வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
‘ரஜினி உங்கள் மீது எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறார். அவரை நீங்கள் கிண்டலடிப்பது போல எஸ்எம்எஸ் அனுப்பியிருப்பது நியாயமா?’ என ரஜினி ரசிகர்கல் சிலர் வருத்தப்பட்டு அமிதாப்புக்கு எழுத, பதறிப் போய் பதில் சொல்லியிருக்கிறார் அமிதாப். ரோபோ படம் வெளியானதிலிருந்து வட இந்தியாவில் ரஜினி ஜோக்ஸ் மிகப் பிரபலமாகிவிட்டது. இவற்றில் எந்த ஜோக்கும் ரஜினியை கிண்டலடிப்பது போல இருக்காது. இவை அனைத்திலுமே கற்பனை கூட செய்ய முடியாத அளவு உயர்வாக சித்தரிக்கப்பட்டிருப்பார் ரஜினி. போஸ்புக், ட்விட்டர், எஸ்எம்எஸ் என எங்கும் இந்த ரஜினி ஜோக்குகள்தான். கடந்த சில வாரங்களாக இந்த ரஜினி ஜோக்குகள் சற்றே ஓய்ந்திருந்தன. ஆனால் ரஜினி உலகக் கோப்பைப் போட்டியைப் பார்க்கப் போனதும், அந்தப் போட்டியில் இந்தியா…
-
- 4 replies
- 1.5k views
- 1 follower
-
-
பிரபல இந்தி நடிகை மல்லிகா ஷெராவத்தை கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய பழைய குற்றவாளி ஒருவர் டெல்லியில் கைது செய்யப்பட்டார். அவருடைய பெயர், ராஜேஷ் தலால் (வயது 35). ஜாட் சமூகத்தினர் பற்றி அவதூறாக பேசியதாக, நடிகை மல்லிகா ஷெராவத்தை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக கடந்த 2006-ம் ஆண்டில் மும்பையில் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அதன்பின் 3 வருடங்களுக்குப்பிறகு தேர்வு ஒன்று எழுதுவதற்காக டெல்லி ஐகோர்ட்டு உத்தரவுப்படி 5 நாட்கள் பரோலில் சென்ற ராஜேஷ் தலைமறைவாகிவிட்டார். போலீசார் அவரை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில், சிறையில் அவருக்கு அறிமுகமான ராஜீவ் என்ற ஜோகிந்தருடன் நேற்று முன்தினம் டெல்லி வந்தார். டெல்லியில் ராஜேஷின் காதலியை கிண்டல் …
-
- 1 reply
- 737 views
-
-
'விண்ட்ஸ் ஆப் சேஞ்ச்' -படப்பிடிப்புகாக இலங்கை போனார் ஸ்ரேயா! ரெடி என்ற படத்தின் படப்பிடிப்புக்காக நடிகை அசின் இலங்கை போனதும், அதைத் தொடர்ந்து எழுந்த பிரச்சினைகளும் நினைவிருக்கலாம். இப்போது சத்தமில்லாமல் இன்னொரு நடிகை இலங்கைக்குப் போயிருக்கிறார். அவர் ஸ்ரேயா. தீபா மேத்தா இயக்கும் விண்ட்ஸ் ஆப் சேஞ்ச் படத்தின் ஷூட்டிங்குக்காக அவர் இலங்கையில் இப்போது முகாமிட்டுள்ளார். கடந்த வாரம் சென்னையில நடந்த ஐபிஎல் போட்டியின் துவக்க விழாவில் அவர் ஷாரூக்கானுடன் சேர்ந்து நடனம் ஆடியது நினைவிருக்கலாம். இலங்கையில் படப்பிடிப்பிலிருந்து நேராக சென்னை வந்த அவர், நிகழ்ச்சி முடிந்ததும் மீண்டும் இலங்கை சென்றுவிட்டாராம். இலங்கை மிக அழகான நாடு, படப்பிடிப்புக்கு ஏற்ற…
-
- 1 reply
- 3.2k views
-
-
-
