வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5548 topics in this forum
-
இந்திய சினிமா வரலாற்றில் அதிக செலவில் எடுக்கப்பட்ட படம் என பெயரெடுத்திருப்பது 'எந்திரன்' திரைப்படம். ஷங்கரின் இயக்கத்தில் கலாநிதி மாறன் 160 கோடி செலவில் மிகப் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட 'எந்திரன்' திரைப்படம். உலகளாவிய ரீதியில் பல சாதனைகளை முறியடித்து இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் கலாநிதி மாறன் அடுத்த படத் தயாரிப்பு பற்றி சிந்திக்கத் தொடங்கிவிட்டார். அடுத்தப் படத்திற்கு கலாநிதி மாறன் ஒதுக்கியிருக்கும் தொகை 500 கோடி இந்திய ரூபாய். அதாவது இலங்கை மதிப்பில் 1,250 கோடி ரூபாய்..! இவ்வளவு செலவில் உருவாகும் படத்தினை இயக்கவிருப்பவரும் இயக்குநர் ஷங்கர்தான். 500 கோடி ரூபாய் செலவில் உருவாகவிருக்கும் இத்திரைப்படத்தில் இரண்டு திரையுலக ஜாம்பவான்கள் இணையவிருக்கிறார்க…
-
- 0 replies
- 645 views
-
-
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், நாராயணபுரி ராமகிருஷ்ண மிஷன் ஆஸ்ரமத்துக்கு இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாடு விருது வழங்கப்பட்டுள்ளது. இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாடு விருது வழங்கும் விழா தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் விருதுகளை வழங்கினர். விருதினை ஏ.ஆர்.ரஹ்மானும், நாராயணபுரி ராமகிருஷ்ண மிஷன் ஆஸ்ரமம் சார்பில் சுவாமி வியாப்தானந்தாவும் இணைந்து பெற்றுக் கொண்டனர். விருதில் | 5 லட்சமும், பாராட்டுப் பத்திரமும் அடங்கும். சத்தீஸ்கரின் நாராயணபுரியில் உள்ள ராமகிருஷ்ண ஆஸ்ரமம் அம்மாநிலத்தில் உள்ள மலைவாழ் மக்களுக்கு சிறப்பாக சேவையாற்றியதற்காக விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது. தனது இனி…
-
- 5 replies
- 1.4k views
-
-
எம்.ஜி.ஆர். சினிமாவில் மட்டுல்ல, அரசியலிலும் அழியாத வரலாறு படைத்தவர். அவர் இறந்து விட்டார் என்பதைக் கூட நம்பாத ரசிகர்கள் இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வருவதுண்டு. அந்த அளவுக்கு ஏழை, எளிய மக்களின் இதயங்களை வென்றவர் அவர். எம்.ஜி.ஆரின் பிறந்த நாள், நினைவு நாள்களின்போது அவரை தெய்வமாக வழிபடுபவர்கள் ஏராளம். ஆனால், அவருக்கென்று தனியாக கோயில் எதுவும் இதுவரை கட்டப்படவில்லை. அந்தக் குறையைப் போக்கும் வகையில் சென்னை திருநின்றவூர் நத்தம்மேடு கிராமத்தில் வசிக்கும் கலைவாணன் - சாந்தி தம்பதியினர் எம்.ஜி.ஆருக்கு கோயில் கட்ட ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். இதற்காக நத்தம்மேடு கிராமத்தில் தாங்கள் வசிக்கும் வீட்டுக்கு அருகில் ஒரு கிரவுண்டு நிலத்தை வாங்கி கடந்த வியாழக்கிழமை கோயில்…
