வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் ஜெர்மனி 'பெலுருஷ்யா'(Belorussia)-ஐ 1941-ல் பிடித்தது. வழக்கம்போல நாஜிப்படை இட்லரின் யூத அழிப்பு வெறியை நடைமுறைப் படுத்தினார்கள். மிகவேகமாக யூதர்கள் படுகொலைசெய்யப்பட்டார்கள். குடும்பம் குடும்பமாக கொல்லப்பட்டார்கள். அப்படி ஒரு குடும்பத்தின் பெற்றோர்கள் கொல்லப்பட்டு நான்கு சகோதர்கள் மட்டும் காட்டுக்குள் ஓடிப் பதுங்கினார்கள். மூத்தவர்கள் இருவரும் 30 வயதைக் கடந்தவர்கள். அடுத்தவன் இருபது வயதுக்குள் இருப்பவன். இளையவன் பத்து பன்னீரண்டு வயதுக்காரன். நாஜிப்படையிடமிருந்து தப்பிப்பதர்காக அருகிலிருந்த காட்டுக்குள் பதுங்குகிறார்கள். காடு இவர்களுக்கு அத்துப்படி, வெளிநாட்டுக்காரனான ஜெர்மனியர்களுக்கு காட்டுக்குள் வழித்தெரியாது என்பதினால், காடு பாதுகாப்பான …
-
- 2 replies
- 774 views
-
-
வந்தே மாதரம்-பட விமர்சனம் நடிப்பு: மம்முட்டி, அர்ஜுன், சினேகா, நாசர் இசை: டி இமான் தயாரிப்பு: பங்கஜ் புரொடக்ஷன்ஸ் இயக்கும்: அரவிந்த் டி படத்தின் தலைப்பப் பார்த்தாலே புரிந்துவிடும் இது எந்த மாதிரி படம் என்பது! 90களில் விஜயகாந்துக்காக வெள்ளாவியில் வேகவைத்து அடித்து துவைத்து நைந்து போன, பழைய 'ஒன்மேன் ஆர்மி தீவிரவாதிகளைப் பிடித்து நெஞ்சு நிமிர்த்தும்' கதைதான் இப்போது வந்தே மாதரமாக வந்துள்ளது. இதற்காக 4 முழு வருடங்களையும் எக்கச்சக்க பணத்தையும், புதிய இயக்குநர் [^] அரவிந்த் டி, தயாரிப்பாளர் மற்றும் நடிகர்கள் வீணடித்திருக்கிறார்களே என்ற ஆதங்கத்தை அடக்க முடியவில்லை. தென் பிராந்திய உளவுத் துறை அதிகாரி கோபி கிருஷ்ணா. அவர் மனைவி சினேகா. வசதியான வ…
-
- 1 reply
- 904 views
-
-
புகழ்பெற்ற கவிஞரும், எழுத்தாளருமான சௌந்தரா கைலாசம் சென்னையில் காலமானார். சௌந்தரா கைலாசம் மறைவுக்கு முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், என் தலைமையில் நடைபெற்ற எத்தனையோ கவியரங்கங்களில் அற்புதக் கவிதைகள் பாடியவர் சௌந்தரா கைலாசம் அம்மையார் அவர்கள். அருந்தமிழ் ஆற்றல் - ஆன்மீகப் பற்று இரண்டையும் இரு விழிகளாகக் கொண்டு வாழ்ந்தவர் அவர். அவரது மறைவு நம் குடும்பத்தில் ஒருவரை இழந்து விட்டதைப் போன்ற துயரத்தை என் போன்றாருக்கு அளித்துள்ளது என, முதல்வர் கருணாநிதி தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்http://www.tharavu.com/2010/10/blog-post_6658.html
-
- 0 replies
- 882 views
-
-
பத்த வச்சிட்டீயே பரட்டை’ன்னு புலம்பினாலும் தப்பில்லை. இந்த விஷயம் கொஞ்சம் கவனமாக சிந்திக்க வேண்டிய விஷயம்தான். மும்பைக்கு போன ரஜினி, பால்தாக்கரேவை சந்தித்துவிட்டு திரும்பியிருந்தால் கூட பிரச்சனை இல்லை. “அவர் எனக்கு கடவுள் போன்றவர்” என்றொரு முத்தை உதிர்த்திருக்கிறார். இதையடுத்து ரஜினியின் இனப்பற்று குறித்து மீண்டும் விவாதிக்க ஆரம்பித்திருக்கிறது உணர்வாளர்கள் வட்டாரம். உலக தமிழர் பேரவையின் தலைவர் ஜனார்த்தனன் ரஜினியின் இந்த பேச்சு குறித்து ஆவேசப்பட்டிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது- பால்தாக்கரே தாராவியில் தமிழர்களை விரட்டியது இருக்கட்டும். அவரால் தமிழ்சினிமாவுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் ரஜினிக்கு தெரியுமா? 