ஆஸ்கார் விருதை வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தயாரிப்பாளராகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நூற்றுக்கணக்கான படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். அடுத்த கட்டமாக படங்களை தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. இதற்காக ஒய்.எம். மூவிஸ் என்ற பெயரில் புதிய படக்கம்பெனி துவங்கியுள்ளார். இந்த நிறுவனம் மூலம் படங்கள் தயாரிக்கிறார். முதலாவதாக தமிழ், படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளாராம்.புது இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார். புதுமுகங்களை வைத்து குறைந்த பட்ஜெட்டில் படங்களை தயாரிப்பார் என தெரிகிறது. ஏ.ஆர்.ரகுமான் படங்கள் பார்க்க.... http://www.thedipaar.com/cinema/cinema.php?id=6810
-
- 0 replies
- 770 views
-
-
கதாநாயகனாக, குணச்சித்திர நடிகராக, நகைச்சுவை நடிகராக, வில்லன் நடிகராக கடந்த 25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பன்முகப்பட்ட நடிப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார் நாசர். எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதைத் தனக்குள் உள்வாங்கிக் கொள்பவர். அவர் தமிழ் சினிமா மீது கொண்டுள்ள அக்கறையை அவர் தயாரித்த, இயக்கிய சில திரைப்படங்களின் மூலம் அறிந்துகொள்ள முடியும். பொது நிகழ்வுகளில் அவர் வெளிப்படுத்தும் கருத்துகள் தமிழ் சினிமாவின் அடுத்த கட்டம் குறித்ததாக இருக்கும். தமிழ்நாட்டில் உள்ள இரு திரைப்படப் பள்ளிகளில் படித்தபோதும் உலகளாவிய திரைக்கலைப் பரிச்சயமும், நவீன நாடகக்குழுக்களில் தான் பெற்ற பயிற்சியும்தான் சினிமாவை, நடிப்பைத் தெரிந்துகொள்ள உதவியது என்று கூறும் நாசர், திரைப்படக் கல்லூரி நிறுவனங…
-
- 2 replies
- 1.4k views
-
-
தேர்தல் சமயம் வந்தாலே அரசியல் கட்சிகள் நடிகர்களை களத்தில் இறக்குவது வழக்கம். வரலாறு காணாத திடீர் திடீர் திருப்பங்களை இந்த தேர்தலில் சந்தித்திருக்கிறது தமிழகம். அதே சமயம் தேர்தல் பிரச்சாரங்களும் சூடுபிடித்திருக்கிறது. சின்ன புள்ளியில் துவங்கிய விஜயகாந்த் - வடிவேலு பிரச்சனை பெரிய பூதமாக வளந்தது. விஜயகாந்த் - வடிவேலு மோதல் விவகாரம் இன்னும் முடிந்தபாடில்லை. புகைந்துகொண்டுதான் இருக்கிறது. விஜயகாந்தை எதிர்த்து போட்டியிடுவேன் என்று வடிவேலு முன்பு அறிவித்திருந்தார். எந்த கட்சியோடும் சேராமல் சுயேட்சையாக போட்டியிடுவேன் என்றும் அவர் சொல்லியிருந்தார். அந்த முடிவில் இப்போது கொஞ்சம் மாறுதல். வடிவேலு விஜயகாந்துக்கு எதிராக பிரச்சாரம் செய்யவிருக்கிறார். வரும் …
-
- 1 reply
- 1.2k views
-
-
உண்மையான உணர்வு இருந்தால் அசினுடன் நடிப்பாரா விஜய் - ராஜபக்ஷே! நடிகை அசின் இலங்கை சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்ட சம்பவம் மற்றும் ராஜபக்ஷேவின் மனைவியுடன் சேர்ந்து யாழ்பாணம் சென்ற சம்பவத்தால் தமிழ் திரையுலகம் அவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அசின் நடித்த படத்தை திரையிட விட மாட்டோம், அசினை தமிழ் சினிமாக்காரர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று முழக்கங்கள் போட்டும் காவலன் எந்த தடையும் இல்லாமல் வெளியாகி வெற்றியும் பெற்றது. இந்நிலையில் நடிகர் விஜய் இலங்கையில் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து சமீபத்தில் நாகப்பட்டினத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தினார். அப்போது இலங்கை அரசுக்கு எதிராக கடுமையாக பேசினார். இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்…