-
- 6 replies
- 1.9k views
-
-
ரஜினி பற்றிய கட்டுரை... மன்னிப்புக் கேட்ட இந்தியா டுடே! எந்திரன் படம் வெளியாவதற்கு சில தினங்களுக்கு முன் அமெரிக்க ஆன் லைன் பத்திரிகையான ஸ்லேட் ஒரு சிறப்புக் கட்டுரை வெளியிட்டது. "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - நீங்கள் இதுவரை அறியாத மிகப் பெரிய நடிகர்" என்ற தலைப்பில், அமெரிக்கர்களுக்கு ரஜினியை அறிமுகப்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டிருந்த கட்டுரை அது. ரஜினியின் புகழ், அவரது படங்களின் லாஜிக் மீறல்கள், அவர் படங்களின் மூலம் குவியும் வருமானம் போன்றவற்றை வியப்பும், சற்றே எள்ளலும் கலந்த நடையில் கிராடி ஹென்ட்ரிக்ஸ் என்பவர் எழுதியிருந்தார். கட்டுரையின் ஆரம்பம் இப்படி இருந்தது: "ஆசியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக ஜாக்கி சான் இருப்பதில் ஆச்சரியம் இல்லை. 1980லி…
-
- 0 replies
- 762 views
-
-
தமிழ் சினிமாவில் கலை: பாலுமகேந்திரா என்றொரு ஆளுமை ஆனந்த் அண்ணாமலை கண் முன் திரை இருக்கிறது. ஒலி காதில் கேட்கிறது. ஆக, சினிமா பார்த்துவிட்டோம் என்று நம்பிக்கை கொண்டு மேற்பேச்சுக்கு செல்பவர்களை ஒன்றும் செய்யமுடியாது; அவர்களே பெரும்பான்மையாக இருந்துகொண்டும் இருப்பார்கள். மற்றபடி மிகக் குறைந்த எண்ணிக்கையில் என்றாலும் சினிமாவின் அழகியல் புரிந்து ரசனை உணர்வு கொள்பவர்கள் இருக்கவே செய்கிறார்கள். அத்தகையவர்களில் தமிழ் சினிமாவில் தவிர்த்து விட முடியாத பெயர் பாலுமகேந்திரா. 1946- ல் இலங்கையில் பிறந்த பாலுமகேந்திரா, 1969- ல் வட இந்தியாவின் புனே ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் ஒளிப்பதிவுத் துறையில் தங்கப் பதக்கம் பெற்ற மாணவராக வெளிவந்தார். முதலில் மலையாளப் படமான ‘நெல்லு’…
-
- 4 replies
- 1.5k views
-
-
திருச்சியில் நடிகை நமீதாவை கடத்த முயற்சி நடிகை நமீதாவை திருச்சி விமான நிலையத்தில் இருந்து காரில் கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழ் பட உலகில் கவர்ச்சி புயல் என்றும், ரசிகர்களின் கனவுக்கன்னி என்றும் அழைக்கப்படுபவர் நமீதா. சினிமாவில் நடித்த நேரம் போக மீதி நேரங்களில், நமீதா பொது நிகழ்ச்சிகளில் அதிகமாக கலந்துகொள்கிறார். முன்னாள் கதாநாயகனும், மூத்த நடிகருமான எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு கரூரில் பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள வேண்டும் என்று நமீதாவுக்கு அழைப்பு வந்தது. அந்த விழாவில் கலந்துகொள்ள நமீதாவும் அவருடைய மானேஜர் ஜானும் சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் சென்றன…
-
- 7 replies
- 1.6k views
-
-