1969 ல் பி.எஸ்.வீரப்பா தமிழில் எடுத்த ஆலயமணி படத்தை இந்த…
-
- 1 reply
- 864 views
-
-
எனது கால்ஷீட்டை சரியாக பயன்படுத்தாமல் வேறு நடிகையை ஒப்பந்தம் செய்திருக்கிறார் டைரக்டர் கவுதம் மேனன். இதனால் நானும், அவரும் நண்பர்களாக பிரிகிறோம், என்று நடிகை த்ரிஷா கூறியுள்ளார். தமிழில் வெற்றிபெற்ற விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை இந்தியில் ரீ-மேக் செய்யும் கவுதம் மேனன், இந்தியிலும் நாயகியாக த்ரிஷாவையை நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்தார். இதற்காக த்ரிஷாவும் கால்ஷீட் ஒதுக்கியுள்ளார். இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை… த்ரிஷாவுக்கு பதிலாக மதராசபட்டனம் நாயகி எமி ஜாக்சனை ஒப்பந்தம் செய்து விட்டார் கவுதம் மேனன். இதனால் கடுப்பான த்ரிஷா, கோபத்தில் உச்சத்துக்கே சென்றுள்ளார். கவுதமுடனான நட்பு முறிவதாக அறிவித்துள்ளார். இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், “கவுதமும் நானும் நண்பர்களாகப் பி…
-
- 0 replies
- 905 views
-
-
எந்திரனுக்கு முன்பே துவங்கப்பட்டு எந்திரனுக்கு பிறகும் இழுபறியில் கிடந்த படம் சுல்தான் தி வாரியர். என்னென்னவோ நினைத்து படத் தயாரிப்பில் இறங்கிய சவுந்தர்யா ரஜினி, இப்படத்தின் மூலம் கற்றுக் கொண்ட பாடம் வாழ்நாள் முழுக்க தாக்குப்பிடிக்கிற அனுபவம்! அவரது திருமணத்திற்கு பிறகு சுல்தானின் போக்கில் திடீர் முன்னேற்றம். இப்படத்தை ஜெமினி லேப் மொத்தமாக வாங்கியிருக்கிறது. படத்தின் இயக்குனரான சவுந்தர்யாவை மாற்றிவிட்டு அவருக்கு பதிலாக கே.எஸ்.ரவிக்குமாரை இயக்க வைக்கவும் முடிவெடுத்திருக்கிறது இந்நிறுவனம். ரஜினி ரசிகர்களுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தப் போகும் இந்த மாற்றங்கள்தான் இன்டஸ்ட்ரியின் பரபரப்பு செய்தி. இதுவரை எடுக்கப்பட்ட அனிமேஷன்களை பயன்படுத்திக் கொள்வதுடன், ரசிகர்…
-
- 0 replies
- 684 views
-
-
ரஞ்சிதா இந்தியாவின் மிகப் பெரிய சர்ச்சையில் சிக்கி தற்போது தெளிந்த மனதுடன் இருக்கிறார். ‘‘இந்த சர்ச்சையில் எந்த உண்மையும் இல்லை. என்னைப் பற்றிய தப்பான செய்திகளைப் பார்த்தபோது என் உச்சந்தலையில் விஷம் ஏறியது போல் இருந்தது. பரபரப்பை கிளப்புவதற்காக என் பிரச்சனையில் மீடியா பல கதைகளை கிளப்பிவிட்டு விட்டது’’ என்கிறார். சர்ச்சைகளுக்குப் பிறகு பத்திரிகைக்குத் தரும் முதல் பேட்டி இதுதான். கேள்விகளை மின்னஞ்சல் மூலம் பெற்று பதில் தந்தார். தற்போது வாழ்க்கை எப்படி இருக்கிறது? “ஒரு மிகப்பெரிய சூறாவளி என் வாழ்க்கையைச் சூறையாடியிருக்கிறது. அதிலிருந்து மீண்டு ஒரு புது வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டிய கட்டாயம் எனக்கிருக்கிறது. எதிர்பாராத புதிய சவால்கள் நம்மை நாமே அறிந்து கொள்வ…