-
- 0 replies
- 1.1k views
-
-
சிங்கையில் குருஷேத்திரம் - விமர்சனம் நடிப்பு: விஷ்ணு, சிவகுமார், மதியழகன், விக்னேஷ்வரி, பிரகாஷ் அரசு பிஆர்ஓ: எஸ் செல்வரகு இசை: ரஃபீ கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், இணை தயாரிப்பு - டிடி தவமணி தயாரிப்பு: மெட்ரோ பிலிம்ஸ், சிங்கப்பூர் பிலிம் கமிஷன் மற்றும் புளூ ரிவர் பிக்ஸர்ஸ் முழுக்க முழுக்க சிங்கப்பூர் கலைஞர்களை வைத்து, ஒளிவெள்ளம் பாயும் சிங்கப்பூரின் இருண்ட பக்கத்தைக் காட்ட முயற்சித்திருக்கிறார்கள். மன்னிக்க முடியாத மரண தண்டனைக் குற்றம் என்று தெரிந்தும், போதை மருந்துத் தொழிலில் ஈடுபடும் சிங்கப்பூரின் நிழல் மனிதர்களைப் பற்றிய கதை. முதல் காட்சியே படு வித்தியாசமாக ஆரம்பிக்கிறது. எடுத்த எடுப்பில் சிங்கப்பூர் சிறையில் ஒரு தாய்க்க…
-
- 0 replies
- 1k views
-
-
பல மொழிகளில் மணம் பரப்பும் ஜெனிலியா! தமிழ், தெலுங்கு , மலையாளம் , இந்தியில் ஜெனிலியா பிசியோ பிசி அகன்ற வாய் அழகி ஜெனிலியா கை நிறையப் படங்களுடன் பரபரப்பாக காணப்படுகிறார். தமிழில் ஆரம்பித்த இவரது திரையுலக வாழ்க்கை இன்று தமிழையும் தாண்டி தடம் புரளாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. கை நிறையப் படங்களுடன், பல மொழிகளில் படு பிசியாக நடித்து வருபவர் இவர் ஒருவராகத்தான் இருக்க முடியும். சந்தோஷ் சுப்ரமணியத்திற்குப் பிறகு ஜெனிலியாவுக்கு தமிழில் நல்ல மார்க்கெட் கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்திக் கொண்ட அவர், நல்ல கதையம்சத்துடன் கூடிய படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது இளைய தளபதி விஜய்யுடன் இணைந்து வேலாயுதம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஜெனிலி…
-
- 9 replies
- 3.4k views
-
-
உலகின் மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்றான 'ஷிண்ட்லெர்ஸ் லிஸ்ட்' பற்றி எழுத வேண்டும் என எத்தனை முறை அமர்ந்தாலும் தோல்வியே கண்டிருக்கிறேன். அதை அந்த பரவசத்தை சாதாராணமாக அணுகி விடக்கூடாது என்ற தயக்கமே காரணம். ஆஸ்கார் ஷிண்ட்லரை மனிதருள் மாணிக்கம் , மறக்கடிக்கப்பட்ட மகாத்மா என எத்தனை அழைத்தாலும் தகும். இப்படம் யூ1982ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய நாவலாசிரியர் தாமஸ் கென்னலி எழுதிய ஷிண்ட்லர்ஸ் ஆர்க்[ Schindler's Ark ] என்னும் புதினத்தை தழுவி,ஸ்டீவன் ஸைலியனின் [steven Zaillian]திரைக்கதையில்,ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கி 1993ஆம் ஆண்டு வெளிவந்த சுயசரிதை-நாடக வகை திரைப்படம் இது. இப்படத்துக்கு ஏழு ஆஸ்கர் விருதுகள் தரப்பட்டன. இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்குக்கு உலகாரங்கில் எத்தனையோ பாராட்ட…