திங்கட்கிழமை, 25, அக்டோபர் 2010 (14:41 IST) எந்திரன் படக்கதை என்னுடையது: போலீஸ் கமிஷனரிடம் ஆரூர் தமிழ்நாடன் புகார் ""ஜூகிபா'' என்ற தனது சிறுகதையை மூலக்கதையாக வைத்து ரஜினி நடித்த 'எந்திரன்' படம் எடுக்கப்பட்டுள்ளது என்றும், இதுகுறித்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சென்னை போலீஸ் கமிஷனரிடம் பத்திரிகையாளரும், இலக்கியவாதியுமான ஆரூர் தமிழ்நாடன் புகார் அளித்துள்ளார். சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஆரூர் தமிழ்நாடன் இன்று ஒரு புகார் மனுவை அளித்தார். அதில், நான் எனது மாணவ பருவத்திலிருந்து கவிதைகள் எழுத ஆரம்பித்து 1983-ல் கற்பனை சுவடுகள் என்ற எனது முதல் கவிதை நூலை கலைஞர், பேராசிரியர் அன்பழகன் ஆகியோரின் அணிந்துரையோடு வெளியிட்டு உள்ளேன். கவிஞர்கள் வைரமுத்து, …
-
- 1 reply
- 1.7k views
-
-
-- என்னை இந்த உயரத்தில் தூக்கி வைத்த தமிழகத்துக்கும் தமிழக மக்களுக்கும் பெருமை தரும் விஷயத்தைச் செய்வேன் என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினி. -- அதேபோல தான் அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். சனிக்கிழமை மாலை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் 40 வது ஆண்டு விழாவில் அவர் இதைத் தெரிவித்தார். ஒவ்வொரு இயக்குநரும் தாங்கள் அறிமுகப்படுத்திய மாணவரிடம் சில கேள்விகளைக் கேட்க வேண்டும். இந்த நிகழ்ச்சிக்கு மகுடம் வைத்தது போல அமைந்தது குரு கே.பாலச்சந்தர் - மாணவர் ரஜினி நேர்காணல் நிகழ்ச்சியை கே.பி இப்படி ஆரம்பித்தார்: "ரஜினி இன்றைக்கு உலக சினிமாவுக்குப் போய்விட்டார். இந்திய சினிமாவின் உச்ச நடிகர். எவ்…
-
- 2 replies
- 1.1k views
-
-
'அவரு டைரக்டருக்கெல்லாம் டைரக்டரு!' தோட்டா தரணி... தேசிய விருதெல்லாம் வாங்கிய பெரும் கலைஞன். சமீபத்தில் ஒரு பெரிய படத்திலிருந்து சடாரென்று விலகி வந்துவிட்டார். அதுவும் சாதாரண நடிகர் அல்ல, இளம் நடிகர்களிலேயே பிரபலமாக உள்ள ஒருவரின் படத்திலிருந்து. காரணம்...? "ரஜினியின் படங்களிலெல்லாம் பணியாற்றியிருக்கிறேன். அவ்ளோ பெரிய நடிகரான அவரே, என்னை அவர் ஒரு வார்த்தை கூட சொன்னதில்லை. பாராட்டைத் தவிர வேறெதையும் அவர் சொன்னதாக நினைவில்லை. வேறு எந்த நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளரும் எனது பணியில் குறுக்கிட்டதுமில்லை, குறை சொன்னதுமில்லை. அந்த அளவு தொழிலில் நேர்மையாகவே இருந்திருக்கிறேன். ஆனால் நேற்று வந்த ஒரு ஹீரோ எனக்கே ஆர்ட் டைரக்ஷன் சொல்லித் தருகிறார். அ…
-
- 0 replies
- 791 views
-
-