-
- 2 replies
- 1k views
-
-
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சீமான், விரைவில் சிறையிலிருந்து விடுதலையாகி வெளிவருவார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். புலிக்காக உறுமக்கூடியவர் என்பதால் அவர் மீது சட்டம் கரண்ட் போல் பாய்ந்திருக்கிறது. இப்போது அவர் சிறையிலிருந்து வெளியே வருவது நடக்காத காரியம் என்று ஒரு தரப்பும், இல்லையில்லை விரைவில் தடைகளை உடைத்துவிட்டு வெளியே வருவார் என்று இன்னொரு தரப்பும் வாதாடிக் கொண்டிருக்க, இம்மாதம் 24 ந் தேதி நீதிமன்றத்திற்கு வருகிறார் சீமான். அன்றே அவர் விடுதலை செய்யப்படலாம் என்ற நம்பிக்கையும் அவரது தொண்டர்கள் மத்தியில் நிலவுகிறது. அப்படி விடுதலை செய்யப்பட்டால் அவர் முன்னிலும் வேகமாக முழங்குவாரா ? அல்லது விஜய்யின் “பகலவன்” பட வ…
-
- 0 replies
- 809 views
-
-
கலாச்சார, குடும்ப அமைப்புக்கே கேடு விளைவிக்கும் பிரபுதேவா வீட்டை முற்றுயிட்டுப் போராட்டம் நடத்துவோம் என்று இந்து மக்கள் கட்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சமூகத்தில் பிரபலமாக இருப்பவர்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக வாழ வேண்டும். ஒருவனுக்கு ஒருத்தி என்பது நம் பண்பாடு. அதை பிரபுதேவா மீறுகிறார். பழைய காலத்தில் உடன் கட்டை ஏறும் பழக்கம் இருந்தது. கணவன் இறந்ததும் மனைவியும் அதே நெருப்பில் உயிரை விடுவாள். நாகரீகம் வளர அதை முட்டாள் தனம் என ஒதுக்கி விட்டோம். இந்தியாவின் பெருமைகளே நமது கலாச்சாரமும் கோவில், வேட்டி, சட்டை, புடவைகளும்தான். உலகமயமாக்கலில் நமது கலாச்சாரத்தை தாராளமயமாக்க முட…
-
- 9 replies
- 1.1k views
-
-
எந்திரன் பார்த்தேன் அ.முத்துலிங்கம் நான் என் வாழ்க்கையில் எந்த திரைப்படத்தையும் முதல் நாள், முதல் காட்சி பார்த்தது கிடையாது. நாற்பது வருடங்களுக்கு முன்னர் அது இலங்கையில் நினைத்துப் பார்க்கவே முடியாத ஒன்று. கேட் பாய்ந்தோ, சுவரில் தொங்கியோ, ஆட்களின்மேல் நடந்தோ போக சாத்தியப்பட்டவர்களுக்கே அது முடியும். ஆகவே படத்தை 'இன்றோ நாளையோ மாற்றிவிடப் போகிறார்கள்' என்று செய்தி வந்ததும் போய்ப் பார்ப்பேன். அநேகமாக என்னுடைய நண்பர்கள் அந்தப் படம் பார்த்ததையே அப்போது மறந்துவிட்டிருப்பார்கள். கனடாவில் ‘எந்திரன்’ வருகிறது என்றதும் வழக்கம்போல பெரிய பரபரப்பும் ஆயத்தங்களும் தெரிந்தன. பகல் காட்சி, இரவுக்காட்சி, நடுஇரவுக்காட்சி என்று பல காட்சிகளை ஏற்பாடு செய்திருந்தார்கள…
-
- 9 replies
- 1.2k views
-
-