-
- 5 replies
- 2k views
-
-
களறி கற்கும் நடிகைகள் நடிகைகள் களறி கற்றுக் கொண்டால் நல்லது. ஆனால் படத்திற்கு தேவைப்பட்டால் ஒழிய யாரும் அதை செய்வதில்லை. ஆணாதிக்க சினிமாவிலிருந்து விடுபட களறி உதவும் என்றாலும், எந்த நடிகையும் அந்த ஆதிக்கத்தை எதிர்த்து போராடுவதாகவும் இல்லை. இந்த வியாக்கியானத்தை மறந்துவிட்டு வேறொரு முக்கியமான விஷயத்துக்கு வருவோம். சந்தோஷ் சிவனின் உருமி படத்திற்காக களறி கற்றுக் கொண்டிருக்கிறார் ஜெனிலியா. கதைப்படி இவர் இளவரசியாம். இவருக்கு படத்தில் நிறைய சண்டைக்காட்சிகள் இருக்கிறதாம். ஜெனிலியா இப்படத்தில் நடிக்க கமிட் ஆனவுடன், அவசியம் களறி கற்றுக் கொள்ள வேண்டும் என்றாராம் சந்தோஷ் சிவன். இதற்காகவே நேரம் ஒதுக்கி கற்று தேர்ந்திருக்கிறார் ஜெனிலியா. இவரை போலவே நன்கு …
-
- 16 replies
- 6.1k views
-
-
த்ரிஷா, நயன்தாரா உள்ளிட்ட தென்னிந்திய நடிகைகளை மிஞ்சிவிட்டார் நடிகை இலியானா. ஷங்கர் இயக்கத்தில், விஜய்க்கு ஜோடியாக நண்பன் படத்தில் நடித்து வரும் இலியானாவுக்கு ரூ.1.5கோடி சம்பளம் தர ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதாம். இதுவரை வேறு எந்தவொரு நடிகையும் இந்த சம்பளத்தை வாங்கியதில்லையாம். இந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான "3-இடியட்ஸ்" படம் தமிழில் "நண்பன்" என்ற பெயரில் உருவாகி வருகிறது. இப்படத்தை டைரக்டர் ஷங்கர் இயக்கி வருகிறார். இதில் ஹீரோக்களாக விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா ஆகிய மூன்று பேர் நடித்து வருகின்றனர். படத்தில் விஜய்க்கு ஜோடியாக இலியானா நடித்து வருகிறார். இப்படத்தில் இவர் ரூ.2கோடி வரை சம்பளம் கேட்டு இருந்தார். ஆனால் ரூ.50லட்சத்தை குறைத்து ரூ.1.5 கோடி சம்பளம் தர ஒப்புக்கொண…
-
- 0 replies
- 820 views
-
-
தற்போது ஜப்பானில் நடைபெற்றுள்ள சுனாமி ஜப்பானின் அணுசக்தி நிலையத்தை தாக்கி அதை உடைத்து அணுக்கதிர்களை பரவச் செய்து பேரவலத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நடைபெறும்போது இப்படியொரு கதையை இதற்கு மூன்று வருடங்களுக்கு முன்னரே சிந்தித்து திரைப்படமாக தந்துள்ளார்கள் டென்மார்க்கில் உள்ள தமிழர்கள் என்று தமிழக திரைப்பட இயக்குநர் பாவல்சங்கர் தெரிவித்தார். அணு குண்டை வெடித்து செயற்கைச் சுனாமியை ஏற்படுத்தினால் என்னவாகும் என்று இளம்புயல் திரைப்படம் கூறியது. இப்போது அடுத்த பக்கமாக சுனாமியே புறப்பட்டுவந்து அணு உலையை உடைத்து அணுகுண்டு வெடிப்பை ஏற்படுத்தியுள்ளது. அணு குண்டும், சுனாமியும் சந்திக்கும்போது உருவாகும் பேரவலமே எதிர்கால உலகத்தின் பேரவலம் என்று இளம்புயல் திரைப்படம் கூறியது. …
-
- 1 reply
- 1.5k views
-
-