என் தமிழ் உச்சரிப்பு அவ்வளவு நல்லா இருக்காது. அதை கமல்சார்தான் கரெக்ட் பண்ணார் என்கிறார் நடிகை த்ரிஷா. கமலுடன் த்ரிஷா ஜோடி சேர்ந்திருக்கும் படம் மன்மதன் அம்பு. உதயநிதி ஸ்டாலின் தயாரிக்க, கே எஸ் ரவிக்குமார் இயக்கும் படம் இது. இந்தப் படத்தில் நடித்த அனுபவம், கமல்ஹாஸனுடனான அனுபவம் என போகிற இடமெல்லாம் மன்மத அம்பு குறித்து ஒரு செய்தியாவது சொல்லத் தவறுவதில்லை த்ரிஷா. இந்தமுறை, கமல் எப்படி தனக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தார் என்பதை இப்படிக் கூறுகிறார் த்ரிஷா: “கமல் சாருடன் நடிக்கணும்கிறது எனக்குப் பல வருஷக் கனவு. ‘தசாவதாரம்’ படத்தில் கமல் சார் நடிக்கக் கூப்பிட்டிருந்தார். அப்போ என் கையில் டேட்ஸ் இல்லை. அடுத்து ‘மர்மயோகி’ வாய்ப்பு. எக்கச்சக்க ஹோம் வொர்க் பண்ணி வச்சிரு…
-
- 0 replies
- 704 views
-
-
எந்திரனின் வெற்றி எனக்கு அதிக தமிழ்ப் படங்களில் நடிக்கும் ஆர்வத்தையும் வாய்ப்பையும் வழங்கியுள்ளது. முன்பைவிட இப்போது இன்னும் வசதியாக உணர்கிறேன் என்கிறார் ஐஸ்வர்யா ராய். உலக அழகியாக தேர்வு பெற்ற கையோடு ஐஸ்வர்யா ராய் நடிக்க வந்துவிட்டார். அவர் நடித்த முதல் படம் மணிரத்னத்தின் இருவர். ஆனால் அவர் முதலில் வெற்றியை ருசி பார்த்தது ஷங்கரின் ஜீன்ஸ் படத்தில்தான். அதன்பிறகு தமிழில் அவர் நிறைய படங்கள் நடிக்கவில்லை. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன் என சில படங்களே நடித்தார். இந்தியில் படுபிஸியாக இருந்தவர் எந்திரனில் ரஜினிக்கு ஜோடியானார். இதுவரை அவரது திரைவாழ்க்கையில் அவர் காணாத வெற்றியை எந்திரன் தந்துள்ளது. அந்த வெற்றி தந்த நம்பிக்கையில் ஐஸ்வர்யா : “இருவர், ஜீன்ஸ் நடித…
-
- 1 reply
- 727 views
-
-
பொது இடங்களில் மிகமிகக் குறைச்சலான உடையில்தான் வருவேன், என்று நடிகை ஸ்ரேயா சபதம் எடுத்துள்ளார் போலிருக்கிறது.ஏற்கெனவே சிவாஜி பட விழா, கந்த சாமி பட விழாக்களில் தம்மாத்துண்டு உடையோடு மேடையேறி, ‘தமிழ் கலாச்சாரக் காவலர்களின்’ கடும் கண்டனத்தைச் சம்பாதித்துக் கொண்டவர் ஸ்ரேயா. ஆனாலும் அம்மணி தனது உடை விஷயத்தில் தொடர்ந்து பிடிவாதமாக கஞ்சத்தனம் காட்டி வருகிறார். சமீபத்தில் ஒரு நிறுவனம், சென்னையில் தங்கள் கைக்கடிகாரத்தை அறிமுகப்படுத்த ஸ்ரேயாவை அழைத்திருந்தது. விஷயம் அறிந்ததும் ஸ்ரேயாவை காண பெருங்கூட்டம் கூடியது. விழாக் குழுவினர் அவ்வளவு கூட்டத்தை எதிர்பார்க்க வில்லை. அந்த நேரம் பார்த்து மகா குட்டையான ஸ்கர்ட் மற்றும் லோ நெக் டாப்ஸ் அணிந்து வந்திருந்தார் ஸ்ரேயா. அவ்வளவ…
-
- 1 reply
- 826 views
-
-
திரையுலகில் 1999-ல் அறிமுகமானவர் திரிஷா . சாமி, கில்லி போன்ற பல ஹிட்படங்கள் அவரை முன்னணி நடிகையாக்கியது. தெலுங்கிலும் பெரிய ஹீரோக்கள் ஜோடியாக நடித்துள்ளார். காட்டா மீட்டா படம் மூலம் இந்திக்கும் போனார். தற்போது கமல் ஜோடியாக நடித்து வரும் மன்மதன் அம்பு நவம்பரில் வெளியாகிறது. அஜீத்துடன் மங்காத்தா படத்தில் நடித்து வரும் த்ரிஷா, இந்தப் படம் முடிந்ததும் திருமணம் செய்து கொல்வார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. காரணம் அவருக்கு இப்போது வயது 27ஐத் தாண்டிவிட்டது. ஆனால் த்ரஷாவோ இதனைக் கடுமையாக மறுக்கிறார். என் வயசெல்லாம் ஒரு வயசா… நான் சினிமாவுக்கு வந்து எட்டு வருடங்கள்தான் ஆகின்றன. ஆரம்பத்தில் சுமாரான கதையம்சம் உள்ள படங்களில் நடித்தேன். ஆனால் சமீபகாலமாக நல்ல கதையம்சம் உள்ள படங்கள…