சின்ன பட்ஜெட்டில் தயாராகும் மலையாளப் படங்களில் பெரிய சம்பளம் வாங்கும் ரஹ்மான் இசை சாத்தியப்படாது என்று முடிவு செய்து, அவரை நடிக்க வைப்பதில் முனைப்பு காட்டி வெற்றியும் பெற்றுள்ளனர் மலையாளப் படவுலகினர்.ஜெயராஜ் இயக்கும் புதிய படத்தில் இசையமைப்பாளராகவே நடிக்கிறாராம் ஏ ஆர் ரஹ்மான்.இந்தப் படத்தில் மம்முட்டியும் ஜெயசூர்யாவும் நடிக்கிறார்கள். இந்தப் படம் ஒரு துப்பறியும் கதை. வழக்கம் போல துப்பறியும் நிபுணர் பாத்திரத்தில் மம்முட்டி நடிக்கிறார். அதில் சில காட்சிகளில் ஏஆர் ரஹ்மானிடம் விசாரிப்பது போல எடுக்க வேண்டியிருந்ததால், அவரையே நடிக்க வைத்துவிடலாம் என முடிவு செய்து கேட்டிருக்கிறார்கள். தயங்கித் தயங்கி கேட்டிருக்கிறார்கள்.ஒருநாள் கால்ஷீட் போதும், அதுவும் வீட்டிலேயே ஷூட்டிங் எ…
-
- 0 replies
- 754 views
-
-
டி.எம்.எஸ். மக்களின் பாடகன் ஷாஜி "நான் டி.எம்.எஸ் பாடல்களை வெறுக்கிறேன்" என்று இப்போதுள்ள ஒரு தமிழ் பின்னணிப்பாடகர் என்னிடம் சொன்னார். அந்த வெறுப்புக்கான காரணத்தைக் கேட்டபோது அவரால் சரியாகச் சொல்ல முடியவில்லை. "அவருடைய பாடல்கள் தமிழ்நாட்டின் வெயிலையும் புழுதியையும்தான் ஞாபகத்துக்குக் கொண்டு வருகின்றன’’ என்று சொன்னார். "நீங்கள் கோடைவிடுமுறைக்கு மட்டும் தமிழ்நாட்டுக்கு வந்திருப்பீர்கள். அப்போது மட்டுமே அந்தப்பாட்டுகளைக் கேட்டிருப்பீர்கள்’’ என்று நான் சொன்னேன். தமிழ்நாட்டில் பிறந்து வேறு பகுதிகளில் வளர்ந்த ஒரு சிறுவனின் மனப்பதிவு மட்டும் தான் அது. சிலர் அந்த மனப்பிராயத்தைத் தாண்டுவதேயில்லை! நானும் சிறுவயதில் டி.எம்.எஸ் பாட்டை அவ்வளவாக விரும்பவில்லை. ஜே…
-
- 0 replies
- 1.9k views
-
-
எந்திரனில் பாடப்பட்ட கிளிமஞ்சாரோவைப் பற்றி? http://www.youtube.com/watch?v=EDF63YLDtto இப்போது சமீபத்தில் வெளியான எந்திரன் படத்தில் வரும் கிளிமஞ்சாரோ பாடல் இந்த வருடத்தின் ஹிட்டான பாடல் என்ற பெயரை ஏற்கனவே பெற்றுவிட்டது. இதில் வரும் கிளிமஞ்சாரோ என்பது என்ன தெரியுமா? நிறைய பேருக்கு தெரிந்திருக்கும் இது ஒரு அழகான மலை என்பது. தெரியாதவர்களுக்கு இந்த மலையை பற்றி சில தகவல்கள். தான்சானியா நாட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் மிக உயரமான எரிமலை வகையைச் சேர்ந்த மலை கிளிமஞ்சாரோ. இதுவே ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மலைகளிலேயே மிக உயர்ந்த மலை. இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 5895 மீட்டர் (19,340 அடி) ஆகும். நம் இமயமலையின் மிக உயந்த சிகரம் எவரெஸ்ட் அது போல க…
-
- 0 replies
- 726 views
-
-
எந்திரன் திரைப்படம் இணையத்தளத்தில் கண்டுகளியுங்கள் http://www.kadukathi.com/?p=644
-
- 2 replies
- 1.6k views
-
-