அனுஷ்கா எனக்கு அம்மா மாதிரி என பல்டி அடித்து காதலை முறித்த காதலன் அனுஷ்காவும் இயக்குனர் க்ரிஷ்ஷும் காலிக்கிறார்கள் என்று சொல்லப்பட்டது. தெலுங்கில் பல வெற்றிப் படங்களைக் இயக்கியவர் க்ரிஷ். இவர் தெலுங்கில் இயக்கிய வேதம் மெகா ஹிட் ஆனது. அதில் அனுஷ்கா ஹீரோயின். அதே படத்தைப் இப்போது தமிழில் சிம்பு நடிக்க வானம் என்ற பெயரில் எடுத்து வருகிறார் க்ரிஷ். இதிலும் அனுஷ்கா தான் ஹீரோயினாக நடிக்கிறார். இவர்கள் இருவரும் காதலிப்பதாக சொல்லப்பட்ட போது, இருவருமே எந்த மறுப்பும் சொல்லாமலே இருந்து வந்தார்கள். ஆனால் இப்போது இயக்குனர் க்ரிஷ் அதை மறுத்திருக்கிறார். அது மட்டும் இல்லாது அனுஷ்கா எனது அம்மா மாதிரி என்றும் எங்களுக்குள் நல்ல நட்பு மட்டுமே இருந்து வந்தது என்…
-
- 3 replies
- 1.9k views
-
-
ரஹ்மான் வருகைக்காக ஏழு ஆண்டுகள் காத்திருந்தேன் -கவிப்பேரரசு வைரமுத்து பேட்டி *மகிழ்ச்சி, துயரம், கொண்டாட்டம், காதல், களி என வெவ்வேறு உணர்வுநிலைகளை பாடல்களில் வழங்கியிருக்கிறீர்கள். ஆயிரம் பாடல்களில் உங்கள் சொந்த மனநிலைகளும் பிரதிபலித்திருக்கும். அதுபற்றி யோசிக்கும்போது எப்படி உணர்கிறீர்கள்? கவிதை என்பது பொது உணர்ச்சி என்றும் பாட்டு என்பது தன்னுணர்ச்சி என்றும் கருதப்படுகிறது. இதைத்தான் ஆயிரம் பாடல்கள் முன்னுரையிலும் நான் எழுதியிருக்கிறேன். லிரிக் என்பது ஓர் ஆங்கிலச் சொல். இந்த லிரிக் என்பதற்கு தன்னுணர்ச்சிப் பாட்டு என்றுதான் பொருள். இந்த லிரிக் எங்கிருந்து வந்தது என்று ஆய்வு செய்தபோது கிரேக்க மொழியிலிருந்து இந்தச் சொல் பிறந்ததாக அறியமுடிந்தது. கிரேக்கத்தில் ல…
-
- 2 replies
- 1.1k views
-
-
http://www.youtube.com/watch?v=8NGh9MewnyY
-
- 1 reply
- 1k views
-
-
தமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி கோலிவுட்டின் கவர்ச்சிப் புயல் நமீதாவுக்கு ஒரு புது பட்டப்பெயரைச் சூட்டியுள்ளனர், இளம் ரசிகர்கள். அதுவும் மாணவர்கள். அது... 'தமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி'! ஜேப்பியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடந்த அனைத்துக் கல்லூரி விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் நமீதா. அப்போதுதான் இந்தப் பட்டப் பெயரைச் சூட்டி தங்கள் 'பக்தி'யை வெளிப்படுத்தினர் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள். சென்னை பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில் அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கான இசைவிழா நடந்தது. இதில் சென்னை மற்றும் புறநகரில் உள்ள 23 கல்லூரிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர் பங்கேற்றனர். வி…
-
- 0 replies
- 1.8k views
-
-
ஒஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டன! சிறந்த நடிகராக முடிசூட்டப்பட்ட லண்டனைச் சேர்ந்த கொலின் பேர்த் செவ்வாய், 01 மார்ச் 2011 00:08 ஒஸ்கார் விருதுகள் இன்று வழங்கப்பட்டன. பிரிட்டிஷ் நடிகர் கொலின் பேர்த் சிறந்த நடிகருக்கான பரிசை தட்டிச் சென்றார். ஒஸ்கார் விருதுகளில் ஒரு மகுடத்தில் பதிக்கப்பட்ட வைரமாகக் கருதப்படுவது சிறந்த நடிகருக்கான விருதாகும். கிங்ஸ் ஸ்பீச் என்ற திரைப்படத்தில் ஆறாவது ஜோர்ஜ் மன்னரின் வேடமேற்று நடித்தமைக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இந்தத் திரைப்படத்துக்கு மொத்தம் நான்கு விருதுகள் கிடைத்தன. இந்த படத்தின் இயக்குனர் டொம் ஹூபருக்கு சிறந்த இயக்குனருக்கான விருதும், இந்தத் திரைப்படத்தின் திரைக்கதை வசனத்துக்காக டேவிட் ஸீட்லருக்கும் மற்றும் 2…
-
- 1 reply
- 1.2k views
-
-
இவ்வருட ஆஸ்கார் ரஹ்மான் கைக்கு எட்டவில்லை 127 hours படத்துக்கான பின்னணி இசைக்கும் அதே திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலுக்குமாக A.R. ரஹ்மான் இரண்டு விருதுகளுக்கான பரிந்துரை பட்டியலில் இருந்தார் . தான் நிகழ்ச்சியில் பங்குபற்ற மட்டுமே போகிறேன் பரிசை வெல்லும் எதிர்பார்ப்பு தன்னிடம் இல்லை என ரஹ்மான் கூறியிருந்தார் . இரண்டு விருதுகளுக்கான பரிந்துரை பட்டியலில் குறைந்த பட்சம் ஒன்றாவது பெற்று ஏற்கனவே ஒரே வருடத்தில் இரண்டு விருது பெற்ற தமிழன் என்ற அவரது சாதனையை இரண்டு முறை வெவ்வேறு வருடங்களில் பெற்றவர் என்று உயர்த்திக்கொள்வாரா என்ற கோடிகணக்கான ரஹ்மான் ரசிகர்களின் ஆசைக்கு இன்றிரவு விடை கிடைத்துள்ளது . ஆயினும் அது முழு மகிச்சிக்குரியதாக அமையவில்லை . இரண்டு பரிசுகளையு…
-
- 4 replies
- 941 views
-
-
தமிழனும் சினிமாவும் தமிழனையும் சினிமாவையும் பிரிக்க முடியாது. ஒரு காலத்தில் ஒரே திரைப்படத்தை திரையரங்குகளில் ஓராண்டு ஓடச்செய்து வரலாற்றில் இடம்பிடித்த பெருமைக்குரியவன் தமிழன். ஆனால், அண்மைக்காலமாக தமிழ்த் திரைப்படங்கள் எதுவும் அதிகபட்சமாக 30 நாள்களுக்குமேல் ஓடுவதில்லை. என்ன ஆயிற்று? திரைப்படங்களின் தரம் குறைந்துவிட்டதா அல்லது தமிழன் திருந்திவிட்டானா? திரையரங்குகளில் கட்டணம் அதிகம், புதிய திரைப்படங்கள் வெளிவந்த சில நாள்களிலேயே திருட்டு சி.டி. வெளிவந்துவிடுகிறது எனப் பல காரணங்கள் சொல்லப்படுகிறது. அதற்கு பரிகாரமாகத்தானோ என்னவோ திரைப்படங்களை சின்னத்திரையில் ஓடவைக்கிறான் தமிழன். தமிழனின் ரசனையை நன்றாகப் புரிந்துவைத்திருக்கும் தொலைக்காட்சிச் சேனல்கள் இப்ப…
-
- 0 replies
- 925 views
-
-
ஐந்து படங்கள் வெளியானால், அதில் மூன்று படங்களில் இருக்கிறார் ஜெயப்பிரகாஷ். குணச்சித்திர வேடம், மிரட்டாத வில்லத்தனம் என்று ஒரு பக்கம் ஜெயப்பிரகாஷ் ரவுண்டு கட்ட, மறுபுறம் ஜெ யப்பிரகாஷின் மகன்கள் நிரஞ்சன், துஷ்யந்த் இருவரும் 'வந்தோமம்மா வந்தனம்!’ என்று ஆஜராகிறார்கள் 'ஈசன்’ திரைப்படத்தில். ''அப்புறம்... கலைக் குடும்பம் ஆகிட்டீங்க!'' என்றால், ''ஐயையோ... அப்படி எல்லாம் இல்லைங்க!'' என்று மென்மையாகச் சிரிக்கிறார் ஜெயப்பிரகாஷ். ''ஒரு தயாரிப்பாளரா படங்கள் தயாரிச்சு, அப்புறம் சினிமாவில் இருந்து விலகி... கொஞ்சம் ஊசலாட்டமான ஒரு வாழ்க்கை. சேரன்தான் முதலில் 'மாயக் கண்ணாடி’ படத்தில் நடிக்க அழைத்தார். 'பொற்காலம்’ படம் தயாரித்த காலத்தில் இருந்து சேரனைத் தெரியும். 'சார், வேணாம்... இத…
