-
- 0 replies
- 780 views
-
-
கர்நாடகாவில் ரஜினிக்கு எதிரான கன்னட அமைப்பினரின் போராட்டம் தீவிரமாகி வருகிறது. ரஜினியின் உருவபொம்மையை கன்னட ரக்ஷண வேதிகே அமைப்பினர் எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஒகேனக்கல் பிரச்னைக்காக தமிழ்த் திரையுலகினர் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அப்போது கன்னடர்களுக்கு ரஜினி பேசியதாக கூறி, கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். ரஜினி படம் ஓடிய தியேட்டர்கள் நொறுக்கப்பட்டன. இந்நிலையில், ரஜினி நடித்துள்ள குசேலன் படம் வரும் 30-ம் தேதி ரிலீசாகிறது. கர்நாடகாவில் இப்படத்தை திரையிடக் கூடாது என வலியுறுத்தி கடந்த வாரம் கன்னட ரக்ஷண வேதிகே (பிரவீண்குமார் ஷெட்டி அணி) அமைப்பினர் பெங்களூரில் தர்ணா போராட்டம் நடத்தினர். சித்ரதுர்கா நகரில் உள்ள காந்தி சிலை முன்பு நட…
-
- 0 replies
- 685 views
-
-
வைகைப்புயல் வடிவேலு மீண்டும் நடிக்க வருகிறார் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் குஷியோடு வெயிட் பண்ணிக் கொண்டிருக்க, வடிவேலோ அதுபற்றி எந்தவித அக்கறையும் இல்லாமல் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏழரையைக் கூட்டிக் கொண்டு அளப்பறையைக் கொடுக்கிறாராம். இரண்டு வருடங்களுக்குப் பிறகு வடிவேலு தமிழ்சினிமாவில் ரீ- என்ட்ரி ஆகிறார் என்றதும் ஒட்டுமொத்த திரையுலகமே மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், இந்த சந்தோஷம் இன்னும் ஒரு மாசம் கூட நீடிக்காது போலிருக்கிறது. காரணம் அந்தளவுக்கு வடிவேலுவின் அளப்பறை ஓவராக இருக்கிறதாம். யுவராஜ் டைரக்ட் செய்து வரும் 'கஜபுஜராஜ தெனாலிராமனும், கிருஷ்ணதேவராயரும்' படத்தில் நடிக்கும் வடிவேலு சமீபத்தில் தான் அந்தப்பத்துக்காக ஒரு பாடலையும் பாடினா…
-
- 0 replies
- 569 views
-