-
- 5 replies
- 887 views
-
-
""வாழ்க்கையில் முன்னேற, "டிவி' சீரியல், சினிமா, கிரிக்கெட் மேட்ச் பார்த்து நேரத்தை மாணவர்கள் வீணடிக்கக்கூடாது,'' என, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திர பாபு பேசினார். வேலை வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன;வேலைக்கான தகுதியுள்ளவர்கள் குறைவாகவே உள்ளனர். இந்தியாவில் பட் டப்படிப்பு முடித்து வெளியேறும் மாணவர்களில் 80 சதவீதத்தினர் வேலைக்கான தகுதி இல்லாதவர்களாகவே உள்ளனர். கல்வி என்பது படிப்பை மட்டுமல்ல, வாழ்க்கைக்குத் தேவையான திறன்களையும் அளிப்பதாக இருக்க வேண்டும். என்ன படிப்பு படித்தாலும் அப்படிப்பை முடிக்கும் போது அறிவு, திறமை, மனப்பக்குவம் உட்பட நடத்தையில் மாற்றம் வந்திருக்க வேண்டும். மாற்றம் ஏற்படுத்தவில்லை என்றால் முழுமையான அறிவை பெறவில்லை என்று பொருள். வேலை கிடைத்தவுட…
-
- 3 replies
- 1k views
-
-
இலங்கையில் எந்திரன் மோகம் குறைந்தது-தியேட்டர்கள் வெறிச்சோடுகின்றன கொழும்பு: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் இணைந்து நடித்துள்ள எந்திரன் படத்திற்கு இலங்கையில் மோகம் குறைந்து விட்டதாக செய்திகள் கூறுகின்றன. பல தியேட்டர்களில் படம் எடுக்கப்பட்டு விட்டதாகவும், கூட்டம் குறைந்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதுகுறித்து தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தி... இலங்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் எதிர்பார்ப்புடனும், பெரும் ரசிகர் ஆரவாரத்துடனும் எந்திரன் திரையிடப்பட்டது. நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு தமிழ்ப் படத்திற்கு இந்த அளவுக்கு வரவேற்பும், எதிர்பார்ப்பும் கிடைத்தது இதுவே முதல் முறையாகும். ஆனால் தற்போது கொழும்பு மற்றும் யாழ…
-
- 8 replies
- 1.2k views
-
-
'ஆளை விடுங்க...' - மும்பை கிளம்பிய அசின்! போகிற இடமெல்லாம் கறுப்புக் கொடி, ஆர்ப்பாட்டம், படத்துக்கு செருப்படி என தமிழ் உணர்வாளர்கள் காட்டிய கடும் எதிர்ப்பில் அரண்டு போய்விட்டார் இலங்கை புகழ் அசின். இதனால் தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு படப்பிடிப்பை ஷிப்ட் பண்ண வேண்டிய நிலைக்கு ஆளானார். ஆனால் அங்கும் போராட்டக்காரர்கள் வருவதாக சொல்லப்பட 'எப்போது முடியும் இந்தப் படம்.... எப்போது மும்பைக்குப் பறக்கலாம்' எனக் காத்திருந்தாராம் அசின். ஒருவழியாக நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பிற்பகல் காவலன் படப்பிடிப்பு முடிந்தது. இதையொட்டி பூசணிக்காய் உடைக்கப்பட்டது. பின்னர் விஜய், இயக்குநர் சித்திக் உள்ளிட்ட படப்பிடிப்புக் குழுவினரிடம் விடைபெற்றுக் கொண்டு ஹோட்டலுக்குப்…