-
- 1 reply
- 1.8k views
-
-
Wednesday, February 23rd, 2011 | Posted by thaynilam நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் விடுதலைப் புலிகளின் ‘ எல்லாளன் ‘ இலங்கையின் அனுராதபுரம் விமானப் படைத் தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் நடத்தப்பட்ட தாக்குதலை மையப்படுத்தி அந்த இயக்கத்தின் கலைஞர்களின் நடிப்பில் வெளியான எல்லாளன் திரைப்படம் எதிர்வரும் நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் சிறப்பு திரைப் படங்களில் ஒன்றாக திரையிடப்பட உள்ளது. இவ்வாண்டுக்கான நோர்வே தமிழ் திரைப்பட விழா அடுத்த ஏப்ரல் மாதத்தில் 20 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை ஒஸ்லோவில் இடம்பெற உள்ளது. இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து நோர்வேயில் வாழ்ந்து வரும் பாடல் ஆசிரியர் சிவலிங்கம் வசீகரனின் ஏற்பாட்டில் இவ்விழா இடம்பெறுகின்றது. …
-
- 0 replies
- 709 views
-
-
பிரபாகரனை காந்தி சந்திக்கும் சர்ச்சைத் திரைப்படம்! தணிக்கைக் குழு எதிர்ப்பு வெள்ளி, 18 பெப்ரவரி 2011 20:06 என்ற பெயரில் புதுப்படம் தயாராகியுள்ளது. அ.பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே காமராஜ் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து காமராஜ் படத்தை எடுத்தவர். காந்தி மீண்டும் பிறந்து வந்தால் என்ன நடக்கும் என்பதை கருவாக வைத்து முதல்வர் மகாத்மா படம் உருவாகியுள்ளது. இதில் காந்தியாக கனகராஜ் நடித்துள்ளார். இந்த படத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனை காந்தி சந்திப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை கிளப்பியது. ஈழத் தமிழர் பிரச்சினை பற்றி விவாதிக்க முதல்-அமைச்சராக இருக்கும் காந்தி பிரபாகரனை சந்திக்க அழைப்பு விடுக்கிறார். இருவரும் குறிப…
-
- 3 replies
- 1.6k views
-
-
Welcome to Dongmakgol - திரைவிமர்சனம் கொரிய போர் உக்கிரத்தின் உச்சத்திலிருந்த 1950களில் நடப்பதாக சித்தரிக்கப்பட மிகச்சிறந்த திரைப்படம் " Welcome to Dongmakgol". தென்கொரிய படைவீரர்களும் வட கொரிய வீரர்களும் கடும் போரில் ஈடுபடுகிறார்கள். ஒரு மலையடிவாரத்தில் நடக்கும் போரில் சிதறி ஓடுகின்ற வடகொரிய வீரர்கள் மூவரை மனநலம் குன்றிய ஒரு இளம்பெண் பார்க்கிறாள். அவளை தொடர்பவர்கள் மலையடிவாரத்தில் அவள் வசிக்கும் குக்கிராமத்திற்குள் நுழைகிறார்கள். அங்கே விமானம் விபத்தொன்றில் சிக்கிய அமெரிக்க விமானி ஒருவனும் தென்கொரிய படைவீரர்கள் இருவரையும் சந்திக்கிறார்கள். இவர்களை கண்டவுடன் தென்கொரிய வீரர்கள் துப்பாக்கியை உயர்த்துகிறார்கள். இவர்களும் தென்கொரிய வீரர்களை நோக்கி துப்பாக்கியை…
-
- 0 replies
- 2.1k views
-