எந்திரன் என்றோர் ஏகாதிபத்தியன்! சமஸ் First Published : 05 Oct 2010 12:35:27 AM IST Last Updated : ஏறத்தாழ 5 ஆண்டுகள் உழைப்பில் - 6 மில்லியன் டாலரில் (இன்றைய மதிப்பில் ரூ. 140 கோடி) "ஜெமினி பிலிம்ஸ்' உருவாக்கிய இந்தியாவின் பிரம்மாண்டமான படமான "சந்திரலேகா' 1948-ல் தமிழிலும் தொடர்ந்து ஹிந்தியிலும் வெளியானது. இந்தியா முழுவதும் விநியோகிக்கப்பட்டது. படிப்படியாக 609 பிரதிகள் போடப்பட்டன. அமெரிக்காவிலும் திரையிடப்பட்டது, இடையிடையே ஆங்கிலத்தில் கதைச் சுருக்கத்துடன். இந்தியத் திரை வரலாற்றில் இவை எல்லாமே அப்போதுதான் முதல் முறை. தஞ்சாவூரில் "சந்திரலேகா' வெளியானபோது கூடுதலாக தன்னுடைய திரையரங்கிலும் வெளியிட விரும்பினார் மற்றொரு திரையரங்கின் அதிபர். தஞ்சாவூர் மாவட்…
-
- 0 replies
- 602 views
-
-
'பாலக்காட்டுக்கு போங்க... அதான் சேஃப்!' - அசின் அடம் 'காவலன் படத்தின் மிச்சப் பகுதியை கேரளாவிலே வச்சிக்கலாம். பாலக்காட்டுக்குப் போயிடலாம் அதான் சேஃப் சேட்டா!' -மேட்டுப் பாளையத்தில் பெரியார் திகவினர் மேற்கொண்ட கறுப்புக் கொடி போராட்டத்தைப் பார்த்து மிரண்டுபோன அசின் சொன்னது இது. ஹீரோயினாச்சே... அதிலும் விஜய்யின் பேவரிட் ஹீரோயின் சொன்ன பிறகு அப்பீலேது? அடுத்த நாளே பாலக்காடு பறந்தது காவலன் படக்குழு, ஹீரோ விஜய்யுடன். மேட்டுப் பாளையத்தில் எடுக்க வேண்டிய பல காட்சிகளை ஒத்தப்பாலம் மற்றும் பாலக்காடு பகுதியிலேயே வைத்து எடுத்துக் கொண்டார்களாம். மூன்று தினங்கள் நடந்த இந்தப் படப்பிடிப்பில் வடிவேலுவும் பங்கேற்றார். "இப்போதான் எனிக்கு ரிலீஃப்" என்று அசின் கூ…
-
- 0 replies
- 813 views
-
-
இணையதளத்தில் எந்திரன்: அதிர்ச்சியில் தியேட்டர் அதிபர்கள் First Published : 07 Oct 2010 08:59:33 AM IST Last Updated : 07 Oct 2010 09:57:25 AM IST சென்னை, அக். 6: இணையதளத்தில் "எந்திரன்' திரைப்படம் தெளிவான காட்சிகளாக வெளியாகி இருப்பதால் பல திரையரங்கு அதிபர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்கள். பல லட்ச ரூபாய் கொடுத்து தங்கள் தியேட்டர்களில் இந்தப் படத்தைத் திரையிட்டுள்ள தியேட்டர் அதிபர்கள், படம் வெளியாகி ஒரு வாரமே ஆகியிருக்கும் நிலையில் "எந்திரன்' திரைப்படத்தால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுவிடுமோ என்று பயப்படுவதாகவும் கூறப்படுகிறது. ÷சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி, ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள "எந்திரன்' திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் திரையிடப…
-
- 2 replies
- 829 views
-
-
வீரபாண்டிய கட்டப்பொம்மன் http://video.google.com/videoplay?docid=-1747823027807698199
-
- 0 replies
- 709 views
-
-