-
- 2 replies
- 954 views
-
-
ஒவ்வொரு வருடமும் இமயமலை சென்று வரும் ரஜினி, எந்திரன் படப்பிடிப்பினால் இரண்டு வருடம் இமயமலைப்பயணத்தை தள்ளிப்போட்டார். எந்திரனின் இமாலய வெற்றிக்குப் பிறகு, இமயமலைப் பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தின்போது அவர் பாபாவின் குகைக்குச் சென்று தியானம் செய்தார். உலகமே அவர் படத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்க, அவர் தனிமையும் அமைதியும் நிறைந்த இமயத்தில், தனது நெருங்கிய நண்பர்கள் இருவர் துணையுடன் பாபாவின் குகைக்குச் சென்றார். மிகவும் ஆபத்தான குகை என்று சொல்லப்படும் இந்த இடத்தில் அவர் தியானம் செய்தார். பின்னர் அவர் பாபாவின் ஆசிரமத்தில் தங்கினார். ரஜினி, தீபாவளிக்கு முன் சென்னை திரும்புகிறார்.http://www.tharavu.com/2010/10/blog-post_1579.html
-
- 0 replies
- 835 views
-
-
“மௌனராகம்” என்று ஒரு திரைப் படம். மணிரத்தினம் என்று ஒரு நல்ல இயக்குனர் அப்பொழுது இருந்தார். பெரும் வெற்றி பெற்ற “மௌனராகம்” திரைப் படத்தை அவர்தான் இயக்கியிருந்தார். அந்தப் படத்தில் “பனி விழும் இரவு” என்று ஒரு அற்புதமான பாடல். அந்தப் பாடலில் இடையில் ஒரு காட்சியில் ஒரு சிறுவன் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருப்பான். இதுதான் பிரபுதேவா முதன் முறையாக திரையில் தோன்றிய காட்சி. சிறுவனாக இருந்தவர் சற்று வளர்ந்ததும் தன்னுடைய தந்தையின் இயக்கத்தில் உருவான நடனங்களில் தலையைக் காட்டத் தொடங்கினார். நன்றாகக் கவனித்தால் “அக்னி நட்சத்திரம்” படத்தில் “ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா” பாடலுக்கு கார்த்திக்குக்கு பின்னால் ஆடிக் கொண்டு நிற்பார். இப்படி பின்னால் ஆடியவர் மெது மெதவாக வளர்ந்து…
-
- 15 replies
- 3k views
-
-
இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் ஜெர்மனி 'பெலுருஷ்யா'(Belorussia)-ஐ 1941-ல் பிடித்தது. வழக்கம்போல நாஜிப்படை இட்லரின் யூத அழிப்பு வெறியை நடைமுறைப் படுத்தினார்கள். மிகவேகமாக யூதர்கள் படுகொலைசெய்யப்பட்டார்கள். குடும்பம் குடும்பமாக கொல்லப்பட்டார்கள். அப்படி ஒரு குடும்பத்தின் பெற்றோர்கள் கொல்லப்பட்டு நான்கு சகோதர்கள் மட்டும் காட்டுக்குள் ஓடிப் பதுங்கினார்கள். மூத்தவர்கள் இருவரும் 30 வயதைக் கடந்தவர்கள். அடுத்தவன் இருபது வயதுக்குள் இருப்பவன். இளையவன் பத்து பன்னீரண்டு வயதுக்காரன். நாஜிப்படையிடமிருந்து தப்பிப்பதர்காக அருகிலிருந்த காட்டுக்குள் பதுங்குகிறார்கள். காடு இவர்களுக்கு அத்துப்படி, வெளிநாட்டுக்காரனான ஜெர்மனியர்களுக்கு காட்டுக்குள் வழித்தெரியாது என்பதினால், காடு பாதுகாப்பான …
-
- 2 replies
- 775 views
-
-
சூப்பர் ஸ்டாரின் ரஜினிகாந்தின் மூத்த மருமகன் தனுஷ் எந்திரன் படத்தை இரண்டாவது முறையாக பார்த்து மகிழ்ந்தார். படத்தை வி.ஐ.பி காட்சியில் பார்த்த தனுஷ், ஒரு வாரம் கழித்து ரசிகர்களுடன் பார்த்து ரசித்தார். எந்திரன் படத்தை மீண்டும் பார்த்த தனுஷ், அந்த அனுபவம் குறித்து கூறுகையில், “ஒரு வாரம் கழித்து மீண்டும் எந்திரன் பார்த்தேன். படத்தை ரசிகர்கள் ரசிக்கும் விதம், ரசிகரல்லாதவர்களும் தரும் வரவேற்பு என்னை அதிசயிக்க வைத்தது. என் மாமனார் அவர் என்பதால் நான் இப்படிச் சொல்லவில்லை. நான் என்ன சொன்னாலும் அவர் விஷயத்தில் அது கொஞ்சம் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். இன்றைக்கும் அவர் இந்த அளவு உழைக்கக் காரணம், சினிமா மீதுள்ள அவரது காதல்தான் என்றார். http://ulavan.net/?p=5012
-
- 1 reply
- 745 views
-
-
காமன்வெல்த் போட்டிக்காக தான் போட்டுக் கொடுத்த தீம் பாடலின் ட்யூன் பிரபலமாகமால் போனதற்காக மன்னிப்பும், வருத்தமும் தெரிவிப்பதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், காமன்வெல்த் போட்டிக்கான தீம் பாடலின் ட்யூன் சரியில்லை, தரமானதாக இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். இளைய தலைமுறையினரை மட்டும் குறித்து இந்தப் பாடல் வரிகள் இடம் பெற்று விட்டது. மற்றவர்களையும் அதில்சேர்த்திருக்க வேண்டும். இந்தப் பாடலும், ட்யூனும் மக்களைக் கவராமல் போய் விட்டது உண்மைதான். இதற்காக வருத்தப்படுகிறேன். எனது பாடலால் யாராவது ஏமாந்திருந்தால், என்னை மன்னித்து விடுங்கள். அடுத்த முறை இதுபோல நேரிடும்போது மிகவும் கவனமாக இருப்பேன். அனைவருக்கும் பொருத்தமான பாடலை…
-
- 6 replies
- 966 views
-
-
புகழ்பெற்ற கவிஞரும், எழுத்தாளருமான சௌந்தரா கைலாசம் சென்னையில் காலமானார். சௌந்தரா கைலாசம் மறைவுக்கு முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், என் தலைமையில் நடைபெற்ற எத்தனையோ கவியரங்கங்களில் அற்புதக் கவிதைகள் பாடியவர் சௌந்தரா கைலாசம் அம்மையார் அவர்கள். அருந்தமிழ் ஆற்றல் - ஆன்மீகப் பற்று இரண்டையும் இரு விழிகளாகக் கொண்டு வாழ்ந்தவர் அவர். அவரது மறைவு நம் குடும்பத்தில் ஒருவரை இழந்து விட்டதைப் போன்ற துயரத்தை என் போன்றாருக்கு அளித்துள்ளது என, முதல்வர் கருணாநிதி தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்http://www.tharavu.com/2010/10/blog-post_6658.html
-
- 0 replies
- 883 views
-