4 மணி நேரத்தில் ரூ 50 லட்சம்-டிக்கெட் விற்பனையில் எந்திரன் சாதனை! ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 26, 2010, 12:40[iST] சென்னை: திரையுலகம் இதுவரை காணாத பெரும் வசூல் சாதனையைச் செய்து வருகிறது சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் திரைப்படம். இந்த சாதனைகளை முறியடிக்க இனியொரு படத்தை ரஜினியைத் தவிர வேறு யாராலும் தரமுடியுமா என்ற கேள்விதான் இன்று கோடம்பாக்கத்தில் பிரதானமாக எழுந்து நிற்கிறது. டிக்கெட் விற்பனையில்தான் இந்தப் புதிய சாதனை. சென்னை அபிராமி மெகா மாலில் 20 நிமிடங்களில் 8 நாட்களுக்கான மொத்த டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. நான்கு மணி நேரத்தில் ரூ 50 லட்சத்தை எந்திரன் வசூல் செய்திருப்பதாகவும், இது இந்தியத் திரையுலகில் முன்னெப்போதும் நிகழாத பெரும் சாதனை என்றும் அபிரா…
-
- 3 replies
- 927 views
-
-
திருமண உறவு முறித்த பிறகு,சீதாவுக்கு ஒரு சினேகிதன் கிடைத்துவிட்டார்.பார்த்திபனுக்கு ஒரு சிநேகிதி கிடைக்கவில்லையா? தென்றல் வீசிய கலைஞனின் வாழ்க்கையில் தீ பரவியது ஏன்? அண்மையில் ‘மைனா’படப் பாடல் வெளியீட்டு விழாவில் ஒரு தொகுப்பாளரைப் போல இருந்தாரே, படங்கள் எதுவும் இல்லாததாலா? ‘வித்தகன்’ தயாரிப்பாளருடன் மனக்கசப்பா? ஆளாளுக்கு அரசியல் மேளம் அடிக்கும் போது பார்த்திபனும் இறங்க வேண்டியதுதானே?ஒரு திறமைசாலிக்கு உரிய மரியாதை கிடைக்காமல் போனது ஏன்? இப்படி பல கேள்விகளுடன் விடை தேடிச் சென்றபோது, ‘‘எனது வாழ்க்கையில் மட்டும் தென்றலும் தீயும் ஏன் என்பது எனக்கு நானே கேட்டுக் கொள்கிற கேள்வி!இருபது வருடங்களுக்கு முன்பு ‘புதியபாதை’ எடுத்தபோது புதிய கருத்துகளை சொல்லணும்கிற த…
-
- 0 replies
- 1.1k views
-
-
திரையுலகம் இதுவரை காணாத பெரும் வசூல் சாதனையைச் செய்து வருகிறது சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் திரைப்படம். இந்த சாதனைகளை முறியடிக்க இனியொரு படத்தை ரஜினியைத் தவிர வேறு யாராலும் தரமுடியுமா என்ற கேள்விதான் இன்று கோடம்பாக்கத்தில் பிரதானமாக எழுந்து நிற்கிறது. டிக்கெட் விற்பனையில்தான் இந்தப் புதிய சாதனை. சென்னை அபிராமி மெகா மாலில் 20 நிமிடங்களில் 8 நாட்களுக்கான மொத்த டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. நான்கு மணி நேரத்தில் ரூ 50 லட்சத்தை எந்திரன் வசூல் செய்திருப்பதாகவும், இது இந்தியத் திரையுலகில் முன்னெப்போதும் நிகழாத பெரும் சாதனை என்றும் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் மற்ற திரையரங்குகளில் முன்பதிவு துவங்கிய ஒரு மணிநேரத்தில் ஒரு வாரத்துக்கான டிக்கெட்ட…
-
- 5 replies
- 1.5k views
-
-
அனுஷ்கா தமிழில் ஜோடி போடுவதற்கு ஏற்ற ஒரே நடிகர் சத்யராஜாகத்தான் இருப்பார் போலிருக்கிறது. அந்த அளவுக்கு இவர் யாருடன் நடித்தாலும் அவர்களுடைய உயரம் இவருக்கு செட் ஆகவில்லை. சிங்கம் படத்திலும் சூர்யாவுடன் நடித்த போது இவரது உயரம் அதிகம் என்று படப்பிடிப்பிலேயே குறைப்பட்டுக் கொண்டார்கள். இவர்கள் இப்படி பார்ப்பதை அனுஷ்காவோ வேறு மாதிரியாக பார்க்கிறார்.‘இந்த நடிகர்கள் உயரம் குறைவாக இருந்துவிட்டு என்னை உயரம் குறைவு என்று சொல்கிறார்கள். ஹீரோ குள்ளமா இருந்தா எப்படி? இன்னும் வளராமலேயே நடிக்கிறாங்கப்பா…’ என்று கிண்டலாக சொல்கிறார் அனுஷ்கா.http://ulavan.net/?p=4823