-
பத்த வச்சிட்டீயே பரட்டை’ன்னு புலம்பினாலும் தப்பில்லை. இந்த விஷயம் கொஞ்சம் கவனமாக சிந்திக்க வேண்டிய விஷயம்தான். மும்பைக்கு போன ரஜினி, பால்தாக்கரேவை சந்தித்துவிட்டு திரும்பியிருந்தால் கூட பிரச்சனை இல்லை. “அவர் எனக்கு கடவுள் போன்றவர்” என்றொரு முத்தை உதிர்த்திருக்கிறார். இதையடுத்து ரஜினியின் இனப்பற்று குறித்து மீண்டும் விவாதிக்க ஆரம்பித்திருக்கிறது உணர்வாளர்கள் வட்டாரம். உலக தமிழர் பேரவையின் தலைவர் ஜனார்த்தனன் ரஜினியின் இந்த பேச்சு குறித்து ஆவேசப்பட்டிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது- பால்தாக்கரே தாராவியில் தமிழர்களை விரட்டியது இருக்கட்டும். அவரால் தமிழ்சினிமாவுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் ரஜினிக்கு தெரியுமா? 1969 ல் பி.எஸ்.வீரப்பா தமிழில் எடுத்த ஆலயமணி படத்தை இந்த…
-
- 1 reply
- 865 views
-
-
எனது கால்ஷீட்டை சரியாக பயன்படுத்தாமல் வேறு நடிகையை ஒப்பந்தம் செய்திருக்கிறார் டைரக்டர் கவுதம் மேனன். இதனால் நானும், அவரும் நண்பர்களாக பிரிகிறோம், என்று நடிகை த்ரிஷா கூறியுள்ளார். தமிழில் வெற்றிபெற்ற விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை இந்தியில் ரீ-மேக் செய்யும் கவுதம் மேனன், இந்தியிலும் நாயகியாக த்ரிஷாவையை நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்தார். இதற்காக த்ரிஷாவும் கால்ஷீட் ஒதுக்கியுள்ளார். இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை… த்ரிஷாவுக்கு பதிலாக மதராசபட்டனம் நாயகி எமி ஜாக்சனை ஒப்பந்தம் செய்து விட்டார் கவுதம் மேனன். இதனால் கடுப்பான த்ரிஷா, கோபத்தில் உச்சத்துக்கே சென்றுள்ளார். கவுதமுடனான நட்பு முறிவதாக அறிவித்துள்ளார். இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், “கவுதமும் நானும் நண்பர்களாகப் பி…
-
- 0 replies
- 906 views
-
-
எந்திரனுக்கு முன்பே துவங்கப்பட்டு எந்திரனுக்கு பிறகும் இழுபறியில் கிடந்த படம் சுல்தான் தி வாரியர். என்னென்னவோ நினைத்து படத் தயாரிப்பில் இறங்கிய சவுந்தர்யா ரஜினி, இப்படத்தின் மூலம் கற்றுக் கொண்ட பாடம் வாழ்நாள் முழுக்க தாக்குப்பிடிக்கிற அனுபவம்! அவரது திருமணத்திற்கு பிறகு சுல்தானின் போக்கில் திடீர் முன்னேற்றம். இப்படத்தை ஜெமினி லேப் மொத்தமாக வாங்கியிருக்கிறது. படத்தின் இயக்குனரான சவுந்தர்யாவை மாற்றிவிட்டு அவருக்கு பதிலாக கே.எஸ்.ரவிக்குமாரை இயக்க வைக்கவும் முடிவெடுத்திருக்கிறது இந்நிறுவனம். ரஜினி ரசிகர்களுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தப் போகும் இந்த மாற்றங்கள்தான் இன்டஸ்ட்ரியின் பரபரப்பு செய்தி. இதுவரை எடுக்கப்பட்ட அனிமேஷன்களை பயன்படுத்திக் கொள்வதுடன், ரசிகர்…
-
- 0 replies
- 686 views
-