-
- 0 replies
- 874 views
-
-
பிரபுதேவாவை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று அவரது மனைவி ரமலத் நேற்று சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.பிரபுதேவாவை நயன்தாரா தன்னோடு அழைத்து சென்று விட்டார் என்றும் நயன்தாராவை விரைவில் திருமணம் செய்வேன் என்று என் கணவர் அறிவித்து இருப்பதால் எனது வாழ்க்கை நாசமாகி விடுமோ என அஞ்சுகிறேன் என கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். என்னோடு சேர்ந்து வாழ கணவருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறியுள்ளார். ரம்லத் வழக்கு தொடர்ந்தது பிரபுதேவாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரம்லத்துக்கு எதிர் மனு தாக்கல் செய்ய வக்கீல்களு டன் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார். விரைவில் மனுதாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் மத்தியஸ்தர்க…
-
- 0 replies
- 1k views
-
-
பிரிட்டனின் பாக்ஸ் ஆபீஸில் எந்திரன் சாதனை புரிந்து வருகிறது. வெளியான முதல் நாள் மட்டும் ரூ35. 33 லட்சம் குவித்துள்ளது எந்திரன். இந்தப் படத்தை விட அதிக தியேட்டர்களில் வெளியான இந்திப் படம் அஞ்ஜானா அஞ்ஜானி ரூ 35 லட்சம் வசூலித்துள்ளது.பிரிட்டனின் பெருமைக்குரிய பாக்ஸ் ஆபீஸ் டாப் 10-ல் எந்திரனுக்கு எந்த இடம் என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும். இந்த நிலையில் பிரிட்டனில் 40 திரையரங்குகளில் எந்திரன் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. பிரிட்டனில் 40 திரையரங்குகளில் திரையிடப்பட்ட எந்திரன் முதல் நாளில் மட்டும் 50424 பவுண்ட்களையும் (ரூ. 35,32,496.26) , இந்தப் படத்துடன் வெளியான அஞ்ஜானா அஞ்ஜானி 53 திரையரங்குகளில் 50036 பவுண்ட்களையும் (ரூ 35, 07,711.50) வசூலித்துள்ளதா…
-
- 1 reply
- 745 views
-
-
எந்திரன். எந்திரன்- இந்த வார்த்தைதான் இன்றைய தேதியில் உலக தமிழர்களால் அதிகமாக உச்சரிக்கப்படும் வார்த்தையாக இருக்குமென்று அடித்து கூறலாம். கடந்த ஒரு வாரத்தில் பெரிசு முதல் சிறுசுவரை, பாமரன் முதல் படித்தவன்வரை, ஏழை முதல் பணக்காரன்வரை, ரஜினியை பிடித்தவர்கள் முதல் பிடிக்காதவர்கள்வரை, உலகின் பெரும்பான்மை தமிழர்களின் பேச்சும் எதிர்பார்ப்பும் எந்திரன்தான் என்றால் அது மிகையில்லை. இப்படியாக பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வெளியாகிய எந்திரன் அதன் மிகை எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதா என்றால் நிச்சயமாக பூர்த்தி செய்துள்ளதென்பதுதான் எனது பதில்(இவன் ரஜினி ரசிகன் என்பதால் இப்படி கூறுகிறான் என்று நீங்கள் நினைத்தால் அதற்க்கு நான் பொறுப்பல்ல, நிச்சயமாக நடுநிலை ரசிகர்களின…
-
- 12 replies
- 2.6